மனிதவளத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன் என்பதை விடவும் என்னுடைய தனிப்பட்ட ஆர்வமே முதல் காரணம். என் தனிப்பட்ட ஆர்வத்தால் மனிதவளத்தை என் வேலையாக தேர்ந்தெடுத்தேனே தவிர்த்து, மனிதவளத்தில் இருப்பதால், என்னுடைய ஆர்வம், பேச்சு, எழுத்து & நடவடிக்கை மாறிவிடவில்லை அல்லது மாற்றிக்கொள்ளவில்லை. மனிதவளத்தில் இருப்பதால் இப்படி இருக்கிறேன் என்பதைவிடவும், மனிதவளத்தில் ஆர்வமுள்ள ஒருவராக என்னை பார்க்கவே விரும்புகிறேன்.
மனிதர்களின் குணம் இரண்டு.
1. இயற்கை குணம்,
2. சுற்றுச்சூழுலை பொறுத்து/கவனித்து நம்மை பாசிட்டிவாகவோ, நெகடிவாகவோ மெருகேற்றிக்கொள்வது அல்லது உள்வாங்கி அதை நம் குணமாக மாற்றிக்கொள்வது.
இயற்கை குணம் என்பது மாறாது. அப்படி ஒன்று மனிதனுக்கு இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில், நம் ரத்தத்தில் ஊறி இருக்கும் ஒரு குணம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அது என்ன? நம் தாய் தந்தை, தாய்மாமன், அத்தை, சித்தப்பா போன்றவர்களை கூர்ந்து கவனித்தால், அவர்களை போன்று நிறைய விஷயங்கள் அவர்கள் சொல்லித்தராமாலேயே நாம் செய்வோம், நடப்போம். அது தவிர்த்து குடும்ப சூழ்நிலை, வளர்ப்பு முறையில் அந்த அடிப்படை குணங்கள் இன்னமும் மெருகேற்றப்பட்டு இருக்கும்.
அடிப்படை குணங்களில் முதலில் வருவது -
1. அறிவும் அது சம்பந்தப்பட்டவையும்
2. பண்பு, பழக்கவழக்கங்கள், பேச்சு
3. கோபம்
4. ஈகை
இதில் நாமாக நம்மை சுற்றியுள்ளவற்றை பார்த்து கவனித்து அதை நம்முடைய குணமாக மாற்றிக்கொண்டு - இது பலருக்கு தெரியாது.. அதாவது நாம் மற்றவரை பின்பற்றி சிலவிஷயங்களை செய்கிறோம் என்பது. தன்னைப்பற்றி சுயமாக ஆராய்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே இதை உணர்வார்கள்.
இதற்கு சிறந்த உதாரணம் கணவன் மனைவி. இவர்களின் தனிப்பட்ட அடிப்படை குணங்கள் மாறுவதில்லை..ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் அடிப்படையில் மாறவில்லை, சூழலை பொறுத்து தன் அடிப்படை குணத்தோடு கூடி, வேறு ஒன்றையும் மனைவி/கணவனுக்காக சேர்த்துக்கொள்கிறார்கள்.
இப்போது இருவருக்குமே அடிப்படை குணத்தோடு சேர்ந்து + கூடுதலாக ஒரு குணம் (இது நெகடிவாகவும் இருக்கலாம்) சேர்ந்துவிடுகிறது.
இன்னுமொரு உதாரணம். பொது இடங்களில் நாம் இருக்கும் போது குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணமோ பழக்கமோ இல்லாதது நம் இயற்கை குணம். ஆனால் அதே பொது இடத்தில் , ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போடுவதை பார்த்து அதை நாம் நமக்கு தேவையான ஒன்று என்று கருதி, அதை நம்முடைய பழக்கதில் ஒன்றாக எப்போதும் மாற்றிக்கொள்வது என்பது சுற்றுச்சூழலை பொறுத்து நாம் நம் குணத்தை மெருகேற்றிக்கொள்வது, கூடுதல் குணம்.
