உன்
உள்ளங்கையில்
உலகமே
இருக்கிறது !!
உடன்
பூக்கள்
பலவும்
இருக்கிறது !!
பூக்களில்
முட்களும்
உண்டென்பதை
அறிவாயா?
உள்ளங்கைகளை
அழுத்தி
மூடிவிடாதே....
பூக்கள்
நசுங்கிவிடும்...
முட்களும்
குத்திவிடும்
மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...
பூக்கள்
நிறைந்த
உன்
உள்ளங்கைகள்
அழகு !!
ஓ நண்பனே.....நண்பனே...!!
Posted by : கவிதா | Kavitha
on 20:09
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
14 - பார்வையிட்டவர்கள்:
//உன்
உள்ளங்கையில்
உலகமே
இருக்கிறது !!
உடன்
பூக்கள்
பலவும்
இருக்கிறது !!///
எஸ் !
எஸ்!! :)
//உள்ளங்கைகளை
அழுத்தி
மூடிவிடாதே....
பூக்கள்
நசுங்கிவிடும்...
முட்களும்
குத்திவிடும்///
உண்மை!
//மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...//
ரைட்டு!
\\மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...\\
ம்ம்..ரைட்டு ;)
//பூக்கள்
நிறைந்த
உன்
உள்ளங்கைகள்
அழகு !!//
சரி! :)
எம்புட்டு நேரம்தான் கையை மூடாமலே பூவை வைச்சு பாக்கறதாம் !
சோறு திங்க போவணும் ஆத்தா வையும் பூவை வாங்கிக்கோங்க! :)))
// உடன்
பூக்கள்
பலவும்
இருக்கிறது !! //
ஏனுங் அம்முனி.... எல்லாமும் பிளாஸ்டிக் பூவா இருக்குது.... ???
.....
வாழ்க்கையை சிம்புளா சொல்லீர்கீங்கோ.... நெம்ப நல்லாருக்குதுங்.....!!!
வாழ்த்துக்கள்......!!!
நல்ல கவிதை :)
/*மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...*/
நல்ல வரிகள் :)
ஆயில்ஸ், Chocho - ரொம்ப ரைட்டா எழுதிட்டேனோ...ஓவர் ரைட்டு கொடுத்துட்டீங்க.. :))
//சோறு திங்க போவணும் ஆத்தா வையும் பூவை வாங்கிக்கோங்க! :)))//
ஆயில்ஸ், அப்பன்னா நேத்திக்கு ராத்திரியிலிருந்து சாப்பிடலையா? ஆத்தா பூவை எல்லாம் வாங்கி என்ன செய்ய.. அப்படி ஓரமா வச்சிட்டு போய் முதல்ல சாப்பிடுங்க.. :)
ஓ......
பூக்கள்
பட்டினி
கூட
போடுமோ?? !!!
:))))))
//ஏனுங் அம்முனி.... எல்லாமும் பிளாஸ்டிக் பூவா இருக்குது.... ???//
வாங்க லவ்'டெயில்'..:) உங்களுக்காகவே காலையில பூவை ஒரிஜினலா மாத்திட்டேன்.. :) இப்ப என்ன செய்வீங்க..?!!
சரி அது இருக்கட்டும்.. இந்த.. "அம்'முனி' ய நீங்க மாத்த மாட்டீங்களா... ஒரே கிலி யா கூப்பிடறீங்க..?!! :)
//வாழ்க்கையை சிம்புளா சொல்லீர்கீங்கோ.... நெம்ப நல்லாருக்குதுங்.....!!!//
நெம்ப நன்றிங்.....!!!
ஏங்... அந்த ங்' ஓட முடிச்சிக்கனுமாங்.....அதுக்கு மேல எழுத்து வரப்பிடாதாங்......?!!
:))
கனகு - நன்றி.. :)
நல்ல இருக்கிறது
@ திகழ்மிளிர் - நன்றி...
அழகாக கூறியுள்ளீர்கள்.
Post a Comment