பெண்களுக்கு இந்த நகம் வளர்ப்பதிலும், அதை பராமரிப்பதிலும் உள்ள ஆர்வம் அவர்களின் பொறுமையையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. இதையும் கூட ஒரு கலை' ன்னு சொல்லலாம். எளிதான விசயமல்ல, பெண்களால் மட்டுமே முடிந்ததும் கூட. பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். (நன்றி சிறுமுயற்சி-முத்துலட்சுமி )
எனக்கு இது எட்டாத கனி :). 8 ஆம் வகுப்பில் என்னுடன் படித்த செல்வி, நீள நீளமான, மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட நகங்கள் வைத்திருந்தாள். அவள் கைவிரல்களை பிடித்து, எப்படி நகம் வளர்க்கனும்னு கேட்டது இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது. எனக்கு நகம் வளர்க்க தெரியவில்லை, முடியவில்லை, வளரவும் இல்லை. முக்கிய காரணம் கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும். அந்த அளவு நான் மோசமில்லை என்றாலும், எனக்கும் நகம் வளர்ந்துவிடாதளவு கடிக்கும் பழக்கம் இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு வரை இருந்தது.
நகத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கடிக்கும் பழக்கத்தையாவது நிறுத்த வேண்டுமென, எனக்கு நானே சேலன்ஞ் செய்து எப்படியோ நிறுத்திவிட்டேன். கடிக்காமல் இருக்க, சில சமயம் விரல்களில் கைக்குட்டைக்கூட சுற்றி வைத்திருப்பேன். கடிக்கப்போகும் போது, கைக்குட்டை, நகத்தை கடிக்கக்கூடாது என நினைவுப்படுத்தும். கடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டாலும், நகம் வளர்க்க எனக்கு சரிப்பட்டு வரவில்லை.
நம் தோழிகளிடம் "நகம்" குறித்து ஒரு குட்டி சர்வே எடுத்ததில் :
விஜி ராம் : ம்ம்க்கும் இந்த கருமத்துக்கு காசு வேற செலவு பண்ணுவாங்களாக்கும். மெனிக்யுர் பண்ணினதே இல்லை. நெயில் பாலிஷ் அடிப்பதும் இல்லை. ஒன்லி மருதாணி. காலுக்கு வேணும்னா பெடிக்யுர் பண்ணுவேன். அப்பவும் நோ நெயில் பாலிஷ். ட்ரை ஸ்கின் என்பதால் 2 மாசத்துக்கு ஒரு முறை பெடிக்யுர் உண்டு.
தென்றல் : பொதுவா நெயில்பாலிஷ் பயன்படுத்துவதில்லைங்க.. மேனிக்யூரும் செய்து கொண்டதில்லை.. நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு
விதூஷ் : க்ளோஸ் கட் பண்ணிதான் வச்சிருக்கேன். எனக்கு நகம் வளக்கிறது பிடிக்காது. நெயில் பாலிஷ் ரொம்ப ரொம்ப அரிதாக பயன்படுத்துவேன், கால் நகங்களுக்கு மட்டும். PEARL, dried lavender கலர் மட்டுமே பிடிக்கும். மூணு மாசத்துக்கு ஒரு தரம், பெடிக்யூர் மட்டும். நகம் பராமரிக்க ஒரு வாரத்துக்கு பதினைந்து நிமிஷங்கள், ஒரு சின்ன பிரஷால் தினமும் குளிக்கும் போது விரல் நகங்களை கிளீன் பண்ணிக்குவேன். வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம். குழந்தை (0-6 வயது) இருக்கிற அம்மா/அப்பாக்கள் நகம் வளக்கிரதை அறவே தவிர்க்கணும். ரொம்ப ஆழமா யோசிச்சு பார்த்தா கால்சியம் குறைபாடு இல்லாதவங்க, அதை ஒரு ஆயுதமாவும் பயன்படுத்தலாம்.

