அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவரின் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.
அவர்கள் மறைவுக்கு பிறகு அவர் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர் மேல் இருந்ததை விட அவர் உறவினர்கள் மேல் தான் அதிகமாக இருந்தது.
காரணம், சென்னையில் உள்ள கான்சர் மருத்துவமனைக்கு பல வருடங்களுக்கு முன் செல்ல நேரிட்டது, அங்கு நான் பார்த்த பலர் எல்லாவற்றையுமே அந்த நோயால் இழந்து இருந்ததது அவர்கள் முகத்திலும் உடல் நிலையிலும் தெரியவந்தது. கடவுளே இப்படிப்பட்ட கொடுமையான நோயை எனக்கு கொடுத்துவிடாதே என்று அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் வேண்டிக்கொண்டேன். நோயாளிகளுக்கு லேசர் முறையில் தரப்பட்ட சிகிச்சையால் அவர்கள் முகங்களில் கருப்பு அல்லது கரு நீல கலர்களில் கோடுகள். குறிப்பாக வெற்றிலை பாக்கு போடுவதால் வரும் கான்சர் அதிகமானதாக இருந்தது, அதுவும் நான் அங்கு பார்த்தவரையில் ஆந்திராவினை சேர்ந்த அல்லது தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக இருந்தார்கள். தலையில் முடி எல்லாம் கொட்டிபோய் மொட்டைத்தலையாகவும், உடல் மெலிந்து ஒற்றை நாடி உருவமாகவும் நிறைய பெண்களை பார்க்க நேரிட்டது.
இப்படி 2-3 நாள் தொடர்ந்து நான் அங்கு சென்றதற்கே அந்த நோயின் பாதிப்பும் அதனால் அவர்கள் படும் அவஸ்த்தையையும் தெரிந்துக்கொண்டேன். ஆனால் அனுராதா அம்மாவின் உடன் இருந்த குடும்பத்தினர் எப்படி அவர் படும் அவஸ்த்தையைப் பார்த்துக்கொண்டு அவரின் பிடிவாததிற்கு துணை போனார்கள்? கடைசி வரை அவர் பிடிவாதத்துடன் இருந்தாரா என தெரியவில்லை. ஆனால் அவரின் பிடிவாதத்தை அவர் உறவினர்கள் நினைத்திருந்தால் பாசத்தால் கண்டிப்பாக கரைத்திருக்கலாம்.
இதற்கு முன்னர் கூட மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல் என்ற பதிவில் பெண்கள் மார்பகங்களை இழந்தால் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால் அனுராதா அம்மா ஒன்றும் திருமணம் ஆகாத அல்லது திருமணம் ஆகி வாழ்க்கையை அனுபவிக்காதவர்கள் இல்லை. தன் வாழ்க்க்கையில் எல்லா கடமைகளையும் முடித்தவர்கள். அவரின் கணவர் மட்டுமே போதும் அவரின் மனதை மாற்றி அறுவை சிகிச்சைக்கு அவரை சம்மதிக்க வைத்திருக்கலாம்.
12- 15 வயது நிரம்பிய, 2 குழந்தைகளை பெற்ற தாய் தன் கற்பப்பையை கூட பிரச்சனை என்றால் எடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். மார்பகங்கள் என்பது மிக சாதாரணமான பெண்மையின் அடையாளம் என்றே நான் சொல்லுவேன். குழந்தைக்கு பாலூட்டமட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பெண்ணிற்க்கு தேவையில்லாத ஒரு உறுப்பு, ஆணுக்கு மட்டும் ஆசையை தீர்க்கும் உறுப்பு. மேலும் என்னுடைய பழைய பதிவில் சொன்னது போன்று செயற்க்கை முறையில் மார்பகங்கள் இருப்பதாக பெண்கள் காட்டிக்கொள்ளலாம். அதற்கான நிறைய உள்ளாடைகள் இப்போது வந்துவிட்டன. ஏன் சினிமா நடிகைகளும், டிவி காம்பயர்களும் சாதாரணமாக அவற்றை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அழகுக்கும் பெண்மைக்கும் சம்மந்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் குழந்தைகள் பெற்றவளாகவும், சிறந்த மனைவியாகவும், சிறந்த தாயாகவும் இருக்கமுடியும், இருக்கிறார்கள். எத்தனை அழகான பெண்கள் (இந்தகாலக்கட்டதில்) தான் பெற்ற குழந்தைக்கு உயிர்பால் கொடுக்கிறார்கள்?.. எனக்கு தெரிந்து இப்போது பெண்களுக்கு அதற்குக்கூட மருந்து மாத்திரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுமே தாய்பாலா? வரவில்லையே! என்று சொல்லுபவர்கள் சதவிகிதம் அதிகமே. அவர்களே கொடுக்க ஆசைப்பட்டாலும் தாய்ப்பால் கிடைக்காமல் பிறந்த 1, 2 நாள் ஆன குழந்தைகள் புட்டி பால் குடிக்கும் மோசமான/கொடுமையான நிலைமைத்தான் இருக்கிறது. இதனுடைய காரணங்களைக்கூட தனிபதிவிடலாம்.
