கவி : நவீன் கால் நகத்தை எல்லாம் வெட்டு, எவ்ளோ அசிங்கமா இருக்குப்பாரு.. இந்தா நெயில் கட்டர்
நவீன் : ம்ம்மா.. நீயே வெட்டி விடேன் , 5 ரூ தரேன்...
கவி : யப்பாஆஆ.. பாருங்க உங்க பையன், நகத்தை வெட்ட சொன்னா, நீ வெட்டு 5 ரூ தரேங்கறான்.. .
பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..
கவி : ஞே !
***************
கவி : நவீன் டோஃபல் படிச்சிட்டியா.. எந்த அளவில் இருக்கு .......
நவீன் : டோஃபல் னு ஒரு வார்த்தைய தெரிஞ்சி வச்சிக்கிட்டு ஓவரா டார்ச்சர் பண்ணாத.. .. அப்ரிவியேஷன் தெரியுமா உனக்கு?
கவி : ஓ தெரியுமே... டெஸ்ட் இன் இங்லீஷ் லேங்குவேஜ்..
நவீன் : கிர்ர்... அப்பா பாருங்கப்பா உங்க பொண்டாட்டியின் பொது அறிவை....
கவி : ம்க்கும்...ரைட்டா சொல்லிட்டா மட்டும் நீ என்ன எனக்கு பாராட்டு விழாவா நடத்தப்போற போடா டேய்.. !
*********
நவீன்: குறுக்குசித்ரா (குருஷேத்ரா) நடக்குது அண்ணா யுனிவர்சிட்டி போறேன்
கவி: குறுக்குசித்ரா ஏன் அண்ணா யுனிவர்சிட்டிக்கு போய் நடக்கறா?
நவீன்: ஓஓஓ.... இது மொக்கையா? ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா? ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா? அந்த வெட்டி ப்ளாகர்ஸா? எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு... தாங்கமுடியல உன் மொக்கை..
கவி: ஸ்ஸ்யப்பா கோ-ப்ளாகர்ஸ் இருக்கவரை நான் சேஃப்
**************
கவி: (ஏதோ ஆங்கிலப்படம் பார்த்துக்கிட்டு இருக்கான்:) இந்த ஹீரோ அக்ஷைகுமார் மாதிரியே இருக்காரு
நவீன்: ஓ நீ ஹிந்தி படமெல்லாம் கூட பார்ப்பியா?
கவி : ஆமா முன்னெல்லாம் ஹிந்தியும், மலையாளமும் தான் அதிகம் பார்ப்பேன்,
நவீன்.: ஆனா உனக்கு தான் இங்கிலீஷூம் சேர்ந்து எந்த லேங்குவெஜும் தெரியாதே மதர், எப்படி பார்ப்ப? ஹோ ..இதுக்கு பேர் தான் "படம் பார்ப்பதா" ???? :))))))))
கவி : அடிங்....... ஓடிப்போயிடு.. பிச்சிடுவேன்.. ! :)))))))
கவி : என்னோட எஸ்.எம்.எஸ் பார்த்து உங்கப்புள்ள பயந்து நடுங்கிட்டான் போல, பவ்யமா இனிமே செய்யமாட்டேனு பதில் வந்து இருக்கு ?
பழம்நீ : ஆமாண்டி, உன் புள்ளைக்கு மட்டுமா , உன்னை பார்த்தா எனக்குக்கூட பயம், பாரு பேசும் போதே நடுங்குது எனக்கு...
கவி : :))))) சரி சரி.. ரொம்ப பயப்படாதீங்க நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. ! :)
பழம்நீ : உன் புள்ளைக்கு ஃபோன் செய்து அவன் உன் மெசேஜ் பார்த்து எப்படி நடுங்கினான்னு விளக்கச்சொல்லவா?
கவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்ன்ன்ன் ?? எப்பவோ ஒரு தரம் மரியாதையா மெசேஜ் செய்து இருக்கான் , பொறுக்காதே உங்களுக்கு....எதுவும் கேக்க வேணாம்.
பழம்நீ : ம்ம்ம்..அது !! அந்த பயம் இருக்கட்டும்.. !
கவி : அவ்வ்வ்... எகொகஇ ?!
*************
ஸ்டவ் க்ளீன் பண்ண கஷ்டப்படறேனு, மளிகை வாங்க சென்றபோது மிஸ்டர் மஸ்ஸில்ஸ் ஸ்ப்ரே லிக்விட் வாங்கிக்கொடுத்தான். வீட்டுக்கு வந்து, ஸ்டவ் துடைக்க யூஸ் பண்ணிட்டு, புள்ளக்கிட்டவும் காமிச்சிசாச்சி...
"அப்படியே உலகமே தெரிஞ்ச மாதிரி பேசத்தெரியும், ஆனா, ஈசியா இருக்க எதையும் வாங்கத்தெரியாது.. பத்தியா எவ்ளோ ஈசியா இருக்கு... (கமெண்ட் அடிச்சிட்டு வெளியில் போயாச்சி..)
திரும்ப வீட்டுக்கு வந்தவுடன்....
யம்மாஆ......
என்னடா..?
அதை Oven'க்கு யூஸ் பண்ணக்கூடாது, நீதான் அதிபுத்திசாலியாச்சே.. Oven ஆயிலா இருக்குன்னு அதுக்கு போட்டுட்டாத..
