நம்மளுக்கு பிபி எகுறுகிற விஷயம் தெரிந்ததால், சரி ஆட்டோ பக்கமே போகக்கூடாதுன்னு 99%, ஆட்டோவை அழைக்காமல் பார்த்துக்கொண்டாலும், ஏதோ அவசரத்திற்கு வேறு வழியே இல்லை என்று அழைத்தால், பிரச்சனை ஆரம்பம் என்றே அர்த்தம்.
ஒருநாள் அப்படித்தான் 2 மணி நேரம் பஸ்'ஸிற்காக காத்திருந்து, வராமல், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் என்ற நிலை வந்த போது, வேளச்சேரி ஸ்டேஷன் சென்று, ரயிலில் சென்றுவிடலாம் என ஆட்டோவை அழைத்தேன்.
"ரயில்வே ஸ்டேஷன் போகனும்"
"..ம்ம் உட்காரும்மா..."
"எவ்வளோங்க?"
"50 ரூ குடும்மா"
"என்னாது 50ரூபாயாஆஆஆ?" (புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு ஏறுது பிபி)
(மனசாட்சி : கவி..டோர் க்ளோஸ்!! கூல்ல்.. ஒரு 50 ரூபாய்க்கு ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு, பிபி அதிகமாகி, மண்டைய போட்டுடாத. .உன்னைய நம்பி ஒரு புள்ள, ஒரு வூட்டுக்காரு இருக்காரு அதை எல்லாம் யோசிச்சி.. பொறுமையா நிதானமா நியாத்தை கேளு...)
"சரி நமக்கு இல்லாத பொறுமையை நிதானத்தை வரவைத்து.. "என்னங்க இது.. 50ரூ ன்னு சொல்றீங்க? இங்க இருந்து 30ரூ தான் அதுவும் நீங்க ஷார்ட் ரூட் ல தான் போவீங்கன்னு தெரியும்.. கொஞ்சம் நியாயம் தர்மமா கேளுங்க..."
"உட்காரும்மா... போயிட்டு சும்மாதானம்மா வரனும்.. அதான் 50ரூ. .சரி.. வேணும்னா 40 ரூ கொடு.. அவ்வளவு தான் குறைக்க முடியும்.."
ஏறி உள்ளே அமர்ந்து.. "ஆனா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லைங்க.. எப்படிங்க.. இப்படி எல்லாம் உங்களால ரேட் கேக்க முடியுது..? "
ஆட்டோ டிரைவர் வேகமாக கீழே இறங்குகிறார். "இந்தாம்மா இறங்கு நீ முதல்ல... என்ன காலங்காத்தல வந்து உக்காந்து மனசாட்சி அது இது ன்னு பேசற. .உன் சவாரியே எனக்கு வேணாம். .முதல்ல இறங்கு நீனு.."
ஆஹா இருக்கிற ஒரே ஆட்டோவையும் விட்டுட்டா என்ன செய்ய... ?! "ஏங்க இறங்கனும்.. அதான் 40ரூ தரேன் னு சொல்லித்தானே உக்காந்தேன்... 40 ரூ கொடுக்கறதுக்கு இது க்கூட பேசாட்டி எப்படிங்க..? நீங்க மட்டும் ரேட் டை உங்க இஷ்டத்துக்கு ஏத்துவீங்க...நாங்க எதுவுமே சொல்லக்கூடாதாங்க..?."
"யம்மா தாயே நீ 50 ரூ கொடுத்தாலும் உனக்கு ஆட்டோ வராது. .இறங்கு.."
"நான் இறங்க மாட்டேன்,....நீங்க கேக்கறதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு போகனும்னு எழுதி இருக்கா என்னா..? நானும் பேசினேன் நீங்களும் பேசினீங்க சரியா போச்சி ...சீக்கிரம் போங்க. .எனக்கு ட்ரையின்க்கு டைம் ஆச்சி..:
"காலங்காத்தல.. மாட்டுது பாரு நமக்குன்னு"
"ஹல்லோ நான் என்ன காலண்டரா மாட்டி வைக்க..?"
"ஆத்தா விட்ரு..நான் உன்கிட்ட பேசல, நீ என்கிட்ட பேசவேணாம்"
அத்தோடு இது முடிந்தது என்றாலும், எப்போது நான் ஆட்டோ பிடிக்க சென்றாலும் பிரச்சனைதான், சண்டை போடாமல் வருவதே இல்லை. எனக்கு தெரிந்தவரை, கேரளா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மகராஷ்டிரா மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் கண்ணியமாக நடந்துக்கொள்கிறார்கள், எத்தனை மீட்டர் காட்டுகிறதோ அதை தான் கேட்பார்கள். மீதம் இருந்தால் கொடுத்துவிடுவார்கள். மும்பையில் மீட்டர் கூட இல்லை, வெறும் 5 ரூ கொடுத்தால் போதும், 4 கிமி வரை சென்று விடலாம். இங்கு ஒரு கிமி சென்றாலே 30ரூ, அதிலிருந்து ஒரு 5 அடி தள்ளி போங்கன்னு சொன்னால் 35 ரூ ன்னு சொல்லி, நம்மை எரிச்சல் செய்வார்கள்.
ஒரு முறை குஜராத்தில் மீட்டருக்கு போக மிச்சம் 40 காசு இருந்தது... அந்த ஆட்டோ ஓட்டுனர் அதை எனக்கு கொடுக்க பாக்கெட்டில் தேட, நான் பரவாயில்லை விடுங்க என்று சொல்ல. .அவர்.. "ருக், பெஹன்ஜி, ஹம்கா தேஸ் மதராஸ் நையி ஹே.....சுட்டி லோ... " வென்று கையில் காசை கடுப்பாக திணித்துவிட்டு சென்றார்.
