நேற்றைய
மனநிலை
இன்று
இல்லை
இன்று
இருப்பது
நாளை
இருக்க
போவதுமில்லை
கண்விழிக்கும்
ஒவ்வொரு
விடியலிலும்-
புது
உலகம்
பார்க்கிறேன்..
புரிதல்
இல்லாத
உள்ளங்கள்
பார்க்கிறேன்.......
புண்படுத்தும்
மனிதர்கள்
பார்க்கிறேன்...
இது தான்
வழி
இது தான்
பயணம்
இது தான்
வாழ்க்கை
என்ற
எளிமை
சிந்தனையோடு
உள்ளத்தால்
இருக்க
முடிவதில்லை...
முடியாத
தருணங்களில்
முடிவு
சலனமற்ற
உடலும்
மனமும்..!!
சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..
.
ஒன்றுமில்லை.......
Posted by : கவிதா | Kavitha
on 07:20
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
14 - பார்வையிட்டவர்கள்:
so sad :-(
மீ த பர்ஸ்ட்டேய்ய்!:)
ஓ மை காட் சோக கவிதை :(
ஒன்றுமில்லை .
பிணத்தை இப்படியும் சொல்லலாம்
நேற்று - கனவு
நாளை - புனைவு
இன்று - நினைவு
என்ன ஆச்சு? ஏன் இந்த சோகம்?
//சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..//
இதை
”சலனமற்றதை
பிணம் என்றும்
சொல்லலாம்”ன்னு மாற்றிப் பாருங்களேன்.
தலைப்பு: பிணமென்று எதனைச் சொல்வீர் (சும்மா “வீடென்று எதனைச் சொல்வீர்”ன்னு மாலன் எழுதிய கவிதை எஃபெக்ட்ல வச்சிப் பார்த்தேன்)
ஒரு சந்தேகம்: கவிதைல ஏன் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை மட்டும்? ரூலர் ஸ்கேல்ல கவிதை எழுதுறிங்களா?
வேர் ஈஸ் த அணில்குட்டி? உங்க கவிதையைப் படிச்சு டரியல் ஆகிடுச்சா?
உணர்வுபூர்வமான கவிதை.
கடைசி வரிகளை தவிர அனைத்து வரிகளும் அருமை.பிணம் என்ற சொல் மிகவும் அமங்கலமாக இருக்கிறது
முடியாத
தருணங்களில்
சலனமற்ற
சருகாய்
உடலும்
மனமும்..!!
என எழுதி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.
ம்ஹூம்...என்ன எப்பாரு சோகம்!!? தத்துவம்...சேர்க்கை சரியில்லையோ! ;))))
//ம்ஹூம்...என்ன எப்பாரு சோகம்!!? தத்துவம்...சேர்க்கை சரியில்லையோ! ;))))//
ரிப்பீட்டேய்!
Something wrong!!
புனித்
அயில்ஸ்
ஜம்ஸ்
குறை ஒன்றும் இல்லை..
ராஜ்
துபாய் ராஜா
Choco
சிபி
ஷஃபி
அனைவருக்கும் நன்றி...ரொம்ப தாமதமாக உங்களுக்கு நன்றி சொல்வதற்கு மன்னிக்கனும்.. :(
நல்ல கவிதை என்பதை விட... உணர்ந்த, உணர்வுப்பூர்வமான கருத்துக்கள்.. மீண்டும் வெகுநாளைக்கு பிறகு எனக்கு பின்னூட்டம் எழுதலாம் என்ற சிந்தனையை கொடுத்தது உங்களின் இந்த படைப்பு..
ரசித்த வரிகள.. புரிதல் இல்லாத உள்ளங்கள் .. புண்படுத்தும் மனிதர்கள்... சில விஷயங்களை மனதிற்குள்ளேயே புதைத்தபடி வெளியே சொல்லாமல் எனக்கு நானே சிந்தித்து கொள்வதுண்டு.. அதை எழுத்து வடிவமாக நீங்கள் அளித்திருந்தது, இந்த கவிதையை சில நிமிடங்கள் நிதானித்து படிக்க வைத்தது. பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் சோக கவிதை, வார்த்தையில் இதை பயன்படுத்தியிருக்கலாம் என்று சொன்னார்களே, கவிதையில புதைந்து கிடக்கும் ஆழ்மனதின் வலியை, உலகத்தின் போலி முகமூடிகளை அடையாளம் கண்டு விட்ட, வாழத் தெரியாத அதற்கு பிடிக்காத ஒரு மனதின் வலியை பற்றி குறிப்பிட மறந்து போனார்கள்...
உள்ளத்தின் பரிமாணங்கள், பரிணாமங்கள் சொல்லிட முடியாதது.. முடியாத தருணங்களில் முடிவு சலனமற்ற மனமும் உடலும்... சூப்பர்ப்...
இராகி - பெரிய பின்னூட்டம்.. :) வியப்பளிக்கிறது. !! நன்றி...
உங்களின் புரிதலுக்கு நன்றி.. ஆனால் இரண்டும் ஒன்று என்ற மனநிலை எனக்கு இருப்பதால், மற்ற பின்னூட்டங்களை நான் எனக்கு சாதகமாகவோ/பாதகமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை..
Post a Comment