“காமு கிளம்பிட்டியா?”என்று கேட்டபடி சரோஜா டிபன் பாக்ஸை டேபிள் மேல்கொண்டு வந்து வைத்தார்கள்
“ம்ம்..கிளம்பிட்டேன்..... டிபன் பாக்ஸை எடுத்துக்கொடும்மா..” என்றாள் அவரசஅவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்த காமினி.
விமான நிலையத்தில் "செக்கியூரிட்டி கார்ட்" ஆக பணி புரியும் அவளுக்கு, இன்றுஅதிகாலை பணி. சரோஜா'வின் ஒரே மகள், டீச்சராக இருந்து ஓய்வு பெற்றுஇருந்த சரோஜா தான் எல்லாமே அவளுக்கு. அவளின் அப்பா சுகுமார், அகாலமரணம் அடைந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சரோஜா ரிடையர் ஆனாலும், காமினியின் வருமானத்தால் குடும்பத்தை வறுமை இல்லாமல் ஓட்ட முடிகிறது.
ஸ்கூட்டியை எடுத்தவாறே அன்றைய தினத்தில் செய்ய வேண்டியதை ஒருமுறை யோசித்து மனதுக்குள்ளவே சரிப்பார்த்துக்கொண்டாள். ஒரு மணிக்குவேலை முடியும், மதியம் சித்தி வீட்டுக்கு போகவேண்டும் என அம்மாசொன்னார்காள், அது முடியாது, அம்மாவை எதையாவது சொல்லிசமாளித்துவிடலாம். அது பிரச்சனை இல்லை, மற்றவை சரியாக நடந்துவிட்டாள்போதும் என்று இருந்தது அவளுக்கு.
விமானநிலையம் வந்துவிட்டாள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த, ரெஸ்ட்ரூம் சென்று யூனிஃபார்ம் மாற்றிக்கொண்டு, பெண்கள் செக்கியூரிட்டி கிளையரிங்அறைக்கு சரியாக 5.55 க்கு நுழைந்தாள். இரவு நேர வேலையில் இருந்தசுமா'விற்கு விஷ் செய்துவிட்டு, சுமா'வை கிளம்ப சொல்லி, பயணிகளை சற்றுகாத்திருக்கும் படி சொன்னாள். தேவையான உபகரணங்கள் எல்லாம்இருக்கிறதா, டிடெக்டர் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒரு முறைசரிப்பார்த்துக்கொண்டாள். சுமா கிளம்பிவிட்டாள். காமினியின் நேரம்தொடங்கியது. 5 நிமிடத்திற்குள் பயணிகள் வரிசை இன்னும் பெரியதாக நீண்டுஇருந்தது. எல்லோருக்கும் அவசரம்.
காமினி பயணிகளை செய்கை செய்து வரச்சொன்னாள். ஒவ்வொருவராகவந்தனர். அந்த குறிப்பிட்ட நபருக்காக காத்திருந்தாள். காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் வர வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் சொல்லப்பட்டு இருந்தது. கொஞ்சம் படப்படப்புடன் இருந்தாள். 6 மணியிலிருந்தே கவனமாக இருந்தாள். 7. 20 இருக்கும், மிடுக்கான ஒரு பெண், சிகப்பு கலர் டிசைனர் சேலையோடு வந்தார், காமினியை கண்ணோடு கண்ணாக பார்த்தவாரே உள்ளே வந்தார். காமினிபுரிந்துக்கொண்டாள், பரந்தாமன் சொல்லியிருந்த அதே அடையாளங்கள். இந்தபெண்ணாக த்தான் இருக்க வேண்டும்.
