அணில் குட்டி அனிதா:- எங்க ஓனரை ஓவரா கலாய்ப்பதால் அவங்க இப்படி எல்லாம் ஐடியா செய்யறாங்க.. உஷார் உஷார்.... !!
சிபியின் தொல்லை தாங்கமுடியாமல் எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தபோது சிக்கியது சிபியின் கன்னத்துக்குழி :-
1. இரவில் மின்சாரம் போய்விட்டால் , சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்.
2. மெழுகுவத்தி ஸ்டேன்டாக பயன்படுத்தலாம்..
3. அப்படியே சுட சுட உருகும் மெழுகை அதில் சேமித்து வைத்து , திரும்பவும் திரிப்போட்டு எரியவிடலாம்.
4.. சிமெண்டு குழைக்க பாண்டாக பயன்படுத்தலாம்
5. பெயிண்ட்ங் செய்யும் போது கலர் குழைக்க பயன்படுத்தலாம்.
6. தாளிக்க கரண்டி இல்லைன்னா. .சுடசுட எண்ணெய் காயவைத்து குழியில் ஊற்றி அதை தாளிக்க பயன்படுத்தலாம்
7. யார் சாமிக்கு வேண்டிக்கிட்டாலும் சிபி யின் வாயில் அலகு குத்தறேன்னு வேண்டிக்கிட்டு.. குழிக்கு குழி ..கம்பியை விட்டு அலகு குத்தலாம். குழியின் காரணமாக நீளம் குறைவான கம்பியே போதும்
8. தீபத்திருநாளில் சிபியின் கண்ணத்தையும் தீபமாக்கிவிடலாம்...
9. குண்டூசி, ஸேஃப்ட்டி பின் போட்டு வைக்கலாம் எடுக்கும் போது எல்லாம் ஒரு குத்து குத்தலாம்.
10. தீபாவளிக்கு ராக்கெட் விட ஸ்டான்டாக பயன்படுத்தலாம்
11. புஸ்வானம் கூட வைத்து விடலாம்
12. பாம்பு மாத்திரை குழிக்குள் போட்டு ஆசைத்தீர கொளுத்தலாம்
13. சுடச்சுட அவித்த வேர்கடலையை கொட்டி அதிலிருந்து எடுத்து சாப்பிடலாம் நம்ம கை சுடாமல் இருக்கும்.
14. லவுட் ஸ்பீக்கரை இரண்டு கன்னத்துக்குழியிலும் பிக்ஸ் செய்துவிடலாம்
15. நெல்லு, அரிசி குத்த பயன்படுத்தலாம்.
16. அந்த குழியில் சின்னதா மஞ்சல் வட்டம் போட்டு வில் வித்தை அல்லது துப்பாக்கி சுடும் பொழுது மார்க்கிங்ஸ்டேண்டாக பயன் படுத்தலாம்.
17.. பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்
18. மிளகாய் அதிகம் போட்டு ஊறுகாய் போட்டு வைக்கும் ஜாடியாக பயன் படுத்தலாம்
சிபி யின் கன்னத்துக்குழி :)
Posted by : கவிதா | Kavitha
on 15:16
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
47 - பார்வையிட்டவர்கள்:
என்னாது ...
சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்\\
அவரு கதி
அதோ - கதியா?
அப்படியே சுட சுட உருகும் மெழுகை அதில் சேமித்து வைத்து , திரும்பவும் திரிப்போட்டு எரியவிடலாம்.\\
திருப்பினா விழுந்திடுமே
பெயிண்ட்ங் செய்யும் போது கலர் குழைக்க பயன்படுத்தலாம்.\\
வெள்ளை சேர்க்க தேவையில்லையோ
//4. பம்பரம் விட்டு விளையாடலாம்//
குசும்பரே, பம்பரம் விட சிபியின் கன்னக்குழி என்ன ....... ஹ்ம்ம் வேண்டாம் கவிதாவோட பதிவா இருக்கேன்னு பார்க்கிறேன்.