இப்படி இருக்க, அனுராதா அம்மாவோ எல்லா கடமைகளையும் முடித்த வயது முதிர்ந்த ஒரு பெண், அவர்களை கட்டாயப்படுத்தியாவது முதலிலேயே அறுவைசிகிச்சை செய்து இருக்கலாம். எப்படியும் இறப்பு ஆனால் எதற்கு இப்படி கஷ்டப்பட்டு வருத்திக்கொண்டு இறக்கவேண்டும்?. எல்லாம் விதி என்று நினைத்து விட்டுவிடமுடியாமல்... அனுராதா அம்மாவிற்காக இந்த பதிவு...
அணில் குட்டி அனிதா:- கவி நீங்க ஏன் கேன்சர் ஆஸ்பித்திரி போனீங்கன்னு சொல்லவே இல்ல........எதுக்கு யாருக்காவது அட்வைஸ் பண்ண போய் இருப்பீங்க. .சரி சரி எனக்கு தெரியாதா? நீங்க கொடுத்த அட்வைஸ் ல அவங்க கேன்சர் எவ்ளோ பெட்டர்னு நெனச்சி இருப்பாங்க... :(((
பீட்டர் தாத்ஸ் :-Cancer is a word, not a sentence. ~John Diamond

18 - பார்வையிட்டவர்கள்:
அவரது மறைவின்போது மிகவும் வருந்தினேன்..
அவரின் செயலுக்கு என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்தேன்...
அட்லீஸ்ட் அவருடைய கணவருக்காகவாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்ந்திருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது...
விரல் நகம் அதிகமாக வளர்ந்து தொல்லைகொடுத்தால் அதனை வெட்டிவிடுவதில்லையா ?
பதிவர் அனுராதா ஒரு எடுத்துக்காட்டு தான்...எப்படி வாழவேண்டும் என்று அல்ல...எப்படி வாழக்கூடாது என்பது தான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது...
நான் ஆரம்பத்துல அவங்க பதிவை கவனிக்காததால் எனக்கு அவர்கள் இறந்தப்பறம் தான்அவங்க பிடிவாதம் பற்றிய இந்த விசயமே தெரியும்.. :( ஹ்ம்.
//அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் குழந்தைகள் பெற்றவளாகவும், சிறந்த மனைவியாகவும், சிறந்த தாயாகவும் இருக்கமுடியும், //
:(
எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழகு இல்லையென்று கருதுகிறீர்கள்.. அழகுக்கான குறியீடாக நிறத்திலும் வாளிப்பிலுமா வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கொண்டு வருவது?
கவிதா, அவர்களின் பார்வையிலவர்களுக்கு நியாயம் இருக்கும். போராட்டத்தைத் தான் நாம் படித்தோம்.வலியையோ மற்ற எதுவுமே தெரியாது.
நாம என்ன சொல்ல முடியும்.:(
கவிதா,
மீண்டும் பதிவு எழுதவந்தது நல்லது. மனசில் இருக்கும் எல்லாத்தையும் கொட்ட நமக்கும் ஒரு இடம் வேண்டித்தானே இருக்கு.
இங்கே (நியூஸியில்) மார்பகப்புற்றுநோய் காரணம் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட என் தோழிகள் சிலர் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்காங்க. குழந்தைகளுக்கு அம்மாவா, கணவனுக்கு மனைவியா, குடும்பத்துக்கே தலைவியா இருக்கணுமுன்னா அதுக்கு மார்பகங்கள் கட்டாயத்தேவையா என்ன?
அறியாமைகள் பலவிதம். என்னன்னு சொல்றது?(-:
//நியூஸியில் மார்பகப்புற்றுநோய் காரணம் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட என் தோழிகள் சிலர் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்காங்க. குழந்தைகளுக்கு அம்மாவா, கணவனுக்கு மனைவியா, குடும்பத்துக்கே தலைவியா இருக்கணுமுன்னா அதுக்கு மார்பகங்கள் கட்டாயத்தேவையா என்ன? //
ம்ம்ம்..இதை தான் நானும் அனுராதா அம்மா அறுவை சிகிச்சை செய்து இருக்க கூடாதா நான் எதிர்பார்த்தேன்..
//எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழகு இல்லையென்று கருதுகிறீர்கள்.. அழகுக்கான குறியீடாக நிறத்திலும் வாளிப்பிலுமா வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கொண்டு வருவது?//
சென்ஷி கண்டிப்பாக எதை வைத்தும் இல்லை. வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. ஆனால் இந்த பதிவில் அனுராதா அம்மா அப்படி நினைத்தார்கள், அவர்களுக்காக எழுதிய வார்த்தைகள். மார்பகங்கள் என்பது ஒரு பெண்ணின் அழகுக்கு மட்டுமா என்பது மட்டுமே என்னுடைய கேள்வி. இதற்கு சரியான பதில் அனுராதா அம்மாவிற்கு தெரிந்து இருந்தால், அறுவை சிகிச்சை எப்போதோ அவர்கள் செய்து கொண்டு இருக்கலாம்.
அழகு......:) என்னுடைய அடுத்த பதிவே அதைப்பற்றி தான். கொஞ்சம் கான்ட்ரோ' வான சிந்தனை எப்பவும் எனக்கு இருக்கிறது... எனக்கு நானே பல சமயங்களில்........ :)
//அவரது மறைவின்போது மிகவும் வருந்தினேன்..
அவரின் செயலுக்கு என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்தேன்//
ரவி உங்களின் பதிவை படித்தேன்.. அப்போதுதான் நானும் அவர்களின் பிடிவாதம் தேவையற்றது என்பதை அவரின் பதிவுகள் படிக்கும்போதே உணர்ந்தோமே என்றும் நினைத்தேன்...
//விரல் நகம் அதிகமாக வளர்ந்து தொல்லைகொடுத்தால் அதனை வெட்டிவிடுவதில்லையா ?//
உங்களின் புரிதலுக்கு நன்றி...
======================
//நான் ஆரம்பத்துல அவங்க பதிவை கவனிக்காததால் எனக்கு அவர்கள் இறந்தப்பறம் தான்அவங்க பிடிவாதம் பற்றிய இந்த விசயமே தெரியும்.. :( ஹ்ம்.//
முத்துலட்சுமி, எனக்கு தெரிந்துமே ஒன்றுமே செய்யவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது... அதற்கு காரணம் கோபம மட்டும் இல்லை ஒருவித எரிச்சல் கூட அவர்கள் மீது வந்தது... எதற்கு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறார்கள் அதுவும் இந்த வயதில்...????
============================
//கவிதா, அவர்களின் பார்வையிலவர்களுக்கு நியாயம் இருக்கும். போராட்டத்தைத் தான் நாம் படித்தோம்.வலியையோ மற்ற எதுவுமே தெரியாது.
நாம என்ன சொல்ல முடியும்.:(//
ம்ம்.. வல்லிஜி...என்ன நியாமோ போங்க..
இது பற்றி அவரிடமே பேசி இருந்தேன். அப்பொழுது உங்களுக்கு இது வரை நடந்ததை மாற்றக் கூடிய சக்தி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வீர்களா எனக் கேட்டதற்குப் பிறிதொரு சமயம் பேசலாம் எனச் சொல்லி இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாமலேயே போய் விட்டது.
முதலில் அனைத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு சொல்லி இருந்த பொழுது அவர்கள் அதனை செய்து இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
//இது பற்றி அவரிடமே பேசி இருந்தேன். அப்பொழுது உங்களுக்கு இது வரை நடந்ததை மாற்றக் கூடிய சக்தி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வீர்களா எனக் கேட்டதற்குப் பிறிதொரு சமயம் பேசலாம் எனச் சொல்லி இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாமலேயே போய் விட்டது. //
கொத்ஸ், நான் அந்த பதிவைக்கூட படித்தேன்.. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை... யோசிக்கிறார்கள் என தெரிந்தது.. நீங்களும் விடாமல் கேட்பீர்கள் என்றும் நினைத்தேன்.
//முதலில் அனைத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு சொல்லி இருந்த பொழுது அவர்கள் அதனை செய்து இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.//
ஆமாம் செய்து இருக்கவேண்டும், அவர்கள் உறவினர்கள் நினைத்திருந்தால் அவரின் பிடிவாதத்தை மிக எளிதாக உடைத்திருக்க முடியும்.
Aahaa..Raasathi
vandhutiyaa..sandhohsam...sorry ithana naala gavinikkalai...
Anuradha operationkku samaatham therivikkaathathu varuthamana vishyam thaan...
enga ammaakkum ithey maarbaga putru thaan.. avangalum muthalil sammathikka thayangunaanga.. irundhaalum putru noi maruthuvamanaiyil athigama poittu vandhuttu irundhaathaala..andha kodumaia paarthu manasu maarunaanga...hmmm ippo nallaa irukkaanga...
