பழம்நீ : பரிட்சை எப்படிடி எழுதின?
கவி : ம்ம் நல்லா எழுதியிருக்கேன்ப்பா... ஆனா ஹால் மாத்தி உக்காந்துட்டேன்..ஒரே டென்ஷனாப்போச்சி..கொஞ்ச நேரம் வீணாப்போச்சி..
பழம்நீ : அட லூசே..ஏண்டி?
கவி : 10 நிமிஷம் முன்னாடி போர்ட்ல ஹால் நம்பர் ஒட்டறாங்கப்பா... ஒரே கூட்டம்.. தூரக்கிருந்து பார்த்தேனா..சப்ஜெக்ட் மட்டும் ஓரளவு தெரிஞ்சிச்சி...என் நம்பர் சரியா கண்ணுத்தெரியல..குத்துமதிப்பா இந்த ஹால் தான்னு போய் உக்காந்துட்டேன்..
பழம்நீ : என்னது கண்ணுத்தெரியலையா? அப்ப சப்ஜெக்ட் மட்டும் எப்படி படிச்ச?
கவி : அது ரெட் கலர் மார்க்கர்ல பெரிய எழுத்தா எழுதி இருந்தாங்க..நம்பர் எல்லாம் கம்பியூட்டர் பிரிண்ட் தூரக்கிருந்து ஒன்னும் தெரியலப்பா...
பழம்நீ: கண்ணாடி போட்டிருந்தியா?
கவி : ஹி ஹி..இல்ல...
பழம்நீ : ..நமக்கு தான் நொள்ளக்கண்ணாச்சேன்னு கண்ணாடி போட்டா என்னவாம்.. ஏழு கழுத வயசாச்சி..அட்டண்டன்ஸ்ல கையெழுத்து போடாட்டி ஆம்சென்ட் தெரியுமில்ல..? உன்னால அடுத்தவங்களுக்கு எவ்ளோ பிரச்சனை? ஒழுங்கா பாத்து ஒக்கார வேணாமா?...ஒன்னுக்கு 2 பிஜி முடிச்சி இருக்க..இதுக்கூட தெரியல.?...இதுல இன்னொரு பிஜி வேற எழுதற...10 பேருக்கு நீ சொல்லித்தரனும்..நீயே இப்படி இருக்கி........
கவி : ப்ப்ப்பா....... சும்மா இருங்கப்பா..!!!! மாற்று திறனாளிகளை திட்டக்கூடாது அது ரொம்ப...பாவம்ப்பா.....
பழம்நீ : மாற்று திறனாளிய நான் எங்கடி திட்டினேன்..?! அவங்கள ஏன்டி நடுவுல வம்புக்கிழுக்கற?
கவி : அட..நாந்தாம்ப்பா... கண்ணுத்தெரியலல்ல..அப்ப நானும் மாற்று திறனாளி தான..?
பழம்நீ :அடி செருப்#$@$#@....#$@% @$%#^%^ @%$$# $#%$# $%@% @%$%$% @%$%$ %%$^% @$^%#$^ @#$#@ #@$%$#^%$^&
கவி : எச்ச்சூமி பழம்...ஹோல்ட்...!!! இதுக்கு மேல ஒரு வார்த்தைக்கூட வரக்கூடாது. ! இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு ?? என் கண்ணு தானே. என்னால பகல்ல கூட நட்சத்திரத்தை ஒன்னு விடாம எண்ணமுடியும் .... என் கண்ணு அவ்ளோ பளீச்..பளீச்....போதுமா? .....
பழம்நீ : ம்ம்ம்ம்ம்ம்ம் ...அது..!
*******************
கவி : ப்பாஆ....ப்பாஆ.. இப்ப நல்லாயிருக்கா? (தலைவிரி கோலம்)
பழம்-நீ : இருக்கு......
கவி : இப்ப ?
பழம்-நீ : இருக்கு......
கவி : இது?!
பழம்-நீ : நல்லாயிருக்கு...
கவி : என்னப்பா நீங்க? எப்படியிருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க? இது சீட்டீங்...
பழம்-நீ :............................. .............................
நீஈஈஈ.... ரஜினிகாந்த் மாதிரிடி........ எங்க இருந்தாலும், எப்படி
இருந்தாலும் சூப்பர்ர்ர்ர்ர் தான். வேற மாதிரி மாத்தி சொல்லவே
முடியாதுடி..........
கவி : அவ்வ்வ்வ்...!!
