எங்க வீட்டு சமையல் : மீன்/கோழி/நண்டு/முட்டை குழம்பு

ஒவ்வொரு ஊருக்கு ஒரு சமையல் அல்லது ருசி தனிபெயர் பெற்றதாக இருக்கும். காரைக்குடி ஆச்சி சமையல், குழிஅப்பம், அசைவ உணவுகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவை. முல்ஸ்ஊர் பிரியாணி (அட அதாங்க ஆம்பூர் பிரியாணி), கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் சாம்பாரில் கூட தேங்காய் அரைத்துவிடுவார்கள், சேலம் பக்கம் சாம்பார், குழம்பு எதுவாக இருந்தாலும் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிது சேர்பார்கள்.

இப்படி எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் பிரசத்தி பெறாத ஊர் விழுப்புரம். சுற்றபுரங்களில் நிறைய கிராமங்கள் இருப்பதால், காய்கரி, கீரை வகைகள், தயிர் போன்றவை நன்றாக கிடைக்கும். அதனால் எங்கள் வீட்டு சமையலில் என்ன தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் என்று சொல்ல தெரியவில்லை, இதுவரையில் சாப்பிட்ட அசல் ஊர் நண்பர்கள் சமையல் ருசி நன்றாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய ஆயா தான் சமையல் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அம்மா வீட்டில் சுத்த சைவம் (கவி -சைவம் அசைவம் இரண்டுக்கும் பிறந்த கிராஸ்), அப்படி சுத்தமான சைவ அம்மாவை அசைவமாக்கிய பெருமை ஆயாவை சேரும் என்பதை விடவும் அவர்களின் சமையல் ருசி, யாரையுமே எதையும் விட்டுவைக்காமல் சாப்பிட செய்துவிடும். :). ஆயா சொல்லிக்கொடுத்த சமையலிலிருந்து சில அசைவ உணவுகள் செய்முறையை எழுதிவைக்க நினைக்கிறேன்.

மீன் குழம்பு :

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ (குழம்பு மீன்)
புளி - 1 1/2 எலுமிச்சை பழம் அளவு (மீடியம் சைஸ் எலுமிச்சை)
தக்காளி - 2 (மீடியம் சைஸ், நாட்டு தக்காளி )
வெங்காயம் - சின்ன வெங்காயம் ஒரு பெரிய கைப்பிடி (அ) பெரியவெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு - 10
மிளகு - 10 (எண்ணெய்யில் லேசாக வருத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும், பச்சையாகவும் அரைத்துக்கொள்ளலாம்)
மஞ்சல் பொடி - சிறிது
மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் (இது தனியா +மிளகாய் சேர்ந்த தூள்) தேவைக்கேற்ப நீங்கள் காரத்தை குறைத்தும் கூட்டியும் கொள்ளலாம்
எண்ணெய் - தாளிக்க
உப்பு
வடகம் - 3/4 ஸ்பூன் (இது கடுகு, சீரகம்,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், இடிந்த சின்ன வெங்காயம் & பூண்டு + விளக்கெண்ணெய் சேர்த்து வருடத்திற்கு தாளிக்க தயார் செய்து வைத்துக்கொள்ளுவோம், இதற்கு தனியாக ஒரு செய்முறை உள்ளது, இது இல்லாதவர்கள் வெறும் கடுகு, சீரகம், வெந்தயம், உளந்து சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்)

செய்முறை : வெங்காயம் , பூண்டை தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி வடகம் போடவும், இது இல்லாதவர்கள் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் (வெந்தயம் மட்டும் கொஞ்சம் அதிகமாக) போட்டு தாளிக்கவும். சிவக்கும் போது, நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பூண்டு வாசனை வர சிவந்தவுடன், நசுக்கிய வெங்காயத்தை போடவும். நன்றாக வதங்கி லேசாக சிவக்கும் போது, பொடியாக நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை இலை சேர்த்து நன்கு வதங்கியவுடன், கரைத்து வடிக்கட்டிய புளித்தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து மூடிவிடவும்.

குழம்பை இப்படி கூட்டி அடுப்பில் வைத்துவிட்டு, மீனை சுத்தம் செய்ய செல்லலாம். மீனை கழுவி சுத்தம் செய்வதற்குள் குழம்பு கொதித்துவிடும். குழம்பு மிளகாய் தூள் வெடுப்பு (வாசம்) போகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன், கழுவிய மீன்களை போட்டு, 3-4 நிமிடங்களுக்குள் இறக்கிவிடவேண்டும். மீன் சட்டென்று வெந்துவிடும், அதிக நேரம் வைத்தால் மீன் குழைந்துவிடும். இறக்கியவுடன் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.

மீன் குழம்பு ரெடி. :). மீன் குழம்பை சட்டியில் செய்தால் தனி ருசி.
***************************
நண்டு குழம்பு :

நண்டு சளிக்கு ரொம்பவே நல்லது. மார் சளி விடாது இருந்தால், ஆயா நண்டு குழம்பு வைத்துக்கொடுப்பார்கள். அதுவும் வயல் நண்டு. இது கருப்பு & சாம்பல் சேர்ந்த நிறத்தில் குட்டி குட்டியாக இருக்கும். இதை வயலில் வேலை செய்யும் பெண்களிடம் சொல்லி வாங்குவார்கள். உயிருடன் பிடித்து வந்து தருவார்கள், உயிருடன் இருப்பதால் சள சள வென அந்த பையில் சத்தம் கேட்கும் :). நண்டை சுத்தம் செய்து, அம்மியில் வைத்து ஒரு நசுக்கு நசுக்கி சமைக்க தயார் செய்து க்கொள்வார்கள். கடல் நண்டை நசுக்க மாட்டார்கள். இரண்டுக்கும் இது தான் சமைக்கும் போது உள்ள வித்தியாசம்.

தேவையான பொருட்கள்.:-

நண்டு - 4 (கடல் நண்டாக இருந்தால், வயல் நண்டு 7-10)
வெங்காயம் - சின்ன வெங்காயம் கை அளவு
பூண்டு - 10
தேங்காய் - அரை மூடியில் பாதி
தக்காளி- 2 (நாட்டு)
மிளகு - 20
வடகம் - 3/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
உப்பு

செய்முறை : வெங்காயம், பூண்டு தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மிளகை வறுத்து விழுதாக்கிக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, வடகம் வாசனை வர தாளித்து, முதலில் பூண்டு, பின் வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து நன்கு மிளகாய் வெடுப்பு (வாசனை) போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் கொதித்தவுடன் சுத்தம் செய்த நண்டை போட்டு கொதிக்கவிடவும். நண்டு வெந்தவுடன், தேங்காயை அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.

நண்டு குழம்பு ரெடி. !
********************************
கோழி குழம்பு

தேவையான பொருட்கள் :

கோழி - 1/2 கிலோ
பூண்டு - 8
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
வெங்காயம் - பெரியது ஒன்று அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
தக்காளி - 2 (நாட்டு)
பச்சை மிளகாய் - 1 (அ) 2
மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
மிளகு - 6 (தேவைப்பட்டால், யாருக்காவது வீட்டில் சளி பிடித்திருந்தால் மட்டுமே இதை நான் சேர்ப்பது வழக்கம்)
மஞ்சள் பொடி - சிறிது
உருளை கிழங்கு - 3 (மீடியம் சைஸ்)
சோம்பு - 1 ஸ்பூன்
லவங்கம் - 3
பட்டை - சிறிது
பட்டை இலை - சிறிது
எண்ணெய்,
உப்பு

செய்முறை : இஞ்சி, பூண்டு, சோம்பு, லவங்கம் 2, மிளகு சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் நசுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வாணல் வைத்து, லவங்கம் 1, பட்டை, பட்டை இலை போட்டு சிவந்தவுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், நசுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளி, நீட்டில் நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி, உருளைக்கிழங்கை தோல் நீக்கி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி , மஞ்சள் பொடி சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

இது வதங்கும் சமயம் கோழியை சுத்தம் செய்து விடலாம். சுத்தம் செய்த கோழியை இதனுடன் சேர்த்து வதக்கவும். கோழி வதங்கியவுடன் குக்கரில் கொட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிவிடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, அதிலுள்ள 4-5 துண்டுகள் உருளைக்கிழங்கை மட்டும் கரண்டியால் மசித்துவிடவும். இப்படி செய்வதால் குழம்பு கெட்டியாக இருக்கும். தேங்காய் அரைத்து விட வேண்டியது இல்லை.

கொத்திமல்லி தழை தூவி இறக்கிவிடவும். கோழி குழம்பு ரெடி.
************************************
முட்டை குழம்பு :

இதற்கு மீன் குழம்புக்கு சொன்ன அத்தனை பொருட்களும் தேவை. மிளகு கிடையாது, தேங்காய் அரை மூடியில் பாதி தேவை, முட்டை - 4.

மிளகை தவிர்த்து மீன் குழம்பிற்கு சொன்னதை போன்று செய்து குழம்பு நன்கு கொதித்தவுடன், தேங்காய் அரைத்து ஊற்றிவிடவும். ஒரு கொதி வந்தவுடன், முட்டையை உடைத்து (வாணலில் வேறு வேறு இடத்தில்) ஊற்றி 2-3 நிமிடங்கள் கொதித்தவுடன் கரண்டியால் கிண்டாமல் இறக்கிவிடவும்.

கொத்தமல்லி தழை தூவிவிடவும்.

முட்டை குழம்பு ரெடி!
*******************************
அணில் குட்டி அனிதா:
என்ன அம்மணி தீடீர்னு சமையல் பக்கம் இறங்கிட்ட்டாங்க...?!!... அவங்க ஆயா நல்லாத்தான் சமைப்பாங்க. .இவிங்க சமையலை பத்தி.. இவிங்க புள்ளக்கிட்டயும் இவிங்க ஹப்பி கிட்டயும் கேட்டாத்தான் தெரியும்... !!

பீட்டர் தாத்ஸ் :-
Cooking is like love. It should be entered into with abandon or not at all.





அப்பன் என்றும் அம்மை என்றும்..

Get this widget | Track details | eSnips Social DNA

ஓ…………ஓ…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு,

அது புத்தன் என்றும் சித்தன் என்றும்

பித்தன் என்றும் ஆவெதென்ன

சக்கையாக போகும் கரும்பு

ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்

எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா

சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா

சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா

புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான்

வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான்

இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்

ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்

ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா

ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா

தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு

கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு

மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக

அஞ்ஞானம் அற்று விழும்..

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும்

பித்தன் என்றும் ஆவெதென்ன

சக்கையாக போகும் கரும்பு

ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்

எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு


எழுத வந்தாலும் வந்தேன்.....

பதிவெழுத வந்த கதையை எழுத சொல்லி.. தம்பி கோபிநாத் அழைத்து இருக்கிறார். பெரிய கதை ஒன்றும் இல்லை. எப்போதும் எல்லாவற்றிலும் வேகம் போலவே இதுவும் நடந்தது.

எனக்கு ப்ளாக் என்ற ஒன்று இருப்பது தெரிந்ததே என்னுடைய ஆன்(ண்)லைன் நண்பரால், அவர் அப்போது (2006) அமெரிக்காவில் இருந்தார், இப்போது இங்கத்தான் இருக்கிறார். (ரொம்ப முக்கியம் மா? ன்னு கேப்பாரு.. அதை எல்லாம் நாம கண்டுக்கக்கூடாது, சொல்லனும்னு நினைக்கறதை சொல்லிடனும் :) ) என்னைப்பற்றி தெரியாமல், தெரியாத்தனமாக அவருடைய ப்ளாக் யூஆர்எல் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார், இது அவரைப்பற்றி நான் தெரிந்துக்கொள்ள.

அவரை பற்றி தெரிந்துக்கொண்டேனோ இல்லையோ.......கொஞ்ச நாளில் நாமும் ஏன் இப்படி எழுதி தள்ளக்கூடாது என்று முடிவு செய்து நானே ப்ளாக் எல்லாம் கிரியேட் செய்துவிட்டு, அவரிடம் எனக்கு கூட எழுத ஆசை என்றேன். அவரும், "நீங்களும் எழுதுங்க, ஒரு ப்ளாக் கிரியேட் செய்துக்கோங்க" ன்னு சொன்னார், சொல்லி முடிக்கும் முன், "கிரியேட் செய்துட்டேனே.. இன்ட்ரோ க்கு உங்க பேரை போட பர்மிஷன் வேணும் னு" கேட்டேன். நிச்சயமாக நான் ப்ளாக் கிரியேட் செய்திருப்பேன் என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை தான். ஆனாலும், "என் பெயரை போடவேண்டாம்" என்று கண்டிஷன் போடவே.. அவருடைய பெயரை குறிப்பிடாமல் எழுதத்தொடங்கினேன்.

இன்னமும், இந்த பதிவு எழுதும் வரையிலும் எனக்கு பர்மிஷன் கிடைக்கவில்லை :(, அதே கண்டிஷனில் தான் வண்டி ஓடி க்கொண்டு இருக்கிறது. இப்பவும் அவரு யார் ன்னு சொல்ல முடியல, சொன்னால் எனக்கு இருக்கும் ஆபத்தை விடவும் அவருக்கு ஆபத்து அதிகம். அவருக்கு ஆபத்து அதிகமானால் அது அப்படியே இந்த பக்கம் திரும்பும் அபாயம் இருப்பதால்.. போனாபோகிறது என்று அவரை யாருன்னு தெரியாமையே விட்டுடுவோம். இதையும் தாண்டி யாருக்காவது கண்டுபிடுக்கனும் னு நினைத்தால், கண்டுபிடிங்க.. ஆட்டோ அனுப்புங்க.. ஹி ஹி..எனக்கு இல்ல அவருக்கு.. :))

முதன் முதலாக .. எங்கிருந்தோ சொய்ய்ய்யினூ நடுவில் வந்து குதித்தார் நம்ம பாலா (பாரதி), என்னுடைய பளாக் டெம்லேட் சரி செய்தது, அழகாக்கி கொடுத்தது, தமிழ்மணத்தில் என்னை சேர்த்துவிட்டது, தமிழில் திருத்தங்கள் என்று ஏகப்பட்ட உதவி செய்து இருக்கிறார். அப்பவெல்லாம் இதை அவர் முழு நேர வேலையாக வைத்திருந்தார் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, நிறைய புது வரவுகளுக்கு உதவியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். ரொம்பவே நல்லவர்.

