எங்க ஆயா, "ஆடு, மாடு மாதிரி இந்த பொண்ணு கீரையை சாப்பிடுது, இதுக்கு விருந்துன்னா கீரை செய்துவச்சா போதும் போலருக்கே.." ன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு கீரையை சாப்பிடுவேன். :) எங்க வீட்டு சமையலில் ஸ்பெஷல் உணவு "கீரை" தான். ஆயாவிடம் வளர்ந்ததாலோ என்னவோ, கீரையின் அனைத்து வகைகளும் அவங்க செய்துக்கொடுத்து சாப்பிட்டு இருக்கேன். அதில் சிலவற்றை எழுதியிருக்கேன்.
1. கீரை பருப்பு கடைசல் :
தேவையானப்பொருட்கள் :
1. துவரம் பருப்பு : 100 கி
2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை - இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு.
3. வெங்காயம் -1
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - சிறிது வடவம் & பெருங்காயம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை : கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது. துவரம்பருப்பை மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கடைசியாக வடவம் + பெருங்காயம் தாளித்துக்கொட்டி அதையும் லேசாக கடைந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
2. சிறுக்கீரைக்கு மட்டும் பைத்தம் பருப்பு சேர்த்து , மேற்சொன்ன அதே முறையில் செய்ய வேண்டும்.
3. கீரைப்பொரியல் : முளைக்கீரை தவிர மற்ற கீரைவகைகளை பொரியல் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள் :
1. கீரை : ஒரு கட்டு
2. கடுகு : 1/4 ஸ்பூன்
3. உளத்தம்பருப்பு : 1/2 ஸ்பூன்
4. காய்ந்தமிளகாய் : 2
5. துவரம் பருப்பு / பைத்தம்பருப்பு : ஒரு பிடி
6. தேங்காய் துருவல் : சிறிது
7. எண்ணெய் : தாளிக்க
8. உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை : கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பருப்பை ஒன்றும் பாதியுமாக வேகவைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், உளத்தப்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய் போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி சிறுத்தீயில் வைத்து மூடவும். 2-3 நிமிடத்தில் கீரை வதங்கிவிடும். பருப்பும், உப்பும் சேர்த்து நீர் நன்கு வடியுமளவு வதங்கியவுடன், கடைசியாக தேங்காய் துருவலைக்கொட்டி இறக்கவும். அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை பொரியல் ரொம்பவே ருசியாக இருக்கும். பருப்பு சேர்க்காமல் வெறும் தேங்காய்துருவல் சேர்த்தும் செய்யலாம். விரும்புவர்கள் வெங்காயம்,பூண்டும் சேர்க்கலாம். தாளிக்கும் போதே இவற்றையும் போட்டு வதக்கி லேசாக தண்ணீர்விட்டு வெங்காயம் வெந்தவுடன் கீரையை சேர்த்து செய்யவேண்டும்.
4. கீரைக்கூட்டு : முளைக்கீரை & கீரைத்தண்டில் மாத்திரமே கூட்டு செய்யமுடியும். மற்றக்கீரைகளுக்கு கூட்டு பொருந்தாது.
தேவையானப்பொருட்கள் :
1. கீரைத்தண்டு, முளைக்கீரை இதில் ஏதாவது ஒன்று
2. கடலைப்பருப்பு : 100கி
3. வெங்காயம் : 1
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - கடுகு, சீரகம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை : பருப்பை பூண்டு, மஞ்சள்பொடி போட்டு வேகவைத்து, அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கியக்கீரையை சேர்த்து நன்கு வெந்தவுடன் , கடுகு, சீரகம் தாளித்துக்கொட்டி கடைந்து பரிமாறலாம்.
5. முளைக்கீரை பூண்டு கடைசல் :
தேவையானப்பொருட்கள் :
1. முளைக்கீரை
2. பூண்டு : 10 பல்
3. பச்சைமிளகாய் : 2
4. வடவம் : சிறிது
5. பெருங்காயம் : சிறிது
6. சீரகம் : 1 ஸ்பூன்
7. எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பூண்டு நனையும் அளவு தண்ணீர் விட்டு, அதில் சீரகத்தை சேர்த்து வேகவைக்கவும். கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை நீள் வாட்டில் நறுக்கி, பூண்டு வெந்தவுடன் அதில் கொட்டி வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் கடைசியில் உப்பு சேர்த்து கலக்கி 1 நிமிடம் வைத்து, வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, சட்டியில் கொட்டி நன்கு மசித்துக் கடைந்து பரிமாறவும்.
6. கீரை புளி கடைசல் : அரைக்கீரையில் மட்டும் இதை செய்யலாம்.
தேவையானப்பொருட்கள் :
1. அரைக்கீரை
2. புளி : 1/2 எலுமிச்சை அளவு
3. பச்சைமிளகாய் : 2
4. வெங்காயம் : 1
5. வடவம் & பெருங்காயம் சிறிது
6. எண்ணெய் & உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை : அரைக்கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து சிறுத்தீயில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் புளியை க்கரைத்துவிட்டு (கெட்டியாக கரைக்கவேண்டும்) வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், சட்டியில் கொட்டி நன்கு கடையவும்.
7. கீரை சாம்பார் : முன்னரே எழுதியிருக்கேன் இங்கு செல்லவும். அரைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார் ருசியாக இருக்கும். மற்றக்கீரைகள் சாம்பாருக்கு பொருத்தமாக இருக்காது.
8. இவற்றைத்தவிர மருத்துவ குணம் வாய்ந்த முடக்கத்தான், தூதுளை, வல்லாரை, பிரண்டை கீரை வகைகளின் செய்முறையைத் தனியாக எழுதுகிறேன்.
அணில்குட்டி : எங்க... புளிக்கடைசல் ஃபோட்டோ மிஸ்ஸிங்....?!
பீட்டர்தாத்ஸ் : Cooking is like love. It should be entered into with abandon or not at all.

11 - பார்வையிட்டவர்கள்:
கீரை எனக்கும் ரொம்ப பிடிக்கும்... வாரம் ஒரு முறை இங்கு வெந்தயக்கீரை வாங்கி வைத்து சாப்பிடுவேன்...
படத்தைப் பார்க்கும்போதே சாப்பிடத்தோணுது
@சே.குமார் : வெந்தய்க்கீரை மறந்துட்டேன். உங்க பின்னூட்டம் பார்த்து இப்பதான் சேர்த்தேன். நன்றி :)
@க.க : :)) நன்றி.
இந்த பதிவு கடைச்சலும் நல்ல இருக்கு
@malar Balan : நன்றி
கீரைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் இருக்கும்.. ஆனால் உங்களைப் போல் இந்தக் கீரையில் இதுதான் என்றில்லாமல் எனக்கு என்ன செய்ய விருப்பமோ அதைச் செய்வேன்... இனி உங்கள் பதிவின் படி முயல்கிறேன்..நன்றி
கீரைக் கடைசல் மிக அருமை.
@எழில் : ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு ருசி இருக்கில்லையா அதனால்,கீரையை அதன் தன்மைக்கு ஏற்றவாறு சமைத்தால், ருசியாக இருக்கும். :)
நன்றி.
@ கோமதி அரசு : நன்றிம்மா.. :)
Photos super.
@ஓலை : நன்றி.. :)
வாரத்தில் இரண்டு நாளும் இதே...
செய்முறைக்கு நன்றி...
Post a Comment