ஹி ஹி... எப்பவோ இதைப்போட்டு க்ளீன் பண்ணிட்டேனே.. நீ ஏன் முதல்ல சொல்லல.. வா வந்து பாரு, ஜிகு ஜிகுன்னு இருக்கு... :)
கிர்ர்ர்ர் ஏன்ன்மா இப்படி இருக்க..? ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா.?? Oven சாப்பாடு செய்யறதும்மா, இதெல்லாம் போடக்கூடாது, அதுல ஆசிட் கன்ட்டைன்ஸ் இருக்கும்..
ஃபேனை பத்தி மட்டும் பேசாத, ஃபேன் சூப்பரா சுத்தமாச்சா இல்லையா? Oven' ல இதைப்போட்டு துடைச்சிட்டு, தண்ணிப்போட்டும் துடைச்சிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லைடா... எதா இருந்தாலும் நீ முன்னமே சொல்லிட்டு போயிருக்கனும்...
ம்க்கும் சொன்னா மட்டும் கேட்டுடுவியா... ஆனா.. இன்னும் ஒன்னே ஒன்னு தான் நீ இந்த வீட்டுல பண்ணல...
இன்னுமா பாக்கி இருக்கு? என்னடா அது சொல்லு சொல்லு சீக்கிரம், அதையும் பண்ணிடறேன்..
அப்பாவையும் என்னையும் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணல.. :((((
அட சூப்பர் ஐடியாவே இருக்கே.... ஒழுங்கா இரண்டு பேரும் குளிச்சி சுத்தமா இருங்க.. இல்லைன்னா மறந்து போயி குளிக்கிற தண்ணியில ஆசிட் ஐ கலந்தாலும் கலந்துடுவேன்...
அடப்பாவி அம்மா..?!
*********
அணில் குட்டி : ஒரு 15 அடி எப்பவும் தள்ளியெ இருக்கனும், சுத்தம்னு சொல்லி, என்னையும் தண்ணிக்குள்ள போட்டு எடுத்து பிழிஞ்சி எடுத்தாலும் எடுத்துடுவாங்க..
பீட்டர் தாத்ஸ் : “A person might be an expert in any field of knowledge or a master of many material skills and accomplishments. But without inner cleanliness his brain is a desert waste.”
18 - பார்வையிட்டவர்கள்:
//அந்த வெட்டி ப்ளாகர்ஸா? எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்.... உங்களுக்கு தோஸ்த்தா இருக்கதுனால நாங்களும் சேந்துல்ல வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு... இதெல்லாம் தேவையா எனக்கு!! :-X
//அதை அவன்'க்கு யூஸ் பண்ணக்கூடாது, //
எவன், எவன்னு கொஞ்ச நேரம் குழம்பி.... :-(((
”சுத்தம் சோறு போடும்-ங்கிறதுனாலத்தான் நீ சமையல் கத்துக்கவேயில்லியோ?” - இது என்னவர் டயலாக்!! :-))))
அருமை..சிறப்பான பகிர்வு..நன்றி சகோ.
செம :-)))))))))
:)
நவீன் ROCKS...
ஹூஸைனம்மா,
//க்ர்ர்ர்ர்ர்ர்ர்.... உங்களுக்கு தோஸ்த்தா இருக்கதுனால நாங்களும் சேந்துல்ல வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு... இதெல்லாம் தேவையா எனக்கு!! :-X
//
:)))) இதுக்கேவா? நான் கெட்டு குட்டுசுவரா போனதே உங்களாலல(ப்ளாக்ர்ஸ்) தான்னு இரண்டு பேருமே சொல்லிக்கிட்டு இருப்பாங்க எப்பவும்.. :))
//எவன், எவன்னு கொஞ்ச நேரம் குழம்பி.... :-(((//
மாத்திடேன்.. :)
//”சுத்தம் சோறு போடும்-ங்கிறதுனாலத்தான் நீ சமையல் கத்துக்கவேயில்லியோ?”//
இவங்களுக்கு எல்லாம் சுத்தத்தை பத்தி தினம் க்ளாஸ் எடுக்கனும் போல.. :)
@ குமரன் : நன்றி
@ அமைதிசாரல் : :)) நன்றி
@ சிவசங்கர் : நன்றி :)
பளிச். பளிச். பல்புகள்:))
@ வித்து : :)))) வெயிட்டீஸ்.. புள்ள பெருசா ஆனவுடன் அங்கவும் எரியும்..பளீச் பளீச்.ன்னு.. :))
பீட்டர் தூள் ;-))
Semaiyaa irukke. :-)
@கோப்ஸ் : பல சமயங்களில் பீட்டர் ஸ்கோர்ஸ் :)
@ ஓலை : ஆமா இல்ல ? :)
சிரிச்சுகிட்டே இருக்கேன். ஹுசைன் அம்மா சொன்ன மாதிரி உங்களால நாங்களும் வாங்கிகட்டிக்க வேண்டி இருக்குதே:-)
// பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..
கவி : ஞே ! //
:)
// இதுக்கு பேர் தான் "படம் பார்ப்பதா" ???? //
Nice...
@ அபிஅப்பா : :)) சிரிங்க சிரிங்க.
உங்க பேரை எல்லாம் சொல்லி நான் தப்பிச்சிக்கிறேன்.. :)
@ முகில் : நன்றிங்க.
Hv shared an award with you:)
http://vidhyascribbles.blogspot.in/2012/03/blog-post.html
ஹா ஹா செம காமெடி
எல்லாம் இதுவரை வாசிக்காத புது ஜோக்ஸ். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment