காதலிக்க வயது வரம்பு இருக்கிறதா என்ன.. ? காதல் என்ற வார்த்தை ஒரு ஆணிடம்/பெண்ணிடம் உடல், மனம் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியாக இருந்தாலுமே, வயது வரம்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் வரலாறுகள், நடைமுறை கதைகளும் சொல்கின்றன.
காதல், காதலிக்கும் வயதில் பலமுறை என்னை நெருங்கி வந்து, அதை கடக்கவிட்டு ஒதுங்கி இருக்கிறேன். எனக்குத்தான் என்னவோ காதலிக்க நேரமில்லை.
நேரமில்லை என்பதை இப்படியும் மாற்றி சொல்லாம்.. வயிற்றில் பசி, எதிர்காலத்தைப் பற்றிய பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் நிறைந்த வாழ்க்கை பயணம், வளர்ப்பவர்களின் மேல் இருந்த அதீத காதல் இவற்றை எல்லாம் தாண்டி எனக்கு காதல் வரவேயில்லை.
எந்த ஆணும் என்னை ஈர்க்கவேயில்லை. இந்த பக்கம், என்னிடம் காதல் சொல்லி வந்தவர்களை பார்த்து, அறிவே இல்லாதவர்கள் என்ற எண்ணமே வந்தது. இப்படி வரக்கூடிய வயதல்லவே, இருந்தாலும் வந்தது, அப்போதே வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த பாடம் "காதல்" என்ற வார்த்தைக்கும் எனக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தியது. காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணாக என்னை நானே பார்த்தேன் அல்லது அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அழகு என்பது இதற்கு ஒரு தடையாக இருப்பதாக நினைக்கவில்லை.
எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு, சென்ரல் ஸ்டேஷனில், ரயிலுக்கு தினமும் மாலை ஓடி வந்து அமருவேன், அந்த ரயிலை விட்டிவிட்டால், இன்னமும் 40 நிமிடங்கள் அடுத்த ரயிலுக்கு நிற்கவேண்டும், காலையில் சாப்பிட்டு இருக்கமாட்டேன், அதிகாலையில் நான் கிளம்பும் நேரத்தில் சித்தப்பாவீட்டில் சாப்பாடு ரெடியாகி இருக்காது. காப்பி குடித்த வயிற்றோடு கிளம்பி இருப்பேன். காலேஜ்' ஜில் ஆன்ட்டியின் முயற்சியில், கேண்டீனில், மதியம் இலவச சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலவச சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால், கேண்டீனில் வேலையாட்கள், எங்களை ஒரு பொறுட்டாக மதிக்க மாட்டார்கள், பசியோடு வெகு நேரம் ஓரமாக நிற்க வேண்டும், பணம் கொடுத்து வாங்குபவர்கள் அத்தனை பேரும் வாங்கி சென்றவுடன் தான் கொடுப்பார்கள், அப்படி காத்திருக்கும் பல சமயங்களில், உணவு தீர்ந்து போயி இருக்கும். ஏதோ கிடைப்பதை வாங்கி வந்து, தோழிகள் பிடிங்கியது போக சாப்பிட்டாலும், வயிறு காது கிழியும் படி சத்தம் எழுப்பும். வயதுக்கே ஏற்ற கெளரவம் நிறைய இருக்கும், பசி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, தோழிகளிடமும் காட்டிக்கொள்ள பிடிக்காது. வெளியில் காட்டிக்கொள்ளாத திருட்டு சிரிப்பை அந்த கெளரவம் வரவழைக்கும். கொஞ்ச நாளில் இரண்டு வேளை "பசி" பழகிப்போனது.
