கடற்கரை-
இருள் சூழும் நேரம்
மழை வரும் வானம்
தனிமை-
முழங்கால்களை
கட்டிக்கொண்டு-
சுழன்று வரும் காற்று
சற்றே வேகமாய்
மோதிச்செல்கிறது -
முகர்ந்ததில்
உப்பின் வாசம் -
தன்னிச்சையாக
நாக்கை சுழட்டி
உதட்டோரம் சுவைக்கிறேன்
கரித்தது!
கடலின் எல்லையை
தேடி
கண்கள்
நெடுந்தொலைவு
பயணக்கிறது
தொலைவில்
தள்ளாடும் குட்டி படகு
பெரிய வெள்ளை கப்பல்
கடல் பட்சிகள்
அலைகள் அடங்கிய
நிதானமான சாம்பல்
நிறக்கடல் -
சிமிட்டாத இமைகள்
சுருக்கிய புருவங்கள்
பார்வையில் கூர்மை
நிற்காமல் அலைகிறது
எல்லை கிட்டவில்லை...
புரிந்த தருணத்தில்
வேகமாய் மீண்டு வந்த பார்வை
அருகில் '
மெதுவாய் மணற்பரப்பில்
உலாவுகிறது -
எட்டிய தூரம் வரை
பாதச்சுவடுகள் -
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசை நோக்கி
வெவ்வேறு அளவுகளில்-
எதையோ
தேடி தேடி... தேடி தேடி...
என் பாதங்களை
சாய்ந்து பார்க்கிறேன்
பாதங்களின் அடியில்
சுவடுகள்....சிரித்தன..
தேடல் எனக்கு மட்டுமல்ல..........
16 - பார்வையிட்டவர்கள்:
\\தேடல் எனக்கு மட்டுமல்ல..........\\
உண்மை தான் அக்கா நானும் உங்க கவிதையை தேடிக்கிட்டு தான் இருக்கேன் ;))
:)))))))))))) கோப்ஸ் வேணாம் எனக்கே என்னை பார்த்து சிரிப்பை அடக்க முடியல.. :))))
ஃபேஸ்புக்ல இருக்கற மாதிரி லைக் ஆப்ஷன் இருந்தா கோபினாத் அவர்களின் கமெண்ட்டுக்கு லைக் கொடுத்திருப்பேன்... #வட போச்சே
ஆரம்பிச்சிட்டாங்கய்யா... :))))
ரொம்ப நல்லா இருக்குங்க ///
நிச்சயம் தேடல் வேண்டும் ....
செமையான வரிகள்..
நல்லாருக்குங்க.
ஆமா.. படம் எங்கேருந்து புடிச்சீங்க?
அட்டகாசம்.
அய்யோ அம்மா கொல்றாங்களே:))))))))
பீச்சுக்கு போனாமோ, சுண்டலோ பஜ்ஜியோ சாப்பிட்டோமான்னு வராமா என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?
@ அரசன் : நன்றி :)
@ லோகு : அய்யய்ய.. இன்னும் நீங்க அந்த அழுமீஞ்சிய எடுக்கலயா?
படம் கூகுள் ஆண்டவர் தான் வேற எங்க போவேன்? ! :)
@ பிரபு : நன்றி :)
@ வித்து : :)) அடுத்த தபா பீச் போனா.. நீங்க சொன்னதை மட்டும் செய்யறேன் :)) டீல் ! :)
//தேடல் எனக்கு மட்டுமல்ல.........//
கவி நீ என்ன சொல்லறன்னு கவிதையெல்லாம் தேடி கடைசியா கண்டுக்கிட்டேன் தேடல் பொது என்று..
\\@ லோகு : அய்யய்ய.. இன்னும் நீங்க அந்த அழுமீஞ்சிய எடுக்கலயா? \\
என்ன பன்ன?
நானும் என்ன வித விதமா போட்டோ புடிச்சு பாக்குறேன்.
எல்லாம் கருப்பாவெ வருது.
ரொம்ப நல்ல தேடல்.
@ தமிழ் : எனக்கு தெளிவா புரிஞ்சி போச்சி விடு விடு.. :))
@ லோகு ; யாருங்க உங்க போட்டோவை போட சொல்லி கேட்டா.? நெட் ல நிறைய வெள்ள போட்டோ இருக்குமே? :)) போடுங்க.. நல்லா சிரிக்கிற முகமா..
அழுகை நம்முடனேயே இருக்கட்டும். .சிரிப்பு மற்றவரையும் சேரட்டும் :)
@ சே.குமார் : நன்றி
\எட்டிய தூரம் வரை
பாதச்சுவடுகள் -\
பாத சுவடுகளின் மனங்களை பார்த்ததால் தேடல் உங்களுக்கு மட்டுமல்ல என்று புரிந்தது.
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோதரி .உங்கள் நட்பைத் தொடர்வதில் பெருமைகொள்கின்றேன் ..
நன்றி பகிர்வுக்கு .
அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோதரி .உங்கள் நட்பைத் தொடர்வதில் பெருமைகொள்கின்றேன் ..
நன்றி பகிர்வுக்கு .
Post a Comment