பெண் எந்த விஷயத்தை செய்தாலும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவோடு நிறைய கேலி சித்திரங்கள் நமக்கு ஈமெயிலில் வரும். அதை பார்க்கும் போது பல தடவை கோபம் வரும்..அப்படியா நாம் இருக்கிறோம், ஏன் இப்படி கிண்டல் செய்கிறார்கள்?? கார் பார்க்கிங், டூ வீலர் பார்க்கிங் இடங்களில் பெண்கள் மட்டும் தனிவிதமாக பார்க்கிங் செய்வது போன்ற படங்கள் நிஜமாக கோபத்தை தாண்டி சிரிப்பையும் வர வைக்கும் படங்கள்.
பெண் இப்படித்தான் செய்வாள் என்பதை தாண்டி நாம் சிந்திக்கிறோமா? அதைவிட்டு வெளியில் வர முயற்சி செய்து இருக்கிறோமா.? தனிப்பட்ட முறையில் சுய மதிப்பீடு செய்து பார்த்து நம்மை நாம் நம் வேலைகளில் சரி செய்துக் கொள்கிறோமா? இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள், மிகுந்த போக்குவரத்துக்கு இடையே அடிக்கும் கூத்து இருக்கிறதே.. எத்தனை பொறுமையானவர்களையும் கோபத்துக்கு உள்ளாக்கி திட்ட செய்யும். அத்தனை மோசமாக வண்டி ஓட்டுகிறார்கள். பெண்கள் பக்கத்தில் வண்டி ஓட்டி வந்தாலே, "ஓரங்கட்டு சனியன் போட்டும், இல்லன்னா நம்மளை சில்லறை பொறுக்க வைப்பாளுங்க" என்ற சொல்லும் அளவிற்கு பெண்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சாலைகள் அவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணமா என்று தெரியவில்லை. பொதுவாக எனக்கு நண்பர்களுடன் / தோழிகளுடன் பின்னால் அமர்ந்து வண்டியில் செல்லும் வழக்கமில்லை. என்னுடன் பின்னால் (உயிரின் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டும்) அமர செய்து போவேன். அல்லது தனித்தனியே அவரவர் வண்டியில் செல்வோம். அப்படி செல்லும் போதே அவர்களை ஓட்டுவதை கவனித்து அலுவலகம் வந்த பிறகு இப்படி ஓட்டுங்கள் என்று சொல்லுவேன். சிலர் எடுத்துக் கொள்வார்கள், சிலர் திருப்பி வேலையை பார் என்பார்கள்.
தெரியாத்தனமாக என் வீட்டு பக்கத்தில் இருப்பவர்களுடன் வெளியில் சென்று விட்டேன். சோம்பேரித்தனம் தான் காரணம். போன பிறகுதான் தெரிந்தது, கடவுளே எவ்வளவு மோசமாக வண்டியை யாரை பற்றியும் கவலை படாமல் ஓட்டுகிறார்கள்? கவனித்த வரை
* நடு ரோட்டில் வண்டியை ஓட்டுகிறார்கள்
* யாராவது ஹாரன் கொடுத்தால் கேவலமாக அவர்களை திட்டுகிறார்கள்
* ஹாரன் கொடுப்பவர்களை திட்டினாலும், அவர்களுக்கு வழி விடவில்லை.
* சைட் மிரரா? அப்படின்னா என்று பெருமையாக கேட்கிறார்கள்
* எந்த பக்கத்தில் திருப்பினாலும் சிக்னல் கொடுக்கவில்லை, அல்லது கொடுத்தாலும் அடுத்தவர் தனக்கு இடம் கொடுக்கிறார்களா என்று பார்க்கவில்லை
* இடது வலது பக்கம் என்ற சென்ஸ் இல்லாமல் ஓட்டினார்கள். அதாவது இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் அதற்காக முன்னமே தன்னை தயார் படுத்தாமல் போக்குவரத்துக்கு நடுவில் அலங்க மலங்க எல்லோரையும் பயமுறுத்தி நடுவில் புகுந்து... (ஸ்ஸ் ..இதுக்கு மேல முடியல நான் குதித்து ஓடிவிடலாமா நமக்கும் சேர்த்து அடிக்கிடைக்குமா என்று யோசித்தேன்.)
இத்தனைக்கும் இந்த பெண் தினமும் கிட்டத்தட்ட சென்னை நகரத்து போக்குவரத்து மிகுந்த சாலைகளில் 30 கிமி பயணிக்கிறார். அதில் அவர் குழந்தை வேறு அவருடன் செல்கிறது. :( அவர் செய்வது தவறு என்றே அவருக்கு புரியவில்லை, அடுத்தவர்கள் தான் சரியாக ஓட்டவில்லை என்று திட்டிக்கொண்டே வந்தார். :) நான் பொறுமையாகத்தான் இருந்தேன். பல சமயங்களில் இப்படி பேசவிட்டு பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் என்பது இதற்கு நிச்சயமான காரணம். திரும்பி வீட்டுக்கு வந்த பிறகு தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளட்டும் என்று அந்த தெய்வத்தை பார்த்து சொன்னது..இன்னும் இப்படிப்பட்ட தெய்வங்களுக்கு தேவைப்படுமே என்று பதிவானது.
1. சைட் மிரர் பார்க்காமல் வலது இடதுபுரம் திரும்பத்திட்டம் இடாதீர்கள். சட்டென்று திரும்பினால் பின் வரும் வண்டிகள் சுதாரிக்கமுடியாமல் விபத்து ஏற்படலாம்
2. ஹாரன் அடித்தால் தயவு செய்து வழிவிட்டு விடுங்கள்
3. நடு ரோட்டில் வண்டி ஓட்டாதீர்கள், பெரிய வாகனங்கள் செல்வது கடினம்.
4. சிக்னல் வர ஒரு கிமி முன்னரே இரண்டு கால்களையும் தொங்கவிட்டு கொள்தீர்கள்.
5. எவ்வளவு வேகமாக போகிறோமோ அதை போலவே அவ்வளவு குறைந்த வேகத்திலும் கால்களை கீழே ஊனாமல் பேலன்ஸ் செய்ய பழகுங்கள். இப்படி செய்வதால் இரண்டு கால்களையும் நிற்க போவதற்கு ஒரு கிமி முன்னறே தொங்க வைக்க வேண்டாம்.
6. தேவையில்லாமல் நீங்கள் ஹாரன் கொடுக்காதீர்கள்
7. வேகமாக சென்று சிக்னல் விழுந்தால் சடன் ப்ரேக் போடாதீர்கள், பின்னால் வரும் வாகனங்கள் வந்து மோதும்.
8. முன்னே செல்லும் 2, 3 வாகனங்களில் கவனம் வைத்து ஓட்டுங்கள், விபத்தை கூடிய மட்டும் தடுக்க முடியும்.
9. செல் போன்னை காதில் மாட்டி க்கொண்டு தயவு செய்து சீன் போடாதீர்கள்
10. பகலில் ஹெட் லைட் நிறுத்தப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்
பெண்கள் இப்போது ரோட் ரேஸ் ரோஜாக்களாக இருந்தாலும், மிக சிலரே மற்றவர் வியக்கும் அளவிற்கு வண்டி ஓட்டுகிறார்கள், பலர் பின்னால் நம்மை கேவலமாக திட்டும் அளவிற்கு தான் வண்டியை ஓட்டுகிறார்கள். தயவுசெய்து இப்படித்தான் என்று இல்லாமல் இப்படியும் என்பதை உணர்ந்துவிட்டால், பெண்கள் இப்படித்தான் என்று யாரும் நம்மை முத்திரை குத்த முடியாது.
அணில் குட்டி அனிதா:- ஹா ஹா ஹா...:) 2009 வருடத்தின் பெரிய காமெடியன் கவி'தான் ..அண்ணாசாலையில் அம்மணி அப்போலோ ஆப்லுன்ஸ்' க்கு நடுவில் வண்டிய விட்டு, அப்போல்லோ ஆஸ்பித்திரியல அட்மிட் ஆகி, எப்படிம்மா ஆக்ஸிடன்ட் ஆச்சின்னு டாக்டர் கேட்டதுக்கு... "டாக்டர் முடியல..உங்களால "First aid " கொடுக்க முடியுமா? ப்ளீஸ்...!! நீங்க கேட்கற கேள்விக்கு எல்லாம் பொறுமையா 2 நாள் உங்க ஆஸ்பித்திரியில பீஸ் கட்டி உட்கார்ந்து பதில் சொல்றேன்னு " (இதுக்கு எப்படி ஆச்சின்னே சொல்லியிருக்கலாம்) சொல்லி..( ஹ ஹா ஹாஆ :)))) என்னால சிரிப்ப அடக்க்க்க்க்க்க்க முடியலியே............... ) ஒன்னு இல்லீங்கோ ஒன்னு ..இந்த பக்கம் ஒன்னு அந்த பக்கம் ஒன்னுன்னு இடுப்புல 2 ஊசி... கையில வேற ஒன்னு, அதுக்கு அப்புறமும் நடக்க முடியாம 2 பேரு இந்த பக்கம் ஒருத்தர் அந்த பக்கம் ஒருத்தர்...........ஹா ஹா.ஹா :)))))) எல்லாமே உள்காயம் அம்மணியால வெளியில சொல்ல முடியல போங்க.....
