திருமணம் ஆகாதப்பெண்களும் அணியக்கூடியது தான் கட்டைவிரல் மெட்டி. எத்தனைப்பேர் இதனை பார்த்திருக்கிறார்கள் / பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் பல வருடங்கள் வீட்டில் இருக்கும் போது மட்டும் அணிந்து இருக்கிறேன். ஆண்டு விடுமுறைகளில் முழுநாளும், விஷேஷ நாட்கள், திருமணங்கள் என இந்த மெட்டியை அணிந்துக்கொள்ள பல காரணங்கள் இருந்தன.
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும் )
ஆயா, இரண்டு டிசைனில் என் கால் கட்டைவிரல் அளவிற்கு மெட்டி செய்து வைத்திருந்தார்கள். படத்தில் உள்ளது போலவே இருக்கும். தீ விபத்தில் அழிந்துவிட்டதால், வரைந்திருக்கிறேன். மேல் புறம் நடுவில் 5-6 முத்துக்கள் கொண்ட சலங்கை ஒன்று இருக்கும். கீழ்பகுதி தட்டையாக செப்பு தகட்டில் செய்து இருப்பார்கள். நடக்கும் போது தேய்மானம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மற்ற பகுதியெல்லாம் வெள்ளியால் செய்யப்பட்டு இருக்கும். நாம் சாதாரணமாக அணியும் மெட்டியைப்போல இல்லாது, பெரியதாக கட்டைவிரல் உள்ளே போகக்கூடியதாக இருக்கும். திருமணத்தன்றும், மெட்டிவிரலில் மெட்டி வருவதற்கு முன் அதற்கு முன் விரலில் இந்த மெட்டியை அணிந்திருந்தேன். :).
இதனை எங்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் பார்த்தது இல்லை. என் காலில் இருப்பதை பார்த்து அத்தை மகள் கேட்பாள், அவளுக்கு டிசைன் கம்மியாக இருப்பதை மட்டும் கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். வீட்டிற்கு போவதற்கு முன், கவனமாக அதை திருப்பி வாங்காமல் அனுப்ப மாட்டேன். சில சமயம் அதற்காக அழுதும் கூட இருக்கிறாள். அவளுக்கு மேல் அடம் பிடிப்பதில் நான் 'மன்னி' என்பதால், என்னிடம் வம்பு வேண்டாம் என்று, அவளை சமாதானம் செய்து, ஆயா, மெட்டியை வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த அல்லது என்னை கவர்ந்த வேறு சில நகைகள் நத்து'ம், புல்லாக்கு'ம். எப்போதுமே நகைகள் அணிந்துக்கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு ஆர்வம் இல்லையென்றாலும் ஆயா அத்தனை சுலபமாக என்னை விட்டுவிடவில்லை. எனக்கு பிடிக்கிறதோ இல்லை, எந்நேரமும் ஏதோ ஒரு அலங்காரம் செய்துக்கொண்டே இருப்பார்கள். அதில் ரொம்பவே எங்க வீட்டில் கஷ்டப்படறவங்க "ஆண்டாள்" தான்.. :). எத்தனை முறை இந்த ஆண்டாள் வேஷம் போட்டாகிவிட்டது. வீட்டில் ரெடிமேடாக ஆண்டாள் அலங்காரத்திற்கான 'பின் தலை கொண்டையும், சைட் கொண்டையும் ' இருக்கும். ஒரு பச்சக்கிளி பொம்மை வேறு! என் திருமணத்திற்கு, முதல் நலங்கின் போதும் ஆண்டாளாக நிற்கவைத்தார்கள். பல்வேறு வயதுகளில் ஆண்டாள் வேஷம் போட்டு இருந்தாலும், திருமணத்திற்கு முன் போட்ட வேஷத்தில் ஆண்டாள் அழகாகவே இருந்தாள்.
திருமணம் வரும் வரையில், நத்து, புல்லாக்கின் மேல் எனக்கு ஆசை இருக்குமென ஆயாவிற்கே தெரியவில்லை. திருமணத்தன்று, மணப்பெண் அலங்கார நகைகளை நானே தேர்தெடுத்தேன். எதையும் இது வேண்டுமென கேட்காத நான், இந்த நகைகள் தான் வேண்டும். வேறு அணியமாட்டேன் என்று சொன்னது, ஆயாவிற்கு வியப்பளித்தது. ஆயா சொல்லிய எதையும் அணிந்துக் கொள்ளவில்லை.
