என் வீட்டுக்காரருக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன் பாருங்க..ஸ்ஸ்ஸ்ப்பாஆ. :( சொல்லி மாளாது. வாங்க வாங்க அடுத்த வீட்டு கதைன்னா நாம் எல்லாம் கேட்காம இருப்பமா.. அப்படி இருந்துட்டா நாடு என்னத்துக்கு ஆகறது..? வந்து அப்படி உக்காந்து கேட்டுட்டு போங்க..
சென்ற வாரத்தில் ஒரு நாள் :-
"டேய் நீ இதையெல்லாம் செய்யறியான்னு அப்பா என்னை கவனிக்க சொன்னாரு, நீ அதையெல்லாம் செய்தியா?" ன்னு நவீன் கிட்ட கேட்டேன்...
அடுத்த நாள் அவன் என்ன செய்தான் செய்யலன்னு வீட்டுக்காருக்கு அப்டேட் செய்யறேன்..அதுக்கு அவரு கேக்கறாரு "ஏண்டி நான் என்ன சொன்னாலும் அவன் கிட்ட சொல்லிடற, இதையெல்லாம் உன் மனசோட வச்சிக்கிட்டு அவனை கவனிக்கனும், அவன் கிட்ட சொல்லிட்டு அவனை கவனிக்க கூடாது.... "
"ஓ அப்படியா சரி.. அப்படியே செய்யறேன்... னு சொல்லிட்டு.. "டேய் அப்பா உன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேணாம்னு சொன்னாரு... ன்னு சொல்லிட்டு கவனிக்க ஆரம்பிச்சேன்.
இங்க தான் மேட்டர் ஆரம்பிச்சிது..
நேத்திக்கு அவரோட ஃபோன்........... கால் மணி நேரம்.. ..(முட்டு சந்து நினைவு வரனும் உங்களுக்கு எல்லாம்) பேசி முடிச்சிட்டாரு. எனக்கு குரலே வரல, (ஏன் வரல ன்னு சின்னபிள்ளத்தனமா நீங்க எல்லாம் கேட்கப்பிடாது.. அதான் கோட் வேர்ட் "முட்டு சந்து"ன்னு சொல்லி இருக்கேன் இல்ல அதை வச்சி புரிஞ்சிக்கனும் ஆமாம்), கம்மிய குரலோட நவீன் ஐ கூப்பிட்டு..."அப்பா ..டா..உன் கூட பேசனுமாம்..... "
"என்னவாம் அவருக்குன்னு??!!" சவுண்டு விட்டுக்கிட்டு வந்தான்.. ரிசீவரை அவனிடம் கொடுத்துட்டு ஓரமா கன்னத்துல கைய வச்சி உட்காந்து அவனோட ரியாக்ஷனை பாத்துக்கிட்டே இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா முகம் மாறுது.....அப்படியே ஒரு அரை மணி நேரம். .. :)) ஸ்ஸ்ஸ்....அப்பாடா ஜாலி...நம்மைவிட ஜாஸ்தி, ...இப்பத்தான் மனசுக்கு குளிர்ச்சியாக இருக்குன்னு நினைச்சி... அவனயே கண் சிமிட்டாம பாத்துக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் பெத்த புள்ளையாச்சே பாசம் விடுமா சொல்லுங்க.. ?? (ஃபீலிங்ஸ்..)
அவனும் ஃபோனை வச்சிட்டு ஸ்லோ மோஷன்ல ஒரு வெறியோட என்னை திரும்பி பார்த்தான்.
"என்னடா செல்லம்...? ரொம்ப...ஓவரோ.....வய் ப்ளட்... ?! "
"எல்லாம் உன்னாலத்தான் வரது,.. ஏன்ம்மா இப்படி கத்தராரு? அவருக்கு என்ன 30 வயசு இளைஞன் ன்னு நினைப்பா.. இப்படி கத்தினா உடம்பு என்னதுக்கு ஆகும்? நீ என்ன அரிச்சந்தரனுக்கு தங்கச்சியா (அம்புட்டு கிழவியாவா போயிட்டேன்..சே.. வேற உதாரணமே இவனக்கு கிடைக்கலையா.. ஏன் இப்படி ஓல்ட் ராஜா வை எல்லாம் எனக்கு அண்ணனா ஆக்கறான்.... (திருப்பி ஒரே ஃபீலிங்ஸ்ஸூ....) ஏன் எல்லாத்தையும் அவர் கிட்ட சொல்லி வைக்கிற..???