இதே கதை கேரளாவிலும் நடந்திருக்கிறது. அங்கே 25 பைசா.. (2004 ல்), இல்லையென்றால் பரவாயில்லை என்று சொல்ல,"உங்க காசு எங்களுக்கு எதுக்கு.. இது சென்னையில்லை.. அடுத்தவன் வயத்தில அடிச்சி பொழைக்க" ன்னு சொல்லிவிட்டு சென்றார்.
மற்ற மாநிலங்களில் கண்ணியமாக நேர்மையாக ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கும் போது, இங்கு மட்டும் இவர்கள் இப்படி அராஜகம் செய்து பிழைப்பதன் காரணம் என்ன? வேற என்ன "நாம் தான் காரணம்."
அங்கெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமலோ, அதிக பணம் வசூலித்தோ ஆட்டோ ஓட்டவிட முடியாது. பொதுமக்களே முதலில் விட மாட்டார்கள். அரசாங்கம் வந்து தலையிட்டு பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற நிலை இல்லை. சுயநலமாக அந்த நேரத்தில் நம் வேலை நடந்தால் போதும் என்று யாரும் நினைப்பதில்லை. பணம் இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஆட்டோ ஓட்டனர்களிடம் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்ளுகிறார்கள். இங்கே ஆட்டோ க்காரர் என்ன கேட்டாலும், ஏறி உட்கார்ந்துவிடும், அதிகம் சம்பாதிக்கும், மேல் தட்டு மக்களால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் ஐடி கார்ட் ஐ மாட்டியிருப்பதை பார்த்தே ஆட்டோஓட்டுனர்கள், அதிகமாக கேட்பது வழக்கமாகிவிட்டது. ஒரு முறை பணம் பார்த்து பழகியவர்கள் மற்ற சாமானியர்களிடமும் அப்படி எதிர்ப்பார்ப்பது சரியில்லை. இவர்களும் அலுவலக வேலை தொடங்கும் முன்/ முடிந்த பிறகும், ஏன் இந்த ஐடி கார்டை மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
நிற்க, இதற்கான ஒரு ஒழுங்கு முறையை செய்ய பொதுமக்களாகிய நாமே கடைப்பட்டு இருக்கிறோம்.
1. அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை, அந்த பகுதி மக்கள் சந்தித்து, நியாயமான ஒரு கட்டணத்தை வாங்கும்படி, பேசி முடிவு செய்து, அதை அமல்படுத்தலாம்.
3. வெகு தொலைவு செல்லவேண்டி வரும் போது மீட்டர் போட்டே ஆகவேண்டும் என்பதை வலியுறத்தவேண்டும். இல்லையென்றால் ஆட்டோவில் ஏறுவதை புறக்கணிக்க வேண்டும்.
4. கேஸ் ஆட்டோ புதிதாக வந்துள்ளது. இதற்கு அன்றாட செலவு குறைவாக உள்ளதால், கட்டணம் குறைவாக வசூலிக்க முடியும். எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. எல்லா பெட்ரோல் நிலையங்களும் இந்த வசதியை கொண்டு வருவதின் மூலம், பெட்ரோல் ஆட்டோக்கள் கேஸ்' ஆட்டோக்களாக மாற வாய்ப்பிருக்கிறது.
5. ஷேர் ஆட்டோ முறையை எல்லா இடங்களில் அனுமதிக்க ஆட்டோக்காரர்கள் ஒத்துழைக்க்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு முறை வீட்டிலிருந்து பஸ் நிறுத்தம் செல்ல 30-35 ரூ வசூலிக்கப்படுகிறது. இதுவே ஷேர் ஆட்டோவாக இருந்தால், குறைந்தது 5 ரூ- 10 ரூ க்குள் வேலை முடியும். 4-5 பேரை ஒரு சவாரிக்கு ஏற்றினால், ஆட்டோக்காரரும் நஷ்டம் என்று சொல்ல முடியாது. மேலும் குறைந்த கட்டணம் என்று தெரிந்தால், அதிகமானோர் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
6. டீசல் ஆட்டோவிலும் கட்டணம் குறைவாக வாங்கமுடியும், ஆனால் அதிக அளவில் டீசல் ஆட்டோக்கள் இல்லை. என்ஜின் சீக்கிரம் பழுதாகிவிடுகிறது, அதனால் டீசல் ஆட்டோ நஷ்டம் என்ற காரணம் சொல்லப்பட்டது. இதை ப்பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. தெரிந்துக்கொள்ள இன்னும் முயற்சிக்கவில்லை. டீசல் ஆட்டோக்கள் அதிகமாக சத்தம் வேறு போடும்.
மேற்கண்ட தகவல்களை எங்கள் குடியிருப்பு பகுதி சங்கத்தலைவரிடம் அவருக்கு பழக்கப்பட்டவர் மூலம் சொல்லியும் இருக்கிறேன். காத்திருந்து தான் என்ன பலன் கிடைக்கிறது என்பதை பார்க்கவேண்டும்.
பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருக்கும் ஒற்றுமை பொது மக்களாகிய நமக்கும் இருக்கவேண்டும். ஏன் இவ்வளவு கட்டணம் என்று ஆட்டோ ஓட்டனர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, நம்மை ஒதிக்கிவிட்டு, அதைவிட அதிகம் கொடுத்து அதே ஆட்டோவில் ஏறி அமர்ந்து நம்மை பணம் இல்லாத " பரதேசி " யை பார்ப்பது போன்று ஏளனப்பார்வை ஒன்றை நம்மீது வீசிவிட்டு செல்பவர்கள் இருக்கும் வரை என்னத்தான் செய்வது.. ?! :(
அணில் குட்டி அனிதா : நீங்க ஒரு ஆட்டோ வாங்கி, மெயின்டெயின் செய்து பாருங்க, அப்புறம் இப்படி ஒரு போஸ்ட் போடுவீங்களான்னு பாக்கலாம்... அம்மணி.....ஆட்டோ இல்லன்னா.. பஸ், பஸ் இல்லன்னா ட்ரையின், ட்ரையின் இல்லனா ஏரோப்ளேன்.. அதுவும் இல்லன்னா நடராஜா சர்வீஸ்.. ... நீங்க கடைசிவரை நடராஜா சர்வீஸ் தான்... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு அது தான் சரி.... :)))) லெஸ் டென்சன் மோர் நடை.. ஓக்கே.. !!
