அன்று நாகமணிக்கு முதல் தேர்வு, அறையை கண்டுபிடித்து, செளகரியமாக ஒரு இடத்தைப்பார்த்து அமர்ந்து கொண்டாள். விடைத்தாள் கொடுக்கப்பட்டதும் பூர்த்திசெய்து, கேள்வித்தாளுக்காக காத்திருந்தாள். அப்போது தான் அந்த பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்தனர்.
பெரியவர் அந்தப்பெண்ணை, நாகமணிக்கு முன் இருந்த காலி இருக்கையை காட்டி அங்கே அமரசொன்னார். உட்காரும் முன் பெண் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை பெரியவரிடம் கொடுத்தாள், அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசாமல் நின்றாள். பெரியவர் அவளை உட்காரசொல்லிவிட்டு, அறையில் இருந்த சூப்பர்வைசரிடம் அந்த பெண்ணைக்காட்டி ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்.
"இவ்ளோ பெரிய பெண்ணிற்கு தனியாக வந்து அமர்ந்து பரிட்சை எழுதத்தெரியாதா? அதுவும் இது மூணாவது மாடி, அந்த வயதானவரை இங்கு வரை அழைத்து வர வேண்டுமா?" நாகமணியின் மனதுக்குள் எழுந்த தேவையற்ற எரிச்சலின் நடுவே கேள்வித்தாள் வந்தது. அத்தோடு அந்த பெண்ணை மறந்து தேர்வெழுத ஆரம்பித்தாள்.
நாகமணியின் பக்கத்தில் வந்த சூப்பர்வைசர்களில் ஒருவர் மற்றவரிடம், "அந்த பெண்ணிற்கு காது கேட்காது, பேசவும் வராது அதனால் என்ன கேள்வி தாள் வேண்டுமென ஹால் டிக்கட்டைப்பார்த்து கொடு" என்று சொன்னது நாகமணியின் காதில் விழு. "அடடா... இது தெரியாமல் அந்தப் பெண்ணின் மேல் எரிச்சல் பட்டோமே, அந்த பெரியவர் பெண்ணின் அப்பாவாக இருக்கும்... " தனக்குள் உச் கொட்டிக்கொண்டாள்.
தேர்வு முடிந்து வந்து, இரண்டு சக்கர வண்டியை எடுக்கும் போது, அந்த பெண்ணின் நினைவு வர சுற்றி பார்த்தாள், அவள் கண்ணில் தென்படவில்லை. அவளின் நினைவூடே வண்டியை ஓட்டிச்சென்றாள். போரூர் பூந்தமல்லி சாலை, மாலைவேளை போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. பெரிய வாகனங்கள், ஷேர் ஆட்டோ டுபுடுபு சத்தங்களுக்கு நடுவே நாகமணியின் நினைவு மட்டும் அந்தப் பெண்ணைத் துரத்தியது.
ஒரு வேளை அந்த பெண்ணைப்போல தானும் இருந்தால்???? வினாடித்துளிகளில் போரூர் பூந்தமல்லி சாலையில் வாகனம் செல்ல, இவளின் நினைவுகள் படு வேகமாய் அதே சாலையின் வழியே பின்னோக்கி ஓடியது..... பேரூந்துகள், ஷேர் ஆட்டோக்கள், டூவிலர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக, இவள் மட்டும் வேக வேகமாய் பின்னோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தாள்......
"நிச்சயம் அப்பா கூட வந்திருக்க வாய்ப்பில்லை. திருமணம் கூட ஆகியிருக்காது, அதனால் கணவரோ அவர் சார்ந்தவர்களோ வந்திருக்க வாய்ப்பேயில்லை. தேர்வெழுத நிச்சயம் நான் தனியாக தான் வந்திருப்பேன், பேசவும் கேட்கவும் முடியாததால், ஒரு காகிதத்தில் நானே என்னைப்பற்றிய குறிப்புகளை எழுதி சூப்பர்வைசருக்கு சைகைக்காட்டி, அதைப்படிக்க செய்திருப்பேன்.......நிச்சயம் நன்றி சொல்ல புன்னகைத்திருப்பேன். வாழ்க்கை இன்னமும் போராட்டம் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.. எல்லாரிடமும் சைகை செய்தே பேசியிருப்பேன், என்னைக்கிண்டல் செய்து பார்த்து சிரிப்பவர்களை பார்த்து விசயமறியாது மரியாதைக்கருதி நானும் சிரித்திருப்பேன். ... இந்தளவு யாரையும் கவனித்திருக்க முடியாது..இப்படி யோசித்திருக்கக்கூட முடியாது...