"ஓ நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சி போச்சாஆஆ? "
"ஆமா இந்த வீட்டுல ஒரு 10-15 பேர் இருக்கோம்.. உன்னை விட்டா என்னை அவர் கிட்ட வேற யாரு போட்டுக்கொடுப்பா?"
ஆஹா நம்ம புள்ளையும் அறிவாளியா இருக்கே ன்னு மனசுக்குள்ள ஒரே பெருமை.." சரி நான் இப்ப என்ன செய்யனும் சொல்லு..."
"ஏன்ன்ன்ன்ன்ன்??? ஒரு வார்த்தை விடாம அப்படியே போயி அவரு கிட்ட வத்தி வச்சி... அவரு அதுக்கு இன்னொரு அரைமணி நேரம் என் காது கிழிய பேசவா? வேணாம் என்னை பெத்த தாயே... உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்...
:((((((( (இப்ப ஓவர் சோக ஃப்லீங்ஸ்..)
இரண்டு பேரும் என்ன சொல்றாங்களோ அதை அப்படியே பிழையில்லாமல் செய்தால் கூட திட்டிக்கிட்டே இருக்காங்கப்பா... . நான் அப்படி என்னத்தான் தப்பா செஞ்சுட்டேன்... .?!! நீங்களே சொல்லுங்க..
அணில் குட்டி அனிதா : //உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்...// வீடு மட்டுமா... தெரு, ஊர் , உலகம் எல்லாமே நல்லா இருக்கும்... ஆனா அதை எப்ப செய்ய போறாகன்னு தான் தெரியல.... :(((((
பீட்டர் தாத்ஸ் : “Smile at each other, smile at your wife, smile at your husband, smile at your children, smile at each other -- it doesn't matter who it is -- and that will help you to grow up in greater love for each other.” Mother Teresa
குறிப்பு : முந்திய பதிவு அனானிகளுக்காக போடப்பட்டது, அதை அப்படியே வைத்திருக்க விருப்பமில்லை. அதனால் எடுத்தாகிவிட்டது.
நான் அப்படி என்ன செய்துட்டேன்..??!! :((
Posted by : கவிதா | Kavitha
on 19:13
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
14 - பார்வையிட்டவர்கள்:
என்ன சொல்ல , ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் :)
:))
இன்னிக்கு என்னமோ அணில் நல்லதா சொல்லி இருக்கிறதால அதை கொஞ்ச நாளைக்கு பிரியாணி போட வேண்டாம் :)
அரிச்சந்திரனே ஃபீல் செய்யலையாம் நீங்க ஏன் ஃபீல் செய்யறீங்க :)
@ எல்.கே : நன்றி
@ கோப்ஸ் : நன்றி
@ தாரணி : அணில் இப்படிதான் உயிரை காப்பாத்திக்கிட்டு இருக்கு :))
//அரிச்சந்திரனே ஃபீல் செய்யலையாம் நீங்க ஏன் ஃபீல் செய்யறீங்க :)//
இப்படி ஒரு அழகான, இளைமையான, அறிவான பெண் தங்கச்சியா கிடைக்கும் போது அவரு ஏன் ஃபீல் பண்றாரு.. பெருமை தான் படுவாரு.. :))
(பீப்பில் நோ ஸ்டொமக் ஃபையரிங்)
Super அணில் குட்டி அனிதா.
Vazhththukkal.
//கால் மணி நேரம்.. .. பேசி முடிச்சிட்டாரு. எனக்கு குரலே வரல//
ஆச்சர்யம், கால்மணிநேரமா நீங்க ஒரு கேள்விகூட கேக்கலையா!! அதிர்ச்சி, சங்கத்து விதிகளை இதன்மூலம் மீறிட்டீங்க நீங்க!!