சுவாரசியமான விபரம் வேற என்ன இருக்கு பதிவெழுதவந்துன்னு பார்த்தால், ம்ம்ம்ம்.. பிரச்சனைகள் நிறையவே பார்த்துவிட்டேன். பொதுவாக என்னை நேரில் பார்த்து பேசி பழகும் நண்பர்களிடம் சந்தித்திராத புதுவிதமான ஒரு பிரச்சனையை ப்ளாகர் நண்பர்களிடம் சந்தித்தேன்.

அதற்கு காரணம் என் எழுத்தின் தாக்கம், அதனால் மட்டுமே நான் வேறு விதமாக இங்கே பார்க்கப்படுகிறேன் என்பதை சமீபத்தில் மிக தெளிவாக நண்பர் ஒருவரால் புரிந்துக்கொண்டேன். இப்படி எல்லாம் பேசுவார்கள், என்னைப்பற்றிய அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கிறது என்பதை கூட என் எழுத்து எனக்கு காட்டிக்கொடுத்து இருக்கிறது எனலாம். அது அவர்கள் தவறு அல்ல என் எழுத்தின் தவறு.

நானும் என் எண்ணங்களும் மட்டுமே எழுத்தாகிறோம் என்றால் ஏன் ப்ளாகர் அல்லாத நண்பர்களிடம் எந்த பிரச்சனையும் இதுவரையில் நான் சந்தித்தது இல்லை என்று கேட்டுக்கொள்கிறேன். சண்டைக்கோழி என்ற பெயர் வைத்திருப்பதாகவும் கேள்விபட்டேன் :). வைத்தவர்களுக்கு நன்றி. என் செல்லப்பெயர்கள் லிஸ்ட் டில் (ம்ம்ம்..லிஸ்ட் போடும் அளவிற்கு எனக்கு செல்ல பெயர்கள் உண்டு) இதையும் சேர்த்துவிட்டேன்.

பல நேரங்களில் எழுதவே பிடிக்காத வெறுமையை கூட ஏற்படுத்தி இருக்கிறது, 3 முறை வெளியில் சென்று திரும்ப வந்து இருக்கிறேன். எல்லாம் தனிநபர் (கவிதா என்ற தனிநபர்) சம்பந்தப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம். வேறு யாரையும் குற்றம் சொல்வதற்கு முன், என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஏன் நீ எழுதவந்தாய்? கேட்டுக்கொண்டு நானே அதற்கு விடையும் சொல்லிக்கொண்டு, திரும்பவும் இது போல் என்னால் முடிந்த அளவு எழுதி தள்ளிக்கொண்டு தான் இருக்கிறேன்.. .என் அறிவுக்கும், மனதுக்கும் முடிவு இது தான் என்று தெரிந்திருந்தும் முடிவுகள் இல்லாது தொடருகிறது....

நிற்க, எல்லாவற்றையும் மறக்கசெய்யும் பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது. எப்போது உதவி என்று கேட்டாலும் எப்படியும் யாராவது செய்துவிடுவார்கள், முகம் தெரியாதவர்களுக்காக கேட்ட போதும் என்னை நம்பி நம் மக்கள் உதவியிருக்கிறார்கள். அதை எப்போதும் மறப்பதற்கு இல்லை. மறந்துவிட்டால் நான் மனுஷியும் இல்லை.

தவிர்த்து, எனக்காக கேட்ட போதும், (அ) ஏதோ ஒரு விதத்தில் ப்ளாக் சம்பந்தமாக உதவி செய்து கொடுத்த நல்லவர்கள் இருக்கிறார்கள். முதலில் *பாலா(பாரதி), பொன்ஸ், சிவகுமார்ஜி, சிந்தாநதி, சீனு, (நாகை)சிவா, ஜொள்ஸ், கொத்ஸ், கைப்ஸ், தேவ், சந்தோஷ், ஹே ராம், ஜியா,அருள், உஷா, மைஃபிரண்டு, முல்ஸ், காயத்'திரி, ஜம்ஸ், ரவி, லக்கி, துர்கா, சிபி, ரங்கன், கோபி, சென்ஷி, கல்வெட்டு, புருனோ,மங்கை,டுபுக்கு, முத்து,செல்லா, தெகா, ஆயில்யன், வெயிலான், மதுரா(தமிழச்சி), சிங்கு & கடைசியாக ராஜா.* ப்ளாக் விஷயமாக அதிகமாக நான் உயிரை வாங்கியது சீனு தான். :). He is an intellectual, weird & highly stupid guy.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு


என்று வள்ளுவர் சொன்னதை நினைவில் எப்போதும் நிறுத்தி, யார் எந்த உதவி செய்திருந்தாலும் அதை எளிதில் மறக்காமல் இருக்க என்னை தயார் படுத்தி இருக்கிறேன். இப்பவும் இனியும் அப்படியே இருக்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டும், உதவிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிக்கும் அப்பார்ப்பட்டு, என்ன கொடுமையை நான் எழுதினாலும் அதை படிக்க வரும் மக்கள் தான் நிஜமான நல்லவர்கள், பொறுமை சாலிகள் அதிலும் பாராட்டி விட்டு வேறு செல்வார்கள். :) அப்படி செய்யும் போது எல்ல்லாம்.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கப்பா என்று நினைப்பதுண்டு.

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... !!! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. !! அம்மணி மாதிரி நானும் இன்னைக்கு மூட் அவுட் ல இருக்கேன்.. சோ அப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய..... !!

பீட்டர் தாத்ஸ் :“Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls, to keep our hearts warm when we are lonely.”

* யாருடைய பெயரையாவது விட்டு இருந்தால், தயவு செய்து தவறாக எடுக்க வேண்டாம் , என்னவோ இந்த பதிவு எழுதும் போது நினைவுகள் ஒன்றும் சரியாக இல்லை, அதனால... மன்னிச்சி விட்டுடுங்க.ப்பா....

பப்பு vs கவிதா


















பப்பு : போதும்..

கவி : என்ன போதும்...

பப்பு : எல்லாமே போதும்..

கவி: என்ன எல்லாமே போதும்..

பப்பு: ப்ப்ப்போதூஊஊஊம் !! (கோவமாக)

கவி: என்ன போதும்.. ஓ சிப்ஸ் சாப்பிடறேனே அது போதுமா?

பப்பு: ஆமா..!! (செம கடுப்பாக)

கவி: அப்ப நான் வீட்டுக்கு போறேன்.. (நானும் செம கடுப்பாக)

பப்பு: (இது வரை பேசியது எதுவுமே குரல் மட்டும் தான் வந்தது என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, விளையாடிக்கொண்டு இருந்தாள், இப்போது வேகமாக என்னை பார்த்து..) ஏன்ன்ன்ன்?

கவி: நீந்தான் எல்லாமே போதும் னு சொன்னியே. .அதான் வீட்டுக்கு போறேன்.

பப்பு : வேணாம் வேணாம். .நீ சாப்பிட்டுக்கோ .... நாம விளையாடலாம்...

கவி: ம்ம்ம்..அப்ப சரி நான் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கவா?

பப்பு: (கொஞ்சம் யோசனை, பின் இரண்டு கையையும் குவித்து காட்டி) இவ்வளவு ஆச்சிக்கு வச்சிட்டு மிச்சம் எல்லாம் சாப்புடு..

ஆச்சி : ஹி ஹி ஹி ஹி.. (ஒரே சந்தோஷமாம்ம்ம்ம்!! )

************************


பப்பு : நீ வரத்துக்கு முன்ன அந்த புலி உன்னை கடிச்சிருச்சி...

















கவி: டேய், நான் வராதப்ப புலி என்னை எப்படி கடிக்கும்?

பப்பு: ஆமா கடிச்சிச்சீஈஈஈஈஈஈ..!! (I shd agree with her...it seems..)

கவி : ஆமா..நான் இருந்தாலும் இல்லாட்டியும் புலி எப்பவுமே என்னை கடிச்சிக் கொதறிக்கிட்டே இருக்கு.. !! :(((((

பப்பு : :)))))))))))))))))

அணில் குட்டி அனிதா : ம்ம்.. நல்ல வேளை, இரண்டு பேரும் சேர்ந்து கேரட் காயகொழம்பு வச்சாங்க அத சொல்லலியே.. ஆயா கேட்டுட்டு, இவிங்க இரண்டு பேரையும் டிவி க்கு சமையல் செய்யற ப்ரோக்ராம் கு அனுப்பலாம் னு சொல்லி... .................ஹி ஹி.. :))))))) உங்களுக்கு இதுக்கு மேல புரிஞ்சிடும்..

பீட்டர் தாத்ஸ் :The world is as many times new as there are children in our lives.



இவர்களும் மனிதர்கள்.......

மனநிலை சரியில்லாமல் வாழ்கையை இழந்தவர்களா? இல்லை வாழ்கையை இழந்ததால் மனநிலை சரியில்லாமல் இருக்கிறார்களா? என்பது விடைதெரியாத கேள்வி. தெருவோருத்தில், கிழிந்த ஆடைகளுடன், சிலருக்கு ஆடைகள் கூட இருக்காது, தான் என்ன செய்கிறோம், எங்கிருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மனம் போன போக்கில், கால் போன போக்கில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் தன்னை இழந்து கிடக்கும் இந்த தெருவோருத்து மனிதர்களும் நம்மில் ஒருவர் தானே.

சக மனிதனை இப்படி தெருவோரங்களில் பார்க்கும் போது நெஞ்சம் சோர்ந்து போகாமல் இருப்பதில்லை. ஹால்டா சிக்னலை (ஒரு வழி பாதையாக்கி விட்டார்கள்), வலதுபுறமாக கடக்கும் போது, அந்த நடைபாதையில் ஒரு மனிதர், தன்னை முழுவதுமாக உணராத நிலையில் கிடந்தார். நல்ல வெயில், ஆடை இல்லை.. ஏதோ ஒன்று ஆடை என்று எங்கோ ஓர் இடத்தில் கிழிசலாக கிடந்தது, ஆனால் அது அவரின் மானத்தை மறைக்கவில்லை என்பதை உணராத நிலையில் கிடந்தார். அவரால் எழுந்து நடக்கமுடியவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் படுத்தநிலையில் அவர் கழித்திருந்த சிறுநீர்,மலத்தின் மேலேயே கிடந்தார். தன்னால் தனக்கு எதுவும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. குடிகாரரும் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டு, தன்னை இழந்த ஒருவர் என்று புரிந்தது. பக்கத்தில் எதையோ தன் சொத்தாக நினைத்து கட்டி வைத்திருக்கும் ஒரு சின்ன அழுக்கு மூட்டை அதற்கு சாட்சியம்.

இவரை தொலைவில் இருந்தே பார்த்துவிட்ட எனக்கு, அவரை அந்த கோலத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட முடியவில்லை நின்று உதவி செய்யும் அளவிலும் அவர் கிடக்கவில்லை. வேளச்சேரியில் இருந்து இடது புறம் திரும்பி சிறிது நேரத்தில் கவனித்தேன், அந்த போக்குவரத்து நெரிசலில் மேற்சொன்னவற்றை சிந்தித்தவாறு அவரையும் தாண்டிதான் விட்டேன். வெயிலுக்கு ஒரு மேல் சட்டை, தலையை சுற்றி ஹெல்மெட்டிற்காக போட்டுக்கொள்ளும் துப்பட்டா என்று நல்ல பாதுகாப்போடு சென்றுக்கொண்டு இருந்தேன். அவரை கடந்துவிட்டாலும், அப்படியே விட்டுவிட்டு அதற்கு மேல் செல்ல முடியவில்லை. வண்டியை நிறுத்தி, சட்டையை கழட்டிக்கொண்டு அவரை நோக்கி நடந்தேன், அதற்குள் அங்கு கடக்கும் வாகனங்களில் வந்தோர் அத்தனை பேரும் என்னை கவனிக்க ஆரம்பித்தனர், ஆண்கள் சிலர் மெனக்கெட்டு வண்டியை நிறுத்தி,"கிட்ட போகாதீங்க மேடம் ஏதாவது செய்துவிட போறான், கார்ப்பரேஷன் வாரிட்டு போயிடுவான்," "He is not a normal person, leave it, No use of helping him" , அனைவருமே எதற்கு இந்த பெண்ணிற்கு இந்த வேலை என்பதை போன்று பார்த்தார்கள், அவர்கள் அப்படி சொல்ல காரணமாக நான் நினைத்தது, அந்த மனிதர் முழு நிர்வாணமாக இருந்ததே.

பொது இடத்தில், நடைபாதையில், நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நிர்வாணமாக தன்னை உணராதவராக, மனநிலை பாதிக்கப்பட்டு, மலம் சிறுநீர் தான் கழித்திருக்கிறோம் என்றும் தெரியாமல் அதன் மேலேயே கிடக்கும் போது, அவரிடம் செல்ல யாருமே தயங்குவார்கள், பயப்படுவார்கள் தான். ஒரு பெண்ணாக எனக்கு ரொம்பவே அதிகமாகவே அந்த மனநிலை இருந்தாலும், அவரை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. எத்தனை பேர் அந்த இடத்தை கடக்கிறார்கள், எத்தனை பேர் இப்படி அவரை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு வந்தது. அவரிடம் நெருங்க ரொம்பவே தயக்கம் என்று சொல்வதை விடவும், நிறைய கண்கள் அப்படி ஒரு ஆணை நான் நெருங்குவதை பார்ப்பது வேறு ஒரு விதமான சொல்ல தெரியாத ஒரு மனநிலையை எனக்கு தந்தது, ஆனாலும் என் கால்கள் அவரை நோக்கி நடக்கின்றன. வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் நினைக்காமல் அவருக்கு அந்த சட்டையை போர்த்திவிட்டு வந்துவிட வேண்டும், அவர் இப்படி கிடக்க க்கூடாது, பிறகு தன்னார்வ நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவருக்கு உதவி செய்துவிடலாம் என்று நினைத்தேன்.

சிலர் வண்டியை நிறுத்திவிட்டு கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் (இதை எல்லாம் நம் மக்கள் சரியாக செய்துவிடுவார்கள்). அவரிடம் நெருங்கிய நிலையில், அப்போது இடதுபுறத்தில் பெரிய கட்டிடம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள், அதில் இருந்த வாட்ச்மென், என்னை கவனித்து ஓடி வந்து, "கொடும்மா நான் போடறேன், எப்படி கிடக்கிறான் பாரு, நீ கிட்ட போகவேண்டாம்" என்றார். எதுவும் பேசாமல் சட்டையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் போர்த்துவார் என்ற நம்பிக்கையில் எல்லோரும் நின்று என்னையே கவனிப்பது பிடிக்காமல் வேகமாக வந்துவிட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அந்த மனிதர் அங்கு இல்லை என்பது மனதுக்கு இதமாக இருந்தது.

அடையார் டெர்மெனஸ் எதிரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை உள்ளது அதன் அருகில் ஒரு பெண் இப்படித்தான் அமர்ந்திருப்பார், அவரின் கைகளில் எப்போதும் அவரின் சொத்து குவியல் மூட்டை ஒன்று இருக்கும். கிழந்த ஆடை, அழுக்கு, தெருவே கதி. எங்கு சாப்பிடுகிறார், எங்கு தூங்குகிறார் என்று தெரியாது. அலுவலகத்தில் இருக்கும் போது, மழை பெய்தால் என் அருகில் இருக்கும் ஜன்னலை திருந்து வைத்து ரசிக்க முற்படும் நேரங்களில் எல்லாம், இந்த அம்மா எங்கே இருப்பார்கள் என்றே யோசிப்பேன். சில நாட்கள் கவனித்து, Banyan க்கு போன் செய்து அவரை பற்றி சொல்லி அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் வந்து அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் வரும் போது நான் அங்கு இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள், ஆனால் அவர்கள் வரும் போது என்னை அழைக்கவில்லை. எப்படியோ அந்த அம்மாவை பிறகு நான் அங்கு பார்க்கவில்லை. அடுத்து டி.டி.கே சாலையில் ஒருவர். இவருக்காக ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு போன் செய்து அழைத்தபோது, அவர்கள் அலுவலகத்தில் "ஏம்மா நீயே ஒரு ஆட்டோ வைத்து கொண்டு வந்து விட்டுடேன் " என்றார்கள். தனியாக அதுவும் மனநிலை சரியில்லாத ஒரு ஆணை எப்படி பேசி, தூக்கி, எடுத்து ஆட்டோவில் உட்காரவைத்து அழைத்து செல்வது. என்னால் முடியுமா? என்ற கேள்வி எழும்பி, அவர்களிடம் என் நிலைமையை எடுத்து சொன்னேன். சரி அட்ரஸ் கொடுங்கள், முயற்சி செய்யறோம், ஆனால் அழைத்து செல்வோம் என்று உத்திரவாதம் எல்லாம் தரமுடியாது என்றார்கள். அவர்கள் வெகு நாட்கள் அழைத்து செல்லவில்லை தான். அவர் அந்த இடத்திலேயே தான் இருந்தார்.

சில விஷயங்கள் முயன்றும் சரியாக உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு எழாமல் இல்லை.

மேற்கண்டது போன்ற சக மனிதனை நீங்களும் கண்டிப்பாக நம் தெருக்களில் பார்க்கத்தான் செய்வீர்கள், அவர்களை ஒதுக்கி செல்லாமல், தயவுசெய்து அவர்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லுங்கள். சில வருடங்கள் முன்பே மெயிலின் மூலம் எல்லோருக்கும் இதற்கான தொடர்பு தொலைபேசி நம்பர்கள் அனுப்பி இருந்தேன். உங்களின் ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி அழைப்புகள் ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும். தயவு செய்யுங்கள்....

For Men

Anbagam
Ph : 044-2501 5165
http://www.anbaham.org/

Scarf
44 - 2615 3971
44 - 2615 1
073
http://www.scarfindia.org

For Women

18/55, Nelson Manickam Rd
Chennai, Chennai, Tamil Nadu 600094
044 42233666
www.thebanyan.org

இரு தினங்களுக்கு முன் ஒருவரை பார்க்க நேர்ந்தது. இப்படிப்பட்டவர்களை பார்க்காமல் இருக்க போவதும் இல்லை... :((((((((

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... மக்கா அம்மணி ய என்ன செய்யறது சென்னை யில் மட்டும் தான் இப்படி மக்கள் இருக்காங்கன்னு அவங்க கூப்பிடற 2 நம்பரை மட்டும் கொடுத்துட்டுட்டாங்க.. நம்ம கவி க்கு அவ்வளவு தான் அறிவு விடுங்க விடுங்க..!!

நீங்க என்ன செய்வீங்களாம், கூகுல் ல "Rehabitation Centre, Chennai" அப்படின்னு டைப் செய்து சென்னை க்கு பதிலா நீங்க எங்க இருக்கீங்களோ அந்த ஊர் பேரை போட்டு தேடுங்க. .உங்க ஊர்ல இருக்க சென்டர் நம்பர் எல்லாம் கிடைக்கும்.. அதுக்கு போனை போடுங்க... சரியா...

பீட்டர்தாத்ஸ் : “Never give succor to the mentally ill; it is a bottomless pit.” - Is it True?

ஏன் என்ற கேள்வி ?

சிறு வயதிலிருந்து மட்டும் இல்லை இப்பவும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது...... நானே அவற்றிற்கு விடை தேடி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டாலும் இன்னமும் சில கேள்விகள் தொங்கலில் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் பதில் சொல்லுங்களேன்..

1. * இரவில் நிலவு காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும் நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக நினைத்துக்கொள்கிறோமா ?

* அப்பாவிடம் சின்ன பிள்ளையாக இருக்கும் போது கேட்டது அப்பாவும் பதில் சொன்னார் தான் , ஆனால் அப்போது புரிந்த மாதிரி இருந்தது..இப்போது புரியவில்லை.

2. எல்லோர் வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது இல்லை.? ***

3. எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல் அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை. ? **
** என்னுடைய அப்பா இதற்கு ஒரு பிறந்த கோழியை தண்ணீரில் தூக்கி போட்டு அது நீச்சல் அடிப்பதை காண்பித்தார். மனிதன் மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர்த்து ஏன் என்று சொல்லவில்லை? ! ஒருவேளை அப்போது நான் ஏன் என்ற கேள்வியை அப்பாவிடம் கேட்க மறந்து கோழி நீச்சல் அடிப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன் எனலாம். :) )

4. பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும் சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

5. காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? (இதற்கு 'ஹே ராம்' பதில் சொல்வதாக சொல்லி சொல்லவேயில்லை :( )

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?

7. பெற்றோர் எல்லோரும் ஏன் பிள்ளை வீட்டில் இருப்பதை/இறப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.? பெண் வீட்டில் அதாவது மாப்பிள்ளை வீட்டில் இருப்பதை ஏன் கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்? ***

8. பெண்ணை விட ஆணுக்கு தசைகள் அதிகம் இருப்பதால் தான் அவன் பெண்ணை விட உடல் வலிமை அதிகமானவனாக இருக்கிறான். சரியா?

9. தென் இந்திய கோயில்களின் கருவறை மிகவும் குறுகிய, உயரம் குறைந்த வாயில் கொண்ட வெளிச்சம் இல்லாத இருட்டறைகளாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?

10. மருத்துவம் படிப்பவர்கள், (ஆண்/பெண்) பாலியல் உறவை எளிதாக வைத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெரிய பொருட்டாக நினைப்பதில்லை. அதற்கு அவர்களின் படிப்பு சார்ந்த அறிவும், பாதுகாப்பு முறைகளும் தெரிந்திருப்பது காரணம். உண்மையா? *** (தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் இந்த கேள்வி எங்கோ எதையோ கேட்டு எழுந்தது)

11. முகம் பார்க்கும் கண்ணாடியில் சிலரின் முகம் கோணலாக ஏன் தெரிகிறது. அதாவது அவருக்கு அவர் முகம் நேராக அழகாக தான் தெரியும், பக்கத்திலிருந்து பார்க்கும் எனக்கு கோணலாக தெரியும். அவரிடம் என் முகத்தை அவர் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேட்டால் சரியாக த்தான் தெரிகிறது என்பார். இதில் கண்ணாடியில் பிரச்சனையா இல்லை... என் கண்களில் பிரச்சனையா.? இல்லை அவர் முகமே கோணல் முகம் தானா?

12. காண்டாமிருகம் ஒரு சைவ விலங்கு. ஆனால் இறந்து கிடக்கும் மிருகங்களின் மாமிசங்களை தின்ன முயற்சி செய்கிறது ஏன் என்பது விளங்கவில்லை. அதனுடைய பற்கள் அவற்றிற்க்கு உகந்தது அல்ல என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பற்கள் உகந்ததாக இருந்தால், அசைவமாக ஆக இருந்து இருக்குமோ?

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

14. தேங்காய்-கொழுப்பு என்று உணவில் கட்டுப்படுத்த சொல்லும் போது, எப்படி கேரளாவில் தேங்காய் எண்ணெய் யில் சமைத்த உணவும், தேங்காய் எல்லாவற்றலும் சேர்த்த உணவை வாழ்க்கை முழுதும் சாப்பிடுகிறார்கள், அவர்கள் ஆரோக்கியமாக இல்லையா?

15. மீன் தண்ணீருக்குள் எப்பவும் நீந்திக்கொண்டே இருக்கிறதே அதன் Fins வலிக்காதா?

அணில் குட்டி அனிதா : கவி நீங்க கூட எப்படி எப்போதும் பேசிக்கிட்டே இருக்கீங்கன்னு உங்க வீட்டில இருக்கவங்க கேட்டுக்கிட்டே இருக்காங்களே அதுக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

பீட்டர் தாத்ஸ் : The question isn't who is going to let me; it's who is going to stop me.

*** இந்த கேள்விகளை தனிப்பட்ட முறையில் யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம், பொதுவாக எனக்கு தோன்றிய கேள்விகள்.


ஏதோ சொல்ல நினைக்கிறேன்...

மெளனம்

உன்
பெயரே
தலைப்பானால்...


சிகிரெட்

என்
முகத்தை
எட்டு கோணலாக்கும்
எளிய
சாதனம் !!

உழைப்பு

வியர்வையும்
மணக்கும்..!!

அழுகை

அழுகையும்
சுகம்
உன் மார்பில்
முகம் புதைக்கும் போது ..........

பட்டம்


சுதந்திரமாக
பறக்கிறாய் தான் !!
எப்போதும்
உன்
சுதந்திரம்
யாரோ ஒருவரின் கையில்.........

கீ போர்டு

உனையன்றி
யாரறிவார்
எனை :)

காதல்

முட்டாள்களின் மூச்சு !
அறிவாளிகளின் யதார்த்தம் !
அனைவரும் கடந்து போகும் பாதை !
கானல் நீர் !
கிடைத்துவிட்டால் பைத்தியம் !
கவிதைகள் என்ற கிறுக்கல்கள் !
கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகும் !!

திருமணம்

வாழ்க்கையை
போல
ஒருமுறை வருவது....

கடவுள்

நம்முள்
அன்பிருப்பதால்
நாமும் கடவுள் !!


நட்பு

என்
உயிரை குடிக்கும்
மருந்து!!


சொந்தம்

தனி மரம்
தோப்பாகாது ...!!
பழமொழிக்காக
தேவை...!!

சுதந்திரம்

தேவைக்கு
தேவை
எப்போதும்
தேவையில்லை


அழகு

உன்
நினைவுகளில்
எப்போதும்
நான்
அழகு !! :)

பூக்கள்

கவிதா'க்கள் !!
பூக்களை பறிக்காதீர்கள்!!

கனவு

துரத்த துரத்த
ஓடுவேன்

ஓடி ஓடி
கலைப்பேன்

உயரத்திலிருந்து
பாதாலத்திற்கு
குதிப்பேன்

தண்ணீரில்
மூழ்கி
மூச்சி முட்டி
தவிப்பேன்...

கனவு
பயம்..

இதுவும் காதலாம்......

நல்வாழ்த்துக்குள்
பல சொல்லி
நலம் வாழ

வாழ்த்த இயலாத
வயிற்றெரிச்சலை
வார்த்தைகளால் வாரி
இறைத்து ........

தன் நலம்
மட்டுமே
கண்ட/ கொண்ட
சுயநல பிதற்றல்களோடு....

புனித பிம்பங்களாக
காட்டிக்கொள்ளும்
சிலருக்கு
அது தான்-
"காதல்" என்ற "கருமாந்திரமோ?????

திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு,

உன்னை போல் ஒருவன்... Excellent !! படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் நினைத்தது "இந்த கலைஞனின் வயது எப்படியாவது இன்னும் சில வருடங்கள் பின்னோக்கி சென்று விடக்கூடாதா? இன்னமும் எத்தனை தரமான படங்கள் கிடைக்கும்"

இந்த கடிதம் படத்தினை பற்றிய விமர்சனம் இல்லை, நிறையவே குறைகள் உள்ளன, சில விஷயங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் உணராதவராக நீங்கள் இருக்க முடியாது என்பதில் ஏனோ எனக்கு நம்பிக்கை, அதனால் விமர்சனமாக இதை எழுதவில்லை, விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் புத்திசாலியும் இல்லை.