முத்துலட்சுமி : நெயில் பாலீஷ் பூசுவதில்லை. எனக்கு வீட்டு வேலைகளில் உதவ ஆள் உண்டு.. அதனால் விரல் நகங்கள் மோசமடைவது குறைவு. நகம் வளர்த்திருக்கவங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதோடு சரி. நான் வளர்க்கிறதில்லை. குழந்தைகளோடு இருக்கும்போது தவறி அது கண்ணை குத்திடுமோன்னு நினைச்சாலே பயம்மா இருக்கு. கால் நகங்களுக்கு தான் அப்பப கவனம் எடுப்பது உண்டு.
தென்றல் : பொதுவா நெயில்பாலிஷ் பயன்படுத்துவதில்லைங்க.. மேனிக்யூரும் செய்து கொண்டதில்லை.. நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு
விதூஷ் : க்ளோஸ் கட் பண்ணிதான் வச்சிருக்கேன். எனக்கு நகம் வளக்கிறது பிடிக்காது. நெயில் பாலிஷ் ரொம்ப ரொம்ப அரிதாக பயன்படுத்துவேன், கால் நகங்களுக்கு மட்டும். PEARL, dried lavender கலர் மட்டுமே பிடிக்கும். மூணு மாசத்துக்கு ஒரு தரம், பெடிக்யூர் மட்டும். நகம் பராமரிக்க ஒரு வாரத்துக்கு பதினைந்து நிமிஷங்கள், ஒரு சின்ன பிரஷால் தினமும் குளிக்கும் போது விரல் நகங்களை கிளீன் பண்ணிக்குவேன். வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம். குழந்தை (0-6 வயது) இருக்கிற அம்மா/அப்பாக்கள் நகம் வளக்கிரதை அறவே தவிர்க்கணும். ரொம்ப ஆழமா யோசிச்சு பார்த்தா கால்சியம் குறைபாடு இல்லாதவங்க, அதை ஒரு ஆயுதமாவும் பயன்படுத்தலாம்.
தாரணி பிரியா : நகம் வளர்த்தும் பழக்கமே இல்லை, வாரத்திற்கு ஒரு முறை (சண்டே) காலைல முதல் வேலையே நகம் வெட்டறதுதான் அதே போல நெயில் பாலீஷும் இது வரை வாங்கினதே இல்லை எப்பவாது மருதாணி வைக்கிறது மட்டும்தான்.
சுசி குணா: (இவங்க தான் இந்த பதிவின் மாடல் விரல் அழகி - நன்றி சுசி !) ஒரு குறிப்பிட்ட அளவு விட்டிட்டு அப்பப்ப வெட்டிடுவேன். இல்லேன்னா உடையும். எதாவது செய்யும்போது மடங்கி வலிக்கும். எனக்கு நானே கீறி வச்சிடுவேன். நெயில் பாலிஷ் கை நகத்தில எப்போதும் போட்டிருப்பேன்.
வாரத்துக்கு ஒரு தடவை கலர் மாற்றுவேன். மெனிக்கியூர் என் வாழ்க்கேல இது வரை ஒரு தடவை கூட செய்ததில்லை. நகம் பராமரிக்க, பழைய பாலிஷ் ரிமூவ் பண்ணி புதுசு போட ஒரு ரெண்டு நிமிஷம்?? மத்தபடி வளந்திட்டா அளவா கட் பண்ண ஒரு ரெண்டு நிமிஷம். கட் பண்ணும்போது கவனமா இருப்பேன். குளிச்சதும் இல்லேன்னா பத்து பாத்திரம் தேய்ச்சதும் வெட்டணும். அப்பதான் ஈஸியா இருக்கும். அதோட சிதிலமாகாம வெட்டும். நகம் வளர்க்க எனக்கு பிடிச்சிருக்கு. அழகாவும் இருக்கு.
Dr. Delphine victoria
1. நகம் பராமரிப்பு : it is absolutely essential that we have to take care of our finger nails. Most infections are spread through finger nails and that is why we insist on good hand washing. i don't believe in growing the nails though it might add beauty to the fingers especially ladies who have long and thin fingers. To me, keeping the nails trimmed and clean is my priority rather than growing it for beauty. I cut the nails as close as possible at least once in three days
2. நெயில் பாலிஷ் பயன்படுத்துதல் : I don't use nail polish as my profession & my working place does not permit it.
