சுட்டெரிக்கும் வெயில், வெயிலை சொல்லிக்குறையில்லை, எனக்கு
அப்போது தான் நேரம் வாய்த்தது. கையில் குடை, வெயிலுக்காக முகத்தை மறைக்கும்
கண்ணாடி என அந்த இல்லத்துக்குள் நுழையும் போது மதியம் 12.30 இருக்கும். தூரத்திலிருந்து கவனித்துவிட்ட பாட்டிகள் "கவிதா வர்ரா.."ன்னு
சொல்லியது காதில் விழுந்தது. எல்லாருக்கும் வயசாச்சின்னு நாந்தான்
நினைச்சிக்கிறேன். ஆனா கூர்மையாக கவனித்து, தொலைவிலிருந்தே நாந்தான்னு
கண்டுப்பிடிச்சிட்டாங்க.
நேராக அவர்களை கவனித்துக்கொள்ளும் சிஸ்டரிடம் சென்று, "எல்லோருக்கும் பாயாசம் செய்து கொண்டுவந்தேன் கொடுக்கட்டுமா? " கையிலிருந்த ஒரு துணிக்கவரை சிஸ்டரிடம் கொடுத்து.."இது உங்களுக்கு"
வாங்கிக்கொண்டு சிரித்தபடி..."தாங்க்ஸ் கவி....நீ ஒவ்வொருத்தரா பேசிட்டு வா.. சாப்பாடு நேரம் எல்லாரும் டைனிங் ஹாலுக்கு வருவாங்க.. அங்க கொடுத்துடு...... கவி "புதுசா இரண்டு பேர் சேர்ந்து இருக்காங்க... மூணாவதா ஒருத்தங்க இன்னைக்கு வந்துடுவாங்க... உனக்குக்கூட அவங்கள தெரியும்..முன்னமே இங்க இருந்தவங்க..லட்சுமி அம்மா.."
"பெரிய பொட்டு வச்சி இருப்பாங்களே அவங்களா??
பின்னாலிருந்து ஒரு பாட்டி.. "கவிதா.. பொட்டெல்லாம் முன்னாடி..இப்ப அவ புருஷன் செத்துட்டான்..அதான் யாருமில்லாத ஆளா திருப்பி இங்கவே வர்ர்ர்ரா.."
சில பாட்டிங்க இப்படித்தான் ...மனசுல எதுவும் வச்சிக்காம சொல்லிடுவாங்க.. "சரி..வரட்டும்..முகத்தை பார்த்தா நினைவு வந்துடும்" ..... டைனிங் ஹால் சென்றேன்.
***********
டிவி பார்த்தபடி மத்த பாட்டீஸ் எல்லாம் சாப்பிட ரெடியாகிட்டே இருந்தாங்க. தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தது. முள்ளங்கி சாம்பார், கீரை பொரியல், ஏதோ ஒரு வற்றல் இருந்தது. சில பாட்டிகள் சாம்பாரை கப்'பில் ஊற்றி வாங்கிக்கொண்டனர். எல்லோரையும் பார்த்து "பாயசம் எடுத்து வந்திருக்கேன், எதுலக் கொடுக்கட்டும்"
முதல்ல ஒரு பாட்டி, "கவி.. அந்த ஷெல்ப்ல நீலக்கலர் கப் இருக்குப்பாரு அதை எடுத்து, எனக்கு அதுல கொடுத்துடு.."
அடுத்தப்பாட்டி, "கவி..எனக்கு இதுல.."
இன்னொருப்பாட்டி, "கவி.. இந்த கப்புல சாம்பார் ஊத்திட்டேன்.. .சும்மா ஒரு அலசு அலசிட்டு இதுல கொடுத்துடு.."
4ஆவது பாட்டி... "ஆமா எதுக்கு பாயசம்..?"
"நீயூ இயர் வந்துச்சில்ல..அதை நீங்கெல்லாம் இனிப்போட ஆரம்பிக்கனும்னு பாயாசம் செய்து எடுத்துட்டு வந்தேன்.."
"ஓ....அதுக்கா... ? நீ கேக் இல்ல எடுத்துக்கிட்டு வருவேன்னு நினைச்சேன்.."