"என் பக்கமாக திரும்பி நின்று, கையை மேல தூக்குங்க." கேமரா நிற்பவரின் நேர்எதிராக வைக்கப்பட்டு, கவனித்துக்கொண்டு இருந்தது. "செயினை வெளியேஎடுங்க.." டிடெக்டர் வைத்து செக் செய்து விட்டு, வேண்டுமென்றே இன்னொருமுறை கைகளால் மார்பு, இடுப்பு என்று தடவினாள். மீண்டும் டிடெக்டர் எடுத்துகால் வரை குனிந்து பரிசோதித்தாள். "புடவையை தூக்குங்க" அந்த பெண்சொன்னதை அப்படியே செய்தாள். டிடெக்டரை வைத்துவிட்டு திரும்பி ஒருமுறை கைகளால் இடுப்பிலிருந்து பாதம் வரை அவசரமில்லாமல் குனிந்து தடவிபரிசோதித்தாள், எழுந்தாள், அவளை பார்த்து, "நீங்க போகலாம். "
மதியம் வேலை நேரம் முடியும்வரை நிலைபுரியாத மன போராட்டாத்திலும், அழுத்தத்திலும் படப்படப்போடும் வேலை தொடர்ந்தது. எப்போது ஒரு மணிஆகும் வெளியில் போகலாம் என்று காத்திருந்தாள். ஆயிற்று, வேகவேகமாகரெஸ்ட் ரூம் வந்தாள். உடைமாற்றி, வெளியில் வந்தாள்.
அவளை முதலில் பார்த்த ஷீலா, கண்கள் விரித்து, புன்னகையுடன் "ஹே காமு.. யூ லுக் பியூட்டிஃபுல் வித் திஸ் சாரி.. என்ன விஷேஷம்? "
"ஒன்னும் இல்ல... ரிலேட்டிவ் வீட்டுக்கு போறேன், இங்க இருந்து நேராபோறேன். . .எல்லாம் அம்மாவோட வேல.". ஷீலாவிற்காக சிரிப்பை வரவழித்துசிரித்தாள்.
" ரியிலி.... ரொம்ப நல்லா இருக்கு.. ஃபர்ஸ்ட் டைம் சீயூங் யூ வித் சாரி யா" திரும்பவும் கண் விரிய சொல்லி சிரித்தாள்.
"தாங்கஸ்....டைம் ஆச்சி கிளம்பறேன் என்று ஷீலாவிடமிருந்துவலுக்கட்டாயமாக தன்னை விடுவித்து, வண்டி நிறுத்தும் இடம் நோக்கிவிரைந்தாள். நடந்துக்கொண்டே, சரோஜாவை மொபைலில் அழைத்து "அம்மா, நான் லேட்டா வருவேன், நாம சித்தி வீட்டுக்கு நாளை போகலாம், அவசரவேலை, ஆபிஸில் கொடுத்துட்டாங்க, தட்ட முடியாது "என்றாள்
"சரிம்மா " என்று மறுமுனையில் ஃபோன் வைக்கப்பட்டது. .
டூ வீலரை ஸ்டார்ட் செய்து, மீனம்பாக்கத்திலிருந்து பல்லாவரம் பக்கம்வண்டியை செலுத்தினால், பல்லாவரத்தை தாண்டி திருநீர்மலை செல்லும்பாதையில் திரும்பினாள். உள்ளுக்குள் படப்படப்பு குறையாமல் வண்டியைஓட்டிக்கொண்டு இருந்தாள். 'பெரிய ஏரி" வருவதற்கு சில நிமிடங்கள் முன்வேகமாக பின்னால் வந்த பச்சை நிற ஸ்கார்ப்பியோ எதிரில் வந்த லாரிக்குவழிவிட இடது பக்கம் சட்டென்று வளைக்க, ரோடிலிருந்து வண்டி அரையும்குறையுமாக கீழிறங்கி தடுமாறி, முன்னே சென்றுக்கொண்டிருந்த காமினியின்வண்டியை முட்டியது. அவளுக்கு இருந்த படப்படப்பில், என்ன ஏது என்றுயோசிக்குமுன் அவளும் நிலை தடுமாறி சாலையிலிருந்து இறங்கி, வண்டியோடுஉருண்டு விழு, தலையில் ஏதோ பட்டு மயக்கமுற்றாள்.
