:))) சிலரோட சமூக அக்கறை.. தாங்ங்ங்க முடியலைங்க........... :))))))), சிரிக்கத்தான் முடிகிறது !! என்னமா சமுகத்தின் மேல் இருக்கும் தன் அக்கறையை தன்னுடைய (சிலமுறை பலமுறை படிக்கப்பட்டு, திருத்தப்பட்டு...டம்மா டம்மா டம டம டம்மா....) எழுத்தின் மூலம் கொட்டிக்காட்டறாங்க.. ..ஸ்ஸ்யப்பா...
ம்ம் அதையெல்லாம் படித்த பிறகும் நாம் திருந்தாட்டி.. நாம எல்லாம் மனுஷங்களே இல்லை. .இந்த சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள். அப்படி யார் என்ன எழுதிட்டாங்கன்னு கேட்டீங்கன்னா... அதை எல்லாம் சொல்லி தெரியப்படுத்தற அளவு நமக்கு அறிவு இல்லைங்க.. .. வெளி உலகத்தில் (அழகிய) முகத்தை காட்டியும்.. உள்ளுக்குள்ள (அழுகிய) வேறு முகத்தோடையும் இருப்பவர்களுக்கான, அறிவையும் சாமர்த்தியத்தையும் கடவுள் நமக்கு கொடுக்கல'ன்னு சொல்ல வந்தேன்.. .நிறைய மனிதர்களிடம் இதை கண்டுவிட்டேன் என்றாலும் சிலரின் நடிப்பை பார்த்து, என்னை மறந்து, வியந்து வாய் பிளப்பதில் கொசு உள்ளே சென்று குட்டி போட்டு இனப்பெருக்கும் கூட செய்துவிடுகிறது... அதற்கு கிடைத்த சான்ஸை அது சரியாக பயன்படுத்திக்குது.. :))).
இப்படி பார்த்து பார்த்து, ஏன் மனிதன் இப்படி முகமூடி மாட்டி திரிகிறான் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல்.. இப்படி இருந்தால் தான் வாழமுடியும்..?? இல்லை வாழ்க்கை என்பதே முகமூடிகளுடன் கூடியதா? அல்லது இப்படி வாழ்ந்தால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் இருக்கிறது.
சரி அதை விடலாம்...பிரச்சனையும் கோபமும் - சமூக அக்கறையை, தன் எழுத்தின் மூலம் தானாக பறைசாற்றுபவர்கள் மேலில்லை.. அதனை படித்து "ஆஹா ஓஹோ..என ஜல்லி அடித்து, நீ ஒரு அது.. நீ ஒரு இது.. " என ஏற்றிவிடுவதால், இந்த வேஷதாரிகள் இன்னமும் தன் முகத்தை அழகாக க்காட்டிக்கொள்ள என்னென்ன முடியுமோ அத்தனையும் தங்கள் எழுத்தில் கொண்டு வருகிறார்கள்... :)) அதே சமயம், அவர்களின் "அழுகிய" முகம் தெரிந்த நமக்கு, கருமம் சகிச்சிக்க முடியல.!! பாருங்க இப்படி எல்லாம் எழுத வேண்டி வந்துடுது.. !!