சிகப்புக்கலர் கல் நகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லாமே வெள்ளைக்கல் வைத்த நகைகள்.
நத்து, புல்லாக்கு ஏன் எனக்கு பிடிக்கும் என்ற காரணம் தெரியவில்லை. எங்க வீட்டு பெண் குழந்தைகளில் நான் மட்டுமே நத்து, புல்லாக்கு வேண்டுமென கேட்டு வாங்கி ப்போட்டுக்கொண்டு மற்றவர்களை எரிச்சல் படுத்தினேன். . புல்லாக்கு சரியாக மேல் உதட்டில் மேல் வந்து விழும். பேசவும், சாப்பிடவும் நிச்சயம் கஷ்டமாக இருக்கும். குறிப்பாக திருமணத்தன்று பால் பழம் கொடுக்கும் போது, யாராவது ஒருவர். புல்லாக்கை மேல் தூக்கி பிடித்து, குடிக்க வைத்தார்கள். நகைகளை அவிழ்க்கக்கூடாது என்பதால், அது சற்று சங்கடமாகவே இருந்தது. ஆனால் அதை அணியும் போது தனி அழகு பெண்ணின் முகத்திற்கு வருகிறதென்பதை மறுக்கமுடியாது.
இரண்டுமே திருகு அல்லாது பிரஸ்ஸிங் டைப் நகைகள். மூக்கிலிருந்து நழுவி விடாமல் இருக்க மிகவும் அழுத்திவிடுவார்கள், நிச்சயம் வலி இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி அணிந்துக்கொள்ள நினைப்பது, அந்த ஒரு நாள் தவிர்த்து, அந்த நகைகள் அணிய சந்தர்ப்பம் கிடைக்காது என்பதே. !. அதற்கு பிறகு , நத்து, புல்லாக்கு எப்பவுமே அணியவில்லை. கட்டைவிரல் மெட்டியும் கூட....
அணில் குட்டி : இப்ப நத்து, புல்லாக்கு, வங்கி, ஒட்டியானம்னு போட்டு ப்பார்த்தேன்... ஹய்யோ... ஹய்யோஓஓஓஒ..... :))))))))))...
பீட்டர் தாத்ஸ் : One men's memory is like a box where a man should mingle his jewels with his old shoes.

.
பொன்ஸ் : உங்களுக்காக !! :)
படங்கள் : நன்றி கூகுல்.
19 - பார்வையிட்டவர்கள்:
//என் காலில் இருப்பதை பார்த்து அத்தை மகள் கேட்பாள், அவளுக்கு டிசைன் கம்மியாக இருப்பதை மட்டும் கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். வீட்டிற்கு போவதற்கு முன், கவனமாக அதை திருப்பி வாங்காமல் அனுப்ப மாட்டேன். சில சமயம் அதற்காக அழுதும் கூட இருக்கிறாள். அவளுக்கு மேல் அடம் பிடிப்பதில் நான் 'மன்னி' என்பதால், என்னிடம் வம்பு வேண்டாம் என்று, அவளை சமாதானம் செய்து, ஆயா, மெட்டியை வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள்.//
:)))))
// பல்வேறு வயதுகளில் ஆண்டாள் வேஷம் போட்டு இருந்தாலும், திருமணத்திற்கு முன் போட்ட வேஷத்தில் ஆண்டாள் அழகாகவே இருந்தாள்.//
உங்கள் பாசிடிவ் அப்ரோச் பிரமாதம். அதுவும் மணப்பெண்ணின் மகிழ்ச்சியே அவளது அழகைக் கூட்டிக் காட்டும் என்பதும் உண்மைதானே.
//புல்லாக்கு சரியாக மேல் உதட்டில் மேல் வந்து விழும்.//
ஒரு கண்ணியை குறைத்திருந்தால் அவ்வளவு நீளம் வந்திருக்காதுதானே.