அவளை இடித்து சென்ற ஸ்கார்ப்பியோ கொஞ்ச தூரம் சென்று நின்றது. அதிலிருந்து இறங்கிய இளைஞன், அவளை நோக்கி ஓடி வர, அதே சமயம்எதிர்புறத்திலிருந்து வந்த காரில் இருந்த இருவர், இவள் விழுந்திருப்பதை பார்த்துநிறுத்தி, இறங்கி ஓடிவந்து அவளை தூக்கி முதலுதவி செய்ய ஆரம்பிக்க, ஸ்கார்ப்பியோவிலிருந்து இறங்கிய இளைஞன், மீண்டும் வேகமாக திரும்பிசென்று வண்டியில் ஏறி, வேகமெடுத்து ஓட்டி சென்று மறைந்தான். வண்டியைரோடாரமாக பார்க் செய்துவிட்டு, இருவரும், காமினியை அவர்களது காரில்ஏற்றி, பக்கதிலிருந்த சிட்டலபாக்கம், ஈ.எஸ்.ஐ ஆஸ்பித்திரிக்கு கொண்டுசென்றனர்.
கண்விழித்து பார்த்தபோது, ஆஸ்பித்திரியில் இருந்தாள். மூக்கில் மாஸ்க்வைக்கப்பட்டு இருந்தது. நர்ஸ் இவளை பார்த்து " பாரும்மா உனக்கு ஒன்னும்ஆகல, கீழ விழுந்த அதிர்ச்சியில மயக்கம் ஆயிட்ட, அங்க பார்த்தவங்க, சில பேர்கொண்டு வந்து இங்க சேர்த்து இருக்காங்க. உன்னோட விபரம் கொஞ்சம்சொல்லமுடியுமா ?" யார் மோதினாங்கன்னு தெரியுமா? என்றுகேட்டுக்கொண்டே மாஸ்கை விளக்கினாள் .
லேசான மயக்க நிலையிலேயே, இவள் வீட்டு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம்கொடுத்து, "அம்மா தான் வீட்டுல இருப்பாங்க, அவங்களுக்கு சொன்னாபயந்துடுவாங்க..நானே வீட்டுக்கு போயி சொல்லிக்கிறேன் தயவு செய்துவீட்டுக்கு எல்லாம் தெரியப்படுத்த வேண்டாம்" யார் என்னை மோதினாங்கன்னுஎனக்கு தெரியாது, அது ஒரு பச்சை நிற ஸ்கார்பியோ," என்றாள்.
இரண்டு மணி நேரம் இருக்கும், டாக்டர் வந்து பார்த்தார், கொஞ்சம் ரெஸ்ட்எடும்மா, இன்னும் உனக்கு மயக்கம் தெளியில, ஈவினிங் தலைய ஸ்கேன் எடுத்துபாத்துடலாம், பலமா அடி இல்ல.. ஆனா பின் தலையில லேசா காயம் இருக்கு, ஃப்ர்ச்ட் எய்ட் செய்து இருக்கோம், கவலப்பட ஒன்னும் இல்ல, யூ. ஆர் பர்ஃவக்ட்லிஆல்ரைட்ஒக்கே.." என்று புன்னகைத்துவிட்டு இடத்தை காலிசெய்தார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். குதிக்கும் முன் அவளை ஆஸ்பித்திரியில் சேர்த்தவர்கள் கொடுத்ததாக சொல்லி அந்த நர்ஸ் அவள் பெட் பக்கத்தில் எடுத்து வைத்திருந்த அவளின் ஹேண்ட்பேக், வண்டி சாவி, மொபைல்போன் போன்றவற்றை மறக்காமல் எடுத்துக்கொண்டாள்.
