ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம் ! :) / இதே புதுச்சேரி க்கும் பெயர் மாறி வரும். அறிவிப்பாளாராக இரண்டு வானொலி நிலைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரி க்கு அவர்கள் அழைக்கும் நேரம் இங்கிருந்து சென்று வர முடியாமல் ஏறக்கட்டி விட்டு, சென்னையை மட்டும் தொடர்ந்தேன்.
காலை 6 மணிக்கு இருக்க வேண்டும். என்ன பேசப்போகிறோம் என்பதை எழுதி வைத்து, நிகழ்ச்சி இயக்குனரிடம் அப்பூருவ் வாங்கிட்டு தான் ஸ்டூடியோ விற்கு போகனும். சென்னை வானொலி நிலைத்தில் ஏகப்பட்ட ஸ்டூடியோக்கள். பலதை நான் பார்த்ததில்லை என்றே சொல்லனும். ஆனால் சில ஸ்டூடியோக்கள் மட்டுமே தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட்ட ரெக்கார்டிங் என்றால் நம் இஷ்டத்திற்கு, ஏதோ ஒரு ஸ்டூடியோவிற்கு சென்று செய்துக்கொள்ளலாம். லைவ் நிகழ்ச்சிகள் நடக்கும் ஸ்டூடியோக்கள் மட்டும் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கும். எல்லோரும் ரொம்பவும் பிசியாக இருப்பார்கள். குறிப்பாக பிரபலங்கள் பலர் வருவார்கள்.
4 மணிக்கு எழுந்து வீட்டு வேலை முடித்து, நவீனுக்கு சாப்பாடு, எனக்கு சாப்பாடு காலை மதியம் எல்லாம் பேக் செய்துவிட்டு, எனக்கு கையில் எடுத்துக்கொண்டு, 5.30 க்கு கிளம்பி. வண்டியை என் வேகத்திற்கு விரட்டுவேன். எப்படியும் சரியான நேரத்திற்கு போகாமல் திட்டு வாங்குவேன். எனக்கு முன் நிகழ்ச்சி செய்பவர் நான் வரும் வரை காத்திருந்து மைக் ஐ தருவார். :). அதனால் கூட பயமில்லாமல் லேட்டாக போவேனோ என்னவோ. :). 8.30 க்கு என் நேரம் முடியும். வானொலி நிலைய கேண்டினில் காலை டிபன் எடுத்து சென்றதை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து நேராக அலுவலகம், வீடு வர மாலை 6.15 ஆகும்.
என்னால் முடியும் என்று உழைத்த நாட்கள் இவை. இனியும், எப்பவும் இப்படி உழைத்துக்கொண்டு இருக்க ஆவலாக த்தான் இருக்கிறது. இப்போது, பஸ் ஸில் போவதால் தினமும் ரேடியோ கேட்க முடிகிறது. எங்களுக்கு உச்சரிப்பு, வார்த்தை பிரயோகம், எந்த வார்த்தைகள் ஏர்' ல் போகக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக "அம்மா" வந்தால் எடுத்து விடுவார்கள் ! :)))))))
ழ என்ற வார்த்தை சரியாக உச்சரிக்கவேண்டும். தேர்வில் அதிகமாக ழ வரும் வார்த்தைகள் தான் கொடுக்கப்பட்டு இருந்தன. அவள் அவல் வாங்கி வந்தாள், ஏழை கிழவன் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்தான். போன்றவை தேர்வில் கொடுக்கப்பட்டது இன்னும் நினைவிருக்கிறது. அது போல நாம் பேசும் சில வார்த்தைகளில் "க" என்பதை "ஹ" வென உச்சரிப்போம். "எடுத்துக்காட்டாக' - இதை சொல்லும் போது கடைசி 'க' வில் ஹ சத்தம் கூட சேர்ந்து வரும். இப்படி பல "வார்த்தைகள்" உள்ளன. உச்சரித்து பார்த்தால் மட்டுமே தெரியும்.
