ஆண்களின் பிடியில் சிக்கி தவிக்கின்ற என்னை போன்ற பெண்களுக்கு, வலையுலக நண்பர்கள் தவிர (ஓசியில் மங்களம்) யார் உதவி செய்வார்கள்? யார் நீதி கொடுப்பார்கள்? அதனால் உங்களிடம் என் பிரச்சனையை மனம் விட்டு சொல்லி, என் வாழ்க்கையை எத்தனை மன உளைச்சளோடு நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன். ஒரு பாவப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்!!
வலையுலக பிரச்சனைகள் தவிர்த்து குடும்ப பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் , கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக என் சார்ந்த முக்கிய தகுதிகள் :
தகுதி 1 : நான் ஒரு பெண் பதிவர்
தகுதி 2 : பிரச்சனை கொடுப்பவர் என்னுடைய ஆண் குழந்தை
பிரச்சனைகள் :
1. நல்லபடியாக பிறக்க எல்லாவிதமான சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், (அதற்காக மாதமாக இருந்த போது காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடுவே படுத்து ஓய்வு எடுக்காமல் வேலை செய்து இருக்கிறேன்), 9 மாதங்கங்களில் பிறக்காமல், 11 மாதம் வரை வயிற்றின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, வெளியில் வராமல் இருந்ததால், என் வயிற்றை கத்தி க்கொண்டு வெட்டி/கிழித்து அவனை வெளி கொண்டு வர வேண்டியாகிவிட்டது. இதனால் நான் பட்ட கஷ்டத்திற்கு அளவில்லை, இவன் பிறக்க வேண்டி முதுகு தண்டில் போட்ட ஊசியால், வெகு நேரம் தொடர்ந்து நிற்க முடியாமல், வலியில் இன்று வரை அவதிப்பட்டு வருகிறேன்.
2. சாப்பாடு ஒழுங்காக சாப்பிடாமல் , மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் நான் செலவிட வேண்டியதாகி இருந்தது. என் நேரமும், அவனை தூக்கி வைத்துக்கொண்டு ஊட்டியதால், என் உடல் வலியை அவனால் சரிக்கட்ட முடியுமா?
3. எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு வளர்ந்தாலும், வேலைக்கு சென்ற போது, ஆண் பிள்ளையாக அவனின் சேட்டை மிக அதிகமாக இருந்த காரணத்தால், எந்த நேரத்தில் வீட்டில் என்ன செய்து வைப்பானோ, அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று வேலை நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாமல், எந்த நேரமும் இவனை பற்றிய கவலையிலேயே இருந்தேனே! என்னை நிம்மதியில்லாமல், பல வருடங்கள் வைத்துக்கொண்டது இல்லாமல், இப்போதும் அதை தொடர்கிறானே? என் வாழ்க்கையில் ஏன் நான் இவனால் நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும்?
4. எவ்வளவு நன்றாக சமைத்தாலும், ஏதோ பரவாயில்லை என்று சொல்வதோடு இல்லாமல், இத்தனை வருடம் சமைக்கிறாயே, எனக்கு பிடித்த சிக்கன் ரோல், பர்கர், கேக், சிக்கன் பஃப், நாந், இவையெல்லாம் செய்ய தெரியவில்லை என்று என்னை மட்டமாக பேசுவது மட்டும் இல்லாமல், அவற்றை எல்லாம் கற்றுக்கொண்டு, விடியற் காலையில் நான் எழுந்து அவனுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்துகிறானே.. நான் என்ன இவனுக்கு சமையல்க்காரியா? இவனுக்காக என் தூக்கத்தை நான் தியாகம் செய்ய வேண்டுமா?
5. என்னை முடி வெட்ட கூடாது என்றும், அப்படியே மீறி வெட்டினால் வீட்டினுள் சேர்க்க மாட்டேன் என்று மிரட்டுவதும், ஜாக்கெட் பின்புறம் நெக், ரொம்ப டீப் நெக் போடக்கூடாது, அப்படியே போட்டால் தைத்துக்கொடுத்த டெயிலரை (அவங்களும் பெண்) வந்து திட்டுவேன் என்றும், ஜீன்ஸ் பேன்ட் போடக்கூடாது, அப்படி போடவேண்டும் என்றால், 50 கிலோ ஐஸ்வர்யா ராய் மாதிரி ஆனப்பிறகு போடு என்று பீப்பா மாதிரி இருக்கும் என்னை குட்டி பாப்பாவாக மாற சொல்லி என்னால் செய்யவே முடியாத விஷயத்தை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் இந்த கொடுமைக்காரனிடமிருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?
6. எல்லாவற்றையும் விட கொடுமை, அவன் சாப்பிடும் அளவிற்கு என்னையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவதோடு அல்லாமல், என்னால் முடியவில்லை என்று சொன்னால், திட்டி துன்புறுத்தி சாப்பாட்டை திணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறானே... நான் என்ன அவனுக்கு அடிமையா?
7. உலக நடப்புகளை பார்த்து, இப்போதிலிருந்தே புரட்சி பெண்களிடம் தள்ளி இரு, உனக்கு நம்ம ஊர் பக்கமாக படிக்காத இரட்டை சடை போட்ட அருக்காணியாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன், அப்போது தான் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னால் கேட்காமல், சட்டை செய்யாமல், வூட்டுக்காரோடு போய் செட்டில் ஆகிற வழியை பார், என் விருப்படிப்படி தான் திருமணம் செய்து க்கொள்வேன், ஃபியூச்சரில், என் பொண்டாட்டி சமைத்து போடாவிட்டால், உன்னை அழைத்துக்கொண்டு போய் என்னுடன் வைத்துக்கொள்வேன், மரியாதையாக சமைத்து போடு என்கிறான். இவனுக்கு சமைத்து போடுவதே தண்டம் என்று நினைக்கும் வேலையில், எதிர்காலத்தில் இவன் மனைவிக்கும் சேர்த்து என்னை வேலை வாங்க இப்போதே திட்டம் தீட்டி வருகிறான் என்பதை இந்த சபையினருக்கு தெரிவித்து கொள்கிறேன். காலம் பூராவும் இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் சமைத்துப்போட நான் என்ன இவன் வீட்டு வேலைக்காரியா? இல்லை எனக்கு ஆயுள் தண்டைனையா?
8. இத்தோடு நிற்காமல், என்னுடைய ப்ரசனல் விஷயத்திலும் அத்து மீறுகிறான், என் கணவருடன் நான் தனியாக சினிமா,பீச், ஷாப்பிங் என்று எங்கேயும் போகக்கூடாது என்று தடைவிதிக்கிறான். கேரளாவிற்கு டூர் சென்ற போது ஃபோன் செய்து "அவரோட(என் சொந்த வூட்டுக்காரோட) நீ தனியாக ஊர் சுத்தின என்று தெரிந்தது, உன்னை என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது" என்று மிரட்டுகிறான். என் தனிப்பட்ட சுதந்திரத்தில் இவன் எப்படி தலையிடலாம்.? எப்படி மிரட்டலாம்?
9. இதை எல்லாவற்றையும் விட நான் சொல்கின்ற பேச்சை கேட்காமல், உடை அணிந்து என் மானத்தை வாங்குகிறான். அதாவது, உள் ஆடைக்கு (ஜட்டி) கீழ் பேன்ட் போடுகிறான், ஏண்டா இப்படி? அசிங்கமா இருக்குடா ? ன்னு சொன்னால், "இது நியூ ஸ்டைல், நீ ஒரு கன்ட்ரி உனக்கு தெரியாது, வாயை மூடு" என்கிறான், இப்படி அவன் உடுத்தினால், எத்தனை இளம் பெண்களின் கவனம் சிதறும்?! ஒரு பெண்ணாக என்னால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தினம் இதனால் இவனோடு பெரிய சண்டையாக இருக்கிறது. சண்டை போட்டு கத்தும் போது, தொண்டை மிகவும் வலிக்கிறது என்பது கூடுதல் தகவல். !
10. இதை தவிர்த்து தினமும் இவன் பிறந்தது முதல் இவன் துணியை நானே துவைத்து போட வேண்டியுள்ளது. (எப்போதுமெ எங்கள் வீட்டில் வேலையாள் எதற்கும் இல்லை), அவன் சாப்பிட்ட பாத்திரங்கள், அவன் சாப்பிட நான் சமைத்த பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் நானே கழுவி வைக்க வேண்டியாக உள்ளது, தன் வேலையை அவனாக செய்ய வேண்டும் என்று பழக்கப்படுத்த அழைத்தால், இது எல்லாம் உன் வேலை, வீட்டில் சும்மாக படுத்து தூங்கிக்கொண்டு தானே இருக்கிறாய்? என்று கேட்டு, என்னை ஒரு டிப்பிக்கல் பெண் ஐ போல் நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படி இன்னும் பல பல கொடுமைகள் அவன் செய்து வருவதால், எனக்கு நீதி கேட்கிறேன். இப்படி ஒருவனிடம் சிக்கி என் வாழ்க்கையில் நான் இழந்த நிம்மதியை மீட்டு தர கேட்கிறேன். முதலில் நார்மலாக பிறக்காமல் சிசேரியன் செய்ய வைத்ததன் உள்நோக்கம் என்ன என்பதை கேட்டு சொல்ல கேட்கிறேன். ஒரு அம்மா என்றால் எல்லாவற்றையும் பொறுத்து போக வேண்டுமா என்ன? நான் என்ன இவனின் அடிமையா? இன்னமும் நான் அடிமையாக த்தான் என் வாழ்க்கையை தொடர வேண்டுமா? எனக்கு நியாயம் வேண்டும். எனக்கு நீதி வேண்டும்.. எனக்கு அது வேண்டும்.... இது வேண்டும்.. ..... எல்லாமே வேண்டும் !! ஏன்னா நான் ஒரு பெண்.. !!
ஆன் ரிக்வுஸ்டில் கொடுக்கப்படும் விபரங்கள் : அவன் பிறந்தது பாண்டிசேரி (தமிழ்நாடு இல்லை என்பதை கவனிக்க, இதை வைத்து அவனின் குணம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கணித்து அவனை திட்டலாம்), ஜாதி, அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா.. போன்றோரின் வேலை விபரங்கள், என்னுடைய வயது, படிப்பு, அதர் அன்லிமிடட் குவாலிபிகேஷன் போன்றவையும் தரப்படும், அப்போது தான் என்னை எப்படி அவன் கொடுமைப்படுத்தலாம் என்பதை கேட்க உதவும்.
தயவு செய்து எனக்கு நீதி வழங்க யாராச்சும் ஏற்பாடு செய்யுங்கள் ! நான் ஒரு பெண்ணாக இருப்பதால், நான் என்னவெல்லாம் அவனையும், அவன் அப்பாவையும் கொடுமை செய்கிறேன், செய்தேன், செய்வேன் என்பதை மட்டும் நீங்கள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்பது தெரியும் இருந்தாலும் கேட்க க்கூடாது என்பதை மிக அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.
அணில் குட்டி அனிதா : ஹா ஹா ஹா ஹா......... இந்த அம்மணி சொல்றதை கேட்டு புள்ளக்கிட்ட மட்டும் யாரும் வந்து எதுவும் கேட்டுடாதீங்க.. துப்பறது மட்டும் இல்ல.... அடிச்சி க்கூட விரட்டுவான்.. .அம்புட்டு கடுப்பல இருக்கான் அம்மணி மேல.. .அப்புறம் உங்க இஷ்டம்..
அப்பாளிக்கா இன்னொரு மேட்டர், அம்மணி சொல்றாங்கனு நம்பி வாயத்தொறந்தீங்க. .உங்க வாயி உங்க முகத்துல இருக்காது.. ஏன்னா... புள்ளையோட அம்மா ஒரு ரவுடி.. ங்கோஓஓஓஒ !! புள்ளைய ஒரு தரம் கீழ் வீட்டில இருக்கிறவரு திட்டினாரு ன்னு போலிஸ் கம்பளென்ட் கொடுத்து உள்ள தள்ளுவேன் மிரட்டினாங்க. .அந்த அளவுக்கு புள்ளன்னா தெருவில் இறங்கி போராடுவாங்க. .அடுத்து ஒரு முறை, ஸ்கூல் ல சைன்ஸ் மிஸ் அடிச்சாங்கன்னு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் க்கிட்ட நேராக போயி கம்பளைட் கொடுத்து மிஸ் க்கு வார்னிங் கொடுத்து வேலை விட்டு தூக்கற அளவு செய்த நல்லவங்க... !! சோ பாத்து நீதி வழங்குங்க... உங்க நன்மைக்கு தான் சொல்றேன்
பீட்டர் தாத்ஸ் : A mother is not a person to lean on, but a person to make leaning unnecessary
Our children are our only hope for the future, but we are their only hope for their present and their future
A family is a little world created by LOVE
எனக்கு நீதி வேண்டும்..!!
Posted by : கவிதா | Kavitha
on 08:08
Labels:
அணில் குட்டி,
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
71 - பார்வையிட்டவர்கள்:
கொடுமை தான்! ஆனா தப்பு உங்க பேர்ல தான் இருக்கு. ஆரம்பத்திலேயே இதை நீங்க பொதுவிலே வச்சிருக்கனும் என்பது என் கருத்து!
பே பே பே....பேச்சு வரலை, ஊமை :)
என் பையன் கூட மடில தான் படுத்துக்குவேன், முத்தம் குடுன்னு சொல்றான். சேர்ந்து முறையிடலாமா??
நான் இங்க வரவே இல்லை. பின்னூட்டம் போடவே இல்லை.
ஏன் தாயி புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையையும் ஆட்டறது இது தானா? டிஸ்கியை பார்த்து ஆத்தா மிரண்டு போயிருக்கேன்.....எஸ்கேப்................
9 ல சொல்லிருக்கமாதிரி உங்கள் மகன் உடுத்துவது அவர் சூப்பர்மேன் என்பதை உணர்த்துகிறது.
கெட்டவர்களை ஒழிக்கவே சூப்பர்மேன் அவதாரம் எடுப்பது நான் உள்பட எல்லாருக்கும் தெரிந்ததே . :)
எங்கு முறையிட்டாலும் கடைசியில் வெற்றி சூப்பர்மேனுக்கும் ஸ்பைடர்மேனுக்குமே.
@சின்ன அம்மனி!:-)))))))))))
@அபிஅப்பா : நன்றி, அப்படீன்னா நீங்க குடும்ப விஷயத்துக்கு எல்லாம் நல்ல தீர்ப்பு சொல்லுவீங்களா?
நீங்க = பொது
@ மயில் : ம்ம்ம்... நீ ஊமையா இருக்கறது உனக்கு நல்லது.... இல்லன்னா மகளே... ரொம்ப கஷ்டப்படுவ.. :) அப்படியே மெயின்டெயின் பண்ணு.. !!
@வித்யா: வாங்க சேர்ந்துக்கோங்க... இன்னும் நான் சொல்ல வேண்டிய விஷயம் நிறைய இருக்கு...
அதுல ஒன்னே ஒன்னு சொல்றேன்..
அவன் சைட் அடிக்கிற ஒரு பொண்ணையும் எனக்கு பிடிக்கல.... எல்லாம் தலைவிரி கோலமா அச்சு அசல் பிச்சக்காரி மாதிரியே இருக்குங்க... அரை குறை டிரஸ் வேற... இதையும் லிஸ்ட் ல சேர்த்துக்கனும்.. :))
//நான் இங்க வரவே இல்லை. பின்னூட்டம் போடவே இல்லை.//
ஓஓஒ வித்யா இதை இப்பத்தான் பார்த்தேன்.. சரி நீங்க வரவே இல்ல.. பின்னூட்டம் போடவே இல்ல...
@தமிழ் : ம்ம்ம்.. தப்பிச்சிட்டா.. விட்டுரோவாமா? :)
@ அகில் : நீங்க சொன்னாப்பல இல்லப்பா.... பின்னாடி..பாதி ஜட்டி அப்படியே தெரியும்.. பேன்டை லோ ஹிப் போட்டு இருப்பான்.. புரியும் படி சொல்லனும்னா சில பெண்கள் லோ ஹிப் புடவை கட்டி கவர்ச்சி காட்டுவாங்க இல்ல அது மாதிரி... என் புள்ளைய ப்ரீ ஷோ காட்டாவா கஷ்டப்பட்டு பெத்தேன்.. அதை கேட்டா.. .டென்ஷன் ஆகி கத்தறான்.. :(
ஆஹா.. ஓஹோ.. கலக்கல். :))
நீங்க கபீஷ் நண்பியா...
வாங்க விதூஷ் :).. கபீஷ் க்கு மட்டுமா..? எல்லோருக்கும்... :)))))
எனக்கென்னவோ உங்க பையன் பக்கம்தான் நியாயம் இருக்குறதா தோணுது
பையன் ஜட்டி மேல பேன்ட் போட்ட என்ன? அல்லது பேன்ட் மேல ஜட்டி போட்டதன் உங்களுக்கென்ன வந்தது? அந்தந்த காலத்துக்கேத்த ஸ்டைல் அவங்கவங்க விருப்பம் இல்லையா அதுல என் தலையிடுறீங்க?
சிபி - வாங்க..!! எப்படி இருக்கீங்க?
ம்ம்.. அவன் பக்கம் நியாயத்தை கேட்காமல் எப்படி நீங்க அவன் பக்கம் நியாயம் என்று தீர்ப்பு சொல்லலாம்.. உங்கள் தீர்ப்பு சரியானதல்லை.. என்பதற்கு ஆதாரமாக வீட்டில் தினமும் நடக்கும் விஷயத்தை ரிக்கார்ட் செய்து போட்டு காட்ட தயாராக இருக்கிறேன்.
//பையன் ஜட்டி மேல பேன்ட் போட்ட என்ன? அல்லது பேன்ட் மேல ஜட்டி போட்டதன் உங்களுக்கென்ன வந்தது? அந்தந்த காலத்துக்கேத்த ஸ்டைல் அவங்கவங்க விருப்பம் இல்லையா அதுல என் தலையிடுறீங்க?//
ஹை.. நல்லா இருக்கே. .அவன் மட்டும் என்ன்னை முடிவெட்ட கூடாது, ஜீன்ஸ் பேன்ட் போட கூடாதுன்னு சொல்றான் ஏன் சொல்றான்.. அதை கேட்டீங்களா..??
ஒரு பக்கமாக தீர்ப்பு சொல்லும் சிபி ஒரு ஆணாதிக்க வியாதி சாரி வாதி என்றே தெரிகிறது
//ஹை.. நல்லா இருக்கே. .அவன் மட்டும் என்ன்னை முடிவெட்ட கூடாது, ஜீன்ஸ் பேன்ட் போட கூடாதுன்னு சொல்றான் ஏன் சொல்றான்.. அதை கேட்டீங்களா..??//
ஒரு பச்சபுள்ளக்கும் ஆயாவுக்கும் வித்தியாசம் இல்லையா? என்ன கொடும சார் இது?
//என்.ஆர்.சிபி said...
எனக்கென்னவோ உங்க பையன் பக்கம்தான் நியாயம் இருக்குறதா தோணுது//
பாதிக்கப்பட்ட பெண் வந்து சொல்லும் போது நியாயம் அநியாயம் பாக்குறதிலிருந்தே நீங்க சரியான ஆணாதிக்கவாதிங்கறது தெரிகிறது. உங்களை புடிச்சு கொடுக்க வேண்டிய இடத்தில் புடிச்சு கொடுக்கப் படும்
//ஒரு பச்சபுள்ளக்கும்//
என் குழந்தை பச்ச கலர் இல்லையே, அவன் என்ன கலர் ன்னு எங்கையும் சொல்லாத தகவலை எப்படி நீங்க சொல்லல்லாம்?
//ஆயாவுக்கும் வித்தியாசம் இல்லையா? என்ன கொடும சார் இது?//
ஆயா ன்னு புதுசா ஒரு கேரக்டரை உள்ளே கொண்டு வந்துள்ளார் சிபி.. ?!! அது யார்?
எனக்கும் என் குழந்தைக்கும் நடுவில் வந்த அந்த ஆயா யார்?
//உங்களை புடிச்சு கொடுக்க வேண்டிய இடத்தில் புடிச்சு கொடுக்கப் படும்//
கண்ணா சீக்கிரம் சீக்கிரம். சிபி விபரம் என்னான்னே தெரியாம வந்து ஒரு பெண் பதிவர் பதிவில் தைரியமாக எதிர்த்து பேசிக்கிட்டு இருக்காரு...
முதல்ல ஓடி போய் பிடிச்சி கொடுங்க.. :))))
//உங்களை புடிச்சு கொடுக்க வேண்டிய இடத்தில் புடிச்சு கொடுக்கப் படும்//
அடப் பாவிகளா நான் இல்லை!
கவிதா பக்கம் 500% நியாயம் இருக்கிறது என்பதையும் மறுக்கலாகாதுன்னு சொல்லிட்டு எஸ் ஆயிக்கிறேன்
////உங்களை புடிச்சு கொடுக்க வேண்டிய இடத்தில் புடிச்சு கொடுக்கப் படும்//
அடப் பாவிகளா நான் இல்லை!
கவிதா பக்கம் 500% நியாயம் இருக்கிறது என்பதையும் மறுக்கலாகாதுன்னு சொல்லிட்டு எஸ் ஆயிக்கிறேன்//
ஹா ஹா ஹாஹா... அது !! ஓடுங்க ஓடுங்க.. !! :)))))) திரும்பி பாக்கக்கூடாது ஆம்மா சொல்லிட்டேன்.. !!
//உங்களை புடிச்சு கொடுக்க வேண்டிய இடத்தில் புடிச்சு கொடுக்கப் படும்//
கண்ணா நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை
2 நிமிஷம் என் போட்டோவை உத்து பாருங்க! கெக்கே பிக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சிடுவீங்க
உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு
//2 நிமிஷம் என் போட்டோவை உத்து பாருங்க! //
ஹய்யோ....ஏன் இந்த கொலவெறி.... 2 நிமிஷம் என்ன 1 நிமிஷம் தொடர்ந்து பார்த்தாவே பன்னி காய்ச்சல் வர மாதிரி இருக்கு... !! :((((
நிதி கேட்காதவரைக்கும் நல்லதே
நீதி தானே - அது கேட்கன்னு ஒரு குழு(?) இருக்காங்களாமே, அங்க போய் முறையா இட்டு பாருங்களேன் முறையை
நீங்க இப்படி சாட்சி காரர்கள் கா...ழு...
விட சண்டைக்காரர் கா...... நல்லது
எதா இருந்தாலும் எதிர்த் தரப்பு வாதத்தை கேட்காமலோ, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலோ இந்த வழக்கில் யாரும் தீர்ப்பளிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது ஒருதலைப்பட்சமானது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..!
எதிர்த் தரப்பின் வாதத்தை அனுப்ப இன்றைக்கே அவருக்கு வலையுலகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது..!
ஆணுக்கெதிரா இப்படி அநியாய புகார்களா? நவீன் பாவம். என்ன தான் அக்காவா இருந்தாலும் உங்க புகார்களை நிராகரிச்சு நான் நவீனுக்கு என் ஆதரவை தருகிறேன் :))
அய்யோ அம்மா முடியலை அணில்
உங்களை போன்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள் இருக்கும் வரை நாடு நல்லாவே முன்னேறும் தாயி!!!!
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் (இல்லாட்டி ஆணாதிக்கவதினு சொல்லிடுவாய்க )
இங்கே நிறைய நாட்டுஆமைகள் இருப்பதால் உங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் . (நல்லவேளை என் அம்மாவுக்கு வலைப்பூ பற்றி தெரியாது...)
FOLLOW UP
//நான் இங்க வரவே இல்லை. பின்னூட்டம் போடவே இல்லை//
kootuda panchayathai sombu engada
//நீதி தானே - அது கேட்கன்னு ஒரு குழு(?) இருக்காங்களாமே, அங்க போய் முறையா இட்டு பாருங்களேன் முறையை//
ஜம்ஸ், அதுக்கெல்லாம் யாராச்சும் பதிவு எழுதி தரணும், இந்த பதிவு எழுதினத்துக்கே என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் உங்களையும் சேர்த்து துப்பிட்டாங்க.. இதுல எங்க குழுவை நாடுவது, அதான் அதை ஆப்ஷன் ல விட்டுட்டேன்.. :((
//நீங்க இப்படி சாட்சி காரர்கள் கா...ழு...
விட சண்டைக்காரர் கா...... நல்லது//
குட் ஐடியா, சூப்பர், என் குழந்தை கால் ல விழுந்துக்கறேன்..
*****************
//எதா இருந்தாலும் எதிர்த் தரப்பு வாதத்தை கேட்காமலோ, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலோ இந்த வழக்கில் யாரும் தீர்ப்பளிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது ஒருதலைப்பட்சமானது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..!//
ஹய்யோ முருகா முருகா நீயும் உன் கடமையும்!! எல்லாம் அறிந்த உனக்கு இரு பக்கமும் விசாரித்து கொடுத்தால் அது தீர்ப்பு ஆகாதுன்னு தெரியாதா? உன்னை பாத்தா எனக்கு சிப்பு சிப்பாவருது... நீ இன்னும் வளரனும்.. முருகா !! :))
//எதிர்த் தரப்பின் வாதத்தை அனுப்ப இன்றைக்கே அவருக்கு வலையுலகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது..!//
அட இது வேறையா.. ஏன் முருகா இந்த வேல உனக்கு..? முன்னமே அவன் ப்ளாகர் னா வெட்டிங்கன்னு திட்டுவான், உங்க எல்லாத்துக்கும் சேர்த்து நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன்.. இதுல நீ நேரா டீல் பண்ண லெட்டர் அனுப்பிட்டியா.. ம்ம்ம்.. உன் நேரம் வாங்கிக்கட்டிக்கோ... !! :))
;) ;(
@ஆதவன் : ம்ம்.. என் குழந்தை பக்கம் தீர்ப்பு சொன்னதால விட்டு வைக்கிறேன் உங்களை.. பிழைச்சி போங்க. .ஆனாலும் நீங்க ஆணாதிக்க வாதி தான்.. !! :))
@ சக்தி : ஏதோ நம்மால நாட்டுக்கு முடிஞ்சது... நாடு வளர்ந்தா நானும் வளர்வேன்.. சிலை எல்லாம் எனக்கு வைப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்.. :))
@ பிரபு : அம்மாவிற்கு வலைப்பூ பற்றி தெரியாமல் வைத்திருக்கும் நீங்கள் ஒரு ஆணாதிக்கவாதி..
//FOLLOW UP//
ஹல்லோ..என்ன இது.. ம்ம்ம்? நான் என்ன அவங்களா இல்ல இவங்களா..? எதுக்கு இப்ப ஃபாலோ ஆப்பு எல்லாம் ???
@கிரி : இங்க வராம இருந்ததுக்கு நன்றி. .எப்பவும் அந்த பயத்தோட இருங்க..
@ எல்.கே: யூ நோ, மை சன் ஈஸ் வெரி பீட்டர், ஹீ டஸ்சின் நோ" பஞ்சாயத்து சொம்பு" மீனிங்.. சோ குட் யூ கெட் சம்திங் எல்ஸ் ஈக்குவலி இன் பீட்டர் ஃபார் ஹிம் டூ அண்டர்ஸ்டேண்டு..... :)))
@ கோப்ஸ் : ஏதாச்சும் திட்டறதுன்னா.. இங்கவே திட்டுங்க.. வாங்கிக்கிறேன்.. தனியா கூப்பிட்டு திட்டினா.. அவ்வ்வ்வ்வ் நான் தனியா அழுது காட்டுவேன்... சொல்லிட்டேன்.. !!
வினவு தோழர்களை நக்கல் செய்யும் தோழர் கவிதா அவர்களுக்கு எனது வன்மையான கண்டனங்கள் (ஹி.. ஹி.. ஏதோ என்னால முடிஞ்சது ... நோ ..நோ பேட் வார்ட்ஸ் ... நோ ..பேமிலியவெல்லாம் திட்டக் கூடாது ...வர்றேன் தோழர் ...தலயைக் கேட்டதா சொல்லுங்க (உங்க சிங்கக் குட்டியை .... (பி கு: உங்கபையன் எவ்வளோவோ பரவாயில்லை ..நாங்கெல்லாம் ...
-புகார் கொடுத்தவர் பெண் என்பதாலும் புகார் ஆணின் மீது வைக்க பட்டிருப்பதாலும் அவர் அந்த பெண்ணின் 2 வயது மகனாக இருந்தாலும் புகார் வாசிப்பது பெண்ணாக இருக்கிற ஒரே காரணத்தினால் உங்கள் பக்கமே நியாயம் உள்ளது என்று எதையும் விசாரிகாமலே சம நீதியான தீர்ப்பு உங்கள் பக்கம் வழங்கப்படும் . :)
-தீர்ப்பு சொல்ல்வற்கு முன் நான் ஒருவடிடமிருந்து புடுங்கி வைத்திருந்த நசுங்கிய சொம்பை இட்லி செய்பவர்கள் திருடி விட்டதால் இனி வரும் எவரும் நசுங்கியது ஆக இருந்தாலும் பரவாஇல்லை சொம்போடு வரவும் .
-எல்லாரும் காறி காறி துப்பி இருப்பதால் எடுத்து வரும் போது கழுவி எடுத்து வரவும் :( (me ரொம்ப சுத்தம் )
-புகார் சொல்வது பெண்ணாக இருந்தும்(அழுத்தமாக வாசிக்கவும் ) ஆணின் பக்கம் நியாயம் உள்ளது என பேசும் சிபி அவர்களை தனிமை சிறையில் அடைய்க்க இந்த சொம்பே இல்லாத ஆலமரமும் இல்லாத கோர்ட் ஏக மனதாக தீர்ப்பு அளிக்கிறது .
-வாழ்க பெண்களின் கொட்டம் ஐயோ சாரி கொற்றம் ,
இப்படி tounge slip ஆனதுக்கு ஜட்ஜ் யும் தூக்கி உள்ளே போடுவீங்களா ..:(
:)
ROTFL
:)
ROTFL
என்னவோ சொல்லுறீங்க, ஆனா ஒண்ணுமே புரியலை
நல்ல பையன்தான் அவன்! அவனா உங்களைப் பெற்றெடுக்கச் சொன்னான்!!!இஃகி! இஃகி!
உங்க மகனிடம் சொல்லி வையுங்க வலைப்பதிவு அங்கிள்களிடம் சொல்லி பிராது கொடுத்துடுவேன் என்று.
கடைசி பேராவை படிக்காம கருத்து யாராவது போட்டீங்க..அவ்ளவுதான்.கிங்கிலிக்கா.. ஆயிடுவீங்க மக்கா
இந்த பதிவு எழுதினத்துக்கே என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் உங்களையும் சேர்த்து துப்பிட்டாங்க..]]
அப்ப நானும் ரவுடி தானா
ஏன் இப்படி........... நல்லாத்தான போயீகிட்டூ இருக்கு......
உங்க பையன் உங்களை மாதிரியே ஸ்மார்ட்டு போலே..ஹீ..ஹீ..உங்களை வச்சு காமடி பண்றாப்ல போல..:-))
சூப்பருங்க........நாமல்லாம் பாசக் கிறுக்கா இருககற வரைக்கும் நம்ம பய புள்ளைக இபபடித்தேன் அட்வாண்டேஜ் எடுத்துக்குவாய்ங்க......
