ரயிலில் அவளைப்பார்த்தேன்..
மூவர் இருக்கையை அவளே ஆக்கரமித்திருந்தாள்...
எதிர் இருக்கை காலியாகயிருக்க உட்கார எத்தனித்தேன்...
தோள் தொட்டு வேரிடம் நகர்த்தினார் என் கணவர்
என் மனம் என்னவோ அவளையே சுற்றியது...
அவள் ஒரு இருக்கையிலும்
அவளின் சொத்து மூட்டை இரண்டு இருக்கையையும் பிடித்திருந்தது
மூட்டையின் பின்னாலிருந்து ஒரு நாய்க்குட்டி எட்டிப்பார்த்தது
என்னைவிட அதிர்ஷ்டசாலி தான், அவளுக்கு தனிமையில்லை !!
இரண்டு ரயில் நிலையங்கள் கடந்திருக்கும்....
நாய்க்குட்டியை தூக்கி இடதுகை அக்கத்தில் இடுக்கினாள்
மூட்டையை தூக்கி தோளில் போட்டாள்
முக்காடிட்டிருந்த துணி மெதுவாக நழுவியது
ஒருப்பக்கத்து சட்டையில்லா மார்பகம் பளீச்'சென தெரிந்தது
வெறித்துப்பார்த்த கூட்டத்தில் நானும் இருந்தேன்...
நாய்க்குட்டியை பாதுகாப்பாய் அணைத்த அந்த கைகள்
அவளின் மார்பை மூட முற்படவில்லை
நாய்க்குட்டியின் கழுத்தில் கிழிக்கப்பட்ட சிகப்புத்துணியில் நீளமான "பெல்ட்"
அவளின் ஊன்றுகோலாக கையில் ஒரு குச்சி !!
இப்போது, ஓடும் ரயிலில் கதவோரம் நின்றாள் !
இறங்கப்போகிறாள் என்றே நினைத்தேன்
அவள் எழுந்த ரயில் நிலையத்திலிருந்து கூட்டம் அதிகரித்திருந்தது -
அவளை சுற்றியிருந்த பைத்தியங்களைப்பற்றி
அவளுக்கு தெரிந்துதான் இருந்தது -
கதவோரம் உட்கார்ந்தாள் !
முக்காடை சரிசெய்து இறுக்கப்போர்த்திக்கொண்டாள்
அப்படியே சாய்ந்து உறங்கிப்போனாள்-
நாய்க்குட்டி அவள் மடியில் பாதுகாப்பாய் உறங்கியது -
நான் அவளையே நினைத்து விழித்திருக்கிறேன் -
அந்த நாய்க்குட்டி
அவள் மேல் வைத்த நம்பிக்கையைக்கூட
நாம் அவள் மீது வைக்கவில்லை !!
இங்கே
பைத்தியக்காரி யாரென
இன்னமும் நானறியேன் ?!!

19 - பார்வையிட்டவர்கள்:
மிகவும் அருமையான படைப்பு. வெகுவாக ரஸித்தேன்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிய நல்வாழ்த்துகள்.
சிந்திக்க வைத்த யதார்த்தமான படைப்புக்கு நன்றியோ நன்றிகள்.
//சிந்திக்க வைத்த யதார்த்தமான படைப்புக்கு நன்றியோ நன்றிகள்//
என்னை "யதார்த்தம்" அறியாதவளென யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.. :))
நன்றிங்க...
/// அந்த நாய்க்குட்டி
அவள் மேல் வைத்த நம்பிக்கையைக்கூட
நாம் அவள் மீது வைக்கவில்லை !! ///
இன்று மனித மனம் அப்படித்தான் ஆகிப் போனது... கொடுமை...!
@தி.த. : ம்ம்ம்....
மிகவும் அருமையான கவிதை...
ரசித்தேன்...
நெஞ்சை நெகிழ வைத்த அருமையான படைப்பு .அன்புக்காக ஏங்கிக் காத்திருந்த அவளின் துயர் படிந்த வாழ்க்கைச் சித்திரத்தை உணர முடிந்தது .வாழ்த்துக்கள் தோழி !!.....
அன்பை மறந்த குடும்பம் அன்பிற்காய் ஏங்கும்பாட்டியும்நாய்குட்டியும்
சிந்திக்க வைத்த பகிர்வு....
@சே.குமார் : நன்றி
@ அ.அ : நன்றி
@ க.க.: நன்றி
@வெங்கட் நாகராஜ் : நன்றி
இங்கே
பைத்தியக்காரி யாரென
இன்னமும் நானறியேன் ?!!
மன உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்திய அருமையான படைப்பு..பாராட்டுக்கள்..
நல்லாயிருக்கு
good one, Anil! :)
@இராஜராஜேஸ்வரி : நன்றி
@ கோபி: நன்றி
@ தெ.கா: நன்றி
அருமை கவிதா.. அசத்திட்டீங்க போங்க.
@அமைதி சாரல் : :) நன்றிங்க..
:)
OVVORUTHARUM OVVORU VITHATHILUM PITHIYAM...
@இரசிகை : நன்றி..
நானும் இப்படி தான் இருக்கேன். மாறணும்
Maaranum ellarum maranum. Aana...
Post a Comment