துணிகளை காயவைக்க, மாடிக்கு செல்லும் போது தான் கவனித்தேன், பக்கத்து ஃப்ளாட்டில் யாரோ புதிதாக குடி வந்திருந்தனர்.
எங்கள் வீட்டு கதவை மட்டும் விட்டுவிட்டு வெளியில் எல்லா இடத்திலும் பொருட்களைப் பரப்பி இருந்தனர். அந்த வீட்டிலிருந்த பெண் காதுகளில் பெரிய லோலாக்குகள் பளீச்சென தெரிந்தன, பின்னலிடாத தலைமுடி, நெற்றியில் பெரிய பொட்டு, ஏதோ பாட்டுப்பாடிக் கொண்டே அங்குமிங்குமாக வேலைகளை செய்துக்கொண்டிருந்தார். நான் கண்டும் காணாமல் மாடிக்கு சென்று துணிகளை காயவைத்து திரும்பும் போது, படிகளுக்கு கீழே ஒரு பெண் குழந்தை நின்று என்னைப்பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன்.....
வெளியிலிருந்த பொருட்களை கவனித்தவாறு, வீட்டினுள் நுழைந்து கதவை சாத்தும் முன், அந்த குழந்தை என் எதிரில் வந்து நின்றது. உள்ளே வருமா??...சற்று நின்றேன்... அதுவும் வந்தது, வந்தவுடன் கதவை சாத்திக்கொண்டேன். அது விளையாட ஆரம்பித்தது. கதவுக்கு பக்கத்திலிருந்த ஆள் உயர பெரிய ஜன்னலில் போடப்பட்டிருந்த ஸ்கீரின் மேலும் கீழும் ஆட, குழந்தை அங்கு சென்று விளையாட ஆரம்பித்தது.
நான், எதோ வேலை செய்துக்கொண்டிருந்தாலும், என் பார்வை குழந்தையை விட்டு விலகவில்லை. நான் எதிர்பார்த்து காத்திருந்தது நடக்க ஆரம்பித்தது...
கீழே உட்கார்ந்து, ஓரத்தில் ஒளிந்து என எல்லாப்பக்கங்களிலிருந்தும் ஸ்கிரீனை சுற்றி வந்து கவனித்தது. ஸ்கிரீன் காற்றில் ஆடவில்லை, ஜன்னல் கதவுகள் அத்தனையும் மூடப்பட்டிருந்தது. யாரோ உள்ளிருப்பதாக குழந்தை உணர ஆரம்பித்து..... அந்த சந்தேக கேள்வியோடு என்னைத் திரும்பி பார்த்தது..
நானும் ஆமாம் என்ற பதிலை பார்வையாக்கினேன். அதிர்ந்து பின்வாங்கி பின்னோக்கி நடந்து சுவற்றில் மோதி நின்று, ஸ்கிரீனையே வெறித்தது.
மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பின்னால் இருப்பதை நான் பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரிந்ததில்லை.. இன்று இந்த குழந்தையும் பார்த்துவிட்டது.. என் பயத்தை பகிர ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷம் என் முகத்தில். ஆனால், குழந்தையின் கண்களில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.....
குழந்தைக்கும் "அது" பழகிவிடும் என மனம் சொல்ல...குழந்தையின் முகத்தை கவனித்தபடியே படுக்கை அறையில் நுழைந்தேன்.
அந்த அறை ஜன்னலிலும் காற்றில்லாமல் ஸ்கிரீன் ஆடிக்கொண்டு இருந்தது......
(இன்று விடியலில் வந்த கனவு, அந்த குழந்தையும் நானும் கடைசிவரை பேசிக்கொள்ளவே இல்லை,)
அணில் குட்டி : பிசாசுக்கு யார் வீட்டில இருக்கனும்னு தெரிஞ்சி இருக்கு பாருங்க....
பீட்டர் தாத்ஸ் : Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before.

12 - பார்வையிட்டவர்கள்:
சமீபத்திய 'ஹிட்' படம் ஏதேனும் பார்த்தீர்களோ...?
அவ்வ்வ்வ்... இப்பத்தான் மாடியில் ஜன்னல் திறந்திருப்பதால் காற்றில் அறைக்கதவு அறைந்து சாத்திய சப்தம் கேட்டு உறைந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன்... இப்பப் போயா உங்கப் பதிவைப் படிக்கணும்!!??
நேத்திக்கு வாழ்த்து சொன்ன வாயால், இன்னிக்கேஏஏஏ திட்ட வேணாமேன்னு... விட்டு வைக்கிறேன்... ஆம்மா!!
தீவாளி எப்படி கொண்டாடினீங்கன்னு பதிவு போடுறத வுட்டுட்டு, இதென்னதிது??!!
