பதிவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது என் அறிவுக்கு புரியல. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளோடு நடுவர்களை பற்றிய தங்களது கருத்துக்களை கூகுல் பஸ்ஸில் வைத்திருக்கிறார்கள். பொதுவில் இப்படிப்பட்ட கருத்துக்களை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
தப்பி தவறி இந்த வருடம் என் பெயரும் அந்த லிஸ்ட் ல் வந்துவிட்டதில், எனக்கு என்னவோ. .இவர்களின் பஸ் மெசேஜ், அதிலுள்ள பலரின் கமெண்டுகள் படிக்க வருத்தமாக இருக்கிறது.
எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது அல்லது எல்லோருக்கும் எல்லோரும் அறிவாளிகளாக, எல்லாம் வல்லவர்களாக, நல்லவர்களாக ஆகிவிடமுடியாது. எல்லோருக்கும் பிடித்த நடுவர்களாக கண்டுபிடித்து தமிழ்மணம் நியமிக்கவும் முடியாது. Unless otherwise they change their selection rules & procedures.
என்னைப்பிடிக்காமல், எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, வேறு யாரையோ குறி வைத்து சொல்லி இருந்தாலும், பொதுவில் நடுவர்கள் அனைவரும் குறிப்பிட்டு இருப்பது நெருடலாக உள்ளது.
எனக்கு தெரிந்து பஸ் விட்டு இருப்போர், வித்யா, விஜி & முகிலன். அதில் கமெண்டு போட்டிருப்போர் அனைவரின் பெயரையும் இங்கே குறிப்பிடவில்லை. இருப்பினும்,எனக்கு தெரிந்த ஒருவரை மட்டும் குறிப்பிடுகிறேன்.. ஆதவன். :(
I am not happy about all of your buzz msgs and also on it's comments .. oopss...!! Guys if you all have any clarification on this, you could directly raise the same question to Tamilmanam admin instead writing in general.
Note : Since I am following all the above friends, I came to know these buzz msgs.
Friends, For all of your kind info,
1. தமிழ்மணம் விருது பதிவுகளில் என் பதிவுகளை சேர்க்கவில்லை
2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.
3. 2-3 நாட்கள் அவகாசம் எடுத்து, என்னால் தனிப்பட்ட நட்பு/கோபம் எதுவும் இல்லாமல் நடுநிலைமையாக பதிவுகளை தேர்ந்தெடுக்க முடியுமா என்பதை யோசித்து, முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே, நடுவராக சம்மதம் தெரிவித்தேன்.
உங்களில் யாராவது நடுவராக இருக்க என்ன தகுதி வேணும்னு வந்து சொன்னீங்கன்னா...நல்லா இருக்கும். சத்தியமா எனக்கு தெரியலைங்க. நேர்மையான முறையில் அதை தெரிந்து க்கொள்ள விரும்புகிறேன்.
அணில் குட்டி : ஹை ஜாலி....... ஆமாம்மா.. அது சூட் ஆகலன்னா அடுத்த தபா இந்த பக்கமே அம்மணி தல் வச்சி படுக்க மாட்டாங்க... அதுக்கு நான் கேரன்ட்டி, மக்கா முடிஞ்சா இந்தா தபாவே அம்மணி வேஸ்ட் டு ன்னு சொல்லிட்டு போனா ...ஹி ஹி ஹி... ரெம்ப சந்தோச்ச படுவேன்.. எங்க எல்லாரும் வாங்க ஸ்டார்ட் தி மியூஜிக்..!!
தமிழ்மணம் நடுவர் குழுவும் - கூகுல் பஸ் மெஸேஜுகளும்...
Posted by : கவிதா | Kavitha
on 20:04
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
42 - பார்வையிட்டவர்கள்:
கவிதா
On a serious note
நிஜமாகவே எதன் அடிப்படையில் தேர்வு நடக்கிறது என்ற ஆவலில் தான் பஸ் பண்ணியிருந்தேன். ஹிட்ஸா, நீண்ட காலம் பதிவுலகில் இருப்பதாலா, எதன் அடிப்படையில் என்ற கேள்வி தான். உங்களைக் குறித்தல்ல என தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லையெனவும் நினைக்கிறேன். சிலரின் எழுத்துகளை படிக்க நேரிடும்போது இந்தக் கேள்வி எழுந்ததால் அந்த பஸ்ஸை பகிர்ந்தேன். Hope u dont take it personally.
நடுவர் குழுவை தேர்ந்தெடுப்பது தமிழ்மணத்தின் உரிமை. அதன் மீதான விமர்சனங்கள் வருவது வெகு இயல்பு. நான் இந்தப்போட்டியில் எந்த விதத்திலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கம்யூனிச தத்துவங்களை ஆதரிக்காத என்னுடைய பொதுவுடைமை பதிவு போட்டிக்கு வந்திருந்தால் வினவு நடுவராக செயல்படமுடியாதல்லவா? அதுபோன்று ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். நடுவர்கள் தேர்வு தவறானதல்ல, அதே சமயம் விமர்சனம் தவிர்க்கமுடியாதது, தேவையானதும் கூட.
என்ன நடந்ததுன்னு புரியல..... ஆனா நீங்க நேர்மையா இருந்திங்கன்னு உங்க மனசு சொல்லும் பாருங்க அது போதும்.....
@வித்து :)) பர்சனல்லா எடுத்துக்கவே இல்ல. .அப்படி இருந்தா உங்க பஸ் மெஸேஜ் பார்த்த தினம் கேட்டு இருப்பேன். இது விஜி, முகிலன் இருவருக்கும் கூட பொருந்தும்.
என்னுடைய ஆதங்கம், பதிவர்களுக்கு நடுவர்கள் மீது சந்தேகம், திருப்தி இல்லாத பட்சத்தில் அதனை தமிழ்மணம் நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாமே... அதற்கு பிறகு பொதுவில் இது ப்பற்றி விவாதித்தால்... பலன் இருக்குமென பட்டது.. அவ்வளவே..
Cheer up !! :))
@ குடுகுடுப்பை - நன்றிங்க. விமர்சனம் இருக்குமென்பது தெரியும்..அதனை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியும்.
//நடுவர்கள் தேர்வு தவறானதல்ல, அதே சமயம் விமர்சனம் தவிர்க்கமுடியாதது, தேவையானதும் கூட.//
ம்ம்ம்.. பொதுவாக சொல்வதால் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. யாரையும் (நடுவர் என்ற பெயரில்) நாம் புண்படுத்தினோம் னு இருக்க வேண்டாம் என்பது என் விருப்பம்.
@ கருணாகரசு : சில சமயங்களில் சபையில் விளக்கம் சொல்ல வேண்டி இருக்கு.. அதான்... :)
வித்யா, உங்களுக்கு சல்யூட்....
என்னைப் பொறுத்தவரை நடுவர்களாக அழைக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் சொன்ன அந்த அந்த மூன்று தகுதிகள் இருந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் அழைப்பை மறுத்திருக்க வேண்டும்.
கவி, நீ கேட்டதால் மட்டுமே இந்த பதில்
நடுவர் என்று யாரயும் தனிப்பட்டு பேர் குறிப்பிடவில்லை எங்கயும்..
1. நடுவர் குழுவை விமர்சனம் செய்யலை, நடுவர்களா வந்தா போட்டியில கலந்து கொள்ளக்கூடாது.
சோப்பு விக்கும் கம்பனி கூட எதுனா போட்டி வச்சா அது சம்பந்தப்பட்ட யாருக்கும் கலந்து கொள்ள அனுமதி இல்லைன்னு தெளிவா சொல்லுது..இந்த சிம்பிள் லாஜிக் தமிழ் மணத்துக்கு தெரியலையா?
