பூம்பூம்மாடு : எப்பவோ பார்த்தது. இப்போது எல்லாம் கண்ணில் படுவதேயில்லை. முதுகின் மேல் வேலைப்பாடுகளுடன் கூடிய துணி அல்லது பல நிறங்களில் புடவைகள் போத்திவிட்டு, அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தில், உடம்பில், கொம்புகளில் சலங்கைக்கட்டி, பலூன் கட்டி பூ மாலை மற்றும் இன்னும் பிற மாலைகள் எல்லாம் போட்டு, "ஜில் ஜில் ஜில்" சத்தத்துடன் மாட்டை ஓட்டிவருவார்கள், ஓட்டிவருபவரும் முண்டாசு கட்டி, காலில் சலங்கை க்கட்டி, கையில் ஒரு பீப்பியுடனும் வருவார். பீப்பியால் ஊதுவார், நடுநடுவே மாடிடம் என்னென்னவோ பேசுவார், கேள்விக்கேட்பார். அதற்கு மாடும் "பூம் பூம்" என தலையாட்டும். இந்த சத்தம் தெருவில் கேட்டால் போதும், ஓடி போயி நின்று மாடு தலையாட்டுவதை வேடிக்கப்பார்ப்பது தான் வேலை. இவருக்கு பணமோ, அரசியோ தருவார்கள். முக்கால்வாசி அரிசி தான், தோளில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை திறந்துக்காட்டி வாங்கிக்கொள்வார். அதில் விதவிதமான அரிசி வகைகள் போடப்பட்டு இருக்கும்.
குடுகுடுப்பைக்காரர் : இவர் வந்தாவே வீட்டிலிருந்து யாரும் வெளியில் செல்லாமல் அவர் சொல்லுவதை சத்தமின்றி கவனிக்க சொல்லுவார்கள். அவர் எப்போதும், வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லுவார். அது நல்லதா கெட்டதா என தெரிந்துக்கொள்ளவே கவனிப்பார்கள். நல்ல விஷயம் சொன்னால், மகிழ்ச்சியோடு காசு போடுவார்கள், இல்லையென்றால், சீக்கிரம் சென்று காசுப்போட்டுவிட்டு, கிளம்புப்பா என்று விரட்டிவிடுவார்கள். பொதுவாக இவர் "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, இந்த வீட்டு மகாலட்சுமிக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டு மகாலட்சுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு.. ஜக்கமா சொல்றா ன்னு ஆரம்பித்து,, குடுகுடுப்பை படப்படவென அடிப்பாரு.. :) இதுக்கு மேல நினைவில்லை. இவரை பிள்ளைப்பிடிப்பவர், பூச்சிக்காரன் வரான் என்றும் சொல்லுவார்கள். இவரை க்காட்டி பயமுறுத்தி குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவார்கள் :)
நவீன் பூம்பூம்மாடு, குடுகுடுப்பைக்காரர் இருவரையுமே பார்த்தது இல்லை. பிறந்ததிலிருந்து சென்னையில் தான் இருக்கிறான், விடுமுறைக்கு கூட அவனை வேறு இடங்களுக்கு அழைத்து போனதில்லை. இவை எல்லாம் ஏதோ சில நேரங்களில் நினைவுக்கு வரும், எழுதி வைப்போம் என எழுத ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்த மற்றும் சில..
தண்டோரா : நகராட்சியில் பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் சொல்லவேண்டி இருந்தால், தண்டோரா போட்டு தெருத்தெருவாக சொல்லி வருவார்கள். அதாவது வீட்டு வரி கட்ட கடைசி தேதி, புது வரி செய்திகள் போன்றவை இருக்கும். இந்த தண்டோரா க்காரர்களுக்கு பணம் கொடுத்தால், வீட்டில் யாரும் இறந்து போனால், நாம் சொல்லும் பகுதிகளுக்கு தண்டோரா ப்போட்டு, யார் இறந்தார்கள், எத்தனை மணிக்கு இறந்தவர் உடல் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். என் அப்பா & தாத்தா இறந்த போது விழுப்புரத்தில் பல இடங்களுக்கு தண்டோரா போட்டு தெரியப்படுத்தினர். :(. படத்தில் இருப்பது தான் தண்டோராவா என தெரியவில்லை, ஆனால் இப்படித்தான் இருக்கும்.
