கனவுகள்


தூங்கி எழுந்தவுடன் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. நினைவில் இருப்பவையும் கோர்வையாக இருப்பதில்லை. பல நேரங்களில் நண்பர்கள், உறவுகள் கனவில் வருவதுண்டு. சில நண்பர்களிடம் அவர்கள் கனவில் வரும் போது, நினைவு வைத்து சொல்வதுண்டு.

சமீபத்தில் கனவில் ஒரு நண்பர் வர, அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். கனவில் அவர் ஒரு பெண் டாக்டரிடம் ஜொள்ளுவிடுவதில் பொறுமை இழுந்து, நான் வெளியில் வந்து காத்திருக்க, அவருடைய கார் ஒரு சாய்வான ரோடில் தானாக நகர ஆரம்பிக்க, எனக்கு காரை நிறுத்தத்தெரியாமல், காரை நிறுத்தவேண்டி, உதவிக்கு ரோடில் இருந்தவர்களை "கத்தி கத்தி" அழைக்க என, என் கனவு சென்றதை நண்பரிடம் சொல்லி, எனக்கு கார் ஓட்டத்தெரியாது, அதனால் கனவில் காரை நிறுத்தத்தெரியலன்னு சொன்னேன். அதற்கு அவர், காரை பார்க்கிங் செய்ய, கையால் பிரேக் போடும் வசதி இருக்கு, இனிமே கனவு வரும் போது, அதை ஞாபகம் வச்சி காருக்கு ப்ரேக் போடுங்கன்னு சொன்னார்.  (நம்ம ஃப்ரண்ட் ஆச்சே, வேறு எப்படி இருப்பாங்க?) ஆனால் அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து, அதே கனவு திரும்பவும் தொடர, ஒருவழியாக, அந்த டாக்டர் பெண்ணிடம், ஜொள்ளுவிடுவதை நண்பர் நிறுத்திவிட்டு வந்துவிட்டதையும் அவரிடம் சொல்ல,  அந்த டாக்டர் பொண்ணு எப்படி இருந்தாங்க" கேட்டாரு. ரொம்ப ஞாபகப்படுத்தி, "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவிற்கு ஊசிப்போடும் டாக்டர் போல இருந்தார்" என சொல்லியது தான், "அட நதியா இருக்கும் போது எதுக்கு அந்த டாக்டர், நதியாவே போதும்னு" சொல்லிவிட்டு சென்றார்.

ஆக, கனவுகளும் விட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன. சில கனவுகள் நல்ல திரைகதையோடு, எதிர்பார்க்காத டிவிஸ்ட்களோடு தொடர்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் வரும் கனவுகள் தவிர்த்து, பொதுவான கனவுகள் எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் சரியாக நினைவில் இருக்காது. நேற்றிரவு வந்த ஒரு நீண்ட கனவு. இப்படியும் கனவு வருமா என்று யோசிக்க வைத்தக்கனவு. எப்படியும் இதை எழுதி வைத்தே ஆகவேண்டுமென, ரொம்பவும் முயற்சி செய்து நினைவுப்படுத்தி..............

இது ஆங்கிலெயர்கள் நம்மை ஆண்ட காலத்திற்கு என்னைக்கொண்டு சென்று, அங்கு நடந்த ஏதோ ஒரு நிகழ்வு.

என்னையும் சேர்த்து இன்னும் இருவரை ஆங்கிலேய கும்பல் ஒன்று பெரிய நீண்ட
துப்பாக்கிகளோடு, பூட்ஸ் சத்தங்களோடு துரத்தி வருகிறது. ஆளொக்கொரு திசையாக தலைத்தெறிக்க ஓடுகிறோம். அது ஒரு கிராமும் நகரமும் கலந்த  இடம்போல இருந்தது, துணிகள் நிறைய காயவைத்து இருக்கிறார்கள்,  செம்மண் ரோடுகள், ஓடும் போது செம்மண் புழுதி பறக்கிறது, துணிகளுக்கு நடுவில் நுழைந்து, துணிகள் தலையில் அடிக்க ஓடுகிறேன்.  என்னுடன் ஓடி வந்த இரண்டு ஆண்கள், நடுவில் எந்த பக்கம் போய் தொலைந்தார்கள் என எனக்கு த்தெரியவில்லை.

நான் நகரத்தில் உள்ள சில வீடுகளில் நுழைந்து மறைந்து ஒளிந்து கடக்கிறேன். சாலையாக இருந்தால் ஓடுகிறேன், வீடுகளாக இருந்தால் மெது மெதுவாக என்னைப்பின் தொடர்பவர்களை கவனித்தவாறு நகர்கிறேன்.  அப்படி நுழையும் வீடுகளில் விதம் விதமான மனிதர்களை பார்க்கிறேன். அவர்கள் அநேகமாக ஆங்கிலோ இந்தியர்கள், அவர்களின் உடைகள் அப்படிதான் இருந்தன. பஃப் கை வைத்த முழு ஃப்ராக் அணிந்த பெண்கள், கைகளிலும் கால்களிலும் வெள்ளை களுவுஸ் அணிந்திருக்கிறார்கள். ஃப்ராக்கின் கை கால்களில் முடிவில் ஃப்ரில்கள் இருக்கின்றன. ஃப்ரில்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளன. ஆடைகள் நீல வண்ணம், பச்சை வண்ணம் கலந்த நிறத்தில் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டில் நுழையும் போது மிகவும் குண்டான, 5.6" இருக்கக்கூடிய உயரமான ஒரு பெண், மேற்சொன்ன ஆடையோடு இருக்கிறார். நான் ஓடி ஒளியும் போது, "என்னை சிலர் துரத்தி வருகிறார்கள், நான் இருப்பதை சொல்லவேண்டாம்" என்கிறேன். அந்த பெண்ணும், துரத்தி வந்தவர்களிடம் "அப்படி யாரும் இந்தப்பக்கம் வரவில்லை" என பதில் சொல்கிறார். அவர்கள் சென்றவுடன், "இந்தப்பக்கம் ஒரு  சின்ன சந்து இருக்கிறது, அதன் வழியாக என் கணவர் சென்றுக்கொண்டு இருக்கிறார், அவர் பின்னால் போனால் நீங்கள் தப்பித்து விடலாம் " என்கிறார். அவர் கணவர் என்று சொன்ன நேரத்தில், அவர் எப்படி இருப்பார் என்ற கற்பனையோடு, அவர் சொன்ன வழியே ஓடுகிறேன், ஆனால் என் கற்பனை தவிடு பொடி ஆகிறது. ஆம், நான் பின்னாலிருந்து பார்க்கும் அந்த உருவம் 4 அடியே இருக்கும் ஒரு சிறிய உருவம். சந்தன நிற பேன்ட்டும், மெல்லிய வண்ணங்கள் பலவும் கலந்த நிறத்தில், முழுக்கையை மடித்துவிட்ட சட்டையும் அணிந்து சாய்ந்து சாய்ந்து நடக்கிறார். அவரை நெருங்கி விட்டேன், அவரிடம் பேசவில்லை, அந்தம்மாவுடைய கணவரா இவர் என்ற சிந்தனையோடு அவரை அவர் நடக்கும் வேகத்தில் தொடர்கிறேன். அந்த சந்து முடியும் போது.....

கொஞ்சம் தொலைவிலிருந்து மற்றொரு காவி உடை அணிந்த கும்பல் ஒன்று (இந்துத்துவா?) வெறித்தனமாக ஓடிவருகிறது. இந்த கும்பலுக்கும், என்னைத்துரத்தி வந்த கும்பலுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் என்னை த்துரத்தி வந்த கும்பலை எதிர்த்து போராடுபவர்கள் என்பதை அவர்களின் பேச்சு மற்றும் அணுகுமுறையை வைத்து கணிக்கிறேன். இவர்களிடமும் துப்பாக்கி, கற்கள், கத்தி, கட்டை என என்னென்னமோஇருக்கிறது. என்னைப்போன்று இவர்கள் ஒளிந்து ஓடவில்லை. ஆங்கிலேயர்களை கொன்றே தீருவோம் என கோஷமிட்டுக்கொண்டு எதிர்த்து ஓடி வருகிறார்கள். நடுவில் என்னைக்கண்டு, பிடித்து இழுத்து ஒரு கட்டிடத்தில் ஓடி ஒளியச்சொல்லுகிறார்கள், நானோ, அவர்களை முரட்டுத்தனமாக பயங்கரமாக சண்டையிட வேண்டாம் என சொல்ல நினைக்கிறேன். ஆனால் சொல்வதற்குள் இரண்டு குழுவும் சண்டையிடதுவங்குகிறார்கள்.  துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், சண்டை சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக  குறையும் தொலைவிற்கு நான் வந்து விடுகிறேன். நான் வந்து சேருமிடம், வீடைப்போல இல்லை, ஆனால் கட்டிடம், நிறைய வாசல்கள், வளைந்து வளைந்து செல்லும்படியாக இருக்கின்றன. அந்த கட்டிடத்தில், உட்கார்ந்த நிலையில் கால்களை நீட்டியவாரே நகரும் ஒரு உருவம், அது ஒரு பெண். ஃபிரில் வைத்த முழு ஃப்ராக் அந்த கால்களை மறைக்க, அந்த (காலின்) பகுதி மட்டுமே என் கண்களுக்கு தெரிகிறது. அந்த கட்டிடத்தில், நான் தப்பித்து செல்லும் பல இடங்களில் இந்த உருவமும் என் கண்களில் படுகிறது. என்னை தொடர்வதாக தெரியவில்லை. ஆனால் என்னைப்போன்று ஓடி ஒளியும் நடக்க முடியாத ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது.

இந்த கட்டிடத்தை தாண்டி வெளியில் இறங்கி ஓடுகிறேன். அந்த காலத்து பேரூந்து ஒன்று எங்கோ புறப்படத்தயாராக உள்ளது. இருவர் இருக்கையில் பின் பக்கமாக சென்று ஒளிகிறேன். அவர்கள் கண்டுக்கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறார்கள். நான் என்னைத்துரத்தும் கும்பலுக்குத் தெரியாமல் ஒளிகிறேன் என்று சொல்வதைக்கேட்டு, என்னை அவர்களே மறைக்கிறார்கள்.

தலை மிகவும் பாரமாக உணர்கிறேன், கண்ணும் ஒரே வலி.... எப்படியும் அந்த இடத்திலிருந்து வந்துவிட முயற்சி செய்து சிரமப்பட்டு வலியை தாங்கிக்கொண்டு கண்விழிக்கிறேன். கனவு கலைந்திருந்தது.  படுத்தவாரே, கனவை ஒரு தரம் ஓட்டிப்பார்த்து, இதில் வந்த உடைகள், செம்மன் புழுதி, கால் மட்டும் தெரிய நகரும் பெண், குள்ளமான மனிதர், அவருக்கு பெரிய உருவத்தில் ஆன மனைவி,  காவி உடுத்திய பயங்கரவாதிகள், என்னைத்துரத்தும் பூட்ஸ் அணிந்த ஆங்கிலேயர்கள், பேருந்தில் என்னைக்காப்பாற்றும் இருவர், யாரென்று தெரியாது ஆனால் என்னைப்போல ஓட ஆரம்பித்த இரண்டு ஆண்கள்.... என நிறையப்பேர்..... ஏன் எனக்கு இந்த கனவு வந்தது என்றேத்தெரியவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு சினிமா பார்க்கவில்லை. மனிதர்களையும் சந்திக்கவில்லை. .......

கனவுகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றிய என்னுடைய இன்னுமொரு பதிவு இதோ கனவுகளை கட்டுப்படுத்துதல்........... [இவளுக்கு இதே வேலையோ? ன்னு நீங்க நினைக்கப்பிடாது, உங்களுக்கும் கனவு வரும்.. இப்படி இழுத்துக்கொண்டு வந்து எழுதாமல் இருப்பீங்களா இருக்கும்... :)]

அணில் குட்டி : அம்மணி எப்ப கனவு வந்தாலும் வூட்டுக்கார ஒக்காரவச்சி, ஒரு வாரம் நகரவிடாம கதை சொல்லுவாங்க... இன்னும் இந்த கனவை அவரிடம் சொல்லல.....  பாவம் மனுசன்.. எப்ப மாட்டாப்போறாரோ... ஆண்டவனே அவரை காப்பாத்து.........

பீட்டர் தாத்ஸ் : “The best thing about dreams is that fleeting moment, when you are between asleep and awake, when you don't know the difference between reality and fantasy, when for just that one moment you feel with your entire soul that the dream is reality, and it really happened.”

படங்கள் : நன்றி கூகுள் ! 
.

எங்க வீட்டு சமையல் - சாம்பார் வகைகள்

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு : ஒரு சின்ன கப்
சாம்பார் காய் : தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் : 8-10
தக்காளி : ஒன்று (நாட்டு)
பூண்டு - 3-4 பல்
மிளகாய்த்தூள் - 1.5 ஸ்பூன் (தனியா, மிளகாய் சேர்ந்து அரைத்தத்தூள்)
மஞ்சத்தூள் - 2 சிட்டிகை
புளி : எலுமிச்சை பழத்தில் பாதி அளவு
எண்ணெய் : தாளிக்க
வடகம் : 1/2 ஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை, கொத்தமல்லி

1. காய்களை வதக்காமல் செய்யும் முறை * : குக்கரில் துவரம் பருப்பை பூண்டு சேர்ந்து குழைய வேகவைத்து, கடைந்து வைத்துக்கொள்ளவும்.  நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடைந்து வைத்த பருப்பில் கொட்டி, மஞ்சத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன், நறுக்கிய காயை சேர்த்து கொதிக்க வைக்கவும். 2-3 நிமிடம் கொதித்தப்பிறகு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, புளியைக்கரைத்து வடிக்கட்டி ஊற்றி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தால் போதுமானது. ஆவி அடங்கியவுடன், வாணலில் எண்ணெய் ஊற்றி வடகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்துக்கொட்டவும். கடைசியாக கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவி விடவும்.


