சுயநலமறியாது
சுழலும்
வாழ்க்கையில்
சுகமென்று காண
ஒன்றுமில்லை
இது நியதி !!
எந்நேரமும்
ஏதோ ஒரு
மனிதமுகம்
சுயநலம் காட்டி
கடந்து செல்லுகிறது-
கடக்கமுடியாமல்
கலங்கி
நிற்கும் தருணங்கள்..
என்னை
நானுணரவோ. ?!!
படிப்பினை
பலப்பெற்றும்
எனை
இழக்காமல்
இவ்வாழ்க்கையில் உழன்று -
பெற்றது ......???!!
என்
தலையில் மட்டும்
என்ன
களிமண்ணோ... ?!!
***
அணில் குட்டி : அட.. ! :)))) அம்மணி தல நல்ல வளமாத்தான் இருக்கு.. !
பீட்டர் தாத்ஸ் : We must all suffer from one of two pains: the pain of discipline or the pain of regret. The difference is discipline weighs ounces while regret weighs tons.
படம் நன்றி கூகுல்
.
Subscribe to:
Post Comments (Atom)
14 - பார்வையிட்டவர்கள்:
nice
இரண்டும் அருமை.
\\எந்நேரமும்
ஏதோ ஒரு
மனிதமுகம்
சுயநலம் காட்டி
கடந்து செல்லுகிறது-
கடக்கமுடியாமல்
கலங்கி
நிற்கும் தருணங்கள்..
என்னை
நானுணரவோ. ?!!\\
mm.. aazhamana varigal.
\\என்
தலையில் மட்டும்
என்ன
களிமண்ணோ... ?!! \\
Unmaiyellam ipdi puplicla sollapadathu.
கவிதையும் கவிதைக்கான படமும் அருமை.
கவிதை நல்லாருக்கு .......
சுயநலம் சுழலும் உலகம்தான் கடக்க முடியும் என நம்பிக்கை வைத்தாலே கடந்துவிடலாமே என்ன கவனமாக கடக்க வேண்டும்
ந்நேரமும்
ஏதோ ஒரு
மனிதமுகம்
சுயநலம் காட்டி
கடந்து செல்லுகிறது..
உண்மை...
@ நா.மணிவண்ணன் : நன்றி
@ ராமல்க்ஷ்மி : நன்றி
@ லோகு : நன்றி. :))
@ சே.குமார் : நன்றி
@ தினேஷ்குமார்:.. ம்ம்ம்.. அதெல்லாம் இயற்கையிலேயே இருக்கனும்ங்க இல்லைன்னா கடப்பது என்பது அத்தனை எளிதல்ல :))
@ விஜி : ஏண்டி காப்பி க்கூட ஒழுங்கா பண்ண மாட்டியா நீனு.. :எ: வ விட்டுட்ட.. :))
நல்லா இருக்குங்க.
முதல் பத்தியில் நியதின்னு சொல்வது தான் கொஞ்சம் யோசிக்க வைக்குது. charity செய்யும் நல்ல மனிதர்கள் சுயநலமில்லாமல் தானே செய்கின்றனர். அது கூட அவர்களுக்கு கிடைக்கும் இன்பம் தானே. அந்த இன்பத்தையும் சுயநலம் என்று கருதுகிறீர்களா?
ஆர் யூ ஆல்ரைட்??
\\என்
தலையில் மட்டும்
என்ன
களிமண்ணோ... ?!!\\
"உன்னை யார் அறிவார்...?"
இப்படி வந்தா இன்னும் நல்லாயிருக்கும்ல்ல ;))
தலையில நறுக்குன்னு கொட்டி இது தான் உலகமுன்னு சொன்ன மாதிரி இருக்கு கவி...சின்னதா சொல்லிட்ட ரொம்ப பெரிய விஷயத்தை....
@ சேது - நீங்க சொல்ற விஷயம் வேறங்க.. அதெல்லாம் சைட் டிஷ் மாதிரி.. நான் சொல்லி இருப்பது மெயின் டிஷ்.. சந்தோஷம், திருப்தி என்பது ஏதோ ஒன்றில் மட்டும் இருப்பின், அதை மட்டுமே செய்துக்கொண்டு இருந்துவிட முடியாதுங்க.. அது வாழ்க்கையில்லை. :)
@ வித்து : எஸ் ஐம் ஆல்ரைட்.. :)
@ கோப்ஸ் : என்னை நான் அறிகிறேன் !! என்பதே சொல்லப்பட்டு இருக்கிறது :)))
@ தமிழ் : ம்ம்.. ! எங்க போன ஆளையே காணல... எப்படி இருக்க?
படிக்க நல்லாருக்கு
Post a Comment