இப்படிப்பட்டவர்கள் வளர்வதால் என்ன பயன்னு ஓரமா உக்காந்து யோசிச்சி ப்பார்த்தேன்... முதலில் தோன்றியது.. நல்ல அரசியல் வாதியாக வரலாம். .அப்பத்தான் "உள்ளே வெளியே" விளையாட்டு மிகச்சரியாக மக்களுக்கு சந்தேகம் வராமல் செய்து நம் நாட்டையும் மக்களையும் சமுக அக்கறை என்ற பார்வையில் எளிதாக ஏமாற்றமுடியும். இவர்களை போன்று வளர்ந்தவர்கள் தான் அரசியல்வாதிகளோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நல்ல அரசியல் செய்ய இந்த "உள்ளே..வெளியே" குவாலிட்டி இருந்தால் போதும் என்றே தோன்றுகிறது. அதாவது எத்தனை கேவலமான மனமும் குணமும் நடத்தை இருந்தாலும், வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன், ஒரு மந்தகாச புன்னகை ஏந்திய முகமும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டு பூரித்து பொங்கி வழியும், பேச்சும் நடத்தையும் கண்டிப்பாக வேண்டும். இதை தொடர்ந்து செய்பவர்களை பார்த்து.. ஹி ஹி. .எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்குங்க..!! :))
அடுத்து, இவர்களை பார்த்து வளரும் இவர்களது குழந்தைகள் எதிர்காலத்தில் இவர்களை விட தில்லாலங்கடிகளாக வந்துவிடுவார்கள், அல்லது இரட்டை வேஷத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல், மன அழுத்ததில் சமூகத்தில் ஒன்றாமல் தனித்து நிற்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு, பெற்றவர்களை வெறுப்பது போல சமூகத்தையும் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
மூன்றாவது, இவங்களால பலருக்கு பொழுதுப்போக்கு, இப்ப என்னையே எடுத்துக்கோங்களேன். .இவங்க எழுதறதை எல்லாம் பல நேரம் படிக்கறது இல்லை என்றாலும், வலிந்து என் வாசலில் வந்து நிற்கும் சில எழுத்துக்களை படிக்கும் போது, இப்படியும் மனிதர்கள் என்று இன்னமும் மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து, இப்படி எழுதி என் பொழுதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன்.
நான்காவது, தன் முதுகில் இருக்கும் அழுக்கை யாராலும் பார்க்க இயலாது என்ற பழமொழி இப்படிப்பட்டவர்களால் உறுதியாகிறது. :)))
ஐந்தாவது, என் எழுத்தை படித்து பார்த்து, நான் இப்படித்தான் என்று, முன் முடிவு செய்து அதற்கு தகுந்தார் போன்று பேசி, நடந்து என் மனதை புண்படுத்திய நல்லவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.
எழுத்து என்பதை நம்மை தனிப்பட்ட முறையில் யூகிக்க உதவுகிறது என்பதை உணர்ந்ததே "என்னை யார்" என்று என் எழுத்தின் மூலம் முன் முடிவுக்கு வந்து அதை என்னிடமே சொன்னபோது தான்... !! அது வரையில் அப்பாவியாக இவர் என் 'நண்பர்/தோழி' என்ற நம்பிக்கையை இழந்த போது என் வலியை ... .... வார்த்தைகளால் சொல்லவே முடியாது.
என் எழுத்தின் மூலம் என்னை அறிந்தவர்கள் யாருக்குமே என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. பக்கம் பக்கமாக எழுதும் ஒருத்தி, ஊமையாக க்கூட இருக்கலாம். ஏன் குருடாகக்கூட இருக்கலாம். எழுத்து என்பது, நம்மை பிரதிபலிப்பதாகவா இருக்கிறது? என்பதை பலநேரம் நான் கேள்வியாக்கி எனக்குள்ளவே கேட்டு இருக்கிறேன். பொதுவில் வாய் கிழிய எழுதுவதை, தனிப்பட்ட முறையில் செயற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்களா, நடந்துக்கொள்கிறார்களா என்று கவனிக்காமல், அல்லது அதை பற்றி தெரியாமல் ஒருவரை பற்றிய எண்ணங்களை, தனக்கு புரிந்தபடி அமைத்துக்கொள்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படி அமைத்துக்கொள்வது சரியில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.
பல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் போது, எழுத்தை படிப்பதின் மூலம் இவர் இப்படித்தான் என்பதை யூகிப்பது மட்டுமில்லாமல், அவர் அப்படித்தான் ன்னு ஒரு முடிவுடன் எப்படி அணுகமுடியும்? இது தொடர்புடைய பதிவு
மனிதர்கள் யாரும் தன் நெகட்டிவ் வெளியில் தெரிவதை விரும்பமாட்டார்கள், நெகட்டிவ் என்று சொன்னது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவே பாசிட்வ்'விற்கு கிடைக்கும் மதிப்பை கண்டு மயங்கி, அதனை இன்னமும் அதிகமாக்கி க்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். நம்மின் நெகட்டிவ், பாஸிட்டிவ் என்ன, எதில் தவறு செய்கிறோம், எங்கே சரியாக இருக்கிறோம் போன்ற சுய அலசல்கள் இருந்தால், அந்த மனிதனை எதுவும் சஞ்சலப்படுத்திவிடாது. சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை. :).
சரி சரி எங்கேயோ ஆரம்பித்து அங்கே இங்கே என எங்கெங்கோ வளைந்து நெளிந்து போயிட்டேன், தலைப்புக்கு வருகிறேன். என்னென்னவோ எழுதிய பிறகும், இது எதற்கு என்று புரியாதவர்களுக்கு ஒரு சின்ன உதாரணம்-
சமூக அக்கறையும், சாமானியர்களின், கீழ்மட்ட மக்களின் மீதும் அக்கறை மண்டி கிடக்கும் எத்தனை பேர் நம் வீட்டு வேலைக்கு நாம் சாப்பிட்டு போடும் தட்டை கழுவ, நமக்கு சமைத்து போடவும், நம் வீட்டு கழிவறைகளை கழுவ, சுத்தம் செய்ய, இந்த மனிதர்களை காசு (காட்டி) கொடுத்து, கழவ சொல்லாமல் இருக்கிறோம்? - இவர்களுக்கு சம்பளம் என்ன? 50 ரூ - 4000 ரூ வரை. இது சீமாட்டிகளின்/சீமாட்டன்'களின் சம்பளத்தை பொறுத்து மாறுபடும்.
என்னை நோக்கி உங்கள் கை நீளும் முன்.. - எங்கள் வீட்டில் வேலையாள் எப்போதும் வைப்பதில்லை. எங்கள்வீட்டு கழிவறையை நான் என் கையை கொண்டு தான் சுத்தம் செய்கிறேன். நாங்கள் கழிக்க பயன்படுத்தும் ஒரு இடத்தை, சக மனிதனை விட்டு சுத்தம் செய்ய விடுவதில்லை..அதற்கு என் மனம் இடம் கொடுப்பதில்லை... இதை நான் இப்போது முடிவு செய்யவில்லை, சின்ன வயதில் தோட்டத்து சந்தின் வழியாக, இரண்டு பக்கெட் தூக்கிக்கொண்டு வந்து, மனித கழிவை, முகம் சுளிக்காமல் அள்ளிக்கொண்டு சென்ற எங்கள் வீட்டு கக்கூஸ் க்காராம்மை'வை பார்த்து முடிவு செய்தது. அந்த அம்மா, மாதம் சம்பளம் வாங்கும், ஒரு மாநில அரசு ஊழியர். பிச்சை எடுக்காமல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், திருட்டு வேலை செய்யாமல், உள்ளே வெளியே நாடகம் நடத்தாமல், செய்கின்ற வேலையை கவனமாக செய்வார். தெருவில் அந்த வண்டியை அவர் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கும் போது எல்லாம், என் வீட்டில் இப்படி ஒரு வேலையாள் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து மனதில் பதிய வைத்ததை இன்னமும் தொடர்கிறேன்.
கழிவறை கழுவுவது என்பது சாமானிய வேலை இல்லை என்பது, அதை செய்வதால் எனக்கு தெரியும். அதை பணம் கொடுத்தாலும் இன்னொரு வீட்டில் சென்று செய்வேனா என்றும் யோசிப்பேன். :). ஒரு வேளை, அப்படியும் என் வேலை இருந்திருந்தால்...???!! அதையும் செய்திருக்க க்கூடும், ஏனென்றால், ஊராருக்கு உபதேசம் செய்யும் சீமாட்டிகளும்/சீமாட்டன்'களும் இருக்கும் இந்த சென்னை மாநகரத்தில் எளிதாக அந்த வேலைகள் கிடைக்கும், :))).
ஆக, சொல்லவந்தது, சீமாட்டிகளை/சீமாட்டன்'களை பற்றியல்ல, நமக்கு சமூகத்தில் சக மனிதன் மேல் உள்ள அக்கறை என்பது நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்... தெருவில் இருந்து அல்ல............
அணில் குட்டி :.............................. ம்ம்...... ம்ம்........................( அம்மணி ரெம்ப கோவமா இருக்காங்களோ.... ) சரிங்க ஆப்பிசர்..!! (அடி ஜூட்......இதுக்கு மேல பேசப்பிடாது இப்ப..)
