தேவையானவை :
மக்ரோனி - ஒரு பாக்கெட் (200 (அ) 250 கிராம்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - பெரியது ஒன்று
தக்காளி - பெரியது ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டீஸ்பூன் (இத்துடன், சோம்பு 1/4 ஸ்பூன், லவங்கம் 2 சேர்த்துக்கொண்டேன்)
தாளிக்க : சோம்பு, லவங்கம், பட்டை, பட்டைஇலை
மிளகாய் தூள் : 3/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் : ஒன்று (நீட்டில் வெட்டவும்)
முட்டை - இரண்டு
கொத்தமல்லி : சிறிது
எண்ணெய் , உப்பு : தேவையான அளவு
செய்முறை : மக்ரோனியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு வேகவைத்து , வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும். ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் வேகவைக்கனும். அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.
வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, லவங்கம், சோம்பு, பட்டை, பட்டைஇலை போட்டு தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, கடைசியாக பட்டாணி , தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் முட்டை உடைத்து ஊற்றி கிளரி, கடைசியாக வேகவைத்துள்ள மக்ரோனி சேர்த்து உப்பு த்தேவைப்பட்டால் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
மக்ரோனி எப்படி செய்தாலும் சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.
நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகள் எதுவுமே எங்க வீட்டு சமையல் இல்லைதான். ஒரே ஒரு முறை கூட எங்க வீட்டில் இவையெல்லாம் செய்ததில்லை. காலத்திற்கு தகுந்தார் போன்றும், குழந்தைக்காகவும் சமைக்க கற்றுக்கொண்டவை. நிச்சயமாக எங்க வீட்டு பாரம்பரிய சமையல் இல்லை.
அணில் குட்டி : ஹி ஹி.. உங்க வீட்டு ஸ்பெஷல் இதுன்னு எதாது ஒன்னு உங்களுக்கு செய்யத்தெரியுமா.. எப்பவும் சும்மாவே ஓவர் பில்டப்பூஊ......
பீட்டர் தாத்ஸ் : A good cook is a certain slow poisoner, if you are not temperate”

10 - பார்வையிட்டவர்கள்:
ஐ..சூப்பரான சமையலா இருக்கும் என்று தோனுதே.எதுக்கும் எடுத்து வச்சிக்கிறேன்.ஒரு நாள் கண்டிப்பா உதவும்.
நன்றி சகோதரி.
அட, சமைக்கவும் செய்றீங்க போல!! :-)))
//அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.//
இதை எப்படிச் செஞ்சீங்கன்னு விளக்கம் ப்ளீஸ்!!
@ குமரன்: நன்றி
@ ஹூசைனம்மா : இதெல்லாம் ஓவரு. நான் சமைக்காம யார் செய்வாங்களாம்? :))
////அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.//
இதை எப்படிச் செஞ்சீங்கன்னு விளக்கம் ப்ளீஸ்!!//
மக்ரோனியை கண்ணாடி கிண்ணத்தில் கொட்டி, கொஞ்சம் உப்பு போட்டு,அது மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, கலக்கி அவனில் வைக்கவும். Microwave on 100% power for 9.00 mins.
பிறகு வெளியில் எடுத்து, தண்ணீரை வடிக்கட்டி வச்சிக்கிட்டேன்.
வெறும் மசாலா போட்டு மக்ரோனியை மகாராணி யாக்கினாலும், ஒவ்வொன்றுக்கும் ஒரு தமிழ் பேர் கண்டுபிடிச்சு போடுங்க ! :-)
ஓலை : :)) பப்ளிக் பப்ளிக் !
தேடி சோறு நிதம் தின்று //
Correct..
@இளா
//தேடி சோறு நிதம் தின்று //
Correct..//
ஆமா ரொம்ப கரெக்ட் !
போட்டோவில் இருக்கிற மக்ரோனியைப் பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.
என்ன விசேஷம்னு தெரியல. நீங்க, Scribblings அப்புறம் புதுகைத் தென்றல் எல்லோரும் ஒரே சமயத்தில சமையல் குறிப்பு பதிவிட்டு இருக்கீங்க. நல்ல ஒற்றுமை.
@ முகில் : செய்து சாப்பிட்டு பாருங்க. நல்லாத்தான் இருக்கும். நன்றி
3 பேருக்குமே தெரியாது.. இப்ப நீங்க சொல்லித்தான் தெரியுது.....
Post a Comment