3. மெனிக்கியூர் : Manicure is good because the dead skins are removed and the unwanted cuticles are removed. Nails can be filed.
4. நகம் பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : may be 10 minutes/day This includes applying lotion for both legs and hands before going to bed
5. நகம் வளர்ப்பதின் பயன் : My finger nails should be clean. Doing a pedicure is good . our feet work hard and they need to be pampered. Your toes & legs should be clean and must give a neat appeal to others when they see you. It is advised to keep the nails unpainted & exposed to sunlight at least for seven days / month. I do a pedicure once a month. The most important thing here is that the pedicure technician should use clean instruments.
டாக்டர் மெனிக்கியூர் செய்துக்கொள்வது நல்லதுன்னு சொல்லியிருக்காங்க. நகத்தை சுத்தமாக வைத்திருப்பது தான் மிகவும் முக்கியம்னும் சொல்லியிருப்பதை கவனிக்க.
நிற்க, நகம் பற்றிய பொதுவான விசயத்திற்கு வருவோம். அழகு நிலையங்களில் மெனிக்யூர் http://www.hintsandthings.co.
அதற்கு பிறகு, நாம் தேர்வு செய்கின்ற நெயில் பாலிஷ்ஷை போட்டுவிட்டு, ட்ரேயில் உள்ள குளிர் தண்ணீரில் விரல்களை நனைத்து விடுகிறார்கள்.. அப்போது தான் பாலிஷ் கலையாமல் நன்றாக ஒட்டுமாம். நகம் வேலை முடிந்தவுடன், கையிற்கு க்ரீம் தடவி மசாஜ் செய்து விடுகிறார்கள். இது தேவைக்கு தகுந்த மாதிரி வாக்ஸ்ஸிங், கிளீனிங் என தொடரும். அந்த கதை நமக்கு வேணாம், நகத்தோடு நிறுத்திக்கொள்வோம். இதற்கு மொத்தமாக அந்த பெண் எடுத்துக்கொண்ட நேரம் 25- 30 நிமிடம். எனக்கு பெருமூச்சுத்தான் வந்தது. 30 நிமிஷம் நம்ம கைய அந்த பெண்ணிடம் விட்டுட்டு, வேடிக்கை பார்க்கனும். 30 நிமிஷம் என்னால ஒரு இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் உட்காரமுடிந்திருந்தால், கின்னஸில் இடம் பிடித்திருப்பேன்.
பெண்களுக்கு இருக்கும் பொறுமையும், தன்னை அழகு செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இதையெல்லாம் செய்யவைக்கிறது. முக்கியமாக நகங்கள், பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு காரணியும் கூட. தற்காத்துக்கொள்ள நிச்சயம் உதவும். தேவைப்பட்டால், கத்தியைப்போன்றே நகங்களை பயன்படுத்த முடியும். அதற்காகவாவது பெண்களுக்கு நகம் தேவையென எனக்கு சின்ன வயசில் என் அத்தை மகள் போதித்தார்.
நகங்கள் குறித்து சில தகவல்களை பார்ப்போம்.
1. நகங்களை பாதுக்காப்பது மற்றும் அழகுப்படுத்திக்கொள்வதை பற்றிய தகவல்கள் இதில் இருக்கின்றன. http://www.ultimate-cosmetics.
2. இந்த லிங்கை க்ளிக்கி பாருங்கள், எத்தனை விதமான டிசைன்ஸ் :).. அழகோ அழகு http://www.nailsmag.com/style/
3. ஓ மை கடவுளே' ன்னு சொல்ல வைக்கும் டிசன்ஸ் கீழுளுள்ள லிங்கில் உள்ளது. குறிப்பாக ஸ்கல், நியூஸ் பேப்பர் வரிக்குதிரை டிசைன்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. http://slodive.com/
அணில் குட்டி : சுசி ஆன்ட்டி மாதிரி, என் விரல்களையும் கலர்ஃபுல்லா ஆக்கிக்க, ஆன்ட்டிக்கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கப்போறேன். (கவி காதில் பொக..) ஆன்ட்டி, நீங்க ரெடியா ?!!