வெளியில் குதித்த, அதே நொடி, பரந்தாமன் கொடுத்துனுப்பி அவள் அணிந்திருந்த உள்பாவாடையின் கீழோரத்து மடிப்பில் பிரத்தேயமாக வடிவமைத்து தைக்கப்பட்ட ஜிப்பினுள் மறைத்து வைக்கப்பட்ட வைரங்கள் இருக்கின்றனவா என தொட்டுப்பார்த்தாள். இருந்தன.
தலை விண்' ணென்று வலித்தது. வலித்த இடத்தில் கை வைத்து பார்த்தால், இடது புருவத்துக்கு சற்று மேலே பேண்ட்எய்ட் போட்டு இருந்தார்கள், அலட்சியம் செய்தாள். காலையில் சந்தித்த, அந்த சிகப்பு கலர் சேலை பெண் நினைவுக்கு வந்தாள்.
எழுந்தாள், சற்று தலை சுற்றுவது போன்று இருந்தது. சமாளித்து ஆஸ்பித்திரி வெளிவாசலை நோக்கி நடந்தாள்.மொபைல் போன் அடித்தது. எடுத்து பேசினாள். நடந்ததை மறுபக்கம் இருப்பவருக்கு சொன்னாள். திரும்பி அவர்கள். பேசுவதை அமைதியாக கேட்டாள். கடைசியாக "சரி" என்று சொல்லும் போது கேட்டை தாண்டி வெளியில் வந்திருந்தாள். வலது பக்கத்தில் ஆட்டோ ஸ்டேண்ட் இருந்தது. ஒரு ஆட்டோவை திருநீர்மலை ரோடில் உள்ள "பெரிய ஏரி" வரை போகவேண்டும் என்று பேசி, அமர்ந்துக்கொண்டாள்.
ஆட்டோ புறப்பட்டவுடன், இன்கம்மிங் கால்களை கவனித்தாள், அவள் சற்றுமுன் பேசிய நம்பரிலிருந்து 5 கால்களும், பரந்தாமனிடம் இருந்து 8 கால்களும் வந்து இருந்தன. எல்லாவற்றையும் அழித்துவிட்டு, பரந்தாமனுக்கு போன் செய்து விபரங்கள் சொன்னாள். அவரும் அவள் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று சொல்ல, அவரிடமும் அலுப்பாக "சரி" என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு மொபைலை ஹேன்ட் பேக்'கில் வைத்து, பின்னால் சாய்ந்து உட்கார்ந்தாள்.
ஆட்டோ, ஏரிக்கரை நெருங்கும் முன் ரோடோரத்தில் அவள் வண்டி எங்கிருக்கிறது என்று பார்த்தவாறே வந்தாள், வண்டியை பார்த்தவுடன், ஆட்டோவை கட் செய்துவிட்டு, வண்டியின் அருகில் சென்று, என்ன ஆயிற்று என்று ஒரு முறை கவனித்து சுற்றி வந்தாள். ஒன்றும் பலமான சேதம் இல்லை இடது பக்கம் வண்டி சாலையில் தெய்ந்து பெயிண்ட் போயிருந்தது. சாவியை எடுத்து , ஸ்டார்ட் செய்தாள், வண்டி அவள் சொன்னதை கேட்டது. திருநீர்மலை நோக்கி வண்டியை ஓட்டினாள்.
