சுற்றி சுற்றி வரும் சுடர் விளக்கு.......

நம்ம ராம் பாருங்க ரொம்ப தீவரிமா யோசிச்சி. என்னையும், அணிலையும் சிக்கவச்சியிருக்காரு.. சரி..சுடர் தானே ஏற்றி வச்சா போகுதுன்னு கிளம்பியாச்சி..

ராம் ஆனா சின்ன குறை.. அணில நீங்க ஒரு கேள்வி கூட கேக்கலன்னு கோச்சிக்கிட்டு உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு உட்கார்ந்து இருக்கு...நீங்களே சமாதானம் செய்துக்கோங்க..அதுக்கிட்ட நான் ரொம்ப வச்சிகறது இல்ல.. டூ மச்சா பேசும்.. அப்புறம் நான் டென்ஷன் ஆவேன்..தேவையா??

1) இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறளுக்கு அர்த்தம் தெரியுமாக்கா?
ம்ம்.. தெரியாமையா?.. என்னவோ உள்குத்து இருக்கு இருந்தாலும் பரவாயில்லை.. சொல்லறேன். நல்ல பழம் இருக்கும் போது காயை யாராவது சாப்பிடுவார்களா?. நல்ல வார்த்தைகள் இருக்கும் போது கடினமான வார்த்தைகள் யாராவது பேசுவார்களா?..

ராம் ஆனா....எல்லாருக்கும் நல்ல கனிந்த பழம் வாழ்க்கையில் கிடைக்கறது இல்லை அப்படிங்கறது உண்மை. அது கிடைக்காதவர்கள் மட்டுமே அதை உணர்வார்கள். கிடைத்தவர்கள் கிடைக்காதவர்களை பார்த்து எப்போதும் ஏன்..இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று மிக எளிதாக கேட்டுவைப்பார்கள்..

2) அணிலு அணிலுன்னு சொல்லுறீங்களே... அது உங்க மல்டிப்பிள் பர்சனாலிட்டியிலே ஒன்னா?
நிறைய நண்பர்களுக்கு அந்த சந்தேகம் இன்னுமும் இருக்கு.. சில விஷயங்கள் சஸ்பென்ஸ் ' ஆ இருந்தாத்தான் நல்லா/சுவையா இருக்கும்.. அணில் யாருன்னு தெரியாம இருக்கட்டுமே...

3) இப்போ இருக்கிற வட்டத்தை தாண்டி நீங்க ரசிக்கிற விஷயங்கள் என்னென்ன?
கணக்கில் அடங்காதவை.. வானம் அளவுன்னு சொல்லலாம்.. அதற்காக நான் புலம்புவதில்லை... இன்னமும் நிறைய காலங்கள் இருக்கிறது நான் ரசிக்க என காத்திருக்கிறேன்.

4) இன்னவரைக்கும் நீங்க நினைச்சு நினைச்சு சிரிக்கிற சம்பவம் என்ன? (அதை படிச்சா எங்களுக்கும் சிரிப்பு வரணும்)
ம்ம் இருக்கு, என்னுடைய சித்தப்பா பையன் கழுதையை பார்த்ததே இல்லை. நாங்கள் ஒரு முறை டூர் போன போது, கன்னியாகுமரியில் எல்லோரும் ரூம்மில் ரெடியாகி கொண்டிருக்க நானும் அவனும் கிளம்பி வெளியில் வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கழுதையை பார்த்தான். அவனுக்கு ஒரு 7-8 வயது இருக்கும். கழுதையை பார்த்ததே இல்லை என்பதால் மிக ஆச்சிரியப்பட்டு ஆர்வத்தோடு, அதன் அருகில் சென்று சுற்றி சற்றி பார்த்தான்.. அது பின்புறம் இருந்து உதைக்கும் என்பதும் அவனுக்கு தெரியாது. இவனும் அது பின்னால் நின்று அதன் அழகை ரசிக்க, இவனின் இம்சை தாங்க முடியாமல் கழுதை கோபம் வந்து..பின்னாலிருந்து உதைக்க ஆரம்பித்தது.. .உதை வாங்கி அழுது கொண்டே... அக்கா இது என்ன பின்னாடி இருந்து உதைக்குது...? என்று. என்னிடம் கேட்க, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவன் கழுதையிடம் உதை வாங்கியதை எல்லோரிடமும் சொல்லிவிட, டூர் முழுதும் அவனை எல்லோரும் அதை வைத்தே கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கி விட்டடர்கள்.

இன்னொரு சம்பவம், என்னுடைய மாமா ஒருவர், இருட்டில் அவசரத்திற்கு ஒதுங்க.. இருட்டில் படுத்து கொண்டிருந்த மாடு எழுந்து இவரை உதைத்து விட்டு ஒட ஆரம்பிக்க இவருக்கு கோபம் வந்து அதை அடிக்க துரத்தினார். ஆத்திரத்தோடு இவர் ஓட , அது ஒட.....ஒரு கட்டத்தில் அவர் கட்டியிருந்த லுங்கி கழண்டு விழ.. உள்ளே அவர் ஒன்றுமே போடவில்லை என்பதை உணராமல் அதை அடிக்கும் வெறியுடன் ஓட..இவருக்கு பின்னால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஓடி அவர் மானத்தை காப்பாற்ற வேண்டியாதாகி விட்டது.

லுங்கி அவிழ்ந்து விழவது கூடதெரியாமல் ஓடிய மாமாவை நினைத்தால்.. ஹைய்யோ .ஹைய்யோ..

இந்த 2 நிகழ்ச்சிகளை எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாது.


5) ஒரு கற்பனை:- டயம் மிஷின் கிடைச்சு அதிலே நீங்க பின்னோக்கி போகலாமின்னு சொன்னா எந்த வயசை தேர்த்தெடுப்பீங்க?
சில சமயங்களில் என் அப்பா என்னிடம் திரும்ப வந்துவிட்டது போல் கனவுவரும், அப்படி அவர் வந்தால் என் குழந்தை அவரிடம் வளர வேண்டும் என்று அதிகம் நினைத்ததுண்டு....அதனால் எனக்கு குழந்தை பிறந்ததிலிருந்து - நேற்றுவரை பின்னோக்கி செல்ல ஆசைப்படுகிறேன்...

Photobucket - Video and Image Hosting
நம்மை கேட்டவருக்கு நாம பதில் சொல்லியாச்சி, இப்ப நாம யாரை சுடர் ஏற்ற சொல்லலாம்னு அணிலும் நானும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணோம்.அதான் வாரா வாரம் ஒருத்தர கேப்பங்கஞ்சி குடிக்க வைக்கரோமே அதே மாதிரி சுடர் ஏற்ற வைத்து விட்டால் போகுது என்று.. பட்டென்று நமக்கு மாட்டியவர் மா.சிவகுமார் அவர்கள். இவரிடம் சுடர் ஏற்ற வர சொல்லி கேட்க நினைப்பவை

1. எப்படி உங்களால், எழுத்து, வியாபாரம், நண்பர்கள், பிற பொது பணிகள், வெளி ஊர் பயனம் என்று எல்லாவற்றையும் ஒருவித நிதானத்துடன், தடையில்லாமல் செய்ய முடிகிறது?.

2. உங்களிடம் அதிகம் கவனித்தது, உங்களின் perfection. அதற்கு காரணம் என்ன என்று எதை சொல்வீர்கள். உங்களின் கல்விமுறை, வளர்ப்பு முறை, இல்லை உங்களை நீங்களே தயார் செய்து கொண்டீர்களா?

3. உங்களின் எல்லா பதிப்புகளுமே..மிக சிறந்தவை, பயனுள்ளவை என சொல்ல கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதிகமாக யாரையும் சென்று அடையவில்லை என்பது எங்களுடைய கனிப்பு. பயனுள்ள பதிவுகளை படிப்பவர்களை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.

4. ராகவன் சார் - பதிவுகளுக்கு பின்னூட்டமே இல்லை அதனால் போலி ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார் மற்றும் அவரை குறை கூறி வரும் பலர் போலி பெயர்களில், போலி பதிவுகள், பின்னூட்டங்கள் போடுகிறார்கள்- இது பற்றி உங்கள் கருத்து.

5. எப்போதும் சீரியசாக இருக்கும் உங்களை, நகைசுவை பதிவு ஒன்று போட சொன்னால் போடுவீர்களா?.. போடுவேன் .என்றால் எப்போது?. இல்லை என்றால் ஏன்?

அணில் குட்டி அனிதா:- இதை கேக்க யாருமே இல்லையா? கவிதாக்கிட்ட நான் இருக்கேன் தான் பேரு ஆனா என்னைய யாருமே கண்டுகறது இல்ல.. ராமு அண்ணாச்சி பாக்கும் போது மட்டும் என்ன அணிலு எப்படிக்கீறன்னு? ன்னு கேக்கறீங்க ஆனா.. பாருங்க என்னைய ஒதுக்கி வச்சிட்டு அம்மணிய மட்டும் கேள்வி கேட்டு இருக்கீங்க.. நல்லா இல்ல சொல்லீட்டேன்.. எங்க தல..கைப்புள்ள இருந்து இருந்தா இப்படி ஒரு நிலைம எனக்கு வந்து இருக்குமா?.. ம்ம்..ப்ளாகர்க்கு வந்ததவிட..ஒரு பைலட் ஆவோ..இல்ல..ஒரு பிரைம்மினிஸ்டராவோ ஆகி இருக்கலாம்.. ஆகயத்துல பறந்தும்/ சோனியா மேடம் சொல்லறத கேட்டாவாது சந்தோஷமா இருந்து இருப்பேன்.. இங்க வந்து அசிங்கப்பட்டு போய் கிடக்கேன்.. ம்ம்..எங்க. இனிமே தொடர் உண்ணாவிரதம் இருந்தாவது என்னோட பலத்தை காட்டப்போறேன்..... (ஆனா இது கவி வீட்டுல மட்டும் தான்.. உங்கவீட்டுக்கு வந்தா ஒரு வாய் சோறு போடுங்க சாமியோவ்!!!)..

பீட்டர் தாதஸ் :- No problem can withstand the power of sustained creative thought.

கேப்பங்கஞ்சி with ப்ளாக் நண்பர்களுடன் - சந்தோஷ்

புது முயற்சியாக இன்றைய கேப்பங்கஞ்சி'யில் எங்களுடன், நம் பிளாக் நண்பர்களும் சேர்ந்து ஒருத்தரை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கிறோம். அவர் வேறு யாருமில்லை..எல்லா விதமான படைப்புளையும் தன்னுடைய நகைசுவை பாணியில் மிக எளிமையான தமிழ் நடையில் தந்து கொண்டிருக்கும் ஒரு “easy going” personality". எதற்கும் டென்ஷன் ஆகாமல்..நக்கலாக பேசி நம்மை டென்ஷன் ஆக்கிவிடும் நல்லவர்.. பார்போம் எங்கள் கேள்வியால் அவர் டென்ஷன் ஆகிறாரா இல்லை அவர் பதிலால் நம்மை டென்ஷன் ஆக்குகிறாரா.. இதோ..நம்மிடையே..இன்று.. “சந்தோஷத்துடன் சந்தோஷ்

கார்த்திக்ஜெயன்த்:- ஏன் பிளாக்கை துவக்கினீர்கள்? எழுதுவதில் முழுமை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? எப்போதாவது எழுத்திற்க்காக வருத்தப்பட்டதுண்டா?
பொதுவா பெரிய பெரிய பதிவர்கள் மாதிரி தமிழ் தொண்டு ஆற்ற வேண்டும் அப்படின்னு எல்லாம் கண்டிப்பா நான் பதிவை துவங்கவில்லை. இங்க வந்த பிறகு என்னுடைய தனிமையை போக்கிக்கொள்ள பதிவுகள் பெரிதும் உதவி இருக்கின்றன. மேலும் எனக்கு புதுசு புதுசா ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் தொடர்ந்து ஒரே வேலையை செய்து கொண்டு இருந்தால் bore அடித்து விடும். பதிவு எழுத ஆரம்பித்தால் படிக்க வேண்டும் ஏதாவது விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் புதுசு புதுசா ஏதாவது கற்றுக்கொள்ளலாம் அப்படிங்கிற ஆசை தான். இதுவரையில் நான் பதிவு எழுதியதற்கு வருந்தியது இல்லை ரொம்ப மகிழ்ச்சி தான் அடைந்து இருக்கிறேன். நிறைய நண்பர்கள் பல்வேறு வகையான மேன்மையான சிந்தனனகளை உடைய நண்பர்கள் கிடைச்சி இருக்காங்க இதுக்கு எல்லாம் ரொம்ப குடுத்து வெச்சி இருக்கணும் யாராவது வருத்தப்படுவாங்களா என்ன?

மதுரா:-.. சந்தோஷ் உங்க பக்கம் வர்ற எல்லாரையும் சந்தோஷமா அனுப்புறீங்களே இந்த ஜாலியான பேச்சு யாருக்கிட்ட கத்துக்கிட்டீங்க?
பொதுவா எங்க அப்பா வழி வந்த எல்லாருக்கும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம். சீரியசா இருந்து என்னத்த சாதிக்கபோகிறோம்.. நாம சந்தோஷமா இருந்து, அடுத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கனும் அப்படீங்கறது தான் நம்ம பாலிசிங்க.. நம்ம நகைசுவை உணர்வு அதுக்கு கொஞ்சம் உதவி செய்துங்க.. அவ்வளவுதான்..!!!

ராம் :- எப்பிடி உங்களுக்கு மட்டும் தோணுது... நீயூஸ் பேப்பர் சைட்லே போயிபடிச்சிட்டு அதை பரபரப்பு தலைப்பை போட்டு பதிவே ஒப்பேத்துறது.
என்ன பண்றது ராம் பெருமையா எழுதறதுன்னு வந்துட்டேன். சொந்தமா சரக்கு எதுவும் இல்ல இது மாதிரி எதாவது ஒப்பேத்துனா தான் உண்டு. பதிவு எழுதுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னாடி பதிவு அப்படின்னா என்னான்னு தெரிந்து கொள்ள இந்த பக்கம் போனேன் அவங்க சொன்னாங்க பதிவுன்னா சில சமயம் நிகழ்வுகளின் மீது உங்களது கருத்துக்களை பதிவதுன்னு சொல்லி இருந்தாங்க சரி நக்கல் அடிக்கறது தான் நமக்கு நல்லா வருமே அப்படின்னு மெய்டேன் பண்ணிட்டு வரேன் :))

நாகை சிவா:-.இந்தியாவில் MNC வேலை பார்த்துக் கொண்டு அயல்நாட்டில் வேலை செய்பவர்களை ஏதோ தேச துரோகி போல் விமர்சிப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?
சொல்லுறவங்க என்ன செய்தாலும் அதில் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பாங்க Just Ignore them.

கவிதா:- இளைஞர்களின் "அமெரிக்க" கனவு தேவையானதா?
இன்றைய இளைஞர்களின் அமெரிக்க கனவு நேற்றைய இளைஞசர்களின் கனவுகளில் இருந்து வேறு பட்டது. இப்ப எல்லாம் பெரும்பான்மையானோர் அங்க போயி நிறைய கத்துகிட்டு வந்து அதை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்று தான் இருக்கிறார்கள். மேலும் "Return to India" தான் இப்பொழுது இங்க பெரிய Buzz word. நிறைய பேர் அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள், செயல் படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் http://www.nriol.com/returntoindia/index.asp அவர்களுக்கு உதவ இது போன்ற தளங்கள் கூட வந்து விட்டன.

ஜொள்ஸ்:-. சந்தோஷ் கதறக் கதற கடலை வறுப்பீங்களாமே அப்படியா ?
பாண்டியன்னே வாலிப வயசுல இது எல்லாம் சகஜம் கண்டுகப்படாது. கடலை போடுவேன் ஆனா எதிர் முனையில் இருக்குறவங்க கதறுவாங்களான்னு தெரியலை. இதுல நம்ம பாலிஸியே "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" அப்படிங்கிற கீதையின் வரிகள் தான் (இதுக்கு மட்டும் சரியா பயன்படுத்திகிங்கடா கீதையை.)

தேவ்::-. சந்தோஷ், திருமணம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? அமெரிக்காப் பொண்ணுங்க இந்தியப் பசங்களை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணா ஒத்து வருமா? ஓங்க கருத்து..
அது ஒரு இனிமையான சுமை இருவருக்குமிடையே புரிதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும் வரை. எல்லா மனிதர்களுக்கு உண்மையான உள் மனது ஒண்ணு தான். அவன் அமெரிக்காகாரனாக இருந்தாலும் சரி பாகிஸ்தான்காரனாக இருந்தாலும் சரி. எனவே புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் போதும் உலகத்துல யார் கூடயும் வாழ்க்கை நடத்தலாம்.

கைப்புள்ள :- அமெரிக்காவில கடந்த சில வருஷமா இருக்கீங்க. இது வரை அங்கே உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம்/நிகழ்வுன்னு எதாவது இருக்கா?
நிறைய இருந்தாலும் இதை மறக்கவே முடியாது. வந்த புதுசுல நாங்க பஸ்ல ஆபீசுக்கு போவோம். அதுல எங்களோட(எங்க பஸ்ல) ஒரு பொண்ணு தினமும் வரும். செம பிகர் ஹி ஹி... அதை பாக்கவே உலகமே அழிஞ்சாலும் 8 மணி பஸ்ஸை புடிச்சிடுவோம் :)).. முதலில் ஒண்ணுமே நடக்கலை கொஞ்ச நாள் கழிச்சி அவங்க சிரிக்க நாங்க சிரிக்க சரி நடப்பது நடக்கட்டும் அப்படின்னு ஒரு நாள் துணிந்து பேசினோம் அந்த அம்மா எங்களை பாத்து என்ன புள்ளங்களா இங்க புதுசா பள்ளிகூடம் எதுனாச்சும் தொறந்து இருக்காங்களா என்ன தினமும் போயிட்டு வரீங்கன்னு கேட்டாங்க? என்னது பள்ளிக்கூடமா நாங்களா? அன்னிக்கு நிறுத்தினோம் பஸ்ல போறதை.