இத்தனை பசியோடு மாலை ரயிலில் உட்கார்ந்து இருக்கும் போது, எதிரில் வந்து அமரும் "அரசு" என்ற இளைஞர் மூன்றாம் ஆண்டு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர், என்னை காதலிப்பதாக சொன்னபோது, சிரிப்பு தான் வந்தது. என்னை தினமும் ஒரு 35 நிமிட பயண நேரத்தில் சில வாரங்களாக பார்த்திருக்கிறார், பேசி இருக்கிறார். அவருக்கு காதல் வந்துவிட்டது. என்னைப்பற்றி எதுவும் அவருக்கு தெரியாது, என் படிப்பு, காலேஜ் தவிர. எனக்கு? எனக்கு அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமே இல்லை. என்ன காரணம் அவர் என்னை காதலிக்க? ஒரு மண்ணும் இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை. யாரென்று தெரியாத, ஒரு சீனியர் மாணவர் என்ற பயமின்றி, அவர் ஒரு ஆண் என்ற தயக்கமின்றி, எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது காரணமாக இருக்கலாம். இருந்த பசியிலும் அவன் வேற்கடலை வாங்கி சாப்பிட்டு எனக்கு கொடுத்த போது, வேண்டாவே வேண்டாம் என்று தடுத்துவிட்டது காரணமாக இருக்கலாம். அவர் கண்ணுக்கு நான் அழகாக தெரிந்திருக்கலாம்.
அழகு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தேன். என்னையும் சேர்த்து யாருடைய அழகும் எனக்கு ஆர்வமளிக்கவில்லை, அவரின் காதல், மனிதர்கள் எத்தனை முதர்ச்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை தந்தது. ரயிலை மாற்றினேன், என்னை த்தேடி சுற்றி வர முயற்சி செய்தாரா என்றால், ஒரே முறை, வழிமறைத்து பேசியதாக நினைவு. வழியையும் மாற்றிக்கொண்டேன். யாரையும் நீ மாறி விடு என்று சொல்வதை விடவும், என்னை மாற்றிக்கொள்வதை அப்போதே வழக்கமாக்கி கொண்டிருப்பதை இப்போது நினைவு கொள்கிறேன்.
காதல் என்பதே பிடிக்காமல் போனது, வித்தியாசம் இல்லாமல் பேசும் பழக்கமே சிலருக்கு என் மேல் காதல் வர காரணமாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அது சரியா இல்லையா என்று அந்த சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன், அதுவும் சரி என்ற பதிலில் எனக்கு திருப்தி. பேசுவதை மாற்றிக்கொள்ளவில்லை, காதலுடன் வந்து நிற்பவர்களை மட்டும் மாற்றிக்கொண்டே வந்தேன். பழகுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்கள் என்றாலே தள்ளி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக என்னை ஆட்க்கொள்ள ஆரம்பித்து, செயற்படுத்தியும் வந்தேன், வருகிறேன்.
காதல் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் இருந்தது. காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லுபவர்களை என்னவென்று சொல்வது?! இதை தான் கண் மூடித்தனமான காதல் என்பார்கள், புரிந்துக்கொண்டு காதலிக்க முடியாதளவு முரண்பாடனவளாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.புரிந்தவர்கள் என்னை விட்டு விலகி தான் செல்வார்கள் என்பார்கள் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. அதனால் புரிந்ததாக நினைத்துக்கொண்டு, புரியாமல் காதலிப்பவர்களை எனக்கு பிடிக்காமல் போனது. எனக்கு பிடித்தவர்கள் யாரையும் காதல் என்ற வரைமுறைக்குள் கொண்டுவரவில்லை அல்லது என்னுடைய பிடித்தம் காதலாக இருக்க வாய்பில்லாமல் இருந்தது அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒன்றாக இருந்தது. எல்லாவற்றையும் கடந்து வரும் போது அல்லது சில பல காலம் அதிலேயே தொக்கி நிற்கும் போது, அனுபவம் கிடைக்கிறது. அனுபவம் மட்டுமே நம் அறிவை கொஞ்சமாக வளர்க்க உதவுகிறது. அதையும் பலமுறை தவறவிடுவது எனக்கு பழக்கமாகி இருந்தது.
நண்பர் ஒருவரிடம், என்னை உடல் சார்ந்து பார்க்காமல் இருக்கும், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்புகிறேன், அப்படி ஆண்கள் உண்டா ? அல்லது அப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்றேன். நண்பரின் பதில், "இல்லவே இல்லை :)" உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் ஆண்கள் உண்டு, அவர்களின் எண்ணங்களினால் பெண்களின் மீதான பார்வையை உன்னால் கட்டுப்படுத்தவோ.மாற்றவோ முடியாது , அது இயற்கை" என்றார். காதல் என்பது உடலும் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இல்லை என்று யாரும் விவாதிக்க வேண்டியதே இல்லை. நேர விரயம்.
காதலிப்பவர்களை பார்க்கும் போது எல்லாம், இவர்களின் வயிற்றுக்கு நேரத்திற்கு சோறு கிடைக்கிறது, தேவையான பணம் கிடைக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்ற கேள்வியோ, பாதுகாப்பு பற்றிய பயம்மோ இல்லை. பெற்றோர் இருக்கும் ஒரு வீட்டில், பெற்றோர் இல்லாமல் தனியான தன்னை தானே கவனித்து, மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற நம் செய்கைகளைப்பற்றிய சுய அலசல், கட்டுப்பாடு, அடுத்து எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனை எதுவும் இவர்களுக்கு இருப்பதில்லை, வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் எளிமையானதாக, கேள்விகள், பயம் உணர்வு போன்றவை இல்லாததாக இருக்கிறது,அத்தோடு பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது. அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..
எனக்கு வரவில்லை... காதலிக்க நேரமில்லாமல் என் தலையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன... என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் என்னை காதலித்தவர்கள் எல்லாம் எனக்கு இன்னமும் முட்டாள்களாவே தெரிகிறார்கள். பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள். காதலே வேண்டாம் என்று வந்ததால், அப்படிப்பட்ட துக்கம் எனக்கு இல்லை.
இன்னமும் என்னை நேசிப்பவர்களுக்கும், என்னால் நேசிக்கப்படுவர்களுக்கும் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறேன்...... ம்ம்ம்ம் . :( இதற்கும் மேல் என்ன சொல்ல...
அணில் குட்டி : எச்சுச்சுமீ கவி... எதுக்கு இந்த....ஃப்ளாஷ்ஷூ...பேக்கூ.. ?!!
பீட்டர் தாத்ஸ் : One of the hardest things in life is having words in your heart that you can't utter
.

28 - பார்வையிட்டவர்கள்:
>>தோழிகள் பிடிங்கியது போக சாப்பிட்டாலும், வயிறு காது கிழியும் படி சத்தம் எழுப்பும். வயதுக்கே ஏற்ற கெளரவம் நிறைய இருக்கும், பசி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, தோழிகளிடமும் காட்டிக்கொள்ள பிடிக்காது.
மைண்ட் டச்சிங்க் வோர்ட்ஸ்
>எனக்கு? எனக்கு அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமே இல்லை. என்ன காரணம் அவர் என்னை காதலிக்க? ஒரு மண்ணும் இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை
காதல் வர காரணம் தேவை இலை. அப்படி காரணம் தேவைப்பட்டால் அது காதல் இல்லை
>>யாரையும் நீ மாறி விடு என்று சொல்வதை விடவும், என்னை மாற்றிக்கொள்வதை அப்போதே வழக்கமாக்கி கொண்டிருப்பதை இப்போது நினைவு கொள்கிறேன்.
வார்த்தை ஜாலங்கள்
அழகான யதார்தம்!
சி.பி.செந்தில்குமார் : காரணமில்லாமல் ஒருவர் மேல் காதல் வர வாய்ப்பே இல்லை. அப்படி காரணமே இல்லை என்றால் எல்லோரையுமே காதலித்துக்கொண்டு இருக்கலாம்.
10 நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலரை மட்டும் நமக்கு ரொம்பவும் பிடிக்கும், காரணம் இதற்கு கண்டிப்பாக உண்டு ! அதுப்போல தான் காதலும்..
என்ன.. எதிர்பார்ப்பு, சுயநலம், நம்பிக்கை துரோகம், நான் நீ என்ற ஈகோ போன்றவை காதலில் இருந்தால் அது காதல் இல்லை என்று சொல்லலாம் :)
//வார்த்தை ஜாலங்கள்// :))
@ அபிஅப்பா : ம்ம்ம்..
