முன்குறிப்பு : இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேரும். தயவுசெய்து அதை புரிந்துக்கொள்ளுங்கள். (ஒவ்வொரு முறையும் இதை வேற போடனும் இல்லன்னா.. கிளம்பிடுவாங்க...... oopsss !! ) .
அக்கா, அம்மாவென்று அழைத்துவிட்டு அதே பெண்களை பின்னால் அவர்களின் தோற்றத்தையும், உடலழகையும் வர்ணித்து பேசுவதும், ஏன் தன் சொந்த அக்காவிடமும் அம்மாவிடமும் பேசக்கூடாததை எல்லாம் இந்த இரவல் அக்கா, அம்மாவிடம் பேசுவதும் அருவருக்கத்தக்கதாக உள்ளது.
வலையுலகில் மட்டுமே என்னை அக்கா வென்று அழைப்பவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். பொதுவாக அலுவலகங்களில் யாரும் இப்படி என்னை அழைக்க அனுமதிப்பதில்லை.. ஸிஸ்டர் என்றாலே ... ம்ம்.. தெரியும். .உங்க ஸிஸ்டர் பாசம் கவிதா வென்று அழையுங்கள் என்று நேரிடியாக சொல்லிவிடுவது உண்டு.. இங்கு அக்காவென்று அழைக்காதீர்கள் என்று சொன்னால் என்னவோ என்னை தவறாக நினைப்பதோடு அல்லாமல், ஓ உங்களுக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? ன்னு கேட்பவர்களும் உண்டு. ஆனால் அழைக்க வேண்டாம் என்று சொல்ல உண்மையான காரணமோ, அக்கா, அம்மாவென்று அழைப்பவர்கள் அப்படியே நடந்துக்கொள்வது இல்லை, அந்த கருமத்தை எல்லாம் சகித்துக்கொள்ள முடியாது என்பதாலேயே பெயரிட்டு அழையுங்கள் என்று சொல்லிவிடுவது.
ஆனால் அக்கா என்பதையும் தாண்டி சிலர் அம்மா வென்றும் வலையுலகில் அழைத்திருக்கிறார்கள். அக்கா அம்மாவென்று அழைக்கும் ஒரு ஆணை நாங்கள் என்னவோ அப்படித்தான் பார்க்கிறோம்... பேசுகிறோம். .ஆனால் அவர்கள்...???
வெளியில் சொல்லவோ, எழுதிவிடவோ மிகவும் வேதனையாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. பார்வையே சரியில்லாத போது என்ன மண்ணாங்கட்டிக்கு அக்காவென்றும் அம்மாவென்றும் அழைக்கிறீர்கள். உங்களின் பார்வை எப்போது சரி இருக்கிறதோ, உங்களால் ஒரு பெண்ணை எப்போது உண்மையாக அக்காவாக அல்லது அம்மாவாக பார்க்க முடியுமோ, உங்களின் உடலும் உள்ளமும் எப்போது உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அப்போது ஒருவரை அப்படி அழைக்கலாம்.. இல்லையென்றால் தேவையில்லாமல் அந்த உறவுமுறைகளை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம். கூப்பிடும் போது அக்கா, அம்மா வென்று கூப்பிட்டுவிட்டு பின்னால் செம ஃபிகர்டா மச்சி... என்னம்மா இருக்காடா.. !! மச்சி ....ன்னு.... " அடக்கடவுளே ...இப்படியுமா.. ????
உறவு முறைகளுக்கான முழுமையான மரியாதையை கொடுக்கமுடியாத போது, தயவுசெய்து பெயரிட்டு அழையுங்கள்.... அக்கா அம்மாவென்று அழைத்து உறவு முறைகளை கொச்சைப்படுத்தாதீர்கள்... அருவருப்பாக இருக்கிறது.........!!
அணில் குட்டி அனிதா : ஹைய்யா. .எனக்கு இந்த பிரச்சனையே இல்ல. .எல்லாரும் என்னைய அணிலுன்னே கூப்பிடறாங்களே.. .ஹி ஹி.. கவி நீங்க... கழுத குட்டி கவிதா ன்னு பேரு வச்சிக்கோங்க. .உங்கள எல்லாரும் செல்லமா கழுத கழுத ன்னு கூப்பிடுவாங்க... :) சரி சரி... முறைக்காதீங்க.. ச்ச்சும்ம்மா லுலுலாயிக்கு.........