பீட்டர் தாத்ஸ் : “The best advertisement for us is people telling people. If organizers have a successful event and they tell their friends, co-workers, neighbors, etc. about this, then we are able to increase the use of the facility.”
*நன்றி : முத்துலட்சுமி ஹிந்தி வார்த்தைகள் சரிப்பார்த்துக்கொடுத்தார். :)
.
54 - பார்வையிட்டவர்கள்:
nalla yosanai
// நம்மை ஒதிக்கிவிட்டு, அதைவிட அதிகம் கொடுத்து அதே ஆட்டோவில் ஏறி அமர்ந்து நம்மை பணம் இல்லாத " பரதேசி " யை பார்ப்பது போன்று ஏளனப்பார்வை ஒன்றை நம்மீது வீசிவிட்டு செல்பவர்கள் இருக்கும் வரை என்னத்தான் செய்வது.. ?! :( // காசு இருக்கிறது என்று வாரியிறைக்கும் ஒரு கூட்டம். இன்னொருபுறம் வேறு வழியில்லாமல் அதிக கட்டணம் கொடுக்கும் இன்னொரு கூட்டம். நியாயமான கட்டணம் இல்லாவிட்டால் ஆட்டோவில் ஏறமாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருந்துவிட்டால் ஆட்டோ டிரைவர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.
:) இனி மாற்றுவது கஷ்டம் தான். வேளச்சேரி ரயில்வே ஸ்டேசன்ல இருந்து கொஞ்ச தூரம் போக நாங்களும் 50 ரூவா தான் கொடுத்தோம். உள்ளார ஏறி உட்கார்ந்து இதுக்கு 50 ஆஆஆஆ? நார்மலா 30 தானே?ன்னு கேட்டப்ப "இறங்கு கீழ வேற ஆட்டோ பார்த்துக்கோ"ன்னு நக்கலா சொல்றான். அவசரமா முக முக்கியமான நபரை பார்க்க செல்வதால் வேற வழியில்லாம கொடுத்தோம். ம்ம் :(
ஏங்க இப்படி . ஏன் இப்படி.. போற இடமெல்லாம் வம்பு இழுக்கிறீங்க..
ஆனாலும் அந்த் உரையாடல் படிச்சு செம சிரிப்புங்க..
ஆத்தாஆஆஅ உட்ரூ..:)ஆமா அப்பறம் க்டைசியில் அந்த ஆட்டோக்காரர் கொண்டுவிட்டாரா.. விட்டுருப்பார் .. :)
@ எல்.கே- நன்றி
@ ராபின் - ஆமாம் அதுக்கு தான் எப்ப நான் ஆட்டோ கூப்பிட்டாலும், ரேட் பேசாமல் ஏறுவதே இல்லை.
@ ஆதவன் : //"இறங்கு கீழ வேற ஆட்டோ பார்த்துக்கோ"ன்னு நக்கலா சொல்றான்//
இப்படியா சொன்னான்.. யார் அவன்? அதுவும் வேளச்சேரியில நான் இருக்கும் போது....???? உங்க அக்கா ஒருத்தங்க இருங்க. .அவங்க பேரை சொல்லி இருக்க வேண்டியது தானே. .உடனே பயந்து போயி காசே வேண்டாம் னு வீட்டுல கொண்டு போயி விட்டு இருப்பான் இல்ல? ம்ம்ம்???
@ முத்து
//ஏங்க இப்படி . ஏன் இப்படி.. போற இடமெல்லாம் வம்பு இழுக்கிறீங்க..//
பாத்தீங்களா? நியாயத்தை கேட்டா நீங்களும் எங்க வீட்டு க்காராங்க மாதிரியே ஏன் வம்பு இழுக்கறீங்க ன்னு சொல்றீங்க..? :))
நவீனும், என் வூட்டுக்காரரும் என் கைய பிடிச்சி இழுத்து, தயவு செய்து வம்பு இழுத்துடாத.. இந்த ஆட்டோவையும் விட்டுட்டா வேற கிடைக்காதுன்னு பல நேரம், கெஞ்சி, மிரட்டி..பேசாம இருக்க வச்சி இருக்காங்க.. :))))
//அப்பறம் க்டைசியில் அந்த ஆட்டோக்காரர் கொண்டுவிட்டாரா.. விட்டுருப்பார் .. :)//
ஹை..விடாம? நான் தான் ஆட்டோவை விட்டு கீழ இறங்கலையே.. சீட்ல செட் ஆயிட்டேனே..! கைய பிடிச்சா இழுக்க முடியும்..???
//மும்பையில் மீட்டர் கூட இல்லை, வெறும் 5 ரூ கொடுத்தால் போதும், 4 கிமி வரை சென்று விடலாம்//
அதே.. அதே. இங்கெல்லாம் சில இடங்களில் மட்டுமே மீட்டர் உண்டு. மற்றபடி எல்லா ரிக்ஷா நிறுத்தங்களிலும் ஷேரிங்தான். ஒருத்தருக்கு இவ்வளவுன்னு கணக்கு உண்டு.அது எவ்வளவு தூரமா இருந்தாலும் சரி. அதேசமயம், தனிப்பட்ட முறையில் போகணும்ன்னா 'டைரக்ட் ஜானா ஹை'ன்னா போதும். ஒவ்வொரு இடத்துக்கும் கரெக்டான கட்டணம் உண்டு. கூடுதலாவும் கேக்கமாட்டாங்க..