உங்களின் படங்கள் சில பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியில் வரும் போது படத்தில் சொல்லப்பட்ட கருத்து, படம் எடுக்கப்பட்ட விதம், உங்களின் ஆழ்ந்த நடிப்பு, சின்ன சின்ன விஷயங்களில் உங்களின் கவனம்,ஈடுபாடு, சிந்திக்க வைக்கும் வசனங்கள், கதாநாயகிகளுக்கு நீங்கள் கொடுக்கும் முத்தம், அவர்களை பின்புறமாக வளைத்து எப்படி எளிதாக தூக்குகிறீர்கள், ரொம்பவும் நுட்பமாக கவனித்து செய்திருக்கும் உங்களின் உடல் மொழியும், முக பாவனைகள் என்று எல்லாவற்றையும் அசைப்போட்டு வருவதால் தலை பாரமாக ஆகுவதை தடுக்க முடியாது,... அப்படி அதிகமாக பாதித்த படம் மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், இப்போது உன்னை போல் ஒருவன்.

ஒரு(இரண்டு) கேள்வி உங்களிடம்....

மகாநதி - அடிப்பவனை திருப்பி அடி

ஹே ராம் - இன்னுமொரு "அன்பே சிவம்" என்று வைத்துக்கொள்ளலாமா?


அன்பே சிவம்... - அன்பே சிவம் :)

உன்னை போல் ஒருவன் - தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியும்.


புரியவில்லை.... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

அன்பே சிவமா?
தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியுமா?

உங்களின் intelligence, patriotic thought, society consciousness & responsiveness ஆகியவற்றை கவனத்துடனும், ஆர்வத்துடனும் பார்க்கும் ஒரு ரசிகை. இந்த படத்தை உங்களின் மற்ற சில படங்களோடு ஏனோ ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இன்னமும் சிறந்த படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும்

A Common Woman & ஒரு (தீவிரமில்லாத) ரசிகை :)

நாதம் என் ஜீவனே....

One of my favorite. .from the date it introduced… பள்ளி, கல்லூரி, அலுவலகம் எல்லா இடங்களிலும் அதிகமாக ஜானகி அம்மா பாடல்கள் தான் பாடியிருக்கிறேன்.

படம் : காதல் ஓவியம்
இசை : இசைஞானி

Get this widget | Track details | eSnips Social DNA


தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ... பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ...பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

.

சிபி, உண்மைத்தமிழன், கவிதா - யாரு லூசு?

கவிதா : சிபி... உண்மைத்தமிழன் "நான் ஒரு லூசு" ன்னு உங்க கிட்ட சொன்னாறா?

சிபி : சொல்லியிருக்கலாம் நினைவில்லை..

கவிதா : ஆமா அவரு என்னை லூசு ன்னு சொல்லி இருக்காரு அதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல? :(

சிபி : எல்லாருமே சொல்றத தானே இவரும் சொல்றாருன்னு நான் கேர் பண்ணாம விட்டு இருக்கலாம்...

கவிதா : :((

சிபி : ஆனா அது ஒரு பெரிய லூசு...

கவிதா : ஹை.. அப்ப உங்கள மாதிரியா?

சிபி : வேல வெட்டிய பாக்காம .. அவங்க எல்லாரும் எழுதற பதிவ படிக்கற நாம எல்லாருமே லூசு தான்..

கவிதா : அட ஆமா இல்ல????

சிபி : ஆமாவா இல்லையா?

கவிதா : ஆமா.. ..எல்லாருமே லூசுங்க தான்.. !!! :(((((((((((((


அணில் குட்டி அனிதா : வந்த வேலை முடிஞ்சிது.. .... நமக்கு இன்னைக்கு பூரா பொழுது போகும்.. :))))))))) அப்ப அப்படி ஓரமா ஒக்காந்து படம் பாக்காலாம் வாங்க...

மாலை நேரம் மழை தூறும் காலம்....


இந்த பாடல் கேட்டவுடன் பிடித்து போனது.. காரணம் பின்னனி இசையின் கிட்டார்.. அப்பா நன்றாக கிட்டார் வாசிப்பார். ஒரு சிகப்பு கலர் எலக்ட்ரிக் கிட்டார் வைத்து இருந்தார்,என்னவோ இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் அப்பாவே வாசிப்பதாக கற்பனை செய்து க்கொள்வேன் :)

என் குரலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பேஸ். ரொம்பவும் பிடித்ததால் பாடியிருக்கிறேன்.

Malai neram.mp3


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..

உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..

ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)

.

அடமும் அழுகையும்...எளிதான விஷயமா என்ன?

பொதுவாக யாராவது அழுதாலோ, அடம் பிடித்தாலோ நமக்கு பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால் என் விஷயத்தில் எதிராளி டெர்ரராக மாறி ஒன்று என்னை தூக்கி போட்டு மிதிப்பார்கள் இல்லையென்றால் காமெடி பீஸ் ன்னு தூரமா இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு போயிக்கிட்டே இருப்பார்கள். இந்த இரண்டு ரிசல்ட் 'ஐ எதிராளியிடம் இருந்து வரவைப்பது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை என்பதை நீங்கள் எல்லாம் இந்த பதிவை படித்து முடிக்கும் போது புரிந்துக்கொள்வீர்கள்.

அடம் பிடிப்பதற்கென்று சில அடிப்படை தகுதிகள் இருக்கு, அது எல்லாருக்கும் இருப்பதில்லை.. அது என்ன அப்படி தகுதின்னு நீங்க ரொம்ப ஆர்வத்தோட கேட்கறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது தான்.. உங்க ஆர்வத்தை மதித்து, நானும் நீங்க எங்க இருந்தாலும் அது வரைக்கும் சவுண்டு விட்டு சொல்றேன் கேட்டுக்கோங்க......

முதல் ரவுண்டு தகுதி :- இங்கே..ரவுண்டு என்ற வார்த்தையை யாரும் தவறாக அர்த்தம் செய்துக்கப்பிடாது, ரவுண்டு என்றால் சுற்று.

1. சூடு சுரணை போன்றவை பற்றிய கவலை


ஹி ஹி.. இதுக்கு எல்லாம் கவலை படறவங்க எல்லாம் அடம் பிடிக்கறதை பத்தி நினைச்சி கூட பார்க்கக்கூடாது, அவங்க எல்ல்லாம் முதல் சுற்றுல வெளியில போயிடுங்க.. இவை எல்லாம் இல்லாதவங்க மட்டும் மேற்க்கொண்டு படிக்கலாம்.

குறிப்பாக இதை எதற்கு சொல்றேனா... நாம அடம் பிடிக்கறதை பாத்து எதிராளி ரொம்பவே கோவப்பட்டு கேவலமான* ஆயுதங்களால் உங்களை தாக்கக்கூடம், ஆனால் நீங்கள் மானம் மரியாதை சூடு சுரணை எதுவும் இல்லாதவராக இருந்தால் மட்டுமே அவற்றை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியும். அப்புறம் நாலு பேரு நம்மை வேடிக்கை பாக்கறங்களே ன்னு கூச்சம் நாச்சம் எதுவும் எல்லாம் எப்பவும் இருக்கப்பிடாது. பெருமையா நினைக்கனும்.

2. அடுத்து, அடம் பிடிக்க நல்லா ப்ளான் பண்ணனும். எப்படிப்பட்ட எதிர்வினைகள் உங்கள் மேல் தொடுக்கப்பட்டாலும் அதை தாங்கக்கூடிய உடல் வலிமையும் மனவலிமையும் உங்க க்கிட்ட கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னா நீங்க அடம் பிடிப்பதை பார்த்து,எதிராளிக்கு கோவம் வந்து அவர்கள் டெர்ராக மாறி....... ஓஒடீஈஈஈ வந்து உங்களை.........

=>ஒரே மிதி மிதிக்கலாம்,
=>திடீரென்று தூக்கி போட்டு கூட மிதிக்கலாம்,
=>பெரிய பிரம்பு எடுத்துவந்து எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு முடியுமோ அவ்வளவு அடிக்கலாம்.
=>துடைப்பம், செருப்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்த நேரிடலாம்
=>ஏன் ரொம்பவே டெரர்ராகி உலக்கை, கத்தி, அறிவாள்மனை, சுத்தி, மன்வெட்டி, பாண்டு, செங்கல் போன்ற ஆயுதங்களை எடுத்து வன்முறையில் கூட ஈடுபடலாம்

ஆனால் எப்படிப்பட்ட வன்முறை உங்கள் மேல் அவிழ்த்து விடப்பட்டாலும், உங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகக்கூடாது. போருக்கு செல்லும் வீரம் உங்களிடம் இருக்க வேண்டும். அடம் பிடிப்பதில் இருந்து எள் அளவும் பின்வாங்கவே கூடாது.

அடுத்து, எவ்வளவு அடித்தாலும், வலிக்கிறதோ வலிக்கலையோ அடிவாங்கிட்டே அழதுக்கிட்டே இருக்கனும்.. அழறதும் சும்மா எல்லாம் அழக்கூடாது கண்டிப்பாக உங்க வீட்டை சுத்தி ஒரு, ஒரு கிலோ மீட்டர் அளவு சத்தம் ரீச் ஆகற அளவு கத்தி அழனும்,. இப்படி சத்தம் போட்டு கத்தி அழறதால *தொண்டை கொஞ்சம் கிழியற ஸ்டேஜ் க்கு போகும்..ஆனா முன்ன சொன்ன மாதிரி எந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் முன் வைத்த காலை மட்டும் பின் வைக்கவே கூடாது... நல்லா இன்னும் சத்தம் போட்டு கத்தி கத்தி அழனும்.. *தொண்டை புண் ஆறுவதற்கு தேவையான டிப்ஸ் கடைசியில் கொடுக்கப்படும்.

அப்படி சத்தமாக அழறதோட பலன் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு தெரியும் பாருங்க....! இந்த அழுகை சத்தம் கேட்டு உங்க வீட்டில் மூளை முடுக்கில் இருக்கும் பெருசு, சிறுசு, மீடியம் பர்சனாலிட்டிங்க எல்லாம் வருவாங்க. அது மட்டும் இல்லை அக்கம் பக்கம் வீட்டில் இருக்கவங்க, பக்கத்து தெரு வரைக்கும் சத்தம் ரீச் ஆச்சின்னா அங்க இருக்கவங்க எல்லாரும் என்னவோ ஏதோ ன்னு பதறி அடிச்சிகிட்டு ஓடி வருவாங்க.. சரி சரி... உங்க கவனம் இங்கத்தான் இருக்கனும், கூட்டம் எல்லாம் நல்லா கூடிடுத்தான்னு அழுதுக்கிட்டே நைஸ் ஸா சுத்தி பாத்துக்கோங்க.. இப்பத்தான் பர்ஃபாமன்ஸ் ஸை நல்லா ஆரம்பிக்கனும். "

"அய்ய்யாயோ அய்யோ...யம்மாம்ம்மாஆ.ஆஅ யம்மா யம்மாஆஅ....என்னை இப்படி அடிச்சி அடிச்சி இந்த வீட்டில கொல்றாங்களே இதை யாருமே கேக்கவே மாட்டீங்களா? ? அதுவும் ஒரு பொண்ணு குழந்தை ன்னு கூட பாக்காம அடிக்கறாங்களே....இதை இவ்ளோ பேரு பாக்கறீங்களே கேக்கவே மாட்டீங்களா? எவ்வ்வ்வ்ளோஓஓஓஓஓஒ வலிக்குது தெரியுமா... ம்ம்ம்..:( .தாங்கவே முடியல தெரியும்மா....:( ம்ம்ம்ம்..ஆமா பாருங்க;ன்னு " ன்னு அடிச்ச இடம் ஏதாச்சும் சிவந்து பழுத்து போயி இருந்தா காட்டி ஒரு பரிதாப அலைய உருவாக்கனும். (இந்த லோகேஷன் எல்லாம் நீங்க எல்லார் எதிரேவும் தேடி எடுக்கக்கூடாது, அடிவிழும் போதே எங்க எங்க பன்னு மாதிரி உப்பி இருக்குன்னு நோட் செய்து வச்சிக்கிட்டு இன்ஸ்டன்ட் டா காட்டனும்) ..

பெருசுங்க தான் முதல்ல ஆரம்பிக்கும்.. "ஏன் சின்ன புள்ளைய போட்டு இப்படி அடிக்கறீங்க... பாவங்க எப்படி கன்னி போய் இருக்கு பாருங்கன்னு" நம்மளை அடிச்சி துவைக்கற நல்லவங்களுக்கு அட்வைஸ் செய்வாங்க.. .இந்த சந்தர்ப்பத்தை விடவே கூடாது..

ஆனா நீங்க என்ன பேசினாலும்.. அழுகையை மட்டும் சைட் ல மெயின்டெயின் செய்துக்கிட்டே இருக்கனும், கூட்டத்துல யாரும் பேசறதை பராக்கு பார்த்து பர்ஃபாமென்ஸை கோட்டை விட்டுடக்கூடாது. அழுதுக்கிட்டே பேசறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்ங்க, செய்ய செய்ய பழகிடும். இப்ப உடனே.. " நல்லா கேளுங்க தாத்தா.. இப்படித்தான் இந்த வீட்டுல அநியாயம் நடக்குது, எது கேட்டாலும் என்ன செய்தாலும் அடிச்சே என்னை கொல்றாங்க....". ன்னு சொல்லும் போதே..நம்மை அடிக்கறவங்க இன்னும் டெரரா ஆகி, இன்னும் இரண்டு உதை கண்டிப்பா கொடுப்பாங்க.. (it is human nature u know) ... ஆனாலும் நாம் பரிதாபம் சம்பாதிக்கறதை விடவேப்பிடாது, அடிக்கறவங்களையும் அழுதுக்கிட்டே திட்டனும்..

"நீ நல்லா இருப்பியா.. சின்ன புள்ளய இவ்வளாம் பெரிய பிரம்பு வச்சி அடிக்கறயே.. உனக்கு மனசாட்சியே இல்லையா... நீ அடிக்கறதை கேக்க யாரும் இல்லைன்னு நினைச்சியா. .பாரு பாரு எவ்வளவு பேரு இருக்காங்க.." ன்னு அழுதுக்கிட்டே பரிதாபமாக கூட்டத்தை பாத்து ஒரு லுக் விடனும்.. ."உன் கிட்ட அடிவாங்கி வாங்கியே நான் ஒரு நாள் செத்து போயிடுவேன் போல இருக்கே.." ன்னு டயலாக் டெலிவரி செய்யனும்....