பள்ளி படிப்பின் போது ஷோபனா ரவி அவர்கள் செய்தி வாசிப்பதை பார்த்து, ஈர்க்கப்பட்டு பாடப்புத்தகத்தை அவரைப்போலவே படித்து பார்ப்பேன். இப்படி பழகியே வானொலி குரல் தேர்வின் போது சொல்ல சொன்ன "ஆல் இந்திய ரேடியோ, சென்னை வானொலி நிலையம்" என்று இயல்பாகவே கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆக சொல்ல வந்தது. "க" வில் தான் தவறு செய்தேன் , திருத்தி திரும்ப திரும்ப பல வார்த்தைகள் சொல்லச் சொல்லி கேட்டார்கள். ஆங்கிலமே கலக்காமல் பேசவேண்டும் :)
ஆனால் இப்போது ?! :))))))))) ஆர்.ஜே க்கள் பேசுவதை கேட்டால், நாம் தமிழை சரியாக படிக்கவும் உச்சரிக்கவும் இத்தனை சிரமப்பட்டு இருக்கிறோம் என்று தெரிகிறது.
மறக்க முடியாதது - இன்று ஒரு தகவல் சொன்ன நிகழ்ச்சி இயக்குனர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடன் லைவ் நிகழ்ச்சி ஒன்று செய்தது. :). மிகவும் எளிமையானவர். மைக் ஆன் செய்வதற்கு முன் என்ன பேசப்போறீங்க என்பதை கேட்டுக்கொண்டாலும், தவறு செய்தோமே ஆனால் அதை அப்படியே சிரித்தபடி வேறு விதமாக பேசி, தவறு வெளியில் தெரியாமல் செய்து விடுவதில் கெட்டிக்காரர், சுவாரசியமானவர், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்.
அணில் குட்டி : ஆஹா......................... அம்மணி ஆரம்பிச்சிட்டாங்கய்யா...
பீட்டர் தாத்ஸ் : When your hobbies get in the way of your work - that's OK; but when your hobbies get in the way of themselves... well.

12 - பார்வையிட்டவர்கள்:
அனுபவங்களை எடுத்துவிடுங்க.. கேக்க காத்திருக்கோம் :-)
இத உங்க நவீன் படிச்சிட்டு என்ன சொன்னாருங்க! புதுசா ஏதாவது கண்டுபிடிச்சிருப்பாரே!
ஆகா...ரேடியோ ஜாக்கியா கூட இருந்திருக்கீங்களா ! ! ! சூப்பரு ;-)
ஹை, நீங்க ரேடியோவுல வேலை பாத்தீங்களா? இப்பவும் அங்கதான் வேலையா?
அந்த அனுபவங்களைத் தொடரா எழுதுங்களேன்.
ஓ நல்லா இருக்கே.இதை பஸ்லயும் போடலாமே. அதான் தமிழ்மணம் கருவிப்பட்டை இல்லீல்ல. அங்க போட்டா பல பேர் பார்ப்பாங்கல்ல:-))))))
@ Amaidhi Saral - I did as a part time RJ not full time, or regular basis :)
@ olai : He did know that I had been done some programs, Even now he is saying to go to private Radio's :)
@ Husainamma : Vaanga eppadi irukeenga? I did work as a partime RJ thats it.. continue pannala.. We need to be very flexible with people where ever u go.. i dont have such nature :).. Romba Zalra adikanum :)) I cant do that..hence so didnt continue.
@ Abi appa : Buzz la pottututhaan inga pottean :)
@ Gopz - Guess, already I told to you..
ஆகா இதெல்லாம் இத்தனை நாள் நீங்க சொல்லவே இல்லியே.. இப்படி அப்பப்ப நினைவுகளை இந்த பக்கம் தட்டிவிடுங்க..:)
@ Muthu, It is Just a hobby, and didnt continue also for long time.. thats what the reason, I didnt write about it.
உங்களது இப்பதிவு எனது ஆல் இண்டியா ரேடியோ நினைவுகளை தூண்டி விட்டது.
ஆல் இண்டியா ரேடியோ வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்பில் மூன்றாண்டுகள் பங்கேற்றேன். Y2K செய்தியை நான் முதலில் அறிவித்த நிகழ்ச்சி பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2005/12/y2k.html
அதே போல கார் வருவதற்கு தாமதமானதால் பிரெஞ்சு செய்திகளை படிப்பதில் வந்த நெருக்கடி பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளேன், http://dondu.blogspot.com/2005/08/blog-post_05.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ Ragavan Sir, Sure, ll read ur posts mentioned here when I get time.. Thx :) and ll get back.
இது நல்ல அனுபவம். ரேடியோ ஜாக்கி அனுபவம் வேறு இருந்தாலும் எழுதலாமே...
Post a Comment