மதுரா:-.விவாசாயத்தில் இரண்டாவது பசுமை புரட்சி பத்தி ஒரு நல்ல பதிவு போட்டீங்க. ஆனா முடிவா என்ன பண்ணனும் விவசாயிகளுக்குன்னு சொல்றீங்கன்னு தெரியலையே. சொல்றீங்களா?
இது வந்து ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தி. எனக்கு அவ்வுளவு விவசாய அறிவு எல்லாம் கிடையாது. என்னுடைய இந்த பதிவின் நோக்கமே இதை படிச்சி பிறகாவது விலை கொஞ்சம் அதிகம் ஆனாலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்படும் பொருள்களை மக்கள் ஊக்குவிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு தான். ஆனா நீங்க சொன்ன மாதிரி இன்னும் சிலரும் இதே கருத்தை சொல்லி இருக்காங்க. அதுல என்னோட கருத்து என்னானா பசுமை புரட்சி அப்படி இப்படின்னு சரியான முறையில் ஆராயாமல் ஏறகனவே விவசாய நிலங்களை நாசம் செய்தாகி விட்டது. அதன் தாக்கம் வெளி வந்து கொண்டு இருக்கும் பொழுதே இரண்டாம் பசுமை புரட்சிக்கான ஆயத்தங்களை அரசு எடுத்த்க்கொண்டு இருப்பது வருந்தத்தக்கது. ஏற்கனவே இயற்கை தாயை பல்வேறு வகையில் நாம் நாசம் செய்து விட்டோம் இப்பொழுதாவது உணர்ந்து அதற்கான பிராயத்தங்களை செய்ய வேண்டும் இல்லையா? இங்க அமெரிக்காவில் மக்கள் அதை உணர ஆரம்பித்து விட்டனர். இயற்கையான முறையில் பயிர் செய்யப்படும் மூலப்பொருட்களையும், எந்த வகையான செயற்கை மருந்துகள் அளிக்கப்பட்டு வளர்க்கப்படாத மிருகங்களின் மாமிசங்களை கொண்டு தயாரிக்கும் Chipotle போன்ற உணவகங்கள் பெருகி வருகின்றன மக்களின் ஆதரவும் அவர்களுக்கு கணிசமான அளவு இருக்கிறது. நம்ம ஊரிலும் இது மாதிரி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுக்கு ஆதரவு பெருக வேண்டும். இயற்கையை காப்பாற்ற இது ஒன்றே வழி. அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை நமக்கு நாமே திட்டம் தான் இதுக்கு உதவும்.

ராம் :- சர்வேசன் வாக்கெடுப்பிலே 2வது இடத்திலே கெலிக்க எத்தனை கள்ள ஒட்டு போட்டிங்க.... :)
அய்யோ போடும் பொழுது கணக்கு எடுக்க மறந்துட்டேனே. அடுத்த தபா ஒழுங்கா கணக்கு எடுத்து சொல்றேன் தலை :)..

அணில் :- நீங்க எழுதி என்னத்த சாதிக்க போறீங்க?
அணிலு ரொம்ப கேள்வி கேக்குற தனியா மாட்டுன கைமா தான்டி நீ இன்னிக்கு. அந்த மாதிரி பெரிய பெரிய நோக்கம் எல்லாம் எதுவும் இல்லிங்கோ. எதோ என்னால நாலு பேர் சிரிச்சிகிட்டு இருந்தா போதும் அதுவே சாதனைன்னு நினைக்கிறேன்.

துர்கா:- இந்திய அரசியல் பற்றி உங்களின் பொதுவான கருத்து. உங்களின் எதிர்பார்ப்பு அல்லது மாற்றம் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இந்திய அரசியல் மட்டும் இல்ல பொதுவா உலகத்துல ஜனநாயகமே கேலிக்கூத்து ஆகிக்கொண்டு வருகிறது. மக்கள் தான் தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்கிற நிலைமை மாறி ரவுடிகள், தீவிரவாதிகள், வெளிநாட்டு கம்பெனிகள், வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தான் இப்பொழுது பெரும்பான்மையான நாடுகளின் தலைவர்களை தீர்மானம் செய்கின்றன. ஒரு சில சமயங்களில் மன்னர் ஆட்சிக்கும் இப்பொழுது இருக்கும் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை மன்னர் ஆட்சியிலாவது மன்னரிடம் மட்டும் பயம் இருக்கும், ஆனால் இப்பொழுது கட்சி உறுப்பினர் ஆட்டை வைத்து இருக்கும் நாய்கள் எல்லாம் மக்களை பார்த்து குரைக்கின்றன. :(( போகிற போக்கை பார்த்தால் மன்னர் ஆட்சியே எவ்வுளவோ மேல் என்று தோன்றுகிறது.

நாகை சிவா:-.வாகனங்கள் மேல் உங்களுக்கும் தனிப்பட்ட பிரியம் உண்டு என்று எண்ணுகின்றேன். அதை பற்றி சற்று கூறலாமே?
அமாம் எனக்கு Bikes மேல ரொம்ப craze அதுவும் எனக்கு புடிச்ச விஷயமே வேகம் தான். அது பைக் ஆனாலும் சரி கார் ஆனாலும் சரி வேகமா போகணும். இங்க போலீஸ் எல்லாம் ரொம்ப மோசம் புலி 60 speed limit இருக்குற இடத்துல 90ல தான் போறேன் அதுக்கே டிக்கெட் குடுக்குறாங்க. நம்ம வாங்குற 5, 10 டாலருக்கு டிக்கெட் கட்டியே தாங்கலை இப்பதான் கொஞ்சம் அடங்கி இருக்கேன் :))..

ஜொள்ஸ்:-. உங்களைப் பத்தி ஏதாச்சும் கிசு கிசு ?
கிசு கிசு எல்லாம் பெரிய பெரிய ஆளுங்களை பத்தி வருவது நான் எல்லாம் almost nothing in this world :)) அதனால் என்ன பத்தி அது மாதிரி எதுவும் இல்ல :)).

கைப்புள்ள:- உங்க வாழ்க்கையில் செய்யனும்/சாதிக்கனும்னு நெனச்சி வச்சிருக்கற விஷயங்கள்.
சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் அப்படிங்கறது தான் என்னோட கனவுகளில் ஒன்று. இன்னும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை அந்த பாதையில் போக.

தேவ்::-உங்க பதிவுலக வாழ்க்கையில் உங்களை மிகவும் பாதித்த பதிவர் யார்? அதுக்கு என்னக் காரணம்? (அதாவ்து உங்களுக்கு ரொம்பவும் கடுப்பேத்துன பதிவர்ன்னு வச்சுக்கங்களேன்.)
கடுப்பேத்துனவங்க அப்படின்னு எல்லாம் யாரும் இல்ல. டோண்டு சார் முதல்கொண்டு அனைவரிடமும் கருத்து பரிமாற்றமே தவிர வேற எதுவும் இல்லை. ஆனா தனிப்பட்ட முறையில் ஒரு பெண் பதிவர் என் பின்னால், என்னைப்பற்றி தவறாக பேசி என்னை மிகவும் காயப்படுத்தி விட்டார். இதுல ஒரு கொடுமை என்னான்னா அவரை நான் சந்தித்தது கூட கிடையாது. ஒரு 5 - 10 முறை கூகுலி உரையாடி இருப்பேன், கடித பரிமாற்றம் நடந்து இருக்கிறது அவ்வுளவு தான். என்னையும் என்னுடைய வளர்ப்பையும் பற்றி தவறாக பதிவுலக மக்களிடம் பேசிவிட்டார் அந்த பெண்ணுரிமைவாதி. இதுல என்ன கொடுமை அப்படின்னா இப்பொழுது பேசினால் கூட என்மீது ரொம்ப அக்கரை உள்ளது போல நடிப்பார் என்ன உலமடா இது? அதுல இருந்து பெண் பதிவர்கள் அப்படின்னாலே கொஞ்சம் அலர்ஜி.

கார்த்திக்ஜெயன்த்:- சிறிது காலமாக நீங்க: அமெரிக்காவில் இருந்துவருகிறீர்கள், உங்களின் தனிப்பட்ட & தொழில் சம்பந்தமான அனுபவத்தை சொல்லுங்கள்-
தொழில் முறையில் எனக்கு இந்த பயணம் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் ஏராளமாக கற்றுக்கொண்டு இருக்கிறேன். தொழில் முறையில் நான் படித்து வியந்த Technologyயில் எல்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு. என்னுள் இந்த பயணம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவை பற்றியும் அதன் கலாச்சாரம் பற்றியும் நான் கொண்டு இருந்த பலவகையான எண்ணங்கள் தவறு என்று இதில் தெரிந்து கொண்டேன்.

தேவ்::- உங்கள் பதிவுக்கு இருக்கும் பெண் ரசிகைகளை எப்படி சமாளிக்கிறீங்க?
நான் எல்லாம் நீயூஸ் பேப்பரை கட் பண்ணி பேஸ்ட் செய்ற டிக்கெட்டு. நம்ம பக்கம் மக்கள் தெரியாம வந்தாத்தான் உண்டு ரசிகைங்க அப்படின்னு எல்லாம் காமெடி பண்ணிகிட்டு.

துர்கா:- "பெண்கள் உடைகள் ஆண்களை கவர உடுத்துகிறார்கள் " என்பதை பற்றி உங்கள் கருத்து.
பெண்கள் மட்டுமில்லிங்க பொதுவா மக்கள் உடை உடுத்துவதே To attract the opposite sex இதை பிரபல மனோதத்துவ நிபுணர்களே உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஜொள்ஸ்:-. எப்படீங்க புத்துல இருந்து கெளபுற மாதிரி அப்பப்போ உங்களுக்கு சமுதாயக்கோபம் கெளம்புது ? என்னா மேட்டரு?
பொதுவாவே எனக்கு கொஞ்சம் கோவம் அதிகம்.. அதிலும் கொஞ்சம் சமூக அக்கரை உண்டு. குட்டியூண்டு அளவு நேர்மையா நடந்து கொள்ள முயற்சி செய்வேன்(இதுக்கு காரணமும் என்னோட நண்பர்கள் தான் முக்கியமா என்னோட மிக நெருங்கிய நண்பன் திருமால் அப்படின்னு ஒருத்தன். என்னோட நண்பர்கள் பெரும்பான்மையானோர் பற்றி இங்க சொல்லி இருக்கேன். என்னோட வாழ்கை நல்ல பாதையில் போயிக்கொண்டு இருக்கிறது அப்படின்னா என்னோட குடும்பத்துக்கு அடுத்த படியா இவங்களுக்கு அதுல மிகப்பெரிய பங்கு உண்டு.) .. எதிர்வகையா நடக்கும் பொழுது கொஞ்சம் கோவம் வருது வேற எதுவும் இல்ல.

மதுரா:-.ஒரு ஆப்ப்ள் ஐஃபோன் ஐநூறு டாலர். ஒரு பித்தளை குத்துவிளக்கு நூறு டாலர். அப்படின்னா ஒரு அப்பிள் ஐஃபோன் ஓனர், எத்தனை குத்துவிளக்குக்கு ஓனர் ஆகலாம்? (பரிசு: கரெக்டா பதில் சொன்னா நிறைய பேர் வீடு புகுந்து அடிப்பாங்க! :) ...)
ஒரு ஆப்பிள் ஜபோன் ஓனரு ஒரு குத்துவிளக்கோட இருந்தா தான் வெளங்க முடியும் இல்லாட்டி ஆப்பிள்விக்க தான் போக வேண்டி இருக்கும்.

தேவ்::- அமெரிக்காப் போய் வீட்டுக்குத் தெரியாம நீங்க செஞ்ச சின்ன பெரிய தப்பு என்ன?
டிஸ்கோவுக்கு போயிருக்கேன் அதை சொன்னது இல்லை.

கவிதா:-நாம் அமெரிக்கர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயம்.
அருமையான வாழ்க்கை முறை அவர்களுடையது. குடும்பம் மற்றும் Personal life தான் முக்கியம் அதற்கு பிறகு தான் அலுவல். ரொம்ப planned life அவர்களுடையது எதையும் நிதானமாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்.

நாகை சிவா:-.சந்தோஷ் பலர் உங்களை வீடு புகுந்து அடிச்சி இருக்காங்க, அது எல்லாருக்கும் தெரிந்த செய்தி தான். நீங்க தெரிந்தோ தெரியாமலோ யாரு வீட்டுக்கும் போய் அடி வாங்கி இருக்கீங்களா? அப்படி இருந்தால் அதை பற்றி சொல்லுங்களேன்?
நான் எனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பின்னுட்டம் இடுவேன். ஏடாகூடமா அவ்வுளவா பின்னுட்டம் எதுவும் போட்டது இல்ல. நான் எல்லாம் சாதா பதிவர் புலி கொஞ்சம் பிரபலமான ஆளா இருந்தா இது நடந்து இருக்கும் எனக்கு இதுவரைக்கும் அது மாதிரி எதுவும் நடந்தது இல்ல.

துர்கா:- தமிழ்மணம் அரசியல் பற்றி உங்கள் கருத்து? நல்ல ப்ளாக் பதிப்புகளுக்கு,என்ன சாத்தியக்கூறுகள் நீங்கள் சொல்ல நினைக்கிறீர்கள்?
அரசியல் எல்லாம் ஓ.கே, அதுல இருக்குற ஆட்கள் சாதாரண மக்களை இம்சை பண்ணாம எப்படியே அடிச்சிகிட்டு சாவுக யாரு என்ன கேக்க போறாங்க. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இல்லையே தவிர மக்கள் தேடிப்போயி படிக்கிறாங்க. இதுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் அப்படின்னா குமரன், மா.சிவகுமார், பாஸ்டன் பாலா, இட்லிவடை, ஊசி போன்றவர்களின் பதிவுகளை சொல்லாம். உண்மையான திறமையை எப்பவுமே மறைக்க முடியாது.

கைப்புள்ள:- ஒரு சினிமா நடிகர்/நடிகையிடம் கேக்கற மாதிரியான கேள்வி : நீங்க சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகலைன்னா என்ன வேலைக்குப் போயிருப்பீங்க?
என்னோட dream job வந்து Genetic Engineer ஆக வேண்டும் என்பது தான். +2 ல ஆடிய ஆட்டத்தால் காலேஜ் சீட் கிடைக்கிறதே பெரிய குதிரை கொம்பா போச்சி. அந்த வேலையும் அப்படியே போச்சி. மத்தபடி Software Engineer ஆகவில்லை அப்படின்னா மாடு தான் மேச்சிகிட்டு இருந்து இருப்பேன் :))..

கவிதா:- உங்களின் மற்ற ப்ளாக்ஸ் பயாஸ்கோப், sqlspy பற்றி சொல்லுங்க
பயஸ்கோப் சும்மா படம் காட்டுவதற்கு. SQLSpy என்னோட ஆங்கில பதிவு SQL Server பற்றி எனக்கு இருக்குற கொஞ்சம் நஞ்ச அறிவை எழுதி வெச்சிகலாம் பின்னாடி மறந்தா இங்க வந்து படிச்சிகலாம் அப்படின்னு எழுத ஆரம்பித்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அதில நிறைய எழுதணும்.

கார்த்திக்ஜெயன்த்:- கடைசியாக, நீங்கள் இங்கேயே தங்கவிட வேண்டும் என்று நினனக்கிறீர்களா? அல்லது திரும்பி நல்லதை நோக்கி செல்ல நினைக்கிறீர்களா?. உங்கள் கருத்தென்ன?
கண்டிப்பாக நமக்கு இந்த ஊர் ஒத்துவராது. என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தாங்க. என்னங்க ஒரு காரும் கார்பெட் போட்ட வீடும் கிடைச்சிட்டா போதுமா? எங்க ஊரில் நான் தான் முதல் தர குடிமகன் அடிச்சாலும் புடிச்சாலும் நம்ம சொல்றதை அங்க மதிப்பாங்க. இங்க ஒரு பையன் நம்மளை மதிக்க மாட்டான். என்ன தான் ஜல்லி அடிச்சாலும் இங்க நம்ம மூன்றாம் தர குடிமக்கள் தான் வெள்ளைக்காரன் அளவுக்கு மரியாதை நமக்கு கிடைக்காது இங்க.


சந்தோஷ் சொல்லிய தத்துவம் :-Failure Means Delay Not Defeat

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - தேவ்

இன்றைக்கு நம்ம கேப்பங்கஞ்சி ய குடிக்க வந்து இருப்பவர், வ.வா.சங்கத்தின் முக்கிய உறுப்பினர், சங்கத்தை தொடங்கிய முதல் சிங்கம் “தேவ்” அவர்கள்.
தேவின் படைப்புகள் கவிதை, கதை, கலாய்த்தல் என்று பல பரிமாணங்கள் இருந்தாலும், அவரின் கதைகள் முதல் இடத்தை பிடிக்கும், மிக யதார்த்தமாக அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை யார் மனதும் புண்படாதவாறு சொல்லுவதில் வல்லவர். இதோ தேவ் நம்முடன்..

வாயை புடுங்கற ரவுண்டு:-

கவிதா:- வாங்க தேவ், எப்படி இருக்கீங்க?. உங்களின் ப்ளாக் ஆர்வம் எப்படி வந்தது..?
நல்லா இருக்கேங்க. தலைவர் தாங்க காரணம்.. ரஜினி ரசிகர்கள் யாகூ குழுமம் மூலம் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து.. தட்டு தடுமாறி நுழைஞ்சு.. தமிங்கலத்துல்ல தள்ளிகிட்டு இருந்தவனை நம்ம நண்பரும் எழுத்தாளருமான ரஜினி ராம்கி தட்டிக் கொடுக்க தலைக்கேறி.. இப்போ தட்டு தட்டுன்னு பதிவுகளைத் தட்டிகிட்டு இருக்கேன்.. ஆங்.. ஆர்வம்ன்னு நீங்க சொல்லுறீங்க.. நான் இன்னும் ஆர்வக் கோளாறுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.

கவிதா:- வ.வா.சங்கம் தொடங்கியவர் நீங்கள், சங்கம் பற்றி நிறைய கிசு, கிசு வருகிறதே..அதைப்பற்றி -
சங்கம் பக்கத்துல்ல சிரிக்க... சிரிக்க மட்டுமேன்னு ஒரு கேப்ஷன் போட்டிருப்பாங்க... ஒரு வேளை அதனாலத் தான் இவ்வளவு கிசுகிசு வருதோ...

