நேற்று நவீனும் நானும் கடைக்கு செல்லலாம் என கிளம்பினோம். தபால் பெட்டியில் ஒரு போஸ்ட் கார்ட், அதுவும் என் கணவரின் பெயருக்கு.. ..போஸ்ட் கார்டில் லெட்டர் போடும் அளவுக்கு அவருக்கு யார் இருக்கா? வென்ற கேள்வியோடு படிக்க ஆரம்பித்தேன்.

செல்லம்மா என்ற பெண், "தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு, எனக்கு கை ஊனம், இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க, ரொம்பவும் வறுமை, அதனால் தீபாவளிக்கு பணமும், துணியும் அனுப்பி வையுங்கள்" என்று எழுதி இருந்தார்கள். சரி விலாசம் இருக்காவென திருப்பி பார்த்தேன். இருந்தது. இப்படிப்பட்ட கடிதம் எல்லாம் என் பெயரில் வந்திருந்தால், வியப்பில்லை, எப்படி அவர் பெயரில் வந்துள்ளது?

நவீனிடம், "குட்டி அப்பாக்கு செல்லம்மா ன்னு ஒருத்தர் லெட்டர் போட்டு இருக்காங்க தீபாவளிக்கு பணம் வேணுமாம். "

நவீன் ":)))))))))) ஓ உன் புருஷனோட செட் அப் ஆ? சொல்லவே இல்ல.? :))) எனக்கு ஒரு 100 ரூ கொடுங்கன்னா கொடுக்க மாட்டறாரு.. யாரோ லெட்டர் எல்லாம் அனுப்பி பணம் கேக்கறாங்க?"

"குடும்பத்துல ஒரு நிரந்தர உறுப்பினரா இருந்துக்கிட்டு, நீயே குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணலாமா? வேணாம்..., திரும்பி வந்து அப்பாக்கு போன் செய்து கேப்போம், ஆனா கேட்டா, என் மேல் ப்ளேட் ஐ அப்படியே திருப்பி போட்டு பதில் சொல்லுவாரு, என்னால தான் உலகத்துக்கே நாம உயிர் வாழறோம்னு தெரியும், ஊர் பூரா நம்ம வீட்டு அட்ரஸை பிரிண்டு போட்டு நான் தான் கொடுத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுவாரு "..

":)))) அனுபவி தாயே..."

***********
வீட்டுக்கு வந்து, இரவு ஃபோன்..

டிரிங் டிரிங் ட்ரிங்... ஃபோன் ஐ எடுத்துட்டாரு... "ப்பா ..நான் தான் உங்க பொண்டாட்டி சென்னையிலிருந்து பேசறேன்... என்னை தெரியுதா.."

"கிர்ர்ர்ர் தூஊ.. வீட்டு நம்பர் ல இருந்து என் மொபைல் க்கு தானேடி பண்ற.... இதுல என்ன சென்னையிலிருந்து பொண்டாட்ட்ட்ட்ட்ட்ட்டி.. ன்னு,...என்ன சொல்லு.. "

ஹோ மொபைல் ல நம்பர் வருமே.. தேவையில்லாம டயலாக் டெலிவரி பண்றோமோ.. சரி ஜாக்கறதையா பேசனும் இனிமே..

"உங்களுக்கு செல்லம்மா " னு ஒருத்தங்க கிட்ட இருந்து லெட்டர் வந்து இருக்கு"

"................"

"ஹல்லோஓஓ"

"சொல்லித்தொலையேன் கேட்டுக்கிட்டு தானே இருக்கேன். .நடுவுல என்ன ஹல்லோஓ? "

ஒரு படப்படப்பு, பயம் எதுவும் தெரியலியே ....சரி கன்ட்டினியூ பண்ணுவோம் "அவங்க நோயாளியாம், கை இல்லையாம், 2 பெண் குழந்தை இருக்காம், தீபாவளிக்கு துணியும் பணமும் வேணுமாம்"

சொல்லிமுடிக்கல... "இந்த மாதிரி லெட்டர் எல்லாம் உனக்கு தானே வரனும் எனக்கு ஏன் வருது, கர்ணாமகாபிரபு வின் தங்கச்சி யாச்சே நீனு (ஸ்ஸ்ஸ்ப்பா..யாராச்சும் இப்ப உதாரணம் கேட்டாங்களா என்ன?), யார் கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்தடீ ? கண்டவங்க கிட்ட எல்லாம் நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்கறது இல்லாம, என் பேரையும் ஏண்டி சேத்து சொல்ற, உனக்கு எப்பத்தாண்டி அறிவு வளரும்... ஏன்ன்ன்ன்ன்ன் இப்படி இருக்க.. வளரவே மாட்டியா ????

"ப்பா..பொறுமை பொறுமை..இப்ப உங்களுக்கு உடம்பு சரியில்லை...நீங்க இப்படி சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷன் ஆகப்பிடாது........"

"தெரியுதில்ல.. அப்புறம்.. என்ன டேஷ்க்கு இந்த மாதிரி விஷயத்த்க்கு எல்லாம் ஃபோன் பண்ற நீ....

