அடிக்கடி தொலைக்காட்சியில் இந்த விளம்பரத்தை இப்போது ப்பார்க்க முடிகிறது. "கூரை வீடுகளே இல்லாமல் தமிழகத்தை ஆக்கவேண்டும் என்பதே குறிக்கோள்" என்பதாக. இதைப்பார்க்கும் போது எல்லாம், கூரையே இல்லாதவர்கள் பற்றிய நினைவுகள் வருவதை தடுப்பதற்கு இல்லை. கூரையை காங்க்கிரீட் வீடுகள் ஆக்கலாம். கூரைக்கூட இல்லாமல் நடுத்தெருவில் குடித்தனம் நடத்துபவர்களுக்கு.. ? அவர்களின் வாழ்வியல்பு மாறவே மாறாதா.. ?? அதற்காக அரசு எதுவும் செய்யமுடியாதா? இல்லை அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லையா?
தெருவோரத்தில் இருக்கும் இவர்களுக்கு எதுவும் திட்டங்கள் வந்தால், நிம்மதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விஜய நகரில் 100 அடி ரோடில் செல்லும் போது, அங்கே 21 பஸ் நிறுத்தத்தின் அருகில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை கண்டுக்கொள்ளாமல் செல்ல முடிவதில்லை.
எத்தனை குடும்பங்கள் மழை வெயில் என பாராமல் அங்கே வசிக்கிறார்கள். இவர்களின் வீடு என்பது, 3 கற்கள் வைக்கப்பட்ட ஒரு அடுப்பு, ஒரு பெட்டி அல்லது ப்ளாஸ்டிக் கவர்களில் திணிக்கப்பட்ட பொருட்கள், துணிகள், அவற்றை மூட ஒரு ப்ளாஸ்டிக் கவர், அல்லது பெரிய பெரிய பேனர்கள் அவற்றை மூட இருக்கும். மேற்கூரை என்று பேச்சுக்கு கூட ஒன்றும் இல்லை. வெட்டவெளி. இரவு நேரங்களில் "அழகி" படத்தில் காண்பித்தது போன்று மூடிய கடை வாசல்களில் சென்று தங்கிக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். அல்லது விஜயநகர் பஸ் நிறுத்தம் பெரியதாக உள்ளது, அங்கும் வந்து படுத்துறங்க வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் சென்று பார்க்கவில்லை.
இவர்களின் வாழ்க்கை முறை எனக்கு வியப்பளிக்காமல் இல்லை, வீட்டை கூட்டி பெருக்கி, கழுவி, பூஜை அறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்று எதுவும் இல்லை. ஒரே லைன் கட்டிய குடும்பங்கள், இவர்களுக்கு சாலையோர பணி என்பது என்னுடைய யூகம், வேறு என்ன வேலை செய்தால் தான் என்ன.. வீடு என்பது அவர்களுக்கு வானமே கூரை, தெருவே பஞ்சு மெத்தை, எத்தனை மனிதர்கள் சுற்றி இருந்தாலும், எல்லோர்க்கும் இடையில் வெட்ட வெளியில் குடித்தனம் நடத்துக்கிறார்கள். "ப்ரைவசி ப்ரைவசி" என்று சொல்கிறோமே அப்படி எதுவுமே இல்லை, அதை ப்பற்றி கூட இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அன்னாந்து பார்த்தால் "ஆஆ" வென வாய்பிளக்க செய்யும் பலமாடி குடியிருப்புகள்.!
இதே போன்று இன்னும் சில இடங்கள், திருவான்மயூர் சிக்னல் அருகில், ஜெமினி மேம்பாலம் கீழ் பகுதியில், வேளச்சேரி காமாட்சி ஆஸ்பித்திரி மேம்பாலம் அடியில், காமாட்சி ஆஸ்பித்திரி துரைப்பாக்கம் ரோடில், இடது புறமாக பார்த்துவந்தால், இப்படி கூட்டமாக ஒரு இடத்தில் மக்கள், அதுவும் மழை நேரத்தில், அவர்களை பார்க்க கண்களில் ரத்தம் வராதது மட்டுமே குறை, ஏனென்றால் அங்கே ஒதுங்க கூட இடம் இல்லை, பொட்டல் காடு அது.. :( , அடுத்து விஜிபி கோல்டன் பீச் பார்க்கிங் இடத்தை கடந்தால், அவர்களின் பராமரிப்பின்றி அழிந்துக்கொண்டு இருக்கும் இடத்தில் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ள சில குடும்பங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சாலையின் ஓரத்தில் வேற்று மாநிலத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்... இவை எல்லாமே பஸ்ஸில் போகும் போது கண்டவை. சென்னையில் மக்கள் வாழ இப்படி பல இடங்கள் உள்ளன என்று மட்டும் தெரிகிறது..