பீட்டர்தாத்ஸ் :- Trust is the glue of life. It's the most essential ingredient in effective communication. It's the foundational principle that holds all relationships
அக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....?!
Posted by : கவிதா | Kavitha
on 09:44
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
62 - பார்வையிட்டவர்கள்:
கூல் டவுன்...கூல் டவுன்..
நச்
அக்கா என்று சொல்வது ஒரு பாசம் கலந்த மரியாதை சொல்தான்.
எல்லோரும் ஒன்று போல் அல்ல
99 பேர் வெறும் உதடியமிகளா இருக்களாம்
1 நல்லவரும் இருக்கலாம் தானே ...
@ கேபிள் சங்கர் - ம்ம்..எழுதிட்டேன் இனிமே கூல் ஆ இருப்பேன்ன்.. !! :)
@ அமித்தும்மா.. - நன்றி
@ ஜம்மு - ம்ம்... நன்றாக பேசுகிறேன் என்பதற்காக எளிதாகவும் வேறு விதமாகவும் அதை பயன்படுத்திக்க நினைக்கக்கூடாது இல்லையா... ??! :(
கண்டிப்பாக நல்லவங்க இருக்காங்கத்தான் உங்களை போன்று..!! :))))
இது போன்ற எண்ணங்கள் தோன்றும்போது பொதுவாய் அந்த நட்புகளையோ அல்லது உறவுகளையோ தவிர்த்துவிடுவது நல்லதுதானே!
@ ஆயில்ஸ் - தவிர்த்து தவிர்த்து தவிர்த்து... கொண்டே தான் இருக்கிறேன்.. இருக்கவேண்டிதான் இருக்கிறது....
/ஆயில்யன் said...
இது போன்ற எண்ணங்கள் தோன்றும்போது பொதுவாய் அந்த நட்புகளையோ அல்லது உறவுகளையோ தவிர்த்துவிடுவது நல்லதுதானே!/
ரிப்பீட்டேய்...!
ஆஹா உங்க பதிவை அரசியலில் வகைப்படுத்தி இருக்காங்க தமிழ்மணத்தில்...:))
:((
;-(
//ஹி ஹி.. கவி நீங்க... கழுத குட்டி கவிதா ன்னு பேரு வச்சிக்கோங்க. .உங்கள எல்லாரும் செல்லமா கழுத கழுத ன்னு கூப்பிடுவாங்க..//
ஐ லைக் திஸ் டீலிங் வெரி மச்!
//ஆஹா உங்க பதிவை அரசியலில் வகைப்படுத்தி இருக்காங்க தமிழ்மணத்தில்...:)//
இல்லையா பின்னே!
எக்ஸ்கியூஸ்மீ!
உங்களை விட பெரியவங்க உங்களை பேர் சொல்லி அழைக்கலாம்!
சின்னவங்க எப்படி அவ்ளோ ஈஸியா பேர் சொல்லி கூப்பிடுவாங்க!
பாட்டின்னு கூப்பிட்டா சமூகம் கோவிச்சிக்காதுன்னு நினைக்கிறேன்!
:)
//ஐ லைக் திஸ் டீலிங் வெரி மச்!//
ஹி..ஹி ஹி... ஐ டூ லைக் திஸ் டீலிங் வெரி மச்சி... ஆனா கவிக்கு தான் என்னான்னு தெரியில இப்படி எல்லாம் நல்ல ஐடியா சொன்ன. .டென்ஜன் ஆகறாங்க... :(((
பாட்டின்னு கூப்பிட்டா சமூகம் கோவிச்சிக்காதுன்னு நினைக்கிறேன்!
:)
//
ஹி ஹி..சமூகம் ன்னா யாரு கவி'யா???? :)))) தெரியாம கேக்குறேன்.. :))))
//எக்ஸ்கியூஸ்மீ!
உங்களை விட பெரியவங்க உங்களை பேர் சொல்லி அழைக்கலாம்!
சின்னவங்க எப்படி அவ்ளோ ஈஸியா பேர் சொல்லி கூப்பிடுவாங்க!
//
கவிதா' என்ற பேரு கஷ்டமாவா இருக்கு....கூப்பிட ஈஸியா த்தானே இருக்கு.. ?! :))))))
பாட்டின்னு கூப்பிட்டா சமூகம் கோவிச்சிக்காதுன்னு நினைக்கிறேன்!