கழனித்தண்ணீர் கலெக்ட் செய்பவர்கள் : அரிசி கழுவிய தண்ணீரை தோட்டத்தில் அதற்காக கட்டியிருக்கும் சின்ன ரவுண்டு த்தொட்டியில் ஊற்றிவைப்போம். இதில் இந்த தண்ணீர் தவிர, பழைய சாதம், புளித்து ப்போன இட்லிமாவு, கழுவி எடுத்த கருப்பு உளுந்து தோல் போன்றவையும் சாக்கடையில் கொட்டாமல், இந்த தொட்டியில் தான் ஊற்றிவைப்போம். மாடு வைத்திருப்பவர் வீட்டு ஆயா, சந்து வழியே வந்து தினமும் இந்த தண்ணீரை எடுத்து செல்லும். ஆயா வரும் போது, போய் நின்று கவனிப்பேன், தொட்டியில் கையால் ஒரு கலக்கு கலக்கி, கொண்டு வந்த பானையை உள்ளே விட்டு தண்ணீரை மொண்டு நிரப்பிக்கொள்ளும். ஒரே நாற்றம் அடிக்கும், ஆனால் அது தான் மாட்டுக்கு டிலீஷியஸ் ஃபுட். :)) .
கோவிந்தா : மஞ்சள் நிற உடை அணிந்து, நெற்றியில் பெரிய நாமம் போட்டு, பெருமாள் க்கு வேண்டுதல் என்று கையில் ஒரு தட்டில் பெருமாள் படம் வைத்து அதற்கு பூமாலை எல்லாம் போட்டு வந்து "கோவிந்தா... கோவிந்தா" என்று குரல் கொடுப்பார்கள். இவர்களுக்கும் அரிசி போடுவது தான் வழக்கம். :) பிச்சாந்தேகி என்றும் கேட்பார்கள். அரிசி போடவில்லை என்றால் பணமும் போடலாம். இவர்கள் அதிகமாக வருவது புரட்டாசி மாதத்தில் தான். இவங்க இப்பவும் எப்போதோ ஒரு தரம் கண்ணில் படுகிறார்கள், ஆனால் நான் கராராக இவர்களுக்கு பணம் , அரிசி எதுவும் போடுவதே இல்லை. :)
அணில் குட்டி அனிதா : எனக்கு அந்த பூம்பூம்மாடு ரொம்ப பிடிச்சி இருக்கு.. :) ஏன் இப்பவெல்லாம் அது வரமாட்டேங்குது..???, அம்மணி நீங்க வெட்டியா தானே இருக்கீங்க.. மாடு ஒன்னு பிடிக்கறது?? காசுக்கு காசுமாச்சி, எனக்கும் பொழுது போகுமில்ல.... உங்கள பாத்தா மத்தவங்களுக்கும் பொழுது போகுமில்ல... ??!! .. :))
பீட்டர் தாத்ஸ் : When we're young we have faith in what is seen, but when we're old we know that what is seen is traced in air and built on water.
.
படங்க: : நன்றி கூகுல்.
நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்து சேர்த்தது : :)
1. ஐஸ்வண்டி -
2. சவ் சவ் ரோஸ் மிட்டாய்க்காரர்
3. விறகு வெட்டுபவர்
4. மரம் ஏறி
5. பால்வண்டி க்காரர், நெய் க்காரர்
6. பொரிக்காரப்பாட்டி
7. அவல்காரர்
8. சாணைப்பிடிக்கறவர்
9. அம்மி, உரல் கொத்துபவர்
10. நாவிதர்
11. பஞ்சுமிட்டாய் தாத்தா
.
30 - பார்வையிட்டவர்கள்:
ஹ்ம்ம் பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.. ஊருக்கு சென்றால் இவர்கள் வருகின்றனரா என்று பார்க்க வேண்டும்
ஆமாம் கவிதா இதெல்லாம் இப்ப பார்ப்பதே அபூர்வம்.. படிக்கும் போது சின்ன வயசு நினைவுகள் ஆட்கொள்ளுது மனசை..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு பொற்காலம்..