இவர்கள் யாருக்குமே கூரை க்கூட இல்லை... .
வீடு என்ற தலைப்பில் முன்னரே எழுதி இருக்கிறேன். இப்போது இருக்கும் வீட்டைத்தவிர்த்து, இன்னொரு வீடு அல்லது மனை வாங்கி தனி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. அதற்கான தேவை இருப்பதாகவும் தெரியவில்லை.
நிற்க, இப்போது என்னவோ வேறு வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை முதல் காரணமாக போனதில், மாற்று யோசனை எதுவும் இல்லாமல், வேறு வீடு தேடும் படலம்.. புதிய வீடு பிரஞ்ஞை இல்லாமல் பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தீடிரென வீடு தேடும் படலம் ஆரம்பித்துள்ளது. வாடகை அல்லது விலை ????? ம்ஹூம்.. இரண்டுமே "எட்டாத கனி", என்ற நிலைதான் கண் முன் நிற்கிறது.
நீலாங்கரையில் இடது பக்கம் செல்ல வேண்டாம் என சொல்லியும், இல்லை இந்த பகுதியை நான் பார்த்ததில்லை அழைத்து செல்லுங்கள் என அடம் பிடித்து சென்றேன். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று என்னை கவர, வாட்ச்மேனை கேட்டு பார்த்தேன்.
"வாடகைக்கு இருக்குங்க.. "
'எவ்வளவு வாடகை ? "
"1 லட்சத்து 45 ஆயிரம்.. "
"நான் அட்வான்ஸ் கேக்கலைங்க."
"நானும் அட்வான்ஸ் சொல்லலைங்க.. "
".............." (நிச்சயமாக பேச்சு வரவில்லை, அதிர்ச்சி என் முகத்தில் தெரியாமல் இருக்க ரொம்ப முயற்சி செய்தேன் னு கண்டிப்பாக சொல்லனும் :) )
"வாடகைதாங்க 1.45 ஆயிரம்.."
"ம்ம்..அப்ப அட்வான்ஸ் ? "
"ஓனரை த்தான் கேக்கனும்"
*********
"அப்பவே சொன்னேன் கேட்டியா?"
"நிஜம்மாவே இவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்கள் இருக்குமா? ஆபிஸ், அல்லது ஆபிஸ் கெஸ்ட் ஹவுஸ் இருந்தால் சரி.. குடும்பங்களும் இப்படியா? "
"ம்ம்ம்.. சினிமாக்காரர்கள் இருக்க வாய்ப்பு இருக்கும்மா.. '
"ஹோஒ.... .." (அதற்கு மேல் வாடகையை லட்சங்களில் கொடுத்து வாழ்க்கை நடத்தும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை பற்றிய யோசனையில் ஆழ்ந்தேன், இவர்களுக்கு மாத வருமானம் கோடிகளில் இருக்குமோ?!! )
**********
திரும்பி வரும் போது மீண்டும் விஜய் நகரில் சாலையோரத்து மக்களை நோக்கி என் கண்கள் செல்லாமல் இல்லை... அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தனை வித்தியாசம்.. ???? .......... நடுவில் நாமும்...இப்போது கலைஞரின் காங்க்கிரீட் வீடுகளும்....
அணில் குட்டி அனிதா : மக்கா புரியுதா????? வீடு தேடறாங்க.. கலைஞர் வீடு கொடுக்கறாரு.. .இவங்களுக்கு அதுல ஒன்னு தேத்தலாம்னு அதைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்க.. விடுங்க விடுங்க.. .அம்மணிய நேத்திக்கு இன்னைக்கா பாக்கறோம்....?!!
பீட்டர் தாத்ஸ் : A house must be built on solid foundations if it is to last. The same principle applies to man, otherwise he too will sink back into the soft ground and becomes swallowed up by the world of illusion.
கலைஞரின் "காங்க்கிரீட்" வீடுகள்
Posted by : கவிதா | Kavitha
on 11:05
Subscribe to:
Post Comments (Atom)
16 - பார்வையிட்டவர்கள்:
அவங்களுக்கு எல்லாம் பீகார்ல வீடு இருக்கு.
It is a pitiable scene in Chennai. So I hate to visit Chennai.