:)
//
:)) ஏன்ன்ன்ன்....சிபி... இப்ப உங்களுக்கு என்ன இப்ப பிரச்சனை???
வழக்கம்போல அணில்குட்டி உண்மையைச் சொல்லிருச்சு..
அணில்குட்டிக்கு இருக்குற சுதாரிப்பு அதை வளர்க்கிறவங்களுக்கு இல்லையேன்றதுதான் எனக்கு கவலையா இருக்கு..
இருந்தாலும் மாநக்கல் சிபி சொல்வதைப் போல் பாட்டி என்றே அழைக்க விழைகிறோம் அனுமதி தந்தால்..!
இப்படியும் ஒரு உலகமா?? நம்ப முடியவில்லை.
கவிதா அக்கா/மேடம்/கவிதா...
(சும்மா... அணிலு புது பதிவு அரம்பிச்சுடிசில்ல, இனிமே அது பிஸி ஆகிட்டா அந்த டிஸ்கி போடும் வேலையை நான் எடுத்துக்கலாம்னு ஒரு ட்ரை..)
@topic
சில நேரங்களில் சில மனிதர்கள்.. அவளோதான் இதுக்கு ஏன் இவளோ பீலிங்கு. நம் அளவில் நாம் ஒழுங்கா இருந்துட்டு, இந்த மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடவேண்டிதான்..
201 ஆவது பதிவே காண்டு கஜெந்திரனா மாறிடீன்களே
//சிபி... இப்ப உங்களுக்கு என்ன இப்ப பிரச்சனை???//
காலைலேர்ந்து கொஞ்சம் வயித்து வலி!
யம்மாடியோ! ரொம்ப சூடான பதிவு!
விட்டு தள்ளுங்க... நல்லவங்க இருக்குற இதே உலகத்துல கெட்டவங்களும் இருக்கதான் செய்யுறாங்க...:)
கவலை வேண்டாம்!:)
நான் உங்கள கவிசெல்லம் ன்னு கூப்பிடவா? எதுக்கு பிரச்சனை?
செம சூடு மச்சி! :-) இனிமேவாவது திருந்தட்டும்...!
யாரோ ஒரு சிலர் இப்படி இருக்கலாம். அவங்களை மட்டும் ஒதுக்கி வெச்சுடுங்க. உண்மையான பாசத்தோடு கூப்பிடறவங்களை அனுமதிக்கலாம்தானே.
அடாடா! உங்க பதிவை ரீடர்ல ரெண்டாவது "பத்தி" படிக்கறதுக்குள்ள பின்னூட்டம் போட்டே ஆகணும், நானும் ஒரு பதிவே போடணும்னு "பத்த" வச்சிட்டீங்களே. அக்மார்க் உண்மை. (அணில் குட்டி சொன்னது பத்தி ஒன்றும் சொல்லலை:-).
இந்த மாதிரி பேசுபவர்களுக்கு மட்டும் தான் என்னும் டிஸ்கியோடு இன்னொரு விஷயம்: கூட பணி செய்பவர்களை அக்கா, அண்ணின்னெல்லாம் அழைக்கலையே, இங்க மட்டும் என்ன?
பெண் டெக்கி(techie)களுக்கும் இதே ப்ரச்னை உலகளாவிய முறையில். இதப் பத்தி காலையில ஒரு கார்ட்டூன் பாத்து ரொம்பவே ரசிச்சேன், சரி, பதிவா போடலாமா வேண்டாமா என்று இருந்தவளைப் பதிவிட வச்சிட்டீங்க; என் 50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்.
நம்மைவிட வயதில் பெரியோரை உறவு முறை சொல்லி அழைக்க வேண்டும் என்றே நாம் பழக்குவதாலும் பழக்கபட்டதாலும் வருகின்ற குழப்பம். உண்மையாக உறவுமுறை எண்ணம் இல்லை என்றால், அப்படி உறவு வைத்து விளித்து நீங்கள் சொன்னது போல கொச்சை படித்தாமல் இருப்பதே நல்லது. நல்ல பதிவு.
@ சிபி, & உண்மைத்தமிழன் , பாட்டின்னு கூப்பிடலாம்... கொள்ளு பாட்டின்னு கூட கூப்பிடலாம் ஆனா அதற்கு தகுந்தார் போன்று நானும் "டா" போட வேண்டி இருக்கும். பரவாயில்லையா???
