1. தான் ஜொள்ளு விடுகிறோம் என்று தெரிந்தே விடுவார்கள், அது தேவை அல்லது தவிர்க்க இயலாதது என்பது இவர்களது நிலைப்பாடாக இருக்கும்.
2. ஜொள்ளு விடுவார்கள் ஆனால் நான் உத்தமன், ஒரு பெண்ணை கூட ஏறெடுத்து பார்க்கமாட்டேன் னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க, இவர்களை நீயும் "ஜொள்ளு"தான் ன்னு சொல்லிவிட்டால் போதும், கோபத்தில் கொப்பளித்து, கத்திக்க்கூப்பாடு போட்டு, ஆஹா ஓஹோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நிரூபிப்பார்கள். பாவம் தான் :)
3. ஜொள்ளுவிடுவதை, ஜொள்ளுவிடும் பெண்ணிடமே சொல்லிவிட்டு விடுவார்கள்.இவர்களுக்கு உண்மை விளிம்பிகள் என்ற நினைப்பு, இதை அனைவரிடமும் பயன்படுத்துவார்கள் என்று அறியாத பெண்கள், தெரியாமல் கவிழ்ந்துவிடுவது என்னவோ உண்மைதான். பொய் சொல்லறவனை விடவும், உண்மையை சொல்ற ஆணை பெண்ணுக்கு பிடிக்கும் என்று தெரிந்து க்கொண்டு அதற்கு தகுந்தார் போன்று செயல்படும் நல்லவர்கள் இவர்கள்.
4. இன்னும் சிலர், ஜொள்ளு விடுவது, வெளியில் தெரியவே க்கூடாது என ரொம்பவே சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ஜொள்ளுவிடுவார்கள். பல பெண்களுக்கு இவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள சிரமமே.
5. பெண்களை "அழகு" என்று பார்த்து, ஒரு குறிப்பிட்ட இடத்தோடு தன் பார்வையை, நினைவை நிறுத்திக்கொள்ளும் நாகரீகமான ஜொள்ளர்கள் ஒரு வகை.
6. 5 ஆவது பாயின்ட்டை படித்து முடித்தவுடன், நாம் இதில் தான் வருகிறோம் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் ஜொள்ளர்கள் அனைவரும் இதில் வருவார்கள். :)
7. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஜொள்ளுபவர்கள். அதாவது இவர்கள் ரெகுலர் ஜொள்ளர்கள் இல்லை, ஆனால் தனிமையாக ஒரு பெண்ணோடு இருக்கும் நேரத்தில், சந்தர்ப்பம், தனிமை, இதுவரை இல்லாத உணர்வு ன்னு ஏதோ ஒன்று வந்து தொலைய, ஜொள்ள ஆரம்பித்து விடுவார்கள். அந்த பெண் கூட இவர்களை இப்படி இதுவரை பார்த்திருக்க மாட்டாள், அதனால் அவளுக்கும் தர்மசங்கடமாக இருக்கும். "என்ன கொடுமைடா இது, இவனும் எல்லார் மாதிரியா ன்னு" யோசிப்பாள்
8. ஆன்லைன் முகமூடி ஜொள்ளர்கள். முகத்தை மறைத்து, வேற்று பெயரில் பெண்களிடம் ஜொள்ளுபவர்கள். இதே ஆள் நிஜ பெயரில் அதே பெண்களோடு நேரடியாக மிகவும் நன்றாக பேசக்கூடிய நல்லவராக இருப்பார்.
9. ரொம்ப பாவமானவங்க இவங்கத்தான். சாதாரணமாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பேசுவார்கள், ஆனால் டன் டன் ஆக ஜொள்ளு வடியும்.. அது அவர்களுக்கு தெரியவே தெரியாது. ஜொள்ளுவிடுகிறோம் என்ற பிரஞ்ஞை இல்லாமல் ஜொள்ளுபவர்கள். இவர்களிடம் சொல்லியும் பயனில்லை. :)
10. இரண்டும் கெட்டான் வகை ஜொள்ளர்கள். ஜொள்ளுவிடனும்னும் ஆசை இருக்கும், விடாமல் நல்ல பெயர் வாங்கனும்னும் ஆசை இருக்கும், இரண்டையும் சரிவர செய்ய முடியாமல் தடுமாறி... நமக்கு சிரிப்பை வரவழைப்பார்கள். எதாவது ஒன்றை செய்துத்தொலை என்று நாமே சொல்லிவிடலாம் என்று தோன்றும். :)
11. இதை மறந்தேவிட்டேன். வயதான கேசுகள். மகள் வயது இருக்கும் பெண்ணிடம் வழிந்து க்கொண்டு நிற்பார்களே பார்க்கலாம், சின்ன வயதுக்காரர்களை கூட ஏதாவது திட்டி சமாளித்து விடலாம், இவர்களை வயதின் காரணமாக ஒன்றும் செய்யவும் முடியாது. சகித்துக்கொள்ளவும் முடியாது. இவர்களின் தொல்லையின் விழுக்காடு மற்றவற்றை விட அதிகம்.