3. இதுல முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் பொஷிஷன்..

அடம் பிடிக்க ஆரம்பிக்க முன்ன, வீட்டில் எந்த இடத்தில் உட்காரனும்னு இடத்தை முதலில் சூஸ் செய்துக்கனும். கை, காலை நல்லா உதச்சி , உருண்டு பிரண்டு அழறமாதிரி இடம் தாராளமாக இருக்கனும், அடுத்து நாம் போடற சத்தம் , வீடு முழுக்க கேட்கறது இல்லாமல் அக்கம் பக்கம் வீடு, தெரு வெல்லாம் ரீச் ஆகனும். .எல்லாத்தைவிடவும் ரொம்பவும் முக்கியம், நம்ம பர்ஃபாமன்ஸ் ஓவர் ஆகி, ஒரு டெரர் க்கு பதிலா வீட்டில் இருக்க எல்லாருமே டெரரா மாறி ஒன்றாக சேர்ந்து கும்ம வந்துவிட்டால்....???!! .அப்படி நடக்கும் பட்சத்தில்....... எழுந்து வேகமாக வீட்டை விட்டு ஓட வசதியாக இருக்கனும். இது தான் ரொம்ப முக்கியம். எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கு இல்ல.. இவங்க பாட்டுக்கும் மானவாரிக்கு நம்மை அடிச்சிக்கிட்டே இருந்தா, நம்ம உடம்பும் தாங்கனும் இல்லையா... அதுவும் கூட்டமா சேர்ந்து கும்மனும்னு முடிவு செய்த பிறகு நாம அங்க இருக்கலாமா.. கூடவே கூடாது..... அதனால் ஒரு ஸ்டேஜுக்கு மேல .. ஒரேஏஏ ஓட்டம் .. யார் துரத்தினாலும் பிடிக்கமுடியாத ஸ்பீட் ல ஓடிடனும். இந்த ஓட்ட பயற்சி எல்லாம் நீங்க முன்னமே கத்துக்கிட்டு இருக்கனும்.

4. வீட்டை விட்டு ஓடி விட்டால் வருவது எப்படி : இதுவும் ஒரு தனி கலை. ஓட்டாமா ஓடி நான் எப்பவும் போய் தஞ்சம் புகும் இடம் என் அத்தை வீடு தான். அங்க உள்ளே போனவுடன், அத்தைக்கு இங்க என்ன நடந்தது தெரியாதவாறு (தெரிந்தால் அவங்க தனியா அடிக்க ஆரம்பிப்பாங்க), சிரித்த முகத்தோடு அத்தை பிள்ளைகளுடன் நன்றாக விளையாடிவிட்டு, அங்கேயே நல்லா கொட்டிக்கிட்டு, உடம்பு வலி போக அங்கேயே படுத்து நல்லா தூங்கிட்டு, பொறுமையாக வருவேன். வரும்போது, மெதுவாக வீட்டில் யார் யார் எந்த பொஷிஷனில் இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு சத்தமே இல்லாமல் நைஸ் ஸாக பெருசுகள் எங்க இருக்குன்னு பாத்து செட்டில் ஆயிடுவேன். அவங்க தான் நம்மை மேற்க்கொண்டு காப்பாத்துவார்கள்.

விழு புண்களை சரி செய்ய டிப்ஸ் :- எப்படியோ இப்படியே கண்டிநீயூ செய்து , நினைத்ததை சாதித்த பிறகு - வீட்டுல நம் மேல ஓவரா பாசத்தோட இருக்க ஒரு பெருசா பாத்து செட்டில் ஆகிடனும். தாத்தா/ஆயா ஈஸ் பெஸ்டு. அவங்க கிட்ட வீங்கிய இடங்கள், தொண்டை புண் இவற்றை விக்கி விக்கி...விக்கி அழுதுக்கிட்டே காட்டனும். அவங்களும் பரிதாபப்பட்டு தேங்காய் மரக்கொடி எண்ணெய், அய்யோடக்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தேய்த்து நம் விழுபுண் களை ஆற்றி அடுத்த போருக்கு நம்மை தயார் படுத்துவார்கள். தொண்டை புண் னுக்கு பால் குடிக்கனும் பிறகு மனத்தக்காளி பழத்தை சாப்பிடனும், மனத்தக்காளி இளை சாறு, அதில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

இது வரை இப்படி அடம் பிடித்து என்ன சாதித்தேன் னு கேட்கறீங்களா? நல்ல கேள்வி.நிறையவே இருக்கு.. உங்களுக்காக சில.. :)

1.ஒரு முறை சினிமா வுக்கு அழைத்து போக சொல்லி கேட்டு.. ஆயா முடியாது என்ற சொன்னவுடன், செருப்பு விடும் இடத்தில் அழ ஆரம்பித்தது தான், தொடர்ந்து ஒரு 4.5 மணி நேரம் உருண்டு பிரண்டு, கை கால் எல்லாம் உதைத்து அழுதேன்..(அதை எல்லாம் சரியா செய்துவிடுவேன்) நான் அழுவதை பார்த்து தாத்தாவிற்கு நெஞ்சு வலி வந்துவிட, "அம்மா அழாதம்மா நீ அழுதா தாத்தாவால தாங்க முடியலம்மா.."ன்னு சொல்ல...அதை சாதகமாக பயன்படுத்தி அவரிடமே 4 ரூ வசூல் செய்துவிட்டு போனா போகுது என்று அடங்கினேன். ஆனா சினிமா அழைத்து செல்ல யாரும் இல்லாததால் பணம் மட்டும் கொடுத்துவிட்டார்கள். அடியா? இல்ல கிடைக்கல.. அடிவாங்கினது எல்லாம் தனியா பதிவாக போட்டு இருக்கோம் இல்ல...

2. மற்றொரு நாள், மதியம் 12 மணிக்கெல்லாம் எனக்கு பசி எடுத்துவிட்டது. ஆயா அப்போது தான் உலை கொதித்து அரிசி போட்டார்கள், அதை நானும் பார்த்தேன். பசியை அடக்க முடியவில்லை, 10 நிமிடம் இரும்மா வெந்துடும் னு சொல்லியும் நான் கேட்கவில்லை. உடனே உட்கார்ந்து கை காலை உதைத்து அழ ஆரம்பித்தேன்.. "அய்யோ வயறு எல்லாம்...பசிக்குதே. .இந்த வீட்டில் பசிக்கு க்கூட சாப்பாடு போட மாட்டேங்கறாங்களே, இப்படி அழுது அழுது கேக்க வேண்டியதா இருக்கே..என்னால பசிய தாங்கவே முடியலையேன்னு....இதை யாருமே கேக்க மாட்டீங்களா... "ன்னு அழ ஆரம்பிச்சது தான்.. .ஆயாவுக்கு நிஜமா என்ன செய்யறதுன்னு தெரியாமல், கொதிக்கற உலையில் இருந்து வேகாத அரிசியை அப்படியே ஒரு தட்டில் போட்டு உப்பு சேர்த்து, "திண்ணு தொல ஆன உன் வாய மட்டும் மூடு ன்னு கொடுத்துட்டு போயிட்டாங்க.. " நானும் சரி போனபோகுதுன்னு அந்த வேகாத (அவ்வ்வ்வ்வ் .. ) அரிசியை உட்கார்ந்து சாப்பிட்ட்டேன்.... :(

3. லேட்டஸ்ட் : பாத்ரூம் கதவை மூட போகும் போது என்னுடைய இடது கை கட்டை விரல் கதவிடுக்கில் இருப்பதை கவனிக்காமல் வலது கையால் கதவை நன்றாக இழுத்து சாத்திவிட்டேன். கட்டைவிரல் சூப்ப்ராக நசுங்கி....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா என்னா வலி.. வலி தாங்க முடியாமல் ஓஓஒ வென்று அழகை மட்டும் இல்லை.. நிஜமாக கால் பூமியில் நிற்காமல் குதித்து குதித்து அழுகை. அவ்வளவு வலி. கத்தின கத்தில் கூட்டம் சேர்ந்துவிட்து தான். என் மகனுக்கு மட்டும் ஒரே சிரிப்பு... "ஐ..கைய நசுக்கிகிட்டயா?... எங்க காட்டு ...ஐ..உன் கட்டை விரல் இப்பத்தாம்மா ரொம்ப அழகா இருக்கு்.!! ஆமா நீயே தானே நசுக்கிகிட்டே எதுக்கு இப்படி ஊரையே தூக்கற மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற. . வாயை மூடி சத்தம் இல்லாமல் அழு" என்றான். அவன் சொன்னதற்காகவே.."எனக்கு எவ்வளவு வலிக்குது, நீ எப்படி என்னை சத்தம் போடாமல் அழ சொல்ற" ன்னு இன்னும் கத்தி அழ ஆரம்பித்தேன்" புள்ள பயந்து போய்.. "அய்யோ யம்மா தெரியாம சொல்லிட்டேன்.. நீ கத்தாத... " ன்னு என் வாயை அடைக்க. வர... "என் வாயை அடைச்சா இன்னும் கத்துவேன்" னு இன்னும் சத்தம் போட்டு கத்த.... அவ்வ்வ்வ்வ்.. கடைசியில என் புள்ள ..சரி எப்படியோ அழுது தொலச்சிக்கோஒ.... ன்னு விட்டுட்டு போயிட்டான்.....ம்ம்ம் அது!!

அணில் குட்டி அனிதா : தூஊஊஊஊ..!!!

பீட்டர் தாத்ஸ் : “I have done that," says my memory. "I cannot have done that" -- says my pride, and remains adamant. At last -- memory yields.”

மாமியாரிடம் யாராவது இப்படி திட்டு வாங்கி இருக்கீங்களா?

திருமணம் ஆன 15 நாட்களுக்குள் என் மாமியாரிடம் திட்டு வாங்கினேன். என்னவோ அவங்களுக்கு நல்ல நேரம் தப்பிச்சிட்டாங்க'ன்னு நினைச்சுக்கலாமா? அப்படித்தான் நினைத்து போனா போகுது நானும் விட்டுட்டேன்.

நான் திருமணம் முடித்து என் கணவருடைய வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு நாள் என் மாமியார் மீன் குழம்பு வைத்திருந்தார். எனக்கு எப்பவும் ஆயா மீன் ஆய்ந்து கொடுத்து சாப்பிட்டு தான் பழக்கம், அதனால் இப்பவும் எனக்கு ஆய்ந்து சாப்பிட சோம்பேறி த்தனமும் சரியாக ஆயவும் தெரியாதது என்பது ஒரு கேவலமான விஷயம் தான். என்ன செய்வது மீனுக்கும் எனக்கும் அவ்வளவு ராசி, எப்படி ஆய்ந்து சாப்பிட்டாலும் தொண்டையில் எப்படியும் ஒரு முள் குத்தி, என்னை அழவைக்காமல் விடுவதில்லை. அதனால், மீன் மட்டும் யாராவது ஆய்ந்து கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையை வளர்த்துக்கொண்டேன். ஆய்ந்து கொடுக்க யாரும் இல்லாத பட்சத்தில் " நீ யாரோ நான் யாரோ" ன்னு மீனை பார்த்து சொல்லிவிட்டு மீன் குழம்பு மட்டும் போட்டு சாப்பிடுவேன்.

அன்று என் மாமியார், என் கணவருக்கும் எனக்கும் பரிமாறிவிட்டு உட்கார்ந்து நாங்கள் சாப்பிடுவதை ரசித்துக்கொண்டு இருந்தார், நான் மீன் ஆயத்தெரியாமல் ஆய்வதை பார்த்து "என்ன பொண்ணு மீன்'ஐ ஆய சொன்னா பூச்சி பிடிக்குது?" என்று கிண்டல் அடித்துவிட்டு, நான் ஆய்வதை பார்த்து சிரித்தவாறே இருந்தார்கள். (but no help from anyone!! )

புது மனிதர்கள், யாரிடம் போய் மீன் ஆய்ந்து கொடுன்னு கேட்பது, சரி நாமே முயற்சி செய்வோம் னு ரொம்ப தீவரமாக நான் மீன் ஆய்வதில் கவனமாக இருந்ததில் என் கணவர் சாப்பிடுவதை கவனிக்கவில்லை. என் மாமியார் திருப்பி இரண்டு முன்று முறை அவருக்கு பரிமாறியவுடன், என்னடா இது ஒரு மீனை நாம இன்னும் ஆய்ந்தே முடிக்கல அதுக்குள்ள அவர் 2,3 ரவுண்டு சாப்பிட்டுடாறா? என்று அவர் சாப்பிடுவதை அதற்கு பிறகு தான் தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்தேன்.....ஆனா திரும்பி என் இலைக்கு நான் வரவே இல்லை.


அத்தனை அழகாக மீனை இது வரை யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை :) ஒரு மீனை வாலை பிடித்து எடுக்கிறார், வாய்க்குள் அப்படியே போட்டு ஒரே இழூ....... வெளியில் வருவது வெறும் முள் தான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..எப்படி இப்படி..??? உள்ளே மீனா போகுது வெளியில வரும் போது வெறும் முள்ளு மட்டும் தான் வருது?? இது ஒரு கலை போலவே. ? முதல் மரியாதை சினிமாவில் நடிகர் திலகம் சூப்பரா சாப்பிடுவாரு.. அந்த அம்மா ராதாவும் சாப்பிடுவாங்க. .இப்படி சினிமாவில் பார்த்தது ...இப்ப நேரா பார்ர்க்கும் போது வாயில் எச்சில் ஊறாமல் இருக்குமா சொல்லுங்க?