2. வதக்கும் காய்கறி சாம்பார் செய்யும் முறை ** :  வாணல் வைத்து, வடகம், பெருங்காயம் , கருவேப்பிலை தாளித்து, வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து தக்காளி நன்கு வதங்கியவுடன் காயை சேர்த்து வதக்கவும். காய் நன்கு வதங்கியவுடன் வேகவைத்த பருப்பை கடைந்து, இவற்றை அதில் கொட்டி, மஞ்சத்தூள் , மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், புளியை கரைத்து ஊற்றி குக்கரை மூடி , ஒரு விசில் வந்தவுடன் இறக்கிவிடவும்.

3. கீரை சாம்பார் : முதல் செய்முறைதான். ஆனால் கீரையை கழுவி, நறுக்கிக்கொட்டி குக்கரை மூடாமல், அப்படியே கொதிக்கவைத்து கீரை வெந்தவுடன் இறக்கி, தாளித்துக்கொட்ட வேண்டும். கீரை சாம்பாருக்கு கொத்தமல்லி, கருவேப்பிலை தேவையில்லை.

4. வெங்காய சாம்பார் செய்முறை : காய்கறி எதுவும் இல்லாத நேரத்திலும், நெத்திலி கருவாடு, இறா, மீன் போன்றவை வறுக்கும் போதும் இந்த சாம்பார் வைப்பாங்க. குக்கரில் துவரம் பருப்பு+ பூண்டை வேகவைத்து, கடைந்து வைத்துக்கொள்ளவும். வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் , பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன் அதில் பருப்பைக்கொட்டி, மஞ்சத்தூள், உப்பு சேர்த்து கொதித்தவுடன், கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன்  கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். இந்த சாம்பாருக்கு வெங்காயம் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. நோன்புக்கு அடுத்த நாள் 21 காய் சேர்த்து செய்யும் சாம்பார், இரண்டாவது முறைப்படி காய்கறிகளை வதக்கி செய்யவேண்டும். 

குறிப்பு :-

எங்க வீட்டில், நாட்டு காய்கறி & கீரை இவற்றை  கொண்டு தான் சாம்பார் செய்வாங்க.

* நாட்டு காய்கறிகளில் கத்திரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய்,மாங்காய், வாழைத்தண்டு, பாகற்காய், முள்ளங்கி (வெள்ளை/சிகப்பு),தக்காளி, சுண்டைக்காய், கீரையில் அரைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவற்றில் சாம்பார் செய்யலாம்.

சென்னை வந்து நான் கற்றுக்கொண்டவை : செளசெள, குடைமிளகாய், கேரட்+ பீன்ஸ், முளைக்கீரைத்தண்டு சாம்பார், இருந்தாலும் அடிக்கடி செய்வதில்லை.

**பாகற்காய் கசப்புப்போவதற்காகவும், முள்ளங்கி நீர் உறிஞ்சவும், வெண்டைக்காய் கொழக்கொழப்பு ப்போகவும், தக்காளி & சுண்டைக்காய் பச்சை வாசனைப்போகவும் வதக்கிவிட்டு சாம்பார் வைப்பார்கள்.


பருப்பு வேகவைக்கும் போதே பூண்டை சேர்த்துவிடுவதால், பூண்டு வாசனை வராது. பிடிக்காதவர்கள் பூண்டை தவிர்த்துவிடலாம்.

முருங்கக்காய்'க்கு குக்கரை மூடினாலும், ஒரு விசில் வருவதற்கு முன்னரே  இறக்கிடனும். அதிக நேரம் தாங்காது , காய் வெடிப்பு விட்டுடும். மாங்காய் 2-3 கொதியில் வெந்து விடும், குக்கரில் வைக்க அவசியமில்லை.

மாங்காய், பூசணிக்காய், கீரை வகைகள், மற்றும் ஆங்கில காய்கறி சாம்பாரில் புளியின் அளவு மற்ற சாம்பாருக்கு சேர்க்கும் அளவை விடக் குறைவாக சேர்க்கவேண்டும். மாங்காய் / தக்காளி சாம்பார் வைக்கும் போது அவற்றின் புளிப்பிற்கு தகுந்தார்ப்போன்று சில சமயங்களில் புளியே சேர்க்காமலும் சாம்பார் வைக்கலாம்.

அணில் குட்டி : "அட ஒரு சாம்பாரே சாம்பார் செய்ய சொல்லித்தருகிறதே ?! ?! " அப்படி சொல்லாம மறக்காம என்டர்க்கீயை தட்டி கவுஜச்சொல்றவங்க எல்லாரும் என் கட்சி..

பீட்டர் தாத்ஸ் : Part of the secret of a success in life is to eat what you like and let the food fight it out inside.


கொலை செய்ய போகிறேன்..

சில மாதங்களாக தான் இப்படி. என்னை மீறிய விடுபடமுடியாதொரு ஆழ்சிந்தனை. ஆம் அந்த மனித உருவத்தை கொன்றே தீரவேண்டும். என் முடிவில் மாற்றம் வர பலமுறை யோசித்தும் விட்டேன், ஆனால் கொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கு என்னளவில் நியாயமான காரணங்கள் கூறப்பட்டுவிட்டது. அடுத்தது என்ன செய்யவேண்டும் என்பதில் என் கவனம் செல்ல ஆரம்பித்துவிட்டது. அந்த உருவத்தினை அதற்கு தெரியாமல் எப்போதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறேன்.

எப்படி கொல்லலாம் என்று திட்டமிடுவதில் தான் பெரிய சிக்கல். கொலை செய்வது கொடூரமான ஒரு செயல் என்பதை உணர்ந்தவளாக இருக்கிறேன், ஆனால் அந்த உருவம் உயிருடன் இருக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. இப்படி இரண்டு வெவ்வேறு மனநிலையை ஒன்றாக்கி, அதுவும் அந்த மனநிலை கொலைசெய்ய வேண்டும் என்ற மனநிலையாக மட்டும் ஆக்கிக்கொள்வது அத்தனை சுலபமானதாக எனக்கு தெரியவில்லை.

இருந்தாலும், அதை கொண்டு வர என்னைத்தயார் படுத்துக்கிறேன். கொலை செய்தால், உருவத்திற்கு முதலில் வலிக்கக்கூடாது, கஷ்டப்படக்கூடாது, கொலைசெய்கிறேன் என்றும் தெரியக்கூடாது. அப்படிப்பட்ட நாசுக்கான கொலையாக இருக்கவேண்டும். என் மேல் பழியும் வந்துவிடக்கூடாது. இது சட்டம் சார்ந்த பயமில்லை, மனசாட்சி சார்ந்த பயம். கொலை செய்துவிட்டு நிம்மதியாக எப்படி இருந்துவிட முடியும். நியாயமான காரணங்கள் சொல்லப்பட்ட ப்பிறகு அதை கொலை என்று சொல்லக்கூடாது, வேறு வார்த்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.

தீவரமான சிந்தைனைக்கு தீனிப்போட தமிழ், ஆங்கில, மலையாள க்ரைம் படங்களை தேடிக்கண்டுபிடித்து பார்க்கத்தொடங்கினேன். வலிக்காமல் செய்தாலும் தடையம் இல்லாமல் செய்வது அத்தனை சுலபமான காரியமாக த்தெரியவில்லை. இப்படி சுலபம் இல்லை என்று த்தெரிய வரும் போது, கொலை செய்ய வேண்டாமென்ற முடிவுக்கும் வந்தேன். ஆனால் அந்த முடிவு ஒன்றிருண்டு நாட்களில் காணாமல் போய், எப்படியும் கொலை செய்தே ஆக வேண்டுமென என்ற நிலைக்கே வந்துவிடுகிறது.

மருத்துவ, போலிஸ்கார நண்பர்களின் சகவாசத்தை அதிகப்படுத்தினேன். அவர்களுக்கு கண்டிப்பாக எளிமையாக சாட்சியமின்றி கொலைசெய்ய வழிகள் தெரிந்திருக்கும். அதில் ஏதாவது ஒன்றை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆனது. ஆனால் நான் நினைத்தப்படி கொலை செய்ய எனக்கு சரியானதொரு திட்டம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை மட்டும் விடவில்லை. அது சம்பந்தமாக எதையாவது ஒன்றை செய்தவாரே இருந்தேன். உருவத்தை தொடர்வதையும் விடவில்லை. விலகாமல் இருந்தால் தான், தீடீர் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

இருக்கும் வேலை, இடம் அத்தனையும் ஒரே நாளில் மாறியது. மாற்றம் எதிர்பார்க்கவில்லை, கட்டாயம் சென்றாகவேண்டும். அது ஒரு மலைசார்ந்த குளிர் பிரதேசம், வண்ண வண்ணப்பூக்களும்,  ரீங்காரமிடும் வண்டுகளும், மேகம் அருகில் வந்து நம்மை தொட்டு அழைக்கும் சிலிர்ப்பும், பறவைகளின் கூக்கூ சத்தமும், ஓவென்ற கூச்சலிட்டு கொட்டும் அருவியும், அருவி ஓரத்தின் பச்சைப்புல் வெளியில் துள்ளித்திரியும் மான்குட்டிகளுமென இயற்கையோடு என்னை பிணைத்துக்கொள்ளக்கூடிய ஒரு இடமாக அமைந்துவிட்டது. இயற்கை பிரியர்களுக்கு இதைவிட ஒரு வரப்பிரசாதம் வேண்டுமோ.. விடுமுறை நாட்களிலும், வேலை முடிந்தவுடன் கிடைக்கும் நேரத்திலும் பறவைகளுடன் பேசுவதும், வண்ணத்து பூச்சியின் வண்ணத்தை ரசிக்கவும், குயிலோடு சேர்ந்து பாடவும், அருவியில் குளித்து ஆனந்த சயனம் கொள்ளவும் எனக்கு நேரம் போதாமல் இருந்தது. பல நாட்களில் ஆகாரம் கூட மறந்திருந்தேன்.

அப்படியொரு அற்புத இடத்தில் தான் அவனை சந்தித்தேன். நான் அவனை சந்தித்தென் என்றால், அவனும் என்னை சந்தித்தான் என்று தானே அர்த்தம். அவனும் என்னைப்போலவே இந்த இடத்திற்கு புதிது. ஒருவருக்கு ஒருவர் பரிச்சயம் ஆனோம். என்னைப்போன்றே அவனும் இயற்கை விரும்பியாக இருந்தான். என்னைப்போலவே அவனும் அருவியின் அழகையும் சத்தத்தையும் ரசித்தான்.  "என்னைப்போலவே" முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது...  

உருவத்தை தொடர்வதை மறந்து வெகுநாளாகிவிட்டது, அவனைத் தொடர ஆரம்பித்து இருந்தேன். என் கொலைகார எண்ணம் ஏனோ காணாமல் போயிருந்தது. நானும் ஏன் காணாமல் போனது என்று யோசிக்க நேரமில்லாமல் அவனுடைய நினைவில் லயித்திருந்தேன். அவனுடன் சேர்ந்து கனவுகளில் உலாவர இயற்கை எனக்கு துணையாக இருந்தது. அவனை நினைக்க வைப்பதில் அவனும் தீவரவாதியாக மாறி என்னை அவனுடயவளாக மாற்றியிருந்தான். அவனின் காதலியாகியிருந்தேன். வாழ்வதற்கும், இந்த வாழ்க்கையை அவனோடு சேர்ந்து ரசிக்கவும் தொடங்கியிருந்தேன். அவனுக்காக புதிதாக பிறந்து, வளர்ந்து வர ஆரம்பித்தேன். சில நேரங்களில் என் அன்பின் மிகுதியை தாங்கமுடியாத அவன், "ஏனடி எனை கொல்'கிறாய்" என்று சொல்லும் போது மட்டும்,  எது நிஜமான கொலை என்ற குழப்பம் எனக்குள் ஏற்பட்டது.

மாற்றங்கள் எப்போது எப்படி யாரால் வரும் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் வந்துவிட்டது. இது எதிர்பார்த்தது அல்ல, ஆனாலும் என்னை கொலைகாரி ஆக்குவதிலிருந்து இயற்கையாகவே தப்பிக்க வைத்துள்ளது. இப்படி ஒரு மாற்றம் வருவதற்கு முன், ஒரு வேளை அவசரப்பட்டு அந்த உருவத்தை கொலை செய்திருந்தால்....?!! 

ஆம், அவன் அந்த உருவத்தை சந்தித்திருக்கவே மாட்டான். அந்த உருவம் யாரெனக்கூட அவனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லாமல் இருந்திருக்கும். வேறு யாரோ அவனுக்கு காதலியாகியிருக்கலாம்.
.
  