பீட்டர் தாத்ஸ் :Faith is the first factor in a life devoted to service. Without it, nothing is possible. With it, nothing is impossible.
உள்ளே..... வெளியே.......
Posted by : கவிதா | Kavitha
on 09:48
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
27 - பார்வையிட்டவர்கள்:
//என் எழுத்தின் மூலம் என்னை அறிந்தவர்கள் யாருக்குமே என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. பக்கம் பக்கமாக எழுதும் ஒருத்தி, ஊமையாக க்கூட இருக்கலாம். ஏன் குருடாகக்கூட இருக்கலாம். எழுத்து என்பது, நம்மை பிரதிபலிப்பதாகவா இருக்கிறது? என்பதை பலநேரம் நான் கேள்வியாக்கி எனக்குள்ளவே கேட்டு இருக்கிறேன். பொதுவில் வாய் கிழிய எழுதுவதை, தனிப்பட்ட முறையில் செயற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்களா, நடந்துக்கொள்கிறார்களா என்று கவனிக்காமல், அல்லது அதை பற்றி தெரியாமல் ஒருவரை பற்றிய எண்ணங்களை, தனக்கு புரிந்தபடி அமைத்துக்கொள்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படி அமைத்துக்கொள்வது சரியில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.
பல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும், அப்படி இருக்க, எழுத்தை படிப்பதின் மூலம் இவர் இப்படித்தான் என்பதை எப்படி யூகிப்பது மட்டுமில்லாமல், அவர் அப்படித்தான் ன்னு ஒரு முடிவுடன் எப்படி அணுகமுடியும்?
மனிதர்கள் யாரும் தன் நெகட்டிவ் வெளியில் தெரிவதை விரும்பமாட்டார்கள், நெகட்டிவ் என்று சொன்னது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவே பாசிட்வ்'விற்கு கிடைக்கும் மதிப்பை கண்டு மயங்கி, அதனை இன்னமும் அதிகமாக்கி க்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். நம்மின் நெகட்டிவ், பாஸிட்டிவ் என்ன, எதில் தவறு செய்கிறோம், எங்கே சரியாக இருக்கிறோம் போன்ற சுய அலசகள் இருந்தால், அந்த மனிதனை எதுவும் சஞ்சலப்படுத்திவிடாது. சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை. :). //
மிகச்சரியான கருத்து நான் இதோடு ஒத்துப்போகிறேன் கவி..
//அந்த அம்மா, மாதம் சம்பளம் வாங்கும், ஒரு மாநில அரசு ஊழியர். பிச்சை எடுக்காமல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், திருட்டு வேலை செய்யாமல், உள்ளே வெளியே நாடகம் நடத்தாமல், செய்கின்ற வேலையை கவனமாக செய்வார்//
இவங்கிட்ட நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..தம்மை மனிதர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்ளகூடிய முதல் தகுதிவாய்ந்தவர்கள் என கூட சொல்லலாம்...
அணில் குட்டி :.............................. ம்ம்...... ம்ம்........................( அம்மணி ரெம்ப கோவமா இருக்காங்களோ.... )
உடம்புக்கு ஆகாது கவி ஆமாம் கேப்பங்கஞ்சி குடிச்சிமா கோவம் வருது..யம்மா நா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
நல்ல பதிவு. பெரிசா விவாதம் கூட செய்யலாம்.
பின்னூட்டம் மெயிலில் பெற!
Nalla pakirvu.... sariyana karuththu...
வந்தேன், படிச்சேன், சென்றேன்,, உள்ளேன் அம்மா ..
inniku blog world romba soooda irukku
\\விஜி said...
வந்தேன், படிச்சேன், சென்றேன்,, உள்ளேன் அம்மா ..
\\
ஆக உங்க தத்து அம்மா தத்துவ அம்மா ஆகிட்டாங்கன்னு சொல்லுங்க:-)))
ரைட்டு........
\\பல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் போது,//
உண்மையான வார்த்தைதான் கவிதா..