இந்த விஷயம் இங்க யாருக்கும் தெரியாது இல்ல.. அடடா?!! இவிங்க கொடுக்கறாங்க ப்பா அட்வைஸ்'ஸு எப்படி வண்டி ஓட்டனும்னு.. முடியலடாசாமி.. இவிங்க. சமுதாய அக்கறை... ஹய்யோ ஹய்யோஒ!!.. போங்க போங்க பதிவு படிச்சது போதும்.. ...........பொழப்ப பாருங்க எல்லாரும் !!
பீட்டர் தாத்ஸ் :- Have you ever noticed that anybody driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac?”
31 - பார்வையிட்டவர்கள்:
பெர்சாக்கீது படிச்சிட்டு வாரேன்.
இத படிச்ச அப்புறம் முந்தா நேத்து..
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு பொன்னு..
சிக்னல் காட்டாம திரும்பி விபத்துல மாட்டிக்கிட்ட சம்பவம் தான் ஞாபகம் வருது...
வண்டி பாவம்.. அந்த பொண்ணுக்கு அவ்வளவு அடி படலை...
பட்டிருந்தா..? கடவுளே...
இத்தனைக்கும் மோதினது.. ஒரு மாருதி வேன் மேல...
அருமையான பதிவு....
நல்ல ஒரைக்கிற மாதிரி சொன்னீங்க...
\\"ஓரங்கட்டு சனியன் போட்டும், இல்லன்னா நம்மளை சில்லறை பொறுக்க வைப்பாளுங்க"\\
அப்படீன்னா
(கிழே விழுவது பற்றியா)
\\என்னுடன் பின்னால் (உயிரின் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டும்) அமர செய்து போவேன்\\
அவ்வளவு நல்லவுகளா நீங்க ...
விபத்து நடந்த்துக் கூட பரவாயில்ல..
ஒரு பொண்ணா
இருந்துகிட்டு "சிக்னல்" குடுக்கத் தெரியலயேனுதான் வருத்தமா இருக்கு...
அவ்வ்வ்வ்வ்வ் :(
இனிமேவாச்சும் ஒழுங்கா "சிக்னல்" குடுங்க(ரோட்ல)..அம்மணிகளா....!!!
பாவம் நாங்க...
\\தேவையில்லாமல் நீங்கள் ஹாரன் கொடுக்காதீர்கள்\\
இது ரொம்ப முக்கியங்க
\\செல் போன்னை காதில் மாட்டி க்கொண்டு தயவு செய்து சீன் போடாதீர்கள்\\
என்னா ஆச்சு அக்காவுக்கு
அணில் - கேட்கமாட்டியா ...
\\போங்க போங்க பதிவு படிச்சது போதும்.. ...........பொழப்ப பாருங்க எல்லாரும் !! \\
அட அணிலு - என்னா லொள்ளு
அக்கா அடிப்பட்டாங்க ...
இரண்டு ஊசியா
நல்ல வேலை இப்பல்லாம் use&throw தான் ...
அந்த காலம் போல இருந்தா இரண்டும் உடஞ்சி இருக் .....
ஹே ஹே அணிலு விடு - என்னாதிது தட்டச்ச விடாம ...
பொதுவாகவே எதாவது சிந்தனையோடோ, வேறு காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டோ (முக்கியமாக செல்ஃபோன் பேசுவது) வண்டியோட்டுபவர்கள் செய்யும் தவறுகள் இவை.
//பெர்சாக்கீது படிச்சிட்டு வாரேன்.//
படிக்காமலே மறுமொழி போடுற ஒரே ஆளு நீங்க தான் போல ;-)
நீங்க சொல்லும் அளவுக்கு மோசமாக பெண்கள் ட்ரைவிங்கை பார்த்தது இல்லை.
