பதிவர் *ஜீவ்ஸ்* ஸிடம் இந்த பாடலை பாடி பதிவிட போகிறேன் என்று சொன்னபோது, இதற்கு முன் சில பாடல்களில் நான் பாடிய வரிகள் தவறாக இருந்ததால், அப்படி பாடி விடாதீர்கள் என்று இந்த பாடல் வரிகளை எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி இருந்தார். இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்த பாடலை பதிவிடுகிறேன். நன்றி ஜீவ்ஸ்... :)
பாடல் வரிகள் - கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
|
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
***************************
அணில் குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....இவிங்க ச்சும்மா இருந்தாலும் அக்கம் பக்கத்துல இருக்கவங்க ச்சும்மா இருக்க மாட்டாங்க போல... . என்ன கொடுமை சார்..இது...!! :(
பீட்டர் தாத்ஸ் :- “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”
9 - பார்வையிட்டவர்கள்:
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
நான் அதிகம் கத்திய பாடல்களிலும் இது ஒன்று ...
\பீட்டர் தாத்ஸ் :- “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”\\
ரைட்டு ;)
அருமையான பாடல்.
பள்ளியில் படிக்கும்போது நடக்கும் பாடல்போட்டிகளில் எல்லாம் பல மாணவ,மாணவிகள் இந்த பாடலை தான் பாடுவார்கள்.அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மெட்டில்.
இந்த பதிவை படிக்கும் பொழுது அந்த குரல்கள் அனைத்தும் என்னுள் ஒலித்தன.
மிகவும் மென்மையான, தாலாட்டும் குரல். பாடலைக் கேட்டு ரசித்தேன், மிகவும் அருமையாக இருந்தது.
நான் மிகவும் இரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.
எந்த தாளத்தில், எந்த ராகத்தில் இந்தப் பாடலைப் பாடினீர்கள்?
சில வார்த்தைகளில் சற்று தடுமாறியது போல் எனக்குத் தெரிந்தது, இருப்பினும் சிறப்பாகவே இருந்தது.
மிக்க நன்றி கவிதா.
@ ஜம்ஸ் - நன்றி...
@ Choco - எப்பவும் போல பாட்டை கேட்கலையா?
@ துபாய் ராஜா : பாடினதையே யாரும் கேட்க மாட்டாங்க. .ஆனா நீங்க நான் கோரஸ் ஸா வேற கேட்டீங்களா... ம்ம் .. ரொம்ப நல்லவர் நீங்க. :) நல்லாயிருங்க..
@ இராதாகிருஷ்ணன் - தாளம் ராகம் மா? எல்லாம் கேள்வி பாடம்... எனக்கு இந்த ராகம் தாளம் எல்லாம் தெரியாது.. "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா " என்ற பாடல் கூட ரொம்ப நாட்களுக்கு முன் பாடி ரிக்கார்ட் செய்து வைத்து உள்ளேன். கார்னாடிக் பேஸ் சாங்... தப்பு இருக்கக்கூடாதே என்ற கில்டி ஃபீலிங் இன்னும் பதிவிடலை... :)
என்னுடைய பாடலை பொறுமையாக கேட்டதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லனும்.. :)
கவிதா, நல்லா பாடி இருக்கிங்க. ஆனால், உச்சரிப்பில் ஒரு சின்ன சிக்கல். வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாதிரி இருக்கு (சில மலையாளிகள் தமிழ்ப்பாட்டு பாடும் சாயலில்)
//வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாதிரி இருக்கு (சில மலையாளிகள் தமிழ்ப்பாட்டு பாடும் சாயலில்)//
அவ்வ்வ்!! ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. !! :))))
ம்ம்..அடுத்த முறை சரியா உச்சரிக்கறேன்ப்பா... இந்த வாட்டி வுட்டுடுங்கோ..!! எஸ்கீயூஸ்மீ...!! :)
நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடியிருந்தீங்கன்னா இசையுடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
//நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடியிருந்தீங்கன்னா இசையுடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//
ராஜநடராஜன்.. (ப்ளீஸ் பேரை குட்டியாக்குங்கப்பா .ரொம்ப பெருசா இருக்கு.. )
இந்த கரோக்கி எனக்கு பயன்படுத்த தெரியல... இனி தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. முயற்சி செய்யறேன்
நன்றி.. :)
Post a Comment