*************************
கவி : பின்னாடி வீட்டுல புதுசா ஒரு நாய் வளக்கறாங்க போல எந்த நேரமும் வாயமூடாம குலைச்சிக்கிட்டே இருக்கு...எரிச்சலா இருக்குப்பா...அவங்க வீட்டுல இருக்கவங்க அதை ஏன் வாயமூடு" ன்னு சொல்லவே மாட்டேங்கறாங்க?
பழம்-நீ : .............................. ...
(என்ன பதிலைக்காணமேன்னு திரும்பி பார்த்தால்...என் பின்னாடி அமைதியாக என்னைப்பார்த்தவாறே புன்முறவலோடு நிற்கிறார்)
கவி :.(.நானும் புரியாமல் திரும்பிவிட்டு....... புரிந்து மீண்டும் ) ஆவ்வ்வ்வ்வ்...என் வாயக்கூடவாஆஆஆ????
பழம்-நீ : ஹா ஹா ஹா ஹா...
கவி : கிர்ர்ர்ர்ர்ர்.... :))
*************
கவி : நேருஜி ஜெயில்ல இருக்கப்ப அவரோட பொண்ணு இந்திராஜிக்கு லெட்டர் எழுதினாராம்..அதை படிச்சி படிச்சி அவங்க ரொம்ப வீராதி வீரியா வளந்தாங்களாம்.. அது மாதிரி நான் உனக்கு இனிமே லெட்டர் எழுதப்போறேன்...
நவீன் : இப்ப ஜெயில்ல இருக்கறது நீயா? நானா?
கவி : ஜெயில்ல நேருஜி வெட்டியா இருந்தாரு...இப்ப அதே மாதிரி நானும் வெட்டியா இருக்கேன்னு வச்சிக்கோயேன்... .
நவீன் : நீ வெட்டி............ஆனா நான் வெட்டியில்ல.....அது மாதிரி எதாச்சும் வந்துச்சி.... நேரா ட்ரேஷ்க்கு போகும்...சொல்லிட்டேன்
கவி: என் செல்லக்குட்டி..பட்டுக்குட்டி.. ..ராஜாகுட்டி..தானே..?
படிடா குட்டி...நீ எதையும் இம்பிளிமென்ட் பண்ண வேணாம்..ஒன்னு இரண்டு
பாயின்ட்ஸ் படிக்கும் போது தானா மனசுல பதிஞ்சுடும்..
நவீன் : சரி சரி அனுப்பித்தொல..படிச்சித்தொலைக்
கிறேன்...
கவி : (அது!!)... குட் செல்லம்.!
**************************
கவி : கத்திரிக்காயில் இருக்க ஒரு என்சைம், மூளைய சுத்தி இருக்க கொழுப்பை சரியான % ல் வச்சிக்க பயன்படுதாம்..நீ கத்திரிக்காயே சுத்தமா சாப்பிடமாட்டற..உன் மூளைய நினைச்சி எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா...
நவீன் : ஹா ஹா...மூளைய பத்தியெல்லாம் நீ பேசறப்பாரு..அதான் இங்க காமெடி..:))) . நானு... வெளியில் பிரியாணி சாப்பிடுவேன் இல்ல..அதுக்கு கத்திரிக்காய் தான் தொட்டுக்க வைப்பாங்க..அப்ப சாப்பிட்டு இருக்கேனே...
கவி : அடி செல்லமே..?! கத்திரிக்காய் சாப்பிடுவியா நீனு? இது எனக்கு தெரியவே தெரியாதே?...... ஏண்டா இதை முன்னமே சொல்லல்ல ..!!! நான் வீட்டுல செய்தா துளிக்கூட சாப்பிடாம ஒதுக்கி வைக்கிற... ஹோட்டல சாப்பிடுவேன்னு வெக்க மானமே இல்லாம சொல்ற...
நவீன் : ஹே ஹே.. நீ செய்யறதை எவன் சாப்பிடறது..
கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சோத்துக் கு சிங்கி அடிக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா...?
நவீன் : நான் சாப்பாடே கிடைக்காம பட்டினி கிடந்தாக்கூட உன் சாப்பாடு நல்லாயிருக்குன்னு சொல்லுவேன்னு கனவுல கூட நினைக்காதே..நடக்காது..!!
கவி :... :(((((((( நீயெல்லாம் ஒரு புள்ளையா..?!
நவீன் : :))))))))
***************
அணில் குட்டி : .........