பஸ்ல இனிமேல் திருக்குறள் மட்டும் தான் எழுதனுமுன்னு சொல்லணும்
you could directly raise the same question to Tamilmanam admin instead writing in general. //
ஒரேமாதிரி க்ருத்துள்ளவர்கள் விவாதிக்கதான் பஸ்ஸில் பகிர்ந்து கொள்கிறோம், தமிழ்மணமும் அது போலத்தானே?
@ முகிலன் - நன்றி
@ விஜி - அடியே உனக்கு இருக்கு... தமிழ்மணத்தை கேக்க வேண்டியத இங்க கேளு.. என்னை கேக்க வேண்டியத தனியா கேக்காம பொதுவுல கேளு... பொதுவுல கேக்கவேண்டியதை தனியா என்கிட்ட வந்து கேளு.. (எதாச்சும் உனக்கு புரிஞ்சா பதில் சொல்லு. இல்லனா ஓடி போ.. : )
//ஒரேமாதிரி க்ருத்துள்ளவர்கள் விவாதிக்கதான் பஸ்ஸில் பகிர்ந்து கொள்கிறோம், தமிழ்மணமும் அது போலத்தானே?//
உன்னை என்ன சொல்லித்திட்டலாம்னு யோசிக்கிறேன்.. வெயிட் பண்ணு..
@ நசரேன் : :)) ஏங்க நீங்க வேற புது ரூட் போட்டு க்கொடுக்காதீங்க.. :)
ம்ம்க்கும் நீ இங்கயே இப்படி உளறிக்கொட்டி கிளறரே...:))
உளரன்னா சொல்ற விஜி...??... ?? சரி சரி விடு..கண்டுக்காத. தனியா சொல்லு என்ன உளரி இருக்கேன்னு. .இப்படி நடு ராத்திரியில முழிச்சி பதில் சொல்றேனே அது காராணமா இருக்குமோ??
\\I am not happy about all of your buzz msgs and also on it's comments \\
:(
என் கமெண்டுகள் எந்த விதத்திலும் நடுவர்களையோ தமிழ்மணத்தையோ குறை கூறும் விதத்தில் இல்லை என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஒரு பஸ்ஸில், நடுவராக இருப்பது அதிக பணிச்சுமை என்பதையும் இன்னொரு பஸ்ஸில் தமிழ்மணம் அவர்களின் சக்திக்கு உட்பட்ட நடுவர்களை மட்டுமே கூப்பிட முடியும் என்ற தொனியில் தான் கமென்ட் போட்டிருக்கிறேன்.
என்னுடைய கமெண்டுகளை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். நான் எழுதியது சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் நான் அதை அழித்து விடுகிறேன்.
நன்றி.
//. தமிழ்மணம் விருது பதிவுகளில் என் பதிவுகளை சேர்க்கவில்லை
2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.
3. 2-3 நாட்கள் அவகாசம் எடுத்து, என்னால் தனிப்பட்ட நட்பு/கோபம் எதுவும் இல்லாமல் நடுநிலைமையாக பதிவுகளை தேர்ந்தெடுக்க முடியுமா என்பதை யோசித்து, முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே, நடுவராக சம்மதம் தெரிவித்தேன்.//
இது எல்லா நடுவருக்கும் பொருந்துமா? அதாங்க பாயிண்ட்டே
எல்லோரையும் திருப்திப்படுத்துவது நடக்காத காரியம்தான். ஆனால் இப்படித்தான் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கலந்துக்காம இருந்திருக்கலாம். அடுத்த வருடம் அதை செய்ய வேண்டியதுதான் :)
பிரச்னை என்னன்னு கொஞ்சம் புரியுது. எனக்கும் முதல் இரண்டு சுற்றுகள் தேர்வு முறைகள் பிடித்தமில்லாததால்தான் கலந்துகொள்ளவில்லை.
//விஜி said...
