மனச்சுமை-
என்னையும் உயிரையும்
கூட்டுக்குள்
இழுத்துக்கொள்கிறேன்-
பிழைக்கவுமில்லை
இறந்துவிடவுமில்லை
உள்ளே
உயிர் துடிக்கிறதே...........
********************
பெளர்ணமி இரவு -
தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-
சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிறது -
********************
அரசின் இலவச சக்கரவண்டி
பக்கத்தில் அவன்
கால்கள் ஊனம்-
பூக்கட்டி விற்கலாமே ?!!
பிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்
நன்றாகத்தானிருந்தன !
********************
ஏரிக்கரையை
ஒட்டி
ஒற்றைப் பனைமரம்
பேச்சுத்துணையின்றி
தனியாக -
********************
ஒடுங்கிய கூன் கிழவிகள்-
ஒட்டிப்போன ஒற்றைநாடிக் கிழவன்கள்-
கைக்குச்சி பக்கத்தில் கிடக்கும் குருடன்கள்-
ஒர் நடுஇரவில்
வழிநெடுக
சாலையோரங்களில் உறங்கியவர்களின்
தொடர்...
வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை -
இவர்களின் குடும்பம்
எங்கோ
இறக்கமின்றி உறங்கிக்கிடக்கிறது !!
************************
நகைக்கடையின்
விற்பனைப்பெண்-
குனிந்து கும்பிட்டு
நகையை
நன்றியோடு தருகிறாள்-
ஊக்கத்தொகை
உறுதியானதை-
அவளின் புன்னகை சொல்லியது !
*****************************
இலக்கியவாதிகள் பலருக்கு
"யோனி" மட்டுமே -
வாழ்க்கையாகிப் போனதை
நினைத்து
வெறுமையாக சிரிக்கிறேன் !!
கைப்பிடித்தவன் சொன்னான் -
"அது' வும் ஒருவகை போதை" !!
பெண் குழந்தையைப்
பெற்ற அப்பனுக்குத்தெரியும்
"யோனி" அவனின்
பெண்ணிற்கும் உண்டு !!!
************************************
என்னால்
சீரணிக்க முடியாதவற்றை
பார்க்காமல்
படிக்காமல்
தெரிந்துக்கொள்ளாமல்
அறிவிலி' யாக
இருக்கவே
விரும்புகிறேன்....
****************************************என்னை -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
நான் -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
இருக்கிறேன்
- சுயநலத்தின் பிரதிபலிப்பு
இருவரிடமும்
ஒரே முகமாக மாறும் தினம்
என்னை நான் வெல்வேன் !!
************************************
பழையத்துணிகளை
சேமித்து வைக்கிறேன் !
படுக்கையிலேயே
எல்லாமும் செய்யும்
அம்மா'விற்கு
பழைய உடைகளை அணிவிக்கும்
போதெல்லாம் -
"அவள் குழந்தையாகிவிட்டாள்"
எனக்கு நானே
சமாதானம்
சொல்லிக்கொள்கிறேன்
************************************
திவ்யா'வும் மனதளவில்
நிராகரித்துவிட்ட
வேதனையில்
தன்னை கொன்றுக்கொண்ட
இளவரசன் -
அறியாதொருக்கூட்டம்
சாதிவெறியென
பிதற்றிக்கொண்டிருக்கிறது !
**************************************
10 - பார்வையிட்டவர்கள்:
அருமை.....
அருமை.....
அனைத்தும் அருமை...
பெளர்ணமி இரவு -
தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-
சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிறது -
--- இது கலக்கல்....
நல்லா இருக்கு. அதிலும் இளவரசன் மரணத்தின் காரணம் அருமை.
@சே.குமார் & @ராஜி - நன்றி
அரசின் இலவச சக்கரவண்டி
பக்கத்தில் அவன்
கால்கள் ஊனம்-
பூக்கட்டி விற்கலாமே ?!!
பிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்
நன்றாகத்தானிருந்தன !
இது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
பாராட்டுகள்.
சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிற
பெளர்ணமி இரவு -
தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-
ரசிக்கவைத்தன..!
@தமிழ்த்தாகம் : நன்றி
@இராஜராஜேஸ்வரி : நன்றி
அனைத்துமே அருமையாக இருந்தது.... பகிர்வுக்கு நன்றி.
@வெங்கட் நாகராஜ் : நன்றி
ரசனையுடன் கவிதைகளைப் படித்து வருகையில் கடைசிக் கவிதை மனம் கனக்கச் செய்து விட்டது. அத்தனை கவிதைகளுமே முத்துக்கள்ங்க! பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
நன்றி @ பாலகணேஷ்
Post a Comment