அப்பா -அற்புதமாகிய அருட்பெருஞ்சுடரே

அப்பா என்றால் கம்பீரம். அவரின் தோற்றம், நடை, பேச்சு, உடல் மொழி எல்லாவற்றிலும் ஒரு கம்பீரம் இருக்கும். அப்பாவின் உயரமே (6 அடிக்கு சற்றே குறைவு) அந்த கம்பீரத்திற்கு முதல் காரணம்.

அப்பாவைப்பற்றி சொல்ல ஏராளம் இருந்தாலும், அப்பாவிடமிருந்து நான் பெற்றவற்றை விட, பெறாமல் விட்டுப்போனதைப்பற்றி எழுதி வைக்க விரும்பிகிறேன். அதில் முக்கியமானது பொறுமை.  அடுத்து தேவையில்லாமல் பேசவே மாட்டார். ஏன் தேவைக்குமே அப்பாவின் புன்னகையும், மெளனமுமே பல சமயங்களில் பதில்களாக இருக்கும்.  அதிகமாக பேசுவதாக வீட்டில் யாரும் திட்டும் போதுக்கூட, பெரியவன்/ர் அமைதிக்கு இப்படி ஒரு வாயாடி பொண்ணா? என சொல்லியே என்னை திட்டுவார்கள்.

என் படிப்புப்பற்றிய கனவு அப்பாவிடம் நிறையவே இருந்தது. ஆண் குழந்தைகளுக்காக அப்படி ஒன்றும் அவர் திட்டம் வைத்திருக்கவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.  என்னை டாக்டர் ஆக்கவேண்டும் என்பதே அப்பாவின் கனவு. மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் பாக்ஸ் ஒன்றை, நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது வாங்கி, மர அலமாரியில் வைத்திருந்தார். அடிக்கடி அவரே அதை எடுத்து பிரித்துப்பார்த்து கொள்வார். என்னிடம் நீ டாக்டர் ஆகவேண்டும் என சொன்னதுமில்லை, கட்டாயப்படுத்தியதுமில்லை. சின்ன அண்ணன் அந்தப்பெட்டியை ப்பற்றி கேட்கையில், "பாப்பாக்கு வாங்கி வச்சி இருக்கேன். நல்லா படிக்குது, நிச்சயம் டாக்டருக்கு படிக்கும், அப்ப தேவைப்படும்" என்று சொன்னார்.

ஆனால் நமக்கு அறிவியலில் வேதியியல் மட்டும் எட்டிக்காயாக இருந்தது அப்பாவிற்கு தெரியாது.  (+1 படிக்கும் போது அப்பா இல்லை), அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது. :(. வேதியியலை மனப்பாடம் செய்து எழுதும் நிலையில் தான் என் அறிவு இருந்தது.

என்னை டாக்டராக்க ஆசைபட்டு இருந்தாலும், நடுநடுவில், ஏர் ஹோஸ்டர்ஸ்'க்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வமும் அப்பாவிடம் இருந்தது. இதை நேரடியாக என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போதைய காலக்கட்டத்தில் நல்ல உயரம், கலர் இருக்கும் பெண்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். நான் அதிக உயரம் வளரமாட்டேன் என அப்பா கணித்தும் இருந்தார். அதைச்சொல்லியே, நீ ஆவது கஷ்டம் என்றும் அவரே கவலைப்பட்டு க்கொள்வார்.

என் திருமணம் குறித்த பேச்சு வரும் போது, தென்பெண்ணை ஆற்றில் தான் பாப்பாவின் திருமணம் என்று சொல்லியிருந்தார். அப்பா அதற்கு சொன்னக்காரணங்கள், மிக யதார்த்தமானவை, அவரின் குணத்தின் பிரதிபலிப்பாகவே அவை வந்திருந்தன. ஆற்றில் எவ்வளவு கூட்டம் வந்தாலும், நெருக்கிக்கொண்டு இல்லாமல் தாராளமாக புழங்க முடியும். வருபவர்கள் திருமணம் முடிந்து உடனே கிளம்பிவிடாமல், ஆற்றில் குளித்து,விளையாடி , நாம் அங்கேயே சமைத்து தரும் உணவை சுடச்சுட சாப்பிட்டு சுற்றுலா சென்று வருவதைப்போல இருக்கலாம். திருமணம் என்ற சடங்கு இப்படித்தான் செய்யவேண்டும் என்பதை மீறி, சுதந்திரமாக, நம் செளகரியத்திற்கு, சந்தோஷத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. சாப்பாடு வெரைட்டி ரைஸ் ஆக நிறைய செய்து வைத்துவிடவேண்டும் என்றும் சொல்லி இருந்தார். ப்ஃவே டைப். எல்லாமே அவரின் கனவுகளாக மட்டுமே நின்றுவிட்டன !

அப்பா வீட்டின் முதல் பிள்ளை, அந்த மரியாதையும் மதிப்பும் அவர் இறக்கும் வரை அவர் நடந்துக்கொண்ட முறையில் அவருக்கு கிடைத்தது.  அப்பாவிற்கென தனி நாற்காலி, அதில் வேறு யாரும் அமரமாட்டோம். பெயரே அப்பா சேர். அதேப்போல, அப்பா தட்டு, அப்பா பீரோ, அப்பா ரூம், அப்பா தலையணை, அப்பா போர்வை, அப்பா டிபன் பாக்ஸ், அப்பா சவரடப்பா என தனித்தனியாக இருந்தது. மற்றவர் யாரும் அதை பயன்படுத்தியதில்லை.
 
அப்பாவிற்கு எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க தெரிந்திருந்தது.  ஹார்மோனியம் , எலக்ட்ரிக் கிட்டார் + ஆம்லிஃபையர் , மோர்சிங் போன்றவை வைக்க தனி அறையும் அதில் அப்பா மட்டுமே சென்று வரலாம் என்பதும் சொல்லப்படாத ரூல்ஸ். நாங்கள் சென்றால் எதையாவது நோண்டி, வாசிக்கும் போது சுருதி தப்புவது அப்பாவிற்கு கோவத்தை உண்டாக்கும். அதனால் எங்களுக்கு அந்த இடம் தடைசெய்யப்பட்டு இருந்தது. அப்பா இருக்கும் போது சென்று எதைத்தொட்டு என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லாமல் இருப்பார் என்பது வேறு விசயம். ஒரு காலி வயலின் பெட்டியும் வீட்டில் இருந்தது.   மிருந்தங்கம், தபேலா, வயலின், வீணை போன்றவை அவர் வாசித்து நான் பார்த்தவை. ஆனால் வீட்டில் இல்லை. மோர்சிங் மட்டும் அவரைத்தவிர வேறு யாருக்கும் வீட்டில் வாசிக்க அனுமதி இல்லை.

அற்புதமான குரல்வளம் கொண்டவர்,  கர்நாடக மற்றும் சினிமா பாடல்கள் இரண்டுமே பாடுவார். லதாஜி' யின் குரல் அப்பாவிற்கு மிகவும் பிடித்தக்குரல். அப்பாவின் ஃபேவரேட் &அடிக்கடி பாடும் பாடல்கள்,

1.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
2. உள்ளம் உருகுதய்யா
3. விநாயகனே விணைத்தீர்ப்பவனே
4. அய்யப்பன் பாடல்கள் அணைத்தும் .
5. "நானொரு முட்டாளுங்க"  - திரு.சந்தரபாபு பாடல்
6. காற்றினிலே வரும் கீதம் -  எம்.எஸ் அம்மாவின் பாடல்

தாத்தாவின் குரலை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் அப்பாவின் குரலை செய்யவில்லை..... ........ அப்பா அத்தனை சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நினைக்கவில்லை. :((.


குறிப்பிட்டு சொல்லவேண்டியது, தம்பி, தங்கைகள் (ஒரிஜினல், ஒன்று, இரண்டுவிட்ட உறவுகள் என சில டசன் இருக்கும்), அவரின் மூன்று பிள்ளைகள் என அத்தனைப்பேரில், பெண் குழந்தையான என்னைமட்டுமே அவரின் வாழ்நாளில் 4-5 முறை அடித்திருக்கிறார். அதுவும் இரண்டு முறை சக்கையாக பிழிந்து, தூக்கிப்போட்டு மிதித்திருக்கிறார் என்பது என்னையும் சேர்த்து நாங்களே எங்களை கிள்ளிக்கொண்டு, இது உண்மைதானா? அப்பாவா அடித்தது? என கேட்டுக்கொள்ளும் நிகழ்வு. ஆம், அப்பாவின் பொறுமைக்கே சவால் விடக்கூடிய குழந்தையாக இருந்திருக்கிறேன்.   [அடிச்சி என்ன பிரயோசனும், நல்லப்புள்ளையாக பெத்து இருக்கனும். :) ]

மேல் சொன்ன எல்லாவற்றிற்கும் மேல் அப்பா, அப்பா மட்டும் இல்லை. தாயுமானவர். !! இன்றைய தினத்தில் அப்பாவைப்பற்றி எழுதி வைப்பதில் மனதிற்கு ஒரு நிறைவு.

இனிய தந்தையர் தின வாழ்த்துகள் ! 



விஷத்தை கலந்து கொடுத்துடுவாங்களோ..?!


'என்ன முட்டை இது?'

'காடை முட்டை'

'ஏன் ஒரே மாதிரி இல்லாம கலர் கலரா இருக்கு..'

'அது அப்படித்தாங்க மேடம்'

.'....... காடை எல்லாம் ஒரே மாதிரி இருக்குமா , வேற வேற மாதிரி இருக்குமா?'

'ஒரே மாதிரித்தான் இருக்கும்..'

'அப்ப முட்டை மட்டும் ஏன் கலர் கலரா இருக்கு?'

ஞே.. !

'பாம்பு முட்டை எதும் மிக்ஸ் செய்து வச்சி இருக்கீங்களா?'

ஞே...!!

'வேற எதாச்சும் முட்டைய டூரிஸ்ட்டை அட்ராக்ட் செய்யனும்னு கலர் செய்து வச்சி இருக்கீங்களா?'

ஞே..!

'அது கலரா இல்லையான்னு ஒரு முட்டைய எடுத்து செக் பண்ணவா?'

'அய்யோ..மேடம் ஏன் உங்களுக்கு இவ்ளோ சந்தேகம். .அது காடை முட்டைத்தானுங்க..'

'ம்ம்ம்.. ஒடச்சி ஊத்தும் போது எனக்கு காமிங்க..'

ஞே... !

'ஆனா..நீங்க பாம்பு முட்டைய ஒடச்சி ஊத்தினாக்கூட எனக்கு தெரியாதுங்க..'

'அய்யயோ மேடம்.. அப்படியெல்லாம் செய்ய மாட்டோங்க.. நம்புங்க இது காடை முட்டை தான்'

'ம்ம்... நம்பத்தான் வேண்டி இருக்கு... வேற வழி.. கலர் அடிச்ச பாம்பு முட்டையாவும் இருக்கலாம்..'

ஞே..!!

*******


'மேடம். உள்ளி போடலாமா?'

'போடுங்க போடுங்க.. .. '(வூட்டுக்கார் எனக்கு டப்பிங் )

'மேடம் பச்சை மிளகாய் போடலாமா?.'

'போடுங்க போடுங்க..' (வூட்டுக்கார் எனக்கு டப்பிங் )

'.........ப்பா வெயிட்.. அவர் என்னைத்தானே கேக்கறாரு. .நீங்க ஏன் பதில் சொல்றீங்க. ஏங்க .நிஜம்மாவே உங்களுக்கு ஆம்லெட் போடத்தெரியுமா? தெரியாதா? எப்படி வெங்காயம் பச்சைமிளகாய் இல்லாம ஆம்லெட் போடுவீங்க?'

'மேடம் மிளகுப்பொடி போடட்டூங்களா?'

'போடுங்க போடுங்க.. '(வூட்டுக்கார் எனக்கு டப்பிங் )

'ப்ப்பாஆ.... என்னப்பா நீங்க..வேற...  அவருக்கு ஆம்லேட்டே போடத்தெரியாது போல...'

'அவருக்கு தெரியாமயா கடை நடத்தறாரு.. ?! நீ ஒரே ஒரு ஆம்ப்லெட் ஆர்டர் பண்ணிட்டு, 20 நிமிஷமா அவரை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ற, ஏண்டி.. உன்னை உங்க வீட்டுல வச்சிக்க முடியாமத்தான் என்கிட்ட தள்ளிவிட்டுடாங்களா?'

'உங்களுக்கு அப்புறமா விளக்கம் சொல்றேன்.... 20 நிமிஷமாவா அவரை நானு டார்சர் பண்றேன்.? .. என் டார்ச்சர் தாங்க முடியாம விஷம் ஏதாச்சும் ஆம்லெட் ல கலந்து கொடுத்துடுவாரா? 

:)))))))))))))))

என்னா சந்தோஷம்,,!!! .. எனக்கு விஷம் எல்லாம் ரொம்ப அதிகம்ப்பா.. பேதி மருந்து போதும்னு சொல்லுங்க..

ஏண்டி. .அப்பக்கூட பேச்சை நிறுத்த மாட்டியா.. ?

ஓ...நான் இன்னும் பேச்சை நிறுத்தலயாஆஆ?  ரைட்,  ஐ ரியலஸ் நவ்... ஷூயூர் ஃபார் சம் டைம் , அண்டில் தி ஆம்ப்லெட் கம்ஸ், ஐ கீப் சைலன்ட்டு..

ஸ்யப்பா... கொஞ்ச நேரம் என் காதுக்கு ரெஸ்ட்..

:((((...

*********

சென்னையில் ஹோட்டல்களுக்கு செல்லும் போது, மெனு கார்டில் "காடை" பெயரை பார்ப்பதுண்டு, ஆனால் வாங்கி சாப்பிட்டதில்லை. முட்டையை இப்போது தான் பார்க்கிறேன். என்ன முட்டை என்று கேட்கும் போதே ஆம்லெட் வேணுங்களா? என்ற கேட்டு, நான்கு முட்டை ஒரு ஆம்லெட் வரும் என்றார். சரி சாப்பிட்டு பார்ப்போமே என்று ஆர்டர் செய்தோம். அவர் ஆம்லெட் போடும் போது, இது கோழிமுட்டை போல வாடை அடிக்காது. நன்றாக இருக்குமென சொன்னார். அப்படித்தான் இருந்தது.  முட்டை கிடைத்த இடம் மூனார், எக்கோ பாயின்ட்.  இது மூனாரின் சுற்றுலா இடங்களில் ஒன்று. ஆற்றின் கரையில் நின்று கத்தினால், எதிர் பாறையிலிருந்து திரும்ப திரும்ப எதிரொளிக்கிறது.


காடை பறவையை பற்றி தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடிய போது, மலையாளத்தில் காடை வளர்ப்பு பற்றிய ஒரு படம் யூடியூப்' பில் கிடைத்தது. மிக எளிமையாக, அதிக செலவின்றி, இயற்கை முறையில் காடை வளர்க்கப்படுவதாக சொல்லுகிறார்கள். மலையாளத்தை புரிந்துக்கொண்டாலும், மொழிப்பெயர்க்கும் அளவிற்கு நமக்கு தெரியல. அதனால் நீங்களே பார்த்து புரிஞ்சிக்கோங்க.



விக்கியின் விளக்கம் : http://en.wikipedia.org/wiki/Quail

அணில் குட்டி : நாட்டுமக்களுக்கு ஒரு நல்ல சான்ஸ் மிஸ் ஆகிடுத்து.... :(

பீட்டர் தாத்ஸ் : Birds are a miracle because they prove to us there is a finer, simpler state of being which we may strive to attain

காடை படம் : நன்றி கூகுல்

உனக்கு 20 எனக்கு 18

கவி : நிஜம்மாவே நீ என் புள்ளதானா? ஆஸ்பித்திரியில் நம்பர் மாத்தி கட்டி என்கிட்ட உன்னை கொடுத்துட்டாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு..

நவீன்: எனக்கும் பல வருசமா இதே டவுட்டு தான் மதர்...  எப்படி சுத்தமா அறிவே இல்லாத நீ எனக்கு அம்மாவா இருக்க?

கவி:  ஞே........ !

*******

கவி : ஒழுங்கீனம் ஒழுங்கீனம்.. எனக்கு பொறந்த புள்ளதானாடா நீனு?

நவீன் : சே.. இந்த வீட்டுல இதே பிரச்சனையாப்போச்சி, முதல்ல ஒரு டி.என் ஏ டெஸ்ட் எடுத்து  பார்க்கனும்..

கவி : டெஸ்ட்ல நீ என் புள்ள இல்லைன்னு தெரிஞ்சிட்டா?

நவீன் : ஸ்யப்பா அப்படி மட்டும் வந்துட்டா, என் ரியல்  பேரன்ட்ஸ்ஐ தேடிக்கண்டுப்பிடிச்சி, அவங்க க்கிட்ட ஒரு அமவுண்ட் வாங்கி, என்னை வளத்ததுக்கு உனக்கு செட்டில் பண்ணிட்டு , அவங்களோட கிளம்பிடுவேன்..

கவி : அட மகாப்பாவியே... ..:(

****************

கவி : நவீனாஆஆ... ஒழுங்கா உக்காந்து சாப்பிடு..  முட்டிப்போட வச்சி தலையில குட்டி வளக்கவேண்டி இருக்கும்.. !

நவீன் : ஹா ஹா ஹா. .யாரு ? நீனு என்னை அடிக்கப்போறியா? நான் முட்டிப்போட்டா அந்த ஹைட் தான் நீ இருப்ப..

கவி : அடேய் மந்த புத்தி பாலக், அதனால த்தான் முட்டிப்போடவச்சி குட்டுவேன்னு சொன்னேன். எனக்கு குட்டறதுக்கு ஈசியா இருக்குமில்ல. திட்டும் போதுக்கூட நாங்க ப்ளான் பண்ணித்தான் திட்டுவோம். .எப்பூடீஈஈ ?!

நவீன் : ஞே... !

*************

நவீன் : (சீரியசாக) அம்மா இந்த GAS ஏன் கலர் கலரா எரியுது ?!

கவி : (நானும் சீரியசாக).. GAS GAS நீ ஏன் கலர் கலரா எரியற, என் புள்ளை கேக்கறான் பாரு.. சொல்லு..  கேட்டு இருக்கேண்டா..அது பதில் சொன்னவுடன் உனக்கு சொல்றேன்டா.... கிளம்பு..கிளம்பு....

நவீன் : .............. ................ ஞே...!


************

கவி : நவீன் இன்னைக்கு ஜிம்ல 'புதுசா' வீல் க்ரன்ச்சஸ் சொல்லித்தந்தாங்கடா..  ரொம்ம்ம்ம்ப கஷ்டம்டா.. செய்யவே முடியல.. .கால் செம வலி. .நடக்கவே முடியல இப்ப..

நவீன் : அப்படீன்னா?

கவி : இரு செய்து காட்டறேன்

நவீன் : அடச்சே.. .இதானா? இதுக்கா இவ்ளோ சீன் போடற நீனு..  ஃபுட் பால் கோச்சிங்ல தினம் இதை செய்யவைப்பாங்க. செம மொக்க எக்ஸர்ஸைஸ் இது. என்னமோ புதுசுன்னு சொன்னியேன்னு பார்த்தா.. ?! செய்ய செய்ய பழகிடும்.. ஓவர் சீன் போடாத ..அட்ட பழசு அது..

கவி :...அவ்வ்வ்வ்..
********

கவி : மொட்டுக்குட்டி...

நவீன் : புக் 'கை கையில் வச்சிக்கிட்டு பேச்சு என்ன வேண்டி இருக்கு.. ம்ம்ம்ம் படி..

கவி : ஏய்.. என்ன ரொம்பத்தான் பண்ற.. நான் பேசவே ஆரம்பிக்கல. .ஜஸ்ட் கூப்பிட்டேன்..

நவீன் : உன்னைப்பத்தி தெரியாது.???. மொட்டுன்னு தான் ஆரம்பிப்ப.. அப்புறம் உன் வாயி மூடவே மூடாதே... நீ பேசறதை எவன் கேக்கறது ... ஒழுங்கா படிக்கற வழிய ப்பாரு...

கவி : அவ்வ்வ். .!

*********

நவீன் : ஆமா.... பரிட்சை நடக்கும் போது, உனக்கு சிஸ்டம்ல என்ன வேல..? ஏந்திரி ஏந்திரி போயிப்படி போ...

கவி : .................... (கண்ணால்..  'ஏண்டா ஏன்ன்ன்ன்ன்ன்?)

நவீன் : என்ன பாக்கற..?! இதெல்லாம் சும்மா.. இதை விட பலமடங்கு என்னை டார்ச்சர் செய்து படிக்க வச்சி இருக்க... இப்ப என் டேர்ன்.முதல்ல எழுந்திரு. பரிட்சை நடக்கும் போது, சிஸ்டம்லலாம் உக்காரக்கூடாது நீ.. போய் படி.. போ..

கவி : எகொகஇ?! :(

**********

கவி : நவீன்  நீ ஏன் இவ்ளோதூரம் என் பாத்ரூமுக்கு வர.. ..

நவீன் :  அய்ய, 4 அடி எடுத்துவச்சா உன் ரூம்மு, அதுவும் சீக்கா எடுக்கத்தான் போறேன்.. இதுல என்ன வந்துச்சு உனக்கு?

கவி : சீக்காவை இனிமே உன் பாத்ரூமில் தனி டப்பாவில் போட்டு வைக்கறேன்.. நீ இந்தப்பக்கம் வராத..

நவீன்: அம்மா..நடக்கறது எக்ஸர்ஸைஸ்ம்மா... தொப்பைக்குறையும்.!

கவி :  ஞே... ! (4 அடி நடந்தாவா?) 

************

கவி : நவீன் எனக்கு மேக்ஸ் கொஞ்சம் சொல்லித்தரியா..

நவீன் : ஹே ஹே.. முடியாது.. நீ தான் மேக்ஸ்ல ஸ்கூல் ஃப்ரஸ்ட் ஆச்சே.. ஏன் என்கிட்ட வந்து கேக்கற.. நீயே பாத்து புரிஞ்சி படிச்சிக்கோ..

கவி..: புரியுதுடா..ஆனா.. அதுலப்போட்டு இருக்க சிம்பள்ஸை எப்படி சொல்லனும்னு சுத்தமா மறந்துட்டேன். மேக்ஸ் எல்லாம் படிச்சி ரொம்ப வருசம் ஆச்சிடா..ஒருதரம் பாத்து சொல்லித்தாடா..

நவீன்.. :  சான்ஸே இல்ல.. நீ ஃபெயில் ஆகு !!. .உனக்கு இருக்க திமுருக்கு நீ ஃபெயில் ஆகனும்! அப்பத்தான் என்னை நீ திட்டினதுக்கு எல்லாம்..... பழிவாங்க முடியும்... 

கவி: அவ்வ்வ்....  (என்னா கொலவெறியோட இருக்கான்)

***********

அணில் குட்டி : அம்மா புள்ள இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் காரித்தூஊன்னு துப்பிக்க ரிசல்ட்க்காக வெயிட்டிங்கு.. நமக்கு இருக்கு....நல்ல டைம் பாசு..


பீட்டர் தாத்ஸ் Your son at five is your master, at ten your slave, at fifteen your double, and after that, your friend or your foe, depending on his bringing up.:

வசீகரா..n அனல் மேலே பனித்துளி

 Sorry Appa, I just ignored u in my thought, here you go..... 

 1. வசீகரா


2. அனல் மேலே பனித்துளி


நகம்

பெண்களுக்கு இந்த நகம் வளர்ப்பதிலும், அதை பராமரிப்பதிலும் உள்ள ஆர்வம் அவர்களின் பொறுமையையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. இதையும் கூட ஒரு கலை' ன்னு சொல்லலாம். எளிதான விசயமல்ல, பெண்களால் மட்டுமே முடிந்ததும் கூட. பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். (நன்றி சிறுமுயற்சி-முத்துலட்சுமி )

எனக்கு இது எட்டாத கனி :). 8 ஆம் வகுப்பில் என்னுடன் படித்த செல்வி, நீள நீளமான, மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட நகங்கள் வைத்திருந்தாள். அவள் கைவிரல்களை பிடித்து, எப்படி நகம் வளர்க்கனும்னு கேட்டது இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது.  எனக்கு நகம் வளர்க்க தெரியவில்லை, முடியவில்லை, வளரவும் இல்லை. முக்கிய காரணம் கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும். அந்த அளவு நான் மோசமில்லை என்றாலும், எனக்கும் நகம் வளர்ந்துவிடாதளவு கடிக்கும் பழக்கம் இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு வரை இருந்தது.
நகத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கடிக்கும் பழக்கத்தையாவது நிறுத்த வேண்டுமென, எனக்கு நானே சேலன்ஞ் செய்து எப்படியோ நிறுத்திவிட்டேன். கடிக்காமல் இருக்க, சில சமயம் விரல்களில் கைக்குட்டைக்கூட சுற்றி வைத்திருப்பேன். கடிக்கப்போகும் போது, கைக்குட்டை, நகத்தை கடிக்கக்கூடாது என நினைவுப்படுத்தும். கடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டாலும், நகம் வளர்க்க எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

நம் தோழிகளிடம் "நகம்" குறித்து ஒரு குட்டி சர்வே எடுத்ததில் :

விஜி ராம் : ம்ம்க்கும் இந்த கருமத்துக்கு காசு வேற செலவு பண்ணுவாங்களாக்கும். மெனிக்யுர் பண்ணினதே இல்லை. நெயில் பாலிஷ் அடிப்பதும் இல்லை. ஒன்லி மருதாணி. காலுக்கு வேணும்னா பெடிக்யுர் பண்ணுவேன். அப்பவும் நோ நெயில் பாலிஷ். ட்ரை ஸ்கின் என்பதால் 2 மாசத்துக்கு ஒரு முறை பெடிக்யுர் உண்டு.

முத்துலட்சுமி : நெயில் பாலீஷ் பூசுவதில்லை. எனக்கு வீட்டு வேலைகளில் உதவ ஆள் உண்டு.. அதனால் விரல் நகங்கள் மோசமடைவது குறைவு. நகம் வளர்த்திருக்கவங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதோடு சரி. நான் வளர்க்கிறதில்லை. குழந்தைகளோடு இருக்கும்போது தவறி அது கண்ணை குத்திடுமோன்னு நினைச்சாலே பயம்மா இருக்கு. கால் நகங்களுக்கு தான் அப்பப கவனம் எடுப்பது உண்டு.