**********
கோயில் எதிரில் குளத்தை சுற்றி உள்ள ஒரு தெருவில் தான் அந்த வீடு என்று சொல்லி இருந்தார் பரந்தாமன், ஆனால் அவள் வீட்டுற்க்கு செல்ல வேண்டியது இல்லை, இவள் வந்தவுடன், அவர்களே இவளை தேடி வருவார்கள் என்றும், அவள் திருநீர்மலையில் படிகளில் நடுவில் வரும் 3ஆவது மண்டபத்தில் நிற்கவும் வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
வண்டியை நிறுத்தி சுற்றிலும் ஏதேச்சையாக பார்ப்பது போன்று நோட்டம் விட்டாள், தன்னை ஒருவரும் கவனிப்பதாக தெரியவில்லை, உன்னிப்பாக மற்றுமொருமுறை பார்த்தாள். இவள் வண்டியை நிறுத்திய இடத்திற்க்கு நேராக மலையை ஒட்டி சென்ற சாலையில்,சிறிது தூரத்தில், ஒரு டீக்கடையின் முன், இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவர் கையில் பேப்பரோடு நிற்பதை பார்த்து யாரென்று புரிந்துக்கொண்டாள். மொபைல் ஃபோன் அடித்தது, காதில் எடுத்து வைத்து, அதில் மறுமுனையில் பேசியபடி திருநீர் மலை படிகளிலில் ஏற தொடங்கும்முன், பார்வை அந்த பேப்பர்க்காரரின் பக்கம் யாரும் அறியாது சென்று வந்தது. ஃபோனை கட் செய்து திருப்பி, பேகினுள் வைத்துவிட்டு, படிகளை பொறுமையாக ஏறினாள்.
3 ஆவது மண்டபம் தெரிந்தது, அங்கு யாரும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை. சரி, காத்திருப்போம் நமக்கென்னவென்று மேலே பார்த்தபடி நடந்தாள், நெருங்க நெருங்க, கவனித்தாள், தள்ளாடியபடி ஒரு வயதான பாட்டி இறங்கிக்கொண்டு இருந்தார். இந்த வயதில் இந்த பாட்டிக்கு மலை ஏறனும்னு இருக்கா.. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறனும் னு மனதுக்குள் நினைத்துக்கொண்டே 3 ஆம் மண்டபத்தை அடைந்தாள். ஓரத்தில் இருந்த மதில் சுவரில் அமர்ந்து மீண்டும் பாட்டியை கவனித்தாள். இந்த மண்டபம் வருவதற்குள் கிழவி விழுந்துவிடாமல் இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்தாள். கிழவியும் மெதுமெதுவாய் இறங்கி, 3 ஆவது மண்டபத்தை அடைந்து, இவளை நோக்கி நெருங்கி வந்தார். சரி அமர போகிறார் என நினைத்து, சற்று எழுந்து இடம் விட்டு அமர்ந்தாள் காமினி.
கிழவி அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தவுடன், பெருமாளே, "உன் வைரக்கம்மல் என்னமா ஜொலிக்கிறது, அந்த வெளிச்சத்திலேயே உன் முகத்தை பார்த்துட்டேன், என்ன தவம் செய்தேனோ?" என்று சொல்ல... அதிர்ச்சி அடைந்து டக்கென்று கிழே குதித்தாள் காமினி. பரந்தாமன் சொன்ன ஆள் இந்த கிழவி தானா? எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாக.. கையில் வைத்திருந்த கர்சீஃபை நழவவிட்டு, அதை எடுப்பதை போன்று குனிந்து வைரத்தை எடுக்க நினைத்த அதே நேரம் மலையின் வழியாக ஏறி வந்து காத்திருந்த சிவா உள்ளே குதித்து,”காமினி அந்த வைரங்களை என்கிட்ட கொடு" என்றான்
இதை எதிர்பார்க்காத கிழவி, இடுப்பில் இருந்த கத்தியை சிவாவை நோக்கி நீட்டி, காமினியின் காப்பாற்ற நினைக்க, மண்டபத்திலிருந்து விலகி பக்கவாட்டில் செல்லும் பாதையில் அமைந்திருந்த சின்ன கோயிலின் பின்புறம் மறைந்திருந்த இருவர், ஓடிவந்து சிவாவை தாக்க முற்பட, மின்னல் வேகத்தில், காமினியின் இரண்டு கைகளையும் வளைத்து பிடித்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
கிழவியும் மற்ற இருவரும், அதிர்ச்சி அடைந்து, பின்னடைந்து, செய்வதறியாது விழிக்கும் சமயம், காமினியை துப்பாக்கி முனையில், இழுத்துக்கொண்டே கீழே இறங்கினான் சிவா. வந்தவர்களும் கிழவியும் மலை பாதை வழியே இறங்கி மறைந்துவிட, காமினியை விடுவிக்கும் முன், அவள் காதோரத்தில் எதோ சொன்னான். சொல்லிமுடித்த வினாடி, சிவாவை எட்டி உதைத்துவிட்டு, வேகமாக இறங்கி ஓடி, வண்டியை ஸ்டார்ட் செய்து வந்த வழியே வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள் காமினி.
