Left to Right -
=> முட்டையில் டிசைன்ஸ் வரைந்தது.. இது இணையத்தில் ஏதையோ தேடும் போது கிடைத்ததைப்பார்த்து செய்தது....
=> ஆபிஸ் வீடுன்னு பாரபட்சமில்லாமல், கரண்டு இல்லனாலும், வேல இல்லானாலும் செய்யற வேல வரையறது.. கற்பனையாகவும் வரைவதுண்டு, இம்ரஸ் ஆகியும் எதையாவது பார்த்து வரைவேன். .ஆனா..ஒரு சில படங்களை தவிர.. அது அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.. . இதில் இருக்கும் பெண் "ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!
=> பழைய டைரி பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த பேப்பர் கிடைச்சது. அகமதாபாத் நகரில் இருக்கும் போது, அந்த நகரைப்பற்றி எழுதி வைத்தது.. அடிக்கடி எழுதியததால், கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு.. .. இப்ப இப்படி எழுத வரலைங்கறது... எனக்கே வருத்தமா இருக்கு..
=> பென்சில் ஸ்கெட்ச் மட்டுமே செய்ய வரும்.. கலரிங் செய்தால்.. ரொம்ப சொதப்பலாக போய் முடியும். ..வாட்டர் கலரிங்கில் முயற்சி செய்த பூத்தொட்டி படம்....
=> மண் பாண்டாங்களில் டிசைன் வரைய ரொம்ப பிடிக்கும்.. .நவீன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி சிலவற்றை உடைத்தப்பிறகு, செய்யறதை குறைச்சிட்டேன்.. செய்து வைப்பதைவிட, அதை பாதுகாப்பது தான் பெரிய விசயமாக இருக்கு.
=> பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன். ஆரணியில் இருக்கும் தோழி, சாதாரணா பட்டுப்புடவை விலையில், ஸ்டோன் ஒர்க் செய்து 3000 - 5000 ரூ வரை அதிகமாக வைத்து விற்கிறார்கள் என்று சொல்லவும், அப்படி என்னதான் இருக்கு இதில் என செய்து பார்த்தேன். ஒன்னும் கஷ்டமில்ல, ரொம்ப ஈசியாத்தான் இருந்தது. பார்க்க அழகாகவும், ஆடம்பரத் தோற்றமும் தருகிறது.
****************
=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..A perfect Family - இவர்களின் உடை எப்பவுமே மாறாது போல. மூவருமே அவர்களை பார்த்ததும், அவசர அவசரமாக, கையில் கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள்... :)
=> லைவ் நிகழ்ச்சிகள் போகும் போது, பிரபலங்களை பார்ப்பதில் ஒரு சந்தோஷம், அதே சமயம், அவர்கள் நடுநடுவே சொல்லும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. பாலுஜி, நடித்து, இசைஅமைத்து, சிகரம் படத்தில் பாடிய பாடல் சிலவற்றை சொல்லும் போது, எதுவுமே என் சுயமில்லை, அங்க இங்கன்னு எடுத்து த்தான் இசை அமைத்தேன்னு சொன்னாங்க. :). இதற்குமே ஒரு தைரியம் வேணும். இப்படி பல நிகழ்வுகளை சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலில் சென்ற லைவ் நிகழ்ச்சியும் இதுவே. (கடைசியும் கூடன்னு நினைக்கிறேன்.)
அணில் குட்டி : ஏதேதோ எழுதியிருக்காங்க, எல்லாம் சுயப்புராணமா இருக்கு... .. மீ ..தி ஃப்லீங்.. செம போர் யா.... ... சோ.. க்யுட் திஸ் பதிவு யா... ! பீட்டரூ... நீ தத்துவத்த எடுத்து வுடு...
11 - பார்வையிட்டவர்கள்:
:))
நேத்து ஹஸ் முகத்தை வரைய ட்ரை செய்தேன்.. சும்மாரா வந்தது..என்னை மாதிரி இல்லைன்னு சொன்னாங்க.. அதனால் என்ன உக்காரவச்சி வரைஞ்சோம்ல..