தென்றல் : பொதுவா நெயில்பாலிஷ் பயன்படுத்துவதில்லைங்க.. மேனிக்யூரும் செய்து கொண்டதில்லை.. நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு

விதூஷ் :  க்ளோஸ் கட் பண்ணிதான் வச்சிருக்கேன். எனக்கு நகம் வளக்கிறது பிடிக்காது. நெயில் பாலிஷ் ரொம்ப ரொம்ப அரிதாக பயன்படுத்துவேன், கால் நகங்களுக்கு மட்டும்.  PEARL, dried lavender கலர் மட்டுமே பிடிக்கும். மூணு மாசத்துக்கு ஒரு தரம், பெடிக்யூர் மட்டும். நகம் பராமரிக்க ஒரு வாரத்துக்கு பதினைந்து நிமிஷங்கள், ஒரு சின்ன பிரஷால் தினமும் குளிக்கும் போது விரல் நகங்களை கிளீன் பண்ணிக்குவேன். வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம். குழந்தை (0-6 வயது) இருக்கிற அம்மா/அப்பாக்கள் நகம் வளக்கிரதை அறவே தவிர்க்கணும். ரொம்ப ஆழமா யோசிச்சு பார்த்தா கால்சியம் குறைபாடு இல்லாதவங்க, அதை ஒரு ஆயுதமாவும் பயன்படுத்தலாம்.

தாரணி பிரியா : நகம் வளர்த்தும் பழக்கமே இல்லை, வாரத்திற்கு ஒரு முறை (சண்டே) காலைல முதல் வேலையே நகம் வெட்டறதுதான் அதே போல நெயில் பாலீஷும் இது வரை வாங்கினதே இல்லை   எப்பவாது மருதாணி வைக்கிறது மட்டும்தான்.

சுசி குணா (இவங்க தான் இந்த பதிவின் மாடல் விரல் அழகி - நன்றி சுசி !) ஒரு குறிப்பிட்ட அளவு விட்டிட்டு அப்பப்ப வெட்டிடுவேன். இல்லேன்னா உடையும். எதாவது செய்யும்போது மடங்கி வலிக்கும். எனக்கு நானே கீறி வச்சிடுவேன். நெயில் பாலிஷ் கை நகத்தில எப்போதும் போட்டிருப்பேன்.
வாரத்துக்கு ஒரு தடவை கலர் மாற்றுவேன். மெனிக்கியூர் என் வாழ்க்கேல இது வரை ஒரு தடவை கூட செய்ததில்லை. நகம் பராமரிக்க, பழைய பாலிஷ் ரிமூவ் பண்ணி புதுசு போட ஒரு ரெண்டு நிமிஷம்?? மத்தபடி வளந்திட்டா அளவா கட் பண்ண ஒரு ரெண்டு நிமிஷம். கட் பண்ணும்போது கவனமா இருப்பேன். குளிச்சதும் இல்லேன்னா பத்து பாத்திரம் தேய்ச்சதும் வெட்டணும். அப்பதான் ஈஸியா இருக்கும். அதோட சிதிலமாகாம வெட்டும்.  நகம் வளர்க்க எனக்கு பிடிச்சிருக்கு. அழகாவும் இருக்கு.

Dr. Delphine victoria  

1. நகம் பராமரிப்பு : it  is absolutely essential that we have to take care  of our finger nails. Most infections are spread through finger nails and that is why we insist on good hand washing. i don't believe in growing the nails though it might add beauty to the fingers especially ladies who have long and thin fingers. To me, keeping the nails trimmed and clean is my priority rather than growing it for beauty.  I cut the nails as close as possible at least once in three days 

2. நெயில் பாலிஷ் பயன்படுத்துதல் : I don't use nail polish as my profession  & my working place does not permit it. 


3. மெனிக்கியூர் : Manicure is good because the dead skins are removed and the  unwanted cuticles are removed. Nails can be filed.
 

4. நகம் பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : may be 10 minutes/day This includes applying lotion for both legs and hands before going to bed
 

5. நகம் வளர்ப்பதின் பயன் : My finger nails should be clean. Doing a pedicure  is good . our feet work hard and they need to be pampered.  Your toes & legs should be clean and must give a neat appeal to others when they see you. It is advised to keep the nails unpainted & exposed to sunlight at least for seven days / month. I do a pedicure once a month. The most important thing here is that the pedicure technician should use clean instruments.

டாக்டர் மெனிக்கியூர் செய்துக்கொள்வது நல்லதுன்னு சொல்லியிருக்காங்க. நகத்தை சுத்தமாக வைத்திருப்பது தான் மிகவும் முக்கியம்னும் சொல்லியிருப்பதை கவனிக்க.

நிற்க, நகம் பற்றிய பொதுவான விசயத்திற்கு வருவோம். அழகு நிலையங்களில் மெனிக்யூர் http://www.hintsandthings.co.uk/bathroom/home-manicure.htm என்று தனியாக கை நகங்கலையும், கையையும் அழகுப்படுத்துகிறார்கள். (செய்துக்கொண்டதில்லை,கவனித்தவை)  கை விரல்களை, நகங்களை எதேதோ க்ரீம் கலந்த சுடத்தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, அழுக்கு எடுத்து, நகத்தின் பக்கவாட்டில் இருக்கும் குட்டி குட்டி சதைகளை பிய்த்து, நகங்களின் மேல் நெயில் கட்டரில் உள்ள கத்திப்போல ஒன்றால் சுரண்டி, நகங்களின் முன் புறம், நாம் விரும்பும் வகையில் ஷேப் செய்து, பிறகு கிரீம் போட்டு, விரல்களுக்கு தனியாக மசாஜ் செய்கிறார்கள்.

அதற்கு பிறகு, நாம் தேர்வு செய்கின்ற நெயில் பாலிஷ்ஷை  போட்டுவிட்டு, ட்ரேயில் உள்ள குளிர் தண்ணீரில் விரல்களை நனைத்து விடுகிறார்கள்.. அப்போது தான் பாலிஷ் கலையாமல் நன்றாக ஒட்டுமாம். நகம் வேலை முடிந்தவுடன், கையிற்கு க்ரீம் தடவி மசாஜ் செய்து விடுகிறார்கள். இது தேவைக்கு தகுந்த மாதிரி வாக்ஸ்ஸிங், கிளீனிங் என தொடரும். அந்த கதை நமக்கு வேணாம், நகத்தோடு நிறுத்திக்கொள்வோம். இதற்கு மொத்தமாக அந்த பெண் எடுத்துக்கொண்ட நேரம் 25- 30 நிமிடம். எனக்கு பெருமூச்சுத்தான் வந்தது.  30 நிமிஷம் நம்ம கைய அந்த பெண்ணிடம் விட்டுட்டு, வேடிக்கை பார்க்கனும். 30 நிமிஷம் என்னால ஒரு இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் உட்காரமுடிந்திருந்தால், கின்னஸில் இடம் பிடித்திருப்பேன்.

பெண்களுக்கு இருக்கும் பொறுமையும், தன்னை அழகு செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இதையெல்லாம் செய்யவைக்கிறது. முக்கியமாக நகங்கள், பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு காரணியும் கூட. தற்காத்துக்கொள்ள நிச்சயம் உதவும். தேவைப்பட்டால், கத்தியைப்போன்றே நகங்களை பயன்படுத்த முடியும். அதற்காகவாவது பெண்களுக்கு நகம் தேவையென எனக்கு சின்ன வயசில் என் அத்தை மகள் போதித்தார்.

நகங்கள் குறித்து சில தகவல்களை பார்ப்போம்.

1. நகங்களை பாதுக்காப்பது மற்றும் அழகுப்படுத்திக்கொள்வதை பற்றிய தகவல்கள் இதில்  இருக்கின்றன.  http://www.ultimate-cosmetics.com/guides/nail-care/

2. இந்த லிங்கை க்ளிக்கி பாருங்கள், எத்தனை விதமான டிசைன்ஸ் :).. அழகோ அழகு  http://www.nailsmag.com/style/nail-art/demo/list

3. ஓ மை கடவுளே' ன்னு சொல்ல வைக்கும் டிசன்ஸ் கீழுளுள்ள லிங்கில் உள்ளது. குறிப்பாக ஸ்கல், நியூஸ் பேப்பர்  வரிக்குதிரை டிசைன்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. http://slodive.com/inspiration/nail-designs-pictures/

அணில் குட்டி : சுசி ஆன்ட்டி மாதிரி, என் விரல்களையும் கலர்ஃபுல்லா ஆக்கிக்க, ஆன்ட்டிக்கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கப்போறேன். (கவி காதில் பொக..) ஆன்ட்டி, நீங்க ரெடியா ?!!

பீட்டர் தாத்ஸ் : I suppose if you've never bitten your nails, there isn't any way to explain the habit. It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.
.

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்..

கானாபிரபா நடத்தும் "நானும் பாடுவேன்" ரேடியோ நிகழ்ச்சிக்காக பாடியது. 





இந்த பாடல் தவிர, மற்ற நண்பர்களின் பாடல்களையும் கேட்க :-

றேடியோஸ்பதி வழங்கும் =>" நானும் பாடுவேன்" இதுவரை வந்த படைப்புகள்

மார்ச் 31 வரை நேரம் உள்ளது, உங்கள் பாடல்களையும் பதியலாம்.

நன்றி கானாபிரபா. :)

அணில் குட்டி : என்னடா ரொம்ப நாளா அக்கா குரல் வளத்தை காட்ட முயற்சி செய்யலையேன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்... 

பீட்டர் தாத்ஸ் : Singing has always seemed to me the most perfect means of expression. It is so spontaneous.

வாத்தியார் மேல் தூங்கி விழுந்த மாணவி

டுடோரியல் நடத்தி வந்த வாத்தியார்,  பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவர், அவரின் மாணவர்கள், அவரைப்பற்றி கொடுத்த நற்சான்றிதழ்களை நம்பி, பாடம் சொல்லித்தர முடியுமான்னு கேட்டு, நானும் ஒரு நாள் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள உட்கார்ந்தேன். அவர், இது சொன்னப்பேச்சு கேக்காத ஆள் ஆச்சே, சரிவரும்மானு ரொம்ப யோசிச்சித்தான் பாடம் சொல்லித்தர ஒப்புக்கொண்டார்.

புத்தகம் கையுமாக அவர் அமர, அவர் பக்கத்தில் நான். ரொம்ப ஆர்வமாக பாடம் நடத்த ஆரம்பித்தார், மாணவி கவனிக்கிறாளா இல்லையான்னு பார்க்கும் சமர்த்து அவரிடம் இல்லை, பாடம் நடத்துவதிலேயே கவனமாக இருந்தார். கையை இரண்டையும் ஆட்டி ஆட்டி பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார், ஆனா பாருங்க, யாருக்குன்னு தான் தெரியல. எனக்கு  சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க  முடியவில்லை. போதும்னு சொன்னால், வாத்தியார் கோவப்படுவார்னு, ரொம்ப கஷ்டப்பட்டு வாயை மூடிட்டு பேசாமல் இருந்தேன். ஆனா நேரம் செல்ல செல்ல தூக்கம் கண்களை செருக........ தூங்கி..... நானும், அவரும் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில், அவர் மடியில் தொப்பென்று விழுந்தேன்.

......................................... அவ்ளோ தான்..  நான் தூங்கி விழுந்த அவமானம் தாங்கமுடியாத வாத்தியார், புத்தகத்தையும் என்னையும் "நியெல்லாம் படிச்சீஈஈ.." ன்னு. தூக்கிப்போட்டவர் தான். இனி எனக்கு மட்டும் பாடம் சொல்லித்தருவதில்லை என முடிவெடுத்து, அதை கன்னாப்பின்னான்னு கடைப்பிடிக்கவும் செய்தார். நானும் அதற்கு பிறகு வாத்தியாரிடம் சத்தியமாக இனி தூங்க மாட்டேன், எப்படியும் முழுச்சிக்கிட்டு இருக்க முயற்சி பண்றேன், தயவு செய்து பாடம் சொல்லித்தாங்கன்னு கேட்டு பார்த்தேன், ம்ஹூம்..  ஒரு முறை பட்ட அவமானம் போதும். இனி அந்த தப்பை மட்டும் செய்யவே மாட்டேன்னு சொல்லிட்டார்.

பல வருடங்கள் கழித்து, எம்.பி.ஏ பரிட்சையின் போது, திரும்பவும் வாத்தியாரின் உதவி தேவைப்பட்டது. வாத்தியார் அக்கவுன்ட்ஸ்'ஸில் கில்லாடி. எனக்கு ஒரே ஒரு பேப்பர் அக்கவண்ட்ஸ், அப்படின்னா என்னான்னே தெரியாத, பூச்சியமாக இருந்தேன். இந்த ஒரு பரிட்சைக்கு மட்டும் வாத்தியார் சொல்லிக்கொடுத்தால் போதும் பாஸாகிவிடுவேன், வாத்தியாரிடம் சென்று கெஞ்ச ஆரம்பித்தேன்.  அக்கவுண்ட்ஸ் கணக்கு மாதிரி, தூங்கிவிழ சாத்தியமே இல்லை, நிச்சயம் தூங்கமாட்டேன், தயவு செய்து சொல்லித்தாங்க, என் எதிர்காலமே உங்க கையில் தான் இருக்கு, உங்களை விட்டால் எனக்கு யார் உதவி செய்வா? அப்படி இப்படின்னு ஓவர் பில்டப் கொடுத்து, நீலிக்கண்ணீர் வடித்தேன். அவர் என்னை  1% கூட நம்ப சான்ஸ் இல்லையென்றாலும், போனாப்போகுதுன்னு திரும்பவும் பாடம் சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனா நிறைய கண்டிஷன்.

