காலை எழுந்ததிலிருந்து தீபாவளி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன, முறுக்கை பிழிந்துவிட்டு நடுவே நடுவே கணினியில் கொஞ்சம் வேலைப்பார்த்துகொண்டே இருந்தேன். முறுக்கு முடிந்து, தட்டை, நடுவே பாதுஷா, ஜாமுன்..என்று நடந்து முடிந்தது.
தீபாவளி நோன்பு , மாமியார் எப்படி செய்தார்கள் என்பதை அச்சு பிசுகாமல் காப்பி அடிக்கமுடியவில்லை, எனக்கு பிடித்தமாதிரி அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமல் செய்ய பழகி வருடங்கள் ஆகிவிட்டன. தீபாவளி நோன்பு க்கு ஒன்றும் அதிக வேலை இல்லையென்றாலும், நாளை முழுதும், இட்லி, தோசை தான். அதனால் இட்லி மாவு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நடுவே வந்த போது அய்யனார் கதையை படித்தேன்... ஏதேதோ சிந்தனைகள், நீ ஆண், நான் பெண் என்ற எண்ணங்களோடே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரிடமும் இந்த வித்தியாசம் இல்லாமல், நீ மனிதன் நானும் மனிதன் என்று எளிதாக பேசிவிட முடிவதில்லை. ரொம்ப தெளிவான மனிதர்கள் என்னை சுற்றியில்லை என்று தோன்றியது. எல்லோருக்கும் என்னையும் சேர்ந்து நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக.
நண்பர் ஒருவரிடத்தில் இந்த வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் தான், இருவருக்கும் அந்த பிரஞ்ஞை பலநேரம் இருப்பதில்லை, இதற்கு காரணம் தெளிவு என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதால், எளிதாக பலவற்றை பேசிவிட முடியும். அவை பிறகு மண்டையில் இருப்பதே இல்லை, மறைந்துவிடும். என்னுடன் பேசி அவரும் அப்படி ஆகிவிட்டாரா இல்லை அவருடன் பேசி நான் அப்படி ஆகிவிட்டேனா தெரியவில்லை.
தட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் "வக்கா வக்கா" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே "கபடி கபடி" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.
அதிகம் யோசிக்கல, வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் வர சொல்லனும், கடைக்கு போகனும், இன்னமும் டைலரிடம் கொடுத்த துணி வாங்கவில்லை. நவீன் பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை, ஆனால் போனவருடம் மிச்சமானதை கொண்டு போய் காயவைத்துவிட்டு வந்தான். செய்த எதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சாப்பிட்டான். முறுக்கில் கொஞ்சம் உப்பு "ஏத்து" என்றான். :) என்ன மொழியோ இவையெல்லாம் தெரியல. நாங்கள் வீட்டில் பேசாத ஒரு மொழி. :)
நேற்று இரவில் இருந்து காதில் கம்மல் போடாமல் இருக்கிறேன். பெரிய விஷயமா? என்னமோ என் கணவர் அது ரொம்பவும் பழசாக இருக்கிறது என்று சொன்னார், உடனே அவரெதிரில் கழட்டியது, வேறு எடுத்து போட த்தோன்றாத மனநிலை, இல்லை, காலையில் எழுந்ததிலிருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவில்லை.
இப்போது அவர் வருவதற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையேல் அதற்காக ஒரு சண்டை வர வாய்பிருக்கிறது..
தீபாவளி ஒரு நாளாக ஆகிவிட்டது. மற்றுமொரு நாள். :)) பல வேலைகள் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு நாள்.. .. இன்னும் தொடரும் வேலைகளோடு, இந்த சிந்தனைகளையும் ..தொடர...போகனும்... :
.
அணில் குட்டி அனிதா : வெயில் ல தான் பலருக்கு பிரச்சனை.. அம்மணிக்கு பலகாரம் செய்தா க்கூட பிரச்சனை போலவே... :( ம்ம்ம்..
பீட்டர் தாத்ஸ் : Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realize the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.
நிறைய வேலை.. நடுவே இதுவும்..
Posted by : கவிதா | Kavitha
on 16:31
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
18 - பார்வையிட்டவர்கள்:
கம்மல் போட்டு கிட்டு அப்புறம் எங்க அண்ணனுக்கு போன் பண்ணு கவி...
//தட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் "வக்கா வக்கா" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே "கபடி கபடி" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.//
எதையும் முழுசா செய்யலையா இன்னும்..இத்தனை வேலை தனியா செய்யும் உன்னை எப்படி பாராட்டுவதுன்னே தெரியலை கவி..
முறுக்கில் மட்டும் உப்பு கம்மியா தட்டையில் சரியா இருக்கா இல்லையான்னு சொல்லவேயில்லை
சரி சரி உங்க மூன்று பேருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்டா..
தத்து மம்மி, இந்த பதிவு மாதிரியே தட்டையும் பாதுஷாவும் பாதி பாதியா ஆயிடப்போகுது.. போ வேலையப்பாரு
parattugal
polurdhayanithi
இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலே இப்படி பதிவு போட்டுத்தான் ஆகணுமா என்ன? பண்டிகைகளுக்குப் பலகாரம் செய்றது, புது டிரஸ் வாங்கிறது எப்படி கட்டாயமோ, அதுபோல இப்ப அதுக்குனு ஒரு பதிவும் கடமையாகிடுது!! ;-))))
தீபாவளி அன்னிக்கு இட்லி, தோசை மட்டும்தானா, அப்படியா? இப்பத்தான் கேள்விப்படுறேன்.