கவிதா:- ஷில்பா செட்டி வெளிச்சத்தில் இருப்பதால் அவரின் இனவெறி தாக்குதல் பற்றி பெரிதாக பேசப்பட்டு, செய்தவரை வேலையை விட்டே அந்த நாடு தூக்கியது. ஆனால் அன்றாடம் அதை போன்று நம்மவர்கள் நிறைய தாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதற்கு நம் அரசாங்கம், அல்லது அயல் நாட்டு அரசாங்கம் எந்த விதமான பாதுகாப்பு தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப சிம்பிள்ங்க.. நாமும் வெளிச்சத்துக்கு வரணும்.. அப்படி வந்துட்டோம்ன்னு வைங்க ஷில்பா ஷெட்டிக்கு சவுண்ட் விட்ட எல்லா அரசியல்வாதியும் நமக்கும் சவுண்ட் விடுவாய்ஙக்.. புஷ் பொங்குவார்.. மன்மோகன் மிரள்வாரு.. பிளேயர் பிளிறுவார்.. ஓ.கே வா

கவிதா:- ஐடி கம்பெனி களின் கலாசார மாற்றம் நல்ல விஷயமா? ஆரோக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
இது சும்மா ஒரு மாயைங்க... பாவம்ங்க பொட்டி தட்டுற எங்கப் பாடு.. காலையிலே உக்காந்தா ( ஆபிஸ்ல்லங்க) சாயங்காலம் வரைக்கும் தட்டி முழிக்காமா உத்துப் பாத்துகிட்டே ( மானிட்டரைங்க) இருக்க ஒரு உத்ய்யோகம்ங்க...காந்தி தாத்தா ஊருக்குப் போங்கடான்னு சொன்னா அம்புட்டு வெள்ளைக் கார பயல்வளோடு இன்னிக்கு வியாவாரம் பாக்க வேண்டிய நிலை.. இதுன்னால அவன் கிட்ட இருக்க ஒண்ணு ரெண்டு குணம் நமக்கு ஓட்டத் தானே செய்யும்.. அப்படி இருக்க ஒண்ணு ரெண்டு விசயத்தையும் பொட்டி தட்டுற பொழப்பை வெளியே இருந்து பாக்குறவங்க பெருசா ஊதி விட்டு கலாச்சார மாற்றம் அப்படின்னு இப்படின்னும் சொல்லி விடுறாங்க.. மத்தப் படி மாற்றம் எல்லாம் பெரிசா இல்லங்க... இதுவும் நாலு பேத்துக்கு சோறு போடுற ஒரு பொழப்பு அவ்வளவு தாங்க

கவிதா - பின்னூட்டங்கள் பெருவது ஒரு வியாபார நோக்கோடு இருக்கவேண்டும், யாருக்கு அவரின் பொருளை விற்க சாமர்த்தியம் இருக்கிறதோ அவர்கள் சாதிக்கிறார்கள் - இது சரியா ? உங்களின் தனிப்பட்ட கருத்தும் இதுவே என்றால் விளக்குங்கள்.
பின்னூட்டத்தில்லே நாட்டம் இல்லாதவங்க யாரும் பதிவு போட மாட்டாங்க.. பின்னூட்டம் போடுறதும் கலை.. அதை வாங்குறதும் கலை..கலையை ஆராதிக்க ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு.. நான் எல்லாம் அப்பப்போ ஆஜர் சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போற கூட்டம்ங்க..

அணில்:- வாங்க தேவ் அண்ணாச்சி , இன்னைக்கு கவிக்கிட்ட மாட்டினது நீங்களா?.. சரி.. இங்க தமிழ்மணத்துல இருக்கிற 90% பேரு ஐடி கம்பெனிக்காரங்களா இருக்கீங்க போல?.. உங்களுக்கு வேல வெட்டியே இல்லையா?.. சும்மா ப்ளாக் எழுத தான் சம்பளம் குடுக்கறாங்களா?
ஆமா அணிலு பிளாக் எழுத சம்பளம் ... பின்னூட்டம் போட போனஸ்... போனஸை விட்டுட்டீயே அணிலு..டிவியிலே கிரிக்கெட் மேட்ச் போட்டாலும் மெகா சிரியல் போட்டலும் சன் மியூசிக்க்ல்ல உன்னிய மாதிரி சின்னப்புள்ளக பாட்டுப் போட்டாலும் ஒவ்வொரு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் பிரேக்ன்னு சொல்லுவாய்ங்க கேட்டு இருக்கீயா.. அது மாதிரி நாங்களும் பொட்டி தட்டுற் கேப்ல்ல பிளாக்ன்னு சொல்லுறோம் அவ்வளவு தான்.. அதைப் போய் பெருசாக் கேட்டுகிட்டு

கவிதா:- இளைஞர்களின் வெளிநாட்டு கனவு பற்றி
உள்நாட்டுச்செலவுக்கு வழி காட்ட விழி தரும் தீர்வு வெளி நாட்டுக் கனவு...

அணில்:- எப்ப பார்த்தாலும் யாரையாவது கலாய்ச்சிக்கிட்டே இருக்கீங்களே?.. உங்களை யாரும் அது மாதிரி கலாய்ச்சி இருக்காங்களா?.. அது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க.
பதில் சொல்லலாம் லிஸ்ட் கொஞ்சம் நீளம்...இந்தா ஒரு சிக்கன் சூப் மட்டன் சூப்.. ஒரு ஹார்லிக்ஸ்.. ஒரு போர்ன்விட்டா.. ஒரு பாதாம் பால் .. இப்படி எல்லாம் கொடுக்காம கேப்பக் கஞ்சி ஊத்துறோம் வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சுகிட்டு இன்னும் அந்தக் கேப்பக் கஞ்சிய என் கண்ல்ல காட்டமா இப்போ நிங்க என்னக் கலாய்க்கலியா... பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சாதரண்ம்ன்னு எங்க பன்னிக்குட்டி ராமசாமி எப்பவோச் சொல்லிட்டார்.

அணில்:- அண்ணாச்சி சங்கத்து சிங்கங்கள் பற்றி ஒரு 4 வார்த்தை சொல்லிட்டு அடுத்த ரவுண்டுக்கு நடைய கட்டுங்க..
இதயம் ஆளும் இனிய நண்பர்கள் -
நாலு வார்த்தை தானே கரெக்ட்டாச் சொல்லிட்டேனா..

கவிதா:- தேன்கூட்டில், கதை தேர்வில், நீங்கள் ஏதாவது மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
தேன் கூடுப் போட்டிகளை நான் கவனிக்கறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சே..

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு :-

1. ப்ளாக்கரில் உங்களுக்கு பிடித்த கலாய்த்தல் மன்னன்'/ மன்னி' கள்
கோழிப் பண்ணை ஊர்காரர் இதுக்குன்னு தனியாப் பதிவே வச்சிருக்காரே...
ஜம்போன்னு சொன்னா இவங்க ஞாபகம் வரணும்... ஒருத்தரை கலாய்க்க தனி சங்கமே ஆரம்பிச்சு உதறுனவ்ங்க...இப்போ இவங்களைக் கலாய்க்க புதுசா சங்கம் ஆரம்பம் ஆயிருக்காம்.. ஆக மொத்தம் இந்த கலாய்த்தல் தங்கம்மாவை சங்கம் விடாது போலிருக்கு..

2. உங்களின் சிறந்த பதிவுகள் என்று நீங்கள் நினைப்பது
சிறந்த அப்படின்னு சொல்ல முடியாது.. எனக்குப் பிடிச்சப் பதிவுகள்ன்னு வேணும்ன்னா சொல்லிக்கலாம்
1 கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி
2 நட்பு எனப் படுவது யாதெனின்..
3 கவி 15: ரகசியம்

3. உங்களின் சிறந்த கதைகள்
இனிமேத் தாங்க எழுதணும் அப்படின்னுச் சொல்லித் தப்பிச்சுக்கலாம்ன்னு பாக்குறேன்..
கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1
கதை 12:என்கவுண்டர்/ENCOUNTER
இது நான் எழுதி எனக்குப் பிடித்தக் கதைகள்

4. நீங்கள் ஒரு பெண் பெயரில் எழுதுவதாக கிசு கிசு உள்ளதே ? அது பற்றி
ஒரு பொண்ணு பெயரில் தானா? ச்சே அவ்வளவு தானா.. இன்னும் நல்லா விசாரிங்க... நிறைய கிச்சு கிச்சு கிடைக்கும்ங்க...

5. இப்படியே எவ்வளவு நாளைக்கு கதை' விட போறீங்க
கதைகளை விட முடியாத வரை கதையை விட்டுக் கொண்டு தான் இருப்பேன்..

6. சங்கத்து சிங்கங்கள் பதிவுகளில் உங்களை கவர்ந்தவை
சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்... - கைப்புள்ள
மீண்டும் அரியாசனத்தில்...! - சிபி
ராயலோ ராயல் - இளா
VAVASA - வரலாறு - பாகம்-3 - ஜொள்ளு பாண்டி
சங்கம் ஸ்போர்ட்ஸ் SANGAM SPORTS - வெட்டிபயல்
கன்னிப்பதிவு (புது வ.வா) - ராம்
செயற்குழு கூட்டம்! - நாகைசிவா

7. உங்களின் ஆங்கில ப்ளாக் பற்றி
ஆரம்பித்தேன்... யாருக்கும் சொல்லாமல் மூடி விட்டேன்..

8. உங்களின் பார்வையில் - பெண் பதிவர்கள்
எண்ணிக்கையில் குறைவு... இன்னும் நிறைய பேர் வரணும்.. அதிலும் நகைச்சுவையாய் எழுதுபவர்கள் இன்னும் பெருக வேண்டும்....

9. தலைவரின் தீவர ரசிகரான நீங்கள் - அவர் வழியில் மக்களுக்கு சொல்ல விரும்புவது
"உங்களுக்குன்னு ஒரு வழி வச்சுக்குங்க"... தலைவரும் அதை தான் சொல்லுறார்.

10. வவாச - மூலம் நீங்கள் சாதித்தது, சாதிக்க நினைப்பது
சங்கம் மூலம் எனக்கு கிடைத்தது அழகிய ஒரு நட்பு பூங்கா.. அதில் கிடைத்தது எண்ணிலடாங்க பூமணம் கமழும் நட்பின் இனிய நினைவுகள்..
சாதிக்க நினைச்சு ஆரம்பிக்கலியே சங்கம்.. சிரிக்க சிரிக்க மட்டுமே தோற்றுவிக்கப்பட்டது சங்கம்.. அது தொடர்ந்தாப் போதும்ங்க...

தேவ் சொன்ன தத்துவம் :- Believe in the god who believes in you

என் முதல் சம்பளம் ரூ.11.60

படிக்கும் போது வகுப்பில் முதல் அல்லது இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்கும் நான், அதிகம் ஆசைப்பட்டது நிறைய படிக்கவேண்டும் என்பதே. ஏதோ ஒரு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்து ரேன்க் கீழே போய்விட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அத்தனை பேரையும் காரணம் அவர்கள் தான் குறை சொல்லி அமர்களம் செய்துவிடுவது வாடிக்கை.

படிப்பிற்கு பொறாமை வேண்டும் என்பார்கள் எனக்கு கொஞ்சம் அதிகமே. அதிகமாக மதிப்பெண் யாராவது எடுத்துவிட்டால் அவர்கள் எனக்கு விரோதிதான்.. சிறுபிள்ளை தனமான இந்த எண்ணம் இன்னமும் என்னை விட்டு போகவில்லை என்பது நினைத்தால் எனக்கே சில சமயம் அசிங்கமாக இருக்கும். ஆனால் அவர்களால் முடிகிறது என்னால் ஏன் முடியவில்லை என்று முட்டி மோதி படித்து முந்திவிடுவது என்று முடிவுடன் இருப்பேன்.

என்னுடைய அப்பா இறக்கும் போது எனக்கு 14-15 வயது, என்னை டாக்டர்க்கு படிக்க வைக்க வேண்டும் என்று இன்ஸ்ட்டுருமென்ட் பாக்ஸ் எல்லாம் வாங்கி வைத்து இருந்தார். ஆனால் அவரின் இறப்பு என் படிப்பை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லல.

என் அப்பாவின் அம்மாவும் அப்பாவுமே என்னை தொடர்ந்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். 10ஆவது முடித்தவுடன் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். நானும் ஆயாவிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து நல்ல மாப்பிள்ளை வரும் வரை என்னை படிக்க வையுங்கள் என்று கேட்டேன். அவர்களுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று மட்டும் எனக்கு தெரிந்தது. என் அண்ணகளை அவர்கள் பாரமாக நினைக்கவில்லை. ஆண் குழந்தைகள் எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என்பார்களே அன்றி என்னை பற்றிய கவலை அவர்களின் வயதான காலக்கட்டதில் வாட்டி எடுத்ததை நான் உணர்ந்தேன். ஆனாலும் திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லல.

மிகவும் அடம் பிடித்ததால், சித்தப்பா வீட்டிற்க்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். ஆனால் படிப்பு தொடரும் இடைவேளையில், என்னை வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லி உறவினர்கள் கட்டாயப்படுத்தியதில், நான் பத்தாவது முடித்தவுடன், ஒரு துணி தைக்கும் கம்பெனியில் தையல் வேலைக்கு சேர்ந்தேன்.

என் வயது உடைய என்னை கட்டாயப்படுத்திய அந்த உறவினர்களின் குழந்தைகள், மகள், தங்கைகள் என்று எல்லோருமே படித்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிக்காமல், கட்டாயத்திற்காக நான் அங்கு வேலைக்கு சென்றாலும் என் மனம் முழுக்க படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்றே 24 மணி நேரம் முழங்கியது. ஒரு வாரம் சென்றேன். என்னால் அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியவில்லை, காரணம் படிக்க வேண்டும் என்ற என் விருப்பம் மண்ணோடு புதைந்து போய்விடுமோ என்ற பயம் தான்.

அந்த ஒரு வாரத்திக்கு நான் வாங்கிய என் முதல் சம்பளம் ரூ.11.60. அப்போது மாத சம்பளம் எனக்கு என்னவாக இருந்து இருக்கும் என்று பாருங்கள்.  இப்போது ஐந்து இலக்க எண்ணில் சம்பளம் வாங்கினாலும், இந்த முதல் சம்பளத்தை மறக்கமுடிவதில்லை..மறக்கவும் விரும்பவில்லை.

அணில் குட்டி அனிதா:- கவிதா என்ன சொல்லவறீங்க.. சின்ன வயசுலேயே தையல் நல்லா தைக்க வரும் ன்னு சொல்றீங்களா?.. உங்களை விட மோசமா, படிக்க வழி இல்லாதவங்கள யோசிச்சி, வாய கப்புன்னு மூடுங்க.. ஓவரா சவுண்டு விட்டுக்கிட்டு!! அவனவன் சாப்பட்டிற்கு வழியில்லாமல் கஷ்ட படறான்.. நீங்க என்னடான்னா.....சின்ன விஷயத்தை ஓவரா பில்டப் குடுக்கறீங்க.. எப்படியோ.. யாரோ படிக்க வச்சாங்க இல்ல.. அப்புறம் என்ன?.. தாத்ஸ்..நீங்க வாங்க.....தத்துவத்த சொல்லுங்க..

பீட்டர் தாத்ஸ் :- It takes courage to push yourself to places that you have never been before.... To test your limits... To break through barriers.

மறந்துபோன விளையாட்டுக்கள்

வெயில் படத்தில் வரும் “வெயிலோடு வெளையாடி “ பாட்டை பார்க்கும் போது எல்லாம் சிறு வயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டு நினைவுக்கு வருகிறது. எங்களுடைய மகனிடம் அதை எல்லாம் சுட்டிக்காட்டி பள்ளியிலாவது இப்படி விளையாடுவீர்களா என்று கேட்டேன். அவனோ.. “உன்னை மாதிரி நான் என்ன “கேவுருன்னு’ (அதாங்க நம்ம கேப்பங்கஞ்சி வைக்கறோமே அது) நினைச்சியா?.. ன்னு கேட்கிறான்.??

எத்தனை அற்புதமான விளயாட்டுக்கள்.

கோலி அடித்தே எங்கள் வீட்டு மதில் சுவரை ஓட்டை செய்துவிட்டு போன என் வயது சிறுவர்கள். அவர்களுடன் நானும் என் சின்ன அண்ணனும் சேர்ந்து நடுரோட்டில் கையை ரோட்டில் பதித்து ஜான் அளவு வைத்து அளந்து அளந்து விளையாடிய கோலி விளயாட்டு.

அண்ணனை போலவே எனக்கும் வேண்டும் என்று அழுது அடம் பிடித்து வாங்கிய பம்பரம், அதை ரோட்டில் அண்ணனுடன் சேர்ந்து வட்டத்துள்ளிலிருக்கும் அடுத்தவனின் பம்பரத்தை நம் பம்பரத்தால் குத்தி வெளியில் எடுக்க முயற்சி செய்த நாட்கள். என்னால் சரியாக குத்தி எடுக்க முடிந்ததில்லை. அதற்காக அண்ணனிடம் படு கேவலமாக திட்டு வாங்கியது. (அவங்க friends முன்னாடி அவருக்கு அசிங்கமா போய்டும்)

சோடா பாட்டில் மூடியின் விளிம்புகளை சுத்தியால் அடித்து விரித்து நடுவில் இரண்டு ஓட்டை போட்டு டொயன் நூல் சேர்த்து இழுத்து, மற்றவர்களின் நூலை அறுத்து விளயாடுவது.

கண்ணாடி எல்லாம் சேர்த்து வைத்து அரைத்து நூல் மாஞ்சா போட்டு, (அண்ணன் என்ன செய்தாலும் அங்கு நானும் பிரசண்ட். ஆகிவிடுவேன்.), பட்டம் விட நூல் தயார் செய்து அண்ணனுக்கு பட்டதை ஏற்ற உதவி செய்து விட்டு..மேலே போனவுடன் அதை வாங்கி சும்மாவாவது கையில் வைத்து க்கொண்டு, பட்டம் விட்டென் என்று சொல்லிக்கொண்டது...

பனஓலையில் திருப்பிபோட்டு உட்கார்ந்து ஒருவர் இழுக்க..பயணம் செய்தது

வேப்பங்காய் கொட்டையை கைவிரலின் வெளிப்புறம் வைத்து குத்தி ரத்தம் வர வைத்தது.

கல்லா மண்ணா விளையாட்டு, நொண்டி, ஓடிப்பிடித்தல்., சில்லி கல் வைத்து கட்டம் போட்டு நொண்டி அடித்து விளையாட்டு

பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்காய்

கூட்டாஞ்சோறு..

