என்ன எடுத்தவுடனே கடைசி? முதல், மிடில் எச்சரிக்கை எல்லாம் எங்கன்னு கேக்காதீங்க . அதெல்லாம் மெயில் ல முடிஞ்சிப்போச்சி. அவரு எதையும் கேக்கறாப்ல இல்ல, அதனால இது கடைசி எச்சரிக்கை ....தொடர்ந்து படியுங்கள்... எச்சரிக்கை நடுவில் வரும்...
இணைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகல் இரவு பாராமல், மீனவர்களின் வாழ்வியல்பு மாற்றத்திற்காகவும், இலங்கை கடற்படையால் தன் வாழ்க்கையை இழந்து வரும் மீனவர்களின் பாதுக்காப்பு வேண்டியும் பல்வேறு விதங்களில் தங்களின் ஆதரவையும், தற்போதைய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.
அதில் முதற்கட்டமாக, நாம் ஒன்றுகூடி "கீச்சின்" மூலம் நம் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்து, நம் நண்பர்கள் பலர் சமீபத்தில் மென்பொருள் வல்லுனர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மீனவர்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இதற்கு நடுவே, இணைய நண்பர்கள் சிலர், மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக அரசியல் தலைவர்களையும், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பு மற்றும் பேச்சு விபரங்களை tnfisherman கூகுள் குழுமத்திற்கு அனுப்புகிறார்கள். http://groups.google.com/ group/tnfisherman.
30 ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையை இத்தோடு நாம் விட்டுவிடாமல், மீனவர்களை அவர்கள் இடத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளையும், பிரச்சனைகளையும் நேரில் கண்டு, அதனை நம் வாயிலாக எழுத்தாக்கி பலரை சென்றடைய முயற்சி நடந்து வருகிறது. வருகின்ற மார்ச் 4,5 தேதிகளில் நாகையிலும் - 6, 7 தேதிகளில் ராமேஷ்வரத்திலும் மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாட்களில், இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் கலந்துக்கொள்ள முடியுமானால் கூட வரலாம்.
இதற்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவு மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதுமானது. தங்கும் வசதி, கிராமங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றை அங்கிருக்கும் உள்ளூர் நண்பர்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். உங்களுக்கு அதில் சிரமம் ஏதும் இருக்காது.
*************************
விளம்பர இடைவேளை -
விளம்பரம் உத்தி ன்னு கேள்விப்பட்டு இருப்போம். விளம்பரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும், நம் விளம்பரப்படுத்தும் பொருளினை பற்றிய விபரம் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இது. :) லக்கி க்கு என் நன்றிகள். ஒரு நல்ல விஷயத்திற்கு அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன். பத்திரிக்கைகளில் கவர்ச்சிப்படத்தை முன் அட்டையாக போட்டு, பார்வையாளர்களின் கவனத்தை இழுப்பதை போன்று இங்கு கவர்ச்சி நாயகன் "லக்கி". அவ்வளவு தான், எனக்கும் அவருக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு என்று ஒன்றுமில்லை. :)) எவ்வளவு தான் மாங்கு மாங்கென்று எழுதினால் கூட, தலைப்பை வைத்து தான் மக்கள் பதிவினை படிக்க வருகிறார்கள். உங்கள் அனைவரின் கவனத்தை கவரவேண்டி வைக்கப்பட்ட பொய்யான ஒரு தலைப்பு. :) லக்கியின் பெயரை சொல்லி நன்மை நிகழ்தால் எல்லாம் லக்கிக்கே... :)
*************************
இந்த பயணம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, இது வரையில் 8 நண்பர்கள் கலந்துக்கொள்ள முன் வந்துள்ளனர்.
1 மா சிவகுமார்
2 நாகை சிவா
3 அறுசுவை பாபு
4 கவிராஜன்
5 ரோசா வசந்த்
6 உண்மை தமிழன்
7 சாந்தப்பன்
8 அபிஅப்பா
உங்களுக்கும் கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பின், masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும், இதனைப்பற்றிய முழுவிபரங்கள் அறிய கீழ்கண்ட பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு
2. நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது !
3. பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தினம் தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக, நம்மால் முடிந்த உதவிகளில், இந்த எள்ளளவு உதவியும் ஒன்று. ஆர்வமும், விருப்பமும் இருப்பவர்கள், இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விரைந்து உங்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள், உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவர்....
நன்றி !!
அணில்குட்டி : ம்ம்ம்.. இவிங்களுக்கு முன்ன மூனு நல்லவங்க இது சம்பந்தமா போஸ்ட் போட்டு இருக்காங்க. . எவ்ளோ டீசன்ட்டா, ரிலேட்டடா தலைப்பு வச்சி இருக்காங்க.. அம்மணி மட்டும்.. .. ...... ஒன்னும் பண்ணமுடியாது.. தலைப்பு ஹூரோ லக்கிலுக் வந்து கழுத்தை திருப்பினா தெரியும்... கதை :)) நமக்கென்ன...!
.
இணைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகல் இரவு பாராமல், மீனவர்களின் வாழ்வியல்பு மாற்றத்திற்காகவும், இலங்கை கடற்படையால் தன் வாழ்க்கையை இழந்து வரும் மீனவர்களின் பாதுக்காப்பு வேண்டியும் பல்வேறு விதங்களில் தங்களின் ஆதரவையும், தற்போதைய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.
அதில் முதற்கட்டமாக, நாம் ஒன்றுகூடி "கீச்சின்" மூலம் நம் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்து, நம் நண்பர்கள் பலர் சமீபத்தில் மென்பொருள் வல்லுனர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மீனவர்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இதற்கு நடுவே, இணைய நண்பர்கள் சிலர், மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக அரசியல் தலைவர்களையும், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பு மற்றும் பேச்சு விபரங்களை tnfisherman கூகுள் குழுமத்திற்கு அனுப்புகிறார்கள். http://groups.google.com/
30 ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையை இத்தோடு நாம் விட்டுவிடாமல், மீனவர்களை அவர்கள் இடத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளையும், பிரச்சனைகளையும் நேரில் கண்டு, அதனை நம் வாயிலாக எழுத்தாக்கி பலரை சென்றடைய முயற்சி நடந்து வருகிறது. வருகின்ற மார்ச் 4,5 தேதிகளில் நாகையிலும் - 6, 7 தேதிகளில் ராமேஷ்வரத்திலும் மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாட்களில், இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் கலந்துக்கொள்ள முடியுமானால் கூட வரலாம்.
இதற்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவு மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதுமானது. தங்கும் வசதி, கிராமங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றை அங்கிருக்கும் உள்ளூர் நண்பர்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். உங்களுக்கு அதில் சிரமம் ஏதும் இருக்காது.
*************************
விளம்பர இடைவேளை -
விளம்பரம் உத்தி ன்னு கேள்விப்பட்டு இருப்போம். விளம்பரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும், நம் விளம்பரப்படுத்தும் பொருளினை பற்றிய விபரம் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இது. :) லக்கி க்கு என் நன்றிகள். ஒரு நல்ல விஷயத்திற்கு அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன். பத்திரிக்கைகளில் கவர்ச்சிப்படத்தை முன் அட்டையாக போட்டு, பார்வையாளர்களின் கவனத்தை இழுப்பதை போன்று இங்கு கவர்ச்சி நாயகன் "லக்கி". அவ்வளவு தான், எனக்கும் அவருக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு என்று ஒன்றுமில்லை. :)) எவ்வளவு தான் மாங்கு மாங்கென்று எழுதினால் கூட, தலைப்பை வைத்து தான் மக்கள் பதிவினை படிக்க வருகிறார்கள். உங்கள் அனைவரின் கவனத்தை கவரவேண்டி வைக்கப்பட்ட பொய்யான ஒரு தலைப்பு. :) லக்கியின் பெயரை சொல்லி நன்மை நிகழ்தால் எல்லாம் லக்கிக்கே... :)
*************************
இந்த பயணம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, இது வரையில் 8 நண்பர்கள் கலந்துக்கொள்ள முன் வந்துள்ளனர்.