\\யார் சாமிக்கு வேண்டிக்கிட்டாலும் சிபி யின் வாயில் அலகு குத்தறேன்னு வேண்டிக்கிட்டு.. குழிக்கு குழி ..கம்பியை விட்டு அலகு குத்தலாம். குழியின் காரணமாக நீளம் குறைவான கம்பியே போதும்\\
இவ்வளவு நல்லவங்களா நீங்க
எதுக்கும் என் கன்னத்தை காப்பாத்திக்கிறேன்
ஒரு பாம்பு கீரிய குழியில் விட்டு சண்டை போட வெச்சு வேடிக்கை பார்கலாம்:))
பின்னூட்டம் போடறவங்க எல்லாம் இப்படி நல்ல நல்ல ஐடியாவா கொடுத்துட்டு போகனும் சரியா.. :))
திருப்பினா விழுந்திடுமே
//
இப்படி எல்லாம் கேள்வி கேட்கப்பிடாது.. நாங்க தான் ஒரு முடிவோட இருக்கோமே. .அவரை அப்படி எல்லாம் எளிதாக திரும்பவிடுவோமா..??? :))
ஒரு பாம்பு கீரிய குழியில் விட்டு சண்டை போட வெச்சு வேடிக்கை பார்கலாம்:))
//
ஆஹாஆ சுப்பர் !! :))
ஏன் ஒரு தேளை பிடிச்சிக்கூட உள்ள போட்டு பேசமா விட்டுடலாம் அதுவே மத்ததை பாத்துக்கும்.. :)
புறா, காக்கா, கோழி, க்கு எல்லாம் சாப்பாடு வைக்கலாம்.. அது நல்லா கொத்தி கொத்தி சாப்பிடும்.. :)
//பின்னூட்டம் போடறவங்க எல்லாம் இப்படி நல்ல நல்ல ஐடியாவா கொடுத்துட்டு போகனும் சரியா.. :))//
குழி பணியாரம் செய்யும் குழியாக பயன்படுத்தலாம். பிறகு "பணியாரம் பணியாரம் பணியாரம், வுட்டுக்கோ வுட்டுக்கோ வுட்டுக்கோ"
//குழி பணியாரம் செய்யும் குழியாக பயன்படுத்தலாம். பிறகு "பணியாரம் பணியாரம் பணியாரம், வுட்டுக்கோ வுட்டுக்கோ வுட்டுக்கோ"//
அப்போ அடுப்பு எங்க பத்த வைப்பீங்க?
வாய்க்குள்ளேயா?
:((
அப்போ அடுப்பு எங்க பத்த வைப்பீங்க?
வாய்க்குள்ளேயா?
:((
//
:)) ROTFL :)))
பொது சேவை விளம்பரங்கள் தருவது - எங்கள் கவிதாக்கா!
//அப்போ அடுப்பு எங்க பத்த வைப்பீங்க?
வாய்க்குள்ளேயா?
:((//
அது சொல்லி தான் தெரியணுமா? இப்போவே என் வீட்டுக்காரம்மணி பணியார மாவு ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டா. நைட் ஃப்ளைட்டு, நாளைக்கு காலைல லேண்டிங். நேரா சிபி வீட்டுக்கு தான் வருவோம். வந்ததும் முதல் வேலையே அடுப்பைப் பத்த வைக்கிறது தான். யாருக்காவது சுட சுட பணியாரம் வேணும்ன்னா நேரா சிபி வீட்டுக்கு வந்துடுங்கப்பா...
//பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்//
எனக்கென்னமோ இது நல்லா ஒர்க் அவுட் ஆகும்ன்னு தோணுது !
சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு கொடிக்கம்பம் நட உபயோகிக்கலாம். இப்போ தேர்தல் நேரமா இருக்கிறதால கட்சிக்கொடி கட்டவும் உபயோகப்படுத்தலாம். கட்சித்தலைவர் போற இடத்துக்கெல்லாம் சிபியை கூட்டிட்டுப் போய்ட்டா சிபியின் கன்னம் ஒரு மொபைல் கொடிக்கம்பக்குழியா மாறிடும்.
//ஆயில்யன் said...
//பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்//
எனக்கென்னமோ இது நல்லா ஒர்க் அவுட் ஆகும்ன்னு தோணுது !
//
you too Brutus? :)
19. இப்படியெல்லாம் டைம்பாஸ் பண்ணுவதற்கான வஸ்துவா பயன்படுத்தலாம்..
(விட்டா உங்க பாப்பாஸ் எல்லாம் ஒலிஞ்சு வெளையாடுற எடமா யூஸ்பண்ண சொல்லுவிங்க போல..)
//சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு கொடிக்கம்பம் நட உபயோகிக்கலாம். இப்போ தேர்தல் நேரமா இருக்கிறதால கட்சிக்கொடி கட்டவும் உபயோகப்படுத்தலாம். கட்சித்தலைவர் போற இடத்துக்கெல்லாம் சிபியை கூட்டிட்டுப் போய்ட்டா சிபியின் கன்னம் ஒரு மொபைல் கொடிக்கம்பக்குழியா மாறிடும்.//
குட்! உங்களைத் தனியா டீல் பண்ணிக்கிறேன்!
நட்புடன் ஜமால் said...
சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்\\
அவரு கதி
அதோ - கதியா?
//
பாவம் தான் அவர்
அவரை ஒக்கார வைச்சி ரசிச்சிகிட்டே இருக்கலாம் :)
//
குண்டூசி, ஸேஃப்ட்டி பின் போட்டு வைக்கலாம் எடுக்கும் போது எல்லாம் ஒரு குத்து குத்தலாம்.
//
ஒரு குத்து தானா..??
ஏ, லிமிட்டெட் ஆப்பரா..?
நமிதா..! said...
அவரை ஒக்கார வைச்சி ரசிச்சிகிட்டே இருக்கலாம் :)
//
சிபி அவதாரம் எடுத்தாச்சு போல.. :)))) ஆமா என்ன ஆச்சி உங்க நயன்.. நமிதா வருதூ ????? :)) நயன் ஓடிபோயிட்டாங்களா??
//குட்! உங்களைத் தனியா டீல் பண்ணிக்கிறேன்!//
ராஜா: அரசியல் கட்சிக்கு கொடிக்கம்பக்குழியா போறதுக்கே இந்த மிரட்டலா, என் மேல கை வச்சா தமிழகமே திரண்டு வரும்.
சிபி: எதுக்கு?
ராஜா: வேற எதுக்கு, வேடிக்கைப் பார்க்க தான்.
சிபி ரொம்ப மிரட்டுறதால அடுத்த ஐடியா
இப்போ IPL சீசன்ங்கிறதால ஃபீல்டிங் பண்றவங்க, பவுலிங் போடுறவங்க சிங்கிள் ஸ்டெம்ப் வச்சி ப்ராக்டிஸ் பண்ணுவாங்க. அந்த சிங்கிள் ஸ்டெம்ப் நடுற குழியா உபயோகிக்கலாம்.
சிபிக்கு ரொம்ப வலிக்கப்போகுதுன்னு ஒரு லைட்டான விஷயம்.
பேனா ஸ்டாண்டா உபயோகிக்கலாம்.
அணிலு: சிபிக்கு வலிக்காது, அவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு
//இப்போ IPL சீசன்ங்கிறதால ஃபீல்டிங் பண்றவங்க, பவுலிங் போடுறவங்க சிங்கிள் ஸ்டெம்ப் வச்சி ப்ராக்டிஸ் பண்ணுவாங்க. அந்த சிங்கிள் ஸ்டெம்ப் நடுற குழியா உபயோகிக்கலாம்.//
அது சரி!
ஆமாம், உங்களைவிட கொஞ்சம் அதிகமா மொக்கை போட்டா இந்த மாதிரியெல்லாம் மிரட்டுறதா?
//
பொது சேவை விளம்பரங்கள் தருவது - எங்கள் கவிதாக்கா!
//
ஹா ஹ ஹா...
சிபி!. கவிதா கிட்ட வம்புக்கு போவியா... போவியா... போவியா....
அடிச்சிட்டேன் நீ அழுவாதடா கண்ணு.
\\கிள்ளிவைத்த உன்
ஒரு கன்னத்து குழி அழகு
விடாது சிரிக்கின்ற
முல்லை பூ பற்கள் அழகு\\
சிபிக்கு எதிரா ஒரு பெண்ணீய பதிவா நான் இதை கருதி நான் கவிதாவை கண்டிச்சு மேலே கவிதா எழுதிய கவுஜயை நியாபகப்படுத்தி அவ்விட அம்மணிக்கும் அதே கதி தானா என கேட்டுக்கொள்கிறேன்.:-)))))))))))
அளவில்லா ஆனந்தத்துடன்
அபிஅப்பா
//சிபிக்கு எதிரா ஒரு பெண்ணீய பதிவா நான் இதை கருதி நான் கவிதாவை கண்டிச்சு மேலே கவிதா எழுதிய கவுஜயை நியாபகப்படுத்தி அவ்விட அம்மணிக்கும் அதே கதி தானா என கேட்டுக்கொள்கிறேன்.:-)))))))))))
அளவில்லா ஆனந்தத்துடன்//
அபி அப்பா எங்கள் வேலையை கச்சிதமாகச் செய்கிறார்!
