* ஒரு டி-ஷர்ட் எடுத்துத்தர வரீங்களாவென, பஸ் நிறுத்தம் போற வழியில் இருக்கும் நடைப்பாதை கடைக்கு அழைத்தான் அலுவலக ட்ரைவர். நானும், இன்னொரு நண்பருமாக மூவர் சென்றோம், எடுத்துப்பார்த்துக்கொண்டு இருக்கும் போது, நான் அவனைப்பார்க்க, ரூ.100/- க்குள் வேணும் என்றான். தேர்ந்தெடுத்துவிட்டு, கடைக்காரரிடம் விலையை கேட்க 120 என்றார். நான் ரூ.60/- க்கு கொடுங்கன்னு கேட்டது தான், நிமிர்ந்து பார்த்து முறைத்தார். "மேடம் இந்த காலத்தில்(எந்த காலம்? நாங்க என்ன அக்பர் காலத்தில் வாழ்ந்துட்டு இப்ப ஆவியாவா அலையறோம்) 60 ரூபாய் க்கு எல்லாம் டிஷர்ட் விக்கறது இல்லை" என்றார். "அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு என் கூட வாங்க , 60ரூ என்ன 40ரூ க்கு டிஷர்ட் நான் வாங்கித்தரேன்னு கூப்பிட்டேன். (இப்படி எல்லாம் பேசாட்டி, நாயி நம்மை கவ்விடும் நு பெரியவங்க சொல்லி இருக்காங்க.) கடைசியில் பேரம் முடிந்தது ரூ.80 க்கு.
* ஒரு எமகாதகன், நான் பயணம் செய்யும் போது, கைப்பேசியில் பேசறவரை பேசிவிட்டு,"யாரோ பஸ் ல ஃபோன் ல பேசறவங்கள பத்தி, அவங்க ப்ளாக் ல எழுதி இருந்தாங்க, படிச்ச ஞாபகம்” ஃபோனை வச்சிட்டான். :( (ஏன் ஏன் ஏன்.. இனிமே பஸ்ல இருக்கும் போது எமகாதகன் மட்டுமில்ல எவன்/எவள் ஃபோன் வந்தாலும் பேசுவியா? பேசுவியா? பேசுவியா? - )
* வாலி திரைப்படத்திற்கு பிறகு அஜித் மேல் கவனத்தை திருப்பியப்படம் மங்காத்தா எனலாம். த்ரிஷா +அஜித் டூயட் பாடல் படமாக்கப்பட்டவிதம் கவர்ந்தது. ஒரே ஒரு காட்சியில் சில மணித்துளிகள், தொப்பையை இழுத்துப்பிடுத்து அஜித் சட்டையில்லாமல் வருகிறார். விசில் பறக்கிறது. எல்லாரும் சூர்யா ஆகிவிடமுடியுமா?. ”மச்சி ஓபன் தி பாட்டில்” பாடலில் என்னா டான்ஸ்?!! குறிப்பாக அஜித் ஆடும் நடனும் க்ளாஸ் ! தியேட்டரில் லைனாக நின்று அதே மாதிரி ஆடினார்கள். கலக்கல்ஸ்! வீட்டுக்காரரோட சினிமாக்கு போகக்கூடாதுன்னு நினைச்ச பலநேரங்களில் இதுவும் ஒன்று. பாட்டுக்கு நடுவில் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு காட்சியில்....அஜித்..ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஸ்டைலு ! கொஞ்சமா மெலிஞ்சுடுங்களேன்.. இன்னமும் அழகா இருப்பீங்க.
* ஹூஸைனம்மா பதிவுகளை படிக்காமல் விடமாட்டேன், எப்படியும் சேர்த்துவைத்தாவது மொத்தமாக படித்துவிடுவேன். நேற்று ஒரு பதிவில் சூரிய ஒளியில் மின்னும் பாட்டில் அதிலிருந்து கிடைக்கும் ஒளி என மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வெளிச்சம் கிடைக்கும் செய்தியை எழுதி இருந்தார்கள். தேவையான ஒன்றாகப்பட்டது. சுட்டுட்டேன். நன்றி ஹூஸைனம்மா! :).
ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நகரான மனிலாவில், வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது. இதையே, கூரையில் ஒரு துளையிட்டு கண்ணாடி போட்டால் என்ன என்று கேட்கலாம். அப்படிச் செய்தால், அது அந்தத் துளையின் நேரே மட்டும்தான் ஒளிபாய்ச்சும். இந்த ‘பாட்டில் முறை’யிலோ, அறை முழுவதுற்குமாக, 55 வாட்ஸ் அளவு வெளிச்சம் கிடைக்கிறதாம். தண்ணீரில் பாசி பிடிக்காமலிருக்க, நான்கைந்து ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் கலந்துவிட்டால், சுமார் நான்கு வருடங்கள் வரை இந்த ஒற்றை பாட்டில் தொடர்ந்து மங்காமல் வெளிச்சம் தருமாம்!! ஒரே அறைக் கூரையில் நான்கைந்து பாட்டில்களை மாட்டிவிட்டால், வெளிச்ச வெள்ளம்தானாம். ஆஃப்-ஆன் பண்ணும் சிரமமில்லை. மின்சாரக் கட்டணக் கவலையில்லை!!
* மனித உணர்வுகளோடு தொடர்ந்து விளையாடுபவர்களை...............
..... ”செக்” வைத்து தூக்கனும். செக் வைக்க அவர்களே வழி வகுக்கும் வரை காத்திருக்கலாம்/ கண்டிப்பாக வழி வகுப்பார்கள் ! # தெளிவு/அனுபவம்/வாழ்க்கை.
* மறுபடியும் ஆண்களை தொடர்கிறேன். இரு சக்கர வாகனம் ஓட்டுவதும், வேகமும் புதிதல்ல, ஆனால் நெடுந்தொலைவு பயணம், மிக நெரிசலான போக்குவரத்து இருக்கும் வீதிகளில் செல்லும் போது, மிக லாகவமாகவும், வேகமாகவும் வண்டி ஓட்ட ஆண்களை போல பெண்ககளால் முடியாது. அப்படி வண்டி ஓட்டும் ஏதேனும் ஒரு ஆணை பின் தொடர்ந்து, என் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்வது வழக்கம் மட்டுமல்ல, பிடித்தமான விஷயமும் கூட. அந்த ஒருவர், ஒரே ஆளாக இல்லாமல் அவ்வப்போது நடுநடுவில் என்னை முந்திச்செல்லும் யாரோ ஒருவராக இருப்பார். நடுவில் சில ஆண்டுகள் இதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போக.. மீண்டும்...தொடர்கிறேன். இன்னமுமே அவர்களை போன்று ”கட்” கொடுக்க, லாரி/பஸ் டயர் வரை சாய்ந்து வளைந்து செல்வது போன்றவை எல்லாம் செய்யவில்லை. செய்யத்துணியவும் இல்லை. சில்லறை பொறுக்கினால், முதலில் வரும் வார்த்தை “பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா? நீ என்ன ஆம்பளையா?”. சரி விடுங்க...
* மெட்ரோ ரயில் திட்டம் என்னமோ ரொம்பவும் பிடிக்கிறது. சென்னையை சுற்றி மிக அற்புதமான திட்டமாக தெரிகிறது. 2015 க்குள் முடியும் என்று சொல்லுகிறார்கள். அது வரை போக்குவரத்து நெரிசல், பள்ளம் மேடு..சகிப்புத்தன்மை நமக்கு வேண்டும், இல்லையென்றால் மட்டும்..?! :) சென்னைப்போக்குவரத்து புதுசா என்ன?