1. அவர் பக்கத்தில் உட்காரக்கூடாது. (பார்ரா? என்னா புத்திசாலி,  தூங்கினாலும் அவர் மேல விழாமல் இருப்பேனாம்)
2. எதிர்த்து நடுநடுவில் பேசப்பிடாது, (யார் கிட்ட? )
3. முக்கியமாக மிரட்டக்கூடாது (அந்த பயம்..வேணுமில்ல)

நானும் என் பங்குக்கு கன்டிஷன் போட்டேன்.

1. தூங்கி விழந்து மண்டை உடையும் படி பாடம் நடத்தக்கூடாது
2. லக்சர் கொடுத்து சாக அடிக்கக்கூடாது
3. எருமை மாதிரி பொறுமையாக சொல்லித்தரக்கூடாது

ம்ம்.... அதே அதே தான்....என் கன்டிஷனையெல்லாம் கேட்டதும், சத்தியமாக உனக்கு பாடம் சொல்லித்தர முடியாது, நீ ஒரு மட்டு மரியாதை இல்லாதவள், வாத்தியார் ஆச்சேன்னு கூட மதிக்க மாட்ட, ஓவர் திமிர் பிடிச்சவ, உனக்கெல்லாம் பாடம் சொல்லியே தரமுடியாது, நீயே படிச்சிக்கோன்னு சொல்லிட்டாரு.

 அடடா, இத்தனை வருஷம் கழிச்சி, சம்மதிக்க வைத்துவிட்டு, கடைசி நேரம், தவளை தன் வாயால் கெட்டுப்போச்சேன்னு, திரும்பவும் நீலிக்கண்ணீர் வடிச்சி, கைல கால்ல விழுந்து, மன்னிச்சிடுங்க.. உங்களைவிட்டால் அக்கவுண்ட்ஸ் சொல்லித்தர வேற யாருமே இல்ல, நிச்சயமாக மரியாதையா நடந்துக்குவேன், எதிர்த்து பேசவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன்.

தேர்வுநாளைக்கு முன் நாள் தான் நமக்கு படிக்கும் வழக்கம். முழுப்புத்தகத்தையும் ஒரு இரவுக்குள்ளோ, பகலுக்குள்ளோ படிக்கும் நேரம் தான் இருக்கும்.  அக்கவுண்ட்ஸ்க்கு முதல் நாள், வாத்தியார் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். ஒரே நாளில் அ முதல் ஃ வரை அக்கவுண்ட்ஸ் படிக்க முடியாது என்பதால், ரொம்ப சுருக்கமாக முன்னுரை கொடுத்து, முக்கியமாக, இவை மட்டுமே பரிட்சைக்கு வரும் என்று அவர் தேர்வு செய்த கணக்குகளை மட்டும் சொல்லிக்கொடுத்தார்.

"முன்னுரை முடிக்குமுன்னே, கணக்குக்கு போலாம் " என்றேன்.  - "அதானே உன்னால பொறுமையா கவனிக்க முடியாதேன்னு முறைத்துவிட்டு  கணக்குக்கு" போனார்.

"கணக்கு சொல்லிக்கொடுக்கும் போது, போதும் புரிஞ்சிடுத்து நானே போட்டுக்கறேன். அடுத்த கணக்கு சொல்லிக்கொடுத்தால் போதும்னு"  சொன்னேன். - புத்தகத்தை மூடிவிட்டு கடுப்பாக சென்றுவிட்டார்.

"அடுத்த கணக்கையும் அவரை எதிர்பார்க்காமல் நானே போட ஆரம்பித்தேன், ஆர்வத்தில் வந்து பார்த்தார். - குட், போடு போடு... தப்பா வந்தால் கரெக்ட் பண்றேன் 'சொல்லிட்டு போயிட்டார்.

தவறுகள் சிலதை சரி செய்து விளக்கினார். திரும்பவும் கொஞ்சம் தியரி. சொல்லிக்கொடுக்கும் போதே நிறுத்தினேன். போதும் நானே படிச்சிக்கிறேன்.


"இந்த எழவுக்குத்தான் உனக்கு நான் பாடமே சொல்லித்தர மாட்டேன்னு சொன்னேன். ஏன் சொல்லித் தரச்சொல்லிட்டு இப்படி இம்சை கொடுக்கற.. எதையாவது முழுசா முடிக்க விடறியா, பாதியில் போதும் போதும்ங்கற.. உனக்கெல்லாம் எவன் பாடம் நடத்தறது?! "

அதான் புரிஞ்சி போச்சின்னு சொல்றேனே...  உங்களாட்டும் நான் ஒன்னும் மக்கு மந்தாரம் இல்லை.. ஒரு தரம் சொன்னா போதும் புரியும்.. அதை எல்லாத்துக்கும் அப்ளை செய்துக்குவேன். சும்மா நய் நய்ன்னு லக்சர் கொடுத்து சாவ அடிக்காதீங்க... இப்படி லக்சர் கொடுத்துதான், அன்னைக்கு தூங்கி விழுந்தேன்.. .

மனுசன் பேசுவானாடி உன்கூட...

பேசாதீங்க.. யார் உங்களை பேச சொன்னா..

படிச்சது போதுமா உனக்கு.. பாசாயிடுவியா...

பாசாகிடுவேன்.. ... மேக்ஸ்ஸோட அக்கவுண்ட்ஸ் ரொம்ப ஈசி,,... ஒன்னுமே இல்ல அதுல.. ஒன்னுமில்லாத ஒரு சப்ஜெக்ட்ஐ தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்னா பில்டப்பூஊஊ

..ச்சீஈஈ, உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டே உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் பாரு... என்னை சொல்லனும்.. எக்கேடாவது கெட்டு ஒழி.. என்னை விடு..

*****************
தேர்வு முடிந்து, 67% வாங்கி பாஸாகிட்டேன். அப்புறம் என்ன?!!  வாத்தியாருக்கு ஒரே சந்தோஷம், என் முதுகைத்தட்டி, என் பொண்டாட்டி மாதிரி வருமான்னு ஒரே பாராட்டு மழைதான்.

டிஸ்கி : அவர் சொல்லிக்கொடுத்த கணக்குகள் மட்டுமே தேர்வில் வந்தன (Hidden Truth) என்பது குறிப்பிடத்தக்கது.! Obviously, he is an Expert in Accounts ! 

அணில் குட்டி : ஹி ஹி... இதுக்கு அப்புறம்,  இப்ப வரைக்கும் எது சொல்லித்தரக் கேட்டாலும்... எனக்கு தெரியாதுன்னு சொல்லுவாரே தவிர, அம்மணிய அவரு மதிக்கறதே இல்லை.. ....அதை சொன்னாங்களா இவிங்க?

பீட்டர் தாத்ஸ் : “If a child can't learn the way we teach, maybe we should teach the way they learn.” - 

ஏதோ செய்கிறேன்...சொல்கிறேன்..


Left to Right -

=> முட்டையில் டிசைன்ஸ் வரைந்தது.. இது இணையத்தில் ஏதையோ தேடும் போது கிடைத்ததைப்பார்த்து செய்தது....

=> ஆபிஸ் வீடுன்னு பாரபட்சமில்லாமல், கரண்டு இல்லனாலும், வேல இல்லானாலும் செய்யற வேல வரையறது.. கற்பனையாகவும் வரைவதுண்டு,  இம்ரஸ் ஆகியும் எதையாவது பார்த்து வரைவேன். .ஆனா..ஒரு சில படங்களை தவிர.. அது அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.. . இதில் இருக்கும் பெண் "ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!

=> பழைய டைரி பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த பேப்பர்  கிடைச்சது. அகமதாபாத் நகரில் இருக்கும் போது, அந்த நகரைப்பற்றி எழுதி வைத்தது..  அடிக்கடி எழுதியததால், கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு.. .. இப்ப இப்படி எழுத வரலைங்கறது... எனக்கே வருத்தமா இருக்கு..

=>  பென்சில் ஸ்கெட்ச் மட்டுமே செய்ய வரும்.. கலரிங் செய்தால்.. ரொம்ப சொதப்பலாக போய் முடியும். ..வாட்டர் கலரிங்கில் முயற்சி செய்த பூத்தொட்டி படம்....

=> மண் பாண்டாங்களில் டிசைன் வரைய ரொம்ப பிடிக்கும்.. .நவீன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி சிலவற்றை உடைத்தப்பிறகு, செய்யறதை குறைச்சிட்டேன்..  செய்து வைப்பதைவிட, அதை பாதுகாப்பது தான் பெரிய விசயமாக இருக்கு.

=> பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன். ஆரணியில் இருக்கும் தோழி, சாதாரணா பட்டுப்புடவை விலையில், ஸ்டோன் ஒர்க் செய்து 3000 - 5000 ரூ வரை அதிகமாக வைத்து விற்கிறார்கள் என்று சொல்லவும், அப்படி என்னதான் இருக்கு இதில் என செய்து பார்த்தேன். ஒன்னும் கஷ்டமில்ல, ரொம்ப ஈசியாத்தான் இருந்தது. பார்க்க அழகாகவும், ஆடம்பரத் தோற்றமும் தருகிறது.
****************

=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே  செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..

A perfect Family - இவர்களின் உடை எப்பவுமே மாறாது போல. மூவருமே அவர்களை பார்த்ததும், அவசர அவசரமாக, கையில்  கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள்... :) 

 => லைவ் நிகழ்ச்சிகள் போகும் போது, பிரபலங்களை பார்ப்பதில் ஒரு சந்தோஷம், அதே சமயம், அவர்கள் நடுநடுவே சொல்லும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. பாலுஜி, நடித்து, இசைஅமைத்து, சிகரம் படத்தில் பாடிய பாடல் சிலவற்றை சொல்லும் போது, எதுவுமே என் சுயமில்லை, அங்க இங்கன்னு எடுத்து த்தான் இசை அமைத்தேன்னு சொன்னாங்க. :). இதற்குமே ஒரு தைரியம் வேணும். இப்படி பல நிகழ்வுகளை சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலில் சென்ற லைவ் நிகழ்ச்சியும் இதுவே. (கடைசியும் கூடன்னு நினைக்கிறேன்.)


அணில் குட்டி : ஏதேதோ எழுதியிருக்காங்க, எல்லாம் சுயப்புராணமா இருக்கு... .. மீ ..தி ஃப்லீங்.. செம போர் யா.... ... சோ.. க்யுட் திஸ் பதிவு யா... !  பீட்டரூ... நீ தத்துவத்த எடுத்து வுடு...

பீட்டர் தாத்ஸ் :  “Reality is a prison, where one vegetates and always will. All the rest /thought, action /is just a pastime, mental or physical. What counts then, is to come to grips with reality. The rest can go.”
.

Killing Fields - ஐ.நா தீர்மானமும் அமெரிக்காவின் சொம்பும்!

பெண்ணின் நிர்வாணம் அழகு " என்ற பதிவை எழுதுவதற்கு காரணமான, அந்தக் காணொளியைப் பார்க்க நேர்ந்தது தான் முதல் தரம். அதிலிருந்து வெளிவர 3-4 நாட்கள் ஆகின. பின்னர் நண்பரிடம் பேசும் போது, பெண்கள்,குழந்தைகளை மட்டுமே பார்க்கிறீர்கள், வயதானவர்கள், நோயாளிகள் என எல்லோருமே போரிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் என்றார். பெண்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன்.  போர்க்காலத்தில் ரத்தமும், பிணங்களும் சகஜமே என்றாலும், கதை சொல்லி கேட்டும், சரித்திரத்தில் படித்தும் தான் தெரிந்துகொண்டு இருக்கிறேன். காணொளிகளைப் பார்த்து, நானே அங்கிருப்பது போல உணர்வது இணையத்தின் உதவியால்...

அடுத்து, உ.த கூகுள் பஸ்ஸில் ஒரு காணொளியைப் பகிர்ந்தார். கடவுளே, அதைவிட கொடுமையை இனி என் வாழ்நாளில் பார்க்க வாய்ப்பிருக்காது, இது தான் முற்று,  எல்லை என முடிவுக்கு வருமளவுக்கு இருந்தது. பெண் போராளிகள் துன்பறுத்தப்பட்டு, கொல்லப்பட்டு, பெண் பிணங்களை, "நல்ல வடிவு" என இழுத்துக்கொண்டு சென்ற காட்சியைப் பார்த்தே, மனம் பதறிப்போனது. உடனே  நிதானம் இழந்து உடல் நடுக்கத்தோடு தப்பும் தவறுமாக எழுதினேன். ஆனால் அதற்கு பின் பார்த்ததை எழுத வார்த்தைகள் இல்லை, இப்போது நினைத்துக்கொண்டாலும், சகலமும் ஒடுங்கிப்போகிறது.. அந்தக் காணொளியில் நான் கண்டது.. 