@ நியோ : "தோழர்" கவிதா ன்னு எல்லாம் கூப்பிடாதீங்க.. கவிதா போதும்.. "தோழர்" ஐ உங்களிடமே வைத்துக்கோங்க. !!
//.தலயைக் கேட்டதா சொல்லுங்க (உங்க சிங்கக் குட்டியை .// நன்றி, சொல்கிறேன்.. :)
@ சித் : நன்றி. :) டங்க் ஸ்லிப் ஆனாலும் குற்றம் குற்றமே.. !! கண்டிப்பாக நீங்கள் கம்பி எண்ணும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை ரொம்ப பக்கத்தில் இருக்கிறது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.. :)
@ ம.சிவா: சிரிச்சாச்சா? :))) நன்றி
@ நசரேயன் : புரியாம இருக்கறது ரொம்ப நல்லது.. அப்படியே இருங்க.. தலைவலி மிச்சம் ! :)
@ தேவன் மாயன் : நல்ல கேள்வி ஆனா நானா அவனை "நீதான்" என் வயிற்றில் வந்து பிறக்கனும் னு சொன்னேன்.. சொல்லவே இல்லையே?! :))
@ கோவி : அதுக்கெல்லாம் அவிங்க அம்மாவே பயப்பட மாட்டாங்க. .புள்ள எங்க இருந்து பயப்படும் ?! :))
@ ஆர் கே சதீஷ்குமார் : நீங்க படிச்சிட்டதால பிழைச்சி போங்க.. :))
@ ஜம்ஸ் : இல்லையா பின்ன... வலைப்பதிவு எழுதி, இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில், ஓட்டம் பிடிக்காம எழுதி, அதுவும் ஒரு பெண் பதிவர் பதிவில் வந்து பின்னூட்டம் போடும் போதே நீங்க "ரவுடி" ஆயிட்டீங்க ன்னு தெரியலையா? :))))
@யோகேஷ் : ஆமா நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி?? :((
@ ஆனந்தி : நன்றி... என் குழந்தை மட்டுமா என்னை வச்சி காமெடி பண்றான்... :)))))..
@ நித்திலம் சிப்பிக்குள் முத்து : "நித்திலம்" ங்றது ஊர் பேரா?
ம்ம்ம்.. ஆமாங்க நம்மோட கண்ணை மறைக்கும் பாசம் அதுங்களுக்கு அட்வான்ட்டேஜ் தான் :)))
ஹி ஹி சூப்பர் !!!
:)).. n1..
Pugar kudukkum mun veetil nadantha sandaigalai video eduthu vaithu kollungal.photo kooda venum . Atharam illamal theerpu solla mudiyathu . Anyway neengal pennaga irupathalum muthalil pugar kudupathalum vetri ungaluke ungaluke ungaluke.
Fup
@ ரவி : நன்றி.. :) யாழினி எப்படி இருக்காங்க? !
@ கலகலப்பிரியா : நன்றிங்க :)
@ மதார் : கண்டிப்பாங்க. .வீடியோ, ஆடியோ எல்லாம் எடுத்து கொடுப்பேன்.. அவன் பிறந்து 1 மாதத்திலிருந்து இப்ப வரைக்கும் போட்டோ அதுவும் நானும் அவனும் சேர்ந்து எடுத்ததே இருக்கு.. அதனால் என் பக்கம் எல்லாம் க்ளையர் ங்க..!! :)))
நன்றி..
ம்ஹீம்..
புனைவு, சொற்சித்திரம்,பகடி...இதுல இந்த பதிவை எந்த வகையில சேர்க்கறது...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதே, இனிதான் பின்னூட்டத்தை எல்லாம் படிக்கனும்.
:)
அன்பிற்கினிய கவிதா | Kavitha ....,
மிகவும் காமெடியாக உள்ள இந்த பதிவில் "ஒரு தாயின் அன்பு,அர்ப்பணிப்பு,தியாகத்தோடு தனக்கு மட்டுமே தாய் என்ற மகனின் காதலும்" எனக்கு புரிகிறது.
உலகில் முதன்மையானது அம்மா-மகன் அன்பு மட்டுமே.
மிக நல்ல பதிவு...
நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
எவ்வளவு கொடுமைய அனுபவிச்சிருக்கீங்க ரொம்ப வருத்தமாயிருக்குங்க
உங்களுக்காக நீதி கேட்டு பெரிய போராட்டமே பண்ணலாம்தான், இப்ப கொஞ்சம் வேலையிருக்கறதினாலே அப்புறம் பண்ணிக்கலாம்ங்க
அன்பிற்கினிய கவிதா | Kavitha ....,
வழக்கை தள்ளுபடி செய்யலாம்.
நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
@ அஹமது : அதே.. ! :)
@ டூபாக்கூர் : நீங்க சொன்ன எதற்கும் எனக்கு அர்த்தம் தெரியாது..ஏன்னா நான் தமிழ்ல பிஹெச்டி பட்டம் வாங்கினவ... அதனால, எதுல வரும்னு ரொம்ப கஷ்டபடாதீங்க சரியா.. பொறுமையா உக்காந்து படிச்சிட்டு போங்க.. ஒன்னும் அவசரமில்ல...!! :)
@ விசா :நன்றி..
@ எஸ்.ரமேஷ் : ஆமா எனக்கு உயிர் கொடுக்கும் என் குழந்தையை தவிர வேறு எனக்கு ஒன்றுமில்லை எனலாம்.. :)).. நன்றி..
