இன்று
World Health Day 2009
Save lives. Make hospitals safe in emergencies
World Health Day 2009 focuses on the resilience and safety of health facilities and the health workers who treat those affected by emergencies. Events around the world will highlight successes, advocate for safe facility design and construction, and build momentum for widespread emergency preparedness.
இந்த பதிவை Chocho' கோபி'க்கு டெடிகேட் செய்கிறேன்.
உடல் ஆரோக்கியத்திற்கு என்னால் முடிந்த சில ஹெல்த் டிப்ஸ் :-
1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.
2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர் , பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.
3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்
4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம். 5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.
6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)
7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.
8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.
9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.
10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.
இது குறிப்பாக என் பாசக்கார நண்பர்களுக்காக...இது உங்களுக்கு எல்லாம் சொல்லறது வேஸ்ட் இருந்தாலும் "உன் கடமையை நீ செய் பலனை எதிர்பாராதே" ன்ன்னு நினைத்துக்கொண்டு சொல்கிறேன்..
1. சிகிரெட் பிடிப்பதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம், இதனால் உடல் பாதிப்பு மட்டும் ஆண்மைகுறைவிற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
2. தண்ணீ அ(கு)டிக்கறதையும் நிறுத்திக்கலாம்.. இதை இந்த ஜென்மத்தில் நீங்கள் யாரும் செய்ய போவது இல்லை, அதனால் குறைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய இம்பேக்ட் எல்லாம் நான் சொல்ல வேண்டியது இல்லை.
சமையல் குறிப்பு :- பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை :- (Bread French Fry )
தேவையானவை :-
பால் - 2 கப்
முட்டை - 3
சர்க்கரை - 6 ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
பிரட் :- 6 துண்டுகள்
செய்முறை :-
பால், முட்டை, சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்கு அடித்து கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, நெய் ஒரு ஸ்பூன் விட்டு, பிரட்' டை இந்த கலவையில் நனைத்து எடுத்து கல்லில் போட்டு, திரும்பவும் நெய் 'யை பரவலாகவிடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறவும்.
நெய் அதிகமாக சேர்க்க வேண்டியது இல்லை. பால், முட்டையே அதிக கலோரி உள்ள உணவுகள். குழந்தைகளுக்கு மட்டும் நெய் அதிகம் விட்டு கொடுக்கலாம்.
அணில் குட்டி அனிதா :- ஆமா டான்ஸ் ஆட சொல்றீங்களே.. அந்தம்மா குஷ்பூ இருக்காங்களே. .அவங்களும் என்னம்ம்மா குத்து டான்ஸ் ஆடறாங்க.. ஆனா குண்டாவே இருக்காங்களே. அது எப்படி கவி ??!!
பீட்டர் தாத்ஸ் : The only way to keep your health is to eat what you don't want, drink what you don't like, and do what you'd rather not.
ஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை
Posted by : கவிதா | Kavitha
on 09:02
Labels:
பத்மா'ஸ் கிட்ச்சன்
Subscribe to:
Post Comments (Atom)
16 - பார்வையிட்டவர்கள்:
அணிலு சும்மா இரு
அக்கா நல்லது சொல்றாங்க ...
ஆகா.. ஐடியா எல்லாம் அருமை..
நம்ம உடம்புதான் நம்முடைய மூலதனம்.
அதை சரியா பயன்படுத்திக்கறதும், கெடுத்து கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது.
எப்படியோ.. நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்!!
@ ஜம்மு - நன்றி விடுங்க.. அணிலை பத்தி தெரியாதா?? :)
@ ரங்கன்.. - நன்றி
ம்ம்ம்ம்
:)
உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.
enna kavi neega ippadi than seivengala sollave illa
mmmmmm marupadium naan potta comment neega relese pannalaya neega
@ சிவா - நன்றி
@ கவிகாயூ - அம்மணி நான் நல்லா டான்ஸ் ஆடுவேன்..அதை விட எப்பவும் எதாவது வேலை செய்துக்கிட்டே இருப்பேன்.. (தூங்கறது முதற்கொண்டு) அது சொன்னது ஆடத்தெரியாதவங்களுக்கு :)
//1. சிகிரெட் பிடிப்பதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம், இதனால் உடல் பாதிப்பு மட்டும் ஆண்மைகுறைவிற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
2. தண்ணீ அ(கு)டிக்கறதையும் நிறுத்திக்கலாம்.. இதை இந்த ஜென்மத்தில் நீங்கள் யாரும் செய்ய போவது இல்லை, அதனால் குறைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய இம்பேக்ட் எல்லாம் நான் சொல்ல வேண்டியது இல்லை.//
இந்த ரெண்டு பழக்கமும் இல்லாதவங்க எல்லாம் உங்க "பாசக்கார நண்பர்கள்" லிஸ்ட்ல வர மாட்டாங்களா?
