தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?
அந்த இடத்தை தேடி பிடித்து சென்றுவிட்டேன். ஒரு அம்மா வெள்ளை ஆடையுடன், ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை கவனித்தவாறு பலர் உட்கார்ந்து இருந்தனர்.
"என்னை பார்த்ததும், கிளாஸ்'ஸாமா? " என்றார்.
"ஆமாம், தியானம் படிக்கனும்" என்றேன்
உள்ளே இருக்கும் யாரையோ அழைத்து எனக்கு அறிமுக வகுப்பு எடுக்க சொன்னார். நான் காத்திருந்தேன். சற்று நேரம் கழித்து ஒரு 22-25 வயதுக்குள் இருக்கும் ஒரு இளைஞர் வந்தார். தலைகலைந்து, மிக சாதாரணமாக இருந்தார். அதாவது தன் தோற்றத்திற்கோ, தன் உடைக்கோ அவர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. அவரை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று மனதில் தோன்றியது. எதற்கு இந்த வயதில் இவருக்கு இந்த வேலை? சாமியாரா இருக்க வேண்டிய வயதா இது? அதுவும் எனக்கு இவர் தியானம் சொல்லி கொடுப்பதா? விளங்குமா? நம் குணத்திற்கு இவரை அமைதியாக தியானம் சொல்லி கொடுக்க விடுமா? சீண்டி பார்க்காமல் இருப்போமா? என் மனத்தில் இது போன்ற கேள்விகள் எழுந்தவாரே இருக்க.. அவர் என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை பற்றி விசாரித்தார். அப்படி ஒரு சாந்தமான முகத்தை நான் பார்த்ததில்லை.
அவர் என் கண்ணை ஆழ்ந்து கவனித்தார். சுத்தம்!! விதி வலியது அந்த பிள்ளையிடம் என் ரூபத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டது என்று உள்ளே மனது சத்தம் போட்டது.
"தியானம் கற்றுக்கொள்ள வந்தேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா?
புன்முறவல் .. ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே சற்றே இடைவெளி, அமைதி.. எனக்கு இது எரிச்சலை தந்தது. எதற்கு இத்தனை நேரம் பதில் சொல்ல எடுத்துக்கொள்கிறார் இவர்?
"ம்ம்.அதற்கு முன் சில பாடங்கள் படிக்கவேண்டும்"
"என்ன பாடம் ..தியானத்தை பற்றியா? ஏன் படிக்க வேண்டும்?, எனக்கு நேரம் குறைவு நேராக தியானம் சொல்லித்தாருங்களேன்"
திரும்பவும் ஒரு புன்முறுவல், ஒரு ஆழ்ந்த அமைதி, இது எல்லாமே என் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு.... , நானும் அப்படி இப்படி பார்க்காமல் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
"தியானம் பழக சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் அது சம்பந்தப்பட்ட பாடம்.. 7 நாட்கள் தான்.. முடித்துவிடலாம்".. ஒரு புன்முறுவல்..
எனக்கு சிரிக்க தோன்றவில்லை.. "சரி இன்றைக்கு ஆரம்பித்துவிடுங்கள்"
"நேராக உட்கார்ந்து என்னையே கவனியுங்கள்.... "
"ம்ம்.."
"உடம்பு, ஆத்மா என்றால் என்ன"
கடவுளே ஆரம்பிச்சிட்டாங்கய்யா!! இதுக்கு தான் முன்னமே யோசிச்சேன்.. இவருக்கு நேரம் சரியில்லை. .சரி.. புலி வாயில தலைய கொடுத்துட்டார் இனி எடுப்பது அவரின் செயல்.
"உடம்பு சரீரம் என் உயிரை தாங்கி இருக்கும் இடம், ஆத்மா.. ஐ திங்க் உயிர்"
"உங்கள் உயிர் இந்த உடலுக்கு சொந்தமானதா"
"எஸ் ஐ கெஸ்"
"இல்லை உடம்பு என்பது நிரந்தரமில்லாதது, உயிர் மட்டுமே நிரந்தரம், இன்று இது கவிதா என்ற பெயருடைய இந்த உடலில் இருக்கிறது, நாளை வேறு உடலை சென்று அடையும், அது போல் நேற்று இது வேறு உடலில் இருந்து உங்கள் உடலுக்கு வந்தது.., உடல் என்பது ஆசை,அழியக்கூடியது, அது நிரந்தரம் இல்லை உயிர் என்பது தான் நிரந்தரம், இது உடல் விட்டு உடல் மாறி மாறி சென்று கொண்டே இருக்கும், அதனால் அழியக்கூடிய எதிலும் நம் கவனத்தை செலுத்தாமல், அழியாத உயிர் என்கிற ஆத்மாவின் மீது மட்டும் நம் கவனம் இருக்க வேண்டும், அதற்காக நான் தியானம் பழகவேண்டும்..."