எங்கு மணலை கண்டாலும் இருவர் உட்கார்ந்து, குச்சியை அதில் மறைத்து விளையாடும் விளையாட்டு.....

ஒருவரை குனியவைத்து, ஓடி வந்து மேல் ஏறி குதித்து சென்று விளையாடுவது..

அண்ணனை போலவே மரம் ஏறி மேலிருந்து விழுந்து, முதுகு வளைந்து போக, அண்ணன் மேல இருந்து சிரிப்பாய் சிரித்தது..

பட்டாம்பூச்சி, தும்பி பிடித்து, அதை நூலால் கட்டி, மதில் சுவரில் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, அது பறக்க முடியாமல் தவிப்பதை ரசித்தது.....

ஆட்டை ஓட ஓட விரட்டி, பால் கறந்து விளையாடியது (எங்கவீட்டு ஆடு இல்லைங்க)

சொல்லிக்கொண்டே போகலாம்.....

இதில் எந்த விளையாட்டுமே என் மகன் விளையாட ஆர்வம் காட்டியதில்லை, தெரிந்து வைத்திருக்கவும் இல்லை என்றே நினைக்கிறேன்... தெரிந்தவை

டி.வி
கம்புயூட்டர்
தொலைபேசியில் ஒன்றைநாள் நண்பர்களுடன் பேச்சு
சினிமா (ஆங்கிலம், இந்தி மட்டுமே)
கிரிக்கெட்
கால்பந்து
Chess
கேரம்.

இதில் சொல்லிகொள்வது அவரு “hi-fi” நாங்க “கேவுரு“

அணில்குட்டி அனிதா :- என்ன கவி ரோட்டுல எல்லாம் போய் விளையாடுவீங்களா நீங்க? சரி உங்க புள்ளைய நீங்க இப்படி free ஆ ரோட்டுல விட்டு வளக்கறீங்களா? ரோட்டுக்கு அவரு போனவே..”என்ன ரோட்டுல உனக்கு வேலை” ன்னு கேக்கறீங்க?.. ஆனா அவரு உங்க “கேவுரு” விளையாட்டு எல்லாம் விளையாடலன்னு கவல வேற.. சரியா இல்லையே..?.. உங்க புள்ள டெக்னாலாஜி டெவலப் க்கு தகுந்த மாதிரி விளையாடறாரு.. எதுக்கு அவர பாத்து உங்களுக்கு பொறாமை சொல்லுங்க..?!

பீட்டர் தாத்ஸ் :- Many of life’s failures are men who did not realize how close they are to success when they gave up.

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் எழுத்துபுயல் தரண்

இந்தியாவிற்கு வருவதையும், இந்தியனாக என் சிந்தனை இருக்க வேண்டாம் என்பதில் உறுதியாகவும், பெரியாரின் தாசனாக... அறிவும், அழகும்,(தரண் இது மட்டும் பொய்) கூடவே அதிகபடியான குசும்புக்கும், நக்கலுக்கும் சொந்தமான.. "எழுத்து புயல்" தரண் அவர்கள் நம்மிடையே இன்று மாட்டிக்கொண்டார்.. இல்லை இல்லை நாங்கள் தான் அவரிடம் மாட்டிக்கொண்டோம்... இதோ அவரின்.. வார்த்தையாலேயே நம்மை கிழிக்கும் பதில்கள் -

அணில் குட்டி அனிதா:- தரண் எப்பவும் என்னைய ரொம்ப கிண்டல் பண்றதால நான் அவரை கேள்வி கேட்க மாட்டேன்..எனக்கும் அவருக்கும் சரிப்பட்டு வராது..அம்மணி நீங்களே கேட்டுக்கோங்க..நான் அப்படி ஓரமா உக்காந்துகறேன்..!!

வாயைப்புடுங்கற ரவுண்டு

கவிதா :-வாங்க தரண் ! Welcome to the show " கேப்பங்கஞ்சி கவிதா & அனிதா"? நீங்க ஷோ முடிஞ்சி போகும் போது கண்டிப்பா கஞ்சி குடிச்சிட்டு தான் போகனும். உங்களை பற்றி சின்னதா ஒரு intro கொடுங்களேன் ....
Build up லாம் பலமாத்தான் இருக்கு அதே சமயம் பயமாகவும் இருக்கு ..காரணம் சொல்வது கவிதா என்பதால். .

தமிழ்மணத்தில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் பலரை எனக்குப் பிடிக்கும். இந்தியனாக இருப்பவர்களை எல்லாம் நான் எதோ வெறுப்பது மாதிரி பேசுவது தவறு.

நான் பெரியார் தாசன் இல்லை.எனக்கென்று சொந்த சிந்தனைகள் உண்டு. பெரியார் அடிமைகளை விரும்புவதில்லை.

எழுத்து புயலா..இதெல்லாம் ஓவரு build up...hahahahaha....புயல் கரையை என்றாவது கடக்கும் அல்லது வலுவிழந்து போகும்..தென்றலாக வாழ்வோம் மின்னலென சிந்திப்போம், பூகம்பம் போல் காரியம் முடிப்போம்.

படிப்பு- B.E in ECE , M.E in A.Electronics and doing PhD in MPEG-4 PART-10 AVC/H.264, Multi view video coding. Intro about my
research

இன்னும் 20 துகளில் நிற்கும் இளைஞன்..

கவிதா:- நீங்கள் தாய்வான் நாட்டு மக்களிடம் கற்று கொண்ட சில நல்ல விஷயங்கள் ?
தாய்வானில் நான் ஏற்றுக்கொண்ட பல கொள்கைகள் நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறது .இவர்கள் மனிதம் மதத்தை விட பெரியது என்பதை பெரியார் இல்லாமலே உணர்ந்திருக்கும் மக்கள் .பெரியார் இருந்தும் உணராத மாக்கள் அதிகம் நம் நாட்டில். உலக வரைபடதில் ஒரு புள்ளியாக தெரிந்தாலும் மக்களின் மனது உலக வரைபடத்தை விட பெரியது. Semiconductor துறையில் Taiwan ஒரு Leader. அமைதியான அழகான உலகத்தர வசதிகள் கொண்ட நாடுதான் தாய்வான். இந்த
வீடியோ சொல்லும் தாய்வான் யார் என்பதை.

கவிதா- தாய்வான் நாட்டு பெண்கள் பற்றி
ஒரே வரியில் 28-21-26 (கலாச்சார காவலர்கள் கிளம்பிடாங்கய்யா).
முக்கிய விசயம்: அழகான பல பெண்கள் பொறாமை இல்லாமல் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள்.(நம்ப ஊரில் அய்யோ அ ய்யோ...தமாசு....)

கவிதா:- தரண், இந்த பொறாமை விஷயம் நம்ம ஆண்களுக்கும் உண்டு..சும்மா தமாசு கிமாசுன்னு டென்ஷன் பண்ணாதீங்க...சரி..ஆண்/ பெண் கற்பு என்பது ?
நீங்க இதை குஷ்பு, ராமதாஸ் மற்றும் திருமாவளவனிடம் கேட்க வேண்டிய கேள்வி..hahahah...Virginity is not a Dignity it's a lack of oppourtunity...என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ம்ம்..சரிங்க..என்னை பொறுத்த வரைக்கும் கற்பு என்பது
அவரவர்களின் தனிப்பட்ட விசயம். விவாதிக்கவோ தீர்ப்பு கூறவோ தேவையில்லாத விசயம்.
இங்கே பார்க்கவும்..

கவிதா:- நட்பு, உறவுகள், பாசம் என்பதின் யதார்த்தமான உண்மை என்ன?
ஒவ்வொரு பொதுநலத்திற்கு பின்பும் ஒரு மிகப்பெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது.

கவிதா:- நீங்கள் இதுவரை எனக்கு எழுதிய பின்னூட்டங்களை கொண்டு - இந்தியாவின் சில பழக்க வழக்கங்களை மிக வன்மையாக எதிர்க்கிறீர்கள் என்று புரிந்துக்கொண்டேன்..- அதற்காக ஒரு இந்தியனாக நான் இருக்க விரும்பவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியா ?
கேள்வி தவறு. ஓரு சராசரி இந்தியனின் மனநிலையில் வாழவிருப்பமில்லை.

கவிதா:- தந்தை பெரியாரின் புரட்சி சிந்தைனைகளில்- உங்களுக்கு பிடித்தவை சில.. எங்களுக்காக

Periyar சொன்னது: நான் மனிதனே! நான் சாதாரணமானவன்,மனதில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
.நான் யார்?நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. .அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது. கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை. மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது. மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

கவிதா:- உங்கள் சிந்தனையும், சொல்லும் நன்றாக இருக்கும் பட்சத்தில் ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதுவதில்லை.
ஏதோ எழுத வேண்டும் என்பதற்ககாக எழுதுவதில்லை...சர்வாதிகாரம் சனநாயக முறையில் கடைபிடிக்கப்படுவதால் நான் என் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை மற்றபடி நேரம் ஒதுக்கி எழுத முயற்ச்சிக்கிறேன். திராவிட வலைத்தளத்தில் எழுத சில விசயங்கள் இருக்கிறது. செயலலிதா ஆட்சியில் இருந்தால் காமெடியா இருக்கும் ..அம்மனி வேற இல்லையா அதான்....எனக்கு நிகழ்கால நடப்புகளை அலசுவதுதான் நிரம்பபிடிக்கும்

கவிதா:- தமிழ்மணம் அரசியல் பற்றி - உங்கள் கருத்து
வெளிப்படையான அரசியல் ok. அனானி கள் பெயரில் அரசியல் செய்வது சில பிரபலாமன பதிவர்கள் என்பதை உனரும்போது....கோபம் வருகிறது என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்...அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்..இந்திய hypocrite கலாச்சாரத்தின் முகவரிகள் அவர்கள். தழலாக ஒளி வீசும் சிலரும் இதில் அடக்கம்தான் .

கவிதா :- ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வதை பற்றி? நன்மை என்ன? பிரச்சனை என்ன?
நக்கலாக சொன்னால்--- ஆணுக்கு நிம்மதி.
நன்மை: தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படாமல்,அவர்கள் அவர்களாகவே வாழும் சுதந்திரம் அதிகம்.பாசம் மற்றும் கலாச்சாரம் என்கிற எந்த போர்வையாலும் ஆணாதிக்கத்தை செலுத்த முடியாத ஒரு வாழ்க்கை.
ஒரு சராசரி இந்திய பிற்போக்கு சிந்தனை உள்ள ஆணோ ,பெண்ணோ இதை முயற்சிக்க வேண்டாம்.

பிரச்சனை: குழந்தை .

கவிதா:-இந்தியாவை வெறுக்கும் நீங்கள், தந்தை பெரியார் என்ற ஒரு இந்தியரின் புரட்சி சிந்தனைகளை பின் பற்றுகிறீர்கள் என்பது தெரியுமா?
இந்தியாவின் மூடப்பழக்க வழக்கங்களைத்தான் வெறுக்கிறேன்.. பெரியார் மிகக்கடுமையாக இந்திய மூடப்பழக்கங்களை எதிர்த்தார் என்பதற்காக இந்தியாவை வெறுத்தார் என்று அர்த்தமா?. RSS, Bajrangthal போன்ற வன்முறையையும் தீவிரவாதிகளையும் உருவாக்கும் இயக்கங்கள் இருக்கும் இந்தியாவை வெறுக்கிறேன். மனிதனை கற்களின்(கடவுள்) பெயரால் கொல்லும் மாக்கள் இருக்கும் வரை வெறுப்பேன் .

பெரியாரின் சிந்தனைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை.
நான் நானாக இருக்கிறேன். பல நூறு வருடங்களுக்கு முன்பும் மனிதன் சாப்பிட வாயைத்தான் உபயோகித்தான். உங்கள் மகனும் வாயால்தான் சாப்பிடுகிறார் உடனே அவரை உங்களை பின்பற்றித்தான் வாயால் சாப்பிடுகிறார் என்று சொல்வீர்களா? .பெரியாரை படிக்கும் போது வியக்கிறேன், மதிக்கிறேன். இன்றைய குளோனிங் மற்றும் லிவிங்டுகெதர் பற்றி அன்றே சொன்னார்.
இங்கே பார்க்கவும்

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

கவிதா:- இந்தியா/ தாய்வான் எந்த நாட்டு பெண்கள் அழகு + அறிவு ?

Dharan: (99.99%அழகு+60% அறிவு= தாய்வான் பெண்கள்), (20% அழகு+ 80%அறிவு= இந்திய பெண்கள்)
P.S: அழகு என்பது முகம் மட்டுமல்ல,Physical maintenance...மிக மிக முக்கியம் திருமணம் மற்றும் 2 குழந்தைகள் பிறந்த பின்பும்.
இங்கே பார்க்கவும்

கவிதா:- உங்களுக்கு இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது?

Democracy and hypocrisy.
இங்கே பார்க்கவும்

கவிதா:- உடல் தானம் அவசியம் - உங்கள் கருத்து
இரு பாலரும் செய்யவேண்டும்...கலாச்சாரம் என்கிற பெயரில் காவிசாயம் பூசக்கூடாது.

கவிதா:- கோபம்/சுயமரியாதை/பணம்/ஒழுக்கம் - இதில் மனிதனுக்கு மிகவும் முக்கிய மானது எது? (வகை படுத்துங்கள்)
சுயமரியாதை உணர்வு உள்ளவனாக இருந்ததால் மனிதம் இருக்கும். மனிதம் போதும் மானுடம் வாழும்.

ஒரு "இந்தியப்பெண்" உங்களுக்கு எதிர்கால மனைவியாக வருவார்களா?
ஒரு பெண் மனைவியாக வருவார். Physical fitness ல் மிகுந்த அக்கறை உள்ளவன் மற்றும் globalization பிடிக்கும்.

கவிதா;- கம்யுனிசம் என்பது?
கம்யுனிசம்(பொதுவுடமை)-நம்மை விட பணக்காரனை பார்க்கும் போது மட்டும் தோன்றும் சிந்தனை

கவிதா:- கலாச்சார சீர்கேடு என்பது?
பொருளாதார ஏற்றதாழ்வுகள்

கவிதா:- புரட்சி பெண்கள் - என்று யாரை சொல்லுவீர்கள்
சுயமரியாதை உள்ள அனைவருமே.

கவிதா:- உங்களை அசிங்கமாக திட்டும் அநாநிகள் பற்றி -
இந்திய hypocrite கலாச்சாரத்தின் முகவரிகள்.

கவிதா:- உங்கள் பொழுது போக்கு ?
I love my research


இன்றிய தத்துவம் தரண் சொல்லியது :- வரவுக்கேற்ப செலவுசெய்ய நினைக்காதே, செலவுக்கேற்ப வரவு வேண்டும் என நினை. நீயும் முன்னேறுவாய் நாடும் முன்னேறும்

உலகிலேயே, வயிற்றில் இதயம் கொண்ட ஒரே மனிதன்..

Photobucket - Video and Image Hosting

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் தமிழச்சி!

இன்றைக்கு எங்களிடம் கேப்பங்கஞ்சி குடிக்க மாட்டியவர், அக்மார்க் தமிழச்சி..மதுரா அவர்கள். இவருடைய படைப்புகள் அனைத்துமே நல்ல வித்தியாசமான தமிழில் எழுதிய படைப்புகள். எனக்கும் அணிலுக்கும் நல்ல தமிழே புரியாது..இவங்க தமிழ் சுத்தமா புரியாது... ஆனாலும் நல்ல தரமான படைப்புகளை தருகிறார்கள் என்பதால் படிப்போம்.. இதோ நம்மிடையே..மதுரா..

வாயைப்புடுங்கற ரவுண்டு:-

கவிதா :-வாங்க தமிழச்சி! எப்படி இருக்கீங்க ?!! இப்ப எங்க இருக்கீங்க.? உங்களை பற்றி சொல்லுங்க....
உங்கள் பதிவில் எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு (பெருமையுடனும் சந்தோஷத்துடனும்) மனமார்ந்த நன்றி கவிதா. ஜமாய்ச்சிக்கிட்டுருக்கேன்! மஸ்தினியாக இருக்கேன்! :) இப்ப அத்தான் பக்க்க்க்க்க்கத்தில இருக்கேன்! :) நம்ம நாட்டு மண்ணுல. நான் யாருன்னு எனக்கே ரொம்ப டவுட்டு உண்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலயும் வேறு வேறு கோணங்களில் உலகமும், வாழ்கையும், சுயமும், புரியாம புரிஞ்சு குழப்புனதுல, மொத்தமா கலங்குன பார்டின்னு வச்சுக்கோங்க! :)

கவிதா:- உங்க தமிழ் நிஜமாகவே ரொம்ப வித்தியாசமா இருக்கு, . பேச்சு நடை, எழுத்து நடை..ஏன்..சில சொற்கள் கூட ரொம்ப புதிதாக இருக்கு.. காரணம் என்ன?
கன்னா பின்னான்னு நிறைய மொழிகளை பேசும் யதார்த்ததில் வாழ்கை அமைஞ்சதாலன்னு நினைக்கிறேன். மொழி சம்பந்தப்பட்ட மூளையின் செல்கள் எல்லாம் எப்பவும் எக்குத்தப்பா கெமிக்கல் ஃபயர் பண்ணி வார்த்தைகளை எங்க எங்கருந்தோ தோண்டி எடுத்து சொதப்பிருது.

கவிதா:- உங்கள் எழுத்தில் நாங்கள் கண்டது..ஒரு சமயம் கலவி பற்றி பேசும் தீடீரென்று டவுசர் பாண்டிச்சி.. தீடீரென்று ஹிட்லர், கார்டிரைவிங், நீச்சக் என்று தாவுகிறீர்கள் எப்படி..இப்படி?!
அதுதான் என் சுய ரூபம்னு நினைக்கிறேன். மாமியார் வீட்டுல பாத்திரம் கழுவிக்கிட்டே, ஒரு பக்கம் சினிமா பாட்டு கேட்டுகிட்டே, இன்னொரு பக்கம் குவான்டம் மெகானிக்ஸ் நிஜமா பொய்யான்னு தீவிரமா யோசிச்சிட்டிருப்பேன். டம்முன்னு தட்டு சோப்புல நழுவி கீழ விழுந்து, டென்ஷனா பாப்பேன். யாரும் திட்ட மாட்டாங்க, நானே என்னைய திட்டிக்குவேன்!