இன்னும்கூட சொல்லலாம் நம்மைப்பற்றீயே கூட நமக்கு முழுமையா எடைபோடமுடியாதப்ப இந்த முன் முடிவுகள் ( யப்பா பதிவுலகில் கத்துகிட்ட பெரிய வார்த்தை இது) அப்படிங்க்ற ஒன்னை வச்சிக்கிட்டு வேற ஒருத்தங்களை பாராட்டரோம்.. ஹர்ட் செய்யறோம்.
இரண்டுமே செய்யாம கவனிக்கமட்டும் செய்தோம்ன்னா சேஃப் ங்கர நிலை.
------------------------
ஆமா நீங்க ரொம்ப ப்ரீயா இருந்தீங்க்ளா...
//நமக்கு சமூகத்தில் சக மனிதன் மேல் உள்ள அக்கறை என்பது நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்... தெருவில் இருந்து அல்ல............//
ம்ம்ம் , என்னங்க இப்படி சொல்லிடீங்க ,
அப்படி எப்படி செய்ய முடியும் , ஏன் ஏன் ஏன் ,
எதுக்கு செய்யணும் ,
எதற்கு செய்யணும் .
அரசாங்கம் செய்ய நாம் ஒரு விழிப்புணர்வு கொண்டுவரணும் , நீங்க ஒரு வீட்ல வேலை செய்யற ஆள பத்தி பேசறீங்க நான் அப்படி பல்லாயிரக்கணக்கான ஆளுகள பத்தி நினைக்கிறேன் ,
கவிதா மேடம் இதெல்லம் நான் சொல்லல ,யார் சொன்னாங்கனு என் கிட்ட கேக்க கூடாது
@ தமிழ் : நன்றி.. கேப்பங்கஞ்சி என்ன கொண்டு போயி குளிர்பெட்டியில வச்சி, வேஷதாரிகள் எழுதியதை படிக்கச்சொல்லி பாரு.. செத்தப்போன பிறகும் என்சி வந்துடுவேன்.. அம்புட்டு டென்ஷன் ஆகுது.. :((
@ அபிஅப்பா : நன்றி
@ சே.குமார்: நன்றி
@ விஜி : சரிங்கம்மா :))ரெம்ப நன்றிங்கம்மா :))
@ எல்.கே : நன்றி
@ வித்யா : ஆமா ரைட்டு :))
@ முத்து : :))) //ஆமா நீங்க ரொம்ப ப்ரீயா இருந்தீங்க்ளா...//
இருக்கீங்களாவா.. இருந்தீங்களாவா? புரியல... :)))) ஏன்ன்ன்ன்ன்????
@ ரோஹினி : வாங்க.. :))
//ம்ம்ம் , என்னங்க இப்படி சொல்லிடீங்க ,
அப்படி எப்படி செய்ய முடியும் , ஏன் ஏன் ஏன் ,
எதுக்கு செய்யணும் ,
எதற்கு செய்யணும் .//
நல்ல பேரு வாங்கனுமில்ல.. நாட்டுல.... :)) ஒரு பிம்பத்த உருவாக்கியாச்சி/உருவாகிடுச்சி, அதை தொடர்ந்து கட்டி காக்கனுமில்ல... :))
//அரசாங்கம் செய்ய நாம் ஒரு விழிப்புணர்வு கொண்டுவரணும் , நீங்க ஒரு வீட்ல வேலை செய்யற ஆள பத்தி பேசறீங்க நான் அப்படி பல்லாயிரக்கணக்கான ஆளுகள பத்தி நினைக்கிறேன் //
ஹி ஹி.. வீட்டுல வேல செய்யற ஒரு ஆளை பத்தி பேசினமாதிரி தெரியலையே.. வீட்டுல வேல செய்யறவங்கள பத்தி யாருக்காச்சும் எழுதற தைரியம் இருக்கா என்னா? அவ்ங்களுக்கு மாசம் நாம கொடுக்கற சம்பளத்தை பத்தி பேசற தைரியம் இருக்கா என்ன? அப்படியே பேசினாலும் நமக்கு சாதகமாக பேசுவோம்.. எங்க வீட்டுல ஒருத்தருக்கு வேலைத்தருவதின் மூலம் ஒரு குடும்பத்துக்கு வருமானத்திற்கு வழிவகுக்கிறோம்..னு ஆனா அவங்களுக்கு காசு கொடுத்து வேல செய்ய சொல்லிட்டு நாம என்ன பண்ணவோம்...