ஓ..அதான் நீங்க இப்படி தலை விரி கோலமாக உடலுக்கு (தோற்றத்திற்கு)முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறீர்களா? என்னால் அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை. அவரை இன்னமும் கூர்ந்து கவனித்தேன்,நிஜமாக அவர் வாழ்க்கையின் ஆசைகளாக துறந்தவரா என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை வந்தது. கண்களை இப்படி அப்படி எடுக்கவில்லை. என் பார்வையை அவரால் சந்திக்க முடியவில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் நான் விடுவதாக இல்லை, உடலையும், உயிரையும், தோற்றத்தையும் பேசுகிற வயது உனக்கு இல்லை. எதற்கு இந்த வெளி நடிப்பு என்று என் உள் மனது சத்தம் போட்டது. அதனால் என் பார்வையின் ஆழம் அதிகமானது.
"அப்படி என்றால் இது எனக்கு சொந்தமான உயிர் இல்லை.. யாருடையதோ எனக்கு வந்துள்ளது, பின் யாரிடமோ சென்றுவிடும்."
புன்னகையுடன்..."ஆமாம்....ரொம்ப சரி......உயிர் என்பது எங்கிருக்கிறது...?
"ஹார்ட் ஆர் ஹார்ட் பீட் ஆக இருக்கும் என்று சொல்ல நினைத்தேன் என்றாலும் இவர் உயிர் நம்முடையது இல்லை என்கிறாரே, அப்போது எப்படி இதை சொல்லுவது என்று யோசித்து, பின் பட்டென்று இரு புருவங்களுக்கும் நடுவே ஒரு விரலால் சுட்டி காட்டி "புருவ மத்தி" என்றேன்...
என் மன ஓட்டம் அவருக்கு புரிந்ததா என்று தெரியவில்லை.."ம்ம் ரொம்ப சரி புருவ மத்தித்தான்... " என்று சொல்லிவிட்டு ஒரு புன்முறவல், ஒரு இடைவெளி..."உயிர் எப்படி இருக்கும்? "
"................"
"நிங்கள் கவிதா உங்களுக்கு இந்த உருவம் அடையாளம்.. எனக்கு இந்த உருவம் ஒரு அடையாளம் இல்லையா அது போல் உயிர் என்பது எப்படி இருக்கும் அதன் அடையாளம் என்ன?"
கொஞ்சம் யோசித்தேன்.. என்னவாக இருக்கும்.. எனக்கு என் தாத்தா நினைவுக்கு வர, ராமலிங்கசுவாமி நினைவுக்கு வர, "ப்ராப்பளி ஜோதி வடிவமாக.. ஆரன்ஞ் இன் கலர்?"
என்னுடைய பதில்கள் அவருக்கு திருப்தியாக இருப்பதாக உணர்ந்தேன். என் கண்களை அவரிடமிருந்து எங்கும் செல்லாமல் முழு கவனுத்துடன் பார்த்துக்கொண்டேன்.
திரும்பவும் விடுவதாக தெரியவில்லை அடுத்து லேசான புன்னகையுடன்..."கடவுள் என்பது யார்"
"கடவுள் என்பது எனக்கு மேல் ஒரு சக்தி, எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. (நான் நேரில் பார்த்ததில்லை), பல விஷயங்களில் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறேன். அதை கடவுள் என்று சொல்லிக்கொள்ளலாம்..ஐம் சாரி..ஐ டோட் ஹாவ் க்ளூ"
கொஞ்சம் சிரிப்பு அவருக்கு அதிகமானது. "கடவுள் என்று யாரை சொல்லுவீர்கள்"..