இதில் எனக்கு பிடிக்காத, அதிகமாக கோபப்பட வைக்கும் ஜொள்ளர்கள் - இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையை சேர்ந்தவர்கள் தான். மற்றவர்களை எல்லாம் பிடிக்கும் என்ற அர்த்தம் இல்லை. மற்றவர்கள் மேல் கோபம் வருவதில்லை.
இந்த வகை ஆட்கள் மட்டும் என்னிடம் சிக்கினால்.. அவர்களை பேசவே விடுவதில்லை..பேச விட்டால் போதும்.. நான் இப்படி, அப்படி ன்னு ஜூப்பர் டூப்பர் கதை சொல்லி படம் க்காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்படியே காதை திருப்பி அனுப்பலாம் போல கோவம் வரும். யார் பெத்த புள்ளையோ நம்ம கையில அடி வாங்கி நிஜமாவே காதுக் கோணி போச்சின்னா.. என்ன பண்றது..ன்னு , கோபத்தை அடிக்கக்கொண்டு, போ போ.. ரொம்ப கஷ்டப்படாத, இங்க ஒன்னும் உன் வேல நடக்காது, கிளம்பு, வேற வேல இருந்தால் பாருன்னு சொல்லி அனுப்ப வேண்டியதாக இருக்கும்.
என்னுடைய நண்பர் ஒருவர், ஓவர் ஜொள்ளு. "அட கருமம் புடிச்சவனே..லிமிட் டா இரு.. ஓவரா ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல ன்னு சொல்லுவேன். அவன் அப்பத்தான், "நீ பிடிக்கல ன்னு சொல்லும் போதே.. உனக்கு பிடிச்சி இருக்குன்னு தெரியும் னு "சொல்லுவான். "அட எப்படிடா இப்படி எல்லாம் னு " ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்டால் போதும் "பெண்களின் குணமாச்சே அது, எனக்கு தெரியும்"என்பான்.. "அட கட்டயில போறவனே... நான் பொண்ணே இல்லன்னு நீ நினைச்சா கூட பரவாயில்லை... நான் சொல்றது உண்மைத்தாண்டா.. ஓவர் ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல.. ஒவ்வேக்க்க்க், பிரண்டாக ஃப்ரியா இருந்து தொலைக்க முடியல.. உன் நினைப்பை சரி செய்துக்கோ' ன்னு சொல்லி இருக்கேன்.
நாம் என்ன சொன்னாலும், அதை நம்பாமல் திரும்பவும், தான் செய்வதையே செய்து இம்சை செய்யும் சில கேசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது? ஒதுங்கி போவதை தவிர வழியில்லை. :)). எல்லா பெண்களுக்குமே தன்னிடம் தவறாக பேசும், நடந்துக்கொள்ளும் ஆண்களை இனம் கண்டுக்கொள்ள முடியும். பலர் தெரிந்தும், அதை விரும்பி ரசித்து, பேசாமல் இருந்து விடுவார்கள். எல்லை மீறும் போது, அந்த ஆணை மட்டும் குற்றம் சொல்லுவார்கள். முதல் வார்த்தையிலேயே ஒரு பெண் நினைத்தால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். !
ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. இனக்கவர்ச்சியே. இதை கடந்து வருவதும், தேங்கி நிற்பதும் தனிமனித கட்டுப்பாட்டில் உள்ளது. நம் வரைமுறை என்ன, அடுத்தவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா, அதனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னை போன்ற ரொம்ப சென்சிட்டிவ்'ஆனவர்களுக்கு இவை எல்லாம் ரொம்பவே தர்மசங்கடத்தை தரும் என்பது நான் உணர்ந்து சொல்லும் கருத்து.
அணில் குட்டி அனிதா: கவி நீங்க யாரை பாத்தும் ஜொள்ளு விட மாட்டீங்களா? ரெம்ப நல்லவங்களா? ...............சரி சரி நோ முறைச்சிப்பை, நீங்க பொம்பளைன்னு மறந்து போயி தொலச்சிட்டேன்.. பொம்பளைன்னா எது செஞ்சாலும் தப்பில்லேங்ஓஓஓஒ..!! நீங்க கன்டினியூங்கோஓஓஓஓ! நான் வரேங்கோஓஓஓ !! பைங்கோஓஓஒ !!