கவிதா:- நிறைய நல்ல பதிவுகள் இருந்தும் நிறைய பார்வைகள் உங்கள் எழுத்தின் மேல் படவில்லை என்று நினைக்கிறேன்.. நீங்கள் அதைப்பற்றி?
அய்யோ இருக்கிறவங்களே போதுமையா சாமி. போட்டு வறுத்து எடுத்திடாங்க சில பேரு. இப்படியெல்லாம் கூட கோவிச்சாப்பாங்களா ஒண்ணுமில்லாத உளறுலுக்கெல்லாம்னு மண்ட காஞ்சு போயிட்டேன். நமக்கேத்த நாலு பேர் போதும் என்னைக்கும்!

கவிதா:- வியாபார நோக்கோடு.. பதிவுகள் பார்வையிடப்படனும்னு நீங்க நினைக்கிறீங்களா?.. அதாவது.. அதிக மறுமொழி வரவேண்டும்.. அதற்காக..நாம் நம்மை அதிகபடியாக விளப்பரம் செய்து கொள்ள வேண்டும் , அரசியல் செய்தோ..அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிலோ அல்லது எல்லோருடைய பதிவுலும் போய் ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு வந்தாலோ..அடுத்தவர்களின் பார்வை நம் மேல் விழும் அல்லவா? இதை பற்றி உங்களின் கருத்து
ஹி ஹீ. எனக்கும் நிறைய கமெண்டு வந்தா புடிக்கும்தான். :) பாராட்டு இன்னுமே ரொம்ப பிடிக்கும்! :) ... அப்பட்டமா அதை சொன்னா அல்பம்னு நினைப்பாங்களோன்னு ஒரு பயம் உண்டு. ஆனாலும் வெக்கப்படுறதுக்கு நமக்கு கொஞ்சம் மானம் கம்மி. :) ஆனா விளம்பரப்படுத்தி எழுதுற அளவுக்கு, என் எழுத்து மேல எனக்கு மரியாதை இன்னும் வரலை. சில பேரு நிஜமாவே பயங்கர ஆழமான குறிக்கோள், தத்துவம், எல்லாம் வச்சு எழுதுறாங்க - அவங்கல்லாம் பெரியவங்க. நான் சும்மாத்தான் எழுதுறேன். ஆனா நிறைய பதிவுகள் போய் வாழ்கையின் பல கோணங்கள், அதன் அழகான பார்வைகள் பார்த்து நிஜமாவே ரசிச்சு சந்தோஷப்புட்டுருக்கேன். பின்னூட்டம் விடதுக்கு சோம்பல் பட்டு விட்டுருக்கேன். ரசிச்சதோட சரி.

கவிதா:- உங்கள் எழுத்துக்களில் பெண்ணியம் பற்றிய சிந்தனை நிறைய இருக்கு..அதில் எனக்கு உடன் படாத கருத்துக்கள் நிறையவே இருக்கு.. பெண்ணியம் - என்பதை பற்றி சுருக்கமா நச்சுன்னு சொல்லுங்க
பெண்ணின் இயம் அவ்வளவுதாங்க. பெண்களின் இயம் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டதாய் எனக்கு தோணும் அடிக்கடி. அதை அன்பும் ஆனந்தமுமாய் சமுதாயத்தில் பார்வைக்கு வெளிக்கொண்டு வரணும்னு ஒரு ஆசை உண்டு. குழப்பம், கோபம்தான் சில சமயம் வாங்கிக் கட்டிருக்கேன். :) சுய வாழ்கையில பயப்படுறதே இல்ல, உண்மைய உளறி கொட்டி நிம்மதியா இருந்திருவேன். ஆனா சமுதாயத்தில எப்படி வெளி கொண்டு வரணும் - அவை அறிதல் இன்னும் முழுசாத் தெரியல.

கவிதா:- நீங்கள் எழுதியதில் குறிப்பா
பச்சைக் குத்தின பாண்டிச்சி! ..... இவிங்க யாரு.. சும்மா சூப்பரா பாட்டு எல்லாம் பாடி இருக்கீங்க இந்த பதிவுல.. நீங்க இவிங்க கூட சேர்தவங்களா?"
நானே நானா... யாரோ தானா? மெல்ல மெல்ல மாறினேனா?" :) சொன்னதெல்லாம் உண்மைதான் பேரைத்தவிர :)

அணில்:- தமிழச்சியக்கா..அது என்னாங்கக்கா..
இஸ்.பேக்கு ? “டவுசர் பாண்டிச்சி இஸ் பேக்கு??
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)


கவிதா :- ஹா..ஹா...கோக்கு மாக்கா?!! சரி..உங்களின் ஒரு பதிவில் “
விவாக ரத்து - யதார்த்தமான கண்ணோட்டம்.." பதிவை படித்திருக்கிறேன். அதிகபடியான விவகரத்து பெண்களுக்கு ஆக்கப்பூர்வமானதுன்னு நீங்க நினைக்கறீங்களா?
இனிமையும் இன்றி, இயமும் அன்றி, வாழும் பெண்மையை போற்றும் கொடுமையான கலாசாரமாக நான் தமிழர்களின் வாழ்வு முறையை பார்க்கவில்லை. கலாசார போர்வையில் புகுந்து, இயம் மாறி அஞ்சி வாழாமல், இனிமை இழக்காமல் சிறகு விரித்து புதிய வானில் ரம்மியம் தேடுங்கள் அவ்வளவுதான் என் கருத்து.


கவிதா:- “ஹிட்லரும், நானும், எங்கள் தோட்டியும்" என்ற பதிவில் தோட்டி பற்றியும் உங்க மனஓட்டத்தையும் புர்ஞ்சிக்க முடிஞ்சிது.. இப்பவும் நாகரீகமாக இது நடக்குது தெரியுமா?
இப்பவும் நான் அதை பார்க்க நேர்ந்தால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதோன்னு நினைச்சா பயமாதான் இருக்கு. என்ன செய்யணும், எப்படி செய்யணும், அதை பற்றி ஆழமாய் சிந்திக்க வேண்டும், சிந்திப்பதோடு இல்லாமல் செய்ய வெண்டும். செய்வேனா? செஞ்சப்புறம் சொல்றேன். இப்ப வெறும் பேச்சு தான்! கறிக்காவாது.

கவிதா:- ஆண் - ??
பெண்ணின் இயம் அறியாமல் எத்தனையோ வித்தைகள் செய்து பார்க்கும் அப்பாவிகள். மற்றபடி இந்த குழப்பத்திலிருந்து எஸ்கேப் ஆகி, அவர்கள் போக்கில் அவர்கள் இருக்கும் போது இனிமையானவர்கள், அருமையானவர்கள், அன்பானவர்கள், ஆனந்தமானவர்கள்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

மதுரா / தமிழச்சி - ஒற்றுமை வேற்றுமை
தமிழச்சி நிஜம்; பல விதம். நிஜத்தை எழுத்தில் வடிக்கும் ஒரு முயற்சி மதுரா. மதுராவும் ஒரு வகையில் தமிழச்சியே.

உங்கள் மச்சானிடம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஒன்று-
எனக்கு என்னை விட உன் மனதில் தெரியும் என் பிம்பம் மிகவும் பிடித்தமானதாய் உள்ளது. அதனையே எதிர்பார்த்து உன்னை மணந்தேனோ இந்த சுய-நல வாதி?

உங்கள் குழந்தைகள் “தமிழச்சிகளாக வளர்க்கபடுவார்களா?
தமிழர்களின் அருமையான உணவு, அழகிய உடைகள், அமுதமான இலக்கிய உலகம் அவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் விடப்படும். பாடல்கள், கவிதைகள், நடனங்கள், நாட்டுப்புற கலைகள் அனைத்தும் அவர்களுக்கு காட்டித்தரப்படும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்; திரைகடல் ஓடி திரவியம் தேடு" என்னும் தமிழ் சொல்லாடல்களும் சொல்லிக் கொடுக்கப்படும்! :)

உங்கள் எழுத்தில் உங்களுக்கு பிடித்த பதிவுகள்
அன்பர் நண்பர்களிடமே பகிராத உண்மைகளை, எண்ணங்களை, அப்பட்டமாய் எழுதிய அத்தனை வார்த்தைகளும், மிகவும் பிடிக்கும். அங்கங்கு காணக் கிடைக்கும் அவை.

உங்களுக்கு ப்ளாக் ளில் பிடிக்காத விஷயங்கள்
என் அன்புக்குரியவர்களின் நிஜங்களை வைத்து தருமமாய் செய்கிறேன் என்று நினைத்து சூதாட்டமாய் போன விளையாட்டு, சில பதிவுகள். அது எனக்கு மிகுந்த வருத்தம் தந்தது. அடுத்தவர்கள் பதிவு அவர்கள் விருப்பம். நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.

நீங்கள் ஒரு தமிழச்சி யாக சாதிக்க நினைப்பது ?
வளர்த்த மண்ணில் என்னால் முடிந்த அளவு இனிமை விதைப்பது; ஆனந்தம் காப்பது; உண்மையை மேடை ஏற்றுவது! எப்படின்னு தெரியல.
நீங்கள் எழுதவந்தது ஏன்?என்னைப் போல யாராவது இதே மாதிரி குழப்பங்கள் கண்டு கலங்கியிருந்தால், ஒரு தோழமை காண்பார்கள் என் எழுத்தில் என்பதால். அவ்வகை தோழமைக்காக நான் பல முறை ஏங்கி இருக்கிறேன்.

உங்கள் மச்சான் உங்களை பாராட்டிய ஒரு நிகழ்வு.
மச்சான் பாராட்டித் தள்ளிருவாரு. ஒண்ணா இரண்டா, எப்பவுமே பாராட்டு தான். ஆனா அப்பப்ப குசும்பு நடக்கும் "அந்த பொண்ணு எவ்வளவு அழகு, உன்னை மாதிரி கண்ணு என்னை மாதிரி மூக்கு" அப்படின்னுவாரு - "என் மூக்கு குடை மிளகாய்ன்னு சொல்ற" அப்படின்னு வேதாளம் உடனே ஆரம்பிச்சிரும்! விக்கிரமாதித்தன் மாதிரி பதில் சொல்லி அனுப்பிருவாரு! :)

தமிழச்சி - பிளாக்கில் என்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? தமிழில் பெண் இயத்தின் உண்மைகளை இனிமையாய் ஆனந்தமாய் எழுதி சமுதாயத்தின் பார்வையில் வைக்கும் மொழித் திறன் மட்டுமில்ல மனப் பக்குவமும் வரவேண்டும் அப்படின்னு ஒரு பேராசை உண்டு! :)

உங்களுடைய மற்ற interest..
பயணம் - பல தொலைவுகளில், பல கலாச்சாரங்களில். பயிரிடுதல் - பழங்கள், நெடு மரங்கள், எனக்குரிய பூமியில், என் வியர்வையில்.

சினிமா எப்படி பார்க்கவேண்டும்?


சினிமா பொதுவாக எல்லோருக்கும் எல்லாமும் பிடித்துவிடாது.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கதைகள் பிடிக்கும். ஒரு படத்தை சிலர் ஆஹா ஓஹோ என்பார்கள்..ஆனால் அதையே..மற்றவர்கள் சே! என்னைய படம் இது “செம கடி” என்பார்கள். “அன்பே சிவம்” என்ற படத்தை நான் எங்கள் வீட்டில் ரசித்து ப்பார்த்தேன்..என் கணவரும் மகனும், என்னை ப்பார்த்து தலையில் அடித்து கொண்டு போனார்கள்.. அவர்களுக்கு பிடிக்கவில்லை.

இங்குள்ள படத்தை பாருங்கள் . இந்த படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பில் கட்டும் டேபிளில் கண்ணாடியில் பதிக்கப்பட்ட பூச்சாடியின் படம். இந்த ஹோட்டலுக்கு நாங்கள் மாதம் ஒருமுறையாவது போவோம். இந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அது சீனக்காரின் முகம் போல தோன்றும். முதலில் தூர இருந்து பார்த்த நான்..அது சீன க்காரிர் ஒருவரின் முகம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் கணவர் முதல் முறை பார்க்கும் போதே “லூசே! அது பூச்சாடி” என்றார். நான் நம்பாமல் பக்கத்தில் சென்று உறுதி செய்தேன். இருந்தாலும் நான் பார்க்கும் போது அது சீனக்காரின் முகம் போல த்தான் எனக்கு தோன்றும்.. அதற்கு என் மகனும் “ அம்மா! உனக்கு கண்ணு தெரியலன்னு சொல்லு அதவிட்டுட்டு அறிஜீவிக்கணக்கா பேசதான்னு நக்கல் அடிப்பான்”..


உங்களுக்கு எப்படி தெரியுதுன்னு பாருங்க.. ?!! இது நான் ஏதோ முடிந்தவரை அந்த பூச்சாடி போல் வரைந்தது..

சரி விஷயத்துக்கு வரேன்.. நம்ம தல கைப்புள்ள ஏதோ பெண்ணியத்தை பற்றி சொல்லும் போது அவர் பார்த்த படம் கருத்தம்மா’ விலிருந்து ஒரு காட்சியை அவர் எப்படி ரசித்தார், எந்த நோக்கத்தோடு பார்த்தார் என்றும் சொல்லியிருந்தார். அது ஒரு தப்பா..?!! அத்தனை பேரும் கருத்தம்மா கண்ணீர் கதையை கேட்டு அழத்தான் வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா.. ? என்னங்க ஒருத்தர் படம் அவங்க இஷ்டத்துக்கு பார்த்து ரசிக்க கூட உரிமை இல்லையா?.. அவர்கள் கருத்தை சொல்ல உரிமை இல்லையா?.. எது சொன்னாலும் பின்னால் ஓடி ப்போய் ஒரு பதிவு அவர் இதை இப்படி சொன்னார் அதை அப்படி சொன்னார் என்று போட்டு எந்தவிதமாக நாம் மிக சிறந்த அறிவாளி என்று நிருபித்து கொள்ள போகிறோம்னு தெரியவில்லை..

இந்த பதிவு கூட அவசியம் இல்லாத பதிவுதான்..ஆனா.. எதையுமே அவர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மனக்குமறல்களை சொல்லவிட கூடாது என்பது போல் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் பார்க்கும் நோக்கிலேயே பதிவுகளை படித்து அதையும் ஒரு பதிவாக போடுபவர்களக்காக அஞ்சியே நிறைய பேர் தங்களின் உண்மை கருத்தை சொல்லவே தயங்குகிறார்கள்.. மாற்று கருத்து சொல்லித்தான் நாம் யாரென்றும் நம் சிந்தனை ஓட்டம் இப்படி ப்பட்டது என்றும் அடுத்தவர்களுக்கு புரியவைக்க வேண்டுமா என்ன?..

மேலே சொன்ன படம் மாதிரிதாங்க.. ஒவ்வொருத்தரின் பார்வையும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறது...

அணில் குட்டி அனிதா:- சரி, நீங்க படம் வரைவீங்கன்னு சொல்லறதுக்கு ஒரு பதிவா.. ஆமா அடுத்தவங்கள குத்தம் சொல்லதன்னு நீங்க அடுத்தவங்கள குத்தம் சொல்றீங்க.. எந்த வூரு நியாயம் இது .? நல்லவா இருக்கு.. இது உங்களுக்கு.. ம்ம்..... ஆனா..இந்த பதிவுல ஒரு நல்ல விஷயம் இருக்கு அது என்னான்னா... கண்ணு தெரியமா எதையோ பார்த்துட்டு.. எதுவோ மாதிரி தெரியுதுன்னு சொல்லி..அதுல வேற.... நீங்க ஒரு அறிவு ஜீவிய போல பார்க்கறதா நெனச்சிகறீங்க.. பாருங்க.. ஹய்யோ ..ஹய்யோஒ........ தாங்கலடா சாமீ . கவி.. கவி........இங்க பாருங்க..நான் யாருன்னு தெரியுதா..??

பீட்டர் தாத்ஸ் :- Don’t measure yourself by what you have accomplished, but by what you should have accomplished with your ability.

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் -ஜொள்ஸ்

இன்றைக்கு நாங்க சந்திக்க போகிறவரை boat ல போய் பார்த்துத்தான் இன்டர்வயூ பண்ணவேண்டியதா இருந்தது.. ம்ம்... ஜொள்ளுவால மிதிக்கற ஜொள்ளுப்பேட்டைக்கு எப்படி நடந்து போகமுடியும்.. YES !!! இன்றைக்கு நம்ம கூட ஜொள்ளுவிட வந்து இருக்கறது.. நம்ம.. பாண்டி... ஜொள்ளூபாண்டி.. தான்..!!! .... அவரு விடற ஜொள்ளுக்கு..பரிசா.. வேற என்ன..நம்ம சூப்பர் கேப்பங்கஞ்சி .....தான்..!! :)

வாயைப்புடுங்கற ரவுண்டு

அணில் :- வாங்க ஜொள்ளு அண்ணே எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் ஆச்சி பார்த்து.. ..
வா அணிகுட்டி !!! நான் இங்கன தானே சுத்திகிட்டு இருக்கேன் லேட்டஸ்டா நம்ம தானைய தலைவிய கொஞ்சம் Replace பண்ண வேண்டிய பணிகள் இருந்ததாலே கொஞ்சம் பிஸி !!

அணில்:- அண்ணே...ஜொள்ளுவிடவே ஒரு ப்ளாக் ரெடிபண்ணி விடாம தொடர்ந்து ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கீங்களே.. எப்படி இது?
அல்லாரும் பண்றதுதானே ! மத்தவங்கெல்லாம் சத்தம்காட்டாம பண்ணிகிட்டு இருக்காங்க நான் அதையே எழுதிகிட்டு இருக்கேன். அதெல்லாம் தானா வருது அணிலு ! என்ன பண்றது ?

கவிதா: பாண்டி..உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க..உங்க படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நீங்க விருப்பப்பட்டா....
நெம்ப கஷ்டப்பட்டு என்ஜினியரிங் முடிச்சிட்டு இப்போ IT யிலே குப்பை கொட்டிகிட்டு இருக்கேன் !! வேறென்னத்த சொல்ல !