1. நடுவர் குழுவை விமர்சனம் செய்யலை, நடுவர்களா வந்தா போட்டியில கலந்து கொள்ளக்கூடாது//
ரொம்ப கரெக்ட். ஒரு போட்டி அறிவிச்சா, அதை விளம்பரம் பண்ற விளம்பரக் கம்பெனியின் ஊழியர்கள்கூட கலந்துகொள்ளக் கூடாதுன்னு விதிமுறைகள் படித்திருக்கிறேன்.
அக்கா அங்க ஆதவன்ன்னு பெயர் போட்டுயிருக்கிங்களே அது நம்ம தம்பி நான் ஆதவனா!!??
மீதி தனியாக கேட்டுக்கிறேன்...
Even if "the God" acts as a "reviewer or a judge", some people are going to say, "the God" is not fair. LOL
IMHO, nobody can satisfy the contestants esp when they are seriously involved and competed and "lost"! But they can behave in a mature way. :)
I have seen some stories failed to make in one place but passed elsewhere. So, this is not the "end of the world"
kavitha: Just laugh it off or and say, "this is the best" you could do! :)
@கவிதா
போட்டிபோட்டுகொண்டே எப்படி நடுவராய் இருக்க முடியும் ?? நானே ப்ளேயர் நானே நடுவர்னு ?? அதுதான் எங்கக் கேள்வி. உங்களை குற்றம் சொல்லவில்லை :)
@ ஆர்.கோபி : தனிப்பட்ட முறையில் யாரையும் நான் விமர்சிக்க, சுட்டிக்காட்ட விரும்பலைங்க.. .. என்னுடைய ஆதங்கம், பிரச்சனை என்னவென்று சொல்லிவிட்டு, பிறகு நடுவர்கள் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்து இருக்கலாம் என்பதே.
@ கார்க்கி : ம்ம்ம்... புரிகிறது. விஜி, ஹூசைன்னம்மா, எல்.கே, முகிலன் எல்லோரும் இதை தான் சொல்லி இருக்காங்க. தமிழ்மணம் நிர்வாகிகள் இதனை கவனிப்பார்கள் என்று நம்புவோம். அல்லது நமக்கு சரிவரவில்லை என்றால், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் :)
@ ஹூசைனம்மா: ம்ம்ம்.. நானும் உங்கள் எழுத்துக்கும் விசிறி.:) முதல் இரண்டு சுற்றுகளை அதன் தேர்வுகளை பற்றி எழுதனும்னு நினைச்சேன். ஆனா எழுதினால் மட்டும் போதுமா, தீர்வு ன்னு ஒன்னு வேணும்.. தமிழ்மணம் நிர்வாகிகள் மட்டும் யோசிக்காமல் இருப்பார்களா என விட்டுவிட்டேன். :(
@ கோப்ஸ் : ஆமா நம்ம ஆதவன் தான். தனியா மெயில் அனுப்பிட்டேன். :))))
@ வருண் : குறிப்பிட்டு இருப்பவர்கள் எல்லோரும் என் நண்பர்களே, அவர்களை என்னளவில் திருப்தி படுத்த இந்த பதிவு. .வேறு காரணங்கள் இல்லை :))... நன்றி
@ எல்.கே : ம்ம்ம்ம்ம்.... இதை எல்லாம் தமிழ்மணம் தான் முடிவு செய்யனும்.... நன்றி..
பொதுவா நான் எந்தப் போட்டிகளிலும் ( PIT photos தவிர)கலந்துகொள்வதில்லை.
நடுவராக இருந்ததால் யாருக்கும் ஓட்டும் போடவில்லை.
எனக்களித்த கட்டுரைகளை ஒருமுறைக்கு நாலுமுறை வெவேறு நாட்களில் வாசித்துப் பார்த்து மனதுக்குச் சரி என்று தோன்றிய மதிப்பெண்களைக் கொடுத்தேன்.
இது சரி இல்லைன்னா சொல்லுங்க.
.ஒரு போட்டி அறிவிச்சா, அதை விளம்பரம் பண்ற விளம்பரக் கம்பெனியின் ஊழியர்கள்கூட கலந்துகொள்ளக் கூடாதுன்னு விதிமுறைகள் உண்டு. அதுபோல் இங்கும் செய்திருக்கலாம்.