"நோ நோ பேட் வேர்ட்ஸ்... நிஜமாவே யாராச்சும்....."

"லூசே முதல்ல பேசறதை நிறுத்து..........இந்த லெட்டர் பாத்தவுடனே அதை கிழிச்சி குப்பைத்தொட்டியில போடாம, மெனக்கெட்டு எப்படிடீ எனக்கு போன் செய்த?

"நம்ம் வீட்டு ஃபோன் லேர்ந்து தான் ப்பா ஃபோன் செஞ்சேன்..."

"ம்ம்ம்.ஜோக் க்கு.??!! ...... இதுக்கு நாங்க சிரிக்கனும்??!! . ஹி ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன், ஆமா ...புத்திசாலித்தனமா பதில் சொல்றதா உனக்கு நெனப்பாஆ... இத ஒரு விஷயம் னு விசாரிக்கிற...... உனக்கு எத்தனதரம் சொன்னாலும் புரியாதா.................... ........................ ...........................

(சரி இது வேலைக்கு ஆவறது இல்ல..வூட்டுக்காரு க்கு ஓவரா அன்பு பொங்கி வழியுது...... As usual...இதுவும் முட்டு சந்து ஃபோன் கால், நடுவிலும் பேச முடியாது, எப்படியும் 10-15 நிமிஷம் ஆகும் let him continue...............அதுக்குள்ள நான் போயி செல்லம்மா க்கு பதில் கடிதம் எழுதிட்டு வரேன்... சரியா)
***********

அன்புள்ள செல்லமாவிற்கு

உங்கள் கடிதம் கண்டபிறகு , எங்களுக்கும் நிதி உதவி செய்ய ஆள் இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கிறோம். உங்களுக்கு முதலில் எங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

எனக்கு 6 மாதமாக கழுத்து கோனிப்போய் ரொம்ப வேதனையில் அவதிப்படுகிறேன், உங்களை போன்று இரண்டு மகள் இல்லை, அம்மாவின் ஓவர் வாயையும், அப்பாவின் ஓவர் ஓவர் வாயையும் சேர்த்து 3 ஓவர் வாயை கொண்ட ஒரே ஒரு மகன் இருக்கிறான். உங்களுக்காவது தீபாவளி மட்டும் தான். ஆனால் எங்களுக்கு எங்களின் ஓவர் வாயி பையனின் பிறந்தநாளும் வருகிறது. அதனால் உங்களை போன்று ஒரு துணியோடு வேலை முடியாது, 2 துணி அவனுக்கு வாங்கி தரனும், பிறந்தநாள் பரிசு ஒன்னு கொடுக்கனும், இதற்கு எல்லாம் என்ன செய்வது என்று முழி பிதுங்கி இருக்கும் வேலையில் உங்களின் விலாசம் எங்களுக்கு கிடைத்தது. உங்களால் முடிந்த உதவியை இந்த கடிதம் கண்ட மறுவினாடி எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.

இப்படிக்கு
உங்களின் போஸ்ட் கார்ட் நண்பர்
பழம்நீ

ஹைய் இது நல்லா இருக்கே... இப்படி ஒரு 10 பேருக்கு லெட்டர் போட்டா கூட, 2000 ரூபாயாவது மினிமம் கிடைக்கும். முதல்ல போய் போஸ்ட் கார்ட் வாங்கிட்டு வரனும்......ஹய்யோ.. வூட்டுக்காரு ஃபோன் ல இருக்காறே மறந்துட்டேனே........ ..ஓடி போய் ரீசிவரை எடுத்து........

"ஹல்லோஓஒ..."

"என்னடி நடுவுல ஹல்லோ.. குல்லோ ன்னு கிட்டு......"

மனசுக்குள்ள........"ஓ இன்னும் முடிக்கலையா.????...அப்ப சரி..... "


அணில் குட்டி அனிதா: அடப்பாவிகளா.. என்ன குடும்பம்யா இது..? உங்க குடும்பத்தையும் ஒரு குடும்பம்மா மதிச்சி ஒரு பெண் லெட்டர் போட்டா....? அவங்களுக்கு முடிஞ்சா ஹெல்ப் பண்ணனும் இல்லாட்டி விடனும்... இப்படியா அந்த லெட்டரை வச்சி கும்மி அடிப்பீங்க...??? யம்மா செல்லம்மா.... ஊர்ல உனக்கு வேற நல்ல குடும்பம் கிடைக்கலையாம்மா? லெட்டர் போடும் போது குடும்பத்தோட ஹிஸ்டரி ஜியாகரஃபி எல்லாம் கேட்டுட்டு போடும்மா.. பிரச்சனையாக போகுது. விட்டா இவிங்க மூனு பேரும் உன் வீட்டுல வந்து உக்காந்து தீபாவளி கொண்டாடினாலும் ஆச்சரியபடறதுக்கு இல்ல.....

பீட்டர் தாத்ஸ் : “No one told me anything. I don't know what I did. I have to figure it out. It sounds pretty bogus to me.”