சௌசௌ மிட்டாய் விற்பவர் .அந்த மிட்டாய் ரோஸ் கலரில் இருக்கும் அவர் வைத்துருக்கும் நீண்ட இரும்பு பைப்பில் மேலே polythene கவர் சுற்றி அதன் உள்ளே அந்த மிட்டாய் இருக்கும் .அந்த மிட்டாயை பொம்மையாக ,வாட்சாக ,கடைசியில் கொஞ்சம் மூஞ்சியில் அப்பி விடுவார் .இதற்காகவே சிறுவயதில் நிறைய மிட்டைவாங்கி சாப்பிடுவோம் .அதல்லாம் பழைய நினைவுகள்
தனிமடல்.நோ ப்ரசுரம்
//தோலில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை...//
தோளில்
கொசுவத்தி கொளுத்திவிட்டதுக்கு நன்றிப்பா.
இந்த ' மேட்டர் கோவிந்தா' புரட்டாசி சனிக்கிழமைகளில் வேண்டுதலாச் செய்பவர்களும் உண்டு. நம்ம அக்கா வீட்டுலே இது வழக்கமா எல்லா வருசமும் செய்யணுமுன்னு மாமியார் கண்டிப்பாச் சொல்வாங்க. குறைஞ்சது மூணு வீட்டுலேயாவது அரிசி வாங்கி தளிகை போடணுமாம்.
அக்கா பொண்ணு சின்னவளா இருந்த சமயம் அவளுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு, கையில் பளபளக்கும் சின்ன பித்தளைச் சொம்பைக் கொடுப்பாங்க. அவளும் காம்பவுண்டு சுவர் வரை போயிட்டு நம்ம வீட்டுக்கே வந்து மெலிசா (அவளுக்கே கேக்குமோ என்னவோ!) கோவிந்தா போட்டதும் அக்காவே வெளியே வந்து கைப்பிடிஅரிசி போடுவாங்க. இன்னொரு முறை காம்பவுண்ட் வரை போய் வந்தா நான், அப்புறம் மாமா இல்லைன்னா வீட்டுலே இருக்கும் யாராவது (அவளுடைய தங்கச்சிகளில்)ஒருத்தர்
போடுவாங்க. மூணு வீடு ஆச்சு:-))))))
பூம்பூம் மாட்டுக்காரர், குச்சியால் இழுத்துவிட்டால் ஊங் ஊங்ன்னு உருமும் கொட்டு ஒன்னு வச்சுருப்பாரு இல்லே!!!!
இங்க வராங்களே கவிதா. மாடும் உண்டு. உறுமும் மேளமும் உண்டு. பெட்ஷீட் கேட்கும் மாடு அது. அதுவரைகும் சல்சலன்னு மண்டையை ஆட்டிக் கொண்டிருக்கும். விசேஷ நாட்களில் ஆந்திர அனுமான்ஜி கூட வருகிறார் இப்ப. அழகான குரலில் ராமர் பாட்டோடு ஆரம்பித்து ராசாத்தி ஒன்னை'' அப்டீனு முடிப்பார்:)
pazhaiya ninaivugaludan engal kiramaththirkku sendru vantha napagam...
ippa athellam illai.
ஒரு பதினைந்து நாள் லீவ் போட்டுட்டு ஏதாவது ஒரு கிராமத்துக்குப் போங்க. எல்லாத்தையும் பாத்துட்டு வந்துடலாம்.
அப்புறம் அணிலோட ஐடியா சூப்பர். நீங்க கொஞ்சம் அதை சீரியஸா பரிசீலிக்க வேண்டும்:)))))
சூப்பரான பதிவு....பூம்பூம் மாடு படத்துல கூட வர்றதில்ல.கமெடிக்காக அப்பப்ப ரெண்டு பிட்டு போடறதோட சரி..பூம்பூம் மாட்டுக்காரன் தெருவுல வந்தாண்டி என்ற காலத்தால் அழியாத பாடல்தான் அவர்களை ஞாபகபடுத்துகிறது
பூம்பூம்மாடு, குடுகுடுப்பை, கோவிந்தா, எல்லாம் இப்பவும் இங்க ஓக்கே. ஆனா நான் மிஸ் பண்ணுவது தயிர்காரம்மா. அவங்க பானை, மேலே வெண்ணை பானை எல்லாம் சரி தான். ஆனா கருப்பா வழவழன்னு ஒரு கொட்டாங்குச்சி வச்சு தான் தயிர் எடுத்து போடுவாங்க. நான் அந்த டேஸ்ட் இது வரை எங்கும் வேறு எந்த தயிரிலும் பார்த்ததில்லை. பொதுவா மாயவரம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்து டவுன் பஸ் பிடிச்சு டவுனுக்கு வருவாங்க. ஐ லைக் திஸ் போஸ்ட்டு!