@ உழவன் எப்போது என் பதிவுக்கு வந்தாலும் "நம்பமுடியவில்லை" என்ற வார்த்தை பெரும்பாலும் பார்க்கிறேன்.. :) நம்ப முடியாத ஒரு விஷயத்தை நீங்க நம்ப வேண்டாங்க.. :)
@ வாழவந்தான், எப்படி கூப்பிடுகிறார்கள் என்பது இந்த பதிவின் கருத்து அல்லவே. .எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பதே.. !!
@ விபூஷ், கூப்பிடலாம் .!!
@ முல்ஸ்...:))))ஆமாம், "செம செம செம. .ஹாட் மிர்ச்சி மச்சி ! "
@ தமிழ்மாங்கனி - நன்றி.. விட்டுதள்ளியாச்சி !! :)
@ கெக்கெ பிக்குணி - பதிவை பார்த்தேன், படித்தேன்.. :) நன்றி
@ தாரணி பிரியா: நன்றி, கூப்பிடுவதை பற்றி பிரச்சனையே இல்லை.. !! பதிவை சரியா படித்தீர்களா? :)
@ மாதவன்.. பெயரிட்டு அழைப்பதை தான் பலர் விரும்புகிறார்கள்... :) மரியாதையும் கூட.... உறவுமுறை தேவை என்ற அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை....
@ மாதவன் :- இந்த உறவுமுறை வைத்து அழைத்துக்கொள்வது நாம் நமக்கு போட்டுக்கொள்ளும் வேலி, அல்லது மற்றவர்கள் பார்வைக்கு நம்மை நல்லவிதமாக காட்டிக்கொள்ள ஒரு ஏற்பாடு, அல்லது அழைக்கின்ற நபர் /மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம்.. இப்படி பல காரணங்கள் சொல்லிக்கொண்டு போகலாம். .
//@ மாதவன் :- இந்த உறவுமுறை வைத்து அழைத்துக்கொள்வது நாம் நமக்கு போட்டுக்கொள்ளும் வேலி, அல்லது மற்றவர்கள் பார்வைக்கு நம்மை நல்லவிதமாக காட்டிக்கொள்ள ஒரு ஏற்பாடு, அல்லது அழைக்கின்ற நபர் /மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம்.. இப்படி பல காரணங்கள் சொல்லிக்கொண்டு போகலாம். .//
:)
திஸ் ஈஸ் டூ மச்!
இந்தக் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறேன்! உங்க ஐடியாலஜியையெல்லாம் எல்லோர் மீதும் திணிப்பது தவறு!
ஒடு டீக்கடைக்கு பொறோம்!
ஆண்களா இருந்தா "அண்ணாச்சி ஒரு டீ போடுங்க, அண்ணே ஒரு டீ போடுங்க" என்போம்!
பெண்ணா இருந்தா "அக்கா ஒரு டீ கொடுங்க", கொஞ்சம் வயசானவங்களா இருந்தா "ஒரு டீ போடுங்க்மா" னு சொல்லுவோம்!
இதுல வேலி, காம்பவுண்டு, நல்ல விதமா காட்டிக் கொள்ளும் ஏற்பாடு எல்லாம் ஒண்ணும் கிடையாது!
இதெல்லாம் இயற்கையா வருபவை! திட்டமிட்டு செய்பவை அல்ல!
அலுவலகத்தில் பேர் சொல்லி கூப்பிடலாம்! அது கூட கொஞ்சம் பழக்கம் ஆகணும்! இல்லாட்டி இருக்கவே இருக்கு "சார், மேடம்" எல்லாம்!
ஆஃபீஸ்ல பொயி அக்கா, அம்மான்னெல்லாம் யாரையும் சொல்றதில்லை! வேணும்னா ஹவுஸ் கீப்பிங்க்கு வரவங்களை (அவங்க வயசுல பெரியவங்களா இருப்பதால) அக்கா அல்லது அம்மான்னு சொல்றது உண்டு!
தவறான பார்வைகள் எல்லார்கிட்டையும் கிடையாது!
நாம என்ன கலர்ல கண்ணாடி போடுறமோ அந்த கலர்லதான் உலகம் நமக்கு தெரியும்!
