தேவையான பொருட்கள் : - இருவருக்கு தேவையான அளவு
நெய் - 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு : 10
எண்ணெய் : தேவைக்கேற்ப
உப்பு : தேவைக்கேற்ப
கோஸ் : சின்ன கப் அளவு
கேரட் : 1
குடமிளகாய் - 1/2
வெங்காயம் - 2
பூண்டு - 8-10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை :
பெரிய
பாத்திரத்தில் 3/4 பாகம் தண்ணிர் ஊற்றி, நன்கு கொதிவரும் போது நொறுக்காமல்
நூடுல்ஸ் ஐ கொட்டி, 3-4 நிமிடம் கொதிக்க வைத்து, வெந்தவுடன், வடிகட்டி,
உதிர்த்து உலர்த்தி வைக்கவும்.
காய்கறி எல்லாவற்றையும் மெல்லிய குச்சிகளாக, வத்திகுச்சி நீளத்திற்கு வெட்டி வைத்துக்கொள்ளவும், வெங்காயமும் நீட்டுவாட்டத்தில் வெட்டிக்கொள்ளவும்
சிக்கனை
சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, நெய் காயவைத்து, மஞ்சள் பொடி , 3
சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில்
ஒரு விசிலில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு & இஞ்சியைப்போட்டு நன்கு வாசனை வருமளவு வதக்கவும், லேசாக சிவக்கும் போது, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறி எல்லாவற்றையும் கொட்டி வதக்கவும். ஓரளவு வதங்கும் போது மிளகாய் தூள், மிளகை பொடித்து சேர்த்து நன்கு வதங்கியவுடன் சிக்கன், நூடுலஸ் ஐ கொட்டி , உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கலந்து இறக்கவும். முட்டை சேர்க்க விரும்புவோர் நூடுல்ஸை கொட்டும் முன், முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் போல கிளரி, பின்பு நூடுல்ஸ் ஐ சேர்த்து இறக்கலாம்
நூடுல்ஸ் ஐ சேர்க்கும் போதே உதிர்த்து சேர்க்க வேண்டும். தனித்தனியாக இல்லாமல் இருந்தால், அடுப்பிலிருந்து இறக்கி , கரண்டி காம்பால் நன்றாக உதிர்த்தப்பிறகு திரும்பவும் அடுப்பில் வைத்து கிளரலாம். நூடுல்ஸ் வெகுநேரம் அடுப்பில் இருக்க வேண்டியதில்லை. காய்கறி நன்கு கலந்தவுடன் இறக்கிவிடலாம்.
3 - பார்வையிட்டவர்கள்:
லஞ்ச் பாக்சுக்கு புதுவித உணவு ரெடி
@ ராஜி
லஞ்ச் 'சுக்கா??? இல்லீங்க. இந்த உணவு சூடா செய்தவுடனே சாப்பிட்டாத்தான் நல்லாயிருக்கும். ஆபிஸ் ல அ(ஓ)வன் இருந்தா சூடு செய்துக்கிட்டு சாப்பிடலாம்.
எஞ்சாய்!
Post a Comment