ஒரு வேளை நான் நல்ல ஓட்டுனிகளாக மட்டும் பார்த்திருக்கேனோ?
சொல்லும் வித அருமை.
உம் நானும் வண்டி ஒட்டி பழகின புதுசல இப்படித்தான் ஒட்டிக்கிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு பஸ்ஸூக்கு கீழ வண்டியை பார்க் செஞ்சு நல்லா ஒரு அடி நீளத்துக்கு தழும்பு வாங்கின பிறகு உறைச்சு இப்போ ஒழுங்கா ஒட்ட ஆரம்பிச்சு இருக்கேன் :).
நல்ல பதிவுங்க. ஆனா அனுபவபட்ட நாம சொன்னதை மத்தவங்க அனுபவப்பட்ட பிறகுதான் புரிஞ்சுக்குவேன் ரகளை செய்யறாங்களே :)
நான் பார்த்தவரைக்கும் எல்லா பெண்களும் அப்படியல்ல...மிக நிதானமாக ஓட்டும் நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவசியமான பதிவு சிலருக்கு...
ஜமால், ரங்கன், ராஜா நன்றி..
............................
//நீங்க சொல்லும் அளவுக்கு மோசமாக பெண்கள் ட்ரைவிங்கை பார்த்தது இல்லை.
ஒரு வேளை நான் நல்ல ஓட்டுனிகளாக மட்டும் பார்த்திருக்கேனோ?
சொல்லும் வித அருமை.//
தேனீ! யார்? நன்றி.. முடிந்தால் பின்னால் அமர்ந்து போய் பாருங்கள் வித்தியாசம் தெரியும் :)
நல்ல பதிவுங்க. ஆனா அனுபவபட்ட நாம சொன்னதை மத்தவங்க அனுபவப்பட்ட பிறகுதான் புரிஞ்சுக்குவேன் ரகளை செய்யறாங்களே :)//
வாங்க தாரணி.. நன்றி ஆமாம் அனுபவம் தான் காரணம்!! :)
நான் பார்த்தவரைக்கும் எல்லா பெண்களும் அப்படியல்ல...மிக நிதானமாக ஓட்டும் நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவசியமான பதிவு சிலருக்கு...//
வாங்க ஆதவன், ஆமாம் ரொம்ப நிதானமாக ஓட்டுவார்கள் :)
இதே பதிவை நான் போட்டு இருந்தால் இந்நேரம் கூட வந்து கும்மி அடிச்சு இருப்பாங்க.. சரி தானே!
நல்ல பதிவு!
அதும் இல்லாமல் வண்டியை ஒரே சீரான வேகத்தில் ஒட்ட மாட்டார்கள். அதே போல் வண்டியில் Comfortable லா உட்கார மாட்டாங்க...
//இதே பதிவை நான் போட்டு இருந்தால் இந்நேரம் கூட வந்து கும்மி அடிச்சு இருப்பாங்க.. சரி தானே!//
சிவா இந்த "கூட" யாரு நானா?? தப்பா சொல்லியிருந்தா கும்மி எல்லாம் அடிக்க மாட்டேன். நிஜமா அடிச்சியிருப்பேன்..
சரியா சொல்லியிருந்தா நான் உங்க கட்சி.. :) .சோ தப்பா சொல்றீங்களா சரியா சொல்றீங்களாங்கறது தான் மேட்டரு..!! :)
//அதும் இல்லாமல் வண்டியை ஒரே சீரான வேகத்தில் ஒட்ட மாட்டார்கள். அதே போல் வண்டியில் Comfortable லா உட்கார மாட்டாங்க..//
ம்ம், சீரான வேகம் சொன்னீங்களே அது எனக்கு முதல்ல.... :) இன்னும் திருந்தல நானு... ! :)
ஹ்ம்ம்..நீங்க சொல்லியிருக்கும் பாயிண்ட்ஸ் ரோட்-ல போகும் அனைவருக்கும் பொருந்தும்! பெண்களுக்கு மட்டும்னு இல்லை! சிலசமயம், கிராஸ் ரோட்ஸ் இருக்கும் இல்லை..அதுல நாம அதாவது பெண்கள் வண்டியோட்டிக்கிடு வந்தா சைக்கிள்காரர் கூட மெதுவா கிராஸ் செய்வாரு. ஏன், நான் போனப்புறம்தான் போயேன்னு! சைக்கிள்காரர் கூடன்னு ஏன் சொல்றேந்னா அவருக்கும் தெரியும், நாம மெதுவாத்தான் போவோம் ஸ்கூட்டரோட கம்பேர் செய்யும்ப்போது, ஓட்டிக்கிட்டு வர்றவங்க எவ்ளோ ஸ்பீடுல வந்தா என்ன..பொண்ணுதானே..நிறுத்திட்டு போ..ன்னு மதிக்காத மாதிரி! அதுவே ஆண்கள் பைக்கா இருக்கட்டுமே..பைக் கிராஸ் செய்தப்புறம்தான் போவாங்க! இது சைக்கிள்காரர் மட்டுமில்ல..ஆட்டோ, பைக்..இப்படி எதுவேணா..!!