1 மா சிவகுமார்
2 நாகை சிவா
3 அறுசுவை பாபு
4 கவிராஜன்
5 ரோசா வசந்த்
6 உண்மை தமிழன்
7 சாந்தப்பன்
8 அபிஅப்பா
உங்களுக்கும் கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பின், masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும், இதனைப்பற்றிய முழுவிபரங்கள் அறிய கீழ்கண்ட பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு
2. நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது !
3. பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தினம் தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக, நம்மால் முடிந்த உதவிகளில், இந்த எள்ளளவு உதவியும் ஒன்று. ஆர்வமும், விருப்பமும் இருப்பவர்கள், இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விரைந்து உங்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள், உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவர்....
நன்றி !!
அணில்குட்டி : ம்ம்ம்.. இவிங்களுக்கு முன்ன மூனு நல்லவங்க இது சம்பந்தமா போஸ்ட் போட்டு இருக்காங்க. . எவ்ளோ டீசன்ட்டா, ரிலேட்டடா தலைப்பு வச்சி இருக்காங்க.. அம்மணி மட்டும்.. .. ...... ஒன்னும் பண்ணமுடியாது.. தலைப்பு ஹூரோ லக்கிலுக் வந்து கழுத்தை திருப்பினா தெரியும்... கதை :)) நமக்கென்ன...!
.
28 - பார்வையிட்டவர்கள்:
விளம்பர இடைவேளைக்கு கலரை மாத்துங்க ஒன்னுமே தெரியல!
@ கோப்ஸ் - அது வேணும்னு போட்டது. காப்பி செய்து பார்த்தீங்கன்னா நல்லா படிக்க வரும் :))
நல்ல பதிவு, பீதியை கிளப்பும் டைட்டில்
லக்கியை போட்டு தாக்குவதனால் ஒன்றும் பிரச்சனையில்லை தாக்குங்குள்.. இப்படியெல்லாம் சப்பைகட்டு கட்டவேண்டாம்..
நானும் இராமேஸ்வரம் செல்ல முயற்சிக்கிறேன் வேலைபளுதான் மிரட்டுகிறது..
நல்ல காரியம். நோக்கம் நிறைவேற என் வாழ்த்துகளும்.
I'll render my moral support..
subject: உங்கள் பிளாகின் புதிய பதிவுகள் வாசகர்களுக்கு போய்ச் சேர image icon வடிவ subscribe செய்யும் optionஐ உருவாக்குங்கள்.
http://mayadevar.blogspot.com/
இந்த பிளாகின் மேற்புறத்தில் உள்ள image icon வடிவ subscribe செய்து கொள்ளும் optionஐ பாருங்கள். அது மிகவும் user friendlyயானது. Spaceஐ அதிகம் எடுத்துக் கொள்ளாதது. வாசகர்கள் கண்ணில் எழிதில் படும். கூகிள் ரீடரை இதுவரை அறியாத வாசகர்கள் கூட எளிதில் கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை subscribe செய்து கொண்டு google readerஐ அறிய முடியும்.
if u want to create such a subscribe option for your blog read this post
http://subscribeoptioninimageformat.blogspot.com/2011/02/how-to-create-subscribe-option-in-image.html
good...!
ஆனாலும் நீங்க ரொம்ம்ப சாமார்த்தியசாலிங்க..
இது ஒரு நல்ல காரியத்துக்காக என்பதால் உங்களின் இந்தப் பதிவிற்கு நன்றி ...
இந்த போஸ்ட் க்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்க??? :)))) வாழ்க. :)
@ சி.பி செந்தில்குமார் : இதுக்கே பயந்த நிஜம்மா எச்சரிக்கை விட்டா என்ன செய்வீங்க? :)
@ ஹரிஹரன் : மா.சிவகுமார் அவர்களின் ஈமெயில் முகவரி கொடுத்து இருக்கே, அதுக்கு ஒரு மெயில் தட்டி, உங்க வரவை பதிவு செய்துக்கோங்க.. :))
@ வித்து : தாங்ஸ் வித்யா.. ஒரு போஸ்ட் போட்டு விபரத்தை மக்களுக்கு கொண்டு போனால் கூட நல்ல உதவி தான். .:) நம்மால் முடிந்தது ..