எல்லா படத்தையும் தனித்தனியாக போட்டு பயமுறுத்தமால் ஒன்னாக போட்டிங்க பாருங்க செம தூள் ;-))
ஆமா அது என்ன பெருச்சாளி ரெண்டு காலை தூக்கிட்டு நிக்குனுது...எந்த ஊர்ல இருக்கு அது !? ;-))
\\அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.\\
ஒருவகையில நல்லது தான் ;-))
\\"ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!\\
இதுக்கு எல்லாம் செலவு செய்ய முடியாது..நீங்களே செய்துக்கோங்க ;-)
\\எனக்கே வருத்தமா இருக்கு..\\
எங்களுக்கு சந்தோஷம் தாங்கல ;-)
@ முத்து... சரியா இல்லையேன்னு ' ஒரு கில்டி ஃபீலிங்ஸ் இருக்குமில்ல...அதான் இது.. :))
/எல்லா படத்தையும் தனித்தனியாக போட்டு பயமுறுத்தமால் ஒன்னாக போட்டிங்க பாருங்க செம தூள் ;-))//
ஆவ்வ்..ரெம்ப புகழக்கூடாது.. :)
//ஆமா அது என்ன பெருச்சாளி ரெண்டு காலை தூக்கிட்டு நிக்குனுது...எந்த ஊர்ல இருக்கு அது !? ;-))//
மாம்ஸ் வேற மாதிரி கேட்டாரு.. அதுக்கு பாப்பா வெளியில தானே இருக்கும்.. இப்ப உள்ள இருக்கா?! :))
\\"ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!\\
இதுக்கு எல்லாம் செலவு செய்ய முடியாது..நீங்களே செய்துக்கோங்க ;-)//
சே..சே.. வலிக்கும்.. ! :))
\\
எங்களுக்கு சந்தோஷம் தாங்கல ;-) //
சந்தோஓஓஓஓஓஓஓஓஒசமா இருங்க... (big fm பாலாஜி மாதிரி படிக்கனும்) :))
நல்ல அமைதியான மூட்ல இருந்தா எதையாவது பார்த்து வரைவேன். முகங்களை வரைவது நமக்கு வராது.
அந்த முட்டைல செய்த டிஸைன் அழகா இருக்கு.
//பெண் "ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!//
No, no. Never. You are a sweet friend. I'll just inform Sharmila Tagore to visit this blog. Rest at her wish!! :-))))))
//பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன்//
Any idea of JV? :-))))
@ஹாலிவுட் ரசிகன் : நன்றி
@ ஹூசைனம்மா : //I'll just inform Sharmila Tagore to visit this blog. Rest at her wish!! :-))))))// ஒருத்தங்க மேல கொலவெறி இருக்க வேண்டியது தான்..அதுக்குன்னு இப்படியா?! :))
//Any idea of JV? :-))))// JV ???
//=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..//
தெவமகன் படத்தில் இப்படித்தான் அப்பா சிவாஜியைப் போலவே மூத்த பிள்ளை சிவாஜியும் கைவிரலால் சுந்தரராஜனை சுடுவது போல பாவனை காட்டுவார். அதிலும் அவர் அப்பா சிவாஜியை கூட இருந்து பார்த்ததே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ராகவன் சாரி : கமெண்டுல கலக்கறீங்க போங்க.. :)))
பள்ளிக்கூடத்தில படிக்கற வரைக்கும் தொடர்ந்து எழுதிட்டு இருந்ததால கையெழுத்து நல்லா இருக்கும். இப்போவெல்லாம் பிரிண்ட் அவுட்தானே எல்லாத்துக்கும்.
// சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம். //
நிஜம்தாங்க. இந்த விஷயத்தை அனுபவிக்கும்போதுதான் தெரியும். ரொம்ப ரொம்ப சந்தோசம் தரக்கூடிய விஷயம்னு.
// அவசர அவசரமாக, கையில் கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள். //
இவங்கனு இல்லை. போட்டோ எடுக்கும்போது எல்லோருக்கும் அனிச்சையா ஆடாம அசையாம போஸ் கொடுக்க தோனிடுது.
முகில்.. :)) நன்றி
Post a Comment