அணில்:-அட அண்ணே...நீங்க.. என்ஜினியரா?.. ம்ம்..நாங்க எல்லாரும்..நீங்க ஜொள்ளு விடறதால Ph.d ன்னு இல்ல நெனச்சிக்கிட்டு இருக்கோம்..!
அட சும்மா இரு அணிலு ! வெட்கமா இருக்கு ! ஆமா ஆராச்சும் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்கன்னா சொல்லு ! Dr. ஜொள்ளுப்பாண்டி நல்லாத்தேன் இருக்கு பேரு !!

அணில்:- அது சரி..ஓசி..பட்டம் வாங்க காத்துக்கிட்டு இருக்கீங்க போல.. அதுக்கு நீங்க அரசியலத்தான் சேரனும்.. சரி..அண்ணே..ஜொள்ளுவிட நீங்க..புது புது ஐடியாவா குடுக்கறீங்களே..எப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களா?
அட இதுக்கெல்லாம் ரூம் போட்டா செலவு என்னாவறது ? அப்படியே லேடீஸ் காலேஜு , IT பார்க்கு , பீச்சு, சினிமாதியேட்டர், ஷாப்பிங் மால் ன்னு அப்படியேக்கா 360 டிகிரியிலே கண்ணை ஓட்டினாவே போதுமே !!

கவிதா:- எப்பவும் ரொம்ப ஜாலியா ஜொள்ளுவிட்டு க்கிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு கொஞ்சம் சீரியசாக சமுதாயம், அரசியல் சார்ந்த பதிவுகள், கவிதைகள், கதைகள் போன்றவை எழுத ஆர்வம் இல்லையா?
இதெனாங்க கவிதா கோக்குமாக்கா கேக்குறீங்க ? சமுதாயம் அரசியல் எல்லாம் பேப்பர்ல பார்கறதோட சரிங்க. கவிதையிலயும் கதையிலயும் கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க !

கவிதா:- ம்ம்...ஜாலிய எழுதற உங்ககிட்ட..சில சீரியஸ் கேள்விகள் கேட்கலாம் என்று நினனக்கிறேன்.. ப்ளாக்ல இப்ப எல்லாம் சங்கங்கள் அதிகமாகிகிட்டே வருது.. இதை பற்றி உங்களின் கருத்து..?!!
சங்கங்கள் ப்ளாக் உலகின் அங்கங்கள் !! இருந்துட்டு போகட்டுமே !!

கவிதா :- சங்கங்கள் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு Direct /Indirect support இருக்குன்னு நினைக்கறேன்.. நீங்க அதைப்பற்றி..
அதெல்லாம் கெடையாதுங்க நீங்க வேற ! நம்ம எழுத்தை பிடிச்சவங்க நம்மளை சப்போர்ட் பண்ணுவாங்க அவ்வளவுதான்.

கவிதா:- ஜொள்ளுவிடறது தவிர பெண்ணைப் பற்றி -
என்னைய பொறுத்த வரையிலே பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப அன்பானவங்க. அவங்களோட எக்கசக்கமான அன்பை சில சமயம் நாமெல்லாம் தப்பா possessiveness ன்னு நெனச்சுக்குறோம். என்னடா இந்த பொண்ணுங்க எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகாச்சியா அழுவறாங்கன்னு நாமெல்லாம் நெனக்கிறோம். நம்ம வள்ளுவர் தாத்தா என்ன சொல்லியிருக்காருனா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்


அர்த்தம் என்னான்னா “அன்பை அடைச்சு வைக்க முடியாது. கண்ணீரே காட்டிக்கொடுத்துவிடும்.” அன்பு கண்ணா பின்னான்னு நெரம்பி கெடக்குறதாலவோ என்னவோ இந்த பொண்ணுங்க அன்பை அடைச்சு வச்சுக்க முடியாம பொசுக்கு பொசுக்குன்னு அழுதுபுடுறாங்க.அம்புட்டுதேன் ! வாழ்க தாய்குலங்கள் !!

கவிதா:- ம்ம் நான் ஏதோ கேட்டு உங்க வாயை புடுங்களாம்னு நெனச்சா நீங்க ஏதோ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ ன்னு கதை சொல்றீங்க..ம்ம்..பரவாயில்லை Next - ஆணாதிக்கம் பற்றிய உங்கள் பார்வை-
ஆண் அன்பிலே ஆதிக்கம் செலுத்தினால் போதுங்க. இந்த வார்த்தையே ஒழிஞ்சிடும் !

கவிதா:- குஷ்பு கலாச்சாரம் உங்களின் அலசல்
அலசலா ? என்னா கவிதாக்கா இப்படி கேட்டுபுட்டீக? எப்போவாச்சும் துணி துவைச்சா அலசுவேன் அவ்ளவுதாங்கோ !!

அணில்:- அண்ணே..அம்மணிக்கிட்ட இருந்து செம சூப்பரா எஸ்கேப் ஆகறீங்க..ம்ம்..நம்ம தல (கைப்புள்ள தான்) இது தெரியாம.. Net ல எல்லாம் search பண்ணி .......ம்ம்.. இதுக்கு மேல என்னத்த சொல்ல................சரி நாம அம்மணிய ஓரம் கட்டிட்டு 2 nd round க்கு போகலாம்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-

1. ஜொள்ளு பாண்டிக்கு எதிரா ஒரு ஜொள்ளு பாண்டச்சி இருக்காங்க போல? ..
அட ஆமாங்க. ஒரு அம்மணி இருக்காக. எதிரான்னு சொல்லாதீங்க எல்லாரும் நமக்கு ப்ரெண்டுதாங்கோ !!

2. ப்ளாக்ல ஜொள்ளு ...வெளியில...........
வெளியிலே நான் ஒரு Silent ஜொள்ளந்தேன். நான் ஜொள்ளுவிடுறது என் வாய்க்கு கூட தெரியாதுன்னா பார்த்துக்குங்களேன் !!

3. உங்களின் ஜொள்ளின் சாதனையாக நீங்கள் நினைப்பது
அட போங்க இதையெல்லாம் ஒரு சாதனையா கேட்டுகிட்டு. ஆனா ஜொள்ளுப்பேட்டைய படிக்கறவுக நெறையா பேரு என்னோட ப்ளாக் படிச்சுட்டு நல்லா சிரிச்சு ரிலாக்ஸ் ஆனேன்னு சொல்லிட்டு போறதுதான் என்னோட சாதனையா நெனைக்கிறேன். எல்லாரும் சந்தோசமா சிரிச்சிகிட்டே இருக்கனும்கறதுதான் என்னோட ஆசை !

4. இப்படி நீங்க அநியாயத்துக்கு ஜொள்ளுவிட்ட விஷயம் வருங்காலத்துல உங்க மனைவிக்கு தெரிஞ்சா? (கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடுவீங்க இல்ல)
அட என்னாங்க நீங்க இப்படியெல்லாம் கேட்டு பீதியக்கொளப்பறீங்க ! என்னைய பொருத்த வரைக்கும் மனைவினா ஒரு நல்ல ப்ரெண்ட் மாதிரிங்க. ஒரு நல்ல ப்ரெண்ட் என்னைய புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன ?

5. உங்களின் ப்ளாக் பெண் ரசிகைகள் பற்றி - (எங்களையும் சேர்த்துக்கோங்க)
ஆஹா !!! பெண் ரசிகைகள்னு ஏங்க அவங்களை தனிமைப்படுத்தறீங்க? ஜொள்ளை பொண்ணுகளும் ரசிக்கராங்கன்னு எனக்கு புரியவச்சவங்க அவங்க ! எனக்கு ஊக்கம் கொடுத்து மேன்மேலும் ஜொள்ளுவிட வைக்குறாகுளே அவுக அன்புக்கு நான் அடிமை !!

6. உங்களின் வீட்டில் “ஜொள்ளு பேட்டையின்” ரசிகர்கள் யாராவது?
வீட்டிலேயா ? மொதோ மொதலா குங்குமத்திலே வந்த கதைதான் என்னோட பேரை என் வீட்டிலே சொல்ல வச்சது. என் பேரை கேடுபுட்டு எங்கம்மா கேட்டது “என்னடா பேரு இது ஜொள்ளுப்பாண்டி? ன்னு ஆமா ஜொள்ளுன்னா என்னா ஏதாச்சும் பலகாரமா ? “

7. ஜொள்ளுபாண்டியா நீங்க இல்லைனா வேற யாரா இருந்து இருப்பீங்க? யாரா இருக்க ஆசை படறீங்க?
நான் இப்படியேதாங்க இருக்க ஆசைப்படறேன். நான் நானாகவே இருக்க ஆசை.

8. உங்களின் எந்த பதிவில் ஓவர் ஜொள்ளுல எல்லாரும் மிதந்தாங்கன்னு நினைக்கறீங்க?
அப்படியேல்லாம் வகைப்படுத்த முடியாதுங்க. ஆனா நம்மளோட ஜொள்ளாராய்ச்சியெல்லாமே மக்களை ஜொள்ளிலே நல்லா மிதக்க வச்சிருக்கு !! லேட்டஸ்டா
இஞ்சி இடுப்புன்னா என்னாங்கற வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பதிவில் வந்த இலியானாவைப் பார்த்து பலபேறு சுனாமியா ஜொள்ளுவிட்டதாக அறிகிறேன்.

9. பிடித்த பெண்கள் - எந்த துறையா இருந்தாலும் (ஜொள்ளுவிடாம சொல்லனும் சரியா)
கேள்வியே தப்புங்க !! எப்படி என்னால குறுகிய மனப்பான்மையோட இருக்க முடியும்னு எதிர் பார்கறீங்க? ஒருதவங்களை சொன்னா இன்னொருத்தவங்களுக்கு கோவம் வந்துடாது ? எல்லாப் பெண்களுமே ஏதாசும் ஒரு வகையிலே பிடிச்சு போய்டுறாங்களே !!

10. கடைசியாக உங்களுக்கு பிடிக்காத கேள்வி- பிடித்த ஆண்கள்
அட யாருங்க இப்படியெல்லம் குண்டக்க மண்டக்க போட்டு விடுறது ? எனக்கு பிடிச்ச ஆண் என் அப்பாதான் !

அணில்:-அண்ணே..எங்க அதுக்குள்ள தப்பிச்சி ஓட பார்க்கறீங்க நாட்டுக்கு ஒரு தத்துவம் சொல்லிட்டு போங்க...

ஜொள்ஸ்ஸின் தத்துவம்:- Time is like a river. You cant touch the same water twice because the flow that passed will never pass again. Enjoy every moment of your Life .

அணில்:- நம்ம ஜொள்ளு சும்மா ஜாலியா..சூப்பரா... கவிதாக்கிட்ட.. எங்கேயும் மாட்டிக்காம ரொம்ப சாதூர்யமாக பதில் சொல்லி .. அம்மணி வீசிய வலையிலிருந்து தப்பிச்சி ஓடிட்டாரு.. ம்ம்... அம்மணி எரிச்சல் தாங்கமுடியாம..... உப்புப்போடத..... ஒழங்கா வேகவைக்காத கஞ்சிய அவருக்கு குடிக்க கொடுத்து..... அவரை வேறு விதமா பழிவாங்கிடாங்க ..ம்ம்.. அவரு இனி.. 2- நாளைக்கு .. பாத்ரூம் விட்டு வெளியில வரமாட்டாருங்கோ..

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் கைப்புள்ள!

ஒவ்வொரு வெள்ளியும்(முடிந்தவரை), இனி புதிய பகுதி கேப்பகஞ்சி with கவிதா & அனிதா வரவிருக்கிறது. இதில் நம்முடைய பிளாக் நண்பர்கள் மற்றும் வெளியிலிருந்தும் நேர்காணல் செய்து அதன் உரையாடல் தொகுப்பு பதிவாக்கப்படும். நேர்காணலின் போது நண்பருக்கு கேப்பங்கஞ்சி ஒரு லோட்டா பால் விட்டு சர்க்கரை போட்டோ இல்லை தயிர் விட்டு உப்பு போட்டோ அவரவர் விருப்பபடி கொடுக்கப்படும்.. எங்களிடம் முதலில் மாட்டியவர் - நம்ம ஒன்லி ஒன் கைப்புள்ள

வாயைப்புடுங்கற ரவுண்டு :-
கவிதா :-வாங்க கைப்ஸ்! எப்படி இருக்கீங்க ?!!
வணக்கம் கவிதா, ஹாய் அனிதா! இது வரைக்கும் நல்லா தான் இருக்கேன். இனிமே எப்படி இருக்கப் போறேங்கிறது உங்க கேள்வி முடிஞ்சப்பிறகு தான் தெரியும்.
கவிதா -
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லு-ங்களேன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாலியாக சிரித்து மகிழ நகைச்சுவையான பதிவுகளை இட்டு, படித்தவர்கள் மகிழ்ச்சியான நினைவுகளுடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துடைய நண்பர்களினால், தொடங்கப் பட்ட ஒரு ‘Cool Hangout Place’ போன்ற ஒரு கூட்டு வலைப்பூ முயற்சி. அனைவரது உழைப்பினாலும், ஒத்துழைப்பினாலும் சங்கத்துக்கு நல்ல ஆதரவு கெடைச்சு நல்லபடியா நடந்துட்டிருக்கு.
கவிதா :-
உங்க படிப்பு, வேலை, உங்க குடும்பம் பற்றி, நீங்க விருப்பப்பட்டா சொல்லுங்க..
அது என்ன விருப்பப்பட்டா...? அதுக்குத் தானே வந்துருக்கோம். நீங்க ஊத்தப் போற கேப்பங்கஞ்சிக்காகவாச்சும் ஒரு ரெண்டு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லித் தானே ஆவனும்? எம்பி எம்பி ஒரு எம்பிஏ டிகிரி வாங்குனதாலே ஊர் ஊராச் சுத்தி ப்ளாக் படிக்கிறதுக்கு ஒரு கன்சல்டண்ட் வேலை கெடச்சிருக்கு. எதோ எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாராம்னு ‘நான் கன்சல்டண்ட், நான் கன்சல்டண்ட்’னு ஊரை ஏமாத்திட்டிருக்கேன். என்னோட குடும்பத்தைப் பத்தி சொல்லனும்னா, எங்க தோப்பனார் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், தாயார் தடிப்பசங்களுக்காகவே உழைச்சு ஓடாத் தேய்ஞ்ச ஒரு இல்லத்தரசி, இளவல் ஒருத்தரு இருக்காரு...சமீபத்துல அவரும் விரிவுரையாளரா சென்னையில் ஒரு கல்லூரியில் பணியில் சேர்ந்திருக்காரு. நாலு பேரைக் கொண்ட மகிழ்ச்சியான குடும்பம் எங்க குடும்பம். என்னைத் தவிர எல்லாரும் சென்னையில தான் இருக்காங்க.
கவிதா:- இவ்வளவு படிச்சி இருக்கீங்க..ஆனா தெரியவே இல்ல.. ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு.. உங்களின் வேலை சம்பந்தமா உங்களின் வருங்கால திட்டம் என்ன?
என்னது...தெரியவே இல்லியா? ஏன் நம்ம மூஞ்சைப் பாத்தா மாங்கா மடையனாட்டம் இருக்கா? தன்னடக்கம் எல்லாம் ஒன்னுமில்லீங்க. சான்ஸ் கெடச்சா சந்துல சிந்து பாடிடுவோம்ல? வருங்கால திட்டம்னு பாத்தா... இன்னும் நெறைய காசைச் சேர்க்கனும். வாங்கி அதை கல்லால போட்டுக்கணும். அம்புட்டுத் தான்.
கவிதா:- பெண் – Define
ஆஹா! கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா! எங்கடா ஆப்புன்னு எதுவும் இன்னும் வரலியேன்னு பாத்தேன். அப்படியே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா கேப்பங்கஞ்சின்னு ஒன்னு குடுத்தீங்களே அதை வேற குடிச்சிட்டேன்?

ஒன்னு பண்ணறேன். காலேஜ் படிக்கும் போது ‘வாட்டாக்குடி இரணியன்’னு படம் ஒன்னு வந்துச்சு. அந்தப் படத்துல கோழி குஞ்சுகளை மீனா கொஞ்சற மாதிரி ஒரு ஸ்டில் ஒன்னு செய்தித் தாள்ல வந்துச்சு. அதை அப்படியே(!) காப்பியடிச்சிட்டு, எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு நாலு வரி ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா கிறுக்கி வச்சிருக்கேன். அதை கீழே இருக்கற சுட்டியில போய் படிச்சிப் பாருங்க. அதுலேயே நாங்க டிஃபைனி வச்சிருக்கோம்.
http://beta.blogger.com/
கவிதா :- உங்களின் interest எழுதுவது, படிப்பது தவிர..
எழுதுவதும் படிப்பதும் என் interestனு யாரு சொன்னா? நெறைய விஷயத்துல மூக்கை நுழைச்சி ஒன்னையும் உருப்படியாத் தெரிஞ்சிக்காம இருக்கறது தான் நம்ம ஒரே interest. அதுலேயே ரொம்ப நாளா இருக்கறதுன்னு பாத்தா கேலிகிராஃபியும்(Calligraphy) தபால் தலை சேகரித்தலும், இப்போ புதுசா போட்டா புடிக்கிறதும்
அனிதா:- தல, பெண்ணியம் பற்றி உங்களின் கருத்து...
இதுக்கு அம்மணியே பரவால்ல போலிருக்கு. இன்னிக்கு எனக்கு டின்னு கட்டி விடாம அனுப்பப் போறதில்லைனு நெனக்கிறேன். இருந்தாலும் நீ கேக்கறியேங்கிறதுனால சொல்றேன். உண்மையில சொல்லப் போனா எனக்கும் பெண்ணியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது. சரி, என்னான்னு தெரிஞ்சிக்கலாம்னு விகிபீடியாவுக்குப் போய் ‘Feminism’னு தேடுனேன். எக்கச்சக்கமா மேட்டர் வந்துச்சு. யார் யாரோ ஃபிரெஞ்சு, பிரிட்டிஷ் மேடம் பேரெல்லாம் போட்டுருந்துச்சு. பெண்கள் கல்விக்காகவும், ஓட்டுரிமைக்காகவும், சம உரிமைக்காகவும் போராடறது தான் பெண்ணியம் அப்படீங்கற மாதிரி போட்டிருக்கு. அப்படியே மேல படிச்சா வர்ஜினியா உல்ப்(Virginia Woolf) அப்படீங்கற எழுத்தாளர் ‘Feminism’ அப்படிங்கற சொல்லையே வெறுக்கறதா போட்டுருந்துச்சு. அவங்களைப் பொறுத்தவரை ‘Feminism’னு தனியா எதுவுமில்லையாம். எல்லாமே ‘Humanity’ தானாம். அவங்களோட பர்சனல் வாழ்க்கை பத்தி எல்லாம் படிச்சும், அதைப் பத்தி எல்லாம் ஆராயாம அவங்களோட கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா ‘பெண்ணியம்’னு சொல்றது மனிதத் தன்மைக்குள்ள அடங்குனதுன்னு தான் எனக்கும் படுது. ஆண் பால், பெண் பால்ங்கிறதை மறந்து இரு பாலரும் அந்த மனிதத் தன்மையை மட்டும் மதிக்கக் கத்துக்கிட்டா ‘பெண்ணியம்’ அப்படின்னு தனியா எதுக்கும் தேவையிருக்காதுன்னு நெனக்கிறேன். அந்த மனிதத் தன்மைக்குள்ள பல பல மைக்ரோ சமாசாரங்கள் அடங்கியிருக்குன்னும் நெனைக்கிறேன். அது என்னென்னன்னு வெளக்கமாச் சொல்லவும் பேசவும் நெறைய அனுபவமும் அறிவும் தேவைன்னும் நெனக்கிறேன்.