//புரிந்துக்கொள்ளுங்கள்//
புரிந்துகொள்ளுங்கள், க் வராது.
//இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேரும்//
சம்பந்தப்பட்டவங்களுக்கு தானே, நமக்கு இல்ல, அத்தால எலக்கண பாடத்தோட நிறுத்திக்கிறேன் :-)
செம ஹாட் அது போல செம டாப். இந்த தொல்லையே அரபிகாரங்க கிட்ட கிடையாது. அப்பா அம்மா ரெண்டு பேரை தவிர மத்த எல்லாரையும் பேர் சொல்லி தான் கூப்பிடுவாங்க. முதலாளியா இருந்தா கூட பேர்தான் சொல்லி கூப்ப்பிட்டுபாங்க. சார் மோர் எல்லாம் நம்ம ஆளுங்க சொன்னா கூட "அதல்லாம் வேண்டாம் என் பேரை சொல்லியே கூப்பிடு"ன்னு சொல்லுவாங்க!!
//:)
திஸ் ஈஸ் டூ மச்!
//
எஸ்..டூ மச்' சா செய்யறவங்களுக்கு டீ மச்சாத்தான் சொல்ல வேண்டி இருக்கு..!! :)
//இந்தக் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறேன்! உங்க ஐடியாலஜியையெல்லாம் எல்லோர் மீதும் திணிப்பது தவறு!
//
சிபி என்னுடைய கருத்தை மட்டும் தான் சொல்லி இருக்கேன்.. இதை யார் மேலேயும் நான் திணிக்கல, எனக்கு சம்பந்தபடும் போது மட்டுமே அதையும் செய்கிறேன்.. திணிப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்லவே..!!
அபிஅப்பா'வின் பின்னூட்டத்தை பாருங்க..
அதை தான் என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன்.. அவ்வளவே..!!
//ஒடு டீக்கடைக்கு பொறோம்!
ஆண்களா இருந்தா "அண்ணாச்சி ஒரு டீ போடுங்க, அண்ணே ஒரு டீ போடுங்க" என்போம்!//
சிபி..நான் இல்லை என்று சொல்லவில்லை... இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது வேறு இப்படியும் இருக்கலாம் என்பது வேறு..
உங்களை நான் தம்பி என்றோ அண்ணன் என்றோ அழைத்தால் தான் நான் அப்படி உங்களிடம் பழகுவதாக நீங்கள் நினைத்தால் அது உங்களின் அபத்தமே தவிர என்னுடையதல்ல..
குறிப்பாக கவிதா ' என்ற பெயரில் யாருடன் நான் பேசினாலும் பெயரிட்டோ அல்லது ஜி உடன் சேர்த்தோ தான் அழைப்பேன். உறவு முறையை நான் கொண்டுவருவதில்லை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.
நம்பிக்கை இல்லாத விஷயத்தில் அதுவும் அது என்னை சார்ந்து இருக்கும் போது நான் அதை பற்றி எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
//இதெல்லாம் இயற்கையா வருபவை! திட்டமிட்டு செய்பவை அல்ல!
//
:)))))) திட்டமுடுவதுமில்லை, இயற்கையாக வருவதும் இல்லை. தயக்கம். இவரை பெயரிட்டு கூப்பிட்டால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம், அதற்கு நம் வளர்ப்பு முறையும், நம் குடும்ப அமைப்புக்களும் காரணம். அதை தாண்டி யோசித்து நாம் எப்படி இருக்க வேண்டும் எப்படி பேசவேண்டும், எப்படி பேசினால் அது நல்லது என்பதை நிர்ணயிப்பது நாமே.!!
@ ராஜ் நன்றி.. ம்ஹிம் நீங்க எனக்கு டீச்சர் இனிமே.. பிழைத்திருத்தம் செய்வதை விட, பிழையில்லாமல் எழுத சொல்லித்தாருங்கள். :)
அபி அப்பா - நன்றி.. :)
//தவறான பார்வைகள் எல்லார்கிட்டையும் கிடையாது!
நாம என்ன கலர்ல கண்ணாடி போடுறமோ அந்த கலர்லதான் உலகம் நமக்கு தெரியும்!