//ஒரு முறை குஜராத்தில் மீட்டருக்கு போக மிச்சம் 40 காசு இருந்தது... அந்த ஆட்டோ ஓட்டுனர் அதை எனக்கு கொடுக்க பாக்கெட்டில் தேட, நான் பரவாயில்லை விடுங்க என்று சொல்ல. .அவர்.. "ருக், பெஹன்ஜி, ஹம்கா தேஸ் மதராஸ் நையி ஹே.....சுட்டி லோ... " வென்று கையில் காசை கடுப்பாக திணித்துவிட்டு சென்றார்.//
அவன் என்ன சொன்னான்னு தெரியாம பெறுமையா இங்க போட்டு இருக்கீங்க...இந்த 40 பைசா டிப்ச நீயே வெச்சி மெட்ராஸுல ஒரு பங்களா கட்டு, நல்லா கொடுக்குதுங்க பாரு 40 பைசா டிப்ஸ்ஸுன்னு மானெங்கெட்டதனமா திட்டியிருக்கான் அதை போய் பப்ளிக்கா சொல்லிக்கிட்டு:)))
//இவர்களும் அலுவலக வேலை தொடங்கும் முன்/ முடிந்த பிறகும், ஏன் இந்த ஐடி கார்டை மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.//
அய்ய....... எதுக்கா? நான் ஐடி IT ஆளுன்னு ஊர் உலகத்துக்குக் காமிச்சுப் பொங்கச்சம் காமிக்கத்தான் அந்த ஐடி ID கார்டு..
கல்யாண மார்கெட்டுலே சீக்கிரம் விலை போகவும், பொண்ணுங்க கண்ணில் (!!! ?) மாட்டவும்தான் இதை எப்பவுமே மாட்டிக்கறாங்கன்னு எங்கியோ ( எல்லாம் இங்கே நம்ம தமிழ்மணத்தில்தான். வேறெங்கே போவேன்?)படிச்ச நினைவு.
பொங்கச்சம்= தற்பெருமை (மலையாளம்)
//ஏன் இந்த ஐடி கார்டை மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.//
கல்யாணம் முடிஞ்சதும் அப்புறமும் ஏன் தாலிய மாட்டிக்கிட்டு இருக்கிறார்களோ அதுபோலதான் இதுவும்! (ஏன்னா அவுங்க வேலைய கட்டிக்காட்டாங்க)
ஹி ஹி எப்பூடி நம்ம லாஜிக்:)))
@ அமைதிச்சாரல் - ம்ம் நன்றி
@ குசும்பரே..: :))))))) அது எப்படி எல்லாரும் ஒரு விஷயத்தை நல்லபடியா யோசிச்சா..நீங்கமட்டும் குறுக்கால யோசிக்கறீங்க... ???
இனியன் இருக்கான்..அவன் உங்களை பாத்துக்குவான் ங்ற ஒரே நம்பிக்கையில இப்ப போனாப்போகுதுன்னு விடறேன்.. :)), தப்பிச்சி போங்க..
6 பாயிண்ட் சொல்லியிருக்கீங்க 7 வது பாயிண்ட் நான் சொல்லுறேன்...இனிமே ஆட்டோ கட்டணதொடர்பான எல்லாம் பேச்சுவார்த்தைக்கும் கவிதா அவர்களை தமிழக அரசும், இந்திய அரசும் ஏன் உலகில் எங்கு எங்கு எல்லாம் ஆட்டோ ஓடுகிறதோ அந்த அந்த நாட்டு அரசுகளும் அழைக்கும் படி கேட்டுக்கிறோம்.
//ஷேர் ஆட்டோ முறையை எல்லா இடங்களில் அனுமதிக்க ஆட்டோக்காரர்கள் ஒத்துழைக்க்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு முறை வீட்டிலிருந்து பஸ் நிறுத்தம் செல்ல 30-35 ரூ வசூலிக்கப்படுகிறது. இதுவே ஷேர் ஆட்டோவாக இருந்தால், குறைந்தது 5 ரூ- 10 ரூ க்குள் வேலை முடியும். 4-5 பேரை ஒரு சவாரிக்கு ஏற்றினால், //
நீங்கள் ஷேர் ஆட்டோவில் ஏறிய பிறகு எப்படி மீதி 4 பேர் ஏற முடியும்? சீரியஸ் டவுட்?
//ஐயா... இந்த உடம்பை பிரச்சனையில்லாம வைத்துக்கொள்ள என்ன பாடுபடவேண்டி இருக்கு. வயசான காலத்தில் அக்காடான்னு ரெஸ்டு எடுக்காம, தியானம்,டப்பாங்குத்து டான்ஸ், நீச்சல் குளம்'ன்னு தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும்,//
முதல் வரியில் இருந்து கடைசி பத்தி கடைசி வரி வரை நகைச்சுவை குறையாமல் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!
:)))
@ துளசிஜி : ஹா ஹா ஹா..:))))) உங்க கமெண்டு படிச்சி எனக்கு சிரிப்பை அடக்க முடியல.. இதை படிச்சா நம்ம ஐடி மக்கள் எல்லாம் பொங்ஓ பொங்ஓ ன்னு பொங்கி பொங்கல் ஆகப்போறாங்க :)))))))))
@ குசும்பர் :
//ஹி ஹி எப்பூடி நம்ம லாஜிக்:)))//
ராசா முடியல...:))
//ஆட்டோ கட்டணதொடர்பான எல்லாம் பேச்சுவார்த்தைக்கும் கவிதா அவர்களை தமிழக அரசும், இந்திய அரசும் ஏன் உலகில் எங்கு எங்கு எல்லாம் ஆட்டோ ஓடுகிறதோ அந்த அந்த நாட்டு அரசுகளும் அழைக்கும் படி கேட்டுக்கிறோம்.//
நீங்க ரொம்பவே லேட், எங்க வீட்டுல இதுக்காக எப்பவோ பரிந்துரை செய்துட்டாங்க.. ஆட்டோக்கு மட்டும் இல்ல,
குண்டு குழி ரோட் பிரச்சனை
சினிமா டெரக்ஷன் பிரச்சனை
அட்வர்டைஸ்மென்ட் பிரச்சனை
ரோடு, சாக்கடை, குப்பைகள் பிரச்சனை
லேட்டா வர ட்ரையின், பஸ், ஏரோப்ளேன் பிரச்சனை
இப்படி இன்னும் இன்னும் நிறைய பிரச்சனைகளுக்காக என்னை என் புள்ள இந்தியாவிற்கே தலைவராக பரிந்துரை செய்து இருக்கான். ஹி ஹி :)))
நான் ஆட்டோ ட்ரைவர்கள் சில பேரிடம் பேசி ஒரு பதிவே போட்டிருக்கேன். இங்கே ஆட்டோ சார்ஜ் அதிகமாக இருக்க காரணம் பெட்ரோல் விலை, பெர்மிட், எக்ஸட்ரா எக்ஸட்ரா.