பின்னால் சிவா தொடர்கிறானா என்று கண்ணாடிவழியே பார்த்தாள். இல்லை. ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் நிறுத்தி, பரந்தாமனுக்கு ஃபோன் செய்தாள். நடந்த விபரங்களை கூறி, "உங்களை நேரே பார்த்து, வைரத்தை கொடுத்து விடுகிறேன். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறேன், உங்களுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன், நீங்கள் எத்தனை பேரை அனுப்பினீர்கள், ஒரு பாட்டியை தவிர இன்னும் ஒரு ஆளும் என்னை வைரம் கேட்டு பின் தொடர்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லை என்னை விட்டுவிடுங்கள்" என்று தழுத்தழுத்த குரலில் பேசினாள்.
மறுமுனையில் பரந்தாமன் சிறிது இடைவெளிவிட்டு, அவளை மெளன்ரோடில் இருக்கும் ஒரு ஹோட்டல் முகவரி கொடுத்து அங்கு வருமாறு சொன்னார். “ஆனால் எந்த சந்தேகமும் யாருக்கும் வராமல் வா, உன் அம்மாவை நினைவில் வை.. என் பெயர் சொல்லி யாரிடமும் விசாரிக்காதே, ஹோட்டல் வந்ததும், போன் செய், எப்படி என் அறைக்கு வர வேண்டும்” என்று சொல்கிறேன் என்றாள்.
போனை வைத்துவிட்டு, செல்லபோகும் அட்ரஸை டைப் செய்து, யாருக்கோ எஸ் எம் எஸ் அனுப்பினாள். அனுப்பியதை உடனுக்குடன் அழித்துவிட்டு, மீண்டும் வண்டியை விமானநிலையத்திற்கு விட்டாள். விமானநிலைய பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, செக்கியூரிட்டியிடம் தண்ணீர் வாங்கி முகம், கழுவிக்கொண்டு, வெளியில் வந்து, ஒரு ஆட்டோவை நிறுத்தி, ஹோட்டல் இருக்கும் ரோடின் பெயரை சொல்லி ஏறி அமர்ந்தாள்.
வண்டி சென்றுக்கொண்டு இருக்கும் போது, தலையை சீவி, ஹேன்ட் பேக்கில் வைத்திருந்த மேக்கப் கிட்டை எடுத்து, லேசாக பவுடர், காஜல் வைத்து, தன்னை ஃபிரஷ் ஆக்கிக்கொண்டு கண்ணை மூடி பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்.
சென்னை சிட்டியின் நடுவில் இருந்த அந்த பெரிய 5 ஸ்டார் ஹோட்டலுக்குள் செல்லும் முன் பரந்தாமனுக்கு ஃபோன் செய்தாள். “ரூம் நம்பர் 1027, யாரிடமும் கேட்காமல், நேராக உள்ளே வா, இரண்டு பெரிய கதவுகள் இருக்கும், திறந்து உள்ளே வா, சிறிது தூரம் நேராக நடந்துவா, ரிசப்ஷன் தாண்டியவுடன், இரண்டு மூன்று படிக்கட்டுகள் வரும், அதில் ஏறி வந்தவுடன், இடது பக்கம் லிஃப்ட், 9 ஆவது மாடிக்கு வா, வெளியில் வந்தவுடன், ஃப்ர்ஸ்ட் லெஃப்ட், ஃப்ர்ஸ்ட் ரைட் திரும்பு, அறை எண்களை கவனித்தபடி வா, லெஃப்ட் சைட் ல இருக்கு என் அறை” டொக் என்று ஃபோன் வைக்கப்பட்டது.