"ப்ராப்பளி "சிவன்" அவர் தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார்..ஆனால் அது சரியா என்பது எனக்கு தெரியாது, காரணம் நம் கவனம் சிதறிவிடாமல் இருக்க உருவ வழிப்பாட்டு முறை இருக்கிறது என்பதாக என் புரிதல். எனக்கு சிவன், மற்ற மதத்தினரும் கடவுள் என்று ஒருவரை வழிபடுகிறார்கள். அதனால் என்னால் கடவுள் என்பவர் சிவன் மட்டுமே என்று அழுத்தமாக சொல்லமுடியாது, அப்படி சொல்லுவது சரியும் இல்லை. அதற்கு தான் மனிதனை தாண்டிய உணரக்கூடிய அல்லது உணராத ஒரு சக்தி என்று முன்னமே சொன்னேன்" என்றேன்.
அவர் சில வினாடிகள் பேசவில்லை..சிரிக்கவில்லை.. என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார். பின் லேசாக சிரித்தார். "சரி அந்த சிவன் எங்கிருக்கிறார் தெரியுமா"
திரும்பவும் வேகமாக "ஐ கெஸ் ஹி மஸ்ட் பீ இன் "புருவ மத்தி" .!!
மீண்டும் புன்முறுவல் "ம்ம்...கடவுள் என்பவர் நம் உடலில் உயிராக புருவ மத்தியில் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்றால் நம் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக துரந்து அவரை தியானத்தின் மூலம் பார்க்க நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். எப்போது நாம் ஆசைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோமோ..அப்போது நாம் கடவுளை காணமுடியும்.. "
என் பொறுமை பறந்தது. "தியானம் எப்போது சொல்லி தருவீர்கள்"
ஒரு புன்முறுவல் "இன்னும் 6 நாட்கள் வகுப்புக்கு வாருங்கள்"
"இப்படி த்தான் வகுப்பு இருக்குமா? அதான் நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டேனே நேராக தியானம் போலாமே?"
என்னை நிதானமாக பார்த்தார்....."நாளை வாருங்கள் இதே நேரம் அடுத்த வகுப்பு, இப்போது அந்த ரூமில் சென்று அமைதியாக 10 நிமிடம் அமர்ந்து தியானம் செய்யுங்கள்"
"நீங்கள் எனக்கு தியானம் சொல்லி தரவில்லை எப்படி செய்வது?"
"பரவாயில்லை பேசாமால் வேற்று சிந்தனை இல்லாமல் கண்ணை மூடி 10 நிமிடம் உட்கார்ந்து விட்டு போங்கள்"
"அது என்னால் முடிந்தால் வீட்டிலேயே செய்வேனே.. இங்கு ஏன் வரவேண்டும்? "
"..................இப்படித்தான் ஆரம்பித்தில் இருக்கும் பிறகு எங்களை போல நீங்களும் நன்றாக பழகி விடுவீர்கள்"
"சரி.... " நானும் சென்று அந்த ரூமில் உட்கார்ந்து கண்ணை மூடினேன். .கொசுக்கடி ஆரம்பமானது.. ம்ம் அப்புறம் என் கவனம் முழுதும் கொசுவை அடிக்கவே சரியாக இருந்தது.
* * * * * * * * * * * * *
அடுத்த நாள்....
நான் சென்று அமர்ந்தேன்..
அவர் என்னை பார்த்தவுடன் எழுந்து வேக வேகமாக பின்புறம் சென்றார். ஏன் இப்படி ஓடுகிறார் என்று நினைத்து காத்திருந்தேன்..திரும்பி வந்தார்...
:)
முகம் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி....... புது பொலிவுடன், அழகாக வந்து அமர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். ....:)
நேற்று அவர் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது...
"கடவுள் என்பவர் நம் உடலில் உயிராக புருவ மத்தியில் இருக்கிறார். அவரை உணர வேண்டும் என்றால் நம் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக துரந்து அவரை தியானத்தின் மூலம் பார்க்க நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். எப்போது நாம் ஆசைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோமோ..அப்போது நாம் கடவுளை காணமுடியும்.. "
இவ்வளவு தெளிவாக நேற்று வரை இருந்தவர் அழிய கூடிய உடலுக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாரே....
அடுத்த நாளிலிருந்து அங்கு நான் செல்லவில்லை... :)
அணில்குட்டி அனிதா:- எங்க போனாலும் ஏதாவது செய்துட்டு வந்துட வேண்டியது.. இதை படிச்ச பிறகாச்சும் அம்மணிக்கிட்ட ஜாக்கறதையா இருங்க மக்கா... எத்தனையோ வாட்டி நானும் சொல்லிக்கிட்டே தான் இருக்கேன்.. ஆனா எங்க.....?!! :(
பீட்டர் தாத்ஸ் :-“Empty your mind, be formless, shapeless - like water. Now you put water into a cup, it becomes the cup, you put water into a bottle, it becomes the bottle, you put it in a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend.”
உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்
Posted by : கவிதா | Kavitha
on 13:12
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
28 - பார்வையிட்டவர்கள்:
//முகம் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி....... புது பொலிவுடன், அழகாக வந்து அமர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். ....:)//
உங்களுக்கு பாடம் எடுக்க வந்தவருக்கு நீங்க பாடம் கத்துக்கொடுத்துட்டிங்க போல
//“Empty your mind, be formless, shapeless - like water. Now you put water into a cup, it becomes the cup, you put water into a bottle, it becomes the bottle, you put it in a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend.”//
very nice Quotes,
Good Naration.
Nice. :)
//இவ்வளவு தெளிவாக நேற்று வரை இருந்தவர் அழிய கூடிய உடலுக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாரே....//
இந்தத் தெளிவு அவர் தன்னை தானே ஏமாற்றிக்கொள்வதாக இருக்கலாம். வயசுக்குறிய விகல்பங்கள் இருக்கணும். அவரை மாற்றிக்கிறது அவருக்கு நல்லது, இல்லைன்னா 10 15 வருஷத்துக்கு பிறகு எங்கேனா கம்பி எண்ண வேண்டி வரலாம்
//இந்தத் தெளிவு அவர் தன்னை தானே ஏமாற்றிக்கொள்வதாக இருக்கலாம். வயசுக்குறிய விகல்பங்கள் இருக்கணும். அவரை மாற்றிக்கிறது அவருக்கு நல்லது, இல்லைன்னா 10 15 வருஷத்துக்கு பிறகு எங்கேனா கம்பி எண்ண வேண்டி வரலாம்//
மிக அருமையா சொன்னீங்க.. :) நான் இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை... :) இப்படித்தான் தன்னை தான் உணராமல் நிறைய சாமியார்கள் உருவாகி, தடுமாறி, திசைமாறி போகிறார்கள் என்று புரிகிறது.
ரங்கு நன்றி.. :) நல்லா இருக்கு இல்ல..எனக்கும் ரொம்ப பிடித்தது இந்த சேயிங்.. :)
\\- எங்க போனாலும் ஏதாவது செய்துட்டு வந்துட வேண்டியது.. இதை படிச்ச பிறகாச்சும் அம்மணிக்கிட்ட ஜாக்கறதையா இருங்க மக்கா... எத்தனையோ வாட்டி நானும் சொல்லிக்கிட்டே தான் இருக்கேன்.. ஆனா எங்க.....?!! :(
\\
வாழ்க அணில்.
இனிமே உன் பேச்ச சரியா கேட்குறேன்
ஏதோ வில்லங்கம் இருக்கபோதுன்னு நினைச்சுகிட்டே படிச்சேன். கடைசி பாரா நிருபித்துவிட்டது.
ரொம்ப நாளா இந்த பக்கம் வரலை....நிறைய படிக்க இருக்குது!!
//ஏதோ வில்லங்கம் இருக்கபோதுன்னு நினைச்சுகிட்டே படிச்சேன். கடைசி பாரா நிருபித்துவிட்டது.//
வில்லங்கம் எதிர்பார்க்கிற விஷயம் தானே.. :) இல்லாமல் இருந்தால் நீங்க எல்லாம் ஏமாந்து போயிடுவீங்க இல்லையா? !!
//ரொம்ப நாளா இந்த பக்கம் வரலை....நிறைய படிக்க இருக்குது!!//
வாங்க மாதவன் நானுமே நினைச்சேன் என்ன உங்களை ரொம்ப நாளா ஆளை காணோமேன்னு!! :)
தலை கலைஞ்சிருந்தாலும் விமர்சனம் பண்றீங்க, தலை சீவிட்டு வந்தாலும் விமர்சனம் பண்றீங்க...
தன்னம்பிக்கை தளும்பும் போது இப்படில்லாம் யோசிக்க தோணுமோ..
என்ன கொடுமையிது...
//தலை கலைஞ்சிருந்தாலும் விமர்சனம் பண்றீங்க, தலை சீவிட்டு வந்தாலும் விமர்சனம் பண்றீங்க...