//
:)... :)....:) ... உங்களிடம் இதற்காக நான் வாதம் செய்ய விரும்பவில்லை அது எனக்கு அசிங்கம்.. சிபி.. :)))
பின்னணி தெரியலை. ஆனா வருத்தமா இருக்கு :(
//உங்களை நான் தம்பி என்றோ அண்ணன் என்றோ அழைத்தால் தான் நான் அப்படி உங்களிடம் பழகுவதாக நீங்கள் நினைத்தால் அது உங்களின் அபத்தமே தவிர என்னுடையதல்ல..//
:)
என்னை நீங்கள் அண்ணா/தம்பி என்றோதான் அழைத்தாக வேண்டும் என்றோ அல்லது நான் உங்களை அக்கா/தங்கச்சி என்றோதான் அழைப்பேன் என்றோ நான் அடம்பிடிக்க வில்லை!
உங்களை எப்படி அழைக்கவேண்டும் என்று கூறத்தான் உங்களுக்கு உரிமை இருக்கிறதே தவிர அனைவர் சார்பாகவும் பொதுவாக இப்படி அழைப்பது தவறு என்று சொல்ல உரிமை இல்லை!
அழைக்கப்படுவது எப்படியென்று கூறுவது அவரவர் விருப்பம்!
மாதவராஜ் அவர்களுக்கு நீங்கள் கூறியிருந்த பதில் பொதுவான ஒன்றுதானே தவிர உங்கள் தனிப்பட்ட விஷயம் அல்ல என்பதை கவனியுங்கள்!
/தயக்கம். இவரை பெயரிட்டு கூப்பிட்டால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம், அதற்கு நம் வளர்ப்பு முறையும், நம் குடும்ப அமைப்புக்களும் காரணம்.//
தயக்கமெல்லாம் எங்களுக்கு கிடையாது!
இந்த மாதிரி உறவு முறையெல்லாம் சொல்லி அழைக்காதேன்னு சொல்றவங்ககிட்டே நாங்க ஒரு போதும் அப்படி அழைப்பதில்லை!
அவங்க அப்படி சொல்லாத வரை அவங்க அதை வரவேற்கிறாங்கன்னு எடுத்துக்கிறோம்! அவ்வளவுதான்!
/:)))))) திட்டமுடுவதுமில்லை, இயற்கையாக வருவதும் இல்லை. தயக்கம். இவரை பெயரிட்டு கூப்பிட்டால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம்//
இந்த தயக்கம் உங்களுக்கு வேணா இருக்குன்னு சொல்லுங்க! அதெப்படி மத்தவங்களுக்குத் தயக்கம்னு நீங்க சொல்றீங்க?
அதை அவங்கவங்கதான் சொல்லணும்!
எனக்கெல்லாம் முதல்ல பார்க்கும்போது/பேசும்போது எப்படி அழைக்கணும்னு தோணுதோ அப்படித்தான் அழைக்கிறேன்! தயக்கத்தினாலயோ, திட்டமிட்டோ இப்படித்தான் அழைக்கணும்னு உக்காந்து யோசிக்கிறதில்லே!
சிபி.. இந்த பதிவில் உங்களிடம் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. .அதனால் தயவுசெய்து இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் !
//இந்த தயக்கம் உங்களுக்கு வேணா இருக்குன்னு சொல்லுங்க! அதெப்படி மத்தவங்களுக்குத் தயக்கம்னு நீங்க சொல்றீங்க?
//
:)
இந்த மாதிரி உறவு முறையெல்லாம் சொல்லி அழைக்காதேன்னு சொல்றவங்ககிட்டே நாங்க ஒரு போதும் அப்படி அழைப்பதில்லை!
அவங்க அப்படி சொல்லாத வரை அவங்க அதை வரவேற்கிறாங்கன்னு எடுத்துக்கிறோம்! அவ்வளவுதான்!
//
:)))
என்னை நீங்கள் அண்ணா/தம்பி என்றோதான் அழைத்தாக வேண்டும் என்றோ அல்லது நான் உங்களை அக்கா/தங்கச்சி என்றோதான் அழைப்பேன் என்றோ நான் அடம்பிடிக்க வில்லை!
//
:))))
//சிபி.. இந்த பதிவில் உங்களிடம் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. .அதனால் தயவுசெய்து இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் !//
டன்!
//
கவிதா | Kavitha said...
இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேரும்
//
So, இதுல சம்மந்தபடாத நாங்க பின்னூட்டம் போடலேனா அது தான் சரி..