பீட்டர் தாத்ஸ் : “A morning-glory at my window satisfies me more than the metaphysics of books. ~Walt Whitman
பின்குறிப்பு : இது எந்த ஒரு ப்ளாகரையும் குறிப்பிடுவது இல்லை. இந்த பதிவு பொதுவாக எழுதப்பட்டது. யாரையாவது குறிப்பிட்டு எழுதி இருப்பதாக, அவருக்கோ அவரை சார்ந்தவர்களுக்கோ தெரிந்தால், அதற்கு என் எழுத்து பொறுப்பல்லவே. ஏனென்றால், ப்ளாகில் ஆண்/பெண் யாரிடமும் அதிகமாக நான் பேசுவதில்லை. இது அனைவரும் அறிந்ததே. நன்றி, வணக்கம்.
.
76 - பார்வையிட்டவர்கள்:
அடடடே. என்ன ஒரு ஆராய்ச்சி.
ஆண்களை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தி எழுதிய கலியுக ஔவையார் வாழ்க;))))))))
@வித்யா: :))))))))) ஆனா இதான் சாக்குன்னு என்னை ஒளவையார் ன்னு சொல்லிட்டீங்க பட் ஒக்கே.. அடுத்த அவங்கள மாதிரி பாடிட வேண்டியது தான் பாக்கி :))
//எல்லா பெண்களுக்குமே தன்னிடம் தவறாக பேசும், நடந்துக்கொள்ளும் ஆண்களை இனம் கண்டுக்கொள்ள முடியும். பலர் தெரிந்தும், அதை விரும்பி ரசித்து, பேசாமல் இருந்து விடுவார்கள். எல்லை மீறும் போது, அந்த ஆணை மட்டும் குற்றம் சொல்லுவார்கள். முதல் வார்த்தையிலேயே ஒரு பெண் நினைத்தால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். ///
உண்மை
//கலியுக ஔவையார் வாழ்க//
பதிவுலக அவ்வை
///ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. ///
அப்பாடா இதான் நிம்மதியா இருக்கு....!
ஏங்க நான் முணு பிரிவுல வர்ரேன் என்ன பண்றது?
@ எல்.கே: நீங்களுமா? :))
@ பன்னிக்குட்டி : எந்த 3 ன்னு சொல்லுங்க.. என்ன பண்றதுன்னு சொல்றேன் :))
////கவிதா | Kavitha said...
@ எல்.கே: நீங்களுமா? :))
@ பன்னிக்குட்டி : எந்த 3 ன்னு சொல்லுங்க.. என்ன பண்றதுன்னு சொல்றேன் :))////
4, 7 & 10
ஓ மை காட்..
இன்னிக்கு இந்த அம்மணிகிட்ட எப்படின்னாலும் மாட்டித்தான் ஆவணும் போலிருக்கே..!
முருகா.. நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை..? வழக்கம்போல உன் பேரைச் சொல்லிட்டு எஸ்கேப்பாயிடறேன்..!
@ பன்னிக்குட்டி : 3 னுமே நீங்க ஜொள்ளுவிடும் பெண்ணை பொறுத்தது. :))))) அவங்க எப்படி ரிஆக்ட் செய்யறாங்கன்னு கவனிச்சி அதுக்கு தகுந்தமாதிரி நடந்துக்கோங்க :)
எச்சூச்மி ஒன் மினிட் , டீ சாப்படு வந்துதிடுறேன்
டாக்டரம்மா கவிதா!! என்னா ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி!!
ஆராய்ச்சி பண்ணா டாக்டர்தானே? என்ன ஒண்ணு, ‘அந்த’ டாக்டர் மக்களைக் காப்பாத்துவார்; ’இந்த’ டாக்டர் ’காப்பாத்துங்க’ன்னு கத்த வைப்பார்!! ;-))))
/முதல் வார்த்தையிலேயே ஒரு பெண் நினைத்தால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். ! //
ரொம்ப கரெக்ட்!!
[[[ஜொள்ளு விடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. இனக் கவர்ச்சியே. இதை கடந்து வருவதும், தேங்கி நிற்பதும் தனி மனித கட்டுப்பாட்டில் உள்ளது. நம் வரைமுறை என்ன, அடுத்தவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா, அதனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.]]]
திட்டுறவரைக்கும் திட்டிப்போட்டு இப்படிச் சொன்னா எப்படிங்கோ..?
@ முருகா: நில்..!! ஏன் ஒடுகிறாய்..!! இந்த பதிவை க்கண்டு நீ ஓடலாமா? என்னிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வரக்கூடாதா..? வந்தால் அதை நீ பாராட்டத்தான் கூடாதா... முருகா நில்..நில்..ஓடாதே..!!
@ முருகா : அயோத்தி ஜட்ஜ்மென்ட்டு பார்த்து இப்படி எழுதக்கத்துக்கிட்டேன்.. தமிழ்மணம் கலவர பூமி ஆகிடக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தான் :)))) எப்புடீ???
@ மங்குனி : எப்பவுமே இப்படித்தான் பர்மிஷன் கேப்பிங்களா அமைச்சரே?