அவர் சொன்னபடி யாரிடமும் எதுவும் கேட்காமல், உள்ளே சென்று லிஃப்டில் ஏறி அறை எண்ணை மட்டும் திரும்பவும் எஸ் எம் எஸ் செய்துவிட்டு , அழித்தாள். 9 ஆவது மாடி, 1020 ல் ரூம் நம்பர் ஆரம்பித்தது, 1027 வந்தவுடன், கதவை தட்டினாள், நடத்தற வயதை கடந்த ஒருவர் கதவை திறந்து, அவளின் கையை உள்ளே பிடித்து இழுத்து, கதவை வேகமாக மூடினார்.
இவர் தான் பரந்தாமனா என்று யோசிக்கும் முன், அவர் பேச ஆரம்பித்தார், “சி மிஸ் காமினி, போலிஸ் கெடுபிடி சிட்டியில அதிகம் இருக்கு, மோப்பம் பிடிச்சிட்டிக்கிட்டே இருக்காங்கன்னு தான், உன்னை திருநீர்மலைக்கு சென்று ஒப்படைக்க சொன்னேன், உனக்கு ஆக்ஸிடன்ட் ஆகி இத்தனை பிரச்சனை வரும் னு எதிர்பார்க்கல, ஈவினிங் ப்ளைட் ல நான் கிளம்பி இருக்கனும், வைரம் கைக்கு கிடைக்காததால், ட்ரிப் ஐ எக்ஸ்டன்ட் செய்ய வேண்டியதாகிவிட்டது, சீக்கிரம் வைரங்களை கொடுத்துட்டு” கிளம்பு என்றார்.
அவள் குனிந்து பாவாடையில் ஒளித்து வைத்திருந்த வைரங்கள் அடங்கிய பேப்பர் சுருளை எடுத்து நீட்டினாள். பிரித்து எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என பார்த்தவரின் முகத்தில் சந்தோஷம் கவ்வ, “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"என்னது போலிஸா?” என்றாள்.
“ஆமா, மலையில் உன்னிடம் தனியாக வந்து மிரட்டி வைரம் கேட்டது போலிஸ் தான், என்னுடைய ஆள் இல்லை”என்றார்.
“ஓ...என்ன செய்யறது...என் அம்மா வின் உயிர் உங்க கையில் இல்ல இருக்கு, அவங்களுக்காக இதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்" சொல்லிவிட்டு கதவை நோக்கி வேகமாக நடந்தாள். கதவை அடையுமுன், கதவுதட்டப்படும் ஓசை கேட்க, "காமினி, ஹோல்ட்" பரந்தாமன் பேன்ட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தவாறு கதவை நெருங்கினார்.
துப்பாக்கியை முதுகுக்கு பின் வைத்து, இடது கையால், கதவின் லாக்கைதிறக்க, சிவா கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து, அதே வேகத்தில்அவரை சுவரோடு அழுத்தி, அவனுடைய பிஸ்டலை கழுத்தில் வைத்து, "சிவா, சி.ஐ.டி ஆஃப் போலிஸ், க்ரைம் ப்ரேன்ச்" என்றான்
அவர் அவனின் அழுத்ததில் இருந்து விடுபட போராட, காமினி மிகபொறுமையாக வந்து, அவரின் வலது கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, "சார்,!! " என்று சிவாவிடம் கொடுக்க, சிவா வெளியில் இருந்தபோலிஸ்காரர்களுக்கு செய்கை செய்து அதை வாங்கிக்கொள்ள செய்தான்.