\\அழகான குரலில் ராமர் பாட்டோடு ஆரம்பித்து ராசாத்தி ஒன்னை'' அப்டீனு முடிப்பார்:)\\
வல்லிம்மா!எல்லா பாட்டுக்கும் ஒரே மெட்டுக்கு கொண்டு வந்துடுவாங்க.ஆனா அது கூட நல்லா தான் இருக்கும்:-))))
நல்ல கொசுவத்தி.. கொஞ்ச நாள் முன்னாடி, இந்த மாதிரி ‘மறந்து போன மனிதர்கள்’னு ஒரு தொடர் சுத்தி வந்துது பதிவுலகுல.. சுவாரஸ்யமா இருந்துது..
எங்க ஊர்ல விறகு வெட்டுறவங்க நிறைய வருவாங்க முன்னாடி.. இப்ப காணோம்...
ம்..நல்ல கொசுவத்தி ;)
பூம் பூம் மாடு தாம்பரத்திலிருக்கும்போது அடிக்கடி பார்த்திருக்கேன். காசு போடும் வரை நகரவே மாட்டார்:)
எங்கள் கிராமத்தில் தயிர்க்காரம்மா இன்னும் வர்றாங்க. விசேஷத்துக்கு பத்தலைன்னா இவங்ககிட்ட வாங்கிப்பாங்க பெரியம்மா.
அப்புறம் ஐஸ்வண்டி - பால் ஐஸ், சேமியா ஐஸ். நைஸ் கொசுவத்தி.
@ எல்.கே: ம்ம் பாருங்க.போட்டோ எடுங்க.. நெட் ல கிடைக்கமாட்டேங்குது..
@ தமிழ் : ஆமாம் :)) ஜாலியா இருக்கும்
@ நா.மணிவண்ணன் : ரோஸ் மிட்டாய் ன்னு சொல்லுபோம்.. வாட்ச் எல்லாம் செய்து கொடுப்பாங்க.. :)) நினைவு படுத்தியதுக்கு நன்றி
@ துளிசிஜி : மாத்திட்டேன் :) , எங்க ப்ளாட் ல கூட கீழ்வீட்டுக்காரங்க வந்து வாங்குவாங்க.. கொடுப்பேன். .ச்சும்மா ஒரு பிடி அரிசி :) சாஸ்த்திரத்துக்கு
@ வல்லிஜி: நன்றி சினிமா பாட்டு பாடி நான் கேட்டதில்லையே.. :))
@ சே.குமார்: இன்னும் சில ஊர் ல இருக்குன்னு கமெண்டு போட்டு இருக்காங்க பாருங்க.. :)
@ கோபி : ம்ம்..போயிட்டா போகுது, அணில் சொன்னதை செய்துப்பாக்கனும் :))
@ ஆர்.கே.சதீஷ்குமார்: :)) நன்றி
@ அபிஅப்பா: ஓ இன்னும் வராங்களா அப்ப போட்டோ எடுத்து அனுப்புங்க.. .போட்டோ கிடைக்கமாட்டேங்குது.. :(
@ ஹூசைனம்மா: மரம்வெட்டி கூட வருவாங்க.. தேங்காய் எடுக்கறவங்க.. :( இப்ப அவங்க எல்லாம் வரதே இல்ல :( .. நன்றி
@ ஈஆர்எஸ் : சரிங்க
@ கோப்ஸ்: நன்றி..
@ வித்யா : ம்ம்ம் ஹே ஆமாம்..ஐஸ் வண்டி ஒரு நாள் நினைவில் வந்தது..ஆனா எழுதும் போது மறந்துட்டேன். .சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ்.பால் ஐஸ்.. ம்ம்ம் இன்னும் நிறைய... ஆனா எதுக்கும் போட்டோ இல்லப்பா.. உங்க வீட்டுல சொல்லி தயிர்காரம்மாவை போட்டோ எடுக்க சொல்லுங்க. .இதுல இருக்க போட்டோ கர்னாட்டக்கா போட்டோ போல.. :))
கவிதாவை காணும்????? எங்கே போயிட்டாங்கப்பா?
