ஆழ்ந்த அமைதி
சட்டென்று காணாமல் போன சத்தங்கள் !
கூர்ந்து கவனிக்கிறேன்
ஆமாம்
ஆழ்ந்த அமைதி
அதனுள்ளே நுழைய தயக்கம்
நுழையாமல் இருக்க இயலாத நிலை
தயத்தோடு உள் நுழைகிறேன்
மயான அமைதி
காதடைத்தது
கறுப்பு அப்புகிறது
இருளை கண் பழகியது..
இருள் ..இருள் ..இருள் ..
இழுத்து செல்கிறது பாதை..
மெது மெதுவாய்
வேகம் எடுக்கிறது நடை...
வேகம்...
அதிவேகம்...
ஓட்டமாய் மாறியிருந்தது...
கண்முன் தெரியாத ஓட்டம்
கால் தரையில் நிற்காத ஓட்டம்
ஏதோ ஒன்று
தள்ளிசெல்லுகிறது
வளைந்து நெளிந்து நீளும் பாதை
"ஞொய்" சத்தம் இல்ல.. !
மயான அமைதி
ஓட்டம் நிற்கவில்லை
என்ன இடம்
எங்கே செல்கிறது
எப்படி இங்கே இருக்கிறேன்
ஏன் இருக்கிறேன்
ஏன் ஓடுகிறேன்
கேள்விகள் மட்டுமே
பதில் இல்லை
பதில் விழய ஆளில்லை
எனக்கும் தெரியவில்லை
ஆனால் ஓடுகிறேன்......
மயான அமைதியில் மனதின் ஓட்டம்...
Posted by : கவிதா | Kavitha
on 20:06
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
9 - பார்வையிட்டவர்கள்:
யம்மா போய் சேர்ந்ததும் சொல்லி அனுப்பு வரேன்....ஒன்னும் புரியலை எனக்குன்னு நினைச்சிருந்தேன் உனக்குமா?
it reminds me "near death experience ", thanks for sharing
எனக்கும் ஒரு தடவை அப்படி ஆகியிருக்கு. மரணம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தது!
தமிழ் : கடைசியாக விளக்கம் சொல்றேன்.
ரோஹினி : :) ம்ம்ம்...
அபிஅப்பா: மரணம் னா நீங்களும் நினைக்கறீங்க?
Anesthesia கொடுத்தால், சில வினாடிகளில் ஒரு குழாய் போன்ற அமைப்புடைய எதிலோ நாம் ஊடுருவி உள்ளே சென்று கொண்டே இருப்பது போல் இருக்கும். அது முழுக்க முழுக்க ஆரஞ்சு மற்றும் சிகப்பு (ஆங்காங்கே) கலர்கள் நிறைந்து காணப்படும். நாம் நம்மை அதில் போகாமல் இருக்க செய்ய இயலாது..... அது சென்று க்கொண்டே இருக்கும்..அந்த கலரை நன்றாக நம்மால் பார்க்கமுடியும், நமக்கு என்னவோ நடக்கிறது என்று உணர முடியும் ஆனால் தடுக்க முடியது. அதான் ஊசிய குத்திட்டாங்களே? :)
இப்படி ஒரு உணர்வு தான் இது.. இதை தியானம் செய்யும் போதும் உணர முடியும். நாம் அமைதியாக இருக்கிறோம் என்று நினைப்போம், ஆனால் நம் நினைவுகள் எங்கெங்கோ ஒரு இடத்தில் நிலைக்காமல் ஓடும், அந்த ஓட்டம் ஏதோ ஒரு நிகழ்வை பற்றியதாக இருக்காது, பல நினைவுகளை ஆங்காங்கே தொட்டுவிட்டு வரும்..
இங்கே சொன்னது அதை போன்ற ஒன்று... :))
(ஸ்ப்பா....எதாவது எழுதினா அதை பத்திய விளக்கம் அதைவிட அதிகமாக எழுத வேண்டி இருக்கு, இல்லைன்னா நாம் எதை பத்தி எழுதினோம் னு நமக்கே தெரியாமல் போயிடும் போலவே. !! )
//கேள்விகள் மட்டுமே
பதில் இல்லை
பதில் விழய ஆளில்லை
எனக்கும் தெரியவில்லை
ஆனால் ஓடுகிறேன்......//
இதுதானே உண்மை.
கவிதைக்கு விளக்கம் த்ராதீங்க கவிதா..
பெரிய கவிஞர்கள் எல்லாம் அதான் செய்ய்றாங்க ,அதனால் தான் பெரிய கவிஞர்கள் ஆனார்களாம்..
அருமை. வாழ்த்துக்கள்
@ முத்து - தரக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன். .நம்ம மக்கள் வேற மாதிரியே யோசிக்கறாங்க.. அதான் :)
விளக்கம் சொல்லாதவங்க எல்லாம் பெரிய கவிஞர் ஆகலாமா... ம்ம்ம்.. கேக்க நல்லாத்தான் இருக்கு... அதே சமயம் நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையோன்னும் இருக்கு... :)
@ சே.குமார்-நன்றி
@ சரவணன் - நன்றி
Post a Comment