பீட்டர் தாத்ஸ் : Miss U Naveen
கவி : ம்ம் நல்லா எழுதியிருக்கேன்ப்பா... ஆனா ஹால் மாத்தி உக்காந்துட்டேன்..ஒரே டென்ஷனாப்போச்சி..கொஞ்ச நேரம் வீணாப்போச்சி..
பழம்நீ : அட லூசே..ஏண்டி?
கவி : 10 நிமிஷம் முன்னாடி போர்ட்ல ஹால் நம்பர் ஒட்டறாங்கப்பா... ஒரே கூட்டம்.. தூரக்கிருந்து பார்த்தேனா..சப்ஜெக்ட் மட்டும் ஓரளவு தெரிஞ்சிச்சி...என் நம்பர் சரியா கண்ணுத்தெரியல..குத்துமதிப்பா இந்த ஹால் தான்னு போய் உக்காந்துட்டேன்..
பழம்நீ : என்னது கண்ணுத்தெரியலையா? அப்ப சப்ஜெக்ட் மட்டும் எப்படி படிச்ச?
கவி : அது ரெட் கலர் மார்க்கர்ல பெரிய எழுத்தா எழுதி இருந்தாங்க..நம்பர் எல்லாம் கம்பியூட்டர் பிரிண்ட் தூரக்கிருந்து ஒன்னும் தெரியலப்பா...
பழம்நீ: கண்ணாடி போட்டிருந்தியா?
கவி : ஹி ஹி..இல்ல...
பழம்நீ : ..நமக்கு தான் நொள்ளக்கண்ணாச்சேன்னு கண்ணாடி போட்டா என்னவாம்.. ஏழு கழுத வயசாச்சி..அட்டண்டன்ஸ்ல கையெழுத்து போடாட்டி ஆம்சென்ட் தெரியுமில்ல..? உன்னால அடுத்தவங்களுக்கு எவ்ளோ பிரச்சனை? ஒழுங்கா பாத்து ஒக்கார வேணாமா?...ஒன்னுக்கு 2 பிஜி முடிச்சி இருக்க..இதுக்கூட தெரியல.?...இதுல இன்னொரு பிஜி வேற எழுதற...10 பேருக்கு நீ சொல்லித்தரனும்..நீயே இப்படி இருக்கி........
கவி : ப்ப்ப்பா....... சும்மா இருங்கப்பா..!!!! மாற்று திறனாளிகளை திட்டக்கூடாது அது ரொம்ப...பாவம்ப்பா.....
பழம்நீ : மாற்று திறனாளிய நான் எங்கடி திட்டினேன்..?! அவங்கள ஏன்டி நடுவுல வம்புக்கிழுக்கற?
கவி : அட..நாந்தாம்ப்பா... கண்ணுத்தெரியலல்ல..அப்ப நானும் மாற்று திறனாளி தான..?
பழம்நீ :அடி செருப்#$@$#@....#$@% @$%#^%^ @%$$# $#%$# $%@% @%$%$% @%$%$ %%$^% @$^%#$^ @#$#@ #@$%$#^%$^&
கவி : எச்ச்சூமி பழம்...ஹோல்ட்...!!! இதுக்கு மேல ஒரு வார்த்தைக்கூட வரக்கூடாது. ! இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு ?? என் கண்ணு தானே. என்னால பகல்ல கூட நட்சத்திரத்தை ஒன்னு விடாம எண்ணமுடியும் .... என் கண்ணு அவ்ளோ பளீச்..பளீச்....போதுமா? .....
பழம்நீ : ம்ம்ம்ம்ம்ம்ம் ...அது..!
*******************
கவி : ப்பாஆ....ப்பாஆ.. இப்ப நல்லாயிருக்கா? (தலைவிரி கோலம்)
பழம்-நீ : இருக்கு......
கவி : இப்ப ?
பழம்-நீ : இருக்கு......
கவி : இது?!
பழம்-நீ : நல்லாயிருக்கு...
கவி : என்னப்பா நீங்க? எப்படியிருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க? இது சீட்டீங்...
பழம்-நீ :.............................
கவி : அவ்வ்வ்வ்...!!
*************************
கவி : பின்னாடி வீட்டுல புதுசா ஒரு நாய் வளக்கறாங்க போல எந்த நேரமும் வாயமூடாம குலைச்சிக்கிட்டே இருக்கு...எரிச்சலா இருக்குப்பா...அவங்க வீட்டுல இருக்கவங்க அதை ஏன் வாயமூடு" ன்னு சொல்லவே மாட்டேங்கறாங்க?