எச்சில் ஊற ஊற அவர் சாப்பிடுவதை நான் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் சாப்பாட்டில் என் கவனம் செல்லவே இல்லை. .. எப்படி முள் வாய்குள்ள குத்தாமல் வெளில வருது ன்னு ஒரே ஆச்சரியம். ! புது பெண்ணாச்சே, புது வீடு , புது மனுஷங்களாச்சேன்னு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்கலாம். நமக்கு தான் அந்த பழக்கம் எந்த காலத்திலியும் இருந்தது இல்லையே..! ரொம்ப ஆர்வத்தில்.....

:))) அய்ய்ய்..!! எப்படிங்க நீங்க மட்டும் இப்படி சாப்படறீங்க? " எங்க வீட்டுல எல்லாம் இப்படி நாங்க சாப்பிட மாட்டோம் னு.." ன்னு சொல்ல ொல்ல...

என் மாமியாருக்கு வந்ததே பாருங்க கோவம்...... "இந்தா..! உனக்கு வேணும்னா இன்னும் நாலு எடுத்து வச்சி சாப்பிடு..! ஏன் அவனை இப்படி வாய் வெறிக்க பார்க்கற...உன்னைமாதிரி என்ன பூச்சி பிடிக்க சொல்றியா?. யாரும் சாப்பிடாததைய என் புள்ள சாப்பிட்டுடான். ஒரு மீன் ஆய' க்கூட தெரியாம பொண்ணை வளத்து வச்சி இருக்காங்க பாரு.. அவன் சாப்பிடறதை எப்படி பாக்குது பாரு.. ? " ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்.......கல்யாணம் ஆகி ஒரு 15 நாள் கூடவும் ஆகி இருக்காது. ... எனக்கு நிஜமா ஏன் அவங்க என்னை அப்படி திட்டினாங்கன்னு தெரியல. .எனக்கு கோவமும் வரலை, பயமும் வரலை... என் நினைவு எல்லாம் என் வீட்டுக்காரர் வாயில் முழுசாக சென்ற மீனும், வெளியில் வந்த முள்ளும்.... தான்...

ஆனால் திருப்பி அவரை பார்க்கவில்லை தான். என் மாமியார் என்னை அப்படி திட்டியதற்கு என் வீட்டிக்காராரிடம் இருந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் வெறிப்பதை மட்டும் ஒரு தரம் திரும்பி பார்த்துவிட்டு, அவர் பாட்டில் அவருடைய வேலையில் மும்மரமாக இருந்தார். அதாங்க மீன் சாப்பிடுவதில். :)

"சரி நோ சப்போர்ட்டு....சோ.. ஐ அம் த ஹெல்ப்லெஸ்ஸு" ன்னு நினைச்சுக்கிட்டு என் மீனை ஆய திரும்ப சென்றுவிட்டேன்.

**************

ஆனா எங்க வீட்டுக்கு வந்து, ஆயாவிடம்.."ஆயா ஏன் நம்ம வீட்டில் மீனை அப்படி யாரும் சாப்பிடல..நீ ஏன் எனக்கு சொல்லித்தரல.."ன்னு கேட்டுவிட்டு மாமியார் திட்டியதையும் சொன்னேன். ஆயாவும் சிரித்துவிட்டு "இனிமே பாக்காத....அவங்க புள்ளைக்கு கண்ணு படும்னு நினைச்சு இருப்பாங்க.." ன்னு சொல்லிட்டு "எல்லா மீனையும் அப்படி சாப்பிட முடியாது பாப்பா . நாம அந்த மீன் எல்லாம் நம்ம வீட்டுல வாங்கறது இல்ல .". என்றார். "அது அயில மீனா இருக்கும்.. நாம் எப்பவுமே அது வாங்கறது இல்லையே? "என்றார்.

என்னவோ.. என் கணவர் , இப்பவும் அவங்க வீட்டுக்கு (இப்பவும் இங்கே நாங்கள் அயில மீன் வாங்குவதில்லை) அப்படித்தான் சாப்பிடுகிறார். நானும் இன்னும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். :) திட்டத்தான் யாரும் இல்லை.... :))))))))).

அணில் குட்டி அனிதா : திட்ட யாரும் இல்லையா ?வூட்டுக்காரு திட்டறது எல்லாம் கணக்கே இல்லையா? இன்னும் மீன் சாப்பிட தெரியலன்னு மீன் குழம்பு வைக்கும் போது எல்லாம் அம்மணி க்கு பெரைடு நடக்கும் ..அம்மணி யும் ஹி ஹி.. ன்னு சிரிச்சிட்டு வெறும் குழம்போட கதைய முடிச்சிடுவாங்க...

பீட்டர்தாத்ஸ் : Give me a fish and I eat for a day. Teach me to fish and I eat for a lifetime

புலி' யை கூட்டுக்குள்ள அடச்சிப்பிட்டாங்களே.... . !! :)

எப்பவும் அமைதியா உறுமிகிட்டு அங்கயும் இங்கயுமா ஜாலியா சூடான் காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த நம்ம புலி, தீடீர்னு பம்முதூஊஊஊ............. பதுங்குதூஊஊஊ. .............???!! அடடா.. புலிக்கு என்னா ஆச்சின்னு பயந்துபோயி........ புள்ளைய விசாரிச்சா... ... கல்யாணமாம்..!!! ..:))))))))

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூ !!



அட.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர்ர் ன்னு சவுண்ட விட்ட புலி இனி சவுண்டு விட நேரம் பாக்குது... ஹிம் ஸ்டார்ட் தி மியூசிக்கு..............

சிவா weds தர்சினி...



சிவா வை.. கும்மறவங்க சே..சே.. வாழ்த்தறவங்க எல்லாரும் அப்படியே என்னோட அணில் மாதிரி தாவி.. தாவி இங்க போய்.. சிவா விற்கு வாழ்த்து சொல்லிட்டு போவீங்களாம்..

அணில் குட்டி அனிதா :- ஆமாம்மா.... வாழ்த்து சொல்றவங்க அத்தனை பேருக்கும் சூடான் புலி... இந்தியா வந்தவுடன்.. புலிப்பால் விருந்து வைப்பாரு..ன்னு அவரோட கம்பெனி சார்பாக சொல்லிக்கிறேன்... :))))))) (தல என்னை தனியா கவனிக்கனும்..சரியா.. :) )


பீட்டர் தாத்ஸ் :- To keep your marriage brimming, With love in the wedding cup, Whenever you're wrong, admit it; Whenever you're right, shut up

சில பாடல்கள்.....

1. தோல்வி நிலையென நினைத்தால்...



2. ஒவ்வொரு பூக்களுமே....




3. கடவுள் தந்த அழகிய வாழ்வு ....




4. கடவுள் உள்ளமே...



5. வெற்றி நிச்சயம் இது ....



6. வெற்றி கொடி கட்டு..

க்ளைமாக்ஸ் காட்சிகள் !!

ஒரு திரைபடத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது இந்த பதிவை எழுதும் வரை வந்து இருக்கிறதே, இது தான் இயக்குனரின் வெற்றி, பார்க்கும் பார்வையாளர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கம் எதிர்மறையாகும் போது சில நேரங்களில் படம் தோல்வி அடைந்தும் விடுகிறது. தோல்விக்கு க்ளைமாக்ஸ் மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்.

க்ளைமாக்ஸ் ..

1. காட்சி அமைப்புகள் நாம் நினைத்தவாறே அமைந்திருந்தாலும் ஒரு தாக்கம் இருக்கும்
2. காட்சி அமைப்பு இப்படி இருந்திருக்கலாமே என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்கியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

பூ : தான் விரும்பியவனின் வாழ்க்கை நன்றாக அமையவில்லை என்று தெரிந்ததும், மனம் நொந்து, அடக்கமுடியாமல் "ஓ வென்று அழும் காட்சி....... " அந்த கடைசி சில நிமிடங்களில் அந்த பெண்ணை போலவே, அவன் திருமணத்திற்கு பின் சுகமாக இருக்கிறான் என்ற நம்மின் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இந்த பெண்ணும் இனி நிம்மதியாக இருக்க மாட்டாளே ! என்ற தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.......

ஆனந்த தாண்டவம் : அந்த கடைசி கெஞ்சலில் அந்த பெண்ணிற்கு அவன் வாழ்வளித்திருந்தால், அவள் இறந்திருக்க மாட்டாள், கடைசியாக அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க ஏன் எல்லோரும் மறந்து போனார்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வி...... ஏன் இப்படி அனைவரும் சுயநலமாக இருந்து ஒரு உயிரின் இழப்பிற்கு காரணமானார்கள்......... அதுவும் அந்த பெண்ணை விரும்பியவன்.." சாரி" சொல்லி சென்றது... .....ம்ம்ம்ம்...:((((( இது தான் தாக்கம்...

சேது : இவ்வளவு சோகம், வலி வேண்டாமே என்று இன்றும் நினைக்கவைத்த படம்

பிதாமகன் : இதுவும் அப்படியே, சூர்யாவை சாக அடித்து இருக்க வேண்டாம் ..ஒருவரின் பாசத்தைக்காட்ட மற்றொருவரை சாகத்தான் அடிக்க வேண்டுமா என்ற கேள்வியோடு...

அன்பே சிவம் ; தனி மனிதனின் தியாகமும் அவனின் ஆசாபாசங்கள் அத்தனையும் மறுக்கப்பட்ட, அவனாலேயே மறைக்கப்பட்ட தொடர்கதை... தியாகிகள் எப்போதும் இப்படித்தான் தங்களின் வாழ்க்கையை தொடரவேண்டுமா என்ற கேள்வியோடு...

நந்தா : பாலா;வின் திரைப்படங்களில் மற்றொருமொரு சோகமான க்ளைமாக்ஸ்... ஏன் பாலாவிற்கு யாரும் சந்தோஷமாக வாழ்ந்தால் பிடிக்காதா என்ற கேள்வியுடன் ....

கல்கி : பாலச்சந்தர் அவர்களின் படங்களில் மிகவும் பிடிக்காத படங்களில் ஒன்று இது. என்ன ஒரு மோசமான கதை... க்ளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் நம் கலாசாரம் அல்ல, ஒருவரை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு முட்டாள்தனமானது... அப்படி ஒரு ஆணிடம் இருந்து தான் குழந்தை பெற்று... அவனால் வாழ்க்கையை இழந்த குழந்தை இல்லாத இன்னொரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டுமா? இந்த படத்தில் க்ளைமாக்ஸ் மட்டும் இல்லை எதுவுமே ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாததால் ஏற்பட்ட தாக்கம்...

உதிரிப்பூக்கள் : இப்பவும் எப்பவும் மிகவும் பிடித்த க்ளைமாக்ஸ், தன்னை உணர்ந்து, விஜயன் கதாபாத்திரம் தானே தன் முடிவை தேடிக்கொள்வது. அதை ஊர் சனம் அத்தனையும் நின்று வேடிக்கை பார்ப்பது. இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு ஒரு சல்யூட். "நான் ஒருவன் கெட்டவனாக இருந்ததால் நல்லவர்களான உங்களை எல்லோரையும் இன்று கெட்டவர்களாக்கிவிட்டேன் " என்ற *வசனம் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. (*வார்த்தைகளில் தவறிருக்கலாம் எப்பவோ பார்த்தப்படம்)

சிந்துபைரவி : குழந்தை இல்லா பெண்ணிற்கு இன்னொரு பெண் தியாகியாகி குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமாக (மட்டும்) ஆக்கப்பட்ட மற்றுமொருப்படம். இந்த தியாகி என்ற பெண்ணிற்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள், எதிர்கால வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லையா?...இல்லை இருக்காதா..?. என்னவோ.. புதுமை படைக்கிறேன் என்ற இவரின் படங்களில் பல எரிச்சல்களை எற்படுத்தியவை. இதிலும் அப்படி ஒரு க்ளைமாக்ஸ் ..மேல் சொன்ன கேள்விகளுடன்...

காஞ்சிபுரம் : க்ளைமாக்ஸ்'ஸில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரமும் இறந்துபோவார் என்று நினைத்தேன்.... இப்பவும் அவர் ஏன் இறக்கவில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, மகளை கொன்றுவிட்ட பிறகு, மகள் மட்டுமே வாழ்க்கை என்ற அவருக்கு ஏது (அ) எது இனி வாழ்க்கை? இயக்குனர், அதை ஏன் யோசிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கிறது. இப்படி பைத்தியம் ஆக்கி படத்தை முடிக்க வேண்டுமா?

சிறைச்சாலை : பொய்யான காத்திருப்பு... சுத்தமாக பிடிக்கவில்லை..ஏன் இப்படி? பொய்யான காத்திருப்புகளுக்கு முடிவு இல்லையா... ? ஒருவர் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பு நம்மை சிந்திக்க வைக்காமல் செய்துவிடுகிறதா? சிந்திக்க முடியாமல், பைத்தியம் போல் ஆக்கி கொண்டால் மனிதனின் அறிவுக்கு வேலை இல்லாமல் போகுமே... :((. என்னவோ இந்த க்ளைமாக்ஸும் ஏன் இப்படி என்ற கேள்வியோடு நிற்கிறது...

மின்சாரக்கனவு : நிஜமாகவே எதிர்பார்க்காத முடிவு, அரவிந்த்சாமி கதாபாத்திரம் சாமியார் ஆனது.. :)))))))) வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதற்கு உதாரணம் ... ஏன் காதல் தோல்வி இப்படித்தான் முடியவேண்டுமா என்ற கேள்வியோடு...

நான் கடவுள் : படம் இன்னமும் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் நிறைய எழுத இருக்குமென்று நினைக்கிறேன்... பாலாவின் படமாயிற்றே.... . ?! :)

பதிவின் க்ளைமாக்ஸ் : இன்னமும் நிறைய நிறைய படங்கள் இருக்கின்றன... நினைவில் என்றும் இருப்பவை போல எழுதும் போது நினைவில் வந்தவை இவை மட்டுமே...

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... .அம்மணி க்கு மட்டும் க்ளைமாக்ஸ்'ஸே வர மாட்டேங்குது.... நானும் எதிர் பாத்து எதிர் பாத்து ஏமாந்து போறேன்.... :(((

பீட்டர் தாத்ஸ் :It was a great movie, but I didn't think it was going to end like that,

எது சுதந்திரம்....