* அம்மா ஆட்சி - புதிய பச்சைக்கலர் அம்மா படம் போட்ட மாநகர பேரூந்துகளை கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் பார்க்கமுடிந்தது. அர்ஜன்ட்டா ஒரு டவுட்.. அம்மா மாடு, ஆடு எல்லாம் கொடுக்கறாங்களே. .அதுக்கும் பச்சைக்கலர் அடிப்பாங்களா? ! அம்மா வாழ்க. அம்மா நாமம் வாழ்க ! பச்சைக்கலர் பெயின்ட் மேனுஃபேக்சுரர் கோடீஸ்வரர் ஆக !கோடிஸ்வரர் கம்பெனி யில் எனக்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கும்படி ஒரு வேலை கிடைக்க. அட, பச்சைக்கலர் நம் வாழ்வியல்பை எங்கோ தூக்கி செல்கிறதே?!
* அலுவலகம் விட்டு வரும் போது மட்டுமே ஏடிஎம் போக நேரம் இருக்கும். 8 - 8.30 மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பும் போது அப்படியே வேளச்சேரி ஐசிஐசிஐ வங்கிக்கு செல்லுவேன். நான் செல்லும் போதெல்லாம் சொல்லிவைத்தது போல ஏடிஎம் மூடி இருக்கும்.. பணம் நிரப்ப ஒவ்வொரு முறையும் எப்படியும் 20 நிமிஷம் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு முன் , பணம் தீர்ந்துப்போனால் மட்டுமே வந்து நிரப்புவார்கள் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தினப்படி காலையிலிருந்து இரவு வரை பணத்தோடு சென்னையை சுற்றும் டீம் இருப்பதாக புரிந்துக்கொண்டேன். # செக்கியூரிட்டி கொடுத்த தகவல். இது வேலைக்கு ஆகாது என, அப்படியே பொடி நடையாக வந்து ஹெச்.பி பெட்ரோல் பங்க், பாங்க் ஆஃப் பரோடா வில் பணம் எடுத்துக்கொள்வேன்.
* தமிழ்நாட்டில் குல்ஃபி சாப்பிடுவது நின்று போய் பல வருடங்கள் ஆகின்றன. ரொம்பவும் மோசமான பல அனுபவங்களே காரணம்.:(. பைபாஸ் ஹெச்.பி பெட்ரோல் பங்க்; க்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில், பஞ்சாப் குல்ஃபி (வண்டி) கடை ஒன்றில் குல்ஃபி ரொம்ப நல்லா இருக்கு. # உயிரை பணையம் வைத்து கண்டுப்பிடிச்சது.
* ரவுண்டு க்கு முதல்முதலாக சென்ற வாரம் ஒரு கருப்பு பேன்ட் எடுத்தோம். நேற்று போட்டுக்காண்பித்தான், என் குழந்தைக்கு கருப்பு கலர் பேன்ட் ரொம்பவே நன்றாக இருந்தது. அகம் மகிழ்ந்து அவனை சுற்றி சுற்றி வந்து நிறைய போட்டோ எடுத்தேன். கண்ணு வைக்கிறோமே என என் வீட்டுக்காரரிடம் "குழந்தைக்கு அம்மா கண்ணுப்படும் சுத்திப்போடுங்ன்னு சொன்னது தான். "நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு ......... ....................... " வேணாம் வலிக்குது !! இத்தோட நிறுத்திக்குவோம் !!
அணில்குட்டி : கவி= //நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு// உங்களுக்குள்ள இவ்ளோ பேரா...?! சொல்லவே இல்ல.. சரி கடைசியா ..சுத்திப்போட்டுட்டு, உங்க முகத்தில தான் 3 தரம் தூ தூ தூ ன்னு துப்பினாங்கன்னு சொல்லவே இல்ல... மறந்துட்டீங்களாஆஆஆ?????????