@ டி : தகவலுக்கு நன்றி.. செய்கிறேன்.
@ தமிழ் அமுதன் : நன்றி
@ வெட்டிபேச்சு: ம்ம்கூம் என் சாமர்த்தியத்தை பத்தி வீட்டுல வந்து கேளுங்க. . கண்டிப்பா உங்களுக்கு அடி விழும்.. (ஹி ஹி..எனக்கில்ல)
உத்தியெல்லாம் சரிதான். ஆனால், மைனஸ் விழுந்திருப்பதை வைத்தே சிலருக்கு உறுத்துகின்றது என்று தெரிகின்றது. லக்கி இதனை விளையாட்டு என்னும் அளவிலேயே ஏற்றுக்கொள்வார். ஆனால், அவர் மீது அபிமானம் கொண்ட சிலர் அப்படியே நினைத்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.
----
இது ஒரு கூட்டு முயற்சி. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு வசதிப்படும் நேரத்திலும், வாய்ப்பிருக்கும் விதத்திலும் செயல்படுகின்றோம். எவரேனும் ஒருவரது பெயரை மட்டும் குறிப்பிட்டு பதிவெழுதினால், மற்றவர்களது பங்களிப்புகள் மறைக்கப்படுவது போல் தோன்றும். ஏற்கனவே ஒரு பதிவர் இதை போன்று செய்திருந்தார். இப்பொழுது இங்கும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவோம்.
:-௦)
-----
உங்கள் ஆதரவுக்கும், பங்களிப்புக்கும் நன்றி.
.
@ கும்மி - இந்த பதிவுக்கு எல்லாம் உறுத்தல் இருக்கும்னா. .அவங்களை எல்லாம் மனுஷங்க லிஸ்ட் ல சேர்த்துக்க வேணாம் :)
ம்ம்ம்.. பொதுவாக எனக்கு இது சம்பந்தமாக அனைவருடனும் பேச்சு தொடர்பு இல்லாமல் இருப்பதால், எனக்கு தெரிந்த வரை எழுதி இருக்கேன். உங்கள் + கவிராஜன் பெயரை சேர்க்கும் படி நண்பர் சொன்னதால் சேர்த்தேன் :)
மற்றபடி யாரையேனும் விட்டு இருக்கிறேன் என்று நினைத்தால், மன்னிக்கனும். தெரிந்து அப்படி செய்யவில்லை.
லக்கியிடம் அபிமானம் உள்ளவர்களும் மைனஸ் ஓட்டு போடக்கூடியவர்களாக இருப்பார்கள் என தெரியவில்லை :)
@கவிதா
எங்கள் பெயரை குறிப்பிட்டதால்தான் நான் அப்படிக் குறிப்பிட்டேன். பொதுவாக 'இணைய நண்பர்கள்' என்று இருந்திருந்தால் யாருக்கும் பாதகமில்லாமல் இருந்துவிடும். இனி பதிவிடுபவர்கள் அதனை கவனத்தில் கொள்வார்கள் என்று எண்ணுகின்றேன். நன்றி.
@ கும்மி - அப்படியே மாற்றிவிட்டேன். யாரையும் விடவேண்டாம், எல்லோரும் சேர்ந்தெ செய்வோம் :) சுட்டியதற்கு நன்றி.
nalla visayam
nanum kalanthukanumnu asai irunthalum enala mudiyala
ithu mathiri ella piratchanaikum onna kudi poradina nala palan kidaikumnu ninaikuren
pasumai puratchi mathiri pathivu puratchi nadaththalam
Interesting. Good job. I extend my support.
\\ கவிதா | Kavitha said...
இந்த போஸ்ட் க்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்க??? :)))) வாழ்க. :\\
இதுவேறயா!! ரைட்டு !