ஊப்ஸ். இதுதான் இருக்கறதிலேயே ரொம்பக் கஷ்டமான வேலை. மூன்றாவது முறை வீடு தேடும்போது அடையாறில் ஒரு வீட்டைக் காட்டி 25 என்றார். எனக்கு வாடகைக்கு வேணும்ங்க. விலைக்கு வாங்கற ஐடியா இல்லை என்றேன். எரித்து விடுவது போலப் பார்த்துவிட்டு விலைக்குன்னா பெரிய்ய ஒன்னு ஆகுமென்றார். ஆல் தி பெஸ்ட்:))
அபிஅப்பா பின்னூட்டம் -
கவிதா, நீங்க சொல்வது எல்லாம் சரிதான். இப்ப நீங்க சொல்ல வருவது கலைஞர் காங்கிரீட் வீடு கட்டி தரும் இந்த திட்டம் சரியா தப்பா? இல்லாட்டி முதலில் ரோட்டோரம் வீடு இல்லாதவர்களுக்கு கட்டி கொடுத்துட்டு பின்ன இவங்களுக்கு கட்டி தரனும் என சொல்ல வர்ரீங்களா? இல்லாட்டி எல்லாத்தையும் குறை மட்டுமே சொல்லிட்டு சொல்யூஷன் சொல்லாம தப்பிக்கும் மனோபாவமா என எனக்கு சரியாக அவதானிக்க முடியவில்லை.
ஆனால் ரோட்டோரம் இருப்பவர்களுக்கு வீடு கட்டி தரக்கூடாது என நான் இப்போ சொல்ல வரலை. அப்படி தப்பா புரிஞ்சுகிட்டு கன்னாபின்னான்னு திட்டுபவர்கள் திட்டிகுங்க. எனக்கு கவலை இல்லை.
எங்க தஞ்சை மாவட்டத்திலே கரும்பு வெட்ட அந்த தொழில் தெரிந்த ஆட்கள் கிடையாது. நெல்லிகுப்பம் பகுதில இருந்து வருவாங்க. குடும்பம் குடும்பமாக ஒரு 5 மாதம் வந்து தங்கி எல்லா வயல்லயும் வெட்டிட்டு நல்ல காசு பார்த்துட்டு போவாங்க. ஆண்கள் வெட்டுவாங்க. பெண்கள், குழந்தைகள் அதை கட்டு கட்டி ரோட்டோரம் இருக்கும் லாரிக்கு ட்ராக்டருக்கு எடுத்து போவாங்க. செம காசு.
தொடர்ச்சி........
ஆனா தங்கி இருப்பது முதலில் வெட்டிய வயலிலோ அல்லது களத்திலே கூரை எதும் இல்லாமல் ஒரு 3 குடும்பம் 3 குடும்பமா சேர்ந்து கட்டி வச்சு அடுப்பு மூட்டி அங்க உள்ள சின்ன கடையிலே பத்து பைசாவுக்கு மிளகாய் தூள் எல்லாம் வாங்கி ஒரு குழம்பு வச்சு நீங்க சொன்ன மாதிரி ஒதுங்க இடம் இல்லாமல் ப்ரைவசி இல்லாமல் தான் இருப்பாங்க.
ஒரு தடவை எங்க ஊர் பொண்ணு ராஜம்ன்னு பேர். அவ கூட இன்னும் 2 பொண்ணுங்க. எல்லாரும் கட்டு தூக்கும் வேலைக்கு போகும் போது அதிலே 3 வாலிபர்கள் அவங்களை காதலிச்சி கடத்திகிட்டுபோயிட்டானுங்க அவங்க ஊருக்கு.
பின்னே ஊரில் எல்லாரும் நெல்லிகுப்பம் போய் பார்த்தா எல்லாம் மாடமாளிகைகள்.....
பின்ன தான் தெரிஞ்சுது.. அவங்க இந்த 5 மாத வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்துகிட்டு இருக்காங்கன்னு. அது வ்ரை அவங்க பாவம்னு நினைத்த ஊர்காரங்க அப்படியே பிரம்மிச்சு போயிட்டாங்க.