சரி, இந்த கூடுதல் குணம் நெகடிவ்/பாசிடிவ் ஆக இருப்பது யார் கையில்??? கண்டிப்பாக அது தனிப்பட்ட மனிதனை பொறுத்து தான் இருக்கிறது, நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து இது நமக்கு தேவை என்று சேர்த்துக்கொண்டு ஒருவன் தன்னை மென்மேலும் உயர்த்திக்கொண்டே போகலாம். அல்லது நெகடிவாக கொண்டு தாழ்த்திக்கொண்டும் போகலாம். நெகடிவ்/பாஸிடிவ் என்பதை முடிவு செய்வது யார்? அதுவும் அதே நபர் தான். இது தான் நமக்கு சரி என்று படுவது பலருக்கு தவறு என்று படும். :)
அதனால், அடிப்படை குணத்தை கூட நாம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் குணம் மாற்றிவிடும் வாய்ப்பும் இருக்கதான் செய்கிறது.. அதற்கு மிகுந்த முதிர்ச்சியும், ஞானமும் தேவை. ஆனால் ஒரு சாமான்ய மனிதனுக்கு சூழ்நிலை என்று வரும் போது எத்தனை தடுத்தாலும் உள்ளுக்குள் இருக்கும் அடிப்படை குணமே வெளியில் வரும்.
இதற்கு சிறந்த பழமொழி "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலை ஆட்டிக்கிட்டி தேவையை தின்ன வெளியில் தான் போகுமாம்" - இது தான் அடிப்படை குணம் என்பது. ஏன் அது நல்லவிதமாக வளர்க்கப்படும் போது? என்ற கேள்வி கண்டிப்பாக வரும், ஆனால் அந்த நாய்க்கான சூழ்நிலை, அதற்கு சரியாக அமையும் போது அதன் இயற்கை குணம் கண்டிப்பாக வெளிப்பட்டே தீரும். ஆனால் இப்படிப்பட்ட வெளிவரும் குணத்தையும் , குறிப்பாக அது நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் , அதை கட்டுப்படுத்தும் திறமையையும் கூடுதல் விஷயமாக நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சூழ்நிலை கைதியாக ஆகாமல் இருக்க வாழ்க்கையின் அனுபவமும், முதிர்ச்சியும் கண்டிப்பாக தேவை.
ஆக, இயற்கை குணத்துடன் , நாம் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்காகவும், நம்மை சார்ந்தவர்களுக்காகவும் (சொந்தங்கள், நண்பர்கள், நம்மை சுற்றியுள்ள அத்தனை மனிதர்களும்...) நம் தேவைகளுக்காகவும் ஓரளவிற்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பது சரியில்லை, நம்மின் குணத்தை அதிகப்படியாக வளர்த்துக்கொண்டே வருகிறோம். இது நிதர்சனமான உண்மை.
இதில் எது நம் இயற்கை குணம், எது நாம் சேர்த்துக்கொண்டது.. இனியும் நல்லவிதமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது எது என்பதை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, அதை நல்லவிதமாக சேர்த்தும், பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது.
மனிதர்களின் குணம் மாறுவதில்லை கூடுதலாக நாம் சேர்த்துக்கொண்டவை நம்மில் பல மாற்றைங்களை உண்டாக்குகின்றன.. அதனால் அடிப்படையில் நம் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நல்லமுறையில் கவனித்து அதை சேர்த்தும் செயற்படுத்தியும் நன்மை பெறுவோம்.
நாமே நம் கையில் ஒரு களிமண் தான் அதை எப்படி ஷேப் செய்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
அணில் குட்டி அனிதா :- ம்ம்......மக்கா உங்களுக்கு ஏதாச்சும் பிரியுதா எனக்கு ஒன்னியும் பிரியல. .அதுவும் அர்த்த ராத்திரியில பிசாசாட்டுமா உக்காந்துக்கிட்டு டைப்பறாங்க.......வெயில் காலம் போயிம் எனக்கு இன்னும் அம்மணிக்கிட்ட இருந்து விடுவுகாலம் வரலை.... நாந்தான் எழுதுனும் அடுத்தது....... விடியலை நோக்கி ன்னு... ................... முடியல..ooooopppssss !!