பீட்டர் தாத்ஸ் : I suppose if you've never bitten your nails, there isn't any way to explain the habit. It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.
.
18 - பார்வையிட்டவர்கள்:
அதுமட்டுமா..சொன்னேன்..
நம்ம அம்மாக்கள் எல்லாம் வெடிப்புக் காலோட மஞ்சள் பூசிக்கிட்டு ..ஓடி ஆடி வேலை செய்திருக்காங்க அந்தக்காலத்துல..அதை வச்சி எப்படி கண்டுபிடிப்பாங்களோன்னும் சொன்னேனே..
வேணா நல்லா தன்னைப்பாத்துக்குது ராசாத்தி மாதிரி ந்னு கண்டுபிடிக்கலாம்..அம்மாக்கள் எல்லாம் வீட்டில் செருப்பு போடும் பழக்கமில்லாம தண்ணியில் வேலை செய்து பாவம் .. வெளக்கென்ணெய் மஞ்சள் மருதாணின்னு போட்டு கஷ்டப்பட்டிருக்காங்க..
@ முத்து : இப்படித்தான் தெளிவா இருக்கனும்.. தூங்ட்டாலும், தண்ணிய முகத்தில் அடிச்சி எழுப்பி விடனும் ஆவ்வ்வ்வ்.. :)
@ Delphine Ma'm :Thq for your valuable time info. :)
//பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். //
ஆண்களின் விரல்களைப் பார்த்து எப்படிபட்டவரென சொல்லமுடியாதா???
#டவுட்
-----
//கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும்.//
சேம் பின்ச்..
நான் சேம் பின்ச் சொன்னது உங்கப்பாவுக்கு..
---------
//நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு///
நாங்கல்லாம் நகமே வச்சிகறது இல்லை..
---------
//வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம்.//
நாங்கல்லாம் கத்தியால ரெண்டா வட்டி சுலுவா உரிப்பமே..
---------
//It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.//
உங்க நேர்மயக் கண்டு நான் வியக்கேன்..
---------
இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், கால்/கை கட்டை விரல்களில் சிலருக்கு உள்நகம் வளரும். ரொம்ப வலிக்கும். என் அம்மாவுக்கு அப்பிடி இருந்து, ஆர்தரைடிஸ் பிரச்சினை என்று நினைத்து கொண்டிருந்தாங்க. ஒரு தரம் நான் அவங்களுக்கு நகம் வெட்டி விட்ட போது கவனிச்சு சொன்னேன், இப்போது எந்த வலியும் இல்லை. அதனால் உள்நகம் பிரச்சினையை நகத்தை ஓரளவுக்கு கவனிச்சு அப்பப்போ குட்டையா வெட்டி வைச்சுகரதன் மூலம் தவிர்க்கலாம். இதுக்கு மருத்துவ தீர்வும் இருக்கு. அதை தகுந்த மருத்துவர்களிடம் ஆலோசித்து அறிவுரை பெறலாம்.
Thanks Kavita for posting my opinion.
@செந்தில் :
//பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். //
ஆண்களின் விரல்களைப் பார்த்து எப்படிபட்டவரென சொல்லமுடியாதா???
#டவுட்
-----
//கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும்.//
சேம் பின்ச்..
நான் சேம் பின்ச் சொன்னது உங்கப்பாவுக்கு..//
இப்பத்தான் புரியுது. .நீங்களும் அப்பாவும் "நண்பேன்டா" !
------------
//நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு///
நாங்கல்லாம் நகமே வச்சிகறது இல்லை..//
அதான் கடிச்சி துப்பியாச்சே... :)
---------
//வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம்.//
//நாங்கல்லாம் கத்தியால ரெண்டா வட்டி சுலுவா உரிப்பமே..//
மீ டூ.. ஒன்லி கத்தி தான் :) வடவம் போடும் போது அப்படி உரிச்சே.... கட்டைவிரலும் ஆல்காட்டி விரலும் வெந்துப்போச்சி.. (1கிலோ சின்ன வெங்காயம், 1/2கி பூண்டு, உரிச்சேன்)
---------
//It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.//
உங்க நேர்மயக் கண்டு நான் வியக்கேன்..//
ஹி ஹி..அது யாரோ ப்ரைனி க்வாட்ஸ் ல சொல்லி இருந்தாங்க. .நமக்கு மேட்ச் ஆச்சா. .அதான் சுட்டாச்சி.. :)
---------------------
@விதூஷ் : உள்நகம்னா என்னான்னு எனக்கு புரியல. :( .. விம் ப்ளீஸ் எப்படி இருக்கும் ?! போட்டோஸ் லிங்ஸ் எதாச்சும் இருந்தா கொடுங்க..