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் கவிதாக்கா.
ஹா ஹா! தீபாவளி என்பது கொண்டாட்டம் மட்டும் அல்ல, அதனுடன் கூடிய இன்ப வலியும் கூட. நல்லதொரு பகிர்வு.
ம்ஹும்... இன்னும் நாங்கள் எதுவுமே செய்ய ஆரம்பிக்கவில்லை. :)
இனிய தீபாவளி வாழ்த்துகள் கவிதா.
அட, அட சிந்தனையும் முறுக்குப் புழிதலும், பின்பு இட்லிக்கு மாவு ஆட்டுவதுமாக என்ன கேசுவலான உலகம் உங்க உலகம். ரொம்ப இயல்பா வேலைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லாருக்கும் வாய விட்டு வார்த்தைகள் ஆக்காத வரைக்கும்... ஹிஹிஹி. நல்லா வைச்சு கட்டுங்க செஞ்ச பல’காரத்தை எல்லாம். :)
@ தமிழ் : வந்தபிறகு சண்டை வருதான்னு பாத்துட்டு போடலாம் னு இருந்தேன். சண்டை வரல, நிறைய பலகாரம் செய்ததால பாவம் னு விட்டுட்டாங்க :)
வாழ்த்துக்களுக்கு நன்றி :)
@ விஜி : உன்கிட்ட அதிரசம் செய்யறத பத்தி கேட்டேனே அதை எழுதாம விட்டுடேன்.. :))
@ polurdhayanithi : நன்றி,முடிஞ்சா உங்க பெயரை தமிழ்ல சொல்லுங்க..
@ ஹூசைனம்மா : இவ்வளவு வேலைக்கு நடுவில் இது தேவையில்லை, ஆனா நம்மோட சிந்தனைகளை தேவையில்லையின்னு ஒதுக்கவே முடியல... வேலை நடக்கும் போது, சிந்தனையும் எங்கெங்கோ சுத்தி வந்துக்கிட்டே இருக்கு, அதை ரெஜிஸ்டர் செய்ய எழுதினது :)) வேற ஒன்னும் இல்ல :) நன்றி
@ ராகிஜி : வலி எல்லாம் இல்லைங்க.. தீபாவளி ஒரு நாள் வருஷத்துல, அன்னைக்கு கூட அதுக்கு தேவையானதை செய்யாட்டா.. முறுக்கு, தட்டையும் செய்ய மறந்து போகும் :)) நன்றி
@ தெகாஜி://வாய விட்டு வார்த்தைகள் ஆக்காத வரைக்கும்... // ம்ம்ம்ம் உலகம் தாங்காதுன்னு.. சில சமயம் நல்ல எண்ணம் வந்துடும் எனக்கு அதான் :)) நன்றி
தீபாவளி சிறப்பு குறிப்புகள் அனைத்தையும் படித்தோம்...நன்று ;))
தினந்தோரும் இது போன்ற குறிப்புகள் வராதவரை ;)
கவி எப்படிங்க இப்படி ..நானும் காலையிலிருந்து எல்லாம் நாலு கை மாதிரி வேலை செய்துக்கிட்டே இருந்தேன் மதியத்துக்கு மேல தோடு எடுத்துப்போட்டேன்.. இன்னும் பொட்டு வச்சிக்கலை :))
சோமாஸி , தேங்காய்பர்பி ,ஓட்டுபக்கோடா செய்துக்கிட்டே அதை பஸ் லயும் ஃபேஸ்புக்லயும் அப்டேட்டும் செய்தாச்சு.. :))
சிந்தனையைத்தான் பதிவு பண்ண விட்டுப்போச்சு :)
இனிய வாழ்த்து(க்)கள் கவிதா.
இங்கே கிளம்பி வந்துருங்க 6 நாள் கொண்டாடலாம்:-)
//இன்னும் பொட்டு வச்சிக்கலை//
முத்து, அப்போ வைச்சிருந்த பொட்டு எந்த சுழியனுக்குள்ளர, முறுக்குள்ளர மாட்டியிருக்கோ. யாரு செரிச்சு வைக்கப்போறங்களோ பாவம் :))
தெகா அதான் வச்சிக்கவே இல்லைன்னனே வச்சா இல்ல எதுக்குல்ளயாச்சும் விழறதுக்கு..
இப்பத்தான் கவிதா போஸ்ட் படிச்சிட்டு ஓடிப்போய் வச்சிக்கிட்டேன்..;))
@முத்து : ..ஹா ஹா:) எனக்கு ஜோடிக்கு ஆள் கிடைச்சாச்சி.. இன்னுமும் நம்மை மாதிரி எத்தனை பேர் இருக்காங்களோ ?? தெரியல :)
@ துளசிஜி: கூப்பிட்டதே சந்தோஷமா இருக்கு. .நன்றி :))
தீபாவளி வாழ்துகள்ங்க. கூடவே நம்மை சுற்றி இருக்கும் சில ஏழை எளியவர்களுக்கும் புது துணி வாங்கிக் கொடுக்க ஒரு வேண்டுகோள்.
தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்
இதுக்குத்தான்.. நான் எல்லோரும் தூங்கின பின்னாடி, ராக்கோழி மாதிரி முழிச்சு பலகாரம் செய்வேன் :-))))).சிந்தனைகள் தடைபடாது பாருங்க :-)
சூப்பர்! நல்லா தான் இருக்கு தீபாவளி பிரிப்பரேஷன்:-))
நல்லதொரு பகிர்வு.
Post a Comment