இந்த தொடர்பதிவுகள் விடாது போலவே.... எத்தனை முறையோ நம்மை பற்றி நாமே சொல்லி க்கொண்டே வந்தாலும் புதுப்புது கேள்விகளுடன் திரும்ப திரும்ப வருகிறார்கள்.. ... இப்படி தொடர்பதிவுக்கு" என்னை பற்றி சொல்லவும் முடியாமல் விடவும் முடியாமல்..." கூப்பிட்டு விட்டவர் டார்லிங் முல்ஸ் , அவருக்கு எனது நன்றி.. :)

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

கவிதா - இது எனது இயற்பெயர் இல்லை, என் அம்மா வைத்த செல்ல பெயர், காரணம் தெரியவில்லை.... ரொம்பவும் பிடிக்கும்.. .இது தவிர்த்து எனக்கு இன்னமும் நிறைய........................செல்ல பெயர்கள் உண்டு -

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

.....................

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்பவும் பிடிக்கும்! அப்பாவை பார்த்து அவரை போல எழுத பழகியது..அதனால் பிடிக்கும், சுற்றியுள்ள அனைவருமே கையெழுத்து அழகு என்று சொல்லுவதாலும் பிடிக்கும்..

4. பிடித்த மதிய உணவு என்ன?


ஏதாவது ஒரு கீரை எப்பவும் என்னோட சாய்ஸ், கீரையின் எந்த வகை டிஷ்னாலும் அதுனுடன் வாழைக்காய் வறுவல் ரொம்பவும் பிடிக்கும்,

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம்ம்ம்ம்ம்ம்ம்... நிச்சயமாக...வைத்துக்கொள்வேன்..

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி பிடிக்கும்.. ஆட்கள் இல்லாத தனிமை கிடைத்தால் குளிக்க விருப்பம்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் , உடல் மொழி, பேச்சு....

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


பிடிச்ச விஷயம் : வேகம், கோபம்

பிடிக்காத விஷயம் : வேகம்..பிடிவாதம், அழுகை, எளிதில் எல்லோரையும் நம்பிவிடுவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : உழைப்பு, படிப்பு, என்னை போன்ற ஒரு பெண்ணை சமாளித்து வாழ்க்கை நடத்துவது.

பிடிக்காத விஷயம் : அப்படி ஒன்றும் இல்லை...

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ஆயா

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(....இந்த கேள்வி அவசியமா? ..போங்கப்பா......)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் குழந்தை பார்த்துக்கொண்டிருக்கும் கார்டூன், என் நண்பன் ஆன்லைனில் இருப்பதை...

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சை... (எனக்கு (என்னை இல்லை) பிடித்தவர்களின் கையில் இருக்க வேண்டி இருந்தால் மட்டுமே...மாறுவேன்...)

14. பிடித்த மணம்?

என்னுடைய Deodorant "Creation Lamis -black white "
நித்தியமல்லி, குண்டு மல்லி, சாதிமல்லி

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபிநாத் - இணையத்தில் இன்னுமொரு செல்லம்...

கோம்ஸ் - நிலாகுட்டியின் அம்மா, நல்ல தோழி... அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம்

புனித் : தாங்க முடியலங்க இவங்க அழுவாச்சி கவிதைகள், அதனால் இப்படி ஒரு பதிவெழுத அழைக்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?".... முல்ஸ் இந்த பதிவை எழுதிய விதம் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. . I dont get along with this post subject mmmmm....Yes !! I have got different opinion/mindset/idea on this.. but still.. it rocks .. !! Hats off Mulz..!! hugs and kisses da!

செம செம செம போஸ்ட் da !!!

17. பிடித்த விளையாட்டு?


நிறைய இருக்கு ... - செஸ் , ஆடு புலி ஆட்டம், இறகுபந்து, பல்லாங்குழி

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை ,க்ரைம், ஹாரார், திரிலர், யோசிக்க வைக்ககூடிய, தாக்கம் ஏற்படுத்தக் கூடிய படங்கள்

20. கடைசியாகப் பார்த்த படம்?

மணிசித்ரதாழு - (மலையாளம்) டிவியில் பார்த்தது

21. பிடித்த பருவ காலம் எது?

மழை, பனி , குளிர் காலம் ரொம்பவும் பிடிக்கும்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் - ஐந்தாம் பாகம், ஞானம் பிறந்த கதை, எப்பவும் படிப்பது விக்கரமாதித்தன் கதைகள் :)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ம்ம்... அடிக்கடி இல்லை.. எப்போதாவது மாற்றினாலும் அது என் குழந்தை..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் :மெளனம், அடுத்து என் குழந்தையின் சிரிப்பு

பிடிக்காத சத்தம் : தூங்கும் போது என் தூக்கத்தை கெடுக்கும் எந்த சத்தமாக இருந்தாலும். எப்போதும் அமைதியான தொந்தரவு இல்லாத தூக்கத்தை விரும்புவேன். கிடைக்காத பட்சத்தில் தூக்கம் இருக்காது.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டார்ஜிலிங், சிம்லா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

..................

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய் சொல்லி ஏமாற்றுதல் , இன்னும் நிறைய இருக்கு... :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வெகுளித்தனமான அன்பு, எல்லோரையும் எனக்கு சொந்தம் என்று நினைத்துக்கொள்வது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

ம்ம்ம்ம்ம்ம்ம்..... அமைதியான என் உடம்புக்கும் மனதுக்கும் கஷ்டமில்லாத மரணம் வேண்டும் என்ற ஆசை ஏனோ சிறுவயது முதல் உண்டு.......

என் கண்களை கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும்...

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

என் இழப்பு (அ) இறப்பு :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

சுயநலமில்லாதவர்களுக்கு போராட்டம்....

---------------------------------------------------------------------------------------------

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சாஆஆ? கொஞ்ச நாள் ரெஸ்ட் ல இருந்தேன்.. .இதுக்கேல்லாம் காரணமான இரண்டு பேரை கவி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவங்க சமைச்ச சாப்பாட்டை சாப்பிட வச்சி பழிய நான் தீத்துக்க்ல என் பேரூ அணிலு அனிதா இல்ல..... சொல்லிட்டேன்.. !!!!

பீட்டர் தாத்ஸ் :- Seeing, hearing, feeling, are miracles, and each part and tag of me is a miracle??????