//Aahaa..Raasathi
vandhutiyaa..sandhohsam...sorry ithana naala gavinikkalai...//
வாங்க மங்கைஜி, எப்படி இருக்கீங்க..?.. நீங்க எல்லாம் இப்படி எங்க மேல பாசத்தை காட்டறது நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என்னால நம்பவே முடியல.. ரொம்ப நன்றி! :))))
ஆனா எனக்கு ஒரு உண்மைய சொல்லுங்க .. ராசாத்தி'ன்னு சொன்னது.. என்னையா. .இல்ல என் கூட இருந்து குழிப்பறிக்கிற அணிலையா..??? :(
//Anuradha operationkku samaatham therivikkaathathu varuthamana vishyam thaan...//
ரொம்ப வருத்தமான விஷயம்.. மனசு கேட்கல..
//enga ammaakkum ithey maarbaga putru thaan.. avangalum muthalil sammathikka thayangunaanga.. irundhaalum putru noi maruthuvamanaiyil athigama poittu vandhuttu irundhaathaala..andha kodumaia paarthu manasu maarunaanga...hmmm ippo nallaa irukkaanga...//
Excellent !! தெரிந்த பிறகு எடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம். அம்மாவை ரொம்ப விசாரிச்சேன்' ன்னு சொல்லுங்க.. :))))
//எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழகு இல்லையென்று கருதுகிறீர்கள்..//
ஆணிடம் கேட்க வேண்டிய கேள்வி.
உறவின் முறையை பொறுத்து, பெண்கள் அழகின் அளவை ஆண்கள் மனது வரையறுக்கிறது.
அப்படியெல்லாம் இல்லை, மனசு அழகுதான் முக்கியம், பொண்னு பீப்பா சைஸ்ல இருந்தாலூம் ஒக்கே அப்படின்னு சொல்ற ஆண்களும் உண்டு. They may be Shakila and Nameetha ரசிகர்களா இருப்பாங்க.
//வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் நினைப்பதில்லை//
நினைக்க முடியாதுல்ல.hahaha. நினைச்ச்சா நம்ப கதை கந்தல்..haha
//உறவின் முறையை பொறுத்து, பெண்கள் அழகின் அளவை ஆண்கள் மனது வரையறுக்கிறது.//
Exactly!! :) தனிப்பட்ட ரசனை பொறுத்தது...
//அப்படியெல்லாம் இல்லை, மனசு அழகுதான் முக்கியம், பொண்னு பீப்பா சைஸ்ல இருந்தாலூம் ஒக்கே அப்படின்னு சொல்ற ஆண்களும் உண்டு. They may be Shakila and Nameetha ரசிகர்களா இருப்பாங்க.//
தரண்... ஆரம்பிச்சாச்சா.. அடங்கமாட்டீங்களே நீங்க? எல்லாரும் நம்மள (உங்கள) மாதிரி தாய்வான் நாட்டு ஓட்ட ஒடிசல எல்லாம் விரும்புவாங்களா..? நமக்கு (உங்களுக்கு) தனி ரசனை தனி சிந்தனை.. அடக்கமில்லாத தனி ராஜ்ஜியம்.. :))) எல்லாருக்கும் நம்மை (உங்களை) போன்று வாய்ப்புகள் வசதிகள் கிடைக்குமா..???
//வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் நினைப்பதில்லை//
நினைக்க முடியாதுல்ல.hahaha. நினைச்ச்சா நம்ப கதை கந்தல்..haha//
வேணாம் சரியா... பிளாக்ல பப்ளிக்கா கெட்டவார்த்தையால திட்ட வைக்காதீங்க.. !!
சேம்பலுக்கு ஒன்னு சொல்லவா .. பன்னிக்கூட வெள்ளையாதான் இருக்கும்.....வெள்ளையா இருந்துட்டா மட்டும் ??? ஹா..ஹா..ஹா... !! வேணாம் வேணாம் விடுங்க... !!
சில பேரு நாம ரொம்ப அழகுன்னு நெனச்சு நெனச்சு அடுத்தவங்கள கொல்றாங்கப்பா...!! முடியல.. . தரண்...இன்னமும் நீங்க அழகா இருந்தாட்டாலும்.....!!!
தாய்வான் நாட்டு ஓட்டை ஒடிசல் தான்டி.. இந்தியா பக்கம் வந்தா கல்லடித்தான்..
//கவிதா கெஜானனன் said...
சில பேரு நாம ரொம்ப அழகுன்னு நெனச்சு நெனச்சு அடுத்தவங்கள கொல்றாங்கப்பா...!! முடியல.. . தரண்...இன்னமும் நீங்க அழகா இருந்தாட்டாலும்.....!!!
தாய்வான் நாட்டு ஓட்டை ஒடிசல் தான்டி.. இந்தியா பக்கம் வந்தா கல்லடித்தான்..
8:30 AM//
உண்மைய பேசவே விடமாட்றாங்கப்பா.....சரி சரி போய் தண்ணியை குடிச்சு தீயை அணைங்க.:))
Post a Comment