"கேக் கடையில் கிடைக்கறது, எப்ப வேணாலும் கிடைக்கும் ..இது நானே செய்த பாயாசம்..... கிடைக்குமா..?
முதல் பாட்டி.."அடி யார்டி இவ.. நமக்குன்னு செய்து எடுத்துட்டு வந்திருக்கு ...எதாச்சும் நொட்டு சொல்லிக்கிட்டு பேசாம வாங்கி வச்சிக்கிட்டு குடி"
நடுநடுவில் எல்லாப்பாட்டிகளும் மாறி மாறி கவிதா சாப்பிடுன்னு ஒரே உபசரிப்பு. :). நமக்கு அவங்களை எல்லாம் பார்த்தப்பிறகு சாப்பாடே உள்ள இறங்காதுன்னு அவங்களுக்கு தெரியாதே... :(.
எல்லோருக்கும் பாயாசத்தை கொடுத்துவிட்டு, திரும் ப படுக்கைகள் இருக்கும் அறைக்கு புதிதாக சேர்ந்தவர்களை பார்க்க வந்தேன். நான் இருந்த மறு மூளையில் முனுகல் சத்தம்...
ரொம்ப மெதுவாக யாரோ சக்தியற்றக்குரலில் முனுகும் சத்தம் கேட்டது...
கிட்டேச்சென்றேன்.. எலும்பும் தோலுமாக ஒரு பாட்டி படித்திருந்தார், யூரின் டியூப் இணைத்திருந்தனர்.
"பாட்டி...பாட்டீ..எங்கையாச்சும் வலிக்குதா..? உங்களுக்கு என்ன செய்யுது...? வலிக்குதாப்பாட்டி? "
"நீ ..யாஆ... ரு..?"
"கவிதா... "
"க..வி..தா..ஆஆ வா...? " இப்படியே ஒவ்வொரு எழுத்தாக விட்டு விட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்... கட்டிலில் கைவைத்து..எனக்கு காதும் கேட்கும் வரை குனிந்து கவனித்தேன்....
"எ ன் ன.. அ ப்பா.... அம் மா .......அ னா தை யா........ விட் டு ட் ...... செ..த் து ட்டா ங் க........... அவ ங்க ஒ ரு வீ ....... டு கு...டுத் தா ங்க...... இ ங்க அ னா தை ... யா ...கெ ட க் க.... றேன்.... ..
................................ "பாட்டி..... நீங்க அனாதை இல்ல..இங்க நிறையப்பேர் இருக்காங்க. இதோ நான் இருக்கேனே....உங்கள வந்து பாக்கறேன்..உங்களோட பேசறேன்..சரியா..??. இங்க இருக்க எல்லாரும் உங்களுக்கு சொந்தக்காரங்க தான்..... உங்கள நல்லா பாத்துக்குவாங்க... ஜாலியா இருக்கலாம்......"
"இ ங்க... இ ப்ப.. டி .....அ னா த...யா...கெ..ட..க்..க...றே..னே.. .... எ..னக்...கு வீ...டு இ..ரு..க்..கு.. பெ..ர்ர்..ர்...ரிய ......வீ....டு.. அ...ம்மா அ....ப்பா..... கு...டு...த்..தது...."
சிஸ்டரும், இன்னொரு பாட்டியும் உள்ளே வந்தனர். "கவிதா இந்த வாழைப்பழத்தை அந்த பாட்டிக்குக்கொடு".
"படுத்துக்கிட்டு இருக்காங்களே.. சாப்பிடுவாங்களா?"
"சின்ன சின்னதா கிள்ளி வாயில போடு..அது நல்லா சாப்பிடும்.."
:) சின்ன துண்டாக்கி ."பாட்டி ஆஆஆ காட்டுங்க" .....வாயை உலகம் தெரியும் படி திறந்து காட்டிய பாட்டிக்கு ஒரு துண்டை ஊட்டிவிட்டேன்.
இரண்டாவது துண்டிலிருந்து..வலதுகையை நீட்டி தானே வாங்கி சாப்பிட்டாங்க...(சரியா ஊட்டலையோ?! :) )
சிஸ்டரிடம் "அம்மா அப்பான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.. இந்த பாட்டிய அவங்க அம்மா அப்பாவா கொண்டுவந்து சேர்த்தாங்க..?