இது இப்படியிருக்க... கருத்தம்மா படத்துல பார்த்த ஒரு காட்சி. டைரக்டரோட ‘டச்’ வெளிப்படற ஒரு காட்சி. கைகால் முடமானத் தன் தந்தையான பேராசிரியர் பெரியார்தாசனைக் கருத்தம்மா ராஜஸ்ரீ குளிப்பாட்டுவது போல அமைந்த ஒரு காட்சி. தென்னங்கீற்று இடுக்குகளின் வழியாக முதியவர் குளிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் “டேய்! தாத்தா அம்மணமா குளிக்கிறாருடா”ன்னு சொல்லுவதாக வரும். “டேய்! போங்கடா” என அந்தச் சிறுவர்களை ராஜஸ்ரீ விரட்டுவார். அதன் மூலம் கருத்தம்மா எனும் கதாபாத்திரத்தை உயர்வாகச் சித்தரிக்கும் நோக்கிலும் இயக்குனர் வெற்றி பெறுவார். குழந்தையாக இருக்கும் போது தன்னையே கொல்ல முனைந்த, தன் தந்தையின் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல், அவரைத் தன் குழந்தை போல பாவிக்கும் ஒரு பென்ணின் தாய்மை உணர்வு பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும் சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது பெண்ணியத்துள் வருமா? நக்கலுக்காகக் கேக்கவில்லை. ஏனெனில் விகிபீடியாவில் liberation, suppression, equality இவைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் மேலே சொன்னது போன்ற எண்ணற்றப் பெண்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. அப்பெண்களின் பார்வையில் பெண்ணியம் என்பது எது? பதில் தெரியாததாலும், பெண்ணியத்தைப் பற்றி பேச கவிதா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாலும் உண்மையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கிறேன். யாருக்கிட்டயாச்சும் விளக்கம் இருந்தாச் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஒன்னை பதிலு சொல்லச் சொன்னா கேள்வியாடா கேக்குறேன்னுட்டு, பேட்டியை முடிச்சிட்டு கெளம்பற நேரத்துல கேப்பங்கஞ்சிக்கு பில்லை நீட்டிடாதே தாயீ. ஜோபியில துட்டு வேற இல்ல!

அனிதா:- தல உங்களின் அழகின் ரகசியம் என்ன?
இப்போ கேட்டியே இது கேள்வி. இப்பச் சொல்றதை, நல்லா கொட்டை எழுத்துல ஃபாண்ட் சைஸ் அம்பதுல போட்டுக்க. நம்ம மேனி எழிலோட ரகசியம் என்னான்னு கேட்டீன்னா சமீப காலம் வரைக்கும் ‘மஞ்சளும் சந்தனமும் சேர்ந்த விக்கோ டர்மெரிக் இல்லை காஸ்மெடிக் தான்’. ஆனா பொண்ணுங்க போடற ஃபேர்னஸ் க்ரீம் எதுக்குன்னு சூர்யா கேள்வி கேக்கச் சொல்லிக் குடுத்ததுக்கப்புறமா இப்பல்லாம் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்’ தான். இதெல்லாமும் பூசிக்கலைன்னாலும் நாம அழகோ அழகு தான். ஆனா நாம க்ரீமைப் பூசிக்கிட்டா ஒரு நாலு பேரு வீட்டுல அடுப்பெரியுமில்ல? அதுனால இதை ஒரு பொது சேவையா செய்றேன். வேற ஒன்னுமில்லை. இந்தப் பதிலை மட்டும் போல்ட் இட்டாலிக் அண்டர்லைன்ல கட்டம் கட்டிப் போட்டுடு சரியா?
கவிதா :- நீங்க சாதிக்கனும்னு நினைக்கற ஒரு விஷயம்...
ஒரு விஷயமாவது முழுசா உருப்படியாத் தெரிஞ்சு வச்சிக்கணும். இத சாதிக்க முடிஞ்சாலே அது எனக்குப் பெரிய விஷயம் தான்.
அனிதா :- ஏன் தல... எல்லார் கிட்டயும் ஒத வாங்கறத ஒரு தொழிலாவே ஆக்கிட்டீங்க?
என்ன அனிதா பண்ணறது? ஒத வாங்குனதுக்கப்புறம் ‘எவ்வளோ அடி வாங்குனாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா’னு ஒரு சர்டிஃபிகேட் குடுத்துடறாங்களே? அது அடுத்ததா ஒத வாங்குறதுக்கு ஒரு ஊக்க மருந்தா அமைஞ்சுப் போயிடுது. என்ன பண்ணறது?
கவிதா:- நீங்க
சிவகுமார் சார் பதிவில் ஒருமுறை பொருளாதாரம் பற்றிய உங்களின் கருத்து சொன்னதற்கு புத்தகம் பரிசா வாங்கனீங்க.. அது போன்ற விஷயங்களை, அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றை உங்கள் பதிவிலும் எழுதுலாம் இல்லையா? நீங்க எழுதாம இருக்க என்ன காரணம்.?
ஹி...ஹி...எழுதலாம் தான். ஆனா அடுத்தவங்க கிட்டேருந்து கத்துக்கறதுல இருக்கற ஆர்வம், நாம நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு வரும் போது இல்லாத போயிடுதுன்னு நெனக்கிறேன். சுயநலமும் சோம்பேறித் தனமும் தான் உருப்படியா எதுவும் எழுதாததுக்குக் காரணம். வேற என்ன?

கவிதா :- சரிங்க தல, நிறைய வெளியிடங்களுக்கு போயிருக்கீங்க.. அப்படி நீங்க போகும் போது கற்றுக்கொண்ட சில விஷயங்கள்?
எந்த ஒரு புது இடத்துக்குப் போனாலும் புதுசா கத்துக்க எதாவது இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதே ஒரு பாடம் தான்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-

1. உங்களுக்கு இருக்கற நிக்நேம்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
மோசி, மோகா, மோகு, மாமா, கைப்பு, கைப்ஸ்...அம்புட்டுத் தான்னு நெனக்கிறேன்.
2. உங்க பள்ளிபடிப்புல உங்களுக்கு மறக்க முடியாத டீச்சர் ?
படிப்போட சேர்த்து, நல்லது கெட்டதுகளையும் சொல்லிக் குடுத்த எங்கத் தமிழ் மிஸ்.
3.உங்கக்கிட்ட உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்
சோம்பேறித்தனம், அவநம்பிக்கை, சுயநலம்
4.ப்ளாக்ல சந்திக்க விரும்பற 3 பேர்..
அப்படின்னு குறிப்பா யாருமில்ல. சென்னையில் ஒரு வாரம் தொடர்ச்சியாத் தங்க வாய்ப்பு கெடச்சா, சென்னையில் இருக்கற பதிவர்கள் ஒரு சிலரை-யாவது சந்திக்க ஆசை. அடுத்த வாட்டி சென்னை போகும் போது தான் முயற்சி செய்யனும்.

5.நீங்க ஓவரா அடிவாங்கி அழுதது எப்ப?
ஒன்னா ரெண்டா...நெனைவு வச்சி சொல்றதுக்கு? பெரும்பாலும் சாப்புட மாட்டேன்னு அடம்புடிச்சி அடி வாங்குனது தான் அதிகமா இருக்கும். அடுத்ததா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அழுது அடிவாங்கினதா இருக்கும்.

6. ஆமா, நீங்க எதுக்கு ப்ளாக் எழுத வந்தீங்க?
தமிழ்ல எழுதறதும், படிக்கறதும் மறக்காம இருக்கறனும்ங்கிறதுக்காக.
7. இதுவரைக்கும் நல்லா இருக்குன்னு நினைக்கற உங்க 3 பதிவுகள்?
அப்படின்னெல்லாம் பாக்க ஆரம்பிச்சா மொத்தமாவே மூனு தான் தேரும். இருந்தாலும், படிக்கிறவங்க ரொம்ப ரசிச்சதுன்னு நான் நெனைக்கிற மூனு பதிவுகள்.
வச்சான்யா ஆப்பு,
தடிப்பசங்க #3 ,வயசாயிடுச்சாங்க
8.ப்ளாக்ல உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்..
என்னோட ப்ளாக்ல தானே?...மூனென்ன மூவாயிரம் இருக்கு! வளவளன்னு எழுதுறது, சமீபகாலமா பின்னூட்டம் போடுறவங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லாம இருக்கறது, ஜாலியானப் பதிவா எல்லாரும் எதிர்பாத்துட்டு இருக்கும் போது பெரிய இவனாட்டம் செமத்தியா பிளேடு போடறது.
9.உங்களின் தம்பியிடம் பிடித்த விஷயம் என்ன?
பாசக்காரப் பய. ஆனா நேர்ல பாத்துக்கும் போது எலியும் பூனையும் தான்.
10.கைப்புள்ள /மோகன், ஒற்றுமை& வேற்றுமை.
ஒற்றுமை - நிறம், அப்பப்போ உதார் விடறது, நமக்குன்னே அங்கங்கே தயாரா இருக்குற ஆப்பு.
வேற்றுமை - ஒரு இளைஞனாயிருந்தும், இன்னும் ஒரு இளைஞி கையைக் கூடப் புடிச்சு இழுத்ததில்லை. அதுக்கான தில்லுமில்லை J

அனிதா :- நன்றி தல, சூப்பரா பதில் சொன்னீங்க.. இன்னைக்கு பீட்டர் தாத்ஸ் க்கு பதிலா நீங்க ஒரு தத்துவம் சொல்லி இந்த நேர்காணலை முடிச்சி வைங்க.
கைப்புள்ள :- ஓகே. சாக்ரடீசோட ஒரு கிரேக்கத் தத்துவத்தைச் சொல்லி முடிச்சுக்கிறேன்.

In Greek :-Έν οίδα ότι ουδέν οίδα - Hen oida hoti ouden oida
In English “I know one thing, that I know nothing”

வாய்ப்பளித்தமைக்கு நன்றி அனிதா, கவிதா. அடுத்த வாரம் வரப் போறவங்களுக்காவது கேப்பங்கஞ்சியை, இட்லி மாவுல செஞ்சு குடுக்காம இருக்க முயற்சி பண்ணுங்க. வர்ட்டா?


பிச்சைஎடுக்கும் சோம்பேறிகளும்-செருப்பு தைக்கும் மூதாட்டியும்

ஆபிஸ்சில் நடக்கும் போது, என்னுடைய செருப்பு அறுந்து விட, செக்யூரிட்டியுடம் பக்கத்தில் எங்கே தைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு , அவர் சொல்லிய இடத்தை கண்டுபிடித்து சென்று பார்த்தால், ஒரு தள்ளாத பாட்டி இருந்தார்கள், சரி செருப்பு தைப்பவர் இங்கே எங்காவது பக்கத்தில் தான் இருப்பார் என்று என் கண்கள் தேட, பாட்டியோ என்னை “வாம்மா, வாம்மா” என்றார்கள். கொஞ்சம் தூரத்தில் ஒரு சின்ன பையன் எல்லா கலரும் கலந்த கலவை சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தான். இந்த பையன் தான் தைப்பவனோ..அவன் சாப்பிடுவதால் பாட்டி வர கஸ்டமர்களை விடாமல் கூப்பிடுகிறார்களோ என்று தோன்றியது.

எனக்கு அவரிடம் செருப்பை தைக்க கொடுக்கலாமா என்று தயங்கிய நேரத்தில், பாட்டி கையை நீட்டி செருப்பை கேட்டார்கள்..தயங்கியபடியே செருப்பை கொடுத்தேன். பாட்டிக்கு எப்படியும் 80 வயதுக்கு மேல் இருக்கும், கை, கால் தோல் சுருங்கி, வெளுத்து போன பரட்டை தலையுடன், இடுக்கிய கண்களோடு இருக்கும் அவர்கள் எப்படி இந்த வேலையை செய்ய முடியும் என்று நினைத்தேன்.... செருப்பை கழட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு எப்படி செய்ய போகிறார்களோ என்று பார்த்து கொண்டு இருந்தேன்.

பார்வை மங்கிபோன பாட்டி, பார்வையை முடியாமல் கூர்மையாக்கி, நடுங்கிய கையோடு நூலை எடுத்து, மெழுகு தடவி, குத்தூசி எடுத்து குத்துகிறார்கள் குத்துகிறார்கள்..ம்ம்ஹீம் எங்கே.... முடியவில்லை.. விடவில்லை அவர்களும்.. ஒருவழியாக குத்தி பின்புறம் நுலை மடக்கி உள்ளே இழுக்கும் சமயம் நூல் வராமல் சிக்கிவிட.. திரும்பவும் ஊசியை வெளியே எடுத்து விட்டு.. நூல் சிக்கலை எடுத்துவிட்டு குத்தூசியை முடியாமல் செருப்பினுள் நுழைத்தார்கள்..

எனக்கோ அவர்கள் ஒவ்வொரு முறை ஊசியை குத்தும் போதும் எங்கே கையில் குத்திக்கொள்ள போகிறார்ளோ என்று திக் திக் என்றது.... ஒருவழியாக முடித்துவிட்டு, குரல் எழும்பாமல் “அஞ்சு ரூபா குடு” என்றார்கள். ஆனால் எனக்கு இன்னும் சேர்த்து கொடுக்கலாம் என்று தோன்றிய மறுகணம், பணம் நிறைய கொடுக்கிறார்கள் என்று அந்த பையன் கவனித்து விட்டால் பாட்டியையே செருப்பு தைக்க நிரந்தரமாக உட்கார வைத்து விடுவானோ என்று தோன்ற,..கேட்ட பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினேன்..

ஆனால் மனதுக்குள் பாரம்...தினமும் டி.டிகே சாலையை கடக்கும் போது, அங்கிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே.. 35-45 வயதுக்குட்பட்ட திடகாத்திர தேகம் கொண்ட ஆண்கள் (3 பேர் இதுவரை தினமும் நான் பார்ப்பது), அந்த இடத்தை தங்களுது நிரந்தர வீடாக்கி, முழுநேர வேலையாக பிச்சை எடுத்து கொண்டிருப்பது நினைவுக்கு வர..

தள்ளாத வயதில் பாட்டியும் உழைப்பும் ..சோம்பேறிகளின் பிச்சை எரிச்சாலாகவும்............வாழ தகுதியில்லாத மனிதர்கள் என்று அவர்களை வெறுக்க தோன்றியது.......

அணில் குட்டி அனிதா :- ஏன் கவிதா.. எப்பவும் பெரிய தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கறீங்க. . மனசு பாரமா இருக்குன்னு சொன்னீங்களே பாட்டிய உங்க வூட்டுல கொண்டுப்போய் வச்சி சோறு போட வேண்டியதுதானே. .கூட கொஞ்சம் காசு கொடுக்கவே உங்களுக்கு மனசு வரல.. ஆனா.. வாய் நிறைய நல்லா பேசிங்க....... சரி சரி.. முறைக்காதீங்க.. ம்ம்... புரியுது.. உனக்கு இங்க இடம் கொடுத்து வளர்க்கறதே பெரிய விஷயம்..ன்னு சொல்றீங்க.. ம்ம்.... எதுக்கும் நான் கொஞ்சம் இனிமே அடக்கி..வாசிக்கறேன்..... அம்மணி கோவத்துல என்னைய தொறத்திட போறாங்க...

பீட்டர் தாத்ஸ் :- When we have done our best, we should await the result in peace.

காதலும் காமமும்.......

காதல் காமம் இரண்டுக்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் இருக்கிறது. காதல் தொடக்கம்..காமம் முடிவு என்று சொல்லலாமா..? இல்லை காமம் தான் முதல் அப்புறமே காதல் என்று சொல்லலாமா?.. நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார் - ஒரு பெண்ணை பார்த்ததும், அவளை தொட்டுப்பார்க்க வேண்டும், அவளை நமக்கென்று சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றும், அந்த தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் வருவதால் காமம் தான் முதல் அது பிறகு காதலாய் மாறுகிறது. பார்த்தவுடன் காதல் என்பது எல்லாம் பேத்தல் என்ற அவரின் மிக யதார்த்தமாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பெண்ணை/ஆனண பார்த்தவுடன், இவள்/இவன் நமக்கு (தனக்கு மட்டும்) சொந்தம் ஆகவேண்டும் என்று நினைப்பதில் காதல் மட்டும் இருக்கிறாதா?.. நிச்சயம் இல்லை. காமம் கலக்காத காதல் இருக்கிறது என்பது எல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம். அப்படி நிச்சயமாக ஒன்றும் இல்லை. ஆனால் காதல் கலக்காத காமம் நிறையவே நிரம்பி கிடக்கிறது. பார்க்கும் பார்வையிலிருந்து, நடந்துக்கொள்வது, பேசுவது, தொடுவது எல்லாவற்றிலுமே மிதி மிஞ்சி பார்க்கலாம். கவியரசு வைரமுத்து அவர்களின் மிக அழகாக அற்புதமான வரிகள்-

ஆடைக்குள் நிர்வானத்தை தேடுவது காமம்
நிர்வானத்துக்குள் ஆடையை தேடுவது காதல்

காதலுடன் எழுதும், பேசும் வரிகளில் ஆபாசமும், வக்கிரமும் சேர்ந்து இருக்காது. அதற்கு நேர் எதிர் காமத்துடன் பேசும், எழுதும் வார்த்தைகளில் நிறைய ஆபாசமும், வக்கிரமும் இருக்கும். நம் தமிழ் சினிமா பாடல்களில் நிறைய உதாரணங்கள் இரண்டிற்குமே உண்டு. ஒரு ஆணோ பெண்ணோ பேசும் போதே அதில் காதல் மிஞ்சி இருக்கிறதா இல்லை காமம் மிஞ்சி இருக்கிறதா என கண்டுக்கொள்ளலாம். மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபளிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபளிப்பது காமம்.