ஆனா, உங்களோட பதிவுக்கு பின்னூட்டம் போடலேனா, உங்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லேன்னு ஆகிடும்கறதால பின்னூட்டம் போட்டா, இதுல நாங்க சம்பந்தப்பட்டிருக்கோம்னு ஆகிடும்.. அதனால, இந்த பதிவ படிச்சதால உண்டான இந்த பதிவுக்கும் எங்களுக்குமான சம்பந்ததால, இங்க நாங்க பின்னூட்டம் போடறதால, இந்த பதிவுல குறிப்பிட்டிருக்கும் மேட்டருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இருக்குதுன்னு தப்பா சொல்ல கூடாது..
(makkale.. yethaachum purinchuthaa..?)
ஆமா.. இன்னா மேட்டரு அக்காகாகாகாகா..
ஏதோ கலீஜ் மேட்டராடோம் கீது..
வாப்பா சுரேஷ் குமார், தெளிவாக புரிஞ்சிது, நீங்களும் தெளிவாக இருந்தால் சந்தோஷப்படுவேன்.. !! :)
//ஆமா.. இன்னா மேட்டரு அக்காகாகாகாகா.. //
:)
ஆஹா! 50 போச்சே!
//வாப்பா //
ஹெஹெ!
//
கவிதா | Kavitha said...
நீங்களும் தெளிவாக இருந்தால் சந்தோஷப்படுவேன்.. !! :)
//
ஆஹா.. ஏதோ எக்குதாப்பா வந்து மாட்டிட்டேன் போல..
(ஆமா நான் தெளிவா இல்லேன்னு உங்ககிட்ட யார் சொன்னது..)
எனக்கு அக்காங்க கிட்ட எப்டி நடந்துக்கணும்னு நல்லாவே தெரியும்கா..
எனக்கும் ரெண்டு அக்காஸ் இருகாங்க..
So, கண்டிப்பா நா எப்போமே தெளிவா இருப்பேன்கா.. கா..கா..கா..கா..கா..
//வாப்பா //
ஹெஹெ!
//
:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபிஸ் ல வேலை இல்லையா?
//கா..கா..கா..கா..கா..//
நல்லாவே காக்கா பிடிக்கறீங்க சுரேஷ் அண்ணாத்தே!
(இவரு தப்பா எடுத்துக்க மாட்டாரு)
//So, கண்டிப்பா நா எப்போமே தெளிவா இருப்பேன்கா.. கா..கா..கா..கா..கா..
///
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !!
//:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபிஸ் ல வேலை இல்லையா?//
பின்னே!
//
நாமக்கல் சிபி said...
//வாப்பா //
ஹெஹெ!
//
என்னா பண்ண.. அக்கா அக்கானு பிட்ட போட்டுட்டு பாட்டி ரேஞ்சுக்கு வரவேற்பு தாறாஹ..
இவங்க அக்காவா பாட்டியானு மொதல்ல கண்டுபுடிக்கணும்..
//
நாமக்கல் சிபி said...
//கா..கா..கா..கா..கா..//
நல்லாவே காக்கா பிடிக்கறீங்க சுரேஷ் அண்ணாத்தே!
(இவரு தப்பா எடுத்துக்க மாட்டாரு)
//
நீங்களே முடிவு பண்ணிகிறிங்க..
//இவங்க அக்காவா பாட்டியானு மொதல்ல கண்டுபுடிக்கணும்..//
:)
உறவு வெச்சி கூப்பிடுறதே தப்புன்னு சொல்றாங்க! நீங்க வேற!
//
நாமக்கல் சிபி said...
//:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபிஸ் ல வேலை இல்லையா?//
பின்னே!
//
அப்டினா எதாச்சும் ஒரு வெயிட்டான பதிவா போட்டு தாக்க வேண்டியது தானே..?
ரொம்ப நாளா பதிவையே காணோமே..??
//
நாமக்கல் சிபி said...
உறவு வெச்சி கூப்பிடுறதே தப்புன்னு சொல்றாங்க! நீங்க வேற!
//
அப்டியா.. அப்போ வெறுமனே மனுசினு கூப்டலாமா..
அப்டி கூப்டாகூட, மனிதர்கள்ன்ற உறவு இருக்குமே.. என்னதான்யா பண்ண..??
Post a Comment