பெண் - என்று தனியாக எடுத்துக்கொண்டால்,

1. அதிக சுதந்திரம்
2. சரியாக அறியப்பட்டு, புரியப்பட்டு நடைமுறை படுத்திக்கொள்ளும் சுதந்திரம்
3. சுதந்திரம் - அப்படீன்னா?

இந்தியாவை பொறுத்தவரை இந்த மூன்றும் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதாக தெரிகிறது. அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு அழிந்து போன பெண்கள் உண்டு, இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் சுதந்திரம் அவளை சுற்றியுள்ள அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறியப்பட்ட ஒற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. எங்கேயோ படித்த நினைவு-

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

"அவள் அப்படித்தான்" படத்தில் நடிகை சரிதா வை (என்ற கதாபாத்திரத்தை) திருமணம் செய்து கொண்டுவரும் கலைஞானி 'யின் முன்னாள் காதலியான ஸ்ரீபிரியா (என்ற கதாப்பாத்திரம்), கேட்பார் "பெண் சுதந்திரத்தை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? " அதற்கு சரிதா மிகவும் யதார்த்தமாக கேட்பார் "அப்படின்னா?"

ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்,

தேவைகள் என்பது அவரவரை பொறுத்தது, சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, (இதிலும் சிக்கல் உள்ளது, எது சுதந்திரம் என்ற புரிதலோடு் சிலரும், புரிதல் இல்லாமல் பலரும்) அது பெரிய விஷயமாகவும் போராடி பெற்று நிலை நிறுத்தி வெற்றியை கொண்டாட வேண்டிய விஷயமாக இருக்கிறது

அது என்னவென்றே தெரியாமல், வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவிப்பவர்களும் உண்டு. அதற்காக அந்த பெண் முட்டாள் அறியாமையில் உழல்பவள் அவளுக்கு உலகம் தெரியவில்லை என்று நினைக்கவேண்டியதில்லை, அப்படி நினைத்தால் அது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனப்பிதற்றல்கள் எனலாம்.

எல்லாம் தெரிந்தும், இது தான் என் வாழ்க்கை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கும் சுதந்திரம் என்பது அந்த வட்டத்துக்குள் ஆரம்பித்தும், தொடர்ந்தும், முடிந்தும் விடுகிறது.

ஆக சுதந்திரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம், தனி நபர் நடைமுறை வாழ்க்கையில் அது எவ்வளவு எப்படி தேவைப்படுகிறது என்பது அவரவரை பொறுத்தது. வெளியில் நின்றுக்கொண்டு வீர ஆவேசமாக இது தான் "பெண் சுதந்திரம்" என்று கூச்சலிடவும், அறிவுறத்தவும், கோபப்பட்டு பொங்கி எழுதலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒற்றுவராது.

"நீ நல்லா இருக்கியா ..சந்தோஷம்.. .நான் நல்லா இருக்கேனா... சந்தோஷம்...!! " இது தான் தாங்க வாழ்க்கை.... இதுல சுதந்திரம் எங்க இருக்கு எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சிகோங்க... புரிஞ்சிக்கோங்க... ... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


விகடனுக்காக எழுதியது -
http://youthful.vikatan.com/youth/india63/index.asp
http://youthful.vikatan.com/youth/india63/kavitha15082009.asp

நன்றி -சிபி
நன்றி - விகடன்


!!! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !!!!


.

கிருஷ்ணர் ரொம்பவே பாவம் தான்... :) கேட்டுத்தான் ஆகனும்..!!

இன்று கிருஷ்ண ஜெயந்தி... .. கிருஷ்ணனின் கவனத்தை என் பக்கம் திருப்ப இதை விட நல்ல ஐடியா எனக்கு கிடைக்கவில்லை :))))))))..அவர் ரொம்ப பாவம் தான் ஆனாலும் அதை எல்லாம் பார்த்தால் நடக்குமா?

பார்வைகள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கர்நாடக சங்கீத பாடல் பதிவிடுகிறேன். என்ன சொல்ல வரேன்னா....

நான் முறையாக சங்கீதம் பயிலவில்லை.. .., முயற்சி செய்தும்.. உருப்படியாக பாட்டு கத்துக்கல... ஸ்வர வரிசை தாண்டியது இல்லை... அது என்னவோ என்ன மாயமோ...தெரியல.... பாட்டு ஆரம்பிக்கறதுக்குள்ள நான் வகுப்புக்கு போவதை நிறுத்திவிடுவேன் :))

இசையின் அரசி பாடிய இந்த பாடலை அடிக்கடி கேட்கும் பழக்கம் எனக்குண்டு, கேட்டு கேட்டு மண்டையில் ஏற்றி ஏதோ பாடி இருக்கேன்.

குறை ஒன்றும் இல்லை !!



தாளம், ....ம்ம்.. ..ராகம்.. ம்ம்.. எல்லாமே கேட்டு கேட்டு பாடியது தான்... சங்கீதம் பயின்றவர்கள் போன்று பாடி இருக்க வாய்பில்லை. ஏதோ முயற்சி செய்து இருக்கிறேன். சங்கீதம் பயின்றவர்கள் குறையை சுட்டி க்காட்டினால் திருத்திக்கொள்ளகிறேன்.

அணில்குட்டிஅனிதா :................... திருத்தி??!!!! என்ன செய்ய போறீங்க.. திருப்பி பாட போறீங்களா கவி... ?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !! மக்கா....... உங்களுக்கு எல்லாம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் கேட்டுக்கோங்க..அம்மணி கேட்டாங்களேன்னு யாராச்சும் குறை இருக்கு..... தாளம் இங்க நொல்ல அங்க நொட்ட ன்னு சொல்லி... அம்மணிய உசுப்பேத்தி இன்னொரு முறை பாட வச்சிங்க... நான் ச்சும்மா இருக்க மாட்டேன்..சொல்லிட்டேன்...... ... நான் என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் ஆம்ம்மா.......... என்னைய டென்ஜன் ஆக்கிடாதிங்க.. :((

பீட்டர் தாத்ஸ் : Music is enough for a lifetime, but a lifetime is not enough for music

ப்ளாகர் சிலரை பற்றிய கவிதைகள்...

என்னால் முடிந்த, எனக்கு தெரிந்த, புரிந்ததை எழுதி இருக்கிறேன்.... தப்பு எவ்வளவு இருக்கோ அவ்வளவு போக மீதமுள்ள பொற்காசுகளை எனக்கு எல்லாரும் தனித்தனியா கொடுங்க... நோ குரூப்பிசம் என்டர்டயிண்டு..ஹியர்..!!

அப்புறம்... அந்த ஆட்டோ ஆட்டோ ன்னு சொல்றாங்களே..அதை பத்தி எல்லாம் உங்க யாருக்கும் இது வரைக்கும் தெரியாதுன்னு கேள்விப்பட்டேன்.. :) நிஜமா உங்களுக்கு எல்லாம் தெரியாது தானே ?!! ம்ம்ம் அது..!! அப்படியே மெயின்டெயின் செய்துக்கோங்க.... சரியா ..:)))

சந்தோஷத்துடன் சந்தோஷ்' லிருந்து ஆரம்பிக்கிறேன்..

அமைதிக்கு
மறுபெயர்
சாந்தி..சாந்தி சாந்தி... (சே...!!).
சந்தோஷ்...சந்தோஷ்...சந்தோஷ்.... !!
ஆனால்
நீ
பொங்கிவிட்டால்
பூமி
இல்லை...
நாங்களும்
நடுங்கிபோகிறோம் ...!!

**********
தலை கனத்தோடு
உன்
பக்கம் வந்தால்
தலைதெறிக்க
ஓட வைக்கிறாய்
உன்
ந(க்கல்)கைச்சுவை
எழுத்துக்களால்......!!

@@@@@@@@@@@@@@@@@@@@

முல்ஸ்

பப்பு
இல்லையென்றால்
உன்
பதிவுகள் இல்லை !!

பப்பு
நீ
எப்போது விழிக்க போகிறாய் ?
நாங்கள்
எப்போது
தப்பிக்க போகிறோம்... ?

****
எப்போதும்
உன்
கைகளில்
துண்டு காகிதம், கத்திரி,கலர்கள், கேமரா
ம்ம்ம்.ம்ம்ம்ம்..............
நீ
எதை
வேண்டுமானாலும்
வச்சி'க்கோ......ஆச்சி......
ஆனால்
எங்களையும்
பப்புவையும்
பத்தி
கொஞ்சமா
யோசிச்சிக்கோ..மச்சி....!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிபி
ஸ்ஸ்ஸ்ஸ்.........
உன்
எதிர்கவிதைகளால்
என்
கவிதைகள்
பிரபலம் ..
ஹை........
நானும் பிரபலமாயிட்டேன்....

***
உன்
கலாய்த்தல்
பின்னூட்டம்
இல்லாத
என் பதிவுகள்
ஏதோ
ஒன்றை இழந்தது
போல..............!!

***
என்ன
பேசினாலும்
எப்படி
பேசினாலும்
சிரிக்கவைக்கிறாய்..

நீ
சுவாசிப்பது
என்ன
* N2O வா?

*N2O= Nitrous oxide, happy gas/laughing gas

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜமால்


யூ த ஃப்ஸ்டூ !!

முடிவுகளை
பற்றி
உனக்கு
கவலையில்லை
எப்போதும்
நீ
ஆரம்பம்.... :)

@@@@@@@@@@@@@@@@@@@@

ஹே ராம்

டீச்சர்
வணக்கம்
டீச்சர்..!

குட்மார்னிங் டீச்சர் !!
குட் ஆஃப்டர்னூன் டீச்சர் !!
குட் ஈவினிங் டீச்சர் !!
குட் நைட்..டீச்சர் !!

டீச்சர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

அவ்வ்வ்வ்வ்வ்......இதுக்கு மேல எழுத வரல.....டீச்சர்'ஐ பாத்தாவே ஒரே பயம் பயம்மாஆஆஆ இருக்கு....!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாக்லேட்

அன்பினால்
கட்டி
போடுபவன்
அது
எதுவரை
என்பதை புரிந்தவன்
அதுவரையில்
அதை
நிறுத்தியும் வைப்பவன் :)

இசைஞானி' க்கும்
இவனுக்கும்
என்ன
சம்பந்தம் ??

இதுவரை
எனக்கு
தெரியவில்லை..
உங்களுக்கு
தெரியுமா?

@@@@@@@@@@@@@@@@@@@@@

ரவி

இணையத்தின்
இம்சை !!

இளகிய
மனதோடு
எல்லோர்
இதயத்திலும்
ஒரு
ஓரத்தில்
இடம்
பிடித்தவன்... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@

கிருஷ்ணா - லக்கி

உள்ளிருக்கும்
அவனில்
நீங்காத
நல்லவன்
இருக்கிறான்

சில
எழுத்துக்களில்
ஏனோ
எகத்தாளம்
தூக்கல்.!!

ஏனென்று
விடைக்கான
அவனால்
மட்டுமே முடியும்..

அன்பான
ராட்சஷன்.. !!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குசும்பன்

உன்
பதிவுகளில்
பெயர்
மாற்றங்கள்
அருமை....

குசும்பன்' ஐ
கூட
பசும் பொன் !!!
என்று
சொல்லலாமோ?!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிரபா - தெக்கிக்காட்டான்

நீ
பேசாதவரை
நாங்கள்
தப்பித்தோம்

நீ
பேச ஆரம்பித்தாலே............
கடவுள்
பஞ்சியை
கொடுத்ததின்
நோக்கம்
விளங்கிவிடும்... !!

(ஹி ஹி..நீ பேச ஆரம்பித்தாலே நாங்கள் பஞ்சியை காதில் அடைத்துவிடுவோமே.... )

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முத்துலெட்சுமி

முத்தான
உன் பேச்சை
கேட்டபிறகு
ஏனோ
உன் எழுத்துக்களில்
முத்தில்லாதது
போன்ற
உணர்வு...........

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

புனிதா

நீ
பிழியும் சோக கவிதை
கண்டு
நிறுத்திவிட்டேன்
என்
சோகத்தை
பிழிய....

@@@@@@@@@@@@@@@@@@@@@

உண்மை தமிழன்

ரிப்பன்.........
பட்டத்து வால்............
ஜெட்' விட்டு சென்ற புகை...........
மாநகர இரண்டு கோச் பேரூந்து.........
மெரினா கடற்கரை.........

இப்படி
நீளமாக எதை பார்த்தாலும்
உன் பதிவுகள்
நினைவுக்கு வருகிறதே முருகா !!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிவா

"ஏதோ சொல்கிறேன்"
என்று...
எதையாவது
சொல்லாமல்
இது' தான்
என்று
சொல்பவன்..!!

(மன)
ஆழத்தை கடக்க
அசரும்
போதெல்லாம்...
இரண்டொரு வார்த்தையில்
எளிதாக
கடக்க வைப்பவன்..

எதையும்
"இல்லை" யென
சொல்லாத
உன் புன்னகை'யும்
உன் நட்பும்..

நான் பெற்றது
கடவுள்
எனக்களித்த
ஒரு வரம் ..!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அணில் குட்டி அனிதா : பொற்காசு கலக்ட் பண்ண இப்படி ஒரு வழியா.. அம்மணி சோத்துக்கு சிங்கி அடிக்கறாங்களோ....??? இப்படி டீசன்ட் பிச்ச ஆரம்பிச்சிட்டாங்க.... ஏதோ பாத்து போடுங்கப்பா தட்டுல... :)))))

பீட்டர் தாத்ஸ் : Know yourself, master yourself, conquest of self is most gratifying.

வீட்டை விட்டு.........