பீட்டர் தாத்ஸ் : “There will be little rubs and disappointments everywhere, and we are all apt to expect too much; but then, if one scheme of happiness fails, human nature turns to another; if the first calculation is wrong, we make a second better: we find comfort somewhere . . .”
மனிதர்களின் குணம் மாறுவதில்லை
Posted by : கவிதா | Kavitha
on 03:52
Labels:
கார்த்தி ஆபிஸ்,
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
34 - பார்வையிட்டவர்கள்:
ஏனுங் அம்(..)னி.... !! உங்குளுக்கு மனசாட்சியே இல்லையா.... ???
காலங்காத்தால இப்புடி கொடும பண்றீங்களே......? அதுவும் ஞாயிற்று கெழமையும் அதுவுமா......???
எத்தனை நாளா இந்தத் திட்டம்........?????
ஏன் இத்தன கொல வெறி ...?
படுசிட்டு வர்ரேன்.....!!!
mmmmmmmmmmmmmmmmmm ok i accept it.
//எத்தனை நாளா இந்தத் திட்டம்........?????
ஏன் இத்தன கொல வெறி ...?//
:))))))))
//படுசிட்டு வர்ரேன்.....!!!//
ஓ இன்னும் படிக்கலையா???........
மனிதர்களை பற்றி பிரிச்சி மேஞ்சி இருக்கிங்க
//mmmmmmmmmmmmmmmmmm ok i accept it.//
sam, நன்றி
@ jackiesekar - :) நன்றிங்க... :)
//நாமே நம் கையில் ஒரு களிமண் தான் அதை எப்படி ஷேப் செய்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.//
புரிந்தது!
//படுசிட்டு வர்ரேன்.....!!!//
படிக்காமலேயே இம்புட்டு அலம்பலா?
//படிக்காமலேயே இம்புட்டு அலம்பலா?//
ரிப்பீட்டே :-)
//ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள்.//
அப்படியெல்லாம் மாற்றிக்கொள்வார்களா என்ன??
//மனிதர்களின் குணம் மாறுவதில்லை கூடுதலாக நாம் சேர்த்துக்கொண்டவை நம்மில் பல மாற்றைங்களை உண்டாக்குகின்றன.. அதனால் அடிப்படையில் நம் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நல்லமுறையில் கவனித்து அதை சேர்த்தும் செயற்படுத்தியும் நன்மை பெறுவோம்.//
அடிப்படை குணங்களை அப்படியே விட்டுட்டு கூடுதலாக சேர்த்துக்கொண்டவைகளில் நல்லவையை அப்படியே வச்சிக்கிட்டு அல்லவையை தள்ளணும்ன்னு சொல்றிங்க. அப்படி தானே? பின்னூட்டமே கண்ணக் கட்டுதா ;-)?
//புரிந்தது!//
சிபி... நிஜமாவா? சரி நம்பறேன்..
எதிர்பதிவு கண்டிப்பா வராது ன்னு நம்பிக்கை இருக்கு. .கால் ல விழ வேண்டாம் இல்லையா? :))))
//அப்படியெல்லாம் மாற்றிக்கொள்வார்களா என்ன??//
ராஜ் சரியா முழுசா...படிங்க..
//ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் அடிப்படையில் மாறவில்லை, சூழலை பொறுத்து தன் அடிப்படை குணத்தோடு கூடி, வேறு ஒன்றையும் மனைவி/கணவனுக்காக சேர்த்துக்கொள்கிறார்கள்.