நான் தமிழ்மணம் போட்டியில் என் இடுகைகளை இணைக்கவில்லை. போட்டிகளில் இருந்து விலகி இருப்பதே நல்லதென தெரிகிறது. நம்ம ஆத்ம திருப்திக்காக எழுதினால் போதும் என்ற எண்ணம்தான் இப்போது மனதில்...
பரிசு பெற்றவர்கள் எல்லாம் நல்ல படைப்பாளிகளே என்ற விதத்தில் மகிழ்ச்சியே.
கவிதாக்கா நான் பஸ்ல போட்ட கமென்ட் தவறான புரிதலை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
எனக்கு நடுவர் குழு மேல எந்த விமர்சனமும் கிடையாது :)
@ துளசிஜி - வாங்க.. அவங்க த்தான் காரணங்களை சொல்லிட்டாங்களே :)
@ சே.குமார் - போட்டியில கலந்துக்கறதும், விடறதும் அவங்க அவங்க இஷ்டம் , இதுல பொதுவா இப்படித்தான் னு கருத்து சொல்வது சரியாக இருக்காது :))
@ ஆதவன் : அப்படி எல்லாம் இல்லையே.... தவறா நான் நினைச்சிக்கவே இல்லையே... :))
நடுவராக இருந்ததால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் மனசுக்கு பிடித்த பதிவுகளுக்கு ஓட்டு போட்டேன். இதில் எதாவது விதி மீறல் இருக்கா ?
//நடுவராக இருந்ததால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் மனசுக்கு பிடித்த பதிவுகளுக்கு ஓட்டு போட்டேன். இதில் எதாவது விதி மீறல் இருக்கா ?//
முட்டைகண்ணா.. கண்ணை தொறந்து பின்னூட்டம் எல்லாம் படிக்கலையா..??
முதல்ல விதி ன்னு ஒன்னு தமிழ்மணம் இதுக்கெல்லாம் சொல்லவே இல்லப்பா... எல்லாம் நம்ம இஷ்டம் தான்.. :)))
தமிழ்மணம் 10 வகைக்களில்/தலைப்பில் போட்டி வெச்சி இருக்கு.. ஒரு தலைப்பில் நடுவராக இருப்பவர் மற்றொரு தலைப்பில் கலந்து கொளவதில் என்ன தவறு இருக்கு.. எனக்கு தெரிந்த வரை யார் யார் நடுவர் குழுவில் இருக்காங்க அப்படிங்கிற விஷயம் தமிழ்மணத்தை தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நினனக்கிறேன்..
அவன் அவன் வேல வெட்டியை விட்டு நம்ம எழுதிய குப்பைகளை படிச்சி தேர்வு செய்து இருக்காங்க..
மெயில்/chat/sms/phone calls/பதில் ஓட்டு அப்படின்னு உலகத்துல இருக்குற அத்தனை மீடியா மூலமும் ஓட்டு பிச்சை எடுக்குற நமக்கு அவர்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது..
நம்மில் எத்தனை பேர் வந்த படைப்புகளை எல்லாம் படிச்சிட்டு ஓட்டு போட்டோம்.. குப்பைகளை எல்லாம் அடுத்த கட்டத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிட்டோம்.
அவங்க என்ன செய்ய முடியும் குப்பைகளில் நல்ல குப்பையை தானே தேர்வு செய்ய முடியும்..
டிஸ்கி: நான் நடுவர் குழுவிலும் இல்லை போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை..
சந்தோஷ் எப்பவுமே கடைய கட்டின ப்பிறகு வந்து கமெண்டு போடறதை வேலையா வச்சி இருக்கீங்களே... இதை எப்ப மாத்திக்க போறீங்க?
