சருகுகள்
என் காலடியில் -
அண்ணாந்து பார்க்கிறேன்....
இலையில்லாமல் நீ
களையிழந்து நிற்கிறாய்....
இன்று
இலைகளை உதிர்ப்பாய்..
நாளை
வளர்ந்து செழிப்பாய்...
பூக்களாக....
காய்களாக......
கனிகளாக........
பிறகொருநாள்
உன்னுடையதாயினும்
வேண்டாமென
கொட்டி தீர்ப்பாய்...
உனக்கு இது வாடிக்கை
உன் பருவங்களை
எளிதாய்
நீ கடக்கிறாய்...
உனை வளர்த்தேனே..
இனி
உனைக்கண்டு
எனை வளர்க்கவோ??
ஆனால்.......
நீயோ
மரம் !!
.
9 - பார்வையிட்டவர்கள்:
//அன்னாந்து// கலையிழந்து//-எழுத்துப்பிழைகளை கவனிக்கவும்.கவிதையில் இவை முக்கியமானவை.
என்ன சொல்ல வரீங்க ??
வாழ்வியல் கவிதை..
//
உனை வளர்த்தேனே..
இனி
உனைக்கண்டு
எனை வளர்க்கவோ??
ஆனால்.......
நீயோ
மரம் !!//
ஹைலைட் வரிகள் கவி..
@ ஷண்முகவேல் : மாத்திட்டேன்.. நன்றிங்க.. :)
@ எல்.கே : என்ன சொல்ல வரேன் புரியக்கூடாது.. அப்படி எழுதினால் தான் அது கவிதை ன்னு நம்ம பிரண்ட்ஸ் சொல்லிக்கொடுத்து இருக்காங்க. .அதனால சொல்ல மாட்டேனே... :))
@ தமிழ் : //வாழ்வியல் கவிதை..// ..சரியா புரிஞ்சிக்கிட்ட.. :))
எனக்கும் அந்த வரிகள் தான் பிடிக்குது....:))
என்ன சொல்ல வரேன்
புரியக்கூடாது..
அப்படி எழுதினால்
தான் அது
கவிதை ன்னு
நம்ம பிரண்ட்ஸ்
சொல்லிக்கொடுத்து இருக்காங்க.
அதனால சொல்ல மாட்டேனே... :))!!!!
அந்த கவிதையை விட இந்த கவிதை நல்லாவே புரியுதுக்கா ;))
கடந்து போகும் கால ஓட்டத்தில் வாழ்க்கையை கவிதையாய் தந்துள்ளீர்கள். அருமை.
very nice poem....pls visit my blog and leave your comments...www.kmr-wellwishers.blogspot.com mail me your id at kmrjayakumar@gmail.com
@ கோப்ஸ்: நக்கலு?? பாத்துக்கறேன்.. :)
@ சே.குமார் : நன்றி
@ ஜெயகுமார் :
//mail me your id at kmrjayakumar@gmail.com //
ம்ம்ம்ம்.. அனுப்பி..?!!
@ ஜெயகுமார் : உங்க பதிவுகளை படித்தேன்... தொடருங்கள், - நன்றி..
Post a Comment