நம் ப்ளாகர் நண்பர்களில் ஒருவர், * தரண் (Dharan) என்னுடைய நண்பர் என்று எப்போதும் இல்லாத பெருமை இப்போது எனக்கு தொற்றி கொண்டது. எப்போது இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லுவார் என்று காத்துக்கொண்டு இருந்தேன்..
அந்த நாளும் வந்துவிட்டது.......! :) தன் சொந்த முயற்சியால் இதையே தன் ஒரே குறிக்கோளாக கொண்டு, இப்போது வெற்றிகரமாக டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்.
அவர் பெற்ற டாக்டர் பட்டம்... - Electrical Engineering இல் Ph D. His Research Area is " Efficient fast algorithms in inter/intra prediction for H.264/AVC encoders"
தரணு'க்கு என் /நம் எல்லாருடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் இந்த பதிவின் மூலமாக தெரிவித்து க்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மென்மேலும் எல்லா வளங்களையும், சிறப்புகளையும், பரிசுகளையும், பட்டங்கள் பெற்று வாழ்க வளமுடன் என்று மனம் உவந்து வாழ்த்திக் கொள்கிறேன்/றோம்.
உள்ளம்
உவகையில்
தத்தளிக்க-
வார்த்தைகள்
தடுமாற-
உன்
தோழியாக
பெருமையில்
என்
கண்கள் பனிக்க-
இந்த நொடி
பொழுதுகளில்
உன்னை
பாராட்டி
சீராட்ட
உன் தாயாக
எனக்கு
ஒரு வரம் கொடுத்துவிடு....
அன்புடன்..
கவிதா !!
* அவருடைய பதிவுகள் LOCK செய்யப்பட்டுள்ளதால் இங்கு அவருடைய கேப்பங்கஞ்சி பதிவை இணைத்திருக்கிறேன்.
டாக்டர் தரண் !! நான் கொண்டாடும் தருணங்கள் !!
Posted by : கவிதா | Kavitha
on 20:02
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
18 - பார்வையிட்டவர்கள்:
வாழ்த்துக்கள் தரண்...!!!
என்றும் அன்புடன்
ரங்கன்
தரண் அவர்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
மென்மேலும் இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் தரண் ;)
சூடான கவிதையும் அருமை ;)
உங்கள் பதிவில் தான் என்று நினைக்கிறேன்...
எப்போதோ ஏற்பட்ட கருத்து மோதலை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக இன்றும் கொண்டிருக்கிறார்.
செந்தழல் ரவி செத்துவிட்டான் என்றால் முதலில் சந்தோஷப்படும் நபர் தரன்...
ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தொல்லை செய்யவேண்டாம் என்று மின்னஞ்சல் கூட அனுப்பினேன், பதில் இல்லை.
இருந்தாலும் ஒரு சக பதிவராக முனைவர் பட்டம் பெற்றவரை வாழ்த்துகிறேன்..
இனிமேலாவது சிறு பிள்ளைத்தனங்களை கைவிட்டுவிடுவார் என்றும் நம்புகிறேன் ஹி ஹி
வாழ்த்துக்கள் தரண்!
// கோபிநாத் said...
சூடான கவிதையும் அருமை //
கோபி,
இது சீரியஸான வாழ்த்துப் பதிவு! இதுல ஏன் காமெடி பண்ணுறீங்க?
தரணுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அப்புறம் நானும் மேலாண்மையில் முனைவர் பட்டத்திற்கு முனைந்து கொண்டு இருக்கின்றேன். எப்ப முடிக்கப் போறேன்னுதான் தெரியல :(
இன்னொரு நண்பனின் வாழ்த்துகள்
பாவம் தருண்... நீங்க கவுஜ'ல்லாம் எழுதி அவரை பயமுருத்திட்டு இருக்கீங்க.... :)
Heartly Congrats Tharun... Keep Rock on... :)
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
// செந்தழல் ரவி said...
உங்கள் பதிவில் தான் என்று நினைக்கிறேன்...
எப்போதோ ஏற்பட்ட கருத்து மோதலை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக இன்றும் கொண்டிருக்கிறார்.
//
காழ்ப்புணர்ச்சி என்பது மனிதனுடைய வாழ்வின் நாட்களை குறைக்கும் ஒரு குணம். மேலும் இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளூம் அளவுக்கு என் மூளையில் இடமில்லை.
உங்களைப்பற்றி நான் நினைவில் வைத்திருக்கும் Hints,
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர், தன்னை நோக்கியே மற்றவர்களின் கவனம் இருக்கு வேண்டும் என நினைப்பவர் மொத்தத்தில் பிரச்சனைக்குறிய மனிதர். He is not my type. இவ்வளவே.
//செந்தழல் ரவி செத்துவிட்டான் என்றால் முதலில் சந்தோஷப்படும் நபர் தரன்...//
சக மனிதனின் சாவை கொண்டாடும் அளவுக்கு என் மனம் இன்னும் மறுத்துவிடவில்லை.
//ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தொல்லை செய்யவேண்டாம் என்று மின்னஞ்சல் கூட அனுப்பினேன், பதில் இல்லை.//
எனக்கு அறிமுகமில்லாத Email முகவரிகளுக்கு நான் REPLY செய்வதில்லை. மேலும் PISHING என்று பின் நாளில் தொல்லை வரும்.
உங்கள் பெயரிலும் உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் எனக்கு நிறை email மற்றும் comment கள் வரும்.ஆனால் பலவற்றை நான் படிப்பது கூட இல்லை. SELECT and DELETE. That's all.
தொல்லை கொடுப்பதுதான் என் நோக்கம் என்றால் நீங்கள் நிம்மதியாக தூங்கியிருக்கவே முடியாது.
//இருந்தாலும் ஒரு சக பதிவராக முனைவர் பட்டம் பெற்றவரை வாழ்த்துகிறேன்..//
நன்றி.
//இனிமேலாவது சிறு பிள்ளைத்தனங்களை கைவிட்டுவிடுவார் என்றும் நம்புகிறேன் ஹி ஹி//
Vancha pugazchi அணி யோ???
என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு முழ உரிமையுண்டு. ஹி ஹி
@ ரங்கன், கோபி, சிபி, முத்துகுமரன் வாழ்த்துக்களுக்கு நன்றி :)
--------------------------------
//அப்புறம் நானும் மேலாண்மையில் முனைவர் பட்டத்திற்கு முனைந்து கொண்டு இருக்கின்றேன். எப்ப முடிக்கப் போறேன்னுதான் தெரியல :(
//
:) அப்துல்லா !! சீக்கிரம் முடிங்க..எனக்கு வயசாயி போய் சேருவதற்குள் முடித்துவிட்டால், உங்களுக்கும் பதிவு போட்டுவிடுவேன் :)
@ ஹே ராம்?!
எப்போதோ பொன்ஸ் கேட்டது நினைவு வைத்து அவரின் பெயரை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் போட்டு இருக்கிறேன்..
ஆனா அதையும் மீறி.. "தருண்... Tharun... " ன்னு மிக சரியாக தப்பா கூப்பிட்டா என்ன அர்த்தம்???? ம்ம். ?? :)
வாழ்த்துக்களுக்கு நன்றி :)ராம்!!
தரண் வாழ்த்த இட்ட பதிவு.. ரவிக்க்கு விளக்கங்கள் இதுவரை போதுமே..
ஆமா என்ன ஆயிற்று
நக்கல் என்ற பெயரில் பின்னூட்டம்?!!
உங்கள் பெயரில் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
//செந்தழல் ரவி செத்துவிட்டான் என்றால் முதலில் சந்தோஷப்படும் நபர் தரன்...//
சக மனிதனின் சாவை கொண்டாடும் அளவுக்கு என் மனம் இன்னும் மறுத்துவிடவில்லை.//
இதை நானே சொல்ல வேண்டும் நினைத்தேன்.. ஆனால் அதை சொல்லி நான் தரணுக்கு சப்போர்டு செய்கிறேன் என்று நீங்கள் நினைத்துவிட கூடாது என்று பேசாமல் இருந்தேன்..
நிஜமாகவே உங்கள் இருவருக்கும் இடையில் பேசவே எனக்கு யோசனையாக இருக்கு...
என்னை விட்டுடுங்கோ செல்லங்களா !! :)
வாழ்த்துகள்
ரவி, உங்களின் வாழ்த்து வந்தது எனக்க்கு இரட்டிப்பு சந்தோஷம். :)
உங்கள் இருவரின் மன வேறுப்பாட்டிற்கு இடையில் நான் எப்போதும் முட்களின் மீது நிற்பதை போன்று உணர்கிறேன்.
உங்கள் மனவேற்றுமைக்கு இடையில் என்னை கசக்கி பிழிந்து காயவைத்து விடாதீர்கள். இருவரும் என் செல்ல நண்பர்கள். !! :)
(அவ்வ்வ்வ்!! :( இரண்டும் இரண்டு எருமைகள், "செல்லம்" னு சொல்லி எல்லாம் எஸ்'ஆக வேண்டியிருக்கே...?!! தலையெழுத்து..!! என்ன செய்யறது...)
-------------------------------
//உங்கள் இருவரின் மன வேறுப்பாட்டிற்கு இடையில் நான் எப்போதும் முட்களின் மீது நிற்பதை போன்று உணர்கிறேன்.
//
ரொம்ப நாள் நிற்கவைக்காதீர்கள்..
ஹி ஹி..எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை.. வெயிட்டு தாங்காமல் முட்கள் உடைந்துவிடும் :)
//ஆமா என்ன ஆயிற்று
நக்கல் என்ற பெயரில் பின்னூட்டம்?!!
உங்கள் பெயரில் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.//
Profile ல் Nick name யை நக்கல் என்று மாற்றி இருந்தேன்.
சரி Dharan என்றே போட்டு விட்டேன்.
வாழ்த்திய அனைவருக்கும் மறுபடியும் நன்றிகள்.
Post a Comment