//மைண்ட் டச்சிங்க் வோர்ட்ஸ்//வயிறு காஞ்சிங் ல வந்ததுங்க... :)))
இப்பயாராச்சும் நிம்மதி இழந்து துரத்தினாங்களா இல்லைல்ல.. அப்படி செய்திருந்தாலும் துரத்தி இருக்கமாட்டாங்க கவிதா... :)
***என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் என்னை காதலித்தவர்கள் எல்லாம் எனக்கு இன்னமும் முட்டாள்களாவே தெரிகிறார்கள்.***
இந்த உலகமே முட்டாள்கள் நிறஞ்சதுதாங்க! அவர்கள் மட்டுமா என்ன?
**பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள். காதலே வேண்டாம் என்று வந்ததால், அப்படிப்பட்ட துக்கம் எனக்கு இல்லை. ***
It is good that you helped them by ignoring them as "fools"! They should be thankful to you! :)
கவிதா | Kavitha said...
//வார்த்தை ஜாலங்கள்// :))
@ அபிஅப்பா : ம்ம்ம்.\\
அடராமா! நான் எப்ப வார்தைஜாலங்கள்னு சொன்னேன்:-))
பீட்டரு சூப்பரு ;-)
***இன்னமும் என்னை நேசிப்பவர்களுக்கும், என்னால் நேசிக்கப்படுவர்களுக்கும் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறேன்...... ம்ம்ம்ம் . :( இதற்கும் மேல் என்ன சொல்ல... ***
நீங்க மட்டும் இல்லைங்க எல்லாருமே அப்படித்தான். அதை நீங்க உணர்ந்து சொல்றீங்க. நெறையப் பேரு அதை உணருவதில்லை, உணர்ந்தாலும் சொல்வதில்லை! அம்புட்டுத்தான்.
-------------
"சுயநலம் ஒரு வியாதி" நான் ஏதோ காதை மாரி எழுதினேன்.
சமீபத்தில் ஒருத்தர் "சுயநலம்தான் முன்னேற வழி!" னு என் பதிவை வாசிக்காமலே தன்னை அறியாமல் எதிர் பதிவு (கவிதை) போடுகிறார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறாங்க.
----------------
அங்காடி தெரு படம் பார்த்துட்டு ஆளாளுக்கு புகழ்ந்தாங்க! ஆனால் இந்த வயசுல என்ன "லவ்" தேவைப்படுது? Lack of RESPONSIBILITY! தான் எனக்குத் தோணுச்சு. சாப்பாட்டுக்கு வழியில்லை!பிச்சைக்காரன் போல வாழ்ந்துக்கிட்டு இருக்க? இதுல என்ன எழவுக்கு "லவ்" உனக்கு? அப்படின்னு எரிச்சல்தான் வந்தது.
ஆனால் வடகரை வேலன்னு ஒரு பதிவர் சொல்றார்..
///வடகரை வேலன் said...
காதல்ங்கிறது மனசு சார்ந்த ஒரு உணர்வுங்க. அதுக்கு லாஜிக் எல்லாம் கிடையாது.
கை கால் இரண்டும் முடமான ஒருவனை தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளி வரும் பிச்சைக் காரியைப் பார்த்திருக்கிறீர்களா. அவள் அவனின் காதலியாம். நான் பழனிக்காரன் இதைப் போன்ற காதல் அங்கே சகஜம்.
அதுவும் இல்லைன்னா வாழ்க்கையே நரகமாயிடும்.
24 May 2010 7:36 PM ///
What can I say? All kinds of people to make the world! :)
நல்ல விவரிப்பு. ஒவ்வொருத்தர் மன நிலை வேறுபடுவதில் தவறு இல்லை. இன்னொருத்தர் மேல் திணிக்காமல் இருந்தால் சரி.
"பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள்."
- இந்த வரிகளை மாற்றி அமைக்கணும்னு நினைக்கிறேன். இல்லாட்டி உங்க கணவரை தாக்கும் இது.
எதார்த்தமான பகிர்வு...
காதல் என்பது உடலும் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இல்லை என்று யாரும் விவாதிக்க வேண்டியதே இல்லை. நேர விரயம்.]]