என் வீட்டம்மாவிடம் இது பற்றி கேட்டபோது அவர் தான் அதை பார்த்ததேயில்லை எனக் கூறி விட்டார். என் மைத்துனியோ செட்டியார் வீடுகளில் ஆணுக்கு திருமணத்தின்போது அதை போட்டு விடுவார்கள் என்பதை தான் பார்த்துள்ளதாகக் கூறினார். ஆனால் பெண்களுகூ அதை போடுவது குறித்து அவருக்கும் தெரியவில்லை.
எது எப்படியாயினும் ஒரு புது தகவல் கொடுத்துள்ளீர்கள், நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ ராகவன் சார் -
//அதுவும் மணப்பெண்ணின் மகிழ்ச்சியே அவளது அழகைக் கூட்டிக் காட்டும் என்பதும் உண்மைதானே. //
அதையே மறைமுகமாக சொன்னேன். :)
//ஒரு கண்ணியை குறைத்திருந்தால் அவ்வளவு நீளம் வந்திருக்காதுதானே.//
ம்ம்ம்ம்ம்....இருங்க படத்தைப் பார்க்கிறேன். ... ஒரே ஒரு கண்ணித்தான் அதில் இருக்கு.:), எங்கிருந்து குறைக்க? அதன் வடிவமைப்பே.. அப்படித்தான் போல... உதட்டின் மேல் வந்து தான் தொங்கும் ! :)
//என் வீட்டம்மாவிடம் இது பற்றி கேட்டபோது அவர் தான் அதை பார்த்ததேயில்லை எனக் கூறி விட்டார். என் மைத்துனியோ செட்டியார் வீடுகளில் ஆணுக்கு திருமணத்தின்போது அதை போட்டு விடுவார்கள் என்பதை தான் பார்த்துள்ளதாகக் கூறினார்.//
கட்டைவிரல் மெட்டியை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். ஆண்களுக்கும் திருமணத்தன்று மெட்டிப்போடுவார்கள். அதுவும் மெட்டி விரலில் தான் இருக்குமே ஒழிய கட்டைவிரலில் இருக்காது. அன்றுமட்டும் போட்டு, கழட்டிவிடுவார்கள். தொடர்ந்து போடுவதில்லை.
பெண்ணின் சகோதரர் இந்த மெட்டியை மாப்பிள்ளைக்கு அணிவிப்பார். மணப்பந்தல் விட்டு இறங்கியதுமே மாப்பிள்ளைகள் இதை கழட்டிவிடுவதுண்டு. :)
//பெண்ணின் சகோதரர் இந்த மெட்டியை மாப்பிள்ளைக்கு அணிவிப்பார். மணப்பந்தல் விட்டு இறங்கியதுமே மாப்பிள்ளைகள் இதை கழட்டிவிடுவதுண்டு. :)//
பிரபுவைத் தவிர. அதாவது ஒரு படத்தில் அவர் நதியாவுக்கு கணவராக வருவார். இருவருமே மனவேற்றுமையில் பிரிந்து வாழ்ந்தாலும், பிரபு தன் கால்மெட்டியை கழட்டவே இல்லை. அதைப் பார்த்து நதியாவும் கடைசியில் ஃபீலிங்ஸ்லாம் ஆவார்.
அது விஷால் நடித்த படமான தாமிரபரணி என நினைக்கிறேன். கஞ்சா கருப்பு அமர்க்களமெல்லாம் செய்வார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார் : :))))))))) சமீபமாக இருந்தாலும்... மிக சமீபகாலமாக இருந்தாலும் அப்டேட்டா இருக்கீங்க.. :). Your Plus ! :)
எனக்கும் இந்த மாதிரி ‘க்ளாஸிக்’ நகைகள் பிடிக்கும். எங்க அம்மாவின் கொண்டைப்பூ, வங்கி (புஜத்தில் போடுவது) எல்லாம் ஆசைஆசையா கல்யாணத்தில் போட்டிருந்தேன். அதுக்கப்புறம் பார்க்க மட்டுமே முடிகிறது!!
ஆமா, புல்லாக்கு என்பது மூக்கில் அணிவதுன்னு புரியுது; ஆனா, நத்துதான் என்னன்னே புரியல?
@ ஹூசைனம்மா : நத்து என்பது மூக்குத்தி போட்டு இருக்கும் அடுத்தப்பக்கத்தில் போடுவது. ஒரு பக்கம் மூக்கித்தி, மற்றொரு பக்கம் நத்து போட்டுக்குவாங்க..
http://www.cinesouth.com/masala/hotnews/new/23062007-1.shtml
லிங்க் க்ளிக்கி பாருங்க - ஷோபனா போட்டு இருக்காங்க..டிசைன் கொஞ்சம் வேறு..