நண்பர் ஒருவர் ஒரு பெண்ணை விரும்பினார், திருமணமும் செய்துக்கொள்லும் அளவிற்கு விரும்பினார், அவரின் விருப்பம் என்ற வார்த்தைக்கு பொருள் காதல் இல்லை matching என்கிறார். இன்றுவரை புரியவில்லை, ஒரு பெண்ணை மனதிற்கு பிடித்து, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஒருவர் அது காதல் இல்லை என்று சொல்வது விளங்காத ஒன்று. அதாவது காதல் என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவது, படிப்பு, பணம், அழகு, எதிர்காலம் எதையுமே பார்க்காமல் வருவது. ஒருவரை பார்த்தவுடன் வருவது. ஆனால் நண்பருக்கு வந்த விருப்பம், எதிர்பார்ப்புக்கு உட்பட்டது, இவள் நம் வாழ்க்கைக்கு சரியாக இருப்பாள், இவளின் குணம் நம் வாழ்க்கை துணையாக இருக்க பொருந்தும் என்ற எதிர்பார்ப்புடன் வந்ததால்..அதற்கு பெயர் matching என்றார்.

காதல் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தொடங்கினாலும், பிறகு நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது என்பது தான் உண்மை. காமத்திற்கு அப்படி ஒன்றும் இல்லை ஒன்றே குறிக்கோள் “உடம்பு”. காதலை போன்ற மனம் சம்பந்தபடாத மிக எளிதான விஷயம். காதல் மிக மெல்லிய, அற்புதமான உணர்வு என்றாலும், அதுனுடைய வலியும் சுமையும் அதிகம். காமத்திற்கு அப்படி மனதளவில் வலி ஒன்றும் இல்லை. காமம் முயற்சிப்போம் கிடைத்தால் சரி இல்லையேல் ஒரு பிரச்சனை இல்லை. காதல் கிடைக்கவில்லை என்றால், அதன் விளைவு அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனையும், விரக்தியும், காதல் எளிதல்லவே.... உடம்புக்கும்,மனதிற்கும் உள்ள வித்தியாசமே காமமும் காதலும்..

கவியரசு ஒரு படத்தில் சொன்னது - உன் காதல் மட்டுமே வேண்டும் என்பதால் உன்னையே சுற்றி வருகிறேன்.. யாரை வேண்டுமானல் காதலிக்கலாம் என்றால் ஒரு நாயை கூட காதலிக்கலாம். நீ மட்டுமே வேண்டும் என்பதால் உன் பின்னாலேயே இருக்கிறேன்.. இல்லையேல் ஒரு விபச்சாரியிடம் போய் இருக்கலாம்.. (வார்த்தைகள் மாறியிருக்கலாம் - எப்போதோ கேட்டது).

நிறைய குழப்பம் காமத்திற்கும் காதலுக்கும், நிறைய மக்கள் இரண்டையும் சரியாக புரிந்துக்கொள்ளாமல், சிலர் காதலை காமமாக நினைத்துக்கொள்வதும், மேலே சொல்லியது போன்று காதல் என்றாலும் அது காமத்தில் முடிவதால் காமமே கண்களுக்கு பெரிதாக தெரிவதால், காதலை காமமாக நினைத்து எழுதும் கவிதைகளையும், கதைகளையும் படிக்க நேர்ந்ததால்.. இதை எழுத நேர்ந்தது.....

அணில் குட்டி அனிதா:- ஐயோ....ஐயோ......ஐயோஓஓஓஓ......................... கவிதா..ஆஆ......... நீங்க லூசா.. டைட்டா..?!! அந்த குழப்பத்தை முதல்ல தீர்த்து வைங்க..!! தாங்க முடியலைங்க.. உங்க லக்ச்சர். ஏங்க இப்படி..?!! வர வர உங்க இம்ச தாங்க முடியலைங்க..சரி இப்ப என்னத்தான் சொல்லவரீங்க..?!! மக்களா! அம்மணிக்கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க.. .. எந்த நேரத்துல என்ன செய்வாங்களோ..?!! ஏன்னா.. அவங்க..இன்னும்.. லூசா ..டைட்டா?!! confirm பண்ணல...............

பீட்டர் தாத்ஸ் :- The joy that you give to others is the joy that comes back to you.

சென்னை மாநகரிலே.....நல்ல பழக்கங்கள் சில..

சென்னைக்கு நாங்கள் வந்து சரியாக 15 வருடங்கள் ஆகின்றன.. சென்னை பழக்கவழக்கங்களை, நாகரீகத்தை நன்றாக பழகிக்கொண்ட நல்ல குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அது என்ன நல்ல பழக்கவழக்கங்கள் என கேட்கிறீர்களா?.. இதோ...:-

1. பூட்டிய கதவை உயிரே போனாலும் திறந்து வைப்பது இல்லை

2. வீட்டில் உயிருடன் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்று அடுத்த வீட்டுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுதல்.

3. பக்கத்து வீட்டுக்காரர்களை வழியில் பார்த்தால் ஒரே ஒரு “புன்னகை” மட்டுமே அதற்கு மேல் பேசுவது நாகரீகம் இல்லை என்பதைவிட..அவர்கள் நம்மிடம் உதவி கேட்டுவிட போகிறார்களோ என்று ஒருவித உஷாருடன் எப்போதும் இருக்கவேண்டும்.

4. அந்நியர் யாரையாவது பார்த்தால்..-அவர் யார்?, எந்த வீட்டுக்கு சொந்தக்காரர், விற்பனையாளரா? கொரியர்க்காரா? இல்லை திருட வந்தவரா? எதற்கு வீண் பிரச்சனை? என்று கண்டும் காணாமல் சென்றுவிடுவது

5. தெருவில் குப்பை எடுத்து செல்ல ஒருவர் வந்தாலும், அதை அவரிடம் சரியாக கொடுக்காமல், தெருவில் தூக்கிப்போட்டு அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்க வைக்க வேண்டும்..

6. பக்கத்துவீட்டில் போட்ட பால் பாக்கெட் உடைந்து பால் வெளியில் கொட்டி கிடந்தாலும், நமக்கென்ன என்று நம் வீட்டு பால் பாக்கெட்டை மட்டும் எடுத்து வந்து விடுவது.

7. பக்கத்து வீட்டில் இடியே விழுகின்ற சத்தம் கேட்டாலும் என்னவென்று கேட்க்காமல் காதை மூடிக்கொண்டு பேசாமல் நம் வீட்டு டிவியை பார்த்து கொண்டு இருப்பது. ஆனால் 2 மாதம் கழித்து கண்டிப்பாக, அவர்களை வழியில் பார்க்கும் போதும், “அன்றைக்கு உங்களது வீட்டில் இடி விழுகின்ற சத்தம் கேட்டதே..அது எனக்கும் கேட்டது, நான் தான் எதற்கு உங்கள் வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்று சொல்லவேண்டும்.

8. அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டினுள் சேர்த்து வைத்து விளையாடாமல் இருக்க நம் குழந்தைக்கு உபதேசம் செய்து, வெளியில் போய் விளையாட சொல்லவேண்டும், அதே போல் வேற்று குழந்தைகள் எதிரில் நம் குழந்தை fridge ல் நம் குழந்தைக்காக வைத்துள்ள சாக்லெட், பிஸ்கட் எடுத்து சாப்பிடாமல் இருக்க கற்றுக்கொடுக்கவேண்டும். (காசு கொடுத்து நம் குழந்தைக்கு வாங்கி வைத்தது அல்லவா)

9. அப்படியே நம் குழந்தையோடு மற்ற வீட்டு குழந்தைகள் விளையாடினாலும், நம் வீட்டு சோபா, கட்டில், விளையாட்டு பொருட்களை தொடாமல் பார்த்துக்கொள்ள நம் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டும். (பொருட்கள் வீணாகி விடுமல்லவா)

10. எந்தவித பிரச்சனை வந்தாலும், நமக்கு மட்டும் பிரச்சனை வராதவாறு எப்போதும் பார்த்துகொள்ளவேண்டும். அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன?

அணில் குட்டி அனிதா:- ம்ம்.. ஆமா..கவிதா இதுல கொழந்த கொழந்த ன்னு சொல்றீங்களே அது யாரை?? நீங்க ஒன்னு பெத்து போட்டு வச்சி இருக்கீங்களே அதையா?.. அது கொழந்தையே இல்லையே?!! ம்ம்..சரி சரி.. கண்ணை உருட்டாதீங்க….காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. என்ன செய்றது.. என் தல எழுத்து இதை எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு.....


பீட்டர் தாத்ஸ் :- Faith makes all things possible. Hope makes all things bright.

இனிமையான சில நேரங்கள்...........

இரவின் இருட்டில்
நிலவின் ஒளியில்
பனியின் சாரலில்
நெஞ்சோடு இருக்கக்
கட்டிய என்
கைகளின் நடுவில்
நீயும்
உன்
நினைவுகளில்
உலவிய நேரங்களும்...

பேருந்தில்-
பயணிக்கும்
சில மணி நேரங்களில்
இறுக்க மூடிய
கண்களுக்குள்
உனை அடக்கி
உலகம் மறந்து
மெளனமாய்
பேசிய நேரங்கள்.....

கோயிலில்
தரிசன வரிசையில்
பல மணிநேரம்
நிற்கும் நேரங்களின்
கடவுளின் பெயருக்கு
பதிலாய்
உன் பெயரை
உச்சரித்த நேரங்கள்..........

Photobucket - Video and Image Hosting

கடற்கரையில்-
அலையின்
ஆவேசமும்
மனிதர்களின்
இரைச்சல்களுக்கும்
நடுவே
எனக்கு மட்டும்
எல்லாமே
நிசப்தமாய்
என்
நினைவுகளை நீ மட்டுமே
நிரப்பிய நேரங்களில்..

காதலனும் காதலியும்
காதல் பாட்டு பாட
திரை அரங்கினுள்
கண்கள் மட்டும்
திரையை
பார்க்க
மனம் என்னவோ
உன் நினைவுகளில்..
களித்திருக்கும்
நேரங்களில்......

என்னின்
எத்தனை நேரங்களை
இனிமை ஆக்குகிறாய்
நீ.....
என்னுடன் எப்போதும்
நீ
இருந்தால்
எத்தனையும் அத்தனை
ஆகுமே
என்னவனே.....!!!

அணில் குட்டி அனிதா: அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...!! கவித எழுதிட்டாங்கலாம் கவிதா.. என்னவோ போங்க நாட்டுல இந்த கொடுமைய எல்லாம் நாங்க பார்க்க வேண்டியதா இருக்கு... !!! பீட்டர் தாஸ் நீங்க உங்க பீட்டர் கவிதைய எடுத்து விடுங்க..

பீட்ட்ர் தாஸ் : In the moment that you carry this conviction, in that moment your dream will become a reality.

வலைபதிவர் மீட்டிங்- இதுவரை வெளிவராத தகவல்

வாங்க.....வாங்க... 19ந்தேதி பதிவர் மீட்டிங் நடந்தாலும் நடந்தது.. தாங்கலடா சாமி.. ஆளுக்கு ஆளு பதிவு ப்போட்டு தாக்கறாங்க.. கவிதா மீட்டிங்ல கலந்துக்கலன்னு எல்லார்க்கும் தெரியும்.. ஆனா.. நான் கலந்துக்கிட்டேன்..அது யாருக்குமே தெரியாது.. யாரோட கேமராவிலும் சிக்காம நாங்க அங்கன இல்ல இருந்தோம்.... இட்லி வடை கிட்ட இருந்து க்கூட எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல..

சரி ..மேட்டருக்கு வரேன்..... இந்த கூட்டத்துல.. 2 பேருங்க.. ஒருத்தர் எல்லாருக்கும் அருள வழங்குவாரு....... இன்னொருத்தர்.. இந்த டீ.. காப்பியில எல்லாம் கலக்குவாங்களே.. அந்த சீனி..சக்கர...ங்க.. இந்த 2 பேரும் மீட்டிங்குக்கு போறோம்.. கான்டிரிபியூட் வேற பண்றோம்னு ப்ளான் போட்டு.. மதியம் சாப்பிடாம வெறும் வயத்தோட வந்திருந்தாங்க..... சின்ன புள்ள தனமா ஏன்னு மட்டும் யாரும் கேட்கப்படாது.....ஆமா சொல்லிட்டேன்..!! அவங்களுக்கு என்னான்னா.. ஒரு போண்டா..ஒரு வடை..இப்படி ஏதாவது கெடைக்கும் ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தாங்க.. ஆனா கெடச்சது என்னவோ........ டீ..யும்.. மேரி ‘யும்..சாரி.......சாரி.......மாரி பிஸ்கட்டும் தான்..

எல்லாரும் டீ 2 ரவுண்டு குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கற சமயமா ப்பார்த்து, யாருக்கும் தெரியாம இவங்க 2 பேரும் உள்ள போய் 15-20 பேர் குடிக்க இருந்த மிச்சமான டீ ய (முன்ன பின்ன டீ யே பார்க்காத ரேஞ்சுக்கு) மொடக்கு மொடக்கு ன்னு குடுச்சி காலி பண்ணிட்டாங்க.. உஸ்... அப்பாடா............ மதியம் சாப்பாடு கட், அண்ட் நைட் டின்னரும் சாப்பிட முடியாத ரேஞ்சுக்கும் 2 பேரும் ஒரு கட்டு கட்டிட்டு போய்ட்டாங்கப்பா.. ஹி ஹி,,

ஹி ஹி,,..இது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்கறீங்களா?.. ஹி...ஹி.. இப்படியெல்லாம் நீங்க கேட்டா எனக்கு வெக்கமா இருக்கு இல்ல.... இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் அப்படி தூக்கி ஓரமா கெடாசிட்டு..சொல்றேன்.. “நானும் அவங்களுக்கு கம்பனி கொடுத்தேன் இல்ல....”

Well, I can show those nice snaps to you all.. but.. you know they will catch me and odachify my hand again.. so.. better..escapeeeeeeee............


குறிப்பு:- அண்ணன் பாலா..அவர்களே...... நற நற வென பல்லை கடிக்காதீங்க.. நீங்க மைலாப்பூர் ல கடிக்கறது மாம்பலத்துல கேட்குது.. அக்கா பொன்'ஸ் அவர்களே.. கோவப்பட்டு பொங்காதீங்க.. பொங்கி யானைய என் மேல உருட்டிடாதீங்க.... நான் ரொம்ப பாவமுங்க........ உங்களுக்கு தெரியாம நடந்த ஒரு விஷயங்கோ இது.. .. தெரிஞ்சிக்கிட்டும்னு சொல்லிடேங்க..சின்ன ஜீவன் என்னை எதுவும் செஞ்சிடாதீங்க.. நான்னா உங்க எல்லாருக்கும் செல்லம் தானே.. :) :) ஹிஹி.... ரொம்ப பிடிக்கும் தானே.. அதுவும் பொன்ஸ் அக்கா' க்கு நான்னா.. உசுரு எனக்கு அப்பவே தெரியும்..........!! :)

(அணித்து போதும் பிள்டப்பு அடங்கு)....

டீ எத்தனை என்ற தகவல் சொன்ன டீ சப்பளையர் வாழ்க....!! வாழ்க..!! வாழ்க !!

கணிதமேதாவியுன் நிலைமை உங்களுக்கும் வரவேண்டுமா?

கவிதாவோட பதிவுகளை தொடர்ந்து படிக்கறவங்களோட கதி இப்படி தான் ஆகப்போகுது.. ஹி..ஹி... இத எத்தனை பேர் மனசுல நெனச்சீங்களோ.. சொல்லமுடியாம கஷ்ட பட்டீங்களோ..?! ம்ம்..உங்க எல்லார்க்காகவும் சேர்ந்து இதோ..நான் சொல்லிட்டேன்.. சோ.. எல்லாரும்..ஜோரா என்கூட சேர்ந்து விசில் அடிங்க பார்க்காலாம்..... உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... உய்ய்ய்............ உய்ய்ய்ய்ய்............... !!!!
Photobucket - Video and Image Hosting

அதுவும் வர வர என்னை அதிகமா எல்லாரும் விசாரிக்க ஆரம்பிச்சவுடனே.. அவங்களுக்கு பொறாம தாங்கமுடியல.. என்ன செய்ய?!! வீட்டுல எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க. என் காதுல ஒரே ரத்தமா வழியுது.. முடியல.. சொல்லிட்டேன்..

என்னால அவங்க எழுதற மேட்டர் பெரிசா வெளிவர மாட்டேங்குதாம். நான் எப்பவும் அவங்கள் மட்டந்தட்டி பேசறதால அவங்க இமேஜ் (அப்படின்னு ஒன்னு இருக்கறதே அவங்க சொல்லிதான் எனக்கு தெரியும்) பாதிக்க படுதாம். அதனால நானும் அவங்களும் சேர்ந்து உக்காந்து பேசி ஒரு முடிவு பண்ணி இருக்கோம். என்னன்னா.. பதிவுக்கு நான் வேணுமா வேண்டாமான்னு என் ரசிக பெருமக்கள் முடிவு பண்ணட்டும் என்று, கீழ இருக்கும் 3 நம்பர்ல எது உங்களுக்கு சரின்னு படுதோ அதை அம்மணிக்கு சொல்லுங்க.. அவங்க அதையே செய்வாங்க.. கடைசியில என் கால வாரிடாதீங்க.. எனக்கு ஓட்டு போடறவங்கள தனியா கவனிப்பேன்.
உங்களின் பொண்ணான வாக்கு எதற்கு..

1. கவிதாவும், அணில் குட்டியும்’ மா?
2. அணில் குட்டி மட்டும்’ மா?
3. கவிதா மட்டும்’ மா?

உங்கள் ஆதரவை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உங்களின் அன்பு அனித்து குட்டி..