எல்லாமே நிசப்தம்....ஆமாம்.. நான் நிசப்தம்..என்னை சுற்றிலும் நிசப்தம்...அந்த நிசப்தத்தை சற்றே கண்ணைமூடி ரசிக்க .........." பின்னோக்கி வேக வேகமாய் ஓடிய நினைவுகளின் வேகம் இரத்த அழுத்தம் சோதிக்கும் போது குறையும் நாடித்துடிப்பை போல குறைந்துக்கொண்டே வந்தது...
வெகு நெருக்கத்தில் "ப்ப்பாம் ப்பாம்ம்ம் " ..சட்டென்று சாலையில் வந்து குதித்தவளாய்.... அதிர்ச்சியோடு வலதுப்பக்கம் பார்த்தாள்..பெரிய லாரி ஒன்று இவளை ஒட்டி வந்து சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தது.. சன்னலோரம் அமர்ந்திருந்தவன் எட்டிப்பார்த்து கெட்ட வார்த்தைகளில் எக்கச்சக்கத்து திட்டினான்.....
நாகமணியின் முகம் சுருங்கி, உதடுகள் சத்தமில்லாமல் அசைந்தன... "நிஜமாகவே காதுக்கேட்காமல் பிறந்திருக்கலாமோ.... ?! "
*படங்கள்: நன்றி கூகுள்!

13 - பார்வையிட்டவர்கள்:
அருமையான..துவக்கம்...முடிவும் அருமையாக முடித்தீர்கள்!
அருமையான சிறுகதை!
குட் ;)
@வசு : நன்றி
@ கோபி : நன்றி
arumai!
@அருணாசெல்வம்: நன்றி
நல்ல ஸ்டோரி.
ஸ்கூட்டி பார்த்து ஓட்டுங்க.
புத்தாண்டு வாழ்த்துகள்.:-)
@ஓலை சிறிய : எல்லாக்கதைகளிலும் நாயகி நான் அல்லவே.. :)
இப்படி பிரிச்சிப்பாருங்க /படிங்க:-
1. கதையை மட்டும் யோசிப்பவள் நான்
2. கதையின் நாயகியாகவும் யோசித்துப்பார்ப்பேன்
3. கதையின் நாயகித்தவிர மற்ற கதாப்பாத்திரங்களாகவும் யோசித்துப்பார்ப்பேன்
4. கதையில் நடந்த சம்பவங்கள் என் எதிரில் நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு
5. ஆனால் அது என் சொந்த கதையாக இருக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவு.
6. யாருக்கோ நடந்ததை எனக்கே நடந்ததாக யோசிக்கும் குணமும் எனக்குண்டு, அதனால் என் கதையைப்போல பிரம்மை தரலாம்.
7. சம்பவங்களை கற்பனை செய்து கோர்வையாக்கி மட்டுமே எழுதுகிறேன் என்னுடைய பாணியில்......
:)))புரிஞ்சிச்சாஆஆஆ
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! :)
@ஓலை சிறிய : என்னிடம் இருப்பது ஆக்டிவா ஹோண்டா..
ஓலை, ஒரு சின்ன காமெண்ட் போட்டு உங்க கிட்ட அநியாய வட்டியும் மொதலுமா ரொம்பவே திருப்பி வாங்கிட்டாரு போல! ரொம்ப சமர்த்துதான் அவருனு நான் சொல்லுறேன்.. :)
நீங்க என்ன சொல்றீங்க? :-) இல்லையா? சரி அப்படியே ஆகட்டும். :)
சரி இதை கொஞ்சம் அனலைஸ்ப் பண்ணிப் பார்ப்போம்..