ஆ.. அதுவும் மூக்கிலயா.. எப்படிங்க ரெண்டையும் ஒரே மூக்கில, ஒரே நேரத்துல போட்டுட்டிருந்தீங்க? அபார பொறுமைதான்!!
ஆனா, யோசிச்சுப் பாத்தா, கல்யாணத்தன்னிக்கு மட்டும் நமக்கு (எனக்கு??) கொஞ்சம் பொறுமை வந்துடுது.. நானும் தலையில என்னவெல்லாமோ மாட்டிட்டு உக்காந்திருந்தேன். இப்பம் ஒரு கிளிப் மாட்டக்கூட எரிச்சப் பட்டு, ஆல்டைம் கொண்டைதான்!! :-))))))
//எப்படிங்க ரெண்டையும் ஒரே மூக்கில, ஒரே நேரத்துல போட்டுட்டிருந்தீங்க? //
இப்படி கேட்பீங்கன்னு எதிர்பார்க்கல... :))))!! விருப்பப்பட்டு போட்டதால், யாரிடமும் கோவத்தை காட்டமுடியவில்லை.! :)
அதுமட்டுமா மூக்குத்திய விட்டுட்டீங்க, மூக்கில் மட்டும் 3 :)
கட்டை விரல் மெட்டி பற்றி இப்பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன். மற்ற அணிகளன்கள் பற்றிய தகவல்களையும் தந்தது இப்பதிவு.
;-) அழகாக பகிர்வு ;-)
இந்த கட்டைவிரல் மெட்டி, இங்கே கையின் கட்டைவிரல்ல போட்டுக்கற தம்ப் ரிங்கா இடம் மாறி, இளசுகளின் மத்தியில் பிரபலமாயிருக்கு :-)
கட்டை விரல் மெட்டி பதிவு நல்லாயிருக்கு.
ராகவன் சாரின் கமெண்டும் உங்கள் பதில்களும் பதிவுக்கு அழகு...
@ வியபதி : நன்றி. உங்க பெயர் காரணம் என்ன? ஏதும் அர்த்தம் இருக்கா?
@ கோப்ஸ் : நன்னி
@ அமைதிச்சாரல். : இதே டிசைன்னா? மகராஷ்டிராவில் எங்க இருக்கீங்க?
உங்க கமெண்டு எப்பவும் எனக்கு ஸ்பேன் க்கு போவுது :(
@ குமார்.சே : நன்றிங்க :))
தம்ப் ரிங்கோட டிசைன்னு பார்த்தா பெரூசா ஒண்ணுமில்லை. பட்டையான ப்ளாக் மெட்டல் வளையம். அதுல சின்னச்சின்ன பூக்களோ அல்லது எழுத்துக்களோதான் இருக்கும். நான் இருக்கும் மும்பையில் கல்லூரி இளசுகள்,கல்லூரிக்கு போகப்போற இளசுகள் மத்தியில் ரொம்பவும் பிரபலம் :-))
ஏங்க நத்து புல்லாக்குன்னு கேள்விப்படாத நகையெல்லாம் சொல்றீங்க.. அது போட்டோ போட்டா போதுமா? அதை எங்க போடுறதுன்னு ஒரு போட்டோ போட்டு காட்ட வேண்டாமா?
@ அமைதிச்சாரல் : நன்றி :)
@ பொன்ஸ் : நீங்க கேட்டு ச்சும்மா இருப்போமா.. படம் போட்டாச்சி. ஜஸ்ட் ஃபார் யூ.. ! :)
தங்கம் விக்கிற விலைக்கு இதப் பார்த்து ஆறுதல் அடைஞ்சுக்க சொல்றீங்களா? இல்லை அவிங்க அவிங்க தீபாவளி budget க்கு இலவச அறிவுரைகளா?
Forgot to put the smily on my comment.
@ ஓலை - இது எதுவுமே தங்கம் இல்லைங்க.. அலங்காரத்திற்கு மட்டும்.
//Forgot to put the smily on my comment.//
ஏங்க..? கோச்சிக்கலங்க :)))
Post a Comment