எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ...சூப்பர்ர்... வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது. உடலுக்கும் நல்லது.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
<= கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு. படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது.
செய்முறை : பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து, வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.
காலையில், 4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை. வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும் நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும். முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !!
தேங்காய் பால் செய்முறை : தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். மாவு சலிக்கும் சல்லடையை ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும். பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும். பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.
தேங்காய் பாலின் பயன்கள் :
* வயிற்றுப்புண்ணிற்கு நல்லது. முடி உதிர்தல், இளநரையைக் கட்டுப்படுத்தும், அடர்த்தியான கூந்தலுக்கும் தேங்காய்பால் சிறந்தது.
* கொழுப்பைக்குறைக்கும் தேங்காய் - என ஒரு பதிவைப்படித்தேன். நீங்களும் படிக்க
அணில் குட்டி : அம்மணி வீட்டில் ஆப்பம் செய்தால், முதல்ல உக்காந்து இவிங்க நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு, அப்புறம் தான் வூட்டுக்காருக்கும் புள்ளைக்கும் கொடுப்பாங்க.. "சிறந்த அம்மா", மிகச்சிறந்த மனைவி" போன்ற பட்டமெல்லாம் இவிங்களுக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு இந்த நேரத்தில் மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்........
பீட்டர் தாத்ஸ் : Your diet is a bank account. Good food choices are good investments. - Bethenny Frankel

22 - பார்வையிட்டவர்கள்:
சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .வாழ்த்துக்கள் தோழி .
@அ.அ : அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? நன்றிங்க.. :)
ஆப்பம்... எனக்கும் ரொம்பப் பிடிச்சது...
ஆனா... ஆனா... ஆப்பம் தோசைக்கல்லிலா? என் மாமியார் பாத்தா ஷாக்காகிடுவாங்க.. :-) தோசைமாவு, ஆப்பமாவு எல்லாம் கொஞ்சமா மீதி இருக்கும்போது ரெண்டு சட்டி எடுக்க சோம்பப்பட்டு தோசைக்கல்லிலேயே ஊற்றுவதுண்டு. ஆனா ரெகுலராவே தோசைக்கல்லிலே செய்றதா...
ஒரு இரும்பு ஆப்பச்சட்டி வாங்கி அதில் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் விடமாட்டீங்க. :-)
உளுந்து இதுவும் அதிகம்தான்.. நான் மொத்தத்திலேயே ஒரு கைதான் (ஒண்ணாம்நம்பர் படம்) போடுவேன். கூட கொஞ்சூண்டு வெந்தயமும்... நல்லா சிவக்க வரும், மொறுமொறுன்னும் இருக்கும். உளுந்து கூடுனா தோடை டேஸ்ட் வரும். வெந்தயம் கூடினா, சட்டியில் ஒட்டிக்கும்.
சோடா உப்பு சேர்த்தா அரிசியில் உள்ள (விட்டமின் பி??) சத்து போயிடுமாம். அதனால அது எதுவும் சேர்ப்பதில்லை. அதுக்குப் பதில் தேங்காய்த் தண்ணி சேர்க்கலாம். (நான் சேர்ப்பதில்லை - இங்கு கிடைக்காது என்பதால்)
ஆமா, நீங்க மாவுல தேங்காயே சேர்க்கலையே? ஆப்பமாவுக்கு தேங்காய் சேர்ப்பதுதான் முக்கியம். (ஹி.. ஹி.. நானும் சில சமயம், ஏற்கனவே புளிச்ச மாவு இருந்துதுன்னா அதைச் சேர்த்தால், தேங்காய் சேர்ப்பதில்லை)
பின்னூட்டம் முழுசும் அட்வைஸ் ரேஞ்சிலயே ஆகிப்போச்சு. “எனக்கேவா”ன்னு கோவிச்சுக்காதீங்க. எனக்கும் சமைக்கத் தெரியும்னு நான் காட்டிக்கிட கிடைச்ச சந்தர்ப்பம் இதுவென்பதால் கொஞ்சம் ஓவராகிப் போச்சு.. :-)))))))))
@ஹூஸைனம்மா : //என் மாமியார் பாத்தா ஷாக்காகிடுவாங்க.. :-) //
அவங்க ஏன் நான் செய்யறதைப்பார்க்க போறாங்க..??!!. :))))) விடுங்க விடுங்க..
வாணல் இருக்கு..ஆனால் தோசைக்கல்லில் ரொம்ப ஈசியாப்போச்சி.. அதான் அதையே கன்ட்டினியூங்..
//உளுந்து இதுவும் அதிகம்தான்..// //கூட கொஞ்சூண்டு வெந்தயமும்..//
ரெகுலரா இப்படித்தான் செய்யறேன்ப்பா. தோசை மாதிரி இருக்காது. அதேசமயம் மிருதுவாகவும் இருக்கும். ஆப்பத்திற்கு வெந்தயம் போடறதில்லை.