தன்னம்பிக்கை தளும்பும் போது இப்படில்லாம் யோசிக்க தோணுமோ..
என்ன கொடுமையிது...//
வாங்க யட்சன்..:) தன்னம்பிக்கை தவறில்லை :)
ஒருவர் தோற்றத்தில் எப்படி இருந்தாலும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது, சொல்லப்பட்ட விஷயம் என்ன? ஏன் அந்த இரண்டு விஷயங்களும் குறிப்பாக சொல்லப்பட்டது என்று கவனியுங்கள்.
ஒரு ஆசரமம் போன்ற இடத்தில் ஆசிரியராக சேவை செய்யும் ஒரு இளைஞர் தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர் மற்றவர்களுக்கு பாடத்தை சரி வர சொல்லித்தர முடியும். குறிப்பாக இப்படி போதிக்கும் இடங்களில் அவர்களை குருவாக நாம் பார்க்கிறோம் இல்லையா?
மிகவும் யதார்த்தமாக இருந்த நபர், அடுத்த நாள் சிரமம் கொண்டு தன் வெளி தோற்றத்தை சரி செய்து கொள்வது சரிதானா என்ற கேள்வி எழாமல் இருந்தால் தான் தவறு. அப்படி எழாமல் இருந்து இருந்தால் அவரின் 7 நாள் பாடத்திற்கும் சென்று முட்டாள் தனமாக அவர்கள் சொல்லும் கருத்தை கேட்டு என்னையும் நான் முட்டாளாக்கி கொண்டு இருப்பேன்.
எந்த ஒரு விஷயமும் நம் பேச்சில் மட்டும் இருந்து பயன் இல்லை. அதை எப்படி நடைபடுத்துகிறோம் என்பது ரொம்பவும் முக்கியம்.
உடலுக்கு முக்கியத்துவம் தேவையில்லை.. ஆசையை துறந்து விடு என்று சொல்லும் நபர் முதலில் அவர் ஆசைகளை துறந்து இருக்க வேண்டும் இல்லையா? அவர் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே?
வாங்க ஜமால், அடிக்கடி இப்பவெல்லாம் நீங்களும் அணிலுக்கு கோஷம் போட ஆரம்பிச்சிட்டீங்க போல..?!!
கட்டமைக்கப் பட்ட பிம்பங்களின் மீது வாழ்கிறோமென சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.
இலக்கண சட்டத்துக்குள் வாழ முனைவதில் யாரும் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
நல்லாயிருங்க..;)
அம்மடியோவ் பெரிய பதிவூஊஊஊஊ
//முகம் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி....... புது பொலிவுடன், அழகாக வந்து அமர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். ....:)//
பாடம் எடுக்க வந்தவர் பாடம் கற்றுகொண்டார் போல....
ம்ம்ம்ம்ம் பாவம்
//கட்டமைக்கப் பட்ட பிம்பங்களின் மீது வாழ்கிறோமென சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.
இலக்கண சட்டத்துக்குள் வாழ முனைவதில் யாரும் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.//
யட்சன் எனக்கு இது சரியாக புரியவில்லை.. புரியறமாதிரி இருக்கு ஆனா அது சரியா என்று தெரியவில்லை.. விளக்கமாக சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.. :)
கோபி......!! இப்படி ஒரு பதிவில் உங்களின் பின்னூட்டம் இதை தவிர வேறு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.. :) இருப்பினும் வாழ்த்துக்கு நன்றி.. :)
//முகம் கழுவி, பவுடர் போட்டு, தலைவாரி....... புது பொலிவுடன், அழகாக வந்து அமர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். ....:)//
பாடம் எடுக்க வந்தவர் பாடம் கற்றுகொண்டார் போல....
ம்ம்ம்ம்ம் பாவம்//
:) பாடம் கற்றுக்கொள்ளவில்லை.. தான் ஏன் அப்படி செய்கிறோம் என்பதை அவர் யோசிக்கவில்லை அவ்வளவே.. :)
ஒருவேளை முதல்நாள் அவரின் தோற்றம் உங்களை கவனச்சிதறலுக்கு உள்ளாக்கியதை புரிந்து கொண்டிருப்பாரோ என்னமோ.. எதற்கு வீணாக தங்கள் கவன் சிதறவும் வந்த விஷயத்தையும் மீறி அவரைப்பற்றிய சிந்தனையோடே அந்த நேரத்தைக் கழிக்க வேண்டும் நாம் சாதராணமாக இருந்து விட்டால் தங்கள் கவனம் பாடத்தில் செல்கிறதா என்று பார்க்க முயன்றிருக்கலாம்..A coin will always have two sides.