கர்ப்பமான ஒரு பெண் கொல்லப்பட்டு, அவள் வயிற்றில், கிழிந்த ஒரு துவாரத்தின் வழியாக, உள்ளே இறந்துபோன சிசுவின் ஒரு கை வெளியே வந்துத் தொங்கிக் கொண்டு இருந்தது.  கடவுளே, இந்தக் காட்சியைப் பார்த்தபின், இதற்கு மேலும், மோசமான ஒரு காட்சியே இனி பார்க்கவேண்டியதில்லை என நினைக்க வைத்தது. இதற்குப்பின், பெண்ணின் கற்பும், துன்புறுத்தல்களும், அவளின் உடல் பற்றிய பிரஞ்ஞையும் இல்லாமலே போனது." கில்லிங் ஃபீல்ட்ஸ்' வீடியோவில் குழந்தை கொல்லப்பட்ட காட்சி, புலிகளை மட்டுமல்ல, தமிழினத்தையே வேரோடு அறுத்து எரிய வேண்டுமென்ற வெறி அந்த அரக்கர்களிடம் இருப்பதை தெளிவாக்கியுள்ளது. .  

ஆமாம், அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரி என ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்தில் நாம்(இந்தியா) இருக்கிறோம். ஈராக்கோடு போர் தொடுத்து, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அழித்து, அமெரிக்காக்காரன் செய்யாத குற்றங்களா? அங்கு, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்போடு தான் இருந்தார்களா? மனித சடலங்களே இல்லாத, எதையுமே அழிக்காத ஒரு போராகத்தான் அது இருந்ததா? சதாம் ஹூசைன் என்ற மாவீரன் ஏன் தூக்கிலிடப்பட்டார் ? ஈராக் போரில், அமெரிக்கா போர் குற்றமே செய்யவில்லையா? பின்லேடன் + குழு விசாரனையின்றி ஏன் கொல்லப்பட்டார்கள்? ஆக, அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரியே ! உலகத்தை அவன் கையில் கொண்டுவர வேண்டும் என்ற திமிரும், அவனை வீழ்த்த யாருமில்லை என்ற மதப்பும் இருப்பதில், எப்போதும் குரலையும், கையையும் ஓங்கிக்காட்டிக்கொண்டு  இருக்கிறான். இவனோ வேற்று நாட்டு போர்க்குற்றங்களைப் படம் பிடித்து க்காட்டி, அதை ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றிப்பெற செய்து இருப்பதை, நமக்கு சாதகமான ஒரு நிலைபாடாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ராஜதந்திரமாக எதற்கோ உள்நோக்கத்தோடு அடிப்போடுகிறான் என்றே நினைக்க முடிகிறது. 

நிற்க, ஐ.நா இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள் அனைத்தும்,அநேகமாக அமெரிக்காவுக்கு எதிரானவை. இந்தியாவோ, தலையெழுத்தே என பத்தோடு பதினொன்னாக வாக்களித்திருக்கிறது என்பதற்கு மேலாக, எப்போதும் அமெரிக்காவுக்கு சொம்பு தூக்குவதால், இதை செய்ய வேண்டிய காட்டயத்தில் இருக்கிறது. அமெரிக்காகாரன் எதிர்காலத்தில் தரப்போகும் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத ஒரு சூழலில், நாமோ உணர்ச்சிவசப்பட்டு நம் நாட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறோம், அமெரிக்காக்காரனைப் பாராட்டுகிறோம். தமிழின மக்களுக்காகவோ, அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவோ, அமெரிக்காகாரன் இதை நிச்சயமாக செய்யவில்லை.  இந்த வாக்கெடுப்பைக் கணக்கில் கொண்டு நாம், ஏதேனும் நல்லது நடக்கும் என நம்பினால், தமிழனின் நெற்றியில் பெரிய நாமம்...இல்லையில்லை, மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா கூடவே சொம்பு தூக்கும் இந்தியா.   

Mr.Dynobuoy கூகுள் +ல இருந்து பகிர்கிறேன். நன்றி Mr.Dyno...

ஐ.நா தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்:

1. ஐநாவின் பங்களிப்பு இருப்பதால் கொஞ்சமேனும் பக்க சார்பு இல்லாத உண்மையான விசாரிப்புகள் வெளிவர'லாம்.

2. சேனல் 4ல் வெளியான விடியோவின் சாரம் பொதுமக்கள் இலங்கை அரச படைகளால் தாக்கப்பட்டனர். அதே சமயம் புலிகள் மக்களை கேடயமாக உபயோகித்தனர். இதை பற்றிய உண்மை தகவல்கள் வெளிவரலாம். போர் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் பல விடியோக்கள் போர்வீரர்கள் கையிலும் பொது மக்கள் கையிலும் சிக்கி உள்ளது. தற்போதைய லங்கா ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் / ஜர்னலிஸ்ட்டுகளிடம் இருக்கும் அந்த விடியோக்கள் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கலாம். மீதம் இருக்கும் புலிகளின் கிளைகள் வேர் அறுக்கப்படலாம். புலிகளின் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் அதை அரசாங்கம் களவாண்டதா என்பதும் தெரியவரும்.

3. புலிகளுக்கு யார் ஆயுதங்களைக் கொடுத்தார்கள்/விற்றார்கள், லங்கா அரசுக்கு யார் ஆயுதங்கள் வழங்கினார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும். (இந்தியாவின் அண்டர் டாயர் அங்கு கிழிபடலாம்). சீனா புலிகளுக்கும், லங்கா அரசுக்கும் ஆயுதங்கள் விநியோகித்ததும் தெரிய வரலாம். லங்கா அரசுக்கு மத்தியகிழக்கு நாடுகளுடன் இருக்கும் தொடர்பு வெளிவரலாம்!

4. இதன் மூலம் லங்கா அரசப்படைகள் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தவறியதாக நிருபிக்கப்படலாம். அவ்வாறு நேரும் பட்சத்தில் தமிழர்களுக்குத் தங்களை சுயாட்சியாக ஆளும் அதிகாரம் வழங்கப்படலாம். சுயாட்சியான மாகாணம்/ஆட்சி அமையும் வரை ஐநா பாதுகாப்புப்படை அங்கேயே இருக்கலாம். தமிழர்களுக்கு பாதுகாப்பு, அதே வேளை சுயாட்சியாக ஒரு மாகாணமாவது கிடைக்க இதைத்தவிர வேறு அறவழிகள் இன்று இல்லை!


5. தனி மாகாணம் கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் இன ஒழிப்புகளிலும் அக்கிரமிப்பில் இருந்தாகிலும் எஞ்சி உள்ளோர் தப்பி புணர்வாழ்வு அமைக்க இதை தவிர வேறு வழிகள் இல்லை!

இதில் டைனோ, பயன் என்று சொல்லப்பட்டவை எல்லாமே "..லாம்" என்றே முடித்திருக்கிறார். இந்த லாம்.'.. நடக்க'லாம், நடக்காமலும் போகலாம்... எதுவுமே நடக்கும் என உறுதியாக சொல்லமுடியாது. இப்படி உறதியில்லாத ஒரு விசயத்தை நம்பி, அமெரிக்காவிற்கு ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனம், இருப்பினும், ஒரு வேளை நல்லது நடந்தால்.........  காலம் மட்டுமே பதில் சொல்லும்..எதுவும் அதுவரை நிரந்தரமல்ல..

அணில் குட்டி : கவி, ஃப்ரம் ஹார்ட் சொல்றேன்... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை, இட்லி குஷ்பூவுக்கு பதிலா, ஐ.நாவில் பேச உங்களை அனுப்பி இருக்கலாம், அமெரிக்காக்காரன் துண்ட காணோம் துணியக்காணோம்னு ஓடியே போயி இருப்பான், இந்தியானாவே அவனுக்கு ஒரு இது...... ........ எது????? அட அதான் ஒரு இது....... ....வந்து இருக்கும்.... ம்ஹூஉம்ம்.....ஜஸ்ட்டு மிஸ்ஸூ.... 
என்ன மக்கா சொல்றீங்க? ! (ஏய் யாரும் சிரிக்க க்கூடாது இது சீரியஸ் குவஸ்டீனு:)))) ) (கிக்கி.. கிக்கி. கிக்கி...... இது கவி'க்கு தெரியாம பின்னாடி திரும்பி நின்னு சிரிச்சது.... :))))))))))) )

பீட்டர் தாத்ஸ் : Man has no right to kill his brother. It is no excuse that he does so in uniform: he only adds the infamy of servitude to the crime of murder.

உனக்கு 20 எனக்கு 18

கவி : நவீன் கால் நகத்தை எல்லாம் வெட்டு, எவ்ளோ அசிங்கமா இருக்குப்பாரு.. இந்தா நெயில் கட்டர்

நவீன் : ம்ம்மா.. நீயே வெட்டி விடேன் , 5 ரூ தரேன்...

கவி : யப்பாஆஆ.. பாருங்க உங்க பையன், நகத்தை வெட்ட சொன்னா, நீ வெட்டு 5 ரூ தரேங்கறான்.. .

பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..

கவி : ஞே !

 ***************

கவி : நவீன் டோஃபல் படிச்சிட்டியா.. எந்த அளவில் இருக்கு .......

நவீன் :  டோஃபல் னு ஒரு வார்த்தைய தெரிஞ்சி வச்சிக்கிட்டு ஓவரா டார்ச்சர் பண்ணாத.. .. அப்ரிவியேஷன் தெரியுமா உனக்கு?

கவி : ஓ தெரியுமே...  டெஸ்ட் இன் இங்லீஷ் லேங்குவேஜ்..

நவீன் : கிர்ர்... அப்பா பாருங்கப்பா உங்க பொண்டாட்டியின் பொது அறிவை....

கவி : ம்க்கும்...ரைட்டா சொல்லிட்டா மட்டும் நீ என்ன எனக்கு பாராட்டு விழாவா நடத்தப்போற  போடா டேய்.. !

*********

நவீன்: குறுக்குசித்ரா (குருஷேத்ரா) நடக்குது அண்ணா யுனிவர்சிட்டி போறேன்

கவி: குறுக்குசித்ரா ஏன் அண்ணா யுனிவர்சிட்டிக்கு போய் நடக்கறா?

நவீன்: ஓஓஓ.... இது மொக்கையா? ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா? ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா? அந்த வெட்டி ப்ளாகர்ஸா? எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு... தாங்கமுடியல உன் மொக்கை..

கவி: ஸ்ஸ்யப்பா கோ-ப்ளாகர்ஸ் இருக்கவரை நான் சேஃப்

**************

கவி: (ஏதோ ஆங்கிலப்படம் பார்த்துக்கிட்டு இருக்கான்:) இந்த ஹீரோ அக்ஷைகுமார் மாதிரியே இருக்காரு

நவீன்: ஓ நீ ஹிந்தி படமெல்லாம் கூட பார்ப்பியா?

கவி : ஆமா முன்னெல்லாம் ஹிந்தியும், மலையாளமும் தான் அதிகம் பார்ப்பேன், 

நவீன்.: ஆனா உனக்கு தான் இங்கிலீஷூம் சேர்ந்து எந்த லேங்குவெஜும் தெரியாதே மதர்,  எப்படி பார்ப்ப? ஹோ ..இதுக்கு பேர் தான்  "படம் பார்ப்பதா" ???? :))))))))

கவி : அடிங்....... ஓடிப்போயிடு.. பிச்சிடுவேன்.. ! :)))))))

**************

கவி : என்னோட எஸ்.எம்.எஸ் பார்த்து உங்கப்புள்ள பயந்து நடுங்கிட்டான் போல, பவ்யமா இனிமே செய்யமாட்டேனு பதில் வந்து இருக்கு ?

பழம்நீ : ஆமாண்டி, உன் புள்ளைக்கு மட்டுமா , உன்னை பார்த்தா எனக்குக்கூட பயம், பாரு பேசும் போதே நடுங்குது எனக்கு... 

கவி : :))))) சரி சரி.. ரொம்ப பயப்படாதீங்க நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. ! :)

பழம்நீ : உன் புள்ளைக்கு ஃபோன் செய்து அவன் உன் மெசேஜ் பார்த்து எப்படி நடுங்கினான்னு விளக்கச்சொல்லவா? 

கவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்ன்ன்ன் ?? எப்பவோ ஒரு தரம் மரியாதையா மெசேஜ் செய்து இருக்கான் , பொறுக்காதே உங்களுக்கு....எதுவும் கேக்க வேணாம்.

பழம்நீ : ம்ம்ம்..அது  !! அந்த பயம் இருக்கட்டும்.. ! 

கவி : அவ்வ்வ்... எகொகஇ ?!

*************

ஸ்டவ் க்ளீன் பண்ண கஷ்டப்படறேனு, மளிகை வாங்க சென்றபோது மிஸ்டர் மஸ்ஸில்ஸ் ஸ்ப்ரே லிக்விட் வாங்கிக்கொடுத்தான். வீட்டுக்கு வந்து, ஸ்டவ் துடைக்க யூஸ் பண்ணிட்டு, புள்ளக்கிட்டவும் காமிச்சிசாச்சி...

"அப்படியே உலகமே தெரிஞ்ச மாதிரி பேசத்தெரியும், ஆனா, ஈசியா இருக்க எதையும் வாங்கத்தெரியாது.. பத்தியா எவ்ளோ ஈசியா இருக்கு...  (கமெண்ட் அடிச்சிட்டு வெளியில் போயாச்சி..)