விளம்பரம்:)
http://vidhyascribbles.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF
ஊர்லே ஓடும் 90 % ஆட்டோக்கள் போலீஸ்காரர்களுடையதாம்.
'கப்பம்' கட்டவே காசு தேறலைன்னு இப்படி அடாவடி நடக்குதாம்.
நானும் சில பதிவுகள் அப்பப்பப் போட்டுருக்கேன்.
//நீங்கள் ஷேர் ஆட்டோவில் ஏறிய பிறகு எப்படி மீதி 4 பேர் ஏற முடியும்? சீரியஸ் டவுட்?//
குச்ம்பரே.. கஷ்டம்த்தான்.. :))) அதை எல்லாம் பாத்தா முடியுமா.. பணம் தானெ முக்கியம்.. :)
//முதல் வரியில் இருந்து கடைசி பத்தி கடைசி வரி வரை நகைச்சுவை குறையாமல் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!
:)))//
பிசாசே......மங்கியே....!! ஏன்ன்ன்ன்ன்ன் :))))))))))
//இங்கே ஆட்டோ சார்ஜ் அதிகமாக இருக்க காரணம் பெட்ரோல் விலை, பெர்மிட், எக்ஸட்ரா எக்ஸட்ரா.//
வித்யா அப்படியா? விபரம் தெரிஞ்சிக்கிட்டு வந்து தான் இதற்கு பதில் சொல்லனும்.. டில்லி, மும்பை நகரங்களில் இங்கை விட அதிகம் என்றே நினைக்கிறேன். உங்க விளம்பரத்தை பார்க்கிறேன் :)))))
@ துளசிஜி : ம்ம்ம்.. இதுவும் புது தகவல், வித்யா சொன்ன ரீசன் பாருங்க..
'ருக்இ பெஹன்ஜி, ஹம்கா தேஸ் மதராஸ் நையி ஹே.....சுட்டி லோ...
நில் சகோதரி என் நாடு சென்னை இல்லை. சில்லறை வாங்கிக்கோ
இப்படியா சொல்வாங்க! என்னென்ன திட்டினாரோ. பாவம். :(
சென்னையில் இந்த யோசனை எல்லாம் நடக்குமா? அரசே என்னென்னவோ செய்து பார்க்கிறார்களாமே?
//கழுத்தில் ஐடி கார்ட் ஐ மாட்டியிருப்பதை பார்த்தே ஆட்டோஓட்டுனர்கள், அதிகமாக கேட்பது வழக்கமாகிவிட்டது.//
எங்கே பின்னூட்டம் போடலாமுன்னு
படிச்சிகிட்டே வந்தேன்.ஐடி கார்டெல்லாம் இப்போதைய சமாச்சாரங்கள்.ஆட்டோ துவக்கம் முதல் இந்த நோய் தமிழகத்தைப் பிடித்திருக்குமோ என சந்தேகப்படுகிறேன்.
கல்லூரியில் படிக்கும் போது மாமாவின் ஆட்டோவை ஓட்டிய அனுபமுண்டு எனக்கு.முதலாவதாக வாடிக்கையாளரைத் தேடி ஆட்டோ ஓடும் போது ஏற்படும் பெட்ரோல் செலவை ஈடுகட்ட வரும் வாடிக்கையாளரிடம் காசை சுமத்துவது என்ற பழக்கத்தால் இந்த நோய் வந்திருக்கலாம்.இதன் எதிர்பலன் ஆட்டோவை நாடாமல் பஸ்ஸில் போகலாமே என கூட்டம் அங்கே சேர்வது என தொடக்கம்.
ஆட்டோவில் செல்வது மேல்குடி தகுதி என்ற கெட்ட பழக்கத்தாலும் இது தொற்றியிருக்கும்.இதன் காரணமாகவே மேல்குடிகிட்ட காசு இருக்கும் என மென்மிரட்டல்களாக ரேட்,மீட்டர் இருந்தாலும் மீட்டர் இயங்காமல் இருப்பது எப்படி என்ற திருட்டுத்தனம் போன்றவைகள் கிரியா ஊக்கிகள்.
ஏனைய மாநிலங்களுடன் பார்க்கும் போது தமிழர்கள் கஞ்சர்கள் என்ற மனோபாவத்தாலும் ஆட்டோ நோய் வந்திருக்குமோ:)
தமிழக ஆட்டோக்காரர்களுக்கு சார்பாக ஒன்று.
பிரசவத்துக்கு இலவசம் வாசகம் எந்த மாநிலத்தில்?
//ஊர்லே ஓடும் 90 % ஆட்டோக்கள் போலீஸ்காரர்களுடையதாம்.
'கப்பம்' கட்டவே காசு தேறலைன்னு இப்படி அடாவடி நடக்குதாம்.//
துளசி டீச்சர்!போலீஸ் ஆட்டோவெல்லாம் இப்ப மாமூல் வாங்கி சேர்த்ததாக இருக்கும்.ஆட்டோ துவங்கிய காலத்தில் போலிஸ்காரன் பாவம் அப்பாவி.