பீட்டர் தாத்ஸ் : Sometimes, Your blog is your unedited version of yourself
Images :-

19 - பார்வையிட்டவர்கள்:
//ஹூஸைனம்மா பதிவுகளை படிக்காமல் விடமாட்டேன், எப்படியும் சேர்த்துவைத்தாவது மொத்தமாக படித்துவிடுவேன்.//
இதுக்குமேலே என்னாலே படிக்க முடியலை... கண்ணில தண்ணி வந்து மறைச்சிடுச்சு... ஆ...ஆ..ஆ...
நிஜமாவே ரொம்ப சந்தோஷமாருக்குப்பா...
//இதுக்குமேலே என்னாலே படிக்க முடியலை... கண்ணில தண்ணி வந்து மறைச்சிடுச்சு... ஆ...ஆ..ஆ... //
Warm hug Dear ! :)
இதுக்கேவா?? இப்ப என்ன செய்துட்டேன்.. பதிவை த்தானே படிச்சேன்.. :))
ரொம்ப சந்தோஷப்படாதீங்க. .ஏதாவது ஒரு பதிவில். .சேர்த்துவச்சி திட்டிடறேன்.. :)))
//சேத்துவச்சு திட்டிடுறேன்..//
அவ்வ்... நானாத்தான் வாயக்கொடுத்துட்டேனா.. சரி, பாராட்டுறது பதிவில, திட்டறது மட்டும் மெயில்ல, சரியா? ;-)))))
//அஜித்..ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஸ்டைலு!//
அஜீத் அறிமுகமான காலத்தில்தான் அரவிந்த்சாமியும் அறிமுகம். ஒருமுறை தோழிகளிடையே அழகு அஜீத்தா, அரவிந்த்சாமியான்னு செம டிஸ்கஷன்.. நான் கலந்துக்கலை அதில. ஏன்னா, எனக்கு அப்பத்தான் நிச்சயம் ஆகிருந்துது.. ஹி..ஹி.. கல்யாணக்கனவு..
பச்சைக்கலர் - தமிழ்நாடுக்கு ‘கலர்’ பாக்கியம் எப்பவும் உண்டுபோல. பச்சமஞ்சசிவப்புத் தமிழன்.
வீடு திரும்ப தினமும் 8-8.30 ஆகிடுமா?
//ரவுண்டு க்கு முதல்முதலாக சென்ற வாரம் ஒரு கருப்பு பேன்ட் எடுத்தோம்//
”ரவுண்டு”ங்கிறது உங்க பையன் செல்லப்பேரா? (கிண்டல் இல்லீங்க..)
//வாயக்கொடுத்துட்டேனா.. சரி, பாராட்டுறது பதிவில, திட்டறது மட்டும் மெயில்ல, சரியா? ;-)))))
//
ம்ம்ம்ம்ம் டீல்ல்ல் !
Delete Comment From: பார்வைகள்
Blogger கவிதா | Kavitha said...
//வீடு திரும்ப தினமும் 8-8.30 ஆகிடுமா? //
ஆமா ஆகிடுது :((
//”ரவுண்டு”ங்கிறது உங்க பையன் செல்லப்பேரா? (கிண்டல் இல்லீங்க..)//
செல்லப்பெயர் பெரிய லிஸ்ட் இருக்கு, அதில் ரவுண்டு தான் முதலிடம். அவன் தலை ரொம்ப ரவுண்டா அழகா இருக்கும். அப்ப வைத்தது, கன்ட்னியூ ஆகுது. திருநாமம் - நவீன். :)
நல்லா இருக்க்குதே இந்த கதம்பம்!