பழம்-நீ : ..............................
(என்ன பதிலைக்காணமேன்னு திரும்பி பார்த்தால்...என் பின்னாடி அமைதியாக என்னைப்பார்த்தவாறே புன்முறவலோடு நிற்கிறார்)
கவி :.(.நானும் புரியாமல் திரும்பிவிட்டு....... புரிந்து மீண்டும் ) ஆவ்வ்வ்வ்வ்...என் வாயக்கூடவாஆஆஆ????
பழம்-நீ : ஹா ஹா ஹா ஹா...
கவி : கிர்ர்ர்ர்ர்ர்.... :))
*************
கவி : நேருஜி ஜெயில்ல இருக்கப்ப அவரோட பொண்ணு இந்திராஜிக்கு லெட்டர் எழுதினாராம்..அதை படிச்சி படிச்சி அவங்க ரொம்ப வீராதி வீரியா வளந்தாங்களாம்.. அது மாதிரி நான் உனக்கு இனிமே லெட்டர் எழுதப்போறேன்...
நவீன் : இப்ப ஜெயில்ல இருக்கறது நீயா? நானா?
கவி : ஜெயில்ல நேருஜி வெட்டியா இருந்தாரு...இப்ப அதே மாதிரி நானும் வெட்டியா இருக்கேன்னு வச்சிக்கோயேன்... .
நவீன் : நீ வெட்டி............ஆனா நான் வெட்டியில்ல.....அது மாதிரி எதாச்சும் வந்துச்சி.... நேரா ட்ரேஷ்க்கு போகும்...சொல்லிட்டேன்
கவி: என் செல்லக்குட்டி..பட்டுக்குட்டி..
நவீன் : சரி சரி அனுப்பித்தொல..படிச்சித்தொலைக்
கவி : (அது!!)... குட் செல்லம்.!
**************************
கவி : கத்திரிக்காயில் இருக்க ஒரு என்சைம், மூளைய சுத்தி இருக்க கொழுப்பை சரியான % ல் வச்சிக்க பயன்படுதாம்..நீ கத்திரிக்காயே சுத்தமா சாப்பிடமாட்டற..உன் மூளைய நினைச்சி எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா...
நவீன் : ஹா ஹா...மூளைய பத்தியெல்லாம் நீ பேசறப்பாரு..அதான் இங்க காமெடி..:))) . நானு... வெளியில் பிரியாணி சாப்பிடுவேன் இல்ல..அதுக்கு கத்திரிக்காய் தான் தொட்டுக்க வைப்பாங்க..அப்ப சாப்பிட்டு இருக்கேனே...
கவி : அடி செல்லமே..?! கத்திரிக்காய் சாப்பிடுவியா நீனு? இது எனக்கு தெரியவே தெரியாதே?...... ஏண்டா இதை முன்னமே சொல்லல்ல ..!!! நான் வீட்டுல செய்தா துளிக்கூட சாப்பிடாம ஒதுக்கி வைக்கிற... ஹோட்டல சாப்பிடுவேன்னு வெக்க மானமே இல்லாம சொல்ற...
நவீன் : ஹே ஹே.. நீ செய்யறதை எவன் சாப்பிடறது..
கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சோத்துக்
நவீன் : நான் சாப்பாடே கிடைக்காம பட்டினி கிடந்தாக்கூட உன் சாப்பாடு நல்லாயிருக்குன்னு சொல்லுவேன்னு கனவுல கூட நினைக்காதே..நடக்காது..!!
கவி :... :(((((((( நீயெல்லாம் ஒரு புள்ளையா..?!
நவீன் : :))))))))
***************
அணில் குட்டி : .........
பீட்டர் தாத்ஸ் : Miss U Naveen
7 - பார்வையிட்டவர்கள்:
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
\\நமக்கு தான் நொள்ளக்கண்ணாச்சேன்னு கண்ணாடி போட்டா என்னவாம்..\\
;-))))))) ரைட்டு ;)))
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com/
அன்புடன்
மனோ சாமிநாதன்
@மனோ சாமிநாதன் : நன்றிங்க
@கோபி : ரைட்டு
@கவிஞர் : நன்றிங்க. உங்களுக்கும் வாழ்த்துகள் ! (சற்றே தாமதமாக)
அருமையான பகிர்வு...
அழகா உங்களோட நகைச்சுவை உணர்வோட உணர்வுகளை பகிர்ந்து இருக்கீங்க...
Post a Comment