இதை விவாதிக்க விரும்பவில்லை தான்
ஆனால் எல்லோரும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை - நான் சந்தித்தவை அப்படி
----------
anyhow நீங்கள் உங்கள் “பார்வையை” சொல்லியிருக்கீங்க ...
//பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது. அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..//
உண்மைங்க... அல்லது அவர்களின்மீது பொறுப்புகள் திணிக்கப்படாதவர்களாய் இருக்கணும்.
//கிடைப்பதை வாங்கி வந்து, தோழிகள் பிடிங்கியது போக //
ஏன் அப்படி? தோழிகளுக்குப் புரியாதா என்ன?
@ அபிஅப்பா : ம்ம்ம்ம்ம் வரைக்கும் தான் உங்களுக்கு மிச்சம் சி பி செந்தில் குமார் க்கு :))
@ வருண் : நன்றி. பசி இருப்பவர்கள் காதலிக்கவே கூடாது, எல்லோரும் ஒரு லட்சியத்தோடு வாழ்க்கையை அணுகவேண்டும் என்றும் சொல்ல முடியாது இல்லையா?. சிலர் எல்லாவற்றையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு காதல் ஒரு பளுவாக தெரிய வாய்பில்லை.
அதனால் பொதுவில் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், பிரச்சனைகளையே வாழ்க்கையாக கொண்டோர், தாய் தந்தை அற்றோர் போன்றோர் காதலிக்க தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி ஒதுக்கிவிடமுடியாது இல்லையா. :)
@ ஓலை - நன்றி. என் கணவரை தாக்காது. என்னை மற்றவர்களை காட்டிலும் புரிந்துக்கொண்டிருப்பவர் :).
@ முத்து : இப்போதும் துரத்துகிறார்கள் என்று பதில் சொல்லி உங்களின் பதில் என்னவாக இருக்குமென்று பார்க்க ஆசையாக உள்ளது. :) இதற்கு பதில் சொல்லுங்களேன் !
@ கோப்ஸ் : பார்ரா? :) நாங்க பக்கம் பக்கமா எழுதுவோம்மா இவரு பீட்டரை சூப்பர் ன்னு சொல்லிட்டு போவாராம்மா ....
@ சே குமார் : நன்றி
@ ஜம்ஸ் : :) உடல் சார்ந்தது என்று சொன்னால், அப்படி நடந்தால் மட்டுமே அது பொருட்படும் என்பதல்ல. மனதால், இவள்/இவன் எனக்கு சொந்தமானவள்/ன் என்ற எண்ணம் வரும் போது, உங்கள் எண்ணங்களும் உடல் சார்ந்து அவன்/ளை பார்க்க தூண்டும். அப்படி பார்ப்பதையே இங்கே சொல்லி இருக்கிறேன். இது மனிதனின் எண்ணங்களையும் சேர்த்துத்தான்.
அப்படி ஒரு எண்ணங்கள் கூட இல்லாமல் நான் ஒருத்தியை/வனை காதலிக்கிறேன் என்று சொன்னால் - அது இயல்புக்கு அப்பாற்பட்டது, நடக்க சாத்தியமில்லை, பொய்யாகவே இருக்கும். அல்லது அது காதலாக இல்லாமல் வேறு ஏதேனும் ஒரு உறவு முறையாக இருக்க வாய்ப்பிருக்கிறது ! :)
@ ஹூசைனம்மா : வாங்க எப்படி இருக்கீங்க?! :)
தோழிகளிடம் நான் தினமும் இப்படி பசியுடன் இருக்கிறேன் என்பதை பகிர்ந்துக்கொள்வதில்லை. அவர்களும் ஆசையுடன் எதையாவது சாப்பிட எடுக்கும் போது, இல்லை எனக்கு பசி என்று தடுத்து நான் மட்டும் சாப்பிடமுடியாது இல்லையா?