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன்....

யம்மாஆ......

என்னடா..?

அதை  Oven'க்கு யூஸ் பண்ணக்கூடாது, நீதான் அதிபுத்திசாலியாச்சே..  Oven ஆயிலா இருக்குன்னு அதுக்கு போட்டுட்டாத..

ஹி ஹி...  எப்பவோ இதைப்போட்டு க்ளீன் பண்ணிட்டேனே.. நீ ஏன் முதல்ல சொல்லல.. வா வந்து பாரு, ஜிகு ஜிகுன்னு இருக்கு... :)

கிர்ர்ர்ர் ஏன்ன்மா இப்படி இருக்க..?  ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா.?? Oven சாப்பாடு செய்யறதும்மா, இதெல்லாம் போடக்கூடாது, அதுல ஆசிட் கன்ட்டைன்ஸ் இருக்கும்..

ஃபேனை பத்தி மட்டும் பேசாத, ஃபேன் சூப்பரா சுத்தமாச்சா இல்லையா?  Oven' ல இதைப்போட்டு துடைச்சிட்டு, தண்ணிப்போட்டும் துடைச்சிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லைடா...  எதா இருந்தாலும் நீ முன்னமே சொல்லிட்டு போயிருக்கனும்...

ம்க்கும் சொன்னா மட்டும் கேட்டுடுவியா... ஆனா.. இன்னும் ஒன்னே ஒன்னு தான் நீ இந்த வீட்டுல பண்ணல...

இன்னுமா பாக்கி இருக்கு? என்னடா அது சொல்லு சொல்லு சீக்கிரம், அதையும் பண்ணிடறேன்..

அப்பாவையும் என்னையும் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணல.. :((((

அட சூப்பர் ஐடியாவே இருக்கே.... ஒழுங்கா இரண்டு பேரும் குளிச்சி சுத்தமா இருங்க.. இல்லைன்னா மறந்து போயி குளிக்கிற தண்ணியில ஆசிட் ஐ கலந்தாலும் கலந்துடுவேன்...

அடப்பாவி அம்மா..?!

*********

அணில் குட்டி : ஒரு 15 அடி எப்பவும் தள்ளியெ  இருக்கனும், சுத்தம்னு சொல்லி, என்னையும் தண்ணிக்குள்ள போட்டு எடுத்து பிழிஞ்சி எடுத்தாலும் எடுத்துடுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “A person might be an expert in any field of knowledge or a master of many material skills and accomplishments. But without inner cleanliness his brain is a desert waste.”


போவோமா ஊர்கோலம் ..

<=  கடலூர் - (மருதாடு கிராமம் செல்லும் சாலை) தானே' க்கு முன்
தானே' க்கு பின் அதே சாலை =>

தானே ' புயலின் தாக்கத்தை ரொம்ப லேட்டாகத்தான் பார்க்கமுடிந்தது. இருந்தாலும், மனிதர்களை பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் மரங்கள், நிலங்கள் என, தானே' வின் ஆட்டம் ரொம்பவே அதிகம். 

குறிப்பாக தென்னை மரங்கள் இனி காய்கள் கொடுக்குமா என தெரியவில்லை. பண்ரூட்டி பக்கம் முக்கிய விவசாயம், வியாபாரம் முந்திரி மற்றும் பலாப்பழம். இந்த வருடம் மட்டுமில்லை, புயலில் அழிந்த முந்திரி தோப்புகள் திரும்ப அப்படியே கிடைக்க இன்னும் 10 வருடம் உழைக்க வேண்டி இருக்குமாம். 10 வருடத்திற்கு அதை நம்பியவர்களின் சாப்பாட்டுக்கு வழி?.

தானே வந்து போனது மொத்தமே 10 மணி நேரம். ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் தொடரும்.. நிலை... :(
 
   





ஒரு நாளைக்கு பயிர் அறுவடை செய்ய 70ரூ கூலியாம், ஒரு பெண் 2 ஆள் வேலைய செய்வாங்களாம். ஒரு நாளைக்கு 4 ஏக்கரா முடிப்பாங்களாம் . 
ஒரு  ஏக்கரா = 43560 Sq Ft.  ஒரு நாளைக்கு ஒரு பெண் 4 ஏக்கராவிற்கு 140 ரூ சம்பளம் மட்டுமே வாங்கறாங்க. :(((         =>
விபரம் சொன்னது ரோஸ் கலர் புடவையம்மா.             

காற்றில் தென்னைமரம் அப்படி இருப்பதாக நினைக்கவேண்டாம். பாண்டிச்சேரி தொடக்கத்திலிருந்து, கடலூர் மாவட்டம் முழுக்க அத்தனை தென்னை மரங்களும், மேற்கு நோக்கி திரும்பி, தன் நிலைகுலைந்து, நிற்கின்றன.  இவற்றில் திரும்ப, காய்கள் வருமா என காத்திருந்து தான் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.  :( 



<=  இந்த (டேரியா) பூவை தலையில் வைத்து 25 வருடங்களுக்கு மேலாகவே இருக்கும், பள்ளிக்காலங்களில், கலர் கலராக தேடி தேடி எடுப்பேன்.  பிறகு விருப்பம் வாசனை பூக்கள் மட்டுமே வைப்பது என மாறிய ப்பிறகு இந்த பூவை வைப்பதே இல்லை, கிடைப்பதும் இல்லை. திருமண வீட்டில் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))

   இனி வருங்காலம் இப்படித்தான்  இருக்கும். இதுவே நிரந்தரம். =>


மரங்கொத்தி ????  மிக அருகில் சென்று போட்டோ எடுத்தும் பறக்கவேயில்ல.. .


<=   இந்த அம்மாவுக்கும் ஒரு நாளைக்கு அதே ரூ.70 கூலி.  நாள் பூராவும் வெயில்ல வேல செய்யனும். 

யமுனா சித்தியின் கைவைத்தியம்

சென்னை மாநகர், தண்ணீர் பிரச்சனையில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த சமயம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, லாரிகளில் தண்ணீர் வந்து, தெருக்களில் வைக்கப்பட்டிருந்த, கறுப்பு நிற தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு செல்லும். குடங்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று/நிற்காமல் முட்டி மோதி தண்ணீர் பிடித்து வந்துவிட்டால், இமாலய சாதனைதான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இந்த சாதனையை செய்ய வேண்டிய நிர்பந்தம் சென்னை மாநகரில் அத்தனை குடும்பத்தினருக்கும் இருந்தது.

அப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் , யமுனா சித்திக்கு முதுகு வலி வர ஆரம்பித்தது. தண்ணீர் தூக்கி தூக்கியே முதுகு வலி வந்து விட்டதாக நினைத்த சித்தி, வலியை குறைக்க கை வைத்தியத்தில் இறங்க ஆரம்பித்தார். முதலில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து பார்த்தார்.  இது ஒரு 15 -20 நாட்களுக்கு தொடர்ந்தது, முதுகு வலியும் விடுவேனா என தொடர்ந்தது. சித்திக்கு, வலியின் மேல் சந்தேகம் வர ஆராய்ச்சியில் இறங்கினார். எப்படி வலிக்கிறது, எங்கே வலிக்கிறது, எப்படி உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால் வலிக்கிறது என ஒரு பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி வைக்கும் அளவுக்கு முதுகு வலியின் தன்மையைப்பற்றி தெரிந்துக்கொண்டு, கட்டுரை முடிவையும் வெளியிட்டார். அது தான் முதுகு சுளுக்கு.

அடுத்து, கைவைத்தியம் முதுகு சுளுக்குக்கு மாறியது. ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி வைத்து , சுளுக்குக்கு எண்ணெய் விட்டு நீவி விட்டு, தட்டில் குறைகிறதா என பார்த்துக்கொண்டே வந்தார். சுளுக்கு விலக விலக, தண்ணீர் குறைய ஆரம்பிக்குமாம். அட.. தண்ணீர் குறையவில்லை, சித்தியின் சுளுக்கும் விலகவில்லை.

வீட்டில் சித்தப்பாவும் , பிள்ளைகளும் டாக்டரிடம் வர சொல்லி எத்தனை முறை அழைத்தும், கைவைத்தியத்தில் கில்லாடியான சித்தி வர மறுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே சொன்னார், "தண்ணீ தூக்கறதுல வர முதுகு வலிக்கு, யாராச்சும் செலவு செய்து டாக்டர்கிட்ட போவாங்களா?" போங்க போங்க. .இதோ இன்னும் கொஞ்ச நாள்ல, என் கை வைத்தியத்தாலேயே குணப்படுத்தி காட்டறேன்னு " சவால் விட்டார்.

நாட்கள், மாதங்களாகி கடந்தது, முதுகு வலியுடன். நடு நடுவே குடும்ப மருத்துவரிடம் சென்று, வலிக்கு மருந்தும் வாங்கி சாப்பிட்டார். ஆனால் வலி அவரை விடுவில்லை. ஆமாம், வலியோடு சித்தி கடந்த மாதங்கள் மொத்தம் எட்டு.  எட்டாம் மாதத்தில் ஒரு நாள், வலி தாள முடியாமல் துடிக்க, குண்டுக்கட்டாக சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள்.  அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர்கள் முதுகு வலிக்குக்காரணம் மார்பகப்புற்று நோய் என்றார்கள். .

ஆனால், சித்தி அசரவில்லை." எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பேயில்லை.என் மூன்று குழந்தைகளுக்கும், 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். எனக்கெப்படி புற்றுநோய் வரும். இதை நான் நம்பத்தயாராக இல்லை, வேறு எதாவது காரணம் இருக்கலாம் " என மருத்துவரிடம் வாதிட்டார். மருத்துவர்கள் அடுத்து, பயாப்சி டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்லவும், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தவும், டெஸ்ட் எடுக்கப்பட்டது.

முடிவு, புற்றுநோய் முற்றிய நிலை கண்டறியப்பட்டது. மார்பங்களை அகற்ற முடியாத நிலையில் புற்று நோய் பரவிவிட்டு இருந்தது. வேறென்ன செய்யமுடியும் இனி, ஒரளவு குணப்படுத்த மருத்துவர்கள் சொன்ன கிமோத்தெரஃபி(Chemotherapy) மற்றும் ரேடியஷன் தெரஃபி(Radiation Therapy) சிகிச்சை முறைகளை சித்தி தொடர்ந்து செய்ய வேண்டி வந்தது.

சென்னை, அடையாரில் உள்ள, புற்றுநோய் மருத்துமனைக்கு சென்று, தகுந்த சிகிச்சை மேற்கொண்டார்கள். முதுகு வலி ஆரம்பித்தது அவரது 50 ஆவது வயதில்.  எட்டு மாதங்கள் கழித்த நிலையில், நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு , தொடர்ந்து இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். இரண்டாவது வருட முடிவில் பரவியிருந்த மார்பக புற்றுநோய் , விரைந்து குறைய ஆரம்பித்த நிலையில், சித்திக்கு திடீரென்று சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனிந்த பிரச்சனை என , திரும்பவும் மருத்துவர்களை நாடியதில், மார்பகத்தில் குறைந்த புற்றுநோய், நுரையீரலை ப்பற்றி பரவ ஆரம்பித்தது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மருத்துவமனை சென்று, கீமோத்தெரஃபி மற்றும் ரேடியஷன் சிகிச்சைகளை பெற்று வந்த சித்தி, ஒரு கட்டத்தில், முடியாமையில், மருத்துவமனையில், நிரந்தர நோயாளியாக சேர்க்கப்பட்ட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது 53 ஆவது வயதில் எங்கள் அனைவரையும் விட்டு மறைந்தார்.

இப்பவும் சித்தியின் மன தைரியத்தை அனைவரும் பாராட்டினாலும், கைவைத்தியம் பார்க்காமல், வலி வந்தவுடனேயே மருத்துவரை சென்று பார்த்து, அனைத்து பரிசோதனைகளையும் செய்திருந்தால், இன்றும் அவர் எங்களுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் செய்யும் ஒரே தவறு... நமக்கு நாமே டாக்டர் ஆவது தான்.

*** **** ***

மார்பகப்புற்று நோய் பற்றி மேலும் விபரங்கள் அறிய :


1. மார்பகப்புற்று நோயின் அறிகுறிகள் :


http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://health.msn.com/health-topics/breast-cancer/5-surprising-signs-of-breast-cancer
http://www.medicinenet.com/breast_cancer/article.htm
http://www.webmd.com/breast-cancer/guide/breast-cancer-symptoms-and-types



2. மார்பகப்புற்று நோய் விளக்கப்புகைப்படங்கள் :


http://breastcancerpictures.blogspot.in/2010/08/sign-of-breast-cancer.html
http://beauty-healthcare.blogspot.in/2010/12/breast-cancer-treatment-breast-cancer.html



3. மார்பகப்புற்று நோய் காணொளிகள் : 

What Is Breast Cancer?  http://www.youtube.com/watch?v=YNUBnX9JHQs 

How to Recognize Breast Cancer Symptoms  http://www.youtube.com/watch?v=yTHyMNBkbOY

Breast Cancer Progression and Staging  http://www.youtube.com/watch?v=l2lRZuEK4Y0&feature=related

 


இது நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை க்காக எழுதப்பட்டது.