@ ஹூசைன்னம்மா : கத்தவிட்டு பார்ப்பதில் ஒரு தனி சந்தோஷம் தான் :)))
ஹா ஹா! பெண்களின் பதிவுகளில் பின்னூட்டம் போட்டால் கூட ஜொள்ளு என ஜொள்ளிவிடுவீர்கள்தானே ;)
@ராகி : இதுவரைக்கும் நான் சொன்னது இல்லை.. இப்ப நீங்க சொன்னீங்கன்னா வேணும்னா இதையும் ஒரு பாயின்ட்'ஆ உங்க பேரை போட்டு சேர்த்து விட்டுடறேன் :)
இந்த பதிவை நான் எதிர்க்கிறேன்
ஆண்கள் மிகவும் நல்லவர்கள் அவர்களை" ஜொள்ளு விடுபவர்கள் " பொத்தாம்பொதுவாக கூறியுள்ளீர்கள்
அது ஆண்களின் உரிமை
///கவிதா | Kavitha said...
@ பன்னிக்குட்டி : 3 னுமே நீங்க ஜொள்ளுவிடும் பெண்ணை பொறுத்தது. :))))) அவங்க எப்படி ரிஆக்ட் செய்யறாங்கன்னு கவனிச்சி அதுக்கு தகுந்தமாதிரி நடந்துக்கோங்க :)///
என்ன இப்பிடி சொல்லிட்டீங்க, உங்க ஆராய்ச்சிய வெச்சு ஏதாவது நல்ல ஐடியா கெடைக்கும்னு பாத்தேன், நம்ம ஐடியாவுக்குலாம் ஒண்ணும் செட்டாக மாட்டேங்கிதுங்க!
@ நா.மணி : அடுத்து என்ன பதிவு போடப்போறேன்னு சொல்லுங்க பாக்கலாம்?? :)), சரியா சொல்லிட்டிங்கன்னா..ஆக்டோபஸ் பேரை உங்களுக்கு வச்சிடறேன்..
ம்ம்ம் இந்த பதிவில் ஆண்கள் கெட்டவர்கள் ன்னு எங்கையுமே சொல்லலியே... நல்லா இன்னொரு தரம்படிங்க..
@ பன்னிக்குட்டி : ஜொள்ளுவிட்டா செட் ஆகும்னு நினைக்கறீங்களே..அங்கவே நீங்க டக் அவுட் ஆயிட்டீங்க.. :)). இதுக்கே மேல ஆராய்ச்சி வேற செய்யனுமா என்ன? :)
:) உங்களை பேச்சில், எழுத்தில் வெல்வது மிகவும் கடினம் தான்.
அடப்பாவிகளா ? டீ சாப்ட்டு வர்ற கேப்ல இத்தினபேரு சொல்லுவிடுருகானுகளே ..........சரி விடு நம்ம மேட்டருக்கு வருவோம் ..... மேடம்
டேன் தீட்டா = சைன் தீட்டா / காஸ் தீட்டா
சீக்கன் தீட்டா = 1 / சைன் தீட்டா
கொசீக்கன் தீட்டா = 1 / டேன் தீட்டா
.................
.............
///// கவிதா | Kavitha said...
@ பன்னிக்குட்டி : ஜொள்ளுவிட்டா செட் ஆகும்னு நினைக்கறீங்களே..அங்கவே நீங்க டக் அவுட் ஆயிட்டீங்க.. :)). இதுக்கே மேல ஆராய்ச்சி வேற செய்யனுமா என்ன? :)/////
அடடடா இது தெரியாம பல வருசத்த வேஸ்ட் பண்ணீட்டேனே, ஓக்கே இனி பிரஷ்ஷா ஆரம்பிக்கிறேன்.....!
அப்படியா ஓகே
(அம்மா இந்த blogspot போனா வை ராங்கமா)
@ ராகிஜி : ம்ம்ம் என்னை அன்பால் மிக எளிதாக வென்றுவிட முடியும்.. :))
@ மங்குனி : எனக்கு கணக்கு பாடம் சொல்லித்தர ஆள் வேணும்னு யார்க்கிட்டவும் சொல்லவே இல்லையே அமைச்சரே.....
ம்ம்.. வாழ்க்கை என்பது /,+, -, X , = இதற்குள் தான் அடக்கம். இந்த பதிவின் கருத்துக்களும் அதில் ஒன்றுங்க. :))
//எச்சூச்மி மேடம் இந்த மாதிரி ஜொள்ள பத்தி நீங்க ஆராயிச்சில குரிப்பிடலையே?//
மங்குனி- ரொம்ப நல்லவருங்க நீங்க :)) தாங்க முடியல.. என்னோட பதிவுகளையும் அதன் பின்னூட்டங்களையும் தொடர்ந்து படிச்சிட்டு வந்து இருந்தால் இந்த பின்னூட்டம் வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ஜொள்ளுவிடுபவர்கள் யாருக்கும் இங்கு வேலை எப்போதுமே இருக்காதுங்க. ரொம்ப டென்ஷன் ஆகறீங்க போல வேற வேல இருந்தால் போய் பாருங்க..
