கண்களுக்கு
மிக அருகில்
நீ.....!!
விழுந்த மாத்திரத்தில்
பொங்கி எழுந்து
வந்ததையும்
சேர்வதையும்
பரவசத்துடன்
பகிர்ந்து கொள்கிறாயே...?.!!
* * * *
நீல வண்ணத்தில்
வெள்ளை தூரிகை
கொண்டு
நீ
வேக வேகமாய்
வரைந்த ஓவியம்
கண் சிமிட்டி
காணும் முன்
காணாமல் போனதே.. !
* * * *
தண்ணீரில்...
கணக்கிலடங்கா
குட்டி குட்டி
சட்டி வானங்கள்
புறப்பட்டு
பூத்துக்குளுங்கி
ஒலியும் ஓளியும் எழுப்பி
மின்னி...மின்னி
மறைகிறதே....!.
* * * *
நீ
விழுந்து எழுந்து
மீண்டும்
மூழ்கும் முன்
உன்
உச்சந்தலையில்
ஒர்
வைரக்கல்லின்
மின்னல் !!
* * * *
கண்கள் எட்டியவரை...
சின்ன சின்ன கோபுரங்கள்அதிவேகமாய் முளைக்கின்றன..
அதேவேகத்தில்
குமிழ்களாய் குவிந்து
வட்டமிட்டு மூழ்குகின்றன... !!
* * * *
உன்
ஒவ்வொரு துளியும்
உற்சாகத்தின் உச்சமாய்
இருக்கிறதே..உன்னைப்போய்
வானம் அழுகிறது
என்று வருணிக்கிறார்களே.?!!
அது ஏனோ?!!
* * * *
எத்துடன்
சேருகிறாயோ...
அதுவாகவே
மாறிவிடுகிறாயே..?!உன்னையும்
பச்சோந்திஎன
அழைக்கலாமோ?* * * *
மழைத்துளியாய்
இறங்கினாய்
குளோரினோடுகுளோரினாய்....
கலந்துவிட்டாயே...?!!!எங்கே தேடுவேன்
உனை.. ??!!
* * * *
.
16 - பார்வையிட்டவர்கள்:
அக்கா பின்றீங்க
ஐய்யோ அணிலு.. எங்க போனே..இந்த கொடுமையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா ?
இப்ப நான் ஒத்துக்கறேன்..உன் கம்ப்யுட்டரில் எண்டர் கீ இருக்குன்னு, :))
@ விஜி - கவிதைய படிச்ச இன்ப அதிர்ச்சியில அணில் அப்படியே உறஞ்சி போய் உட்காந்து இருக்கு.. !!
//இந்த கொடுமையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா ?//
கொடுமையை தானே கேக்கனும், நானே கேக்கறேன் சொல்லு.. என்ன மேட்டர்?!! சொம்பு தூக்கனுமா? நான் ரெடி நீ ரெடியா?
//இப்ப நான் ஒத்துக்கறேன்..உன் கம்ப்யுட்டரில் எண்டர் கீ இருக்குன்னு, :))//
ஹல்லோ உனக்கு யார் சொன்னா எண்டர் கீ தட்டினால் தான் அடுத்த வரிக்கு வர முடியும்னு..?? நாங்க எல்லாம் ஸ்பேஸ்பாரை தட்டிக்கூட அடுத்த வரிக்கு வருவோம்.. தெரியுமா? :)))
அய்யோ அம்மா கொல்றாங்களே.
இது என்னோட அடுத்த கவுஜைப் பதிவின் தலைப்பு. எப்படி இருக்கு?
எல்.கே : நன்றிங்க.. :)
//அய்யோ அம்மா கொல்றாங்களே.
//
ஏன் இப்புடி?!! :))
//இது என்னோட அடுத்த கவுஜைப் பதிவின் தலைப்பு. எப்படி இருக்கு?//
சூப்பர்... உங்களை நீங்களே கொன்னு கொன்னு விளையாடுங்க.. நாங்க தூரமா இருந்து மகிழ்றோம்.. :)))
ம்.. இப்பப் புரியுது.. இதுக்காகத்தான் போன பதிவுல குடும்பத்தோட ஸ்விம்மிங் படிச்ச கதையெல்லாம் சொன்னதா?
மகன் ’கொலைகாரி’ன்னு சும்மா சொல்லல!!
;-)))
//மகன் ’கொலைகாரி’ன்னு சும்மா சொல்லல!!
;-)))//
:))))))
ரொம்ப மாசமா படிக்கிறேன் ப்ளாக் ல இப்பத்தான் போடறேன்.. பஸ்ல எப்பவோ போட்டுட்டேன் :)))
நன்றி ஹூஸைனம்மா :))
கவிதை மிகவும் அருமை கவிதா. :)
//எத்துடன்
சேருகிறாயோ...
அதுவாகவே
மாறிவிடுகிறாயே..?!உன்னையும்
பச்சோந்திஎன
அழைக்கலாமோ?//
விஸ்கி, பிராந்தி, ரம், ஜின்
எத்துடன் சேருகிறாயோ..
போதையேத் தருகிறாய்.. உன்னால்
அவர்களுக்கு
அவப்பெயர்..
@ ராதாகிட்டு: நன்றி
@ செந்தில் : எப்படி??? :) அவங்க அவங்களுக்கு எது தேவையோ அது அது தான் ஞாபகம் வரும் போல.. :)
இருங்க உங்க லைன்ஸ் கொஞ்சம் கரெக்ட் ஆர்டர் செய்து பார்க்கிறேன்
நீ
விஸ்கி,பிராந்தி,ரம்,ஜின்
எத்துடன் சேருகிறாயோ..
அதுவாகவே மாறிவிடுகிறாய்..!
போதையும் ஏற்றுகிறாய்..!
ஆனால்
அவ பெயரோ
உன்னால்
அவர்களுக்கு...?!!! :(
:))))
தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_09.html
அவ்வ்வ் ஒய்ய்க்கா ஒய்ய்ய்?
அருமையோ அருமை அனைத்தும் கலக்கல்.
@ ஆதவன்
//அவ்வ்வ் ஒய்ய்க்கா ஒய்ய்ய்?// மழைய பத்தி நான் பாட்டு எழுதாட்டி மழை கோச்சிக்குவேன் னு ஒரே அழுவாச்சி. .அதான் .... :))) ஹி ஹி ஹி...
@ சே குமார்: நன்றிங்க
Post a Comment