ஹி ஹி... 23 மணி நேரம் கம்பியூட்டர் முன்ன உட்காந்து பொது சேவை செய்வோம்.. :)))))) நமக்கு தான் வீட்டு வாசலிலிருந்து பின் கதவு வரை வேலை செய்ய ஆள் இருக்கே... ஆள் இருக்கே ஆள் இருக்கே.. !! :))
//கவிதா மேடம் இதெல்லம் நான் சொல்லல ,யார் சொன்னாங்கனு என் கிட்ட கேக்க கூடாது//
சே சே.. கேட்க மாட்டேன்.. கேட்டாவே நான் இந்த சமூகத்தில் அக்கறை இல்லாத வாழ தகுதியில்லாத ஒரு ஆளு... :((
///நான் இந்த சமூகத்தில் அக்கறை இல்லாத வாழ தகுதியில்லாத ஒரு ஆளு...//
செல்வ சீமாட்டிகள் வாழும் இந்த சமூகத்தில் இது போன்று எண்ணங்கள் வருவது சகஜம் , அதனால நான் இந்த வருஷம் ஊருக்கு வரும் போது ,நாம்ப ஒரு குழு அமைச்சு மொத ஊர் சுத்தணும் , ஐயோ செல்வ செழிப்பு பார்க்க இல்ல , சமுக அவலத்தை நேர்ல பார்க்க , பதிவு போடனுமில்ல நானும் .....
நாலு கை இருக்கிறமாதிரி வேலை செய்யும்போதே சிந்தனையைப் பகிருவோம் நாம..
நீங்க எழுதி இருக்கிற பதிவைப்பார்த்தா நல்லா ப்ரீயா இருந்திருப்பீங்க போலன்னு சொன்னேன்..:)
@ ரோஹினி...
// சமுக அவலத்தை நேர்ல பார்க்க , பதிவு போடனுமில்ல நானும் .....//
பதிவு போடறது ரொம்ப முக்கியம்.. அப்பத்தான்.. ஹிட் எகிறும்.. என்னை மாதிரி சில சமூக அக்கறை இல்லாத ஜென்ங்களுக்கு டென்ஷன் எகிறும்.. !!
@ முத்து..
//நாலு கை இருக்கிறமாதிரி வேலை செய்யும்போதே சிந்தனையைப் பகிருவோம் நாம..
நீங்க எழுதி இருக்கிற பதிவைப்பார்த்தா நல்லா ப்ரீயா இருந்திருப்பீங்க போலன்னு சொன்னேன்..:)//
வர வர நீங்க.. :))))))))) எவ்வளவு பிஸி ஷெடியூல இருந்தாலும் சமூத்தை பத்திய அக்கறை போஸ்ட் போடாட்டி நம்மை எல்லாரும் திட்டுவாங்கன்னு நீங்கத்தானே சொன்னீங்க.. அதான் :)) கடமைய நிறைவேத்தறேன்..
நான் வெளியே ...வெளியே...
சத்தியமா 2 நாளா, என்ன இன்னும் 'கலாசாரம்னா என்ன என்ன என்னனு.....' உங்ககிட்டேர்ந்து ஏதும் வரலையேன்னு நினைச்சேன்.
அதுக்கு பதில் சமூக அக்கறைன்னு ஆயிடுச்சா?
எங்கங்க நம்பர் சிஸ்டத்தை தமிழ்ல மாதி எழுதிட்டீங்க.
முழுவதும் படிக்கல. அப்புறம் படிப்போம் நீங்க எதை கால வார்றேங்கனு?
உங்க எழுத்துல இன்னிக்கு காரம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நான் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கறேங்க. வேண்டாம் வம்பு.
என்னென்னமோ சொல்ல நினைததையெல்லாம் சொல்லிவிட்டீர்கள்! வருந்த வேண்டாம்! எழுத்து வாழ்க்கை அல்ல!
@ கோப்ஸ்: ஓடுங்க ஓடுங்க..