//ஒருவேளை முதல்நாள் அவரின் தோற்றம் உங்களை கவனச்சிதறலுக்கு உள்ளாக்கியதை புரிந்து கொண்டிருப்பாரோ என்னமோ.. //
:) கவனம் சிதறியதா? நான் என்ன அவரை மாதிரி சாமியாரா என்ன கவனம் சிதறிடிவிடுமோ என்று யோசிக்க??
மேலும் அவருக்காக என்னையோ என் தோற்றத்தையோ நான் மாற்றிக்கொள்ள முற்படவில்லை.. என்னுடைய கவனம் எல்லாம் எப்போது தியானப்பாடம் சொல்லி தருவார்கள் என்பதில் தான் இருந்தது.. அவர் இதைவிட மோசமாகவோ ..இல்லை இதவிடவும் அழகாக இருந்தாலும் என் கவனம் சிதற வாய்ப்பு இல்லை.
வெளித்தோற்றத்தின் அழகு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னை பாதிப்பது இல்லை. .அதே சமயம் உள்ளழகு/கொடூரம் நிறைய இடங்களில் என்னை மிக மோசமாக பாதித்திருக்கிறது.
//எதற்கு வீணாக தங்கள் கவன் சிதறவும் வந்த விஷயத்தையும் மீறி அவரைப்பற்றிய சிந்தனையோடே அந்த நேரத்தைக் கழிக்க வேண்டும் நாம் சாதராணமாக இருந்து விட்டால் தங்கள் கவனம் பாடத்தில் செல்கிறதா என்று பார்க்க முயன்றிருக்கலாம்.//
முதல் நாள் தான் சாதரணமாக இருந்தார், இரண்டாவது நாள் மேக்அப்
:)
//A coin will always have two sides.//
ம்ம்.. சரியே..
உங்களின் யூகம் உங்களுக்கு
எப்போதும் சரியாக இருக்கலாம்.. :)
//முதல் நாள் தான் சாதரணமாக இருந்தார், இரண்டாவது நாள் மேக்அப்//
நீங்கள் சென்ற நேரம் அவர் வியர்வை நாற்றத்துடன் இருந்திருக்கலாம், அதனால் முகம் கழுவி, பவுடர் போட்டு வந்திருப்பார்.
அப்படியே முகம் கழுவாமல் வந்திருந்தால் சுய ஒழுக்கம் கூட இல்லாமல் என்ன தியானம் சொல்லிக் கொடுப்பார்கள் என்று நினைத்து அதன் பிறகு செல்லவில்லை என்றும் கூட எழுத நேரிட்டு இருக்கும்.
:)
/முதல் நாள் தான் சாதரணமாக இருந்தார், இரண்டாவது நாள் மேக்அப்//
நீங்கள் சென்ற நேரம் அவர் வியர்வை நாற்றத்துடன் இருந்திருக்கலாம், அதனால் முகம் கழுவி, பவுடர் போட்டு வந்திருப்பார்.
அப்படியே முகம் கழுவாமல் வந்திருந்தால் சுய ஒழுக்கம் கூட இல்லாமல் என்ன தியானம் சொல்லிக் கொடுப்பார்கள் என்று நினைத்து அதன் பிறகு செல்லவில்லை என்றும் கூட எழுத நேரிட்டு இருக்கும்.
:)//
வாங்க கோவி :) !! எப்படி இருக்கீங்க?!
சுய ஒழுக்கம் என்பது வெளிதோற்றத்தை கொண்டா நிர்ணயிப்பது?!! :)
//நீங்கள் சென்ற நேரம் அவர் வியர்வை நாற்றத்துடன் இருந்திருக்கலாம், அதனால் முகம் கழுவி, பவுடர் போட்டு வந்திருப்பார்.//
:)) வியர்வை நாற்றம் என்பது முகம் கழுவினால் போய்விடுமா?