போலிஸ் என்றதும் முன்பு இந்தியா,பாகிஸ்தான்,எகிப்து,பங்களாதேஷ் என கார் இருப்பவர்கள் எல்லாம் சட்டவிரோதமாக வாடகை செய்து கொண்டிருந்தார்கள்.இதை ஒழிக்க வேண்டுமென்றே டாக்சிகளை அதிகப்படுத்தி தினம் 6 தினார் கட்டு.பெட்ரோலும் வண்டியும் உன்னோட பொறுப்பு என்று பெரும்பாலும் போலிஸ்காரர்கள் டாக்சிகளை கபளீகரம் செய்து விட்டார்கள்.
வயசான காலத்தில் அக்காடான்னு//
மம்மி ஐ லைக் யுவர் நேர்மை :)))
ஒருநாள் அப்படித்தான் 2 மணி நேரம் பஸ்'ஸிற்காக காத்திருந்து,// இந்த ஒரு நாள் அன்னைக்குதானே ??? :)
அவசரமா முக முக்கியமான நபரை பார்க்க செல்வதால் வேற வழியில்லாம கொடுத்தோம்.// ஆதவா அந்த முக்கிய நபர் ? தத்துமம்மியா? இதுக்கு நீ நடந்தே போயிருக்கலாம்
//பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருக்கும் ஒற்றுமை பொது மக்களாகிய நமக்கும் இருக்கவேண்டும்.//
ஆட்டோக்காரர்களிடம் சங்கம்,சங்கத்தலைவர்கள் இருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கும் சங்கங்கள் இருக்கிறது.ஆனால் பொது மக்களுக்கு எப்படி சங்கு ஊதுவது என்பதில் கவனம் செலுத்தும் சங்கத்தலைவர்கள் இருக்கிறார்கள்:)
குசும்பு,, உங்க எல்லா கமெண்டையும் கன்னாபின்னான்னு ரிப்பீட்டறேன்:)
சிபி அண்ணா எங்க போனீங்க, நம்ம தத்து மம்மி என்ன்னா பொறுப்பா ஒரு பதிவு போட்டிருக்காக ,, ஓடி வாங்க
பாவம் ஆட்டோ காரர்கள்
தங்களுக்கு எனது பரிந்துரை
பாட்சா படத்தில் வரும் ஆட்டோ காரன் பாட்டை கேட்கவும்
@ ராஜ நடராஜன் : பிரசவத்துக்கு இலவசம் னு எழுதி தான் இருக்காங்க நிஜமா அப்படி கூட்டிட்டு போறாங்களான்னு தெரியாது.. ஆட்டோவில் சென்னையில் எல்லாம் பிரசவ வலி எடுத்த பிறகு போனால்.. குழந்தை ஆஸ்பித்திரியில் பிறக்காது. :)
@ சுல்தான் : முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹே சுல்தான்ஜி அதான் பிரச்சனை.. :))
@ விஜி : ம்ம் ஆமாம்.. நீங்க மட்டும் நொய் நொய் ன்னு புடுங்காம இருந்தா நிறுத்தி நிதானமா பஸ் பிடிச்சி வந்து இருப்பேன்.. இவன் கிட்ட சண்டையே வந்து இருக்காது :))
@ மணிவண்ணன் : ம்ம்..சரிங்க கேட்டுட்டா போச்சி :))
@ விஜிக்கா - தாத்தா சிபிக்கு வயசாச்சி இல்ல கொஞ்சம் கத்தி கூப்பிடு.. உன்னையும் அவரை ஏன் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியில விடறாங்க?? ம்ம்ம்?? :)))))
//தத்துமம்மியா? இதுக்கு நீ நடந்தே போயிருக்கலாம்//
ஹே அது நானில்லை.. ஒரு வேளை முல்லை யா இருக்கும்..இல்லன்னா பாலா, விதூஷ், லக்கி லுக், கார்க்கி.. இப்படி யாராவது இருக்கும் எல்லாருமே அங்க இங்கன்னு தான் இருக்காங்க.. :)
என்னைய பாக்க வந்து இருந்தா ..ஆட்டோக்காரன் இப்படி எல்லாம் நடந்து இருப்பானா..? இதை வச்சே நீ புரிஞ்சிக்கிட்டு இருக்க வேணாமா? என்ன விஜிக்கா நீனு இப்படி இருக்க..? :)
அடுத்து யார கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட போறாங்களோ
உங்க லெவலுக்கெல்லாம் நீங்க ஆட்டோல போகலாமா?
மொதல்ல நீங்க சரியாகுங்க மேடம்.. அப்புறம் ஆட்டோக்காரங்கள்லாம் சரியாயிருவாங்க..!
Now in Pune also we face lot of problems with autos!
they always charge you more without meter saying that " they do not get return trip"
It is not true in general that only in chennai they are cheating.
சீரியசான மேட்டரை அழகா சொல்லியிருக்கீங்க..
ஒற்றுமையாக எல்லாரும் செயல்பட்டா கண்டிப்பா ஆட்டோக்காரங்க திருந்திடுவாங்கதான்..
உங்களுடைய பாயிண்ட்ல எனக்கு ஷேர் ஆட்டோல உடன்பாடு இல்ல..
அதுல நாலு பேரைமட்டும் ஏத்தமாட்டாங்க.. மொத்தமா துணிமூட்டை மாதிரி அடைச்சிடுவாங்க சில நேரங்கள்ல.. அனுபவம் இருக்கு.. :-))
இந்த ஆட்டோ டிரைவர்ஸ்கிட்ட ரொம்பவும் ஆர்கியூ பண்ணினா.. ஏதாவது மரியாதை குறைவா பேசிடுவாங்க.. அதனால கொஞ்சம் உஷாராதான் சண்டையும் போடனும்..
ஆகா நான் காலை முதல் இப்ப தான் நெட் பக்கம் வந்தேன்.
எனக்கு என்னவோ அணில் யோசனை சரியாவே படுது:-)) நீங்க ஒரு ஆட்டோ வாங்கி அதுலயே போலாம்! இது பெஸ்ட் ஐடியா தான்!