இப்போது இருவருக்குமே அடிப்படை குணத்தோடு சேர்ந்து + கூடுதலாக ஒரு குணம் (இது நெகடிவாகவும் இருக்கலாம்) சேர்ந்துவிடுகிறது.//
//எதிர்பதிவு கண்டிப்பா வராது ன்னு நம்பிக்கை இருக்கு. .கால் ல விழ வேண்டாம் இல்லையா? :))))//
ச்சே ச்சே இதுக்கெல்லாம் எதிர்ப்பதிவு போட மாட்டார். நீங்க எதாவது பன்றி பன்று சிங்கம் புலின்னு எழுதினா தான் எதிர்ப்பதிவு போடுவார். ஏன்னா அவர் ஒரு நடமாடும் ப்ளூக்ராஸ் ;-)
//அடிப்படை குணங்களை அப்படியே விட்டுட்டு கூடுதலாக சேர்த்துக்கொண்டவைகளில் நல்லவையை அப்படியே வச்சிக்கிட்டு அல்லவையை தள்ளணும்ன்னு சொல்றிங்க. அப்படி தானே? //
ம்ம்ம்ம்...இல்ல... அல்லவைகளை சேர்த்துக்கொள்ளவே வேண்டாம், ஒரு வேளை நம் அடிப்படை குணமே அல்லவையாக இருக்கும் போது, நல்லவைகளை கூடுதலாக சேர்த்து நமக்கு முன்னமே உள்ள அல்லவைகளை மறைக்கலாம்.. :))
//பின்னூட்டமே கண்ணக் கட்டுதா ;-)?//
நோ நோ... நான் போட்ட பின்னூட்டத்தை நீங்க படிச்ச பிறகு உங்க நிலமை என்ன ஆகுமோன்னு யோசிக்கிறேன்.... :)))))))))
i didn't like the post and it's contents .
vivek.j
Vivek.J -thanks :)
//நாமே நம் கையில் ஒரு களிமண் தான்//
இந்த மாதிரியெல்லாம் தற்புகழ்ச்சி கூடாதுங்க!!
நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க. பெரும்பாலும் நம்மளோட பழக்கவழக்கம் ஒரு INFECTIOUS சொல்லலாம், நம்ம சுற்றி இருக்கிரவங்கள பார்த்து சிலவற்றை நாம் செய்கிரோம் அல்லது தவிர்க்கிரோம். உதாரனத்திர்க்கு டிராபிக் ரூல்ஸ் மதிக்காதது, கண்ட இடத்தில்....., etc.
//ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள்//
அட!! சூப்பர் கற்பனை
ஷஃபி - :) நன்றி.....
நல்லாத்தேன் இருக்கு...! இப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க, இது கண்டிப்பா காத்தால 2 மணிக்கு வந்த ரோசனையாத்தான் இருக்கும் :D.
//இப்போது இருவருக்குமே அடிப்படை குணத்தோடு சேர்ந்து + கூடுதலாக ஒரு குணம் (இது நெகடிவாகவும் இருக்கலாம்) சேர்ந்துவிடுகிறது.//
அதாவது இப்படியும் இருக்கலாம்: கழுதையோட சேர்ந்த குதிரையும் கழுதையாகலாம் (அல்லது)குதிரையோட சேர்ந்த கழுதையும் குதிரையாகலாங்கிறீங்க - உண்மைதான் நிரையா நடக்குதுதான்.
விட்டுக் கொடுத்துப் போறேன்னு கழுதைகிட்ட குதிரை தன்கிட்ட இருக்கிற பாசிடிவான முயன்று பெற்ற நல்லியல்புகளை இழந்து நிக்கிற மாதிரி :-))))
தெகாஜி, ராத்திரியில் வந்த யோசனை எல்லாம் இல்லைங்க... MBA புத்தங்களில், ஒரு பாடத்தில் மனிதர்கள் பற்றிய விவரங்கள் சொல்லும் போது வரும் சில விஷயங்கள் இவை. நேற்று யோசித்து உடனே எழுதக்கூடிய எளிதான விஷயமாகவா உங்களுக்கு படுகிறது. ஐயா சாமி நான் இவற்றை படித்தது 2005 ஆம் வருடம், அவற்றை கவனித்து ஆராய்ந்து மனதில் தேக்கி வைத்து இப்போது தான் எழுத்தாக்கி இருக்கிறேன்..