வந்தாகிவிட்டது.. எத்தனை வருட கனவு.. இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம், சுதந்திரமாக சிந்திக்கலாம், பேசலாம், சிரிக்கலாம், அழலாம், மனம் சொல்வதை மட்டும் கேட்கலாம்... இந்த சுதந்திரக்காற்று எத்தனை சுகமாக இருக்கிறது.... ஒரு முறை அடிவயிற்றுவரை காற்றை உள்ளிழுத்து சுவாசி்க்கிறாள் சுவாதி. அவள் கையை ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொள்கிறாள் ..உண்மைதான்....வந்தாகிவிட்டாது.

ஆயிற்று, ஏழு மணிக்கு ரயில், 6.45 க்கு வந்திவிட்டேன். லோயர் பர்த், 2ஆவது ஏசி கோச், லக்கேஜ் அரேன்ஜ் செய்துவிட்டு, டிக்கெட்''டை ஒரு முறை செக் செய்துவிட்டு, செக்கர் வந்தால் டிக்கெட் டை எடுக்க வசதியாக கைப்பையின் சைட் சிப்'பில் வைத்துக்கொண்டேன். கொஞ்சம் ரிலேக்ஸாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி... நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார்க்கிறேன். என்னவோ சொல்ல முடியாத ஒரு பயம் கவ்வுகிறது..... அய்யோ.....ஏன் இது? வேண்டாமே.....கண்விழித்து நேராக உட்காருகிறேன். இல்லை...இனி எதையும் திரும்பி பார்க்கக்கூடாது. இந்த நிமிடம் எனக்கு சொந்தம், இதை மட்டும் யோசிக்கவேண்டும். இதை மட்டும் ரசிக்க வேண்டும்.

என்னவோ என் முகம் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. இப்படி ஆகி, ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆயிற்று. சிரிக்க வேண்டுமென நினைக்கும் போது எல்லாம் சுற்றி இருப்பவர்களின் வார்த்தைகள் முகத்தை சிரிக்க விடாமல் இறுக்கிவிடும். எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?

இமைகள் உயர்த்தி யார் தன்னுடன் பிரயாணம் செய்கிறார்கள் என்று பார்க்க தோன்றவில்லை. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதட்டோர சிரிப்போடு, எங்கே போகிறேன் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மட்டும் என்ன செய்ய போகிறார்கள்?. இத்தனை வருடங்களாக நான் இழந்தவிட்டதை திருப்பி கொடுத்துவிடுவார்களா? இல்லை நீ போகாதே உனக்கு தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்று சொல்ல போகிறார்களா? அப்படி சொல்லத்தான் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லை அல்லவா? அப்படி இருக்க ஏன் இவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல வேண்டும். ஒருவரையும் பார்க்க பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ பேர் என்னின் இந்த முடிவிற்கு காரணம். சக மனிதர்களின் போலி சிரிப்பில் இனியும் என்னை ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை. போதும் ..போதும் என்கிற அளவு இந்த பொய்யான பேச்சையும் சிரிப்பையும் புன்னகையையும் பார்த்தாகிவிட்டது.

போதுமான பணம் பேங்கில் இருக்கிறது, ப்ளான் செய்த படி எல்லாம் சரியாக நடக்கிறது. எப்படியும் இரண்டு நாட்களில் போய் சேர்ந்துவிடுவேன். ம்ம்..... எதிர்பார்த்த என் வாழ்க்கையின் ஒரே ஒரு ஆசை இது... ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஆசைப்பட்டது முதல் முறையாக நடக்கிறது. இதோ ரயில் புறப்பட்டு விட்டது. இனி யாரும் என்னை தடுக்க முடியாது. என் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், இறுக்குமான என் முகம் லேசாக தளர்ந்தது. அங்கேயும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? மீண்டும் முகம் இறுகியது. மீண்டும் அப்படிப்பட்ட மனிதர்களை தான் சந்திக்க போகிறேனா? எங்கே சென்றாலும் இவர்கள் நிழலை போன்று துரத்திக்கொண்டு தான் வருவார்களோ?.

"டீ..டீ டீ....காப்பி.காப்பி......." ஒருவர் விற்றுக்கொண்டு சென்றார்...

எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த என் மனம் சுற்றுவதை நிறுத்தி, சற்றே இந்த சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தது.

பின்னாலேயே...."டின்னர் ஆர்டர் ப்ளீஸ்".மற்றொருவர் சின்ன நோட்டோடு வந்தார்.

"என்ன இருக்கு" ...... நான்

"சப்பாத்தி, ரோட்டி & மீல்ஸ் மேடம், வெஜ் ஆர் நாந்வெஜ்?"

அங்கே போனால் கண்டிப்பாக வெஜ் தான்... ஏன் இப்ப நாந்வெஜ் சாப்பிட்டால் என்ன? ........... ஒன் நாந்வெஜ் மீல்ஸ் ...ப்ளீஸ்! சீட் நம்பர் 32"

எழுதிவிட்டு கடந்து சென்றுவிட்டான்.

படிக்க நிறைய புத்தகங்கள் எடுத்துவந்தேன். அவற்றில் சில வாழ்க்கையின் தத்துவங்கள், தன்னம்பிக்கையை அள்ளித்தரும் புத்தகங்கள். வாழ்க்கையின் தத்துவங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்தேன்... என்னவோ அந்த புத்தகத்தை எடுத்தவுடன், எனக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. சிரிக்க முடியவில்லை, எல்லோரும் என்னை திரும்பி பார்ப்பார்கள், பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டுவார்கள். அவரவர் வேலையை தவிர அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதே பலருக்கு இங்கே வேலை. இவர்களுக்கு மத்தியில் எல்லோரையும் போல் நானும் நடிக்க வேண்டும். ஆனால் என் சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. மனதுக்குள் சத்தம் போட்டு சிரித்தேன். என் வாழ்க்கையை கொண்டு இப்படி ஓராயிரம் தத்தவ புத்தகங்கள் என்னால் கூட எழுத முடியும். ம்ம்ம்.... எழுதத்தான் போகிறேன். அவற்றை எல்லாம் விற்று பெரிய பணக்காரி ஆகப்போகிறேன். என் சிரிப்பை என்னால் இன்னமும் அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்களில் லேசாக தண்ணீர் வர ஆரம்பித்தது. யாரும் அறியாமல் துடைத்து, சுவாதி போதுமே சிரித்தது..எனக்குள் நானே சொல்லிக்கொண்டு சிரிப்பை அடக்கினேன்.

மனம் எதை எதையோ யோசித்தது. கண்ணை மூடி மனம் சொல்லுவதையும், அது போகின்ற வழியையும் கவனமாக கவனிக்க ஆயத்தமானேன். வேகமாக பறந்தது.....ஏழு கடல் ஏழு மலை தாண்டி..சென்றது.... இதோ...ஆப்பிரிக்க காடுகள்......வந்துவிட்டன..... காடுகளுக்குள் என்னை அழைத்து சென்றது. பச்சை பசேலென்ற அந்த காட்டில், பூக்களை, இலைகளை உரசிவரும் காற்றில் ஏதோ ஒரு சொல்ல முடியாத ஆனால் சுகமான வாசனை என்னை தழுவி சென்றது. லேசாக வழுக்கும் குறுகிய பாதையில் மழை ஓய்ந்த அந்த காலை நேரத்தில் ஈர இலைகள் என் உடலை நனைக்க நான் மட்டும் தனியாக சென்று கொண்டே இருந்தேன்....

நத்தை ஒன்று என் காலடி ஓசையில் பயந்து உடம்பை உள்ளே இழுத்துக்கொண்டது. எனக்கும் இப்படி ஒரு ஷெல் இருந்தால்?, என் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.... ....ஷெல் இருந்தால்.....??!!!! , பிரச்சனை வரும் போது எல்லாம் உள்ளே போயி புகுந்து க்கொண்டு என்னை காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்கு நான் நத்தையாக இருந்து இருக்கலாம், சுவாதி'யாக இருந்து இருக்க வேண்டாமே.... ...

பாம்பு ஒன்று வேகமாக கடந்து சென்றது...பயமொன்றும் எனக்கில்லை. என்னை பார்த்து பாம்பிற்கும் கண்டிப்பாக பயம் இருக்கும், நான் ஏன் அதைப்பார்த்து பயப்படவேண்டும்.? .....

எங்கே செல்கிறேன் என்று தெரியாத ஒரு நீண்ட பயணம்... அந்த ஒற்றையடி பாதை போயிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் கடந்து வெறும் பூக்கள் மட்டுமே உள்ள பூமி வருகிறது.."மேலே வானம் !! கீழே பூக்கள். !!" வேறு ஒன்றுமே அங்கு இல்லை. ஆஹா எத்தனை அழகு.!! என் கண்களை கடவுள் இதற்காக தான் படைத்தானோ.... அப்படியே சிலையாக நின்று கண்ணுக்கு எட்டிய அளவு பூக்கக்களின் வண்ணங்களையும், வாசனையும் ரசிக்கிறேன். இந்த பூக்கள் அத்தனையும் இந்த நொடி எனக்கு மட்டுமே சொந்தம்... நினைக்கும் போதே பொங்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை....என் முகமும் அந்த பூக்ககளை போல் மலர்ந்து சிரிக்கிறது.

படப்படவென பறந்து வந்து அமரும் வண்ணத்துப்பூச்சி... ..........பட்டாம்பூச்சி' யா? வண்ணத்துப்பூச்சி'யா?........................... பட்டாம்பூச்சி .................... பட்டாம்பூச்சி........... பட்டாம்பூச்சி' யை பார்த்தவுடன்.. நினைவலைகள் எங்கோ ரிவைண்டு செய்த டேப் ரிக்கார்டர் போல பின்னுக்கு இழுத்து செல்கிறது.. ...... போகாதே...! அங்கே போகாதே... !! இங்கேயே இரு..!! இது தான் சுகம்..சந்தோஷம்.... அங்கே போகாதே.. !! அது வேண்டாம்.. !! ... .அதனிடம் போகாதே..!! உன் கண் எதிரில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ரசி.... ! பார்.. உன் கண் முன்னே எத்தனை வண்ணத்து பூச்சிகள்..?? இவை எல்லாமே அதே போல் தான்... எல்லா வண்ணங்களும் இருக்கிறது... பூவீன் மீது அமர்ந்து அழகாக தேனை உறுஞ்சிகிறது..................

நான் சொல்லுவதை மனம் கேட்கவில்லை........மீண்டும் ஓடுகிறது............... வேகமாக பின்னால் நானும் ஓடுகிறேன்.. ...அய்யோ........ நில் செல்லாதே !! ............... .! ... .இங்கேயே நில்....செல்லாதே....... !! இழுத்து பிடிக்கிறேன் மனதை.. மீண்டும் இறுகி போகிறது என் முகம்... ஏன் இப்படி ? சந்தோஷமாக சில நிமிடங்கள் கூட இந்த மனம் விட மறுக்கிறதே ..... ஏன் இப்படி இல்லாத ஒன்றை தேடி ஓடுகிறது. .எதிரில் இருக்கின்ற ஓராயிரம் மலர்களும், அதனை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளும்.......

"மேடம்.... டின்னர்.... 45 ரூபீஸ்..சேன்ஞ் ப்ளீஸ்....'

சத்தம் என் காதுகளை தொட, ஆப்பிரிக்க காடுகளிலிருந்து ....இதோ இங்கு வந்து குதித்து விட்டேன்.

தட்டை வாங்கிக்கொள்கிறேன்.பணத்தை கொடுக்கும் போது, பசிக்கு நேரத்திற்கு உணவளிக்கும் அவருடைய கண்களை நேராக பார்த்து, புன்னகையோடு.. "தாங்ஸ்...!!"

அவரும் புன்னகைக்கிறார், சென்றுவிட்டார்.

என் சிந்தனை திரும்ப எங்கேயோ செல்லும் முன் சாப்பிட்டுவிடலாம். சாப்பிட ஆரம்பிக்கிறேன். சிக்கன்... கிரேவி..., சிக்கன் கிரேவி....... என் குழந்தைக்கு சிக்கன் பிடிக்குமே... அவனுக்கு கொடுக்காமல் தனியே சாப்பிடுகிறேனே....? எங்கே என் குழந்தை? அவனில்லாம் எப்படி நான் தனியே இருக்கிறேன்? தனியே சாப்பிடுகிறேன்? அவனை விட்டுவிட்டு எப்படி நான் தனியே இங்கே.? அவன் எங்கே? அவனுக்கு சாப்பாடு யார் கொடுப்பார்கள்.?

ரயில் ஏன் இத்தனை வேகமாக போகிறது,... என்னை சுற்றியுள்ளவர்கள் அத்தனை பேரையும் பார்க்கிறேன். எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எல்லோரையும் பார்த்து, "யாராவது ரயிலை நிறுத்துங்கள், என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.... நான் போகவேண்டும். ..நான் திரும்ப போக வேண்டும்...ரயிலை நிறுத்துங்கள்.........." கத்துகிறேன்.... யாரும் நான் கத்துவதை பொருட்படுத்தவில்லை. என்னை கவனிக்க கூட இல்லை. நான் தனியே கத்திக்கொண்டே இருக்கிறேன். "நான் கத்துவது உங்கள் காதில் விழவில்லையா?" ஒரு வேளை நான் கத்துவது அவர்கள் யார் காதிலும் விழவில்லையோ? ஏன் விழவில்லை.? தொண்டையை ஒரு முறை அழுத்தி பார்க்கிறேன். கணைத்துப்பார்க்கிறேன். திரும்பவும் கத்துகிறேன்...

"தயவுசெய்து யாராவது ரயிலை நிறுத்துங்கள்...... என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்... ரயிலை நிறுத்துங்கள்...நான் திரும்ப செல்லவேண்டும்...நிறுத்துங்க...ப்ளீஸ்....நிறுத்துங்க.............".எழுந்து ரயிலை நிறுத்தும் சங்கிலியை இழுத்துப்பிடிக்க எட்டுகிறேன்.........அது உயரமாய் இருக்கிறது, எனக்கு எட்டவில்லை......

" நிறுத்துங்க ப்ளீஸ்...யாராவது ரயிலை நிறுத்துங்க.... ப்ளீஸ்..." அழ ஆரம்பிக்கிறேன்...... "

*******************