ஆனா உலக ஆட்டோகளிலேயே எங்க ஊர் ஆட்டோ தான் பெஸ்ட். ஏறி இறங்கினா 40 ரூபாய் வாங்காம விட மாட்டானுங்க படுபாவிங்க!
@ முருகா : ஆமா முருகா என் லெவலுக்கு நடை தான் ரைட்டு.. :))
எப்பவுமே ஊருக்கு உபதேசம் செய்துக்கிட்டு தான் பொழப்பு ஓடுது முருகா.. :))
@ நலமே விளையட்டும்: ம்ம்ம் புனா பற்றி தெரியல.. இருக்கலாம் ஆனா தமிழ்நாடு அளவு எங்கையும் இல்லைங்க..
@ பாபு: "பதிவுலகில் பாபு" ஓ இப்படி ஒரு உலகம் இருக்காங்க ..ச்ச்சச்சோ தெரியாமப்போச்சி.. அங்க கரவுண்டு எல்லாம் சீப்பாங்க.. கிடைச்சா 2 வாங்கலாம்னு தான்..:))))
ம்ம்ம்.. ஆமாங்க ஆட்டோக்காரங்க கிட்ட ஜாக்கறதையா த்தான் பேசனும்.. அசிங்கம்மா பேச ஆரம்பிச்சிடுவாங்க. .எப்பவும் நான் அந்த அளவுக்கு விட்டதில்லை.. :) நன்றிங்க..
//ஆனா உலக ஆட்டோகளிலேயே எங்க ஊர் ஆட்டோ தான் பெஸ்ட். ஏறி இறங்கினா 40 ரூபாய் வாங்காம விட மாட்டானுங்க படுபாவிங்க!//
அட... சும்மா இல்லாம நீங்க ஏன் ஏறி இறங்கறீங்க? அசின் விளம்பரம் பாக்கறீங்க தானே.. ஏறி இறங்கனா கசாஆஆஆ.. அப்படீன்னு கேளுங்க.. :)))
குஜராதில் பெரும்பாலும் ஓடுவது காஸ் ஆட்டோ தான் அதுமட்டுமில்லாமல் இங்கு அவர்கள் காவல் துறைக்கு பணம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை, ஆனால் தமிழ் நாட்டில் மிகவும் மோசமாகத்தான் உள்ளது ஆட்டோ கட்டணம்.
பின் குறிப்பு: என் பெயர் நவீன் குமார்.
அடுத்த தடவ ஆட்டோ காரர்கிட்ட என் blog படிச்சுட்டு உங்க ரேட் சொல்லுங்கன்னு கேளுங்க. இனி வாயவே தெறக்கமாட்டங்க. அப்புறம் நீங்க சொல்றது தான் ரேட். (இதுக்கு கோவிச்சுக்காதீங்க)
பல ஆட்டோ டிரைவர்ஸ் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகின்றனர். அவர்கள் கையில் மிஞ்சுவதும் கம்மி தான். ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு தடவ 200 ரூபாய் கேட்டார். ரொம்ப அநியாயமா இருந்தது. கடைசியில் ஓட்டும் போது அவர் கதையை சொல்லிக்கிட்டு வந்தார். 2 மகனை இன்ஜினியரிங் காலேஜ் படிக்க வைக்க இரவில் மட்டும் ஆட்டோ ஒட்டுவதாக சொன்னார். பேசாம 250 கொடுத்துவிட்டு இறங்கிவிட்டேன். உயிரோட பத்திரமா இறக்கி விட்டதுக்கும் சேர்த்து.
நட்சத்திர வாரம் களை கட்டுது. எனக்கும் திருவனந்தபுரத்தில் 20 பைசா சில்லறை வாங்கிய அனுபவம் இருக்கு.
ஆனால் இப்போதெல்லாம் நம்ம சென்னை ஆட்டோ ட்ரைவர்கள் பல டெக்னாலஜிகளை இந்தியா முழுவதும் அனுப்பிவிட்டார்கள் (மீட்டர் சூடு / அடாவடி உட்பட)
அதனால் அடுத்த முறை திருவனந்தபுரத்து ஆட்டோ ட்ரைவரிடம் கிடைக்கும் ஷாக்குக்காக காத்திருக்கிறேன்.
கல்கத்தாவிலும் ஆட்டோ மிகவும் பிடித்த ஒன்று. பேருந்தில் செல்வதை விட அங்கே ஆட்டோவில் சென்றுவிடலாம். :)
பல இடங்களை சுற்றி பார்த்து இருக்கிறீர்கள்.
நீதி, நியாயம் என போராடும் தைரிய பெண்மணியாகத்தான் இந்த பதிவு தங்களை காட்டுகிறது.
ஐம்பது ரூபாய் என கேட்கும் இடத்தில் அறுபது ரூபாய் தந்துவிட தோணும். உழைக்கும் மக்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தனை பெற்றுக் கொள்வது சிறப்பாக இருக்கும்.
ஒரு தடவை வழக்கம் போல துபாய் போக மாயவரத்தில் இருந்து இரவு பஸ் பிடிச்சு மீனம்பாக்கம் வந்தேன். காலை 4 மணி. என் கிட்ட லக்கேஜ் அதிகம் இருந்துச்சு. நிறைய புத்தகம். சுமை அதிகம். அதனால வாசல்ல இருந்த ஆட்டோவை கூப்பிட்டு உள்ளே வரை கொண்டு விட சொன்னேன். கவனிக்க நான் 100 ரூபாய் வரை கொடுக்க தயாராக இருந்தேன். ஆனா அவன் 250 கேட்டான். முடியாது என சொல்லிவிட்டு தூக்கி கிட்டு நடந்தேன். பின்னாலயே "நீ சுடுகாட்டுக்கு தான போற 250 கொடுத்தா குறைச்சு போயிடுவியா?" என கேட்டானுங்க. ஒருத்தன் லக்கேஜை தட்டிவிட்டான். பின்னர் ஒரு வழியா ஏர்போர்ட் உள்ள வந்து அங்க இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க போனேன். போலீஸ்கார் கேட்டாரு ஒரு கேள்வி" நீ பாட்டுக்கு புகார் கொடுத்துட்டு பிளைட் ஏறி போயிடுவ? நாங்க கேஸ் புக் பண்ணிட்டு கேசை முடிக்க முடியாம மூடவும் முடியாம மேலிடத்துல பாட்டு வாங்கனும், பேசாம நீ குடுக்க இருந்த 100 ரூவாய என்கிட்ட கொடு. நான் போய் அதட்டிட்டு வர்ரேன்"ன்னு சொன்னாரு. வேண்டாம் இது நான் உழைச்சு சம்பாதிச்சதுன்னு சொல்லி நடையை கட்டினேன். "நீ மட்டும் மாயவரம் பக்கம் வாடா உன்னை பிச்சுடுறேன் பிச்சு"ன்னு கக்கூல் உள்ளே போய் அந்த ஆட்டோகாரனை வேகமா திட்டிட்டு போயிட்டேன்!