@தி.த : :) பார்த்தேன் ஆனா பார்த்து ரொம்ப நாள் ஆச்சே..
@ஹூஸைனம்மா : :)))) நீங்க திட்டாம யார் திட்டப்போறா.. திட்டுங்க திட்டுங்க..
தீபாவளி கொண்டாட்டம் பத்தி என்னத்த எழுத... ?! என் குழந்தை இல்லாமல் கொண்டாடிய முதல் தீபாவளி. துக்கம் தாளாமல் ஓ..ன்னு ஒரே அழுகை.. நல்லநாள் அதுவுமா அழுகைய நிறுத்துல, மவளே பிச்சிடுவேன்ன்னு ஒதக்கொடுக்கற ரேஞ்ஜில் வூட்டுக்கார் வந்ததால் பயந்துபோய் அழுகை நின்னுச்சி...
பலகாரத்தில், ஜாங்கிரி மட்டும் மெதுவடையை சர்க்கரை பாகில் தொட்டு எடுத்தமாதிரி கொடுமையோ கொடுமை. நல்ல இருக்க மத்ததை எல்லாம் விட்டுப்புட்டு, புள்ளைய ஸ்கைப்ல கூப்பிட்டு ஜாங்கிரி பற்றி ஒரு பெரிய விளக்கம் கொடுத்து அப்பாவும் புள்ளையும் சிரிப்பா சிரிச்சாங்க.. :))))) (கிர்ர்ர்ர்ர்ர்) கூட சேர்ந்து நானும் சிரிச்சிவச்சேன். உள்ளுக்குள்ள இருக்க ஜாங்கிரி சரியா வரலியேங்கற வலியை காட்டமுடியுமா.. ?!
@ஹூஸைனம்மா : அவ்ளோ தான் தீபாவளி முடிஞ்சிப்போச்சி. இதைப்போய் என்னத்த பதிவு பண்ண?.
வந்த பொம்பள புள்ள யாருமில்ல...
போன ஜன்மத்தில உங்க மாமியாரா இருந்தவங்க தான்..... எப்படி இருக்கீக அப்படின்னு
பாக்க வந்திருப்பாக....
மறந்துட்டீகளா ?
தீபாவளிக்கு போனாக, அதிலே இருந்து தீபாவளியே கொண்டாட இல்ல என்னு
வருத்தப்பட்டு 1940 ம் வருசம் வரைக்கும் சொல்லிக்கினு இருந்தீகளே ??
ஞாபகம் இல்லயா..... எப்படி இருக்கும் ?
அது போன ஜனுமம் இல்லயா.....
என்னது !! இன்னிக்கு ராத்திரியும் தூக்கம் போச்சா ?
அதுக்கு நான் என்ன செய்யட்டும் ?
அந்த ஸ்க்ரீனை எதுக்கும் உதவும் கரங்கள் மாதிரி ஒரு நிறுவனத்துக்கு
கிஃப்டா கொடுத்துட்டு வந்துடுங்க....
மீனாட்சி பாட்டி.
பின் குறிப்பு:
ஹி....ஹி....
எனக்கும் இதுபோல ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி கனவு வந்துக்குனே இருந்துச்சு.
வந்து பத்து மாசத்துலெ ஒரு பட்டு பாப்பா புறந்துச்சு....
கனவெல்லாம் பறந்தோடிப்போச்ச்சே !!
மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பின்னால் இருப்பதை நான் பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரிந்ததில்லை.. இன்று இந்த குழந்தையும் பார்த்துவிட்டது.. என் பயத்தை பகிர ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷம் என் முகத்தில். ஆனால், குழந்தையின் கண்களில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை..... /
திகில் பகிர்வு ...
குழ்ந்தைகள் தின வாழ்த்துகள்..
@ Sury Siva : ரொம்ப யோசிச்சிட்டீங்க போலவே.. நானு மாமியார் நாத்தனார் கூட எல்லாம் ரொம்ப க்ளோஸ்.. :)) மாமியார் வர சான்ஸே இல்லை.. :)
@ இராஜராஜேஸ்வரி : நன்றி.. உங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் ! :)
:-)
Belated Greetings.
@ஓலை சிறிய : நன்றி... எப்படி இருக்கீங்க?
ம்ம்..ரைட்டு ரைட்டு ;))
இது என்ன விடியற்காலம் 3.20 மணியளவில் பீதியைக் கிளப்பி விட்டீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ கோபி : ம்ம் ரைட்டு.. :)
@ ராகவன் சார் : உங்களை யார் இவ்ளோ காலையில் ப்ளாக் படிக்க சொன்னது? :).
வாக்கிங் போயிருக்கலாம்.
Post a Comment