//வண்டி ஓட்டும் ஏதேனும் ஒரு ஆணை பின் தொடர்ந்து, என் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்வது வழக்கம்//
என் குழந்தைகள்கிட்டயும் இதத்தான் சொல்லி வெச்சிருக்கேன். முக்கியமா, ட்ராபிக் நெரிசல்ல மாட்டிக்கிட்டா, முன்னாடி போற டூவீலரை அப்படியே தொடர்ந்து போயிட்டா ஈஸியா வந்துடலாமே :-)
//அர்ஜன்ட்டா ஒரு டவுட்.. அம்மா மாடு, ஆடு எல்லாம் கொடுக்கறாங்களே. அதுக்கும் பச்சைக்கலர் அடிப்பாங்களா? //
ஆமா, அடுத்தபடியா அதுக்கு இலவச தீவனப்புல் கொடுக்கறதாவும் ஐடியா இருக்காம். அதுக்கும் பச்சைக்கலர் பெயிண்ட் அடிச்சுக் கொடுக்கப் போறாங்களாம் ;-)
@ அமைதிச்சாரல் : //அடுத்தபடியா அதுக்கு இலவச தீவனப்புல்//
புல்' லே பச்சையாத்தானே இருக்கும் , அப்புறம் ஏன் பெயின்ட் வேற ?
உங்கக்கிட்டவும் ஒரு டவுட் - "சாரல்" என்பது அமைதியாத்தானே இருக்கும்.. அது என்ன அமைதிச்சாரல்?
@ அபிஅப்பா : நன்னி..
//லாவகமாகவும் //
லாகவமாகவும்
லகு என்ற வார்த்தையில் இருந்து வந்தது லாகவம். லாவகம் இல்லை
கேவிஆர் : //லகு என்ற வார்த்தையில் இருந்து வந்தது லாகவம். லாவகம் இல்லை//
முதல் முறையாக கேள்விப்படறேன். லாவகம் னு தான் காலம் காலமாக சொல்றேன், எழுதறேன்.. சரி வாத்தியார் நீங்க. .
நீங்க சொன்னா சரியா இருக்கும்னு நம்பிக்கையில் மாத்திக்கறேன் :) தாங்க்ஸ் !
பீட்டர் சூப்பரு ;-)
Nice snippets.
மேட்டரெல்லாம் சூப்பருன்னா கடைசியா பீட்டர் அடிச்சது சூப்பரோ சூப்பர்.
//அலுவலகம் விட்டு வரும் போது மட்டுமே ஏடிஎம் போக நேரம் இருக்கும். 8 - 8.30 மணி வாக்கில்...//
இரவில் போய் பணம் எடுப்பது அவ்வளவு பாதுகாப்பானதா? காலையிலேயே சற்று முன்னதாக கிளம்பி பணம் எடுத்து விட்டு அலுவலகம் செல்வது பற்றி யோசித்தீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//புல்' லே பச்சையாத்தானே இருக்கும் , அப்புறம் ஏன் பெயின்ட் வேற ?//
பச்சைப்பெயிண்ட் அடிக்கிறதுன்னு முடிவு செஞ்சாச்சுன்னா, அப்றம் புல்லு எந்தக்கலர்ல இருந்தா என்ன ;-)
@ கோப்ஸ் : தாங்ஸ்
@ ஒலை : தாங்ஸ்
@ சே குமார் : தாங்ஸ்
@ ராகவன் சார் : நாம என்ன லட்சத்திலா எடுக்கப்போறோம். *அதிகபட்சம் 2-4k.
*ஏரியா ரொம்ப பிசியா இருக்கும்
*பகல்ல இல்லைன்னா வேலைக்கு போகும் சமயம் நேரம் இருப்பதே இல்லை. போகும் பரப்பரப்பில் பணம் எடுக்கவேண்டும் என்பதைக்கூட மறந்துபோவேன். வரும் போது தான் எல்லாமே நினைவுக்கு வரும்! :) அத்தோடு எல்லா சமயமும் ஏடிஎம் காலியாகவும் இருக்காது. கியூவில் நின்று எடுக்கும் அளவு காலையில் நேரம் இருக்காது.
//அம்மா மாடு, ஆடு எல்லாம் கொடுக்கறாங்களே. .அதுக்கும் பச்சைக்கலர் அடிப்பாங்களா? ! //
:-)
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html
வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html
Post a Comment