//டிஸ்கி: நான் நடுவர் குழுவிலும் இல்லை போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை..//
பார்றா... ?!! :))))))
//குப்பைகளை எல்லாம் அடுத்த கட்டத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிட்டோம்//
யாரோட பதிவை எல்லாம் குப்பை ன்னு குறிப்பிட்டு சொன்னீங்கன்னா.. தமிழ்மணம் ஒரு 10 நாள் பத்திக்கிட்டு எரியும்.. இப்படி பொதுவுல சொன்ன எப்படி? :))
//மெயில்/chat/sms/phone calls/பதில் ஓட்டு அப்படின்னு உலகத்துல இருக்குற அத்தனை மீடியா மூலமும் ஓட்டு பிச்சை எடுக்குற நமக்கு அவர்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது..//
:)))) மச்சி.... இன்னைக்கு பெண்களூர் ல எந்த கோயிலையும் பொங்கல் கிடைக்காத கடுப்பை இங்க காட்டின மாதிரியே இருக்கே...?? :)))
கூல்...ஜனநாயக நாடு அப்படித்தான் ஓட்டு கேட்பாங்க.. நாம த்தான் பாத்து படிச்சி நல்ல பதிவுக்கு ஓட்டு போடனும்..
//1. தமிழ்மணம் விருது பதிவுகளில் என் பதிவுகளை சேர்க்கவில்லை
2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.
3. 2-3 நாட்கள் அவகாசம் எடுத்து, என்னால் தனிப்பட்ட நட்பு/கோபம் எதுவும் இல்லாமல் நடுநிலைமையாக பதிவுகளை தேர்ந்தெடுக்க முடியுமா என்பதை யோசித்து, முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே, நடுவராக சம்மதம் தெரிவித்தேன்.//
இதே மாதிரி எல்லா நடுவர்களும் இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அல்லது, போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்மணம் சொல்லி இருந்தாலும் பிரச்சனை இல்லை.
//Guys if you all have any clarification on this, you could directly raise the same question to Tamilmanam admin instead writing in general. //
தமிழ்மணம் என்பது பொதுவில் உள்ள ஒரு திரட்டி. எப்படி கூகிள், யாஹூ போன்ற தளங்களில் எதாவது குறைகள், தவறுகள் இருந்தால் பொதுவில் விவாதிக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் தமிழ்மணத்திற்கும். தமிழ்மண நிர்வாகிகளும் அதைத் தனிப்பட்ட தாக்குதலாக நினைக்காமல் பாஸிடிவாக தான் நினைக்க வேண்டும். இல்லை, குறைகளைப் பொதுவில் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைத்தால் ”நிறைகள் இருந்தால் பொதுவில் சொல்லுங்கள், குறைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்”ன்னு ஓர் உணவகத்தில் சிறு வயதில் போர்டு பார்த்த நினைவு, அது போல தமிழ்மணத்திலும் போர்டு வைக்கலாம்.
@ கேவிஆர் : இந்த பதிவின் காரணம், பொதுவில் விவாதிக்க க்கூடாது என்பது அல்ல. எந்தவித விமர்சனத்தையும் வைக்கக்கூடாது என்று சொல்வதற்கும் இல்லை.
தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் வருவது இது தான் முதல் முறையோ அல்ல.. அதைக்கண்டு பொங்கி பொங்கலாகவும் இல்லை.
விவாதித்தவர்கள் - நடுவர்கள் என்று பொதுவாக - அதாவது பிரச்சனை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவுப்படுத்தாமல் விவாதம் செய்துக்கொண்டு இருந்தனர். அதனால் எழுதியது.
இந்த பதிவை எழுதிய ப்பிறகே உங்களை ப்போன்றே மற்றவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை சொல்லி இருக்கிறார்கள்.
இதனை தமிழ்மணம் கவனிக்கலாம், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அடுத்தமுறை செய்யலாம் செய்யாமலும் போகலாம். அது தமிழ்மணத்தின் முடிவு.
ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்க போல.. .முன்னமே பதிவை படித்திருந்தாலும்.. ?! :)))
@ கேவிஆர் : மேலும், பிரச்சனை என்று நினைக்கும் ஒரு விஷயத்தை, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுவிட்டு, அவர்களின் விளக்கமும் நமக்கு சரிவரவில்லை என்றப்பிறகு இப்படிப்பட்ட விவாதங்களை வைத்தால் பலன் இருக்கும் என்பது என் கருத்து.
யாரோ எதையோ பேசிட்டு போகட்டும் நமக்கென்ன என்பதை விட.. அப்படி பேசுவதில் ஒரு அர்த்தமும், அதில் ஒரு விடையும் கிடைத்தால் நல்லது தானே.. ????
//ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்க போல.. .முன்னமே பதிவை படித்திருந்தாலும்.. ?! :)))//
இல்லை, இப்போ தான் படிச்சேன். பஸ்ஸில் ஷேர் செய்யப்படும் பதிவுகளைப் படிப்பதோடு சரி. இன்று சந்தோஷ் பஸ்ஸைப் பார்த்த பிறகு வந்து படித்தேன்.
//யாரோ எதையோ பேசிட்டு போகட்டும் நமக்கென்ன என்பதை விட.. அப்படி பேசுவதில் ஒரு அர்த்தமும், அதில் ஒரு விடையும் கிடைத்தால் நல்லது தானே.. ???//
உங்களது பதிவின் நோக்கத்தைத் தவறென சொல்லவில்லை. ஆனால், பதிவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தான் சொல்ல வேண்டும், பொது ஊடகங்களில் பேசக்கூடாது என்று நினைக்கக்கூடாது. பஸ்ஸோ, பதிவோ அவரவர் எண்ணங்களை முன் வைக்க ஓர் இடம், அதில் அவரவர் மனதில் உள்ளதைப் பதியத்தான் செய்வார்கள். தமிழ்மணம் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். ஆனால், அதைத் தனிப்பட்ட தாக்குதலாக தமிழ்மணமோ நடுவர்களோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே எனது கருத்து.
//பதிவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தான் சொல்ல வேண்டும், பொது ஊடகங்களில் பேசக்கூடாது என்று நினைக்கக்கூடாது. பஸ்ஸோ, பதிவோ அவரவர் எண்ணங்களை முன் வைக்க ஓர் இடம், அதில் அவரவர் மனதில் உள்ளதைப் பதியத்தான் செய்வார்கள். தமிழ்மணம் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். ஆனால், அதைத் தனிப்பட்ட தாக்குதலாக தமிழ்மணமோ நடுவர்களோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே எனது கருத்து.//
:) பதியவைக்கக்கூடாதுன்னு சொல்லைங்க.. இந்த பதிவு போடும் வரை.. தமிழ்மண நடுவர்கள் பிரச்சனை என்னென்னன்னு தெளிவா தெரியல.. யாரும் சொல்லவும் இல்ல.. நடுவர்கள் நடுவர்கள் ன்னு சொல்லி த்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
நடுவர்கள் குறித்தான பிரச்சனை என்னன்னு சொல்லல. .பிரச்சனை என்னென்னு தெரிந்துக்கொள்ள போட்ட பதிவு, யாரையும் பொதுவில் இதைப்பேசக்கூடாது.. அதைபேசக்கூடாது ன்னு சொல்ல நான் யாரு? அப்ப்டி நான் சொல்லிட்டா நீங்க எல்லாம் பேசறதை உடனே நிறுத்திடுவீங்களா..?? அவ்ளோ அறிவில்லாம நான் இல்லை கே.வி ஆர். :)))
இதைத்தனிப்பட்ட தாக்குதலா நான் எடுத்துக்கலன்னு முன்னமே என் பின்னூட்டத்தில் சொல்லிட்டேன்.