@ நா. மணி : உங்க பதில் எனக்கு புரியலைங்க..
சாரி மேடம் , சும்மா ஜாலியா கமண்ட்ஸ் போகுதேன்னு போட்டேன்..... டெலிட் பண்ணிட்டேன் மேடம்
//ம்ம்.. வாழ்க்கை என்பது /,+, -, X , = இதற்குள் தான் அடக்கம். இந்த பதிவின் கருத்துக்களும் அதில் ஒன்றுங்க. :))///
அணிலு எங்க இருக்க, எங்களை காப்பாத்து, இந்த அம்மாகிட்ட இருந்து தத்துவம் மழை மாறி வருது
நான் ஆண்கள் சங்கத்தில் கம்ப்ளைன் பன்னபோறேன்
எச்கிசே மீ ஆண்கள் சங்கம் னு ஏதாவுது ,எங்கேயாவுது இருக்கா
அப்படியே ஒரு போட்டோ போட்டீந்திங்கன்னா படிச்சதோடு மட்டுமில்லாம பார்த்தும் ஜொள்ளியிருக்கலாம்.
@ நா. மணி : கொடுங்களேன் :))
@ எல்.கே : :))) ஒரு தத்துவத்துக்கேவா?
@ அஹமது இஷ்ரத்: இது வரை இஸ்லாமியர்கள் இப்படி பேசி நான் பார்த்தது இல்லை... புரிந்து தான் இந்த பின்னூட்டம் போட்டு இருக்கீங்களா?
என்ன சொல்றீங்க நீங்க..வலைக்கும் மதத்துக்கும் எதுக்கு தேவையில்லாம முடிச்சு போடுறீங்க..
Just for fun...That's it..
@மணிவண்ணன்
http://lksthoughts.blogspot.com/2010/07/blog-post_06.html
@ அஹமத் : குட், சரிங்க முடிச்சி போடலை.
"Just for fun...That's it.." - அதற்கான இடம் இது இல்லைங்க..
ஓகே வித்தியசமான பார்வை?தான்....
//ஓகே வித்தியசமான பார்வை?தான்....//
:)) நன்றிங்க. .பார்வை சரியில்லை, பார்வையில்லை, அப்படின்னு சொன்னவங்களாம் கூட உண்டு. :)
லொள்ளு விட்டால் பொம்பிளை ரசிக்கணும் அதை விட்டுத்து இப்படி ஆராய்ச்சி எல்லாம் செய்யக் கூடாது.... சும்மா எங்கட பொளைப்பில கை வைக்கக் கூடாது ஆண் பாவம் பொல்லாதது..
//நன்றிங்க. .பார்வை சரியில்லை, பார்வையில்லை, அப்படின்னு சொன்னவங்களாம் கூட உண்டு. :)//
விடுங்க
//ஓ மை காட்..
இன்னிக்கு இந்த அம்மணிகிட்ட எப்படின்னாலும் மாட்டித்தான் ஆவணும் போலிருக்கே..!
முருகா.. நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை..? வழக்கம்போல உன் பேரைச் சொல்லிட்டு எஸ்கேப்பாயிடறேன்..!
//
பக்தா! இரும்படிக்கிற இடத்துல ஈக்கென்ன வேலை? ஊடிப்பூ இங்கிருந்து
அழகை ஆராதிப்பதில் தவறில்லை என்று வழி கட்டிய தத்து அன்னை நீ வாழ்க
இவ்வளவு ஜொள்ளு வகைகளா!!!
பாவம் ஆண்கள், இந்தப் பதிவை வாசிச்சாங்கனா, நல்லவேளை நம்ம 2, 3 வகைல இல்லைனு சந்தோஷப் பட்டுக்குவாங்க.
ஆமா, நீங்க ஜொள்ளுவிடுற பெண்கள் பார்த்ததே இல்லையா?!! அப்படி ஒண்ணே இல்லையா?! இல்லை, அதை ஆண்கள்தான் சொல்லனும்! நிச்சயம் நீங்க சொல்ல முடியாது!
Some genuine conversations are often interpreted as "joLLu" I believe. Poor men! :(
@ சிபி : மிக்க நன்றி மகனே. .:))
@ வருண் : பார்த்து இருக்கேன். நண்பர்கள் நிறைய சொல்லி இருக்காங்க. :)))) எழதனும்.. பாக்கலாம்.. % இது அதிகம் என்பதால் இதை முதல்ல எழுதிட்டேன்.