மேலும், எப்போதுமே கேன்டீனில் எல்லோருக்கும் கொடுக்கும் வரை நின்று சாப்பாடு வாங்கிவர நேரம் ஆகும் என்பதால், அவர்களை எனக்காக காத்திருக்காமல் சாப்பிட சொல்லிவிடுவேன். அதனால் அவர்கள் சாப்பாடும் எனக்கு மிஞ்சாது :) அது ஒரு நடைமுறை சிக்கல் அவ்வளவே.
என் பசியை சொன்னால் அத்தனை பேரும் அவர்கள் சாப்பாட்டை எனக்கு கொடுக்காமல் இருக்க மாட்டார்கள், அதனை ஒரு பழக்கமாக்கி க்கொள்ள நான் விரும்பியதில்லை. என் பசி என்னோடு போகட்டுமே ! :)
செம டச்சிங்.. வேற என்ன சொல்றதுன்னு புரியலை.
"தோழிகளிடம் நான் தினமும் இப்படி பசியுடன் இருக்கிறேன் என்பதை பகிர்ந்துக்கொள்வதில்லை"
---
பிறருக்கான உங்கள் பதில்கள் படிக்கும் போது பழையது நினைவுக்கு வருது. கல்லூரியில் கூடப் படித்த மாணவன் (ரொம்ப sincere ஆகப் படிப்பான்) விவசாயி. சில மாதங்கள் மெஸ் பில் கட்ட சிரமப் படுவான். எனக்கோ மெஸ் பில் போக கையிலிருப்பது ஐந்து ரூபாய். உதவியும் செய்ய vazhiyillai. விடா முயற்சியில் இன்ஜினியரிங் படிச்சான். ஒவ்வொரு தடவை பீஸ் கட்டும் போது சிரமம் தான். போற்ற வேண்டிய பெற்றோர்.
இன்னிக்கு ஒரு small ஏலேக்ட்ரோனிக் கம்பனிக்கு முதலாளி. தன் உடன் பிறந்தவர்கள் குடும்பத்தையும் ஒரு நல்ல வழிக்கு கொண்டு வந்து விட்டுவிட்டேன்னு பெருமையா சமீபத்தில் போனில் சொன்னான். ரொம்ப சந்தோசமாக இருந்தது. கல்லூரி காலத்திற்குப் பிறகு இன்னும் நேரில் சந்திக்கவில்லை அவனை. போன் ஈமெயில் தான்.
@ அமைதிச்சாரல் : ம்ம்ம்ம்....
@ ஓலை : எனக்கும் அந்த பிரச்சனை உண்டு. சித்தாப்பாவிடம் பணம் கேட்டதே இல்லை. ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்று அதில் படித்தேன். ஸ்காலர்ஷிப் ங்கறது, சில ட்ரஸ்ட்கள் காலேஜ்ஜில் நேரடியாக மாணவிகளை தேர்ந்தெடுத்து பணம் கட்டி விடுவார்கள். இது காலேஜ் செய்கிறதா என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. மார்க் நல்லா வாங்கி இருக்கனும், எதுவும் டாட்ஸ் இருக்கக்கூடாது. அதை மட்டும் அந்த ட்ரஸ்ட் மக்கள் நேரடியாக வந்து பார்ப்பார்கள். என்னையும் அழைத்து பேசினார்கள். எனக்கு மந்தவெளியில் இருந்து ஒரு ட்ரஸ்ட் பணம் கட்டினார்கள். :).
@ ஓலை - யாரோ ஒரு புண்ணியவான் பணம் போட்டு படிக்க வைக்கறாங்க, இதில் காதல் ஒரு கேடா என்ன ? :))) இதை சொல்லாமல் விட்டுட்டேன் பதிவில் :(
You are walking tall, madam.
Regards,
Dondu N. Raghavan
Ragavan Sir , :) Thx. you can address me as "Kavitha" plz.
உள்ளதை உள்ளபடி பகிர்ந்த பதிவு
//வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் எளிமையானதாக, கேள்விகள், பயம் உணர்வு போன்றவை இல்லாததாக இருக்கிறது,அத்தோடு பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது. அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..//
மிகச் சரியான பார்வை
அழகான எதார்த்தம்!
@ ஹைதர் அலி : நன்றி
@ பார்கவ் : நன்றி (பேரு நல்லா இருக்குங்க)
Post a Comment