@ சேது ://சத்தியமா 2 நாளா, என்ன இன்னும் 'கலாசாரம்னா என்ன என்ன என்னனு.....' உங்ககிட்டேர்ந்து ஏதும் வரலையேன்னு நினைச்சேன்.
//
புரியலைங்க.. நான் ஏங்க அதைப்பற்றி எழுதப்போறேன்.. யாராவது நான் எழுதுவேன் னு சொன்னாங்களா? அப்படி சொல்லியிருந்தா யார்ன்னு மட்டும் சொல்லுங்க.... போதும் :) மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்.. :)
@ தேவன் மாயம் : எழுத்து வாழ்க்கை இல்லைன்னா சொல்றீங்க? ஆனா அது வருமானம் பலருக்கு.. அந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் ஏராளம்.. இப்ப சொல்லுங்க.. எழுத்து வாழ்க்கை இல்லையா?
ச்சும்ம்மா... :))) தெரியும்.. எழுத்து வாழ்க்கை இல்லைன்னு.. !! :) நன்றி..
திடுக்கிட வைத்த எழுத்து.
ஒருவர் எழுத்து தான் சமூக அக்கறையை பிரதிபலிக்கிறது என நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை போல இன்னும் எத்தனையோ பேர் நினைத்து கொண்டிருப்பார்களோ என நினைக்கும் போது அச்சம் மேலிடாமல் இல்லை.
'ஊருக்கு உபதேசம்' என்கிற போர்வையில்தான் பலரும் நடமாடுகிறார்கள். எனது தோழி ஒருவரின் 'வேடதாரி'எனும் ஒரு கவிதை அனைவரின் முகத்திரையை கிழிக்கும்.
நீங்கள் எழுதிய விசயங்களில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது அவரவர் கடமையாகும். இதோ நான் வேலையாள் இல்லாமல் அதை நானே செய்கிறேன் எனும் முழக்கத்தினால் சமூக அக்கறை வந்துவிட போவதில்லை. அவ்வாறு வேலை செய்ய நினைப்பவர்கள் கவலைப்பட வேண்டும். இந்த வேலை எல்லாம் செய்யமாட்டேன் என அவர்கள் சொல்ல வேண்டும். வேலைக்கு ஆள் இல்லை எனில் அவரவர் செய்துதானே ஆக வேண்டும். இப்போது சமூக அக்கறை என்கிற தொனியில் இதை சிந்தியுங்கள். வேலை இல்லாதோருக்கு வேலை கொடுத்தாகிவிட்டது.
எனக்கும் பல நேரங்களில் எண்ணங்கள் வருவது உண்டு. என்னை சரி செய்து கொள்ளாமல் ஒருபோதும் எவருக்கும் எதுவும் சொல்வது தவறு என.
ஆனால் கண்ணதாசன் ஒரு வரி சொல்வார் 'எப்படியெல்லாம் வாழ கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறேன், எனவே இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லும் யோக்யதை எனக்கு உண்டு' என.
சமூக அக்கறை இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலை படக் கூடாது என்பதுதான் எனது எண்ணம. ஆனால் அவர்கள் தான்...
எனக்கு சமூக அக்கறை மிகவும் குறைவு. ;)
எழுத்துகளில் வேகமும், கோபமும் பளிச்சிடுகிறது, அதற்காக நீங்கள் கோபக்கார பெண்மணி என நான் முடிவு கட்டினால் அது என் தவறுதான். ;)
நன்றி.
//ஒருவர் எழுத்து தான் சமூக அக்கறையை பிரதிபலிக்கிறது என நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை போல இன்னும் எத்தனையோ பேர் நினைத்து கொண்டிருப்பார்களோ என நினைக்கும் போது அச்சம் மேலிடாமல் இல்லை.
//
:)) நான் நினைத்துக்கொள்ளவில்லை, அப்படி நினைத்து, ஆஹா ஓஹோ என்று அவர்களை புகழ்பவர்களை சுட்டினேன்.. :)), அப்படி நினைத்து இப்பவும்.. இதற்கு முன்னரும் நான் முட்டாள் ஆகவில்லை என்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு இதை படிக்கும் போது தெரியும் :)
//நீங்கள் எழுதிய விசயங்களில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது அவரவர் கடமையாகும். இதோ நான் வேலையாள் இல்லாமல் அதை நானே செய்கிறேன் எனும் முழக்கத்தினால் சமூக அக்கறை வந்துவிட போவதில்லை.//
:)))) ஏன் இப்படி.. முழங்கவில்லை.. சமூக அக்கறை என்பது சக மனிதனை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது முதல் ஆரம்பிக்கனும்னு சொல்ல வரேன்.