இன்டர்நேஷனல் லெவலில் வைரங்களை சாமர்த்தியமாக சாமானியர்களை வைத்தே கடத்தி வந்த பரந்தாமனை வைரங்களோடு கைது செய்தான்.
*********
காமினி போலிஸ் துணையோடு வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். சரோஜா இவளின்தலையில் போடப்பட்ட பிளாஸ்திரியை பார்த்து பயந்து போய் பதட்டப்பட, ஒன்றும் இல்லை, தன் மேல்தான் தவறு, கவனக்குறைவாக முன்னால் சென்றவண்டியில் மோதி விழுந்து விட்டேன் என்று சமாளித்துவிட்டு, உடல் சோர்வுதாங்காமல் படுக்க சென்றாள்.
சிவாவிடமிருந்து எஸ் எம் எஸ் வந்தது. நாளை அலுவலகத்தில் வந்து அவனைசந்திக்க சொல்லி இருந்தான். வேலை முடிந்து வந்து பார்ப்பதாக பதில்அளித்துவிட்டு, அம்மாவை வரச்சொல்லி, அணைத்தபடி தூங்கி போனாள்காமினி.
அடுத்த நாள் மதியம், விமானநிலைத்திலேயே சாப்பிட்டுவிட்டு, சிவா வின்அலுவலகம் சென்றாள்.
காமினியை பார்த்ததும், அவளின் உடல் நலம் விசாரித்து, “ஆஸ்பித்திரியில்நேற்றே ஆள் அனுப்பி ஃபீஸ் பே பண்ணிட்டோம், அவ்வளவு பிரச்சனையிலும், அதை கூட ஞாபகமாக எஸ்.எம். எஸ் அனுப்பிட்டீங்களே.. குட்..ஐ லைக் இட்” என்று சிரித்தான்.
“தாங்க்ஸ் சார்”, என்று புன்னகைத்தாள்.
“காமினி நல்ல வேள உங்களை மாதிரி ஒரு தைரியமான பொண்னுக்கிட்ட வந்து பரந்தாமன் மாட்டினாரு, அம்மாவின் உயிரையும் பொருட்படுத்தாம எனக்கு தகவல், சொல்லி, ரொம்ப தைரியமா பிடிச்சிக்கொடுத்துட்டீங்க. எங்க டிபார்ட்மென்ட் ல இருந்து உங்களுக்கு சிறப்பு விருதுக்கு, ரெக்கமன்ட் செய்து இருக்கேன். உங்களை குறிப்பா வர சொன்னது அந்த வைரங்களை உங்கக்கிட்ட கொடுத்த பெண்ணை பற்றிய டிடெயல் தெரிஞ்சிக்கத்தான்”
" இட்ஸ் மை ப்ளெஷர் சார்..! அந்தபெண், இண்டர்நேஷனல் டெர்மினலிருந்து, இங்க வந்து, அந்தமான் ப்ளைட் பிடிக்க போனாங்க. அவங்க பெயர் ரேச்சல்."
அவள் முடிக்கும் முன், சிவா, ரேச்சல் பற்றிய விபரங்களை தொலைபேசியில், சந்துருவிற்கு சொல்லிவிட்டு," என்னுடைய டீம்மில் வந்து சேர்ந்துக்கறீங்களா காமினி “ என்றான்
3 - பார்வையிட்டவர்கள்:
good one.
I also tried the same
plz visit
http://madhavan73.blogspot.com/2010/10/blog-post_14.html
promissing story pa,
well some what good turns in the story but at few places, the reader could easily identify it.
but realy good one
@ மாதவன் - நன்றி படிக்கிறேன்..
@ அபி (பேரு சரியா?) - நன்றி படிக்கிறேன்..
@ வினு : நன்றி :))
Post a Comment