அதே போல் ஆட்டோக்கள்..அவங்களும் பின்னால வர்றாங்களேன்னு நினைக்க மாட்டாங்க..சடார்னு திருப்புவாங்க..அது ரோட் நடுவில போய்கிட்டிருந்தாலும் சரி..இல்ல திடீர் (!)பிரேக் போடுவாங்க ....இதுல ஆட்டோக்கள் பெரும்பாலும் ஆண் ஓட்டுநர்கள்தான்! வலதுப்பக்கம் இண்டிகேட்டர் போட்டுட்டு இடதுபக்கம் திரும்பற ஆண் காரோட்டிகளையும் பார்த்திருக்கிறேன்! அதனால், உங்க டிப்ஸ் இருபாலருக்கும் பொருந்தும்! என்னன்னா, பெண்கள் அதிகமா இப்போதான் ஒட்டவே வந்திருக்காங்க..ஒரு 20 வருஷமா??
காலங்காலமா வண்டியோட்டியும் ஆண்கள் தவறு செய்யும்போது பெண்கள்..!! ஆண்கள்/பெண்கள் என்பதைவிட இதுல expertise தான் முக்கியம்-னு நினைக்கிறேன்!
அந்த ஆறாவது கட்டளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
சில சமயம் நாம ரோட்ல போறோமா? இல்ல 'ஹார்ன் லயே பேசிக்கிற' ஒரு புது உலகத்துக்கு வந்துட்டமா? ங்கிற சந்தேகம் வந்துடுது.
சில பேர் அடிக்கிற ஹார்ன் இருக்கே... அப்பப்பாஆஆ.. தாங்க முடியாது.
நல்ல பதிவுதான்.
பெரும்பாலும் இந்தக் குறிப்பிட்ட தவறுகளைச் செய்பவர்கள் பெண்கள்தான் என்று நினைக்கிறேன்.
இந்தப் பதிவுக்குக் காரணம் அணில் குட்டி சொன்னது போல் யாராவது அம்மணிகளுக்கிடையேயான டிரைவிங்கில் மாட்டி சில்லரை பொறுக்கியதுதானா?
அதே போல் ஆட்டோக்கள்..அவங்களும் பின்னால வர்றாங்களேன்னு நினைக்க மாட்டாங்க..சடார்னு திருப்புவாங்க..அது ரோட் நடுவில போய்கிட்டிருந்தாலும் சரி..இல்ல திடீர் (!)பிரேக் போடுவாங்க ....இதுல ஆட்டோக்கள் பெரும்பாலும் ஆண் ஓட்டுநர்கள்தான்! //
முல்லை உண்மை, என்னுடைய முதல் விபத்து ஆட்டோவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டது. ஒரு காலில் கடைசி இரண்டு விரல்களின் நரம்பு துண்டித்து போனது. கொலுசு போடும் இடத்தில் 50 பைசா அளவிற்கு ஓட்டை, ஆழம் சுண்டுவிரல் அளவு. :( 5 மணி நேரம் தையல் போட மட்டும் ஆனது. ஆனால் இன்றும் என்னால் புடவை கட்டி செளகரியமாக நடக்க முடியவில்லை அந்த காயம்பட்ட இடத்தில் துணி பட்டால் இப்பவும் வலி இருக்கிறது. இது நடந்தது 2005 ல். :(
கண்டிப்பாக என் மேல் தவறு இல்லை. இது நான் பெண் என்பதால் அந்த ஆட்டோ ஓட்டுநர் வண்டியை திருப்பவில்லை... அவர்கள் ஓட்டும் ஸ்டைலே இப்படித்தான் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு ஆண் இருந்து இருந்தாலும் நிச்சயம் அந்த விபத்து நடந்து இருக்கும் :)
என்ன அந்த ஆட்டோக்காரருக்கு அடி விழுந்து இருக்கும்..நான் அவரை அடிக்கவில்லை விட்டுவிட்டேன். :)
இப்படி ஓட்டுபவர்களை சமாளிக்கும் அளவிற்கு நாம் நன்றாக ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். அது தான் நான் சொல்ல முயல்வது!!