ஜொள்ளுங்க ச்சே சாரி சொல்லுங்க தத்து மம்மி :))
////ஜொள்ளுவிடுபவர்கள் யாருக்கும் இங்கு வேலை எப்போதுமே இருக்காதுங்க. ரொம்ப டென்ஷன் ஆகறீங்க போல வேற வேல இருந்தால் போய் பாருங்க..//////
சரிங்க மேடம் .... உங்க பதிவ படிச்சிட்டு ஜாலியா எழுதி இருக்கிங்கன்னு நினைச்சு வந்துட்டேன், நீங்க சொன்னபிறகுதான் உங்க பாலிசி புரிந்தது...... மறுபடியும் சாரி மேடம் ..............நாகரீகமாக சொன்னதற்கு நன்றி
அதேமாதிரி நமக்கு கூட ஒரு பாலிசி இருக்கு மேடம்
///இங்க வந்து இந்த ஜாதி , மதம் , @@@@@ ####### சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........///
(இது என்னோட ப்ளோக்ல about me இருக்கும் மேட்டர் மேடம் )
இந்த கோட்டை விட்டு எங்கயும் எதிலும் நான் தாண்டி போகமாட்டேன் மேடம் , அது என் பாலிசி....
என்ன ஒரு ஆராய்ச்சிங்க நிறைய கத்துக்கனும் உங்ககிட்ட
இந்த numbering சிஸ்டத்தில மாட்டாம யாராவது காதல் திருமணம் செய்திருக்க முடியுமா?
ஆகா, நான் இன்னிக்கு கொஞ்சம் பிசியாகிவிட்டேன். அதுக்குள்ள ஒரு ஜொள்ளு பதிவு போட்டு இது வரை 45 ஜொள்ளு ஆகிடுச்சே:-))
நான் 46 வது ஜொள்ளா? இதிலே 2 மைனஸ் ஓட்டு வேற ஆகியிருக்கு. ரைட்டு! செம ஆராய்ச்சி! நல்லா உட்காந்து யோசனை செஞ்சு இருக்கீங்க கவிதா:-)))
நானே 50 அடிச்சேன்:-)))
@ மயாதி : இதை செய்யறவங்க கண்டிப்பா செய்வாங்க ..நன்றி
@ மங்குனி : முன்னமே சொல்லிட்டீங்களே... உங்களை கஷ்டப்படுத்த அப்படி சொல்லலைங்க..சீரியஸாக எடுத்துக்காதீங்க, தனிப்பட்ட முறையில் ராகிஜி ய சொன்னதால, அவர் கஷ்டப்படபோறார்னு சொன்னேன்ங்க.. அவர் தொடர்ந்து என் பதிவுகளை, பின்னூட்டங்களை படிப்பவர்.
@ விஜிக்கா : உன்னையெல்லாம் ஜொள்ளி..ஏன்ன்ன்ன்...????
@ சக்தி : இதெல்லாம், அனுபவங்க.. :)) இதுக்காக போயிட்டு ஆராய்ச்சி எல்லாமா செய்யமுடியும்??
@ சேது : ம்ம் நீங்க தான் சொல்லனும் எனக்கு தெரியல..
கடைசிலே கேள்வி கேட்டவனையே மாட்டி விட்டுட்டீங்க. என் பதில் காதல் திருமணம் செய்ய முடியாது என்பது தான். அளவுக்கு மீறினால் ரொம்ப கஷ்டம் தான். காதல் திருமணத்தினால் கொஞ்சம் சாதிப் பிரச்சனை குறையும். (காதல் திருமணத்தால் ஏற்படும் பங்காளிப் பிரச்சனைகளுக்கு நாம என்ன செய்ய முடியும்). அதனால் உங்க numbering சிஸ்டத்தில் அவர்களுக்கு கொஞ்சம் இடம் ஒதுக்குங்க.
ஹா ஹா மங்குனி அமைச்சரே. நீங்கள் எழுதியதில் துளியளவும் எனக்கு கவலை இல்லை என்பதுதான் உண்மை. தவறாக எழுதியதாகவும் எனக்கு படவில்லை.
நிச்சயம் கவலை எல்லாம் இல்லீங்க கவிதா. சொல்லப்படுகிற ஒரே ஒரு விஷயத்தை பலவிதமாக பார்க்கலாம் என்பது உலகியல் தத்துவம் தானே.
:)
அய்யே .. பேட் மம்மி, நீ ஜொள்ள வேணாம் :))
ஆண்கள் ஜொள்ளு விடுறதா பத்தி இப்படி ஆராய்ச்சி பண்ணி பதிவு போட்ட நீங்க இதில் ஜொள்ளு விடும் பெண்களை பத்தி ஏன் எழுதவில்லை.
அப்படியே பெண்களுக்கு எப்படி ஜொள்ளு விட்ட பிடிக்கும்னு சொன்ன எங்களுக்கு உதவிய இருக்கும்
kavitha madam,உங்க வயசு என்ன ?
மீரா ஜாஸ்மின பாத்து ஜொள்ளுவிட்டதுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சி, மொத்தததில் ஐடியா என்னுடையதுன்னு இந்தப் பதிவுக்கு உரிமை கொண்டாடலாமா?