இந்த உதாரணத்தை எதுக்கு சொல்றேன்னா அது போல தான் நீங்க பார்த்த சென்னை ரோட்டோர மக்கள்ன்னு சொல்ல வரலை. ஆனா அவங்க கிட்டே நீங்க பேசி பாருங்க. "என்னடா உனக்கு பிரச்சனை? உன் ரேஷன்கார்டு எங்க? உனக்கு படிப்பு உன் குழந்தைக்கு படிப்பு இலவசமா இந்த அரசாங்க கொடுக்கலையா? இதிலே இருக்கும் அந்த வயதானவங்களுக்கு எதும் ஓ ஏ பி அரிசி கொடுகலையா? முதியோர் பணம் கொடுக்கலையா? நீ ஒரு கிராமத்துக்கு போய் வாழ்கை நடத்தினா உனக்கு புறம்போக்கிலே ஒரு குடிசை கட்டிகிட்டா உன்னை விரட்டி அடிச்சாங்களா யாராவது? நீ ஏன் இங்க வந்து சிரமப்படுகின்ராய்?ன்னு கேட்டு பாருங்க....
@ ரவி : :)) ஏன்ன்..?
@ ரத்தினவேல் : உங்க பதிவுகளை படிச்சேன்.. நல்லா இருக்குங்க..
நீங்க சொல்றத பார்த்தா சென்னைல மட்டும் தான் இப்படியா??? :((((
@ வித்து : ம்ம்ம்ம்.. உங்களைத்தான் நினைச்சிக்கிட்டேன். .. கிட்டத்தட்ட 2 மாசமா தேடிட்டு இருக்கோம்... இன்னும் கிடைக்கல. கிடைச்சாலும் எங்களுக்கு பிடிக்கல :( பிடிச்சா.. வாடகை.. ?!! அவ்வ்வ்வ்வ்வ்... அவ்ளோ வாடகை கொடுக்க மனசும் வரல... :(
@ அபிஅப்பா : :)) வய் இம்புட்டு டென்ஜன்? ம்ம்ம்?..
இந்த திட்டத்தை "தப்பு" ன்னு சொல்லவே இல்லை..
இத்துடன் சேர்த்து அல்லது இதற்கு முன்னர் வீடு இல்லாதவர்களுக்கும் கொடுக்கலாமே என்பது ஆதங்கம்.
நீங்க சொல்லி இருப்பது போன்ற குடும்பங்கள் எங்கள் தெருவில் கூட இருக்காங்க. .அதாவது ஒரு கான்ட்ராக்ட் முடியற வரை வேலை செய்யும் இடத்திலேயே கூரை அமைத்து, தங்கி வேலை முடித்து சென்றுவிடுவார்கள்.
குறிப்பிட்டு இருப்பது அவர்களைப்பற்றியது அல்ல. எப்போதுமே தெருவோரம் இருப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையே தெருவில் தான். :(
அபிஅப்பா,
அரசால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும். தனிப்பட்ட முறையில் உதவ க்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பின், இப்படி ஒரு பதிவு தேவைப்பட்டு இருக்காது, அதை தனிமனிதர்களே செய்வார்கள்.
1. அரசு அவர்களை பொது இடங்களில் ஆக்கரமிப்பு செய்யக்கூடாது என கட்டாயத்தின் பேரில் அப்புறப்படுத்தவேண்டும்.
2. அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு தேவையான மாற்று வசதியை செய்து தரவேண்டி இருக்கும்.
பொது இடங்கள் தனிப்பட்ட புழக்கங்களுக்கு இல்லை என்பதை மக்களை உணரவைக்க வேண்டியது அரசின் வேலையல்லவா? நீங்க கேட்ட சொல்யூஷன் மேல சொன்ன இரண்டு தான். இதை தனி மனிதர்களால் செய்ய இயலாது.
சென்னையில் முன் இருந்த அளவுக்கு பிளாட்பாரவாசிகள் இல்லாதது என் கடந்த சென்னை விஜயத்தின்போது (8 வருடம் கழித்து) கண்டேன். புறநகர்ப்பகுதிகளில் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு கொடுக்கும் வீட்டை விற்று/வாடகைக்கு விட்டுவிட்டு மீண்டும் இப்படி இருப்பதாகச் சிலர் சொன்னார்கள்.
இங்கே சொல்லப்பட்டிருப்பதுபோல ஊர்விட்டு வந்து வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம். நிஜமாகவே வீடு இல்லாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.
மற்றபடி ஆண்டிலியா மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் தாராவியும் தெரியும்தானே?
பரவாயில்லையே பஸ்ஸில் போகும்போது கூட நேரத்தை வீணடிக்காமல் ஆரோக்கியமாக சிந்திக்கிறீர்களே..?.
காங்கிரீட் வீடு கொடுத்தது எங்களுக்கு தேர்தல் விளம்பரம் ஆகுதுல்ல...