நல்ல யோசனைகளுடன் நல்ல பதிவு...ஆனா என்ன காலையில இதை எல்லாம் ஞாபகம் வச்சிக்கிட்டு ஆட்டோவுல ஏற முடியாது ;))
50 ரூபாய் கேட்டதுக்கே இவ்வளவு ஆர்பாட்டமா????////
இங்கு என்னுடைய அனுபவத்தை படிச்சுட்டு சொல்லுங்க
எனக்கு bp எப்படி எறிருக்கும்னு?????????
http://nvnkmr.blogspot.com/2010/10/1000.html
அம்மையீர்!
நான் ஓராண்டுக்கு முன்னர் எழுதிய இவ்விடுகையைக் கனிவு கூர்ந்து படியுங்களேன்.
http://lathananthpakkam.blogspot.com/2009/12/blog-post.html
நானும் ஒரு விளம்பரம் போட்டுக்கறேன் கவிதா.
அஞ்சு வருசம் முன்பு ஒரு ஆட்டோ அனுபவம்.
நேரம் இருந்தால் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2006/05/blog-post_05.html
@ நவீன்குமார்: நன்றி :) என் மகன் பெயரும் நவீன் :))
@ சேது : யாருக்கு தான் கஷ்டம் இல்ல சொல்லுங்க. .கஷ்டப்படறாங்க என்பதற்காக நேர்மையாக இருக்கக்கூடாது, நியானமானதொரு கூலியை வாங்கக்கூடாது என்று சொல்லுகிறீர்களா? அப்படி எல்லாம் இல்லைங்க.. தகவலுக்கு நன்றி :))
@ ரவி : இங்கத்தான் மீட்டரே இல்லையே எங்க இருந்து சூடு..? ஆனா இருக்கும் இடங்களில் இவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் சரி :)) நன்றி
@ ராகிஜி: ஜீன்ஸ் போட்டுக்கறத்துக்கும், மாத நாட்களில் கோயிலுக்கு போறத்துக்கும் கொடித்தூக்குவதை விடவும், அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சில விஷயங்களுக்காக நியாயத்தை கேட்பது முக்கியம் என்று நினைக்கிறேன் அவ்வளவே. :)) நன்றி
@ அபிஅப்பா ://"நீ மட்டும் மாயவரம் பக்கம் வாடா உன்னை பிச்சுடுறேன் பிச்சு"ன்னு கக்கூல் உள்ளே போய் அந்த ஆட்டோகாரனை வேகமா திட்டிட்டு போயிட்டேன்!//
இதெல்லாம் நமக்கு தேவையா? பாத்து.. அவன் நீங்க எப்ப சென்னை வருவீங்கன்னு காத்திருந்து போட்டுடப்போறான் :))
@ கோப்ஸ் : எல்லாத்தியும் ஞாபகத்துல வச்சிக்க வேணாம், அக்காவை மட்டும் ஞாபகப்படித்திக்கிட்டா போதும் வீரம் தானா வந்துடும்.. (அப்புறம் அடிவாங்கி ஆஸ்பித்திரி போறது எல்லாம் அக்காக்கிட்ட இல்ல..)
@ நவீன் : படிக்கிறென்ங்க.. ஆனா 50 ரூ என்பது எனக்கு அதிகமான பணம் தான்.. வயிற்றை நிரப்ப 50 காசு இல்லாமல் இதே சென்னையில், நான் வீதியில் மயங்கி விழுந்த காலம் உண்டு.. :))
@ லதானந்த் : அப்பையீர், படிக்கிறேன், ஆனா படிப்பதற்கு எதற்கு கனிவு வேணும், கூர்ந்து படிக்கனும் னு மட்டும் தெரியல....
நன்றிங்க :)
@ துளிசிஜி : ம்ம்ம்.. ஓக்கேஸ். விளம்பரத்தை படிச்சிடறேன்.. :))) நன்றி
எல்லா ஊருலயும் ஆட்டோ டிரைவர் தான் ஆட்டோ ஒநேர். சென்னையில் போலீஸ்காரன், அரசியல்வாதி போன்றவன் ஆட்டோ ஒநேர்.
//*நன்றி : முத்துலட்சுமி ஹிந்தி வார்த்தைகள் சரிப்பார்த்துக்கொடுத்தார். :)
//
அதானே பார்த்தேன்.. இத்தினி நல்லா இந்தி பேச எங்க கத்துகிட்டீங்கன்னு ஒரே டவுட்டு!
@ கண்ணன் : நன்றி
@ பொன்ஸ் : அட.. ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கோம் நாங்க.. தீடீர்ன்னு வந்து கமெண்ட்டு எல்லாம் போட்டு கலக்கறீங்க.. :))
ஆமா எப்படி இருக்கீங்க? எங்க் இருக்கீங்க..?
என்னைக்கு எனக்கு ஹிந்தி தெரிஞ்சி இருக்கு..தெரிஞ்ச மாதிரி சீன் போடவே இந்த பாடு பட வேண்டி இருக்கு பொன்ஸ்.. :)))
Post a Comment