//1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.//
குடிக்கணும்ன்னு தான் தினமும் நினைக்கிறேன், ஆனா முடியல. ஒரு மனுஷன் தண்ணி குடிக்கக் கூட சோம்பேறியா இருந்தா என்ன தான் பண்றது!
//இந்த ரெண்டு பழக்கமும் இல்லாதவங்க எல்லாம் உங்க "பாசக்கார நண்பர்கள்" லிஸ்ட்ல வர மாட்டாங்களா?
//
அல்மொஸ்ட் இல்ல.. !! :) இல்லன்னு சொல்லி ஏமாற்றாமல் இருக்குன்னு சொல்லி பாசமாக இருப்பவர்களே உண்டு :)
என்னோட க்ளோஸ் பிரண்டு லிஸ்ட் ல.. ஜனா'க்கு மட்டும் எந்த பழக்கமும் இல்ல.. நீங்க.. வேஸ்டு ஜனா ன்னு சொல்லுவேன் :)
ம்ம் என்னவோ இப்ப நீங்க அந்த பழக்கம் எல்லாம் இல்லன்னு சொல்றீங்க்க... :) ஆச்சரியமாத்தான் இருக்கு.. !! :)
:))
உடல் ஆரோக்கியம் 10 சரிப்பட்டு வரும் மாதிரிதான் தெரியுது.ஆனா ஐஸ்கிரீம்தான் கொஞ்சம் வீக்னெஸ்.
பாசக்கார நண்பர்கள் பட்டியலில் நான் இல்லை.(தண்ணியில்லா காஞ்ச வனத்துல மாட்டிகிட்டதும் காரணமாயிருக்கலாம்:)
குஷ்புவே ஆடும்போது நாங்க ஆடமாட்டமா என்ன?குத்துப்பாட்டுக்கு ஆடுவதெல்லாம் யார் வீட்ல பார்ட்டி மாதிரி இடங்களுக்குத்தான்.அதுக்குப் பதிலா தினமும் ரெண்டு குட்டிக்கரணம் போட்டு விடவேண்டியது.
அணிலு என்ன சொல்லுச்சு!மறந்து போச்சே!
அணில்!வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்ட:)
ஆமா!இம்புட்டு நல்ல பதிவு எழுதிட்டு அதென்ன பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை டிப்ஸ்?
அம்புட்டும் கொழுப்பு!
//பாசக்கார நண்பர்கள் பட்டியலில் நான் இல்லை.//
:)... ரொம்ப நல்லவங்க இந்த லிஸ்ட் ல இருக்க முடியாது இல்லையா.. :)))
//ஆமா!இம்புட்டு நல்ல பதிவு எழுதிட்டு அதென்ன பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை டிப்ஸ்?
அம்புட்டும் கொழுப்பு!
//
ரொம்ப ட்ரையா ஃபீல் செய்தேன் அதான் இது.. மோர் ஓவர் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலும் எழுதினேன்... :)
\\இந்த பதிவை Chocho' கோபி'க்கு டெடிகேட் செய்கிறேன்.\\
நன்றி ;)))
நல்ல பதிவும் கூட ;)
I liked the footnote! :-)
மன்னிக்க..
இது எதுக்குனா வேற ஒரு பின்னூட்டத்துல நீங்க informative ஆக எழுதிரதில்லைனு கலைச்சிருந்தேன் அதான்.. பரவாயில்லை நீங்களும் பயனுள்ள தகவலெல்லாம் தரீங்க..
//
இதை இந்த ஜென்மத்தில் நீங்கள் யாரும் செய்ய போவது இல்லை, அதனால் குறைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய இம்பேக்ட் எல்லாம் நான் சொல்ல வேண்டியது இல்லை.
//
இது சொல்லுறவங்க, கேக்குறவங்க ரெண்டு பேருக்குமே தெரியும்.. அவங்களும் குறைக்கிறேன், நிறுத்தறேன்னு சும்மா சொல்லலாம் ஆனால் அவங்களா செஞ்சாதான் உண்டு.
Post a Comment