எங்க வீட்டு தாலாட்டு பாடல்கள் பற்றி ஒரு பதிவு போடனும்னு ரொம்ப வருடமாக யோசனை.... இப்பத்தான் முடிந்தது. எல்லாமே ஆடியோ ரிக்கார்ட் செய்து பதிவிட்டு இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். ரொம்ப ஹோம் ஒர்க் எல்லாம் செய்யலை, சும்மா அப்படியே பாடினது, தாளம் சரியில்ல, ராகம் சரியில்ல.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் க்கு........ அது இதுன்னு வந்தீங்க. .கடிச்சி துப்பிடுவேன். சொல்லிட்டேன்.
என்னோட நவீன் குட்டி'க்கு பாடினது
|
தாலாட்டு பாடல்கள்.. ன்னு ஏதோ ட்ரை செய்து இருக்கேன்...
Recording (2).mp3 |
Recording (6).mp3 |
அணில் குட்டி அனிதா: பார்றா.. மனசாட்சியே இல்லாம கேட்டு மகிழுங்கள் ன்னு சொல்லி இருக்காங்க... ம்ம்ம்... காது ஜவ்வு கிழிந்து நம்ம காதுல ரத்தம் வரது பத்தாம நம்ம வூட்டு புள்ளைங்களுக்கு எல்லாம் காது செவிடாக வழி வகுக்கறாங்க.. ம்ம்ம்... .. உங்க குடும்பம் நல்லா இருக்கனும்னாமக்கா வீட்டுல ஸ்பீக்கர் ல மட்டும் போட்டு இந்த ஆடியோவை கேக்காதீங்க, ஸ்டிர்க்ட்டா சொல்லிட்டேன்.. !! அப்புறம் நஷ்ட ஈடூ கேட்டு இந்த பக்கம் யாரும் வந்தா...நானே சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.. !!
பீட்டர் தாத்ஸ் : I must be careful not to get trapped in the past. That's why I tend to forget my songs.
நன்றி :
http://thalatu.blogspot.com
கோபிநாத் :)
.
21 - பார்வையிட்டவர்கள்:
\\முதல் ஆடியோ சொந்த கதை. .எனக்கே ரொம்ப போர் அடிக்குது.. உங்களுக்கு எப்படியோ தெரியல.. முடிஞ்சா கேளுங்க
\\
நானும் ஆர்வத்துல அழுத்திட்டேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;))
லேபில்ல மூனாவது ஒன்னு போட்டு இருக்கீங்களே
அது இத கேட்பவங்களா ...
கவிதாக்கா - பாட்டு படமால் குழந்தையை தூங்கச்சது கிடையாது.
அய்யோ பாவம் நவீன் ;)
கொஞ்சு கொஞ்சு பேசி - பாட்டு தாலாட்டா உங்களுக்கு !! :))
;)))
ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..நீங்க பாடினா பாட்டை எல்லாம் பாடுறிங்களா இல்லை நவீனக்கு பாடினதை பாடுறிங்களா ! ;)))
உண்மையிலியே கடைசி ரெண்டு தாலாட்டு பாட்ல்கள் முயற்சியும் கலக்கல்ஸ் ;))
வாழ்த்துக்கள் ;))
(நல்லவேளை)ஆபிஸ்ல கேட்க முடியாதுக்கா. சத்த்த்த்த்த்த்தியமா ரூம் போய் கேட்குறேன் :)
@ கோப்ஸ் : எல்லாரையும் அழவைக்கத்தான் இந்த போஸ்டே.. !!
@ ஜம்ஸ் : அதே.. !! :))
@ கோப்ஸ் : ஆமா என் புள்ள என் பாட்டை கேக்காமா தூங்கவே விடமாட்டேன் :))
கொஞ்சி கொஞ்சி பாட்டு குழந்தைங்க பாட்டு.. எம்ஜிஆர் பாட்டு ஒன்னு அச்சம் என்பது மடமையடா ன்னு அது கூட பாடுவேன்.. புள்ளைக்கு வீரத்தை வளக்கனும் தானே அதுக்கு தான் :))
@ நான் ஆதவன் : நிறைய பேர் க்கு நல்ல வேளை தான் :)))))
@
\\☀நான் ஆதவன்☀ said...
(நல்லவேளை)ஆபிஸ்ல கேட்க முடியாதுக்கா. சத்த்த்த்த்த்த்தியமா ரூம் போய் கேட்குறேன் :)
\\
ஆதவா! அவசரத்திலே ரூம் போட்டு அழுவறேன்னு படிச்சுட்டேன்:
நட்ராஜ் அவன் தாத்தா வீட்டுக்கு போயிருக்கான். உனக்கு ஒன்னு வச்சிருக்கேன் வாயேன்னு போனில் சொன்னேன். ஆர்வமுடன் வந்து கிட்டு இருக்கான். என்ன நடக்க போவுதோ:-))
//ஆதவா! அவசரத்திலே ரூம் போட்டு அழுவறேன்னு படிச்சுட்டேன்://
ஏன்ன்ன்.. எதுக்கு இப்ப உங்களுக்கு அவசரம்..?!! பொறுமையா படிச்சா என்னவாம்?!! :))
//ஆர்வமுடன் வந்து கிட்டு இருக்கான். என்ன நடக்க போவுதோ:-))//
இப்ப என்ன நடந்துட போகுது. . வரசொல்லுங்க...நானா அவனா ன்னு பார்த்துடலாம்.. :)))
//உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்//
சரிங்க ஆபிசர்.. இரண்டு மொழிதான் இருக்கா?
Nalla irukku:))))
super voice nice
ரிக்கார்டிங்கல கேட்ட எங்களுக்கே இப்படி தூக்கம் வருதே... நேர்ல கேட்ட நவீன் எத்தனை மணி நேரம் தூங்கி இருப்பான்க்கா? :))
நல்லாயிருக்குக்கா பாட்டெல்லாம் :)
கடைசி தாலாட்டு அருமை
@ சே. குமார் - நன்றி
@ காயத்திரி - நன்றி
@ நான் ஆதவன் : நன்றி :) நவீன் பல நேரம் தூங்காமல் உயிரை வாங்கி இருக்கான், தீடிர்ன்னு கதைக்கு இறங்கி, அம்மன் சாமி வருது கண்ணை மூடிக்கோ ..ன்னு சொல்லி பயமுறித்தி எல்லாம் தூங்க வைத்து இருக்கேன் :)
முயற்சிக்கு வாழ்த்துகள்.நன்றாக இருக்கு.
@ மாதேவி : @ நன்றி'ங்க.. :)
//நவீன் பல நேரம் தூங்காமல் உயிரை வாங்கி இருக்கான், தீடிர்ன்னு கதைக்கு இறங்கி, அம்மன் சாமி வருது கண்ணை மூடிக்கோ ..ன்னு சொல்லி பயமுறித்தி எல்லாம் தூங்க வைத்து இருக்கேன் :)//
நானு இன்னும் பாட்டு கேக்கலை... ஆனா நீங்க மேலே சொன்னத வச்சு பாக்கும் போது நீங்க பாடினா நவீன் ஏன் தூங்குறான்னு லேசா புரியுற மாதிரி இருக்கு :))))))
@ கண்ஸ் - நல்லவேள பாட்டு கேட்கல்ல இல்லன்னா.. கமெண்டு போடமுன்ன தூங்கி போயி இருப்பிங்க.. அப்புறம் எனக்கு கமெண்டு மிஸ்ஸிங் ஆகி இருக்கும் :))) (நோ நோ நோ..பேட் வேர்ட்ஸ்)
Post a Comment