\\.இதுல இருக்க போட்டோ கர்னாட்டக்கா போட்டோ போல.. :))\\
அதான பார்த்தேன். நம்ம ஊர் தயிர் பானை மண்பானை.
நல்லா இருக்குங்க. நெயக்கார அம்மாவும், காய்கறி காரங்களும் வருவாங்க. முன்னெல்லாம் சைக்கிள் பின் பால் கேன் வைச்சு, பால் supply பண்ணுவாங்க. இப்ப பால் பாக்கெட்.
திருத்தம்: நெயக்கார - ப்ளீஸ் read நெய்க்கார
ம் .. நல்லவே விரிச்சீங்க சிறகை..:)
எங்க ஊருல பொரிக்காரப்பாட்டியும் , அவல்காரரும் நாங்க ஆர்வமா எதிர்பார்க்கிறவர்..
நல்ல கொசுவத்தி, கவிதா!!
சின்ன புள்ளையா இருக்கச்ச, எங்க ஊர்ல வந்தது (சிலர் மேல சவ்சவ் மிட்டாய் எல்லாம் சொல்லிட்டாங்க),
சாணை பிடிக்கிறது (கத்தி, அரிவாள் மணை போன்றவைக்கு): சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆணேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் பிடிக்கிறது (பின்னாலேயே, நாங்க சாணின்னு கத்திட்டு போவோம், அவர் காதில விழாமத் தான்!)
அம்மி கொத்துவது:
நாவிதம் செய்வது: (குறிப்பாக, விதவைகளுக்கு மொட்டை செய்ய வருவார்:-((((
பஞ்சு மிட்டாய் தாத்தா............
@ சேது : தனியா நெய்காரர் வருவாரா?
@ முத்து : ஆமா..:)))) பொரிக்காரர், அவல்காரர் புதுசு தான் எனக்கு :) திருச்சியில இருந்தப்ப இவங்க வந்து இருக்காங்க..விழுப்புரத்தில் இல்லை..
@ கெக்கே : அட நீங்க நிறைய நினைவு படுத்திட்டீங்க... எல்லாவற்றையும் பதிவில் சேர்த்துவிட்டேன். .நன்றிங்க.. :))
@ யோகேஷ் : பஞ்சு மிட்டாய் ரோஸ் கலர் ல இருக்குமே அதானே ?? :))) சூப்பர்... நன்றி..
ஆமாங்க. நெயக்கார அம்மா, அவங்க மகள் இருவரும் நாங்க குடியிருந்த காலனி (colony ) பூர 25 வருஷத்துக்கு supply பண்ணங்க. சில தயிர் காரங்களும், சைடு நெய் கொண்டுன் வந்து விப்பாங்க.
சின்ன வயசில அவங்க சுற்றி இருக்கிற சின்னப் பசங்களுக்கெல்லாம் மனசு நோகாம எங்க கை நிறைய ஊத்தி சாப்பிடச் சொல்லுவாங்க. என்ன taste , எவ்வளவு கெட்டியா நிக்கும் அது. இப்ப கூட அத எங்க அம்மா நினைவு கூர்வாங்க.
இத பகிர்வது அவங்களுக்கு சொல்லும் ஒரு நன்றிக் கடன் தான்.
Again திருத்தம்: நெயக்கார - ப்ளீஸ் read நெய்க்கார
- Trouble(impatience) in handling Google Transliteration.
நாந்தான் இ-குடுகுடுப்பை
இ-பூம்பூம்மாடு பிரபல காப்பி பேஸ்ட் பதிவரை சொல்லலாமா?
நினைவுகள்னு சொல்லும்போது எனக்கு சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகள் தான் நினைவுக்கு வருகிறது
இப்போது குழந்தைகள் விளையாடுவது கணினியுடன் மட்டும் தான்
அசை போடுவது எப்போதுமே அழகு.
இதே மாதிரி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கேன் :)
http://veyilaan.wordpress.com/2007/08/28/memory/
Post a Comment