//சோடா உப்பு சேர்த்தா அரிசியில் உள்ள (விட்டமின் பி??) சத்து போயிடுமாம்./
அதனால் ஏகப்பட்ட பிரச்சனை தான். ஆனால் 2 சிட்டிகை எப்பவோ சேர்க்கறதுல என்ன ஆகிடப்போகுது. நாம் வெளியில் சாப்பிடற அநேக உணவு வகைகளில் சோடாஉப்பு சேர்க்கறாங்க.. ஆப்பத்திற்கு அதை சேர்க்காட்டா அந்த மிருதுத்தன்மை வராது.. பச்சரிசி இல்லையா.. கல்லுமாதிரி இருக்கும்..
//ஆமா, நீங்க மாவுல தேங்காயே சேர்க்கலையே? // தேங்காய் சேர்த்தால் ஒரு வித டேஸ்ட்..என்னமோ பிடிக்கறதில்லை. அதுவுமில்லாம வேலைய எதுக்கு அதிகப்படுத்திக்கனும். சிம்பிளா ஈசியா செய்யற வழிய பின்பற்றனும்.. என்பது நம்ம குறிக்கோள்..!! :))
//பின்னூட்டம் முழுசும் அட்வைஸ் ரேஞ்சிலயே ஆகிப்போச்சு. “எனக்கேவா”ன்னு கோவிச்சுக்காதீங்க. எனக்கும் சமைக்கத் தெரியும்னு நான் காட்டிக்கிட கிடைச்ச சந்தர்ப்பம் இதுவென்பதால் கொஞ்சம் ஓவராகிப் போச்சு.. :-)))))))))//
தேவையானதை தான் எடுத்துக்குவேன்.. நானெல்லாம் சொன்னப்பேச்சு கேக்க ஆரம்பிச்சிட்டா நாடு என்னத்துக்கு ஆகும்.. அதனால் கவலைப்படாதீங்க.. :)))
செய்து பார்ப்போம்... நன்றி...
@தி.த : நன்றி
எனக்கு ஆப்பம் ரொம்பப் பிடிக்கும். அதுவும் தட்டில் ஆப்பத்தின் மீது தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவையோ சுவை.... இப்ப இங்க நல்ல இட்லி சாப்பிட்டெ நாளாகுது போங்க...
@சே.குமார் : செய்து சாப்பிடுங்க..
நாங்க ஆப்பத்துக்கு உளுந்தே சேர்க்கறதில்ல கவி.. புதுசா இருக்கு.. என்னைக்காச்சும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் :))
@சுசி : எங்க வீட்டுலக்கூட உளுந்துப்போட மாட்டாங்க.. காலப்போக்கில் நானாக கத்துக்கிட்டு, இந்த மாதிரி செய்தால் ஆப்பம் ரொம்ப மிருதுவா வருதுன்னு செய்ய பழகிட்டேன்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.. நல்லாயிருக்கும்..
எதுக்கு இப்ப ஆப்ப ஆசையைக் கிளறிவிடுறீங்க?
எனக்கும் தேங்காய்ப்பால் ரொம்பப்பிடிக்கும்.
நம்ம ஆப்ப எபிஸோடு இங்கனக்குள்ளெ இருக்கு.
http://thulasidhalam.blogspot.co.nz/2009/08/blog-post_19.html
@துளசிஜி : வாங்க.எப்படியிருக்கீங்க? எங்க வீட்டு சமையல் எப்பவாச்சும் அப்ட்டேட் செய்யறேன்..அதுல இந்தமுறை ஆப்பம் சிக்கிடுச்சி. :)
உங்க லிங்க்கை படிச்சேன்... அந்த ஆப்ப வாணல் சூப்பர்... :) என்கிட்ட அது இல்ல.. வாங்கனும். சாதா வாணல் தான் இருக்கு..அதிலேயே நான் செய்யறதில்ல ஒன்லி தோசைக்கல் ...
நன்றி-ஜி :)
கவிதா, எனக்கொரு சந்தேகம்.உங்க வீட்டு தோசைக்கல்லுக்குக் காதுகள் இருக்கா?
இல்லேன்னா கைப்பிடி?
எங்க வீடடில் ஆகி வந்த தோசைக்கல் ஒன்னு மொட்டையா இருக்கும். இடுக்கி வச்சுதான் அதை அடுப்பில் இருந்து இறக்கணும்.
துளிசிஜி : ஆமா குட்டியா இரண்டுப்பக்கமும் காது இருக்கும். பிடித்துணி வைத்து எடுத்து சுத்தலாம். ஆனா நானு உஷாரா, கல் நல்லா காய்ந்தவுடனே, வெளிப்பக்கத்திலிருந்து உள்பக்கமா ஊற்றுவேன்.. படத்தில் இருப்பதுப்போல வந்துடும்.. :) .செய்முறையில் சொன்னது புதியவர்களுக்காக...
ஆஹா..... காதைப் பிடிச்சால் ஆப்பம் வரும்:-))))
:))))) ஆமாம்....
ஆனா துளசிஜி உங்க செய்முறைக்கும் என் செய்முறைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். நாங்க ஆப்பத்திற்கு, இட்லி அரிசி போடவே மாட்டோம்..
ஒருமுறை இட்லி அரிசி போட்டுப் பாருங்க.
ம்ம்ம் சரி...
can you update on meenakshi aachi old age home. please
can you update on meenakshi aachi old age home
@vaarthai: What info u need? u can check the following :
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2008/12/with.html
u can find the Address , phone number in the image. Account details I had given the blog post.
Thx.
Post a Comment