யக்கா..ஆமா உங்க தம்பி லக்கி(அண்ணே) எதுவும் சொல்லவில்லையா!? (டவுட்டு கேட்போர் சங்கம்)
@ நவீன் : நன்றி செய்யலாம்
@ சேது : நன்றி
@ கோப்ஸ் : தம்பி போஸ்ட் போட முன்னே படிச்சிட்டு ஒக்கே சொல்லிட்டாரு. .அப்புறம் தான் போஸ்ட் டே வந்துச்சி :))
@ வருண் : உங்களின் ஈமெயில் ஐடி கொடுங்கள், பதில் அனுப்புகிறேன்
// லக்கி இதனை விளையாட்டு என்னும் அளவிலேயே ஏற்றுக்கொள்வார். ஆனால், அவர் மீது அபிமானம் கொண்ட சிலர் அப்படியே நினைத்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.///
Very True. தலைப்பு ரொம்ப கேவலமாக இருக்கு. மேலோட்டமாக பதிவின் தலைப்பை மேய்பவர்களுக்கு நிச்சயம் எரிச்சலையே தரும். அதற்காக தான் இத்தனை மைனஸ் ஓட்டு.
அடப்பாவிங்களா.. இப்படி கூட ஒரு விஷயத்தை கன்வே செய்யமுடியுமா?? கவிதா நல்ல ஐடியா...
நொள்ளக்கண் எழுத்துக்கும் பதிவின் சாரத்துக்கும் தொடர்பே இல்லையே!
பதிவின் சாரத்துக்கு எனது பின்னூட்ட ஆதரவு.
Great Effort.
I am going to miss this...
Mayiladuthurai Sivaa...
@ சதீஷ் : நல்லா இருக்குங்க உங்க பின்னூட்டம் நன்றி :)
@ ஜாக்கி : நன்றி.. கலந்துக்கோங்க, உங்க பதிவுக்கு தான் ரசிகர்கள் அதிகம், நீங்க எல்லாம் வந்து பார்த்து எழுதினா, அதிகமான மக்களை சென்றடையும் :)
@ ராஜ நடராஜன் : வாங்க :) எப்படி இருக்கீங்க? ம்ம்ம். .ஆமா இல்ல தான். என்ன செய்யறது, சில சமயம் கிறுக்குத்தனம் செய்ய வேண்டி இருக்கு :)
@ மயிலாடுதுறை சிவா: ப்பாஆ..எத்தன சிவா பதிவுலகத்தில் ?! :)
ஏங்க கவலை, உங்க சார்பா வேறு யாரையாச்சும் அனுப்பி வைங்க..
நல்ல விஷயம் தான்.. சேர்ந்தே செய்யலாம்...
தலைப்பால் ஏமாற்றம் மிஞ்சியது நிஜம்
ஜேக் & ஜில் : ம்ம்.. அப்பன்னா யாராச்சும் 2 பேரு சண்டை போட்டுக்கிட்டா உங்களுக்கு எல்லாம் ஜாலி ??? இல்லன்னா ஏமாத்தமா போது... என்ன உலமடா இது ?! :))))
என்மீதான உங்கள் மதிப்புக்கு மிக்க நன்றி... நான் ஒரு பர்சனல் விஷயமாக பெங்களூரில் இருக்கின்றேன்.. ஊரில் இருந்தால் நிச்சய்ம் வருவேன்..
நீங்கள் போய்விட்டு வந்து உண்மைகதையை சொல்லுங்கள் நான் நிச்சயம் எழுதுகின்றேன்.
முதன் முதலில் தனிநபராக மீனவர்கள் பிரச்சனை பற்றி பிளாக்கில் எழுதியவன் என்ற முறையிலும் நீங்கள் செல்லும் காரியம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.
ஆகா கவிதா, தலைப்பை பார்த்து பயந்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன். ஹா ஹா ஹா... கண்டிப்பாக வருகின்றேன். நல்லது நடந்தா எல்லாருக்கும் மன நிம்மதி தானே!!!
ஆகா கவிதா, மயிலாடுதுறை சிவா பழம்பெரும் பதிவர்ங்க! 7 வருஷமா பதிவு எழுதிகிட்டு இருக்காரு.
Post a Comment