//வாங்க கோவி :) !! எப்படி இருக்கீங்க?! //
நேற்று துளசி கோபால் அம்மாவை பதிவர் சந்திப்பில் சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
:)
//சுய ஒழுக்கம் என்பது வெளிதோற்றத்தை கொண்டா நிர்ணயிப்பது?!! :)//
நாம என்ன நினைப்போம் என்பதை பிறர் அறிவது கடினம் தான். தேற்றத்தின் நேர்த்தி, உடை, தூய்மை இவை எல்லாம் ஒழுக்கத்துடன் தொடர்புடையது, முன்பே அறிந்திடாதவர்களை தோற்றத்தை வைத்தே எடை போடுவது மனித இயல்பு. நம்மை அறிந்தவர்களுக்கு நம் தோற்றம் முக்கியமல்ல. நம்மை அறியாதவர்களிடம் தொடர்பு ஏற்படும் போது, ஓரளவு தோற்றம் முக்கியம் என்றே பலரும் நினைப்பர்.
//:)) வியர்வை நாற்றம் என்பது முகம் கழுவினால் போய்விடுமா?//
போகவில்லை என்றால் அவர் அருகில் வரும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். :)
என்ன சோப்பு வச்சிருக்காரோ, ஹாமாம், மைசூர் சாண்டல் போட்ட 10 - 20 நிமிசத்துக்கு கும்முனு இருக்கும்.
//நாம என்ன நினைப்போம் என்பதை பிறர் அறிவது கடினம் தான். தேற்றத்தின் நேர்த்தி, உடை, தூய்மை இவை எல்லாம் ஒழுக்கத்துடன் தொடர்புடையது, முன்பே அறிந்திடாதவர்களை தோற்றத்தை வைத்தே எடை போடுவது மனித இயல்பு. நம்மை அறிந்தவர்களுக்கு நம் தோற்றம் முக்கியமல்ல. நம்மை அறியாதவர்களிடம் தொடர்பு ஏற்படும் போது, ஓரளவு தோற்றம் முக்கியம் என்றே பலரும் நினைப்பர்.
//
:) ம்ம்..முந்திய நாள் அவர் தோற்றதிற்கு மதிப்பு கொடுக்கவில்லை.. ஏன் மறுநாளும் நான் செல்லும் வரை அப்படித்தான் இருந்தார்.. :) சோ அது எனக்காகவே செய்ததாகவே எனக்குப்பட்டது.
//போகவில்லை என்றால் அவர் அருகில் வரும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். :)//
மிக சரியே... அபப்டி ஒன்றும் இல்லாதபட்சத்தில் அவர் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லையே.. !! :)
//:) ம்ம்..முந்திய நாள் அவர் தோற்றதிற்கு மதிப்பு கொடுக்கவில்லை.. ஏன் மறுநாளும் நான் செல்லும் வரை அப்படித்தான் இருந்தார்.. :) சோ அது எனக்காகவே செய்ததாகவே எனக்குப்பட்டது.//
:)
நம்மீதான சுயமதிப்பீட்டில், பல சமயம் நாம் நினைத்தது தான் சரியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவோம், அதன் பிறகு அதற்கான முடிவுரையையும் நாம் நினைப்பது போல் எழுதிவிடுவோம். இது மனித இயல்புதான்.
//:) ம்ம்..முந்திய நாள் அவர் தோற்றதிற்கு மதிப்பு கொடுக்கவில்லை.. ஏன் மறுநாளும் நான் செல்லும் வரை அப்படித்தான் இருந்தார்.. :) சோ அது எனக்காகவே செய்ததாகவே எனக்குப்பட்டது.//
:)
//நம்மீதான சுயமதிப்பீட்டில், பல சமயம் நாம் நினைத்தது தான் சரியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவோம், அதன் பிறகு அதற்கான முடிவுரையையும் நாம் நினைப்பது போல் எழுதிவிடுவோம். இது மனித இயல்புதான்.
/
கோவி, மனித இயல்பு சரிதான்.. ஆனால் அவர் அப்படி நடந்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை ஆனால் நடந்துக்கொண்டார். இதில் நான் கணித்து சொல்ல ஒன்றுமே இல்லை நடந்தை சொன்னேன், அது எனக்காக நடந்தது என்பதே உண்மை.. இதில் நானே நினைத்துக்கொள்ள ஒன்றுமே இல்லை.. :)
u r wrong, ur thoughts are totally wrong, why dont u think in this way , he wants to know whether ur mind is in steady state... so for that they will test u... but u failed... thats the answer...
by
rajan
saamy he tested u in turn u thought him wrongly,,, i think he tested u that u having study mind r not...? but u failed .
Post a Comment