ஹ்ம்ம்..நீங்க சொல்லியிருக்கும் பாயிண்ட்ஸ் ரோட்-ல போகும் அனைவருக்கும் பொருந்தும்! //
முல்லை அனைவருக்கும் பொருந்தலாம். ஆனால் நான் பெண்ணாக இருப்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பிகிறேன். :)
//ஓட்டிக்கிட்டு வர்றவங்க எவ்ளோ ஸ்பீடுல வந்தா என்ன..பொண்ணுதானே..நிறுத்திட்டு போ..ன்னு மதிக்காத மாதிரி! //
ம்ம் கண்டிப்பாக நடக்கிறது.. நான் சொல்ல நினைப்பது நாம் ஓட்டுகிற ஸ்டைலிலேயே அவர்கள் நிற்கும் படி செய்ய வேண்டும்ப்பா :) நாம் நின்று போகும்படியாக இல்லாமல் அவர்களை நிற்க வைக்கும்படியாக நாம் வண்டி ஓட்டவேண்டும். இப்ப எல்லாம் யார் பெண், ஆண் என்றே ஹெல்மெட் போட்டால் தெரிவதில்லையே.. :)
ஆண்கள் கண்டிப்பாக தவறுகள் செய்கிறார்கள் ஆனால் நாமும் அவர்களை போல் இருக்கக்கூடாது, பெண் என்ற காரணத்தினால் நம்மை குறைவாக யாரும் மதிப்பிட கூடாது என்றே எழுதிய டிப்ஸ்'கள் தவிர்த்து. பெண்களை மட்டம் தட்ட வேண்டும், அவர்களை குறைந்த்து சொல்ல வேண்டும் என்று போடப்பட்ட பதிவு இல்லை.
சில தவறுகள் கண்டிப்பாக பெண்கள் செய்கிறார்கள் அதற்கு காரணம் சாலை போக்குவரத்து பயம்,. அது போயிவிட்டால் எல்லோராலும் நன்றாகவே ஓட்டமுடியும். !! :)
இந்தப் பதிவுக்குக் காரணம் அணில் குட்டி சொன்னது போல் யாராவது அம்மணிகளுக்கிடையேயான டிரைவிங்கில் மாட்டி சில்லரை பொறுக்கியதுதானா?
//
வாங்க அறிவன்...ஆமாம் :)
சில பேர் அடிக்கிற ஹார்ன் இருக்கே... அப்பப்பாஆஆ.. தாங்க முடியாது.
//
வாங்க ஊர்சுற்றி... நீங்க ஊர் சுற்றுவதால் எங்களைவிட அதிகம் பார்த்திருப்பீர்கள் போல ! :)
//அந்த காயம்பட்ட இடத்தில் துணி பட்டால் இப்பவும் வலி இருக்கிறது//
:(
//அந்த இடத்தில் ஒரு ஆண் இருந்து இருந்தாலும் நிச்சயம் அந்த விபத்து நடந்து இருக்கும் :) //
:-)) victim யாருன்ன்னு பேசலையே ...தப்பு செய்றவங்க/இன்னும் திருத்திக்கனும்றவங்க யாருன்னு தானே பார்க்கிறோம்..அதான் ஆட்டோக்காரர் ந்னு சொன்னேன்!
நல்ல பதிவு.
@ மங்களூர்.சிவா
நன்றி :)
idhula important matter onna vittuteenga. Ennavo rendu sakkarathukku naduvula verum kaathu (air) thaan irukkira maadhiri kaal rendayum thonga vittukittu povaanga paarunga, andha maadiri koduma edhuvumea illa. Adhuvum traffic-la pannum bodhu olaga koduma.
Arumayaana padhivu.
Nandri.
Chezhian
Post a Comment