:( அவ்வ்வ்வ்வ்வ்.. .ராத்திரியில் தூக்கம் வராமல் நெட் டில் "ஏதோ" செய்யாமல் ஒரு உருப்படியான வேலை செய்து இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கா? கிண்டல் செய்யறீங்க?!!
//அதாவது இப்படியும் இருக்கலாம்: கழுதையோட சேர்ந்த குதிரையும் கழுதையாகலாம் (அல்லது)குதிரையோட சேர்ந்த கழுதையும் குதிரையாகலாங்கிறீங்க - உண்மைதான் நிரையா நடக்குதுதான்.
விட்டுக் கொடுத்துப் போறேன்னு கழுதைகிட்ட குதிரை தன்கிட்ட இருக்கிற பாசிடிவான முயன்று பெற்ற நல்லியல்புகளை இழந்து நிக்கிற மாதிரி :-))))//
It is true !! :))
அதுசரி கழுதைய நீங்க மட்டமா சொல்றாப்ல இருக்கு. அது நன்றாக பொதி சுமக்கும்னு தெரியும் இல்ல ?!! :)))))
நானும் இது பற்றி சில சமயங்களில் யோசித்து இருக்கிறேன்... மிக நல்ல பதிவு :)
கனகு... - ம்ம்...நன்றி, :)
:-) அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுகிறேன் அக்கா!!
It appears you are seeing people as adults only and conclude. You are correct in your observations as your views are already there in many theses.
If we see children, it is possible that they get their basic nature - which you talk of here - coloured indelibly and into their adulthood too, by the milieu in which they grow up.
As for e.g., if a child is brought up in a milieu where settling all disputes using violence is the norm and people accept it as one of their morals in life, or social philosophy of their lives to live with, the child wont think twice before following the same style of life in adulthood.
What happened to its basis nature, say, its calm temperament, for e.g.? That will be customized, or used unconsciously to contribute its 'received culture' of violence.
Thus, you see, basic nature is coalesced without any trace of its retrieval into the received culture.
I have cited a negative nature of violence. Positive traits are also available in life.
@ புனித் - நன்றி :) படிங்கப்பா...
@ கொற்கை - முதல் முறையாக வந்து இருக்கீங்க... நன்றி
//it appears you are seeing people as adults only and conclude. You are correct in your observations as your views are already there in many theses.
//
Thanks.. :) I did take the basic concepts from my MBA subjects.
//If we see children, it is possible that they get their basic nature - which you talk of here - coloured indelibly and into their adulthood too, by the milieu in which they grow up.
As for e.g., if a child is brought up in a milieu where settling all disputes using violence is the norm and people accept it as one of their morals in life, or social philosophy of their lives to live with, the child wont think twice before following the same style of life in adulthood.
What happened to its basis nature, say, its calm temperament, for e.g.? That will be customized, or used unconsciously to contribute its 'received culture' of violence.//
Na, I dont think so, I do take reference of the book "You can win" of Shiv Khera;s and also my own life experience. My childhood was very touch where I motivated myself very positively.
I could refer the story from the same book of two brothers. One was a drug addict and a drunk who frequently beat up his family. The other one was a very successful businessman who was respected in society and had a wonderful family. some people wanted to find out why two brothers fromthe same parents, brought up in the same environment, could be so different.
The first one was asked "how come you do what you do? you are a drug addict, a drunk, and you beat your family? what motivates you? The reply was- "My father was a drug addict, a drunk and he beat his family, what do you expect me to to be? that is what I am?"
They went to the brother and asked the same. he replied "My father, when I was a little boy, I used to see my dad drunk and doing all the wrong things. I made up my mind that that is not what I wanted to be"
Both were deriving their strength and motivation from the same source, but one was using it positively and the other negatively.