சிபிக்கு எதிரா ஒரு பெண்ணீய பதிவா நான் இதை கருதி//
:))) ம்ம் அப்புறம்... அபி அப்பா உங்க காமெடிக்கு ஒரு அளவில்லையா? இது எல்லாம் ஒரு பெண்ணிய பதிவா.. ஹா ஹா ஹா.. :))) ஹய்யோ ஹய்யோ!!
சரி விடுங்க மேல படிக்கிறேன்.. :)
//மேலே கவிதா எழுதிய கவுஜயை நியாபகப்படுத்தி அவ்விட அம்மணிக்கும் அதே கதி தானா என கேட்டுக்கொள்கிறேன்.:-)))))))))))
//
:)))))) சிபிக்கு அதே மாதிரி கவிதை எழுதுனும்னு தான் இருந்தேன்.. கண்டிப்பா எழுதுவேன்.. பொறுமையாக இருக்கவும்.. :))))
அம்மணிக்கு காலையிலேயே மெயில் அனுப்பி தெரிவிச்சாச்சி... கன்னத்துலக்குழி விழறவங்க எல்லாம் ஜாக்கறதை யாக இருங்கள் னு :)))
சூப்பர் கவிதா!குழிப் பணியாரம் செய்ய பயனப்டுத்தலாமே! :-) அப்புறம், என் எதிரிகள் யாருக்காவது கன்னத்துக்குழி இருந்தால் இந்த மெத்தட்களை பயன்படுத்துகிறேன், உங்க வழியைப் பின்பற்றி! நல்ல ஐடியாக்களுக்கு நன்றி!
//சிபிக்கு எதிரா ஒரு பெண்ணீய பதிவா நான் இதை கருதி நான் கவிதாவை கண்டிச்சு மேலே கவிதா எழுதிய கவுஜயை நியாபகப்படுத்தி அவ்விட அம்மணிக்கும் அதே கதி தானா என கேட்டுக்கொள்கிறேன்.:-)))))))))))//
ஹிஹிஹி!! இதெல்லாம் எனக்கு கிடையாது..ஏன்னா நான் கவிதா ஃப்ரெண்டு!!
//அம்மணிக்கு காலையிலேயே மெயில் அனுப்பி தெரிவிச்சாச்சி... கன்னத்துலக்குழி விழறவங்க எல்லாம் ஜாக்கறதை யாக இருங்கள் னு :)))
//
வெரிகுட் கவிதா..இப்படியே சமாளிக்கவும்..சிபி நம் கையில் கிடைக்கும் வரை! போட்டு தாளிச்சிடலாம்! ஓக்கே!
தாங்க முடியல..!
ஒரு கொசுவை அடிக்கிறதுக்கு இம்புட்டு வழி எதுக்கு..
ஒரு கொசுவை அடிக்கிறதுக்கு இம்புட்டு வழி எதுக்கு..
//
முருகா.. ஏன் முருகா இவ்வளவு லேட்டு ??!! ,
முதல் பின்னூட்டமாக போட்டு இருந்தால் இவ்வளவு எனர்ஜி வேஸ்ட் செய்து இருக்கமாட்டேன் இல்ல...
//சிபி நம் கையில் கிடைக்கும் வரை! போட்டு தாளிச்சிடலாம்! ஓக்கே!
//
ஆஹா முல்ஸ்.. நிஜமாகவே தாளிக்கலாம் அது கூட ஒரு பாயின்ட் ல இருக்கு பார்த்தீங்களா? :)))))
//ஹிஹிஹி!! இதெல்லாம் எனக்கு கிடையாது..ஏன்னா நான் கவிதா ஃப்ரெண்டு!!