எவன் தெருவுல கெடந்தா என்ன... நாங்க காங்கிரஸ் கூட எப்படி கூட்டணிய தக்க வைக்கிறதுன்னு ராஜீவ் பேர வைக்கிற முயற்சியில இருக்கோம். தெருவில கெடக்கவனைப் பார்த்தா வம்சம் சம்பாதிக்க முடியுமா?
பதிவில் சொல்லிய விஷயத்தை கண்டு ஓரளவு சமத்துவ எண்ணம் உள்ளவர்கள்
ஒன்று: நம்மால் எதாவது செய்ய முடியுமா என சிந்திக்க வைக்கும்; இரண்டு: அரசில்லா நிறுவனங்கள் (non-government organisations) (சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை ). தம் அளவில் ஒரு சின்ன குழுவுக்கு வார்டில் உள்ள காலிமனையில் ஷேட் போட்டுக் கொடுப்பது போன்றவற்றை செய்ய முயற்சிக்கலாம். மூன்று: சாலை அல்லது கட்டிட பணி செய்பவர்களாக இருந்தால் அவர்களை வேலைக்காக வேறு ஊர்களிலிருந்து அல்லது வேறு மாநிலங்களிலிருந்து வரவழைப்பவர்கள் குறைந்த பட்சம் கூரைக்கு, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம்.
அவ்வாறு செய்து தராதவர்களுக்கு காண்ட்ராக்டை ரத்து செய்யலாம்.
நான்கு: நம் முன்னோர்கள் செய்த தர்ம காரியமான் சத்திரம் போன்ற கட்டுமானங்கள் இந்த நூற்றாண்டிலும் நிறுவ முனையலாம்.
//"அவங்களுக்கெல்லாம் பீகாரிலே வீடு இருக்கு".// இந்த பின்னூட்டத்தை ரவி அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை. அதிர்ச்சி. நார்வேயில் தெரியாது, சிங்கப்பூரில் ஒரு குடிசை கூட இல்லாமல் செய்துவிட்டார்கள். அனைவருக்கும் சிமெண்டால் கட்டிய வீடே,என படித்திருக்கிறேன்; இரு முறை கண்ட அனுபவமும் உண்டு.
விரைவில் உங்களுக்கு வீடு கிடைக்க பிராத்திக்கிறேன் ;)
@ஹூசைனம்மா : அவர்களை அதே இடங்களில் கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கும் மேலாக பார்த்து வருகிறேன்.
அம்பானியாகி உயரத்தில் இருந்து தான் இதை பார்க்கனும்மா? சொல்லுங்க..? நாம் தினம் நடந்து கடக்கும் இடத்தில், தினம் பார்க்கும் ஒரு நிகழ்வு. மாறி இருக்கும் என நினைத்து தான் ஒவ்வொரு முறையும் என் கண்கள் அங்கே செல்லும்... ம்ம்ம்.. மாற்றம் ஒன்றும் இல்லை.. :(
@ இனியவன்: ஆரோக்கியமாக என் சிந்தனை இருந்து என்ன பயன்.. செயலில் எதுவும் முடியவில்லை என்ற கவலையும் கூடவே இருக்கிறது. நன்றி..
@ சே.குமார் : தேர்தல் நேரம் என்பது எல்லாம் இதற்கு தேவையில்லைங்க.. சாலைகளில் மக்கள் வெயிலிலும் மழையிலும் இருப்பதை கண்டிப்பாக தடுக்கவேண்டும்.
@ nerkuppai thumbi : தகவலுக்கு நன்றி.
1. என்.ஜி.வோ க்கள் உதவுமெனில், அதற்கான முயற்சிகள் செய்து பார்க்கிறேன்.
2. அவர்கள் வேலைக்காக வரவழைக்கப்பட்டவர்களாக தெரியவில்லை.
3. அந்த காலத்தில் செய்தது போன்று செய்யலாம்.. ஆனால் அதை பயன்படுத்தி படுத்துறங்கி உடம்பை வளர்க்கும் வர்கம் உருவாக ஏதுவாகும்.
வீடு தேவை.. அவர்களின் வாழ்வியல்பு மாறவேண்டும். அவர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும். நிரந்தரமுடிவுகள் மட்டுமே சரிப்பட்டு வரும்.
@ கோப்ஸ் :ம்ம்ம்... :)
அவுங்களுக்கெல்லாம் ஓட்டு இருந்திருந்தா கட்டிக் குடுத்திருக்க மாட்டாங்களா? என்ன கேள்வி இது?
Post a Comment