எனக்கு எதுக்கு தாங்க்ஸூ...நீங்க தாங்கஸ்ஸூ.. :)
கவிதாஆஆஆஆ.. கை குடுங்க.. ரொம்ப நல்ல பகிர்வு.. இந்த சின்ன விஷயத்த எப்டி எழுதப் போறிங்கன்னு நினைச்சேன்.. ஆனா அவ்ளோ அக்கறையா எழுதி இருக்கிங்க.. ஷமத்த்த்து :) அப்படியே என்னோட மனமார்ந்த நன்றிகளும் :)
அணில்குட்டி.. நாட்டி.. முதல்ல நகங்கள பிச்சுப் போடாம் பொறுமைய்ய்ய்யா இருக்கணும்.. அப்பறம்தான் மீதி :)
நன்றி சுசி :)
நல்லா விளக்கமா எழுதியிருக்கீங்க. நன்றி
:) அடிப்பாவி.
சரி சரி. பெடிக்யுர் பண்ணும்போது சுகமா இருக்கும், சில நேரம் தூக்கமே வந்துடும் :)
உடல்நலக்குறைவுகள் பல நகங்களால் பிரதிபலிக்கப்படுகின்றன, உதாரணம்: மஞ்சள் காமாலை.
நகங்களை இயற்கை நிலையில் விடுவதே நல்லது. நன்றாக வெட்டி விடுவதால் நக இடுக்குகளில் அழுக்கு சேராமல் இருக்கும் என்பதும் முக்கிய்மே. மருதாணி தவிர்த்து வேறு நகப்பூச்சுகள் தேவையற்றவையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ முகில் : நன்றி
@ விஜி : :)))) தூங்கு தூங்கு வீட்டுல தூங்கறது பத்தாம.. பார்லர்ல காசுக்கொடுத்து தூங்கப்போறியா.. என்னத்தான் பண்றா பப்பு..இதையெல்லாம் கவனிக்காம ?! :))
@ ராகவன் சார் :. நல்ல கருத்து. நன்றி.
ஜி+ ல் லக்கி, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தாங்க. பார்த்தீங்களா?
சொல்ல மறந்துட்டேன். மெனிக்யுர் பண்ணிக்கிட்டதில்லை, ஆனா சுசி வைச்சிருக்கிற மாதிரி முனையில் வெள்ளையாவும் மற்ற இடங்களின் டிசைனாவும் இருக்கும் மெனிக்யுருக்கு ஃப்ரென்ச் மெனிக்யுர்னு பேரு. இங்க 1200 ரூபாய் சார்ஜ் ஆகும். ஸ்பாவோட சேர்ந்து.
@விஜி, சூப்பர் பிசினஸ்ஸா இருக்கே. எனக்கு தான் செய்துக்க பிடிக்கல. .அட்லீஸ்ட் மத்தவங்களுக்கு செய்து சம்பாதிக்கலாம் போலவே :)
//ஜி+ ல் லக்கி, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தாங்க. பார்த்தீங்களா?//
ஓ, பார்த்தேனே ஃபேஸ்புக்கில், நன்றி கூட சொன்னேனே. லக்கி மொபைலில் குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார், அதற்கு நன்றி கூறினேன். ஃபேஸ்புக் தயவால் இம்முறை பல வாழ்த்துக்கள்.
ஜி+ பார்க்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரொம்ப நல்ல பகிர்வு... கலக்கிட்டிங்க.
@ சே.குமார் - நன்றி
@ ராகவன் சார் : நன்றி.பாருங்க.
Post a Comment