அரை மணி நேரமா....உங்க பையனுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்..எங்க வீட்ல இருக்கிறதெல்லாம் அஞ்சு நிமிஷம் பேசினாலே போனை வெச்சிட்டு போயிடுதுங்க...........
@ சே.குமார் : ம்ம்ம்.. அணில் சப்போர்ட்டா நடக்கட்டும் :)
@ ஹூஸைனம்மா : நடுவுல எதுவும் பேசாமல் கேட்டா காதுல மட்டும் ரத்தம் வரும், நடுவில் பேசினால், மூக்கு, கண்ணு , வாயி ன்னு ரத்தம் வரும்.. எது பெட்டர் னு இத்தனை வருஷத்துல தெரிஞ்சி வச்சிக்கிட்டு சமத்தா இருக்கோம் இல்ல.. :)))
@ சுந்தர் : எங்க வீட்டுல அதுக்கு உல்டா, அவரு தான் போனை டக்குனு வைப்பாரு, நாங்க எல்லாம் வைக்க முடியாது.:))) ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!! ஸ்ட்ரிக்டு!! ஸ்ட்ரிக்டு..!!!
ஆனா போனை வச்சிட்டு ஒருத்தருக்கு ஒருத்தரோ இல்ல சுவத்தை பாத்தோ அவர் கூட பேச முடியாததை எல்லாம் தனியா பேசி தீத்துக்குவோம் :))).
ஸ்ஸ்ஸ்....அப்பாடா ஜாலி...நம்மைவிட ஜாஸ்தி, ...இப்பத்தான் மனசுக்கு குளிர்ச்சியாக இருக்குன்னு நினைச்சி...:)) நீதான் லேடி சத்யராஜ் :)
அணிலு ஐ லவ் யு ... உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...:))
ஆச்சர்யம், கால்மணிநேரமா நீங்க ஒரு கேள்விகூட கேக்கலையா!! அதிர்ச்சி, சங்கத்து விதிகளை இதன்மூலம் மீறிட்டீங்க நீங்க!!//
ஹூசைன்மம்மி.. அவ கேட்டிருப்பா, மனசுக்குள்ள :))
@ சிபி - நீங்க போட்ட கமெண்டு பப்ளீஷ் செய்ய வரல கமெண்டை காப்பி மட்டும் செய்யறேன்..
////உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்...//
நவீன் மட்டுமா சொல்றான்! நாங்க எல்லோருமே சொல்வோமே!
உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த பதிவுலகம் நிஜம்மா நல்லா இருக்கும்... //
அன்புள்ள சிபிக்கு, என்னாலத்தான் இந்த பதிவுலகம் கெட்டு குட்டிசுவறா போகுதா? இப்படி ஆபாண்டாமா பின்னூட்டம் போடறதால தான் அடிக்கடி பேதி வந்து ஏன்சிக்க முடியாம இருக்கீங்க.. இனிமே வாச்சும் நல்லதா நாலு கமெண்டு போடுங்க.. வாந்தி பேதி வராம இருக்கும்.. :))))
@ விஜி
//நீதான் லேடி சத்யராஜ் :)// ஏய்.. தலையில் முடி இல்லன்னாலும் உள்ள இருக்கறதை நம்பி வாழற ஒரு ஆளை உதாரணம் சொன்னதால உன்னை விட்டு வைக்கிறேன்.. :))
//ஹூசைன்மம்மி.. அவ கேட்டிருப்பா, மனசுக்குள்ள :))//
எப்படி விஜி இப்படி எல்லாம்? உள்ளார பூந்து உண்மைய சொல்ற?? :))
//அணிலு ஐ லவ் யு ... உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...:))//
ம்ம்க்கும்... நாங்கல்லாம் பேசாட்டி நாயில்ல தூக்கிட்டு போயிடும்.. அதுக்காக எப்பவும் சவண்டு விட்டுக்கிட்டே இருப்போம்.. இந்த உண்மை தெரியாம ச்சும்ம்ம்மாஆ....
Post a Comment