"இல்ல கவிதா.. எல்லாத்தையும் மறந்துப்போயிட்டாங்க, ஏதோ பழைய நினைப்புல பேசறாங்க. டிசம்பர் மாதம் அவங்க புள்ள தான் கொண்டு வந்து சேர்ந்துட்டு போனாரு...பிறகு வந்து பார்க்கவேயில்லை.. எழுந்து ரொம்ப மெதுவா நடப்பாங்க..நல்லா சாப்பிடுவாங்க....வயசாச்சியில்ல ரொம்ப தள்ளாமை அவ்ளோதான். ....அடிக்கடி ஒன்னுக்கு போறேன்னு முடியாம எழுந்திருப்பாங்க....அதனால எழுந்துக்காதன்னு சொல்லி யூரின் டியூப் மாட்டிவிட்டுடறது,."
***********
இந்த நிகழ்வை எழுத முக்கியக்காரணம்..: பெற்றப்பிள்ளைகள் இருக்கும் போது இல்லங்களில் விடப்படும் அத்தனை வயதானோரும்.. தான் அனாதையாக்கப்பட்டோம் என்றே நினைக்கின்றனர். ஒரு சிலர் வீட்டை விட இங்கு நன்றாக இருக்கிறேன் என்றும் சொல்கின்றனர். இருப்பினும் 98% முதியோர் தனிமையையும்.. பிள்ளைகளின் பிரிவையுமே நினைத்து வாடுகின்றனர், பிள்ளைகளின் பாசத்திற்காக ஏங்குகின்றனர்.
பெற்றோர் பிள்ளைகளை படிக்கவைத்து எல்லாமும் செய்து உருவாக்கிவிடுவதைப்போன்று, பிள்ளைகளும் பெற்றோரை கடைசிவரை வேலை, சூழ்நிலை, வசதி போன்ற காரணங்கள் காட்டி தள்ளாத வயதில் தள்ளிவைக்காமல், நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாப்பதை ஒரு கடமையாக நினைக்கவேண்டும். இதை அரசு ஒரு சட்டமாக்கினால் கூட வயதானோருக்கு ஒரு விடிவுக்காலம் பிறக்கும்.
அணில் குட்டி : அம்மணிய நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது... அம்மணியோட புள்ள இரண்டு வருசம் முன்னமே இவிங்க இம்சை தாங்கமுடியாம, அம்மணிக்கு வயசானா எங்க கொண்டுப்போய் சேர்க்கனும்னு முடிவு பண்ணி சொல்லியும் வச்சிட்டாரு..வருங்காலத்தில் இவிங்க நிலைமையே காத்துல டண்டனக்கா டணக்குனக்கான்னு ஆடுது......... ஆனாலும் அம்மணியின் கடமை உணர்ச்சிய பாத்தீங்களா???... ..
பீட்டர் தாத்ஸ் : I die a little inside every time when I see an old person crying for being in an Old Age Home.
Images : Thx Google

எல்லோருக்கும் பாயாசத்தை கொடுத்துவிட்டு, திரும்

4 - பார்வையிட்டவர்கள்:
நல்ல பகிர்வு ;)
@கோபி-நன்றி
//அம்மணிக்கு வயசானா எங்க கொண்டுப்போய் சேர்க்கனும்னு முடிவு பண்ணி சொல்லியும் வச்சிட்டாரு..//
நல்ல இடம்தானா? விசாரிச்சிட்டீங்களா? எங்கே என்னன்னு விவரம் சொல்லுங்க, அவசியப்படும்போது பயன்படுமே!! :-) :-(
@ ஹூஸைனம்மா : ஏங்க? நாம சும்மா இருந்தாவே கூட்டிட்டுப்போய் விட்ருவாங்க. இதுல நல்ல இடமா என்ன ஏதுன்னு விசாரிச்சா..இப்பவே அனுப்பி வச்சிடுவாங்க.. :)
ஒருவேள, அந்த மாதிரி எங்கையாச்சும் இருந்தா..சும்மா இருப்பேனா சொல்லுங்க.. :))) கண்டிப்பா சொல்லறேன்.
Post a Comment