//
முல்ஸ் நம்மை பற்றி அறியாதவர்கள் ... :))))
சூப்பர் கவிதா!குழிப் பணியாரம் செய்ய பயனப்டுத்தலாமே! :-) //
ஆமா ஆனா இதுக்கு மட்டும் வாயிக்குள்ள அடுப்பை பற்ற வைக்கனும்..... பாவம் சிபி... நிறைய பேர் இதையே செலக்ட் செய்தா என்ன செய்யறது ?!! :)
அப்போ வாய் ஒருத்தருக்கு, காது இன்னொருத்தருக்கு-ன்னு அடுப்பு பத்தவைக்க பாகப்பிரிவினை செய்துடுங்க...சிம்பிள்!! ;-)
அப்போ வாய் ஒருத்தருக்கு, காது இன்னொருத்தருக்கு-ன்னு அடுப்பு பத்தவைக்க பாகப்பிரிவினை செய்துடுங்க...சிம்பிள்!! ;-)
//
அய்யோ காதுமா???? !!! எழுதின எனக்கே தாங்கமுடியலையே...
சிபி... உங்க நிலைமை.. ரொம்ப மோசம்.. இனிமேவாவது பாத்து நடந்துக்கோங்க.. ... இப்படியே குரூப் சேர்ந்தால் உடம்பில் ஒரு பார்ட் கூட மிஞ்சாது போலவே... :)))))
என்னது சிபிக்கு அதுக்குள்ளே டொக்கு விழுந்துட்டா. நான் பார்த்தப்ப மனுசன் நல்லா தானே இருந்தார். நான் கூட வீங்கி வடிஞ்ச பள்ளம் என்று தான் நினைத்தேன்.
மில்கிவே காலக்சியில் இருக்கும் கரும்பள்ளம் ரேஞ்சிக்கு அவரை கலாய்த்து வச்சிருக்கிங்க. வன்மையாக கண்டிக்கிறேன்
//நான் கூட வீங்கி வடிஞ்ச பள்ளம் என்று தான் நினைத்தேன்.
//
:))))))))))))
//மில்கிவே காலக்சியில் இருக்கும் கரும்பள்ளம் ரேஞ்சிக்கு அவரை கலாய்த்து வச்சிருக்கிங்க. வன்மையாக கண்டிக்கிறேன்
//
வாங்க கோவி..!! ம்ம் வன்மையாகவோ மென்மையாகவோ எப்படி வேண்டுமானாலும் கண்டிச்சிக்கோங்க... ஆனா கண்டிக்க வேண்டியது சிபியை... சரியா... :)
யக்கா... கவிதாக்கா எப்படி இருக்கீய..? ஏன் இந்த கொலவெறி... கொஞ்ச நாள் நாங்கெல்லாம் பொது வாழ்க்கைல இருந்து வெலகி இருந்தா இப்படித்தேன் எங்க அண்ணாத்தய போட்டு பின்னு பின்னுன்னு பின்னுறதா..?? ;))))))))
//யக்கா... கவிதாக்கா எப்படி இருக்கீய..? //
:) வாங்க ஜொல்ஸ்.. நீங்க எப்படி இருக்கீங்க..நாங்க நல்லா இருக்கோம். :) ரொம்ப வருஷம் கழித்து இந்த வூட்டு பக்கம் வருகிறீர்கள்.. நல்வரவு !! :)
//ஏன் இந்த கொலவெறி... //
எங்க அவரு அமைதியா இருக்க விடறாரு.. .எந்த நேரமும் கலாய்க்க வேண்டியது. .சில நேரம்.. ஒரு மூலையாக உட்கார்ந்து அழக்கூட வைக்கறாரு. .அதான்.. கொலைவெறி அதிகமா போச்சி..
//கொஞ்ச நாள் நாங்கெல்லாம் பொது வாழ்க்கைல இருந்து வெலகி இருந்தா இப்படித்தேன் எங்க அண்ணாத்தய போட்டு பின்னு பின்னுன்னு பின்னுறதா..?? ;))))))))
//
சப்போர்டு எல்லாம் சரிதான். .ஆனா கடைசியில அது என்ன... அத்தனை சிரிப்பான்..??? அப்ப உங்களுக்கும் இந்த பதிவு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததுன்னு சொல்லுங்க.. :))))))
ஹிம்ம் தெளிவாக தெரிவது என்னவென்றால்.. எல்லோருக்குமே கொலைவெறி இருக்கு ஆனா எப்படி தீக்கனும்னு தான் தெரியல.. !! ம்ம்.. எல்லோரும் டிப்ஸ் கொடுத்தவங்களுக்கு ட்ரீட் கொடுங்க பாஸ்!!
லவுட் ஸ்பீக்கரை இரண்டு கன்னத்துக்குழியிலும் பிக்ஸ் செய்துவிடலாம்....
ethavathu arasiyal katchikku vaadakaiku kudukkalamae.....
Post a Comment