//என்னுடைய நண்பர் ஒருவர், ஓவர் ஜொள்ளு. "அட கருமம் புடிச்சவனே..லிமிட் டா இரு.. ஓவரா ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல ன்னு சொல்லுவேன். அவன் அப்பத்தான், "நீ பிடிக்கல ன்னு சொல்லும் போதே.. உனக்கு பிடிச்சி இருக்குன்னு தெரியும் னு "சொல்லுவான்.//
சிரிப்புல இதுக்கு மேல ஜொள்ள முடியல:)
பீட்டர் தாத்ஸ் ஜொள்றதும் இந்த ஜொள்ளுக்கு சரியில்லை.
:)டாக்டர் கவிதா.
ஆராய்ச்சி பலம்.
நல்ல ஆராய்ச்சி.. ஏன் இன்னும் எந்தப்பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம்தர முன் வரலை :-))))))))))
////// V.Radhakrishnan said...
ஹா ஹா மங்குனி அமைச்சரே. நீங்கள் எழுதியதில் துளியளவும் எனக்கு கவலை இல்லை என்பதுதான் உண்மை. தவறாக எழுதியதாகவும் எனக்கு படவில்லை.//////
உங்க பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி சார். நாங்க எப்பவுமே இப்படித்தான் சும்மா ஜாலியா இருப்போம், ஆனா எல்லை மீற மாட்டோம் சார்! நன்றி மேடம்!
54 - பார்வையிட்டவர்கள்//
அப்ப கமெண்டு போடாதவங்களெல்லாம் பார்வை இடதாவர்களா?
இந்த பதிவை படிக்கும் போதே ஜொள்ளு விட்டுட்டு தான் படிச்சேன்! என்ன பண்றது!! பையனா பொறந்துட்டோம்! நம்ம கடமைய செஞ்சு தான ஆகணும்?!!
நீங்க சொல்ற லிஸ்ட் ல நான் என்ன லிஸ்ட்னே தெரியல!! (ஒருவேளை அதையும் தாண்டி புனிதமான லிஸ்ட் போல!!) என்ன நிறைய லிஸ்ட் ல வர மாதிரியும் இருக்கு ,வராத மாதிரியும் இருக்கு!! உங்களுக்கு ஜொள்லாராய்ச்சி திலகி (திலகம்னு கொடுக்க முடியாதுல?!!) நு பட்டம் கொடுக்கிறோம்! என்ன ஒரு ஆராய்ச்சி!! பின்னிடிங்க போங்க!!
இந்த பதிவை படிக்கும் போதே ஜொள்ளு விட்டுட்டு தான் படிச்சேன்! என்ன பண்றது!! பையனா பொறந்துட்டோம்! நம்ம கடமைய செஞ்சு தான ஆகணும்?!!
நீங்க சொல்ற லிஸ்ட் ல நான் என்ன லிஸ்ட்னே தெரியல!! (ஒருவேளை அதையும் தாண்டி புனிதமான லிஸ்ட் போல!!) என்ன நிறைய லிஸ்ட் ல வர மாதிரியும் இருக்கு ,வராத மாதிரியும் இருக்கு!! உங்களுக்கு ஜொள்லாராய்ச்சி திலகி (திலகம்னு கொடுக்க முடியாதுல?!!) நு பட்டம் கொடுக்கிறோம்! என்ன ஒரு ஆராய்ச்சி!! பின்னிடிங்க போங்க!!
ரசித்தேன் ;)
என்னே ஒரு ஆராய்ச்சி யார் யாருக்கோ டாக்டர் பட்டம் குடுக்குறாங்க இந்த அம்மணிக்கு ஏன் இன்னமும் குடுக்க மாட்டேங்கிறாங்க?
//ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. இனக்கவர்ச்சியே. //
இந்த வருட சிறந்த கண்டுபிடிப்புக்கான நோபல், பூச்சிபல், சொத்தைபல் போன்ற எல்லா விருதையும் கவிதாவுக்கே கொடுக்கவேண்டும் என்று இரத்தத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பும் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்.
@ அபிஅப்பா : :)) என்ன செய்ய.. பதிவு போட்ட உடனே ஒடியாந்துட்டுங்க :))
@ சேது : ம்ம்..சேர்த்துக்கறேன் உங்க பேரை சொல்லி.. :)
@ ராகிஜி : நன்றி
@ விஜி : சரிக்கா உன்னளவு நான் நல்லவ இல்லத்தான்க்கா.. :)
@ என்விஎன்குமார் : நாம உணர்ந்து எழுதறது முதல் இடம் பிடிக்கிதுங்க..மத்தவங்க உணர்வதை உள்வாங்கி எழுத டைம் எடுக்கும். ஜொள்ளுவிட எல்லாம் சொல்லித்தர தெரியாது, விடாம இருக்க வேணும்னா நல்லா திட்ட தெரியும்.