//Thus, you see, basic nature is coalesced without any trace of its retrieval into the received culture.
I have cited a negative nature of violence. Positive traits are also available in life.//
mm yes!! available, that is what I meant how we choose our additional quality/ies to be..... whether it is negative or positive.. but this too depends on the persons' perception. If he/she adopts negative's also as positive's we are helpless.
I read the story of two brothers. A staple diet of Bollywood movies, sometimes, Tamil movies, too. Sinnanjchiru Ulagam starred by Nagesh. But in the film, no two brothers, but one man, 'acting' duel roles: a kind of split personality.
He had two uncles: one righteous and the other malevolent. The first one dies at the lap of the nephew, Nagesh. He death was avoidable, but caused deliberately by some people who exploited his righteousness. The uncle (Major Sundarajan) extracts a promise from the nephew Nagesh:
"Dear nephew, don't live like me. Righteousness will be exploited and you will die prematurely like me, in misery and sorrow"
Nagesh agreed.
The other malevolent uncle (Ramdaas) also dies but out of a gunshot from the police who chased him. His nephew comes across him bleeding and breathing his last. The uncle dies on the lap of the nephew: but, he, too, extracts a promise from him:
"Dear Nephew, don't live like me. You will die like me, prematurely in disgrace and shame. None will remember you in kindness"
Nagesh agreed
How he fulfills the promises given to his two different uncles - promises which are diametrically at variance with each other - constitutes the theme of the story.
Of course, it does not have direct relevance to your point. But it tells us one thing:
Whatever our basic nature, the outside stimuli play a part we cant run away from. Our basis nature almost goes kaput.
I can write more, but that will lead to endless debate I dislike.
Such a subject as we discuss right now, is not be searched only in the archives of MBA subjects. The MBA subjects rely or use cleverly the evidences offered by the Subject of Human Psychology proper to which, therefore, it would be appropriate for us to go. The MBA subject is not a subject proper; but made up of plethora of other subjects, mostly humanities. The proper study of man is man.
The MBA subjects are just like stimulants towards the main subject of Psychology in the context of your blog subject at least. I hope you will travel in that realms of gold.
I have gone through your old and new blog posts and I have enjoy reading them on a bewildering variety of subjects; I stand amazed at your versatility and intellectual stamina.
No shortage of opinion, like German Greer. I am jealous of Ms Greer and you!
Thank you.
@கொற்கை - :)
Thanks for your explanation and feedback. I basically take only positives, hence I did start telling of that story. My belief is - We can be whatever We want to be. It is IN us. When I write about the subject, I cant see it from my view point, instead I did analyze it. Having interest on the subject & my profession together helped me to do so.
/I have gone through your old and new blog posts and I have enjoy reading them on a bewildering variety of subjects; I stand amazed at your versatility and intellectual stamina.//
Thanks :) … It is an encouragement ... I did get comment like this..still I inspired by this ! Thanks again..
let me not much excited on this … is not good for me.. !
//No shortage of opinion, like German Greer. I am jealous of Ms Greer and you!//
Ho come on!! Don’t make me crazy yaar.. !!
Like to know who is @கொற்கை ?!!
கவுண்டர் : அய்யொ ராமா.. இந்த அஃபீஸ்ல தான் இந்த ஹெச் ஆர் தொல்லன்னா இங்கேயுமா?
அணில் குட்டி ஹை அணில் குட்டி நானும் உன்ன மாதிரி தாம்மா..
குறை ஒன்று இல்லை - தயவு செய்து பெயரை கொஞ்சமாக சின்னதாக வைத்துக்கொள்ளுங்கள் பெரிய புண்ணியமாக போகும்..
கவிதா தொல்லை இல்லாத/ தராத ஹெச். ஆர் ங்க... சோ.. நோ ஓரீஸ்..!! :)))))
Post a Comment