//:) பதியவைக்கக்கூடாதுன்னு சொல்லைங்க.. இந்த பதிவு போடும் வரை.. தமிழ்மண நடுவர்கள் பிரச்சனை என்னென்னன்னு தெளிவா தெரியல.. யாரும் சொல்லவும் இல்ல.. நடுவர்கள் நடுவர்கள் ன்னு சொல்லி த்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். //
பொதுவில் சொல்லக்கூடாதுன்னு நீங்கள் சொல்வதாகச் சொல்லவில்லை (எத்தனை சொல் சொல்!!!). தமிழ்மணம், சில நடுவர்களின் எண்ணம் அதுவாகவே இருக்கிறது.
தினேஷ் (முகிலன்) போன்றவர்கள் தெளிவாகவே ஏன் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். நானும் ஈரோடு கதிர் பஸ்ஸில் அதே கருத்தை முன்வைத்தேன். இந்தப் பதிவை நீங்கள் எழுதியதால் இங்கேயும் அதைக் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவே...
//2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.//
இடுகை தரம் அடிப்படையில் தானே நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது. பிடித்தவர்களுக்கு வாக்கு போட வேண்டும் என்று முதல் இரண்டு கட்டங்களிலும் எதும் அறிவுறுத்தல் இல்லையே, பிறகு ஏன் வாக்களிக்கவில்லை ?
புரியல தயவு செய்து விளக்கவும்
@ கேவிஆர் : உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை???
@ கோவி - இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல..
இது தனிப்பட்ட முறையில் என்னுடைய முடிவு ன்னு சொல்லலாம். தமிழ்மணம் சொல்லாட்டியும், நடுவராக இருக்கிறோம், தனிப்பட்டு யாருக்கும் போடுவது சரியில்லை என்று நினைத்தேன்.
வேறு காரணம் ஒன்றும் இல்லை :)
//@ கேவிஆர் : உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை??//
பிரச்சனையாக எதாவது பேசி இருந்தால் தெரிவிக்கவும்.
உங்கள் பதிவுக்கு எனது பின்னூட்டத்தை வைத்தேன். அதற்கு நீங்கள் பதில் சொன்னீர்கள். நீங்கள் சொன்ன விஷயத்திற்கு நானும் என் கருத்தைச் சொன்னேன். இதில் “என்ன பிரச்சனை” என்று கேட்க என்ன இருக்கிறது?
என் கருத்துக்கு பதிலளிக்கலாம், அல்லது என் கருத்தை மறுதலிக்கலாம். அப்படி இல்லாமல் “என்ன உன் பிரச்சனை?” என்று கேட்பது “நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்லை” என்பதற்கு ஒப்பானது. இனி என் பின்னூட்டம் வராது. நன்றி.
@ கே.வி.ஆர்: எல்லாவற்றிற்கும் விளக்கம் பதிவிலும் சொல்லியாச்சி, பதிலிலும் சொல்லியாச்சி.. திரும்ப திரும்ப.. சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்களேன்னு என்னங்க உங்களுக்கு பிரச்சனை ன்னு கேட்டேன்..
//என் கருத்துக்கு பதிலளிக்கலாம், அல்லது என் கருத்தை மறுதலிக்கலாம். அப்படி இல்லாமல் “என்ன உன் பிரச்சனை?” என்று கேட்பது “நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்லை” என்பதற்கு ஒப்பானது. இனி என் பின்னூட்டம் வராது. நன்றி.//
:)) ஹா ஹா..ஹா.. காமெடி ங்க உங்களோட.. நீங்களே என்னவோ நினைச்சிக்கிட்டு நீங்களே என்னவோ சொல்லிக்கறீங்க. .இதுக்கு நான் பொறுப்பில்ல...
//“நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்லை” என்பதற்கு ஒப்பானது. இனி என் பின்னூட்டம் வராது. நன்றி.//
:))))))) இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல.. :)).. முதிர்ச்சி இல்லாத வார்த்தைகள்.... ஒன்னும் செய்யமுடியாது...:))))
Thanks for the clarification, sorry for my misunderstanding
// முதிர்ச்சி இல்லாத வார்த்தைகள்....//
no comments :-)
Post a Comment