அதாவது வீட்டில் அழுக்கை வைத்துக்கொண்டு வெளியில் சுத்தம் செய்வதாக நடிப்பது சாமர்த்தியத்தின் உச்சம். :) வெளியில் கூட இவர்கள் சுத்தம் செய்வதில்லை. .நடிக்கிறார்கள்..
என்னை கைநீட்ட க்கூடாது என்பதற்காக சுய எடுத்துக்காட்டே அன்றி, முழக்கம் எல்லாம் இல்லைங்க.. :)) அதுவும் இந்த காலத்தில் ஒரு பெண் வேலையாள் இல்லாமல் வேலை செய்கிறாள் என்பதை வெளியில் சொல்வது கூட தப்பான கெளரவ குறைச்சலான விஷயம் :))) தெரியாதா உங்களுக்கு????
ஒருவருக்கு வேலையில்லை சொல்ல முதலில் நம் வேலையை நாம் செய்து பழக வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் வேலை இல்லை என்று தெரிந்தால், அவன்/அவள் வேலை செய்ய தன் திறமையை குறிப்பிட்ட தொழிலில் வளர்த்துக்கொள்ள முனைவார்கள், அவர்களால் முடியவில்லை என்கிற போது அவர்களின் சந்திகளுக்கு படிப்பை கட்டாயம் ஆக்குவார்கள்.
இல்லை என்ற நிலைவரவேண்டும் இல்லையா? அதற்காக தனி மனிதராக என்ன செய்கிறோம் நாம்???
சும்மா ஊருக்கு உபதேசம் செய்து பலன் இல்லைங்க...
//அதற்காக நீங்கள் கோபக்கார பெண்மணி என நான் முடிவு கட்டினால் அது என் தவறுதான். ;) //
:)))) அப்படி இல்லைங்க.. இதை இப்படி சொல்லலாம்..
என் கோபத்தை உள்ளது உள்ளபடியே காட்டுகிறேன். .பலர் அதை பின்னால் பேசி, முன்னால் சிரித்து நடிப்பார்கள், எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் கோபம் வெளிப்படும்.. கோபம் என்ற உணர்ச்சி இல்லாத மனிதர்கள் இல்லை.
நானும் அப்படியே, ஆனால் அதை வெளிப்படையாக காட்டும் இயல்பை வளர்த்துக்கொண்டேன்.. யாரையும் என் புன்னகையின் மூலம் மட்டும் ஏமாற்ற எனக்கு இஷ்டமில்லை.. அத்தோடு.. அதை காரணத்திற்காக என்னை நல்லவள் ஆக்கிக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை.
அப்பப்ப இப்படி காரமா எழுதுறீங்க. ஆனா ஏன், எதுக்குன்னுதான் புரிய மாட்டேங்குது. சொன்னா நாங்களும் சுதாரிப்பா இருப்போம்ல..!! ;-)))
//சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை//
இது கரெக்ட். ஒருவரின் எழுத்து அவரை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. அது ஃபுல்மேக்கப்புடன் உள்ள ஃபோட்டோ போல!!
@ ஹூசைனம்மா : நல்லவிஷயமாக இருந்தால், வெளிப்படையாக எழுதவிட முடியும்.. அது அனைவரையும் சேருவது நலம்.
அப்படி இல்லாத பட்சத்தில் நபரை குறிப்பிட்டு எழுதும் போது அவங்களுக்கு இன்னமும் நாம் விளம்பரத்தை தேடி தந்தது போன்று ஆகிவிடும்.
:)) பொதுவாக வேஷதாரிகளுக்கு என்று வைத்துக்கொள்வோமே.. அவங்கவங்க மனசாட்சிக்கு கண்டிப்பாக அது தெரியும் இல்லையா? :))
Post a Comment