பிடிக்காததை கேட்கும்போதும், பார்க்கும்போதும்.. காது கேட்க முடியாமல், வாய் பேச முடியாமல், கண் பார்வையில்லாமல் நாம் பொறந்திருக்கக் கூடாதா? னு ஒரு மணித்துளி அந்த எண்ணம் வருவதெல்லாம் சரிதான்.
ஆனால் அதெல்லாம் "ச்சும்மா" அந்த நிமிடத்தில் வரும்னு நெனைக்கிறேன். உண்மையிலேயே செவி இழக்க உங்க ஹீரோயின் தயாரா இல்லைனு அவருக்குத் தெரியாது. :)
-------
அது ஏன் உங்க ஊரில்( அதான் சிங்காரச் சென்னையில்) உள்ளவங்களுக்கு மட்டும் இதுபோல் யாரையும் இஷ்டத்துக்கு திட்டுறமாரி ஒரு வியாதி வந்துடுதுனு தெரியலை..என்னை எல்லாம் கண்டவனும் அப்படித் திட்டினால் ஏதாவது விபரீதமா திருப்பிச் செஞ்சுபுடுவேன்..உங்க ஊர்க்காரங்ககிட்ட சொல்லி வைங்க! :)
---------
நீங்க கஷ்டப்படுறவங்களுக்காக ரொம்பவே ஃபீல் பண்ணுறீங்கனு தோணுது. உங்க ஹீரோயினை சொல்லல.. உங்களைத்தான் சொல்றேன். I believe you are naturally very empathetic, Kavitha! :)
@ வருண் : நன்றி
//அது ஏன் உங்க ஊரில்( அதான் சிங்காரச் சென்னையில்) உள்ளவங்களுக்கு மட்டும் இதுபோல் யாரையும் இஷ்டத்துக்கு திட்டுறமாரி ஒரு வியாதி வந்துடுதுனு தெரியலை..//
ஓ விளக்கம் சொன்னா திட்டறதுன்னு உங்க ஊர்ல இருக்கவங்க பேர் வைப்பீங்களா? ரைட்டு.. :)
//என்னை எல்லாம் கண்டவனும் அப்படித் திட்டினால் ஏதாவது விபரீதமா திருப்பிச் செஞ்சுபுடுவேன்..உங்க ஊர்க்காரங்ககிட்ட சொல்லி வைங்க! :)//
இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நானில்லைங்க.. திட்டாமலேயே திட்டியதாக சொல்லி சவுண்டு விடற உங்க ஊர் க்காரங்கக்கிட்ட சொல்லுங்க.. இந்தமாதிரி ஆளுங்களை கண்டுக்கவே மாட்டோம். :)))))
தனியாவே கத்திக்கிட்டு இருக்க வேண்டியது தான்...
// I believe you are naturally very empathetic, Kavitha! :)//
True!
//ஆனால் அதெல்லாம் "ச்சும்மா" அந்த நிமிடத்தில் வரும்னு நெனைக்கிறேன். உண்மையிலேயே செவி இழக்க உங்க ஹீரோயின் தயாரா இல்லைனு அவருக்குத் தெரியாது. :)//
அது எப்பவாச்சும் கதை எழுதும் போது, அப்படி ஒரு சூழ்நிலை கதையில் வந்தால், அப்போது தான் முடிவு செய்யப்படும்.. cant predict now.. :)
***அது ஏன் உங்க ஊரில்( அதான் சிங்காரச் சென்னையில்) உள்ளவங்களுக்கு மட்டும் இதுபோல் யாரையும் இஷ்டத்துக்கு திட்டுறமாரி ஒரு வியாதி வந்துடுதுனு தெரியலை.***
கவிதா: I was not talking about you at all here. I was talking about "drivers" of chennai in general who uses vulgar words when someone makes a "mistake" in traffic -just like that.
It was long time ago, I went for a funeral and came out of the cemetery and waited there. There was an accident, a bike and car bumped on each other. It has nothing to do with a bus which was standing near-by. The bus driver started making vulgar comments on the bike guy and the girl. Then we had to make him SHUT UP! :-)
I know you and oosai know each other and you only offered an explanation and it did not sound rude at all.
Anyway these misunderstandings are not uncommon in blog world.
Take it easy
Post a Comment