@ அருண் இராமசாமி: என் வயசா? 56 முடிஞ்சி.. 57 நடக்குதுங்க.. இன்னும் 3 வருஷம் ஆச்சின்னா 60 வயசு கொண்டாடுவேன்.
@ குடுகுடுப்பை : :))) கொண்டாடுங்க கொண்டாடுங்க.. (இது போஸ்ட்டுன்னு இதுக்கு உரிமை வேற..)
@ ராஜநடராஜன் : சிரிங்க சிரிங்க..ஜொள்ள வேண்டாம்.. சிரிங்க.. :)))))))), பீட்டர் தாத்ஸ் எவ்வளோ மேட்சிங் தேடி பார்த்தாரு போல ஒன்னும் கிடைக்கல.. அதான்..
@ முத்து : :))) இவ்வளவு ஈசியா டாக்டர் பட்டம் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. அக்காங்க்க்க்.!! :))
@ அமைதிச்சாரல் : கூடிய சீக்கிரம் டாக்டர் பட்டம் கொடுத்துடுவாங்கன்ற நம்பிக்கை இப்ப வந்துடுத்து எனக்கு :)
@ குடுகுடுப்பை : வரவங்க எல்லாம் பின்னூட்டம் போடனும்னு சட்டம் கொண்டுவரனுமோ? :))
@ டீன்-யுகே : ரொம்ப நன்றிங்க.. :))
@ கோப்ஸ் :ம்ம்ம்.. ரசிக்கலாம் வேற செய்வீங்களோ..?? .
@ சந்தோஷ் : இப்ப தெரியுது டாக்டர் விஜய், விவேக் எல்லாம் எப்படி டாக்டர் பட்டம் வாங்கினாங்க.. தம்மாத்துண்டு போஸ்ட் க்கு டாக்டர் பட்டம் கொடுங்கன்னு நீங்க எல்லாம் போராடறதை பார்த்தால், எனக்கும் கூடிய விரைவில் கிடைச்சிடும் போல.. :)))
@ குசும்பர்: //பூச்சிபல், சொத்தைபல் போன்ற //
:)))))) பட்டம் மட்டும் வரல, சொல்லி இருக்கிங்க இல்ல, அதாலேயே வந்து புடுங்கி வைக்கிறேன்...
நல்ல ஆராய்ச்சி.
தாடி கூட ஏதோ சொல்லி இருக்கார்போல!
ஜொள்ளுக ஜொள்ளிற் பயனுடைய ஜொள்ளற்க....
ஜொள்ளிற் பயனிலா ஜொள்
@ துளசிஜி : :)))) சூப்பர்!!!! கலக்கறீங்க.போங்க.. !! எப்படி இப்படி எல்லாம்??? இந்த முழு போஸ்டையே 2 வரியில அடிக்கட்டீங்க.. எனக்கு என்ன பட்டம் தந்தாலும் அதை உங்களுக்கு அப்படியே பார்சல் பண்றேன். .இருங்க..நானும் ஒரு வாட்டி சொல்லிப்பாத்துக்கறேன்.
"ஜொள்ளுக ஜொள்ளிற் பயனுடைய ஜொள்ளற்க....
ஜொள்ளிற் பயனிலா ஜொள்"
:))))) இந்த லிஸ்ட்ல இருந்து ஒரு ஆண்மகனும் தப்பிக்க முடியாது போலயே... சுத்தி சுத்தி லாக் வச்சிருக்கீங்களேக்கா. இந்த ஆராயச்சிக்கு உங்களுக்கு ஜொள்ளரை கண்டுகொண்ட அரசின்னு பட்டமே கொடுக்கலாம் :)
ஆம்பிளைங்க ஜொள்ளு விடறதை வகைப்பிரிக்க இவ்லோ பெரிய லிஸ்ட் போட்டீங்க... பொம்பளைங்க ஜொள்ளு விடறதை வகைப்பிரிக்க நாங்க அலட்டிக்கவே மாட்டோம். அதுல ரெண்டே வகைதான்.. ஜஸ்ட் காபி அண்ட் பேஸ்ட் யுவர் 4 வது (இதுல பெண்களுக்கு அப்படிங்கறதை ஆண்களுக்கு அப்படின்னு மாத்தினா போதும் மற்றும் 9 வது பாயிண்ட்ஸ் (இத நீங்க மாத்தவே வேண்டியது இல்லை அப்படியே பொருந்தும்).
@ ஆதவன் : தப்பிக்கவே கூடாதுன்னு தானே எழுதி இருக்கு... :))
@ பிரியமுடன் ரமேஷ் : சரிங்க.. அதான் நீங்களே எழுதிட்டீங்களே நான் வேற போஸ்ட் போடனுமா என்ன? நன்றிங்க.. :)
Post a Comment