@ வேலு.ஜி : என்னங்க நீங்க, வேலைன்னு தள்ளி போடறீங்க.. கொடுமை செய்யறதை தட்டி கேக்கறது முக்கியமா வேலை முக்கியமா.. முதல்ல உங்க வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு.. உடனே இந்த வேலையை பாருங்க... !!
@ எஸ்.ரமேஷ் : என்னங்க நீங்க,, மரத்தை பற்றி எல்லாம் புரிஞ்சி..அதோட சேர்த்து மனிதம் எல்லாம் வளர்க்கறீங்க. .எனக்கு ஒரு நீதி நியாயம் சொல்லுவீங்கன்னு பார்த்தா.. வழக்கை தள்ளுபடி செய்ய சொல்றீங்க? சரி தள்ளுபடி % எதுவும் சொல்லாம எஸ் ஆனா எப்படிங்க? !:)
அன்பிற்கினிய = இது நல்லா இருக்குங்க.. அன்பே இனிமை தான் அதிலும் ஒரு இனிய சேர்த்து அழைக்கறீங்க... ம்ம்ம்ம்.. அட்ரஸ்ஸிங் வெரி நைஸ்லி குட்.. !! :))))
மண்டபத்திற்கு இன்னும் உங்கள் கடிதம் வந்து சேரவில்லையாம்.... சீக்கிரமா அனுப்பி வைங்க.
யப்பா!
:)))
en ponnuku alainju thirinju dress vaangiren, ithu aanaathikathla varumaa.
asathalungo unga pathivu.
@ தமிழ்பிரியன்: ஹோ..அப்படியா.. ஆனா அதுக்கு என்ன வழி முறைகள் ன்னு எனக்கு தெரியாதே..?! தெரிந்தால் சொல்லவும்..!
@ அத்தி : ஒரு அம்மாவின் துயரத்தை கொட்டி இருக்கிறேன் நீங்க என்னென்னா "யப்பா" என்று சொல்லி உங்களின் ஆணாதிக்கத்தை காட்டி சிரித்தும் விட்டு சென்றிருக்கிறீர்கள்... இதற்கு நீங்கள் எனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். :)))))
@ குடுகுடுப்பை : நன்றி..!
ஒரு பெண் (குழந்தைக்காக)ணுக்காக நீங்கள் எப்படி உழைத்தாலும், அலைந்தாலும், திரிந்தாலும் அது எந்த கணக்கிலும் வராது... இது ஒன்லி அப்ளிக்கபுள் ஃபார் தி ஆண்'ஸ் ஆஃப் இந்தியா..!!
:((
இதை நாங்கள்( அதாங்க யூத் குரூப் ) வன்மையாக கண்டிக்கிறோம் , ஆக்சுவலா பாத்தமுன்னா இது ஒரு பொறாமையால் உருவான கம்ப்ளைன்ட் , தன்னால் செய்ய இயலாததை தமது கண் முன்னாலே ஒருவன் செய்கிறானே என்ற கோபத்தில் உருவானது , கருவறையில் எவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்பது எங்கள் சுதந்திரம் , அதே போல் ஆடை விசயத்திலும் , சமையல் நாங்கள் செய்து உங்களது உரிமைகளை பறிக்க விருப்பம் இல்லை , இது கூட புரியாமல் வாழ்கிறீர்கள் , நிம்மதியாக இருக்கும் அவனது தந்தையை இம்சை அரசியிடம் இருந்து காப்பாற்றவே உங்களுக்கு அந்த கட்டுப்பாடு , இப்படி எல்லா தவறையும் உங்கள் மேல் வைத்துக்கொண்டு எங்களை குற்றம் சாட்டுவதை வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்காக இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் வரை கூட செல்ல தயங்க மாட்டோம் என்பதை மிக்க ஆக்ரோசத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .
இப்படிக்கு
பெண்களின் வன்கொடுமைக்கு உட்பட்டோரை காப்பாற்றுவோர் சங்கம்
பதிவு எண் : 468 /1200/che/ 2007
உணர்வை புரிந்து கொண்டாலும் பிள்ளையின் தரப்பை கேட்கமால் ஏதும் சொல்ல கூடாது.(இப்படிதான் தப்பிக்கனும்)
@ சே.குமார் : சரி நானும் சோகம்.. :((((((((
@ மங்குனி : //இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் வரை கூட செல்ல தயங்க மாட்டோம் என்பதை மிக்க ஆக்ரோசத்துடன் //
ஹா ஹா ஹா..:)))) ஏன் இங்கிலாந்து ஓடறீங்க அதுவும் ஆக்ரோசமா? மெதுவாவே இங்கையே போலமே... வெய் ஆக்கரோசம் அவசரம்.. எல்லாம்?! :)))
//பதிவு எண் : 468 /1200/che/ 2007/
அட 2007 லிருந்தே பதிவு செய்யப்பட்டு இருக்கா..? இது தெரியாம பேச்சே.. ?! :((
@எம்கேஆர் : ம்ம்..தப்பிச்சி போங்க..ஆனாலும் விடமாட்டோம்.. :)))
நீங்க இங்க பதிவு போட்டதுக்கு பதில மனு நீதி சோழன் கிட்ட நீதி கேட்டிருக்கலாம்.
@ சிவா : நன்றி
@ பிரசன்னா : அதுக்கு நான் இப்